அகோபிலம் – ஒன்பது நரசிம்மர்கள் – எப்படி செல்வது, விவரங்கள், தரிசனம் – சாலைக்கு அருகில் வீற்றிருக்கின்ற காரஞ்ச அல்லது சாரங்க நரசிம்மர் தரிசனம் (17)

அகோபிலம்ஒன்பது நரசிம்மர்கள்எப்படி செல்வது, விவரங்கள், தரிசனம்சாலைக்கு அருகில் வீற்றிருக்கின்ற காரஞ்ச அல்லது சாரங்க நரசிம்மர் தரிசனம் (17)

Karanja - Saranga Narasimha temple -name plaque

ஶ்ரீ காரஞ்ச ந்ருஸிம்ஹ கோவில் பெயர் கல்வெட்டு

Karanja - Saranga Narasimha temple -entrance.

கோவிலைச் சுற்றிய சுவர், முன்னால் இருக்கும் மண்டபம் முதலியன.

Karanja - Saranga Narasimha temple -Mantap newly constructed in front

இடது பக்கத்தில் இருக்கும் அனுமார் சந்நிதி, மண்டபம், கர்ப்பகிருகம்  முதலியன.

Karanja - Saranga Narasimha - Vigaraha - now

மூலவர் விக்கிரகத்தின் தோற்றம்.

காரஞ்ச அல்லது சாரங்க நரசிம்மர்: மேல் அஹோபிலம் போகும் வழியில், இடது பக்கத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. மண்டபத்தில் நுழையும் போது, இடது புறத்தில் ஆஞ்சனேயர் நரசிம்மரை வணங்குவது போன்ற சிற்பம் காணப்படுகிறது. “கரஞ்ச விருக்ஷம்” காரஞ்ச மரம், கருங்காலி மரம், கரஞ்ச என்ற மரத்தின் கீழிருப்பதால், “காரஞ்ச நரசிம்மர்” என்றழைக்கப்படுகிறார். மூன்று கண்களுடன், நான்கு கைகளுடன் நரசிம்மர் பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார், ஒரு பாம்பு / ஆதிசேஷன் நரசிம்மர் மீது படமெடுத்து அமைந்துள்ளது. கையில் சாரங்கம் அதாவது வில் இருக்கிறது. வலது மேல் கரத்தில் சக்கரம், இடது கரத்தில் வில், கீழ் வலதுகரத்தில் தியான முத்திரை ஆகியன கொண்டுள்ளார். இக்கோவில் வாசலில் தூண்களின் பகுதிகள் காணப்படுகின்றன. அவற்றில் அழகான சிற்பங்கள் காணப்படுகின்றன. இடது பக்கத்தில், இக்காலத்தில் கட்டப்பட்ட மண்டபம் உள்ளது. அதில், வரும் பக்தர்கள், பொங்கல் வைப்பது போன்ற சடங்குகளை செய்து வருகிறார்கள்.

Karanja - Saranga Narasimha temple -old photo

1960களில் இருந்த கோவிலின் தோற்றம் – திரு. சீதாபதி புத்தகத்திலிருக்கும் புகைப்படம்.

Karanja - Saranga Narasimha - old temole- before renovation

அதன் வண்ணப்படம் – முன்னர் மண்டம் முதலியவை இல்லாத தோற்றம்.

Six pillara before the Karanja Narasimha temple

புதுப்பித்துக் கட்டப்பட்ட நிலை.

Karanja - Saranga Narasimha Vigraha - 15 years back

ஆஞ்சனேயர் மற்றும் காரஞ்ச சந்நிதிகள்.

Yogananda Narasimha temple-old-Chaitanya

ஆஞ்சநேயருக்கு காட்சியளித்த நரசிம்மர்: புராணத்தின் படி, ஆஞ்சநேயர் ஒரு முறை, இவ்வழியாக சென்ற போது, கருங்காலி மரத்தின்கீழே அமர்ந்து ராமனை நினைத்து ஆழ்ந்த தவம் மேற்கொண்டார். “ராம், ராம்” என்று தியானித்துக் கொண்டிருந்தபோது, நரசிம்மர் சாந்த சொரூபியாய்[1] ஆதிசேஷன் படமெடுத்து குடைபிடிக்க, மூன்று கண்கள், நான்கு கைகள், கையில் வில் என்று அனுமனுக்குக் காட்சி தந்தார். ஆஞ்சநேயர், யார் என்ற கேட்ட போது, “நான் தான் எல்லாம்” என்று பதில் அளித்தார். அவர் வலது கையில் சக்கரமும், இடது கையில் வில்லும் இருப்பதைப் பார்த்து திகைத்த ஆஞ்சநேயர், ‘‘நீர் எம் இறைவன் ராமர் போலத் தோற்றமளிக்க முயற்சித்தாலும் நீர் அவர் அல்லர். மூன்று கண்கள் இருந்தாலும், சிவன் இல்லை. ஆகவே என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று வேண்டிக் கொண்டார்[2]. உடனே ராமனாக வில்லேந்திய அழகிய கோலத்தில் நரசிம்மர் அனுமனுக்குக் காட்சி தந்தார்[3]. அனுமன் இந்தக் காட்சியில் மனம் மகிழ்ந்தார்.

கரஞ்சமூலே பகவாந் யத்ராஸ்தே சார்ங்க சக்ரத்ருத்
காரஞ்சம் க்ஷேத்ரம் உத்திஷ்ட மாச்ரிதம் பவநாசி நீம்
ஏஷாம் ஸ்நாநரதி காம்க்ஷா ஏஷாம் வைக்ஞான நிச்சயே
தத்ததிஷ்ட பலம்ப்ராதாத் பகவாத் நரகேசரீ.

விளக்கம்: பவநாசினி என்ற புனித தீர்த்தக் கரையில் காரஞ்ச மர நிழலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே நமஸ்காரம். சார்ங்கம் என்ற வில்லுடனும், சக்கரத்துடனும் நரசிங்கமாகக் காட்சி தரும் பகவானின் இந்தத் தலம் காரஞ்ச க்ஷேத்திரம் என்று புகழ் பெற்றிருக்கிறது. புனித தீர்த்தங்களில் நீராடும் பக்தி வேட்கை கொண்டவர்களுக்கும், தீர்க்க ஞானம் பெற விரும்புபவர்களுக்கும் இங்கே பரந்தாமன் அவரவர் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்விக்கிறான்[4].

 Karanja - Saranga Narasimha temple -carved pillars LHS entrance

முன்னால் இருக்கும் தூண்கள், பிச்சைகாரர்களின் உட்காரும் மற்றும் துணிகளை காயவைக்கும் இடமாக உள்ளது.

Karanja - Saranga Narasimha temple -parts of carved pillars LHS entrance.

கலைநயம் கொண்ட சிற்பங்கள் கொண்ட தூண்களின் கதி!

Karanja - Saranga Narasimha temple -sheds constructed on LHS

இடது பக்கம் கட்டப்பட்டுள்ள மண்டபம்.

காரஞ்ச நரசிம்மர் விக்கிரகம்: காரஞ்ச நரசிம்மரின் விக்கிரக புகைப்படங்கள், சீதாபதியின் புத்தகம்[5] மற்றும் “சைதன்யா” வீடியோவிலிருந்து எடுக்கப்பட்டது[6] படத்தில் காட்டப்பட்டுள்ளது. இப்பொழுது எண்ணை மற்றும் இதர திரவியங்களால் அபிசேகம் செய்யப் பட்டதால், சிறிது மாற்றம் அடைந்திருப்பது போல தோன்றுகிறது. குறிப்பாக, வெள்ளித் தகடுகளினால் கண்கள் முதலியன மறைக்கப்பட்டிருக்கின்றன. நெற்றியில் இருக்கும் கண்ணை மறைக்க நாமம் போடப்பட்டுள்ளது. கீழே இருக்கும் இரண்டு கைகள் மறையும் படி, அலங்காரம் செய்கிறார்கள். குறிப்பாக கால்களை மறைக்கிறார்கள். ஒவ்வொரு விக்கிரகத்திலும், கால்கள், கைகள், முகம் என்று அனைவற்ரிலும், அந்தந்த விக்கிரகத்திற்கு ஏற்ற முறையில், விவரங்களை, விக்கிரகத்தில் நுணுக்கமாக, ஆனால், தெளிவாக செதுக்கியுள்ளார்கள். கால்கள், பாதங்கள், பாதங்களின் விரல்கள் இவையெல்லாமே, நரசிம்மர் உட்கார்ந்திருக்கும், தியான நிலையை எடுத்துக் காட்டுகிறது. கைகள் மற்றும் கைவிரல் நளினம் முதலியன, உக்கிரம் முதல் சாந்தம் வரையில் உள்ள நிலைகளை எடுத்துக் காட்டுகின்றன. இரண்யகசிபுவின் வயற்றின் மீது கையை வைப்பது, விரல்களை வைப்பது, கிழிக்க விரல்களை சொருகுவது, சொருகி கிழிக்க ஆரம்பிப்பது, குடலை இழுப்பது, போன்ற காரியங்களுக்கு ஏற்ப, விரல்களின் நெளிவு-சுளிவுகள் மாறுகின்றன. கைகளின் எண்ணிக்கையும் இரண்டு, நான்கு, ஆறு, எட்டு என்று அதிகமாகின்றன. இவற்றையெல்லாம் கவனமாக பார்த்து தர்சிக்க வேண்டும்.

 Karanja - Saranga Narasimha Vigraha -old photo

1960களில் மூலவர் விக்கிரகத்தின் தோற்றம்.

Karanja - Saranga Narasimha - Vigaraha - old-now compared

முந்தைய மற்றும் இப்பொழுதைய விக்கிரங்களின் தோற்றம் – ஒப்பீடு.

ஒன்பது விக்கிரகங்கள் உருவாக்கிய கலைக்கு பின்னால் இருந்த தொழிற்நுட்பம் என்ன?: ஒன்பது நரசிம்மர்களின் விக்கிரங்களில், இத்தகைய நுணுக்கங்களை சிற்பிக்கள், ஒன்று புராண விவரங்களை அறிந்து செதுக்கியிருக்க வேண்டும் அல்லது இச்சிற்பங்களைப் பார்த்து, புராணங்களில் அவ்வாறு எழுதப் பட்டிருக்க வேண்டும். எப்படியிருந்தாலும், சிற்பிகள் மற்றும் பௌராணிகர்களின் சம்பந்தம், அவர்களின் சேர்ந்த உரையாடல், விளக்கங்கள் சிற்பங்களில் வெளிப்படும் தன்மை முதலியன, எல்லோருமே சேர்ந்து வேலை செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இக்காலத்தில், தேவையில்லாமல், ஜாதி கண்ணோட்டத்தோடு, விளக்கம் கொடுத்து மக்களைப் பிரிக்க பார்க்கிறார்கள். ஆனால், இங்கோ, மலைவாசிகள், வனவாசிகள், கற்பாறைகளை உடைப்பவர்கள், சிற்பிகள், கற்தச்சர்கள், கட்டடம் கட்டுபவர்கள் என்று எல்லோருமே சேர்ந்து செயல்பட்டுள்ளது தெரிகிறது. இவ்வாறு மலை மற்றும் காட்டுப் பகுதிகளில் இப்பொழுது சென்று வரவே, நமக்கு பலவித போக்குவரத்து சாதனங்கள் தேவைப் படுகின்றன. ஆனால், அவையெல்லாம் இல்லாத காலத்தில், இவையெல்லாம் நடந்திருக்கின்றன என்பதை கவனிக்க வேண்டும். இத்தகைய கடினமான வழிகளைக் கடந்து அந்த பலதரப்பட்ட வேலையாட்கள் எப்படி வந்திருக்க முடியும் அல்லது அவையெல்லாம் இரு இடத்தில் தயாரிக்கப் பட்டன என்றால், எப்படி அந்த ஒன்பது இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கக் கூடும், என்ன போக்குவரத்து சாதனங்கள், கற்களை தூக்க, இடம் பெயர, செதுக்க என்னென்ன உபகரணங்களை உபயோகித்தனர், முதலியவற்றைப் பற்றியும் யோசிக்க வேண்டும்.

 Karanja - Saranga Narasimha - Anajaneya

ஆஞ்சனேயரின் தோற்றம் – நரசிம்மரை நோக்கி சேவிக்கும் நிலை.

சிற்பங்கள், கோவில்களை உருவாக்கும் தன்மையும், அழிக்கும் தன்மையும்: சிற்பங்கள் மற்றும் கோவில்கள் உருவாக்க, அவற்றின் பின்னணியில் பல விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்ப விவரங்கள் உள்ளன. மேலே குறிப்பிட்டப்படி,  இத்தகைய கலை நயத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும், தூண்கள், கற்களால் ஆன கூரை, அவற்றை தூண்களை நிறுத்து மேலே ஏற்ற்ப்பட்டு அமைத்திருப்பது, கோவிலை முழுமையாகக் கட்டி, கர்ப்பகிருகத்தில், விக்கிரங்களை வைத்து, முடிக்கப் பட்டது, இவையெல்லாம், மலை மேல் மற்றும் கீழ் மற்றும் குறிப்பிட்ட இடங்களில் செய்விக்கப்பட்டது முதலியவற்றில் உள்ள விஞ்ஞானம், விஞ்ஞான அறிவு உள்ளத்தன்மை மற்றும்பயன்படுத்தப் பட்டத் தன்மை [Science / scientific knowledge known and applied behind] மற்றும் பின்னால் இருந்த தொழிற்நுட்பம் [technology behind] முதலியவற்றைப் பற்றியும் யோசித்து, கவனித்துப் போற்ற வேண்டியுள்ளது. இல்லையென்றால், அவை நடந்திருக்க முடியாது. ஆக, அவ்வாறு பாராடி, போற்றப்படக்கூடிய நிலையில், அவற்றை அழித்துள்ளார்கள், இன்றும் அழிக்கத் தயாரக உள்ளார்கள் என்றறியும் போது, அவர்களின் மனநிலையை அறிய வேண்டும்.

 sculptured-pillars-pulled-down-ahobilam

விக்கிரங்கள் அல்லது கலயுருவாக்கம் [Iconogenesis] மற்றும் விக்கிரகம் மற்றும் கலயழிப்பு [Iconoclasm] என்ற சித்தாந்தங்கள்[7]: விக்கிரங்கள் அல்லது கலயுருவாக்கம் [Iconogenesis] மற்றும் விக்கிரகம் மற்றும் கலயழிப்பு [Iconoclasm] என்ற சித்தாந்தங்கள் மற்றும் அவற்றின் தன்மைகளை இங்கு அறிந்து கொள்ள வேண்டும். விக்கிரங்கள் அல்லது கலயுருவாக்கம் தன்மை கொண்ட மக்கள், நிச்சயமாக அவற்றை அழிக்க மனங்கொள்ள மாட்டார்கள்[8]. ஆனால், அவ்வாறு அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், விக்கிரங்கள் அல்லது கலயுருவாக்கம் கொண்ட, அல்லது விரும்பக்கூடிய மக்களாக இருந்திருக்க / இருக்க முடியாது. அவ்வாறு இருப்பது போல காண்பித்துக் கொள்வது, விளக்கம் கொடுப்பது, நியாயப்படுத்துவது, அவர்களின் முரண்பாடு, போலித்தங்களைத் தான் எடுத்துக் காட்டுகின்றன. இப்பொழுது, உண்மைகளை மறைத்து, ஔரங்கசீப், குதுப் ஷா, ஆற்காடு நவாப், கருணாநிதி போன்றோர் கோவில் கட்ட, குளம் வெட்ட, மராமத்து செய்ய நிலம் கொடுத்தார்கள், நிதி கொடுத்தார்கள் என்று எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது[9]. உண்,மையில் கோவில் சொத்து, நிலங்களை அபகரித்துக் கொண்டது, கொள்ளையடித்ததே இவர்கள் தான், பிறகு கோவிலுக்குக் கொடுத்தார்கள் என்பது அபத்தமானது.

© வேதபிரகாஷ்

26-03-2017

temple-hundi-looters

temple-hundi-looters

[1] ஏற்கெனவே சாந்தம் அடைந்த நரசிம்மர் மறுபடியும், சாந்தம் அடைவது ஏன் என்றும் நோக்கத் தக்கது. அதாவது, மலோல நரசிம்மர் மேலேயிருப்பதால், கீகழே வரும் போது, சாந்தமடைந்து, அதற்குப் பிறகு, சத்ரவட, யோகானந்த ஸ்வரூபங்களை / உருவங்களை அடைந்தார் போலும்.

[2]  ஒரு வேளை சைவ-வைணவர்களைத் திருப்திப் படுத்த, அவ்வாறு முக்கண்ணன் மற்றும் கோதண்டராமன் போன்று தோன்றினார் போலும். ஆஞ்சனேயரை, சிவஸ்வரூபன் என்றும் சொல்வதுண்டு. சுருட்டப் பள்ளியில், சிவன், விஷ்ணுபோல படுத்திருக்கும் விக்கிரகம் போன்று, இதிலும் அத்தகைய சின்னங்களை சேர்த்திருக்கிறார்கள் போலும், அதாவது, விக்கிரகத்தை சமைத்திருக்கிறார்கள்.

[3] https://www.youtube.com/watch?v=GQYilVSQZSY&t=1641s

[4] http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=6128&cat=3

[5] Pidatala Sitapati, Sri Ahobila Narasimha Swamy Temple, The Director of Archaeology and Museums, Andhra Pradesh, 1982, Plates 2E and 2F in between pages, p.8 and 9.

[6] https://www.youtube.com/watch?v=GQYilVSQZSY&t=1641s

[7] http://www.hinduwebsite.com/history/research/distortions.asp

[8] http://www.allempires.com/forum/printer_friendly_posts.asp?TID=3272

[9]https://atheismtemples.wordpress.com/2010/04/15/%E0%AE%94%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92/

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அகோபில, அகோபிலம், அடில் ஷா, அம்பு, அழிப்பு, அழிவு, ஆக்கிரமிப்பு, உடைப்பு, கரஞ்ச, கல்வெட்டு, காரஞ்ச, காரஞ்ச நரசிம்மர், காரஞ்ச மரம், குலி குதுப் ஷா, சத்ரவட, சரித்திர ஆதாரம், சாரங்க நரசிம்மர், சாரங்கபாணி, சாரங்கர், செஞ்சு லட்சுமி, செஞ்சுலக்ஷ்மி, செஞ்சுலட்சுமி, செப்பனிடுதல், தரிசனம், புதுப்பித்தல், மராமத்து, முக்கண்ணன், மூன்று கண், மூன்று கண் நரசிம்மர், வில்லேந்திய நரசிம்மர் and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக