ஶ்ரீ அஞ்சனாக்ஷி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில், சோமூர் ஊராட்சி, கரூர் மாவட்டம் (2)

ஶ்ரீ அஞ்சனாக்ஷி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில், சோமூர் ஊராட்சி, கரூர் மாவட்டம் (2)

திருமுக்கூடல் கோவில் -கர்ப்பகிருகம் வாயில்

அகஸ்தீஸ்வரர்,அனந்தாக்ஷி திருமுக்குக்கூடல்

கோவிலுக்கு வரும் கூட்டம், திறக்கப்படும் நேரம் முதலியன: பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை, சிவராத்திரி போன்ற தினங்களில் தான் இக்கோவிலுக்கு வரும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. தெரிந்தவர்கள் தான் அவ்வப்போது வந்து செல்வதால், பொதுவாக, இக்கோவில் பூட்டியே இருக்கிறது. அங்கு சென்ற பிறகு அறிவித்தால், கோவில் சுவரையொட்டியுள்ள ஒரு பெண்மணி வந்து கதவைத் திறந்து விடுகிறார். உள்ளே சென்று கோவிலைச் சுற்றிப்பார்க்கலாம். கோவிலின் பெரும்பகுதி சிதலமைந்து இருக்கிறது. உள்ளே உழைந்ததும் வலது பக்கத்தில் உள்ள ஒரு மண்டபம் இடிந்த நிலையில் உள்ளது. தூண்கள் கீழே விழுந்து கிடக்கின்றன. 12ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த திருமண மண்டபம் என்று சொல்லப்படுகிறது. இடது பக்கத்தில், மூன்று சந்நிதிகள் / அறைகள் இடிந்த நிலையில் உள்ளன. அவற்றில் ஒன்றில் நவக்கிரகங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னொன்று மடப்பள்ளியாக இருக்கலாம். ஜ்கருவறைக்குச் செல்ல வேண்டுமானால், அப்பெண் மூலம் சொல்லி அனுப்பினால், கிருஷ்ணன் பூஜாரி / குருக்கள் கருவறை சாவியோடு வந்து திறந்து விடுவார். பிறகு, முறைப்படி அர்ச்சனை செய்யலாம். உள்ளேயிருக்கும் லிங்கம் அகஸ்தியரால் மண்ணால் செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்த கோவிலே மண்ணால் மூடப்பட்டிருந்தது என்று சொல்லப்படுகிறது.

அகஸ்தீஸ்வரர், திருமுக்குக்கூடல். கருவறை கூரை இடிந்த நிலையில்

திருமுக்கூடல் கோவில்- க்கர்ப்பகிருக கோபுரம்

அகஸ்தீஸ்வரர், திருமுக்குக்கூடல். கருவறை கோபுர சிற்பங்கள்

கருவறை, மூலவர் முதலியன: பலிபீடம், கொடிகம்பம், நந்தி வெளிபிரகாரத்தில், தெற்கு நோக்கிய வாசலுக்கு முன்பாக இருக்கின்றன. அதாவடு அவையெல்லாம் வடக்கு நோக்கியுள்ளன. கருவறை முன்னால் இருந்த நர்த்தன மண்டபம் கூரையில்லாமல் இருக்கிறது. தூண்கள் நின்று கொண்டிருப்பதால் இவ்வுண்மை தெரிகிறது. மற்ற கோவில்களைப் போலில்லாது, கருவறை முன்பாக உள்ள இடம் சுற்றி ஒரு பிரகாரம் போன்ற அமைப்பு இருக்கிறது. கருவறை மேலுள்ள கோபுரத்தின் கலசம் காணப்படவில்லை. கருவறையின் முன்புள்ள கூரையும் கீழே விழுந்திருக்க வேண்டும். தூண்கள் மற்றும் சுவர்கற்களில் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கருவறையின் கூரையிலும் பெரிய ஓட்டை இருக்கிறது, மற்றும் எந்த நேரத்திலும் விழலாம் என்ற நிலையில் உள்ளது. தரையிலும் வெடிப்புகள் காணப்படுகின்றன. இத்தகைய கருவறையினுள்ளே, அகத்தியரால் உருவாக்கப்பட்ட லிங்கம் மூலவராக உள்ளது.

திருமுக்கூடல் கோவில் - வடகிழக்கு மூலையிலிருந்து பின்பக்கத் தோற்றம்.

திருமுக்கூடல் கோவில் - வடமேற்கு மூலையிலிருந்து பின்பக்கத் தோற்றம்

அகஸ்தீஸ்வரர், திருமுக்குக்கூடல். புஸ்வலி போட்டோ

மூலவருக்கு, கோவிலுக்குப் பின்னால் இருப்பது சமாதியா?: கோவிலின் பின்புறம் ஏதோ ஒருவரின் சமாதி இருப்பதாகச் சொல்லப் படுகிறது. அது சித்தரின் சமாதி என்றும், குறிப்பிட்ட சித்தரின் பெயரைக் குறிப்பிட்டு அவரின் சமாதி என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆனால், எதற்கும் எந்தவித சான்றும் இல்லாமல் இருக்கிறது. பொடுவாக, ஏதாவது ஒரு ரிஷி, முனி, சித்தர் போன்றவர்களின் சமாதி மீதுதான் கோவில் கட்டப்படும், அதாவது, சர்ப்பகிரகம் அமைக்கப்பட்டிருக்கும் என்பது ஒரு நியதியாக இருக்கிறது. இதனால், அது ஜீவசாமதியாக இருக்கும் போது, பக்தர்கள் அங்கு வந்து வேண்டிக் கொண்டால், அவை, ஆண்டவனிடம் சென்று சேரும் என்றும், அவர்களது வேண்டுதல்கள் பூர்த்தியாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இச்சமாதி வெளியே இருக்கிறது. அருகில், சில தேவதைகளின் விக்கிரங்களும் சிதறிக்கிடக்கின்றன.

திருமுக்கூடல் கோவில் -கல்வெட்டுகள்

அகஸ்தீஸ்வரர், திருமுக்குக்கூடல். பின்பக்கம் காணப்படும் தேவியர் சிற்பம்

இக்கோவிலின் காலம், கட்டியவர்கள் முதலிய விவரங்கள்: கோவில் பதிற்சுவரிலேயே சிற்பங்கள் காணப்படுகின்றன. அவற்றில் மீன்கள் காணப்படுவதால், பாண்டியர்களால் அச்சுவர் கட்டப்பட்டது என்றாகிறது. கோவிலுக்கு பின்புறம் வலது பக்க சுவர்களில் கல்வெட்டுகள் பல காணப்படுகின்றன. அவற்றின் மூலம், திருமுக்கூடலூர் பெயர், பிற்கால சோழர்கள், நாயக்கர்கள் கட்டிய விவரங்கள் காணப்படுகின்றன. கூரை வரை கருங்கற்களாலும், அதற்கு மேலுள்ள கோபுரம் முதலியவை செங்கல் மற்றும் மண் கலந்த பூச்சுகளால் கட்டப்பட்டிருப்பதனாலும், ஒருவேளை பழைய கோவில் இடிந்ததால், பிறகு அவைக் கட்டப்பட்டிருக்கலாம், அவையும், கடந்த 300-500 ஆண்டுகளில் கொஞ்சம்-கொஞ்சமாக அரிப்பினால் சேதமடைந்ததால், மேற்பூச்சு விழுந்து, உள்ளே இருக்கும் செங்கற்கள் தெரியும் நிலையை அடைந்து விட்டது. கற்களிலும் கருப்பு மற்றும் இளம்-சிவப்பு என்று இரண்டு நிறங்கள் காணப்படுகின்றன (ASI சீரமைப்பினாலும் இவ்வாறு நடந்திருக்கலாம்). சுற்றியுள்ள சிறிய சந்நிதிகள் குறுநில மன்னர்கள், நாயக்கர்கள் முதலியவர்களால் கட்டப்பட்டதாகும். இடது பக்கத்தில் ஒரு நந்தி கிழக்கு பக்கமாக பார்த்து இருக்கிறது. அதாவது, முன்னர் மூலவர் கிழக்கு பார்த்திருந்து, பின்னர் திசை மாற்றப்பட்டிருக்கலாம்.

திருமுக்கூடல் கோவில் - வலது பக்க மூலை-திருமண மண்டபம் இருந்ததாம்

திருமுக்கூடல் கோவில் -- தூண்கள், கூரை பகுதிகள், சிற்பங்கள் விழுந்து கிடப்பது

காலத்தினால் ஏற்பட்ட மாற்றங்கள்: பொதுவாக, மூலவர் கிழக்கு பார்த்து அமைந்திருக்கும். ஏதாவது பாதிப்பு ஏற்படும்ம் போது, மூலவரை மேற்கு நோக்கி வைத்து, புனர்நிர்மாணம் செய்வர். ஆனால், இங்கு மூலவர் தெற்கு நோக்கி இருக்கிறது. தவிர இடது பக்க மூலையில் ஒரு லிங்கமும் இருக்கிறது. வலது பக்க மூலையில் (கோவிலின் வடக்கிழக்குப் பகுதியில்), ஒரு சந்நிதி இருந்ததற்கான அஸ்திவாரம் காணப்படுகிறது. அது முருகன் கோவில் என்று சொல்லப்பட்டாலும், ஆதாரங்கள் காணப்படவில்லை. முன்னர் சொல்லியபடி, தேவதைகளின் சிற்பங்கள், விக்கிரங்கள் தனித்தனியாக காணப்படுகின்றன. அவற்றை ஜேஸ்டா தேவி, கொற்றவை, சப்தமாதர் என்று பலவாறாகக் கூறப்படுகின்றன. எது எப்படியாகிலும், ஒருகாலத்தில் எல்லாம் நிறைந்த சிறந்த கோவிலாக இருந்திருக்கின்றது என்று தெரிகிறது. அமராவதி ஆற்றங்கரை மற்றும் முக்கூடலுக்கு அருகில் இருப்பதினால், இந்துக்கள் செய்ய வேண்டிய சம்ஸ்காரங்கள், காரியங்கள், கிரியைகள் முதலியவற்றிற்கு அனுகூலமாக இக்கோவில் அமைந்திருப்பது சிறப்பு. இந்தியத் தொல்துறை முன்னர் சீரமைப்பு வேலைகள் செய்திருப்பதாலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

© வேதபிரகாஷ்

04-06-2016

Posted in அகத்தீசுவரர், அகத்தீஸ்வரர் கோவில், அகஸ்தீஸ்வரர், அடையாளம், அமராவதி, உடைப்பு, கருவறை, கரூர், சதாசிவ பிரும்மேந்திரர், சித்தர், சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, சிவா, சோமூர், சோழர், சோழர் காலம், நாயக்கர், நெரூர், நொய்யல், பழுது பார்த்தல், பிரதோசம், பிரதோஷம், முக்கூடல், வாலி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஶ்ரீ அஞ்சனாக்ஷி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில், சோமூர் ஊராட்சி, கரூர் மாவட்டம் (1)

ஶ்ரீ அஞ்சனாக்ஷி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில், சோமூர் ஊராட்சி, கரூர் மாவட்டம் (1)

அகஸ்தீஸ்வரர் கோவில் இருப்பிடம்

அகஸ்தீஸ்வரர் கோவில் இருப்பிடம்

திருமுக்கூடலூர் கோவில் இருப்பிடம்

அருள்மிகு அஞ்சனாக்ஷி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில்: அருள்மிகு அஞ்சனாக்ஷி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் அமராவதி ஆற்றின்கரையில் அமைந்துள்ளது (10°57’45″N   78°10’43″E)[1]. அகழ்வாய்வு ஆதாரங்களின் படி இரும்புகாலம் மற்றும் பெருங்கற்காலங்களிலிருந்து (c.1500-1000 BCE) இங்கு மனிதர்களின் நாகரிகம் இருந்துள்ளது. இக்கோவிலில் அகழ்வாய்வு நடத்தியபோது தாழி ஒன்று கிடைத்திருக்கிறது[2]. நவீனகால கட்டிடங்கள் கட்டுமானங்களினால் பழைய குடியிருப்பு ஆதாரங்கள் மறைந்து விட்டன. டி. வி. மகாலிங்கம் இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்[3]. மு. ராகவ ஐயங்கார், முசிறியைத் தான் சேரர்களின் “வஞ்சி மாநகரம்” என்று அடையாளம் கண்டுள்ளார். ஆதலால், இவ்விடம் சுமார் 2500 ஆண்டுகளாக (c.500 BCE) மக்களின் நாகரிகத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. ஆரம்ப காலத்தில் இருந்த சிவன் கோவில், காலப் போக்கில் மாறுதல் அடைந்திருக்கலாம். அருகில் சோமூர் சிவன் கோவிலி ராஜராஜன் கல்வெட்டு காணப்படுவதால், இக்கோவிலும் சோழர் காலத்தில் 10-11ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டிருக்கலாம். 1341ல் மாலிக்காபூர் படையெடுத்துக் கொள்லையடித்தபோது பல கோவில்கள் பூஜை-புனஸ்காரம் இன்றி அப்படியே விடப்பட்டன. பிறகு சோழர்கள் மற்றும் விஜயநகர காலங்களில் புனர்-நிர்மானம் செய்யப்பட்டு, வழிபாட்டு முறைகளில் கொண்டு வரப்பட்டன. இதனால் தான், அத்தகைய பாதிக்கப் பட்ட கோவில்களில் சில மாறுதல்கள் காணப்படுகின்றன[4].

அகஸ்தீஸ்வரர் கோவில் இருப்பிடம், திருமுக்கூடலூர்

திருமுக்கூடல் கோவில் இருப்பிடம், திருமுக்கூடலூர்

கோவில் இருக்கும் இடம்: இக்கோவிலைப் பற்றிய செய்திகள் குறைவாகவே காணப்படுகிறது. கரூர்-நெரூர் திருமுக்கூடலூர் சாலை வழியாக நெரூரிலிருந்து, திருமுக்கூடலூருக்கு நேராக வரலாம். கரூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலுக்கு 4 ம் எண் பேருந்து ஊலம் திருமுக்கூடலூருக்கு வரலாம். பள்ளிக்கூட மைதானத்தைத் தாண்டி இக்கோவிலுக்குச் செல்ல வேண்டும். இக்கோவில் சோமூர் ஊராட்சி, கரூர் மாவட்டத்தில் உள்ளது.  காலஞ்சென்ற திரு. நாகராஜன் நெரூர் சதாசிவ பிரும்மேந்திரரைப் பற்றி எனக்கு அறிவித்தார், அதன் மூலம் நெரூர் மற்றும் நெரூர் சுற்றியுள்ள இடங்களுக்குச் சென்று ஆய்ந்து, முதலில் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை தயாரித்தேன், பிறகு, அவரது வேண்டுகோளுக்கு இணங்க 2011ல் தமிழில் ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது[5]. விவரங்களை சேகரிப்பதற்காக 2007லிருந்து தவறாமல் நெரூர் ஆராதனைக்கு வந்து கொண்டிருக்கிறேன். 2008ல் முதன் முதலில், எனது நண்பர் திரு விஸ்வநாதன் இக்கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அப்பொழுதிலிருந்து, வருடாவருடம் நெரூருக்கு வரும் போது இக்கோவிலுக்கு வந்து செல்கிறேன். ஆனால், கோவிலின் நிலை அப்படியே உள்ளது.

திருமுக்கூடல் கோவில் - 15-06-2016 அன்று வந்தது

திருமுக்கூடல் கோவில் – 15-06-2016 அன்று வந்தது

திருமுக்கூடல் கோவில் – 15-06-2016 அன்று வந்தது

திருமுக்கூடல் கோவில் - முன்பகுதி, இடது பக்கத்திலிருந்து பார்க்கும் தோற்றம்

திருமுக்கூடல் கோவில் – முன்பகுதி, இடது பக்கத்திலிருந்து பார்க்கும் தோற்றம்

திருமுக்கூடல் கோவில் – முன்பகுதி, இடது பக்கத்திலிருந்து பார்க்கும் தோற்றம் – இங்கும் தூண்கள், பகுதிகள் கிடப்பதைக் காணலாம்.

திருமுக்கூடல் கோவில்- இடது பக்கம் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பது

திருமுக்கூடல் கோவில்- இடது பக்கம் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பது

திருமுக்கூடல் கோவில்- இடது பக்கம் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பது

திருமுக்கூடல் கோவில்-- இன்னொரு நந்தி மேற்கிலிருந்து கிழக்கு பார்ப்பது

திருமுக்கூடல் கோவில்– இன்னொரு நந்தி மேற்கிலிருந்து கிழக்கு பார்ப்பது

கூடல், கூடலூர், சங்கமம்: இரண்டு மற்றும் மூன்று நதிகள் கூடும் இடத்தை கூடம், சங்கமம் என்றைழைக்கப் படுகிறது. அவ்வூர் சாதாரணமாக சங்கம், கூடலூர் என்றோ, அங்கிருக்கும் இறைவனின் பெயரோடி சேர்த்து, கூடலீஸ்வரம், சங்கமேஸ்வரம் என்று குறிப்பிடப் படுகின்றது. அதேபோல, இங்கும், அமராவதி கிழக்காக சிறிது தூரம் ஓடி காவிரியுடன் கலக்கிறது. அங்குதான் நொய்யல் ஆறும் கலப்பதாக சொல்கின்றனர். மணிமுத்தாறு என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில், இப்பொழுதெல்லாம் இந்நதிகளில் நீர் ஓடுவதில்லை. மழைகாலங்களில் மட்டும் தான் நீரைக் காணமுடிகிறது. மற்ற நேரங்களில் நீர் இங்கும்-அங்குமாக இருக்கிறது. கிழக்கு பார்த்து இக்கோவில் அமைக்கப்பட்டிருந்தாலும், இப்பொழுது சிறிது வடகிழக்காக  நகர்ந்திருப்பது போல் காணப்படுகிறது. கோவிலைச் சுற்றிலும் பெரிய மதிற்சுவர் இருக்கிறது. ஆனால், சில இடங்களில் பெயர்ந்திருக்கிறது. ஆற்றின் பக்கத்திலும் சுவர் விழுந்திருக்கிறது. இதனால், சிறுவர்கள் உள்ளே வந்து விளையாடவும் செய்கின்றனர். கோவில் முழுவதுமாக இருந்தாலும், இடிந்த நிலையில் காணப்படுகிறது. அக்கோவில் முதலில் மண்ணால் மூடியிருந்ததாகச் சொல்லப் படுகிறது. கோவிலுக்கு முன்னால், ஒரு பெரிய இடம் காலியாக இருக்கிறது. இடது பக்கத்தில் ஒரு வீரனின் நடுகல் இருக்கிறது.

திருமுக்கூடல் கோவில் - வாசலில் கிடக்கும் நடுகல் வீரன் சிற்பம்

திருமுக்கூடல் கோவில் – வாசலில் கிடக்கும் நடுகல் வீரன் சிற்பம்

திருமுக்கூடல் கோவில் – வாசலில் கிடக்கும் நடுகல் வீரன் சிற்பம்

திருமுக்கூடல் கோவில் - வடமேற்கு மூலையில் இருக்கும் சந்நிதி

திருமுக்கூடல் கோவில் – வடமேற்கு மூலையில் இருக்கும் சந்நிதி

திருமுக்கூடல் கோவில் – வடமேற்கு மூலையில் இருக்கும் சந்நிதி

திருமுக்கூடல் கோவில் - வடமேற்கு மூலையில் இருக்கும் சந்நிதி.கிடக்கும் தூண்கள் முதலியன

திருமுக்கூடல் கோவில் – வடமேற்கு மூலையில் இருக்கும் சந்நிதி.கிடக்கும் தூண்கள் முதலியன

திருமுக்கூடல் கோவில் – வடமேற்கு மூலையில் இருக்கும் சந்நிதி.கிடக்கும் தூண்கள் முதலியன

திருமுக்கூடல் கோவில் - வடமேற்கு மூலையில் இருந்த சந்நிதி-இப்பொழுது இல்லை

திருமுக்கூடல் கோவில் – வடமேற்கு மூலையில் இருந்த சந்நிதி-இப்பொழுது இல்லை

திருமுக்கூடல் கோவில் – வடமேற்கு மூலையில் இருந்த சந்நிதி-இப்பொழுது இல்லை

அகஸ்தீஸ்வரர், திருமுக்குக்கூடல். லிங்கம்-அகஸ்தியர், அனுமார்

அகஸ்தீஸ்வரர், திருமுக்குக்கூடல். லிங்கம்-அகஸ்தியர், அனுமார்

அகஸ்தீஸ்வரர், திருமுக்குக்கூடல். லிங்கம்-அகஸ்தியர், அனுமார்

திருமுக்கூடல் கோவில் - கிழக்கிலிருந்து தோற்றம்

திருமுக்கூடல் கோவில் – கிழக்கிலிருந்து தோற்றம்

திருமுக்கூடல் கோவில் – கிழக்கிலிருந்து தோற்றம்

இணைதளத்தில் இக்கோவிலைப் பற்றி கிடைக்கும் விவரங்கள்: இணைத்தளத்தில் இக்கோவில் உள்ளது, இங்கு வந்திருக்கிறேன், கோவில் பூட்டிருந்தது என்று சுருக்கமான விவரங்களே இருக்கின்றன[6]. ஒருவர் மட்டும் புகைப்படங்கள் எடுத்துக் போட்டிருக்கிறார்[7]. இன்னொருவர் இப்படியொரு கதையைக் குறிப்பிடுகிறார், ஆனால், அதற்கான மூலத்தையோ, ஆதாரத்தையோ, குறிப்பையோ கொடுக்கவில்லை. “ராமபிரான் தனது பாவத்தைப் போக்க ராமேஸ்வரத்தில் தனது கையால் லிங்கம் ஸ்தாபித்தது போல அகத்தியர் ராமருக்காக இங்கு ஒரு லிங்கம் உருவாக்கி வழிபட்டார். எடுத்து அந்த லிங்கம் பற்றி அறிந்த அனுமான் அந்த லிங்கத்தை எடுத்து விட்டு தான் கொண்டுவந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். அதை அகத்தியர் மறுத்ததால் லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முற்பட்டார். அப்பொழுது தனது வாலால் லிங்கத்தை கட்டி இழுத்தார். இதைக்கண்ட அகத்தியர் உனது லிங்கம் தண்ணிருக்கடியில் போக என்று சாபம் கொடுத்தார். இதனால் கோபமுற்ற அனுமான் உங்களது லிங்கம் மண்மேடாய் போகுக என சாபம் கொடுத்தார். இதை பார்த்த சிவன் இருவரும் சண்டை விடுத்து அமைதி பெறுங்கள் என்றார்”, என்ற கதையை சேர்த்துள்ளார்[8]. தளிர் என்ற இணைதளத்தில் “சுமார் 100 வருடங்கள் முன் ஆற்று வெள்ளத்தில் மண் மேடிட்டு இந்த ஆலயம் மண்ணில் புதைந்து விட்டதாம். 1936ம் ஆண்டில் மண் தோண்டி ஆலயத்தை வெளியில் எடுத்துள்ளார்கள். சோழர்கள் நாயக்க மன்னர்கள் இந்த ஆலயத்தை கட்டியும் பராமரித்தும் வந்துள்ளார்கள் என்பது இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது”, என்றுள்ளது[9]. கோபிநாத் என்பவரின் குரல் கொண்ட வீடியோவில் நிறைய விவரங்கள் காணப்படுகின்றன[10].

© வேதபிரகாஷ்

04-06-2016

[1] Tirumukkudalur This village (780 10’54” E; 10 0 58′ 31″ N, 102 m MSL) is situated 15 km from Karur on the way to Nerur road. It is ideally located at the confluence of river Amaravathi with Kaveri. The Iron Age urn burials are found around the village covering more than 3 ha. It yielded black-and-red ware and red ware. The habitation mound was partially destroyed due to construction (Anbarasan 2004; Seetharam Gurumoorthy 2008:63-65).

[2] Thirumukkudalur, Laititude-78.18193;  longitude -10.97530; period-   Iron Age,  object obtained – Urn,  place – Siva Temple.

 1. P. Yathees Kumar, Archaeology of Amaravathi River Valley, Tamilnadu, Pondicherry University, 2011, P.271

[3] A Siva temple with inscription is found on southern side of the village (Mahalingam 1991:15-17).

[4] லிங்கம் / மூலவர் கிழக்கிற்கு பதிலாக மேற்கு பார்ப்பது, பிரகாரங்கள் சேர்க்கப்படுவது, விஷ்ணு சந்நிதி வைக்கப்பட்டது, துவாரபாலகர்கள் வைப்பது, ஆகமவிதிகளை / கோழிலொழுகு முறைகளை மாற்றி அமைத்தது, முதலியவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.

[5]  வேதபிரகாஷ்-கரூர் நாகராஜன், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர்வரலாற்றுப் பார்வையில் ஒரு ஆராய்ச்சி நூல், பாரதிய இதிகாஸ சங்கலன சமி, சென்னை, 2011.

[6] http://travel.bhushavali.com/2010/05/nerur-thirumukkudalur-karur-tamil-nadu.html

[7] http://www.kovaineram.in/2011/11/blog-post_26.html

என். பூஷாவலி / புஸாவள்ளி (N. Bhushavalli)

[8] http://korakkar-sankar.blogspot.in/2013/02/1.html

[9] http://clysis10.rssing.com/chan-6229834/all_p16.html

[10] https://www.youtube.com/watch?v=STl42WvzmvM

 

Posted in அகத்தீசுவரர், அகத்தீஸ்வரர் கோவில், அகஸ்தீஸ்வரர், அடையாளம், அமராவதி, இடைக்காலம், கட்டிடம், கரூர், கல்யாண மண்டபம், கல்வெட்டு, காலம், காவிரி, கூடல், கொடி கம்பம், சங்கமம், சங்கம், சித்தர், சித்தர் கோயில், செங்கல்சுதை, செப்பனிடுதல், திருமுக்கூடல், நொய்யல், முக்கூடல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சுருட்டப்பள்ளி, பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்: சிவன், விஷ்ணு போல படுத்திருக்கும் இடம்!

சுருட்டப்பள்ளி, பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்: சிவன், விஷ்ணு போல படுத்திருக்கும் இடம்! 

Suruttappalli location, Google map

Suruttappalli location, Google map

பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்: சிவன் விஷ்ணு போல படுத்திருக்கும் இடம்!: பள்ளி கொண்டீஸ்வரர் சிவன் கோவில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சுருட்டப்பள்ளி என்ற ஊரில் அமைந்துள்ளது. சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் 56 கி.மீ,  ஊத்துக்கோட்டையிலிருந்து  2 கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது. மற்ற எந்த சிவன் கோவிலிலும் காணமுடியாத கோலத்தில் இங்கு சிவன் பள்ளி கொண்ட நிலையில் காணப்படுகிறார். அனந்த பத்பநாபனைப் போன்று சயனித்த நிலையில் காணப்படுகிறார். இத்தகைய விக்கிரகம் கொண்ட கோவில் இங்கு ஏன் கட்டப்பட்டது என்று தெரியவில்லை. இருக்கும் விவரங்களை வைத்துப் பார்த்தால் விஜயநகர காலத்தில் 1565ம் ஆண்டு விஜயநகர பேரரசரான கிருஷ்ணதேவராயரால் / வித்யாரண்யரால், இக்கோவில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது[1]. முன்பு, சாதாரணமாக தெரிந்தவர்கள் மட்டும் தான் இக்கோவிலுக்கு சென்று தரிசித்துச் செல்வது வழக்கம். அப்பொழுது, எல்லோரும் கர்ப்பகிருகத்தில், மூலவர் அருகில் சென்று வழிபடலாம், நன்றாக தரிசிக்கலாம். ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி, காஞ்சி சங்கராச்சாரி பெரியவர், இக்கோவில்ன் மகிமையை எடுத்டுரைத்தப் பிறகு, நிறைய பக்தர்கள் செல்ல ஆரம்பித்தார்கள். பிறகு இந்து அறநிலைய துறைக் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. கோவிலும் புதுப்பிக்கப் பாட்டு, கும்பாபிஷேகம் செய்ய்யப்பட்டது. இப்பொழுது, இங்கு கூட்டம் வர ஆரம்பித்து விட்டது. இதனால், சிறப்பு தரிசனம், நந்தி அபிஷேகம் என்று ஏற்படுத்தப் பட்டு ரூ.200/-, 500/- என்றெல்லாம் வசூல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

சுருட்டப்பள்ளி - தகங்குமிடம், கழிப்பறை முதலியன

சுருட்டப்பள்ளி – தகங்குமிடம், கழிப்பறை முதலியன

சுருட்டப்பள்ளி - உட்காருமிடம், வாகனம் நிறுத்துமிடம்

சுருட்டப்பள்ளி – உட்காருமிடம், வாகனம் நிறுத்துமிடம்

சுருட்டப்பள்ளி - கோவில் நுசழைவு வாயில் நந்தி

சுருட்டப்பள்ளி – கோவில் நுசழைவு வாயில் நந்தி

சுருட்டப்பள்ளி - கோவில் நுசழைவு வாயில்

சுருட்டப்பள்ளி – கோவில் நுசழைவு வாயில்

சுருட்டப்பள்ளி - கோவில் உட்புறம்- கொடிக்கம்பம், நந்தி

சுருட்டப்பள்ளி – கோவில் உட்புறம்- கொடிக்கம்பம், நந்தி

சுருட்டப்பள்ளி - கோவில் உட்புறம்- இடது பக்கத்தில் உள்ள சப்த மாதர்

சுருட்டப்பள்ளி – கோவில் உட்புறம்- இடது பக்கத்தில் உள்ள சப்த மாதர்

சுருட்டப்பள்ளி - கோவில் உட்புறத்திலிருந்து பின்பக்கத் தோற்றம்

சுருட்டப்பள்ளி – கோவில் உட்புறத்திலிருந்து பின்பக்கத் தோற்றம்

சுருட்டப்பள்ளி - கோவில் உட்புறம்- பின்பக்கத் தோற்றம்

சுருட்டப்பள்ளி – கோவில் உட்புறம்- பின்பக்கத் தோற்றம்

சுருட்டப்பள்ளி - கோவில் பின்பக்கத் தோற்றம்.

சுருட்டப்பள்ளி – கோவில் பின்பக்கத் தோற்றம்.

சுருட்டப்பள்ளி - பள்ளிக்கொண்டீஸ்வரர் கர்ப்பகிருகம்

சுருட்டப்பள்ளி – பள்ளிக்கொண்டீஸ்வரர் கர்ப்பகிருகம்

Surattappalli Siva idol

Surattappalli Siva idol

Surattappalli Siva idol- with different alankara

Surattappalli Siva idol- with different alankara

Surattappalli Siva reclining idol- with different alankara

Surattappalli Siva reclining idol- with different alankara

அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக இருப்பதும் இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்: சிவன் பள்ளி கொண்ட நிலையும், அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக இருப்பதும் இக்கோயிலின் தனிச் சிறப்பாகும், என்று இப்பொழுது இக்கோவில் உள்ள விக்கிரங்களைப் பற்றி விவரிக்கிறார்கள். பள்ளி கொண்ட ஈஸ்வரன் – சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் – மரகதாம்பிகை, விநாயகர் – சித்தி, புத்தி, சாஸ்தா – பூரணை, புஷ்கலை, குபேரன் – கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் உள்ளனர்[2]. இப்படி சொல்பவர்கள் சப்தமாதர்கள் மட்டும் தனியாக ஏன் இருக்கிறார்கள் என்று யோசிப்பதில்லை[3]. மூலவர் வால்மீகிஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இவருக்கு எதிரில் ராமலிங்கம் உள்ளது. இந்த சன்னதிக்கு வெளியே துவார பாலகருக்கு பதில் சங்கநிதியும், பதுமநிதியும் உள்ளனர். அம்மன் மரகதாம்பிகை சன்னதிக்கு வெளியில் துவார பாலகியருக்கு பதில் பாற்கடலிலிருந்து கிடைத்த காமதேனுவும், கற்பகவிருட்சமும் உள்ளனர். பிரகாரத்தில் விநாயர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள். இடது பக்கத்தில் சப்தமாதார்கள் விக்கிரகங்களையும் வைத்துள்ளனர்.

Surattappali idols.1

Surattappali idols.1 – Courtesy – http://pallikondeswarar.com/

Surattappali idols.1

Surattappali idols.1 – courtesy – http://pallikondeswarar.com/

பிரதோச பூஜை தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த தலமே சுருட்டப்பள்ளிதான்: தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அத்தருணத்தில் வெளிவந்த ஆலகால விஷத்தை உண்ட களைப்பால் சற்றே அயர்ந்து சயனக்கோலத்தில் பரமேஸ்வரன் பள்ளி கொண்டதாக ஐதீகம், எனவே இத்தலத்தில் பிரதோஷ பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது.   பிரதோச பூஜை தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த தலமே சுருட்டப்பள்ளிதான் என்று சொல்லப்படுகிறது[4].  இவ்வுலகை காப்பதற்காக அமிர்தத்தை கொடுத்து விட்டு விஷத்தை உண்ட இந்த பள்ளிகொண்ட நாதனை சனிக்கிழமைகளில் வரும் மகாபிரதோஷ தினத்தில் வழிபட்டால் –

 • இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும்,
 • பதவியிழந்தவர்கள் மீண்டும் அடைவர்,
 • பதவி உயர்வு கிடைக்கும்,
 • திருமணத்தடை விலகும்,
 • பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர்

போன்ற நம்பிக்கைகள் (அல்லது உருவாக்கிவிட்டனர்) என்று விளக்குகிறார்கள்[5].

காஞ்சி பெரியவரின் வழிபாடு, சாதனை, ஆசியுடன் வெளிப்படுத்திய விவரங்கள்[6]: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் 1977-ம் ஆண்டு காஞ்சி பெரியவர் விஜயம் செய்தபோது, இக்கோவில், விக்கிரகம் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறி அருளாசி வழங்கினார். பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம் என்றும், தாம் கண்ட கண்கொள்ளாக் காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும் என்றும் அனுக்கிரகம் செய்தார். சுருட்டப்பள்ளி கோவிலில் பதினைந்து நாட்கள் தங்கியிருந்தளிறைவனை தியானித்து தவம் இருந்தார். பள்ளி கொண்டீஸ்வர பெருமானை தரிசித்த சுவாமிகள் அப்போதே சுலோகம் ஒன்றை இயற்றி அர்ப்பணம் செய்தார்.

தேவ்யூரு ஸயனம் தேவம்

ஸ்ரீபாணம் ஸ்வார்ந்த விக்ரஹம்

ப்ருக்வாதி வந்திதம் தேவம்

லோகஷேமார்த்த மாஸ்ரயே

அதன் பொருள் வருமாறு: “விஷத்தை உண்ட களைப்பில் அம்பாளின் மடியில் ஈஸ்வரன் பள்ளி கொண்டிருக்கிறார். உலக நன்மைக்காக விஷம் உண்ட சிவனை காண தேவரும், பிருகு முதலிய ரிஷிகளும் வந்திருக்கிறார்கள். சயனத்தில் உள்ள ஈசுவரனை வணங்கி பயன் பெறுவோம்”. காஞ்சி பெரியவரின் பாதங்கள் பட்டவுடன் சுருட்டப்பள்ளி என்னும் இத்திருத்தலம் வெளியுலகிற்குத் தெரியவர ஆரம்பித்தது. மக்களும் அதிகமாக வர ஆரம்பித்தனர்.

Surattappali idol - Dakshinamurthy with wife-full printed-portion

Surattappali idol – Dakshinamurthy with wife-full printed-portion – Courtesy – http://pallikondeswarar.com/

சிவன் படுத்திருப்பதற்கு காரணம்: தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அத்தருணத்தில் வெளிவந்த ஆலகால விஷத்தை உண்டகளைப்பால் சற்றே அயர்ந்து சயனக்கோலத்தில் பரமேஸ்வரன் பள்ளி கொண்டதாக ஐதீகம், எனவே இத்தலத்தில் பிரதோஷ பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது.   ஆனால், பாற்கடல் எங்கிருந்தது, எப்படி கடைந்தார்கள், அங்கு ஆலகால விசத்தை உண்ட சிவன், இங்கு எப்படி வந்தார் என்பது பற்றியெல்லாம் சித்திப்பதில்லை. அதாவது, பூகோள ரீதியில் இடங்களை அடையாளம் காணுவதில்லை. “சைவ-வைஷ்ணவ ஒற்றுமைக்கு” இலக்கணமாகத் திகழ்கிறது என்று ஒருவர் எழுதுகிறார். அதாவது, சரித்திரத்தை ஆராய்ந்து புனர்நிர்மாணம் செய்து, மீட்டெடுக்க வேண்டும் என்ற அக்கரையும் இல்லாமல், ஏதோ சிண்டு முடிக்கும் வேலையில் ஈடுபடும் நோக்கத்தில், அத்தகைய கருத்தை ஸ்தலபுராணத்தில் நுழைக்கிறார். இது சிற்பியின் கற்பனையா அல்லது அவ்வாறு யாராவது ஆணையிட்டு வடிக்க வைத்தார்களா என்று யோசிப்பதாகத் தெரியவில்லை. சிற்பக்கலையில், குறிப்பிட்ட காலத்தில் அவ்வாறு சுதந்திரமாக செயல்பட்டு[7], சிலை வடிக்கப்பட்டதா அல்லது அத்தகைய புராணத்திற்கு ஆதாரம் இருந்ததா என்று ஆராய்ச்சியாளர்கள் பார்க்க வேண்டும். வாஸ்து சாத்திரம் ஒன்று என்றால், அதனை மாற்றக் கூடாது, ஒவ்வொரு சிற்பியும், புதியதாக ஒவ்வாத விசயங்களை சேர்க்கக் கூடாது[8].

Surattappali idols.3

Surattappali idols.3 – Courtesy – http://pallikondeswarar.com/

ஸ்தலபுராணங்களும், புனர்நிர்மாணங்களும் சரித்திரத்தை மாற்றுகின்றன: ஸ்தலபுராணங்கள் அவ்வப்போது எழுதப்படுவதாகத் தெரிகிறது. அவற்றை எழுதுபவர்களுக்கு இந்தியாவில் உள்ள மற்ற கோவில்கள், குளங்கள், தீர்த்தங்கள் முதலியவற்றின் இருப்பிடம், சிறப்பு, அவற்றின் காலம் முதலிவை தெரியவில்லை, தெரிந்து கொள்ளப்படுவதில்லை அல்லது அவற்றைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாவும் கவலைப் படுவதில்லை என்று தெரிகிறது. தமக்குத் தெரிந்த புராணக் கதைகளை, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஏற்றவாறு தொகுத்து, மாற்றியெழுதி, சில சிறப்புகள், பரிகார பூஜைகள் முதலியவற்றை சேர்த்து, புதியதாக ஸ்தபுராணங்களை எழுதி வருகிறார்கள்தீதனால், சம்பந்தமே இல்லாமல் சிவன், ராமன்[9], இந்திரன் சப்த ரிஷிகள் போன்றவர்களை எல்லா ஊர்களுக்கும் வந்து-செல்லுமாறு செய்திறார்கள். ராமாயண-மகாபாரத குறிப்புகளுடன் கூட இயைந்து போவதில்லை. பக்தியுடன் புனையப்படும் இந்த ஸ்தலபுராணத்தில் சரித்திரம் என்பது இல்லாமலே போய்விடுகின்றது.

பாரம்பரிய கட்டிடக்கலையை வாஸ்து பெயரில் மாற்றுவது: மேலும், பழைய கோவில் இடிக்கப்பட்டு, புதியதாகக் கட்டப்படும் போது, முன்பிருந்த சன்னிதிகள் இடம் மாற்றப்படுகின்றன, சில புதியதாக சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. பக்தர்களைத் திருப்தி படுத்த எல்லா கடவுளர்களின் விக்கிரங்கள், பர்வார தேவதைகள் என்று சேர்த்துக் கொள்ளப் படுகின்றன. கல்வெட்டுகள் பற்றி கவலைப்படுவதில்லை. ஒன்று பாதிப்பகுதி புதியதாகக் கட்டப்படும் சுவர்களில் மறைந்து விடுகின்றன, இல்லை, அவற்றின் மீது சுண்ணாம்பு, பெயின்ட் அடிக்கப்பட்டு விவரங்கள் மறைந்து போகின்றன. இக்கால ஸ்தபதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப அல்லது, அவர் தமக்குத்தான் அத்தகைய வாஸ்து சாத்திரம் தெரியும் என்பது போல மாற்றியமைத்துக் கட்டப்படுகிறது. அதனால், அதற்கேற்றப்படி ஸ்தலபுராணமும் மாற்றியமைக்கப்படுகிறது. மக்களுக்கு பிரச்சினைகளும் அதிகமாகி வரும் போது, அப்பிரச்சினைகளையும் கருத்திற்கொண்டு, புதிய கதைகளை உருவாக்குகிறார்கள். கூட்டம் அதிகமாகி, வருமானம் பெருக ஆரம்பிக்கும் போது, அரசு ஏற்றுக் கொண்டு நடத்தும் போது, மற்ற எல்லா தொந்தரவுகளும், இடையூறுகளும், கோவில்-கோவில் வழிபாடு இவற்றிற்கு ஒவ்வாத விவகாரங்களும் வந்து விடுகின்றன. வேஷ்டி கரைகளினால், கரைகள் படிகின்றன, கோவில்கள் வியாபார ஸ்தலங்களாக மாறி விடுகின்றன. அப்பொழுது உண்மையான பக்தர்கள் அதிக அளவில் பாதிக்கப் படுகின்றனர்[10].

© வேதபிரகாஷ்

05-08-2015

[1] http://pallikondeswarar.com/about.html

[2] http://pallikondeswarar.com/

[3]  தெய்வநம்பிக்கையினையோ, பக்தியினையோ குறை சொல்லவில்லை, ஆனால், புதியதாக, இத்தகைய கதைகளை புனைவதற்கு முன்னர், அவற்றின் காரணகர்த்தாக்கள் அவற்றைப் பற்றி யோசித்திருக்க வேண்டும் என்று தான் எடுத்துக் காட்டப்படுகிறது.

[4]http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%88%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/article5778331.ece

[5] இன்று இடமாற்றம் கிடைப்பதற்கு கூட, விண்ணப்பம் போடுவதற்கு ஒரு கோவிலைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதாவது, காலத்திற்கு ஏற்ப மனிதர்கள் பிரோஜனமில்லை, உதவ மாட்டார்கள், என்று அறிந்த நிலையில், கடவுளை நம்புகின்ற நிலையில், இவ்வாறு கடவுளின் அனுக்கிரகத்தைப் பெறவும் வழிகளை மாற்றி உருவாக்குகிறார்கள்.

[6] http://www.maalaimalar.com/2011/03/02091527/surutapalli-pallikondeswarar-t.html

[7] இக்காலத்தில் சித்திரங்கள், சிற்பங்கள் வேறுமாதிரி உருவாக்கப்பட்டால், எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இது இரண்டு வகையில் நடந்து வருகின்றன.

 1. செக்யூலரிஸ்டுகள், நாத்திகர்கள் போன்றோர் அவ்வாறு செய்து வருகின்றனர்.
 2. இந்து-விரோதிகள் தாராளத்தன்மை, கலைஞர்களின் சுதந்திரம் என்ற ரீதீயில் வரையும் சித்திரங்கள்.
 3. பாதி வினாயகர்-பாதி ஆஞ்சனேயர் போன்ற விக்கிரகங்களை உருவாக்கிக் குழப்பும் நவீன சிற்பிகள், வாஸ்து விற்பனர்கள் என்றும் கிளம்பியுள்ளார்கள்.

[8]  இடைக்காலத்தில், முஸ்லிம்-முகலாயர் காலங்களில் சில மாற்றங்களை செய்து கோவில்கள் கட்டப்பட்டன. அதாவது, இடிக்கப்பட்ட கோவில்கள் மறுபடியும் திரும்பக் கட்டப்படும் போது, இடம் பெயர்ந்து புதிய இடங்களில் கட்டப்பட்ட போது, அத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால், அவற்றிற்கு வாஸ்து சாத்திரம் என்று அவர்கள் சொல்லவில்லை. முடிந்த அளவில் உண்மையினை பதிவு செய்தே அவ்வாறு கட்டினர். ஆனால் தென்னகத்தில், அத்தகைய பதிவுகள் இல்லை. மாறாக, ஸ்தலபுராணங்கள் மாற்றி எழுதப்பட்டன. உண்மைகளும் திரிக்கப் பட்டன.

[9] ராமன், சீதை, லக்ஷமணன் எல்லா ஊர்களுக்கு வந்ததாக, எல்லா கோவில்களிலும் வந்து வழிபட்டதாக எழுதி வைத்துள்ளனர். ஆனால், ராமர் காலத்திற்கும், இக்காலத்திற்கும் உள்ள இடைவெளி, சரித்திர ஆதாரங்களின் தேவை முதலியவற்றைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இவ்வாறான, புதிய கதைகளை உருவாக்குவதால், உண்மையான சரித்திரம், பாரம்பரிய வழக்குகள் முதலியவையும் பாதிக்கப் படுகின்றன என்பதனை அவர்கள் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

[10] இப்பொழுது, சிறிது-சிறிதாக இக்கோவில் அந்நிலையை அடைந்து வருகிறது. வாகனங்களை நிறுத்த, கழிப்பிடத்தை உபயோகப்படுத்த, என்று எல்லாவற்றிற்கும் வசூலிக்க ஆரம்பித்து விட்டார்கள். முன்னர் அமைதியாக நடந்து வந்து வழிபாடு, தரிசனம் காசுக்காக மாற்றியமைக்கப் பட்டுள்ளது.

Posted in ஊத்துக்கோட்டை, காஞ்சி, காஞ்சிப் பெரியவர், சங்கராச்சாரி, சங்கராச்சாரியார், சயனம், சித்தூர், சிவன், சுருட்டப்பள்ளி, திருப்பதி, நந்தி, பள்ளி கொண்டீஸ்வரர், பாற்கடல், பிரதோசம், பிரதோஷம், பெரியவர், விசம், விஷம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஜைனர்கள் முகமதியர்களுக்காக மசூதிகள் கட்டிக் கொடுத்தது, ஆனால் பதிலுக்கு முகமதியர்கள் ஜைன-கோவில்களை இடிக்க ஆரம்பித்தது!

ஜைனர்கள் முகமதியர்களுக்காக மசூதிகள் கட்டிக் கொடுத்தது, ஆனால் பதிலுக்கு முகமதியர்கள் ஜைனகோவில்களை இடிக்க ஆரம்பித்தது!

Dhadeswar dharga, Kutch, Gujarat

Dhadeswar dharga, Kutch, Gujarat

ஜைனர்கள் முகமதியர்களுக்காக மசூதி கட்டிக் கொடுத்தது: ஜகடு, ஜக்டுஷா, ஜகடு ஷா என்றெல்லாம் அழைக்கப்பட்டவர், 13ம் நூற்றாண்டில் பல கப்பல்களை வைத்துக் கொண்டு, பாரசீகம், அரேபியா, ஆப்பிரிக்க முதலிய நாடுகளுடன் ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரம் செய்து வந்த ஒரு குஜராத் ஜைன வணிகன். அந்நாடுகளில் தனது பிரதிநிதிகளையும் வைத்திருந்தான். அவர்களில் பெரும்பாலோர் முகமதியர், அவர்கள் குஜராத்திற்கு வந்து செல்வது வழக்கம். அதனால், அவன் மிலேச்சர்களுக்கு ஒரு மசூதி கட்டிக் கொடுத்தான். எனவே, ஜகடு என்ற ஜைன வணிகன், மிகப்பெரிய தனவான், ஹோர்மூஸ் முகமதிய நண்பர்களுக்காக மசுதி கட்டிக் கொடுத்தான்[1], என்று ரொமிலா தாபர் எடுத்துக் காட்டும் போது, ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.  சிம்லி எனப்படுகின்ற மசிதி அல்லது மசூதியை பத்ரேஸ்வரர் என்ற இடத்தில் கட்டப்பட்டது. ஜகடுதாஸ் சரித்ர என்ற நூலில் “மிலேச்ச லக்ஷிமி கராநாடகஹ” என்ற சொற்றோடர் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. 1264ம் ஆண்டு அரேபிய-சமஸ்கிருத கல்வெட்டு, கப்பல் வைத்திருக்கும், ஒரு பெரிய பணக்கார முதலாளி மசூதிக்கு தானம் கொடுத்தார் என்கிறது[2]. 1178 மற்றும் 1242ம் ஆண்டுகளுக்கிடையே, துருக்கிய மற்றும் அரேபிய வணிகர்களைக் கவருவதற்காக, வஸ்துபால் மற்றும் ஜகுதுஸா என்ற ஜைனர்கள் முறையே காம்பே மற்றும் கட்ச் பகுதிகளில் மசூதிகளைக் கட்டிக் கொடுத்தனர்[3].

Fukami Naoko of Tokyos Waseda University-Ibrahim dargah in Bhadreshwar

Fukami Naoko of Tokyos Waseda University-Ibrahim dargah in Bhadreshwar

மசூதியா, தர்காவா என்ற பிரச்சினை: புகாமி நவோகோ [Prof Fukami Naoko] என்ற ஜப்பானிய ஆராய்ச்சியாளர், பதேஸ்வர் என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளா தர்கா இந்தியாவிலேயே உள்ள தொன்மையான முஸ்லிம்கள் கட்டிடம் ஆகும் என்றும் அது தர்கா என்றும் குறிப்பிடுகிறார்[4]. ஜைன அரசனின் உத்தரவு படி, இந்து மற்றும் ஜைன வேலையாட்கள், இந்த தர்காவைக் கட்டியிருக்கலாம் என்கிறார்[5]. ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு மசூதி என்றும் தர்கா என்றும் கூறுவதிலிருந்து அவர்களுக்கு அது தெளிவாக இல்லை என்று தெரிகிறது. இஸ்மயிலிகளைப் பற்றி கூறும்போது, இந்த தர்கா தௌத் இபின் நஸர் மூல்தானி என்பவருடைதாக இருக்கலாம் என்று ஒரு இணைதளம் புகைப்படங்களுடன் எடுத்துக் காட்டுகிறது[6]. மேலும், அவர்கள் முகமதியர்கள் பதிலுக்கு ஏன் ஜைனர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து அவர்களது கோவில்களை இடிக்காமல் இருக்க வேண்டும் என்ற எண்ணாத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் விவாதிக்கவில்லை. அக்கட்டிடம், ஒரு இந்து கட்டிடம் போலத்தான் காட்சியளிக்கிறது.

Shrine-of-Ibrahimn-Bhadreswar-1159

Shrine-of-Ibrahimn-Bhadreswar-1159

மாற்று மத ஆட்சியாளர்கள் வெகுஜன மக்களின் தேவைகளை செய்வது சிறப்பான விசயம் அல்ல: ஜைனர்கள் முகமதியர்களுக்காக மசூதி கட்டி கொடுத்தார்கள் என்பது, இது ஔரங்கசீப் கோவில்கள்-மடங்கள் கட்டுவதற்கு பணம் கொடுத்தான் என்பது போல உள்ளது. இந்துக்கள் அதிகமாக உள்ளனர், அவர்கள் மூலம் அதிகம் வரி, வருவாய் வருகிறது என்றபோது, எந்த அரசாக இருந்தாலும், செய்ய வேண்டியவற்றை செய்தாக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். கோவில்களை இடித்து, கோவில்கள் கட்ட நிதியளித்தான் என்று குறிப்பிடும் போதே, அந்த முரண்பாடு வெளிப்படுகிறது. ஜைனர்களும், தாங்கள் ஆட்சி-அதிகாரத்தில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது, இந்துக்களை அவ்வாறுதான் நடத்தியுள்ளார்கள். வியாபாரம் வேறு மதநம்பிக்கை-கட்டுப்பாடு வேறு என்பது தெரிந்த விசயமே. ஜைனர்களும், முகமதியர்களும் வியாபார நலன்களுக்காக ஒன்றாக செயல்பட்டனர் என்றால், அதுவும் இந்துக்களின் நலன்களுக்கு எதிரானது என்பது எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அந்நிலையில் தான் வீரசைவம் போன்ற குழுக்கள், குறிப்பாக மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் தோன்றினர். இத்தகைய இந்துகளின் எதிர்-விளைவுகளைக் கண்டு, அவர்களுடன் சமரசமாக போயிருக்கலாம். கர்நாடகத்தைப் பொறுத்த வரைக்கும், அத்தகைய நிலை தான் காணப்படுகிறது, இன்றும் தொடர்கிறது. ஆனால், 15-16ம் நூற்றாண்டுளில் முகமதியர்கள், ஜைன கோவில்களைத் தாக்கி, இடித்து, உடைக்க ஆரம்பித்தது, கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுகின்றன. அப்படியென்றால், ஜைன-முகமதிய உறவுகள் ஏன் மாறின என்று நோக்கத்தக்கது.

Remains found at Bhadreswar, Kutuch, Gujarat

Remains found at Bhadreswar, Kutuch, Gujarat

துருக்கியர், முகமதியர்களின் கோவில் இடிப்புகள்: 1535 தேதியிட்ட சிந்தாமணி கோவில் (பிகானிர், ராஜஸ்தான்) கல்வெட்டு, கமரான் என்பவனின் தலைமையில் முகலாயப் படைகள் அங்குள்ள ஜைனர் கோவிலை இடித்து, சிலையையும் உடைத்தனர் என்று பதிவு செய்துள்ளது[7]. கஜனி கான் ஜலோரி என்பவனின் தலைமையில் முகமதியப் படைகள் கோத்வார் (Godwar) என்ற இடத்தில் உள்ள கோவில்களை இடித்தான்[8]. ஒரு கோவில் இடிக்கப்பட்டது, ஆனால், அது 1615 மற்றும் 1628 ஆண்டுகளில் புனர்-நிர்வாணம் செய்யப்பட்டது. அப்பொழுது மேற்பார்வையாளர்களக இருந்த சூத்ரதார் பகவான் மற்றும் லாத என்பவர்களின் பெயர்களும் அங்குள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டன[9]. குத்புதீன் ஐபெக், ஒரு துக்கிய அடிமை ஆப்கானிஸ்தானில் தங்கியபோது, பல இந்து மற்றும் ஜைன கோவில்களை இடித்தான். கோவில்களை அப்படியே வைத்து, மேலே கூம்புகளைக் கட்டி மசூதிகளாக மாற்றினான் மற்றும் கோவில்களின் பகுதிகள், கற்கள் வைத்டுக் கொண்டு மசூதிகளைக் கட்டினான்[10]. இவ்வாறு பல குறிப்புகள் கொடுக்கலாம். இங்கு துருக்கியர், முகமதியர்களைப் பொறுத்த வரைக்கும், இந்து-ஜைன கோவில்கள் என்று வித்தியாசம் பார்த்து அழைத்தார்களா என்று தெரியவில்லை.  இக்கால ஜைன மற்றும் ஜைன சார்பு எழுத்தாளர்கள் இதனை வித்தியாசப் படுத்திக் காட்டாமல், ஒட்டு மொத்தமாக ஜைன கோவில்களை இடித்து விட்டார்கள் என்று எழுத ஆரம்பித்து விட்டார்கள்.

Perhaps-tomb-of-Dawud-ibn-Nasr-Multani-Bhadreswar

Perhaps-tomb-of-Dawud-ibn-Nasr-Multani-Bhadreswar

மதநம்பிக்கை அரசியலாக, ஆட்சிகளை மாற்ற வழிவகுத்தது: உருவவழிபாடு இல்லை என்பவர்கள், வழிபாட்டு முறைகளில் உருவங்களை முகமதியர்கள் உருவாக்க ஆரம்பித்தது மற்றும் கடவுளே இல்லை என்ற ஜைனர்கள், திடீரென்று தீர்த்தங்கர்களை கடவுளாக்கி, கோவில்களில் வைத்து வழிபட ஆரம்பித்ததும், ஒரே காலத்தில் நடப்பது ஆராயத் தக்கது. மேலே குறிப்பிட்ட 11 – 15 நூற்றாண்டுகளில் அத்தகைய மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இரண்டுமே இந்துக்களின் நலன்களுக்கு எதிராக ஏற்பட்டிருக்கின்றன. ஜைனர்கள், பௌத்தர்களைப் போன்று, சமாதிகளை ஏன் வழிபட ஆரம்பித்தார்கள் மற்றும் மசூதி-தர்கா குழப்பமும் இதில் ஏன் ஏற்பட்டது என்பதும் நோக்கத்தக்கது. ஒருகாலகட்டத்தில், அரேபியாவிலிருந்து சிந்து வரை, மேலே மத்திய ஆசியா தாண்டி சீனா பகுதிகள் வரை, பௌத்தம் மேலோங்கியிருந்தது. ஆனால், இடைக்காலத்தில் அப்பகுதிகளில் பௌத்தம் மறைந்து மற்றும் ஜைனம் இப்பொழுதுள்ள இந்தியாவை நோக்கி நகர்ந்து, கர்நாடகத்தில் வந்தடைந்தது, மற்றும் முகமதியம் வளர்ந்தது போன்ற நிகழ்வுகளும் கவனிக்கத்தக்கது. அஹிம்சையினை போதித்த மதங்கள் இரண்டுமே, முகமதியத்தை எதிர்கொண்டு, எதிர்த்துள்ளன, முகமதியத்துடன் மோதியுள்ளன. இருப்பினும் தாக்குப் பிடிக்க முடியாமல், பின்வாங்கியுள்ளன. ஆனால், இந்து மதம் தாக்குப் பிடித்துள்ளது. இருப்பினும், இந்த காலகட்டத்தில், அப்பகுதிகளில் இருந்த இந்துக்களும் தாக்குதல்கலுக்கு உள்ளாகி, ஆட்சியை இழந்துள்ளனர். இதனால் 712-1026 காலத்தில், முகமதியர் தாராளமாக இந்திய மேற்குப் பகுதிகளில் கொள்ளையெடிக்க வர ஆரம்பித்து விட்டனர்.

© வேதபிரகாஷ்

11-07-2015.

[1] Romila Thapar, Many vpices of History – Somanatha, Verso, USA, 2005, (Printed in London), p. 29.

[2]  Achyut Agnik and Suchitra Sheth, Shaping of Modern Gujarat: Plurality, Hindutva and Beyond, Penguin, New Delhi, 2005.

[3] Ashish Vashi & Harit Mehta, Gujarat built mosques to draw Arab ships, TNN-Times of India, Feb 17, 2010, 05.45 AM IST

 Can you imagine a non-Muslim building a mosque in 21st century India? May sound impossible today. But, two far-sighted Jains built one of the earliest mosques in Gujarat, a state that has seen some of the worst post-independence communal riots.  And, all this for the sake of business. Between 1178 and 1242, Vastupal and Sheth Jagdusha built mosques in Cambay and Bhadreshwar in Kutch to attract Arab and Turkish traders, who would bring in foreign exchange. While Vastupal was the commissioner of Cambay port, Jagdusha was a merchant of Bhadreshwar port in Kutch. Jains have been an important business community from the earliest time till today. ‘History of International Trade And Customs Duties In Gujarat’, a book by historian Makrand Mehta, says Vastupal encouraged Muslims to settle down in Cambay and Anhilwad Patan, the capital of the Solanki-Vaghela rulers of Gujarat.  The accounts of Arab travellers like Masudi Istakhari Ibn Hauqal and others, who visited Gujarat between the 9th and 12th centuries, amply testify to the settlements of Muslims in Cambay and other cities of Gujarat. “But the Muslims settlements could hardly have developed without the support of the Solanki rulers. In fact, they attracted the Arabs and Persians to Cambay and Vastupal did it by constructing mosques for them,” says Mehta. Jagdusha was not officially designated as a customs collector but he had cultivated excellent relations with ship captains and customs staff. Although a devout Jain, as a staunch businessman he understood the value of foreign exchange. “For this reason he also constructed a mosque in Bhadreshwar, his hometown,” according to the book.

http://timesofindia.indiatimes.com/city/ahmedabad/Gujarat-built-mosques-to-draw-Arab-ships/articleshow/5582255.cms

[4] DNA India, Kutch dargah is India’s oldest Islamic bldg: Historian, Saturday, 27 April 2013 – 12:18pm IST | Place: Ahmedabad | Agency: dna

Heritage architecture in Gujarat will have one more feather to its cap if claims of aJapanese historian and architect are to be believed. According to Prof Fukami Naoko (in pic), who has been working in Kutch for a post-earthquake rehabilitation project, Ibrahim dargah at Bhadreshwar, Kutch is India’s first example of Islamic architecture. Prof Naoko said that Ibrahim mosque – built in the year 1159 – is also the first such construction to have corbelled walls and dome. Citing references from a book, Naoko said based on the Arabic inscription on the dargah, it is believed to be the oldest Islamic structure in India. Prof Naoko who delivered a lecture on heritage port cities of Gujarat, at House of Mangaldas on Friday, said that Islaimc architecture in Gujarat was introduced much earlier than it was in the rest of India. According to her, arched walls found in structures at Kutch date back to 1159, whereas the earliest example of the same in Delhi buildings is from 1198. Similarly, in Gujarat corbelled domes were found in buildings at least five decades earlier than in Delhi. “At the time, Bhadreshwar was ruled by a Jain monarch. He had established a Muslim community in the area, which is believed to have constructed the dargah. From the material used, it seems that the monarch also involved Hindu craftsmen in its making. For, Ibrahim dargah did not utilise re-used materials, unlike other Islamic monuments such as Ahmad Shah mosque in Ahmedabad,” she said. The two oldest mosques in Delhi don’t have any inscription to determine when they were built while one in the southern part of the country doesn’t have a building to prove claims that it was made in 7th century AD, Prof Naoko said further. She referred to Qutub Minar as the second oldest example of Islamic architecture in India. Bhadreshwar flourished as a port town between the 11th and 14th centuries, she said.

http://www.dnaindia.com/ahmedabad/report-kutch-dargah-is-indias-oldest-islamic-bldg-historian-1827674

[5] The historian from Waseda’s Organisation for Islamic Area studies added the dargah appears to have been built by Hindu and Jain artisans who were subjects of the Jain ruler who presided over the area in those days and who probably hosted Arab merchants. Bhadreshwar is known to be one of the oldest port towns in present-day Gujarat. http://archive.indianexpress.com/news/-dargah-in-kutch-predates-qutab-minar-by-34-yrs-/1108398/2

[6] http://blog.chughtaimuseum.com/?p=678

[7] Rāmavallabha Somānī, Jain Inscriptions of Rajasthan, Rajasthan Prakrit Bharati Sansthan, 1982, p.32.

[8] Rāmavallabha Somānī, Jain Inscriptions of Rajasthan, Rajasthan Prakrit Bharati Sansthan, 1982, p.103.

[9] Rāmavallabha Somānī, Jain Inscriptions of Rajasthan, Rajasthan Prakrit Bharati Sansthan, 1982, p.130.

[10] Ali Javid, ʻAlī Jāvīd, Tabassum Javeed, World Heritage Monuments and Related Edifices in India, Algora Publicxations, USA, 2008, p.13.

Posted in அழிப்பு, அழிவு, ஆக்கிரமிப்பு, ஆலயம், உடுப்பி, உடைப்பு, கட்ச், கனகதாசர், கப்பல், கிழக்கு, குஜராத், கோவில், ஜப்பான், பதேஸ்வர், புகாமி நவோகோ, மசூதி, மத்வாச்சாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பூகம்பத்தில் சேதமடைந்த உடுப்பி ஶ்ரீகிருஷ்ணர் கோவிலும், மசூதி கட்டிக் கொடுத்த ஜைனர்களும்!

பூகம்பத்தில் சேதமடைந்த உடுப்பி ஶ்ரீகிருஷ்ணர் கோவிலும், மசூதி கட்டிக் கொடுத்த ஜைனர்களும்!

Tantrasara sangraha - Madwacharya

Tantrasara sangraha – Madwacharya

மேற்கு நோக்கி ஏன் மூலவர்கள், கோவில்கள், மடங்கள் கட்டப்பட வேண்டும்?: மத்வாச்சாரியார் (1238-1317 CE) தமது “தந்த்ரசார” என்ற நூலில், விக்கிரகம் “பஸ்சிமபிமுக” என்று மேற்கு நோக்கி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல மற்ற மடங்களும், அம்மடங்களில் உள்ள விக்கிரகங்களும் மேற்கு நோக்கியே உள்ளன. திடீரென்று 13ம் நூற்றாண்டில் அத்தகைய மாற்று-முறையை ஏன் அறிமுகப்படுத்தினார் என்பது நோக்கத்தக்கது. அக்காலக்கட்டத்தில், கோவில்களை இடித்து மசூதிகள் கட்டப் பட்டு, பிறகு மறுபடியும், இந்துக்கள் அவற்றை புனர்-நிர்மாணம் செய்யும் போது, கிழக்குப்பகுதியை முகமதியர்கள் ஆக்கிரமிப்பில் இருந்ததால், மேற்கு பக்கத்தில் வாசலை வைத்துக் கொண்டு, உள்ளே மூலவரை மேற்கு நோக்கியே ஸ்தாபனம் செய்தனர். அப்பொழுது, இந்துக்கள் கிழக்கு நோக்கி வணங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முகமதியர் அத்தகைய நிலையை கேவலமாக, தங்களை விட குறைவாக வைத்திருக்க வேண்டும் என்ற போக்கில் அனுமதித்திருக்கலாம், இல்லை வற்புறுத்தியிருக்கலாம். மேலும், “மிலேச்சர்கள்” நுழைந்தது மற்றும் கைபட்டது, மிலேச்சர்களால் சேதமடைந்தது-உடைக்கப்பட்டது போன்ற கோவில்கள்-விக்கிரங்கள் ஒதுக்கப்பட்டன. அவ்வாறான கோவில்களை முகமதியர் மற்றும் ஆக்கிரமித்துக் கொண்டு, மசூதிகள் மற்றும் ஜைன கோவில்கள் கட்டிக் கொண்டிருக்கலாம். அந்நிலையில், ஜைனர்கள் கோவில்களில் உள்ள விக்கிரகங்களும் மேற்கு நோக்கி வைக்கப்பட்டன.  கேரளாவில், நிறைய கோவில்கள் மசூதிகளாக மாற்றப்பட்டுள்ளன. அங்கும் கோவில்கள், கர்நாடக பாணியில் தான் இருக்கின்றன, இல்லை கர்நாடகாவில் உள்ள கோவில்கள் கேரளபானியில் உள்ளன எனலாம். முகமதியர்களின் முரண்பாட்டிற்கு சேரமான் பெருமாள் மசூதியைக் குறிப்பிடலாம்[1], ஏனெனில், அது கிழக்கைப் பார்த்துள்ளது! கோவில் மசூதியாக மாற்றப்பட்டதால் அவ்வாறுள்ளது.

Kanakadasa facing East and Madvacharya facing West

Kanakadasa facing East and Madvacharya facing West

உடுப்பி கோவில் பூகம்பத்தில் சேதமடைந்ததா?: உடுப்பி கோவில் பூகம்பத்தில் சேதமடைந்தது என்று பார்த்தோம். இந்தியாவைப் பொறுத்த வரையில் 13-14ம் நூற்றாண்டுகளில் எந்த பூகம்பமும் ஏற்படவில்லை[2]. 14ம் நூற்றாண்டில் அப்பகுதியில் பூகம்பம் ஏற்பட்டவில்லை என்றால், இக்கோவில் சேதமடைந்தது எப்படி அன்று ஆராய வேண்டும். இயற்கையாக சேதப்படவில்லை என்றால், யாரோ தாக்கியிருக்கிறார்கள் என்றாகிறது, தாக்கப்பட்டது உண்மையாகிறது. அப்படியென்றால், அக்கோவிலைத் தாக்கி இடித்தது யார் என்று ஆராய வேண்டியுள்ளது. ஆட்சி, அதிகாரம், ஆளுமை சக்திகளுடன் இருந்தவர்கள் முகமதியர் மற்றும் ஜைனர்கள் என்றால், அவர்களில் ஒரு கூட்டம் அவ்வாறு செய்திருக்க வேண்டும். அதனை, உருவகமாக பூகம்பம் வந்து கோவில் சுவர்கள் பிளவு பட்டன என்றெல்லாம் செவிவழி கதைகளில் பதிவு செய்துள்ளார்கள். அதேபோல, அக்கதையில், கனகதாசர் கோவிலுக்கு எதிரிலேயே குடிசைப் போட்டுக் கொண்டு காத்திருந்தார் எனும் போது, ஒருவேளை அவர் முகமதியர் மற்றும் ஜைனர்களின் ஆளா என்றும் மற்றவர்கள் சந்தேகித்திருக்கக் கூடும். ஆனால், பிறகு உண்மையறிந்ததும், அவர் பக்தர் என்று உயர்த்தி “கனகதாசர் ஜன்னல்” போன்ற கதைகளை உருவாக்கியிருக்கலாம்.  உண்மையில் அக்கதையின் படி, கனகதாசர் வலது பக்க சுவர் அர்கில் இருந்து, தனக்கு தரிசனம் தரும் படி வேண்டிக் கொண்டபோது, கிருஷ்ணருடைய விக்கிரகம், கிழக்கிலிருந்து மேற்கு பக்கமாக திரும்பியதாம். கனகதாசரும் மகிழ்ச்சியுடன் வழிபட்டார்[3].  ஆனால், இது மத்வாச்சாரியாரின், தந்திரசார நூலின் விதிப்படி எதிராக உள்ளது. எனவே, “கனக-கன-கின்டி” என்ற கனகதாசரின் ஜன்னல், மேற்குப் பக்க சுவரில் பிறகு கட்டியிருக்க வேண்டும்[4]. மத்வ-சம்பிரதாயத்தின் படி, பூஜை செய்பவர் என்றுமே, மேற்குப் பார்த்து, பூஜை செய்யக் கூடாது.

Four Tirtankaras facing cardinal points-Atma Vallabh Smarak Jain Mandir-Punjab

Four Tirtankaras facing cardinal points-Atma Vallabh Smarak Jain Mandir-Punjab

உருவ வழிபாட்டை, கடவுள் கொள்கையினை மறுத்த ஜைனர்கள் கோவில்களைக் கட்டுவது: வேதங்களை எதிர்த்த ஜைனர்கள், இந்துக்களின் சில நம்பிக்கைகளை மறுத்தார்கள், மற்ற எல்லா விசயங்களிலும் ஒத்து போனார்கள். சாது-சாத்வி, உபாத்யாய, ஆச்சார்ய, சித்த மற்றும் ஹரிஹந்த / தீர்த்தங்கரர் என்று பட்டிப்படியாக மரியாதைக் கொடுத்து வணங்க ஆரம்பித்தபோது, கோவில்களை உருவாக்கியிருக்க வேண்டும் அல்லது இந்துக்களின் கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க வேண்டும். ஜைன-இந்து கோவில்கள் எந்தவிதத்திலும் வித்தியாசமாகக் காணப்பட்டதில்லை. உள்ளே தீர்த்தங்கரர் விக்கிரகம் அல்லது சிலை வைக்கப்படுவதைத் தவிர மற்ற கட்டுமான விசயங்களில் இந்து கோவில்களைப் போன்றே இருக்கின்றன[5]. மூலவர் விக்கிரங்களைத் தவிர வித்தியாசம் எதுவும் இல்லை. கடவுளை மறுத்த-மறுக்கும், உருவ வழிபாட்டை மறுத்த-மறுக்கும், ஜைனர்கள் எவ்வாறு கோவில்களைக் கட்டி, உள்ளே விக்கிரகங்களை வைத்து வழிபட செய்ய ஆரம்பித்தார்கள் என்பதும் புதிரே.  மேலும் ஜைனர்களைப் போல, இந்துக்கள் தமது கோவில்களை இடிக்க, முகமதியர்களிடம் சமரசம் செய்து கொள்ளவில்லை, உடன்படிக்கை போட்டுக் கொள்ளவில்லை. ஆனால், அக்பர் காலத்தில், ஜைனமதத் தலைவர்களே அக்பரைக் கண்டு, சந்தித்து, உரையாடி அத்தகைய சமரசங்களை செய்து கொண்டனர்.

Jaina cosmology - Vastu

Jaina cosmology – Vastu

சமாதிகளை வழிபட்ட ஜைனர்கள் கோவில்களில் சிலை வைத்து வழிபட்டது: ஜைன கோவில், தேரசர், பசடி, விமலவாசி, லுனாவஷி, போன்ற பெயர்களுடன் அழைக்கப்படுகின்றன.  எட்டாம் நூற்றாண்டிற்கு முன்னால் ஜைன கோவில்கள் சைத்ய, சேதியா, ஜைனாலயா, ஜினாகேஹ, ஜீனபாவன என்றெல்லாம் தான் அழைக்கப்பட்டன[6]. அதாவது பௌத்தர்களைப் போன்று, இறந்தவர்களின் மீது சைத்யம் போன்ற நினைவிடங்களைக் கட்டி, அங்கு வழிபட்டனர். ஜைனத்தில் உபவாசம் இருந்து இறத்தல், வடக்கிருந்து இறந்தல் என்ற விரதம் பிரபலமாக இருந்தது. அவ்வாறு தீர்மானித்தவர்கள் உண்ணாமல் இருந்து உயிர் நீத்தனர். அவர்கள்ன் சமாதிகள் வணங்கப் பட்டன. “பாதங்கள்” வழிபடும் முறையினையும், பௌத்தத்திலிருந்து பெற்றிருக்கலாம். ஜைன அரசர்கள், வணிகர்கள், வியாபாரிகள் என்று பல ஜைன பணக்காரர்கள் நன்கொடை கொடுத்து கோவில்களைக் கட்ட வைத்தனர். ஜைன ராஜவம்சத்து மகளிரும், வைப்பாட்டிகளும் கூட பணம் கொடுத்தனர்[7]. ஜைன அரசர்களிடம் ஆசைநாயகிகளை வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தது என்பதும் நோக்கத்தக்கது. கோமதீஸ்வரர் சிலையும் அவ்வாறே கட்டப்பட்டது[8]. பசடி என்ற பிரயோகம் பிறகு வந்தது. 10ம் நூற்றாண்டிற்குப் பிறகு, ஜைன ஆதிக்கம் குறைந்தது. அரசர்கள் ஜைனத்தை விடுத்து, சைவத்திற்கு மாற ஆரம்பித்தனர்[9].

ஜைன கோவில் கட்ட, கட்டிட முறையில்லை: ஜைனகோவிலுக்கு என்று, ஒரு குறிப்பிட்ட கட்டிட அமைப்பு, கட்டிடக்கலை, அல்லது கட்டுமான முறை இல்லை. ஜைனாகமங்களும் அவைப் பற்றிக் குறிப்பிடவில்லை. இதனால், ஒன்று அவர்கள் கோவில்களையேக் கட்டியதில்லை. உள்ள கோவில்களை, ஆதிக்கத்துடன் இருக்கும் போது, ஆக்கிரமித்துக் கொண்டு, மாற்றியமைத்தனர். இந்துக்கள் ஒப்புக்க்கொள்ளாத போது, இடித்தும் கட்டிக் கொண்டனர். இதனால், ஜைன-கோவில்கள் பலவித கட்டுமான உருவங்களில் காணப்படுகின்றன. வடவிந்திய ஜைன-கோவில்கள், தென்னிந்திய ஜைன-கோவில்களை விட வேறுபட்டுக் காணப்படுகின்றன. வடவிந்திய மற்றும் தென்னிந்திய ஜைன-கோவில்களை விட, மேற்கு-இந்திய ஜைன-கோவில்கள் மாறுபட்டுக் காணப்படுகின்றன. பொதுவாக கோபுரம் உள்ளது, கோபுரம் இல்லாதது என்று இரண்டாகப் பிரிக்கலாம். கோபுரம் இருக்கும் கோவில்களில், தூண்கள் அதிகமாக இருக்கின்றன. ஜைனகோவில் நூறாண்டுகளாக இருந்தால், அதனை “தீர்த்த” என்றழைக்கிறார்கள்.

இந்துக்கள் தங்களது இழந்த கோவில்களை மீட்டுக் கொண்டது, திரித்து எழுதப்படுகிறது: ஜைனர்கள் மற்றும் பிறகு முகமதியர்களளின் ஆதிக்கம் குறைந்தவுடன், மறுபடியும் இந்துக்கள் அக்கோவில்களில் தங்களது விக்கிரகங்களை பவைத்து, வழிபாட்டைத் தொடங்கியிருக்கலாம். அதனால் தான், இந்து கோவில்களில் சில பௌத்த-ஜைன சிலைகள் உருவங்கள் காணப்படுகின்றன. உண்மையில் இந்துக்கள் அவர்களின் வழிபாடு ஸ்தலங்களை ஆக்கிரமித்துக் கொள்ளவில்லை, மாறாக தங்களது இடங்களைத் திரும்ப உரிமைகளுடன் பெற்றுக் கொண்டார்கள். பெருந்தன்மையுடன் அந்த விக்கிரகங்கள், சிலைகள் மற்றும் உருவங்களை விட்டு வைத்தனர். ஆனால், இன்றைய எழுத்தாளர்கள், அதனையும் குதர்க்கமாக சித்தரித்து, திரித்து எழுத ஆரம்பித்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

10-07-2015.

[1] Cheraman Juma Masjid is a mosque in the south Indian state of Kerala. Believed to be built in 7th century CE by Malik Bin Deenar, it is thought to be the oldest mosque in India, and the second oldest mosque in the world to offer Jumu’ah prayers. Constructed during the lifetime of Muhammad, the bodies of some of his original followers are said to be buried there. Unlike other mosques in Kerala state, which face westwards (towards the Qiblah), this mosque faces eastwards.

[2] N. N. Ambrasays, Three little known early earthquakres in India,  Current science,  Vol.86, No.4, 25 February, 2004, pp.506-508; http://www.iisc.ernet.in/~currsci/feb252004/506.pdf

[3] Legend has it that the idol of Krishna, which heretofore had been facing east, turned around to face west, as the western wall collapsed so that Kanakadasa could see the face of his favorite idol.

http://www.harekrsna.com/sun/features/10-07/features800.htm

[4] Legend has it that the idol of Krishna, which heretofore had been facing east, turned around to face west, as the western wall collapsed so that Kanakadasa could see the face of his favorite idol. The construction (according to vastu shilpa) of the temple does not support this legend.

http://www.harekrsna.com/sun/features/10-07/features800.htm

[5] Panchakuta Basadi (or Panchakoota Basadi) is located in the Kambadahalli village of the Mandya district,Karnataka state, and this temple appears and has Hindu idols, sculptures and construction pattern. According to the art critic and historian S. Settar, generally, Brahmadeva pillars found in front of ancient Jain temples do not house sculptures of the Brahma Yaksha or the god Brahma, rather they find their origins in the Manasthambha (sthambha lit, “pillar”) and have images of the Sarvanubhuti Yaksha.

[6] Prior to the 8th century, Jain temples were called  ChaityaCediyaJainalayaJinageha  or Jinabhavana, the  term Basadi being used only later on.

Malini  Adiga, The Making of Southern Karnataka: Society, Polity and Culture in the early medieval period, AD 400-1030,  Orient Longman, Chennai, 2006, p.251.

[7] Women made endowments to Jain causes too, a royal concubine Nandavva and a wealthy feudal lady Attimabbe being examples.

Malini  Adiga, The Making of Southern Karnataka: Society, Polity and Culture in the early medieval period, AD 400-1030,  Orient Longman, Chennai, 2006, p.259

[8] King Butuga II and minister Chavundaraya were staunch Jains which is evident from the construction of the Gomateshwara monolith. From the Kudlur plates of Butuga II, as pointed out by  Malini  Adiga, opto.cit, p. 256.

[9] However evidence shows a decline in its popularity among local leadership (landlords or gavundas) from the 10th century when they began to favour Shaivism.

Adiga, Malini (2006) [2006]. The Making of Southern Karnataka: Society, Polity and Culture in the early medieval period, AD 400-1030,  Orient Longman, Chennai, 2006, p.253.

Posted in அழிப்பு, ஆலயம், இடிப்புல் உடைப்பு, உடுப்பி, கனகதாசர், கர்நாடகா, கிழக்கு, குஜராத், கேரள, கேரளா, கோவில், சமாதி, ஜீனாலயம், துருக்கர், பசடி, பள்ளிவாசல், மசூதி, மடம், மத்வாச்சாரி, மந்திர், மேற்கு, வழிபாடு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடுப்பி ஶ்ரீ கிருஷ்ணர் கோவில், மடங்கள் மற்றும் அருகில் உள்ள சிவன் கோவில்கள் – புராணம், வரலாறு, தரிசனம்!

உடுப்பி ஶ்ரீ கிருஷ்ணர் கோவில், மடங்கள் மற்றும் அருகில் உள்ள சிவன் கோவில்கள் புராணம், வரலாறு, தரிசனம்!

உடுப்பி - கிருஷ்ணர் கோவில் இருப்பிடம் - கூகுள் மேப்

உடுப்பி – கிருஷ்ணர் கோவில் இருப்பிடம் – கூகுள் மேப்

ஶ்ரீ கிருஷ்ணர் கோவில்: மத்வாச்சாரியார் தமது “தந்த்ரசார” என்ற நூலில், விக்கிரகம் “பஸ்சிமபிமுக” என்று மேறு நோக்கி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல மற்ற மடங்களும், அம்மடங்களில் உள்ள விக்கிரகங்களும் மேற்கு நோக்கியே உள்ளன. கனக தாசர் (1508-1606) ஒருமுறை, கோவிலுக்கு எதிராக, ஒரு குடிசைப் போட்டுக் கொண்டு, இருந்தபோது, பூகம்பம் ஏற்பட்டது[1]. அப்பொழுது, கோவிலின் சுவர் உடைந்து, விக்கிரகம் நன்றாகத் தெரிந்தது. பிறகு கோவில் புனர்நிர்மாணம் செய்தபோது, அங்கு ஒரு ஜன்னல் வைக்கப்பட்டது. அது “கனகன கின்டி”, கனகதாசருடைய ஜன்னல் என்று அழைக்கப்படுகிறது, இன்றும் அதன் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். கோவிலுக்குக் கிழக்கே, மாதவ சரோவர் என்ற குளம் இருக்கிறது. இதில் மடாதிபதிகள் தினமும் குளிக்கின்றனர். அதாவது, பாரத கோவில் கட்டுமான முறை, பாரம்பரிய முறை, பிறகு வந்த வாஸ்து சாஸ்திரம் போன்றவற்றின் படி, மூல-விக்கிரகம் பிரதிஸ்தை செய்யும் போது, கிழக்குப் பார்த்துதான் இருக்குமாறு செய்ய வேண்டும். அதேபோல, கோவிலின் நுழைவுவாயிலும், கிழக்குப் பார்த்த முறையில் இருக்க வேண்டும். அதற்கேற்ற படித்தான், குளம், மடப்பள்ளி முதலியவை அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மேற்கு அல்லது தென்மேற்கு பகுதியில் இருக்க வேண்டிய குளம், தென்-கிழக்கில் உள்ளது. அதனால், குளத்தின் தென்மேற்கில், பாகீரதியின் விக்கிரகம் உள்ளது[2].  இது அத்தகைய மாறுபாட்டை சரிசெய்தல் அல்லது பரிகார முறையாக உள்ளது.

உடுப்பி - ஶ்ரீ கிருஷ்ண மடம்..இரு வாயில்கள்

உடுப்பி – ஶ்ரீ கிருஷ்ண மடம்..இரு வாயில்கள்

துவாரகையிலிருந்து வந்த விக்கிரகம்: மத்வாச்சாரியார் (1238-1317 CE), என்ற துவைத தத்துவ ஞானியான இவரது இயற்பெயர், வாசுதேவ. பூரணபிரஞ மற்றும் ஆனந்த தீர்த்த என்று அழைக்கப்பட்டார்.   ஒரு நாள், மல்பே கடற்கரையில் காலைக்கடன்களுக்குப் பிறகு, பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போது, ஒரு கப்பல் பெருங்காற்றில் சிக்கிக் கொண்டு தவிப்பதைப் பார்த்தார். உடனே, அவர் அக்கப்பல் கரையில் வர உதவி செய்தார். இதனால் மகிழ்ந்த அக்கப்பலில் இருந்த மரக்காயர் மற்றும் கப்பலோட்டிகள், தம்மிடம் இருந்த இரு விக்கிரகங்ளை அவருக்கு கொடுத்தனர். விசாரித்தபோது, அவை துவாரகையில் கோபிச்சந்தனம் எனப்படுகின்ற பாறைகளில் கிடைத்ததாகச் சொன்னார்கள். அவை பலராமர் மற்றும் கிருஷ்ணரின் விக்கிரங்கள் ஆகும். பலராமர் விக்கிரகத்தை மல்பே அருகில் பிரதிஸ்டை செய்ய, அது வடபந்தேஸ்வரர் என்றழைக்கப் பட்டார். கிருஷ்ணர் விக்கிரகத்தை உடுப்பியில்  பிரதிஸ்டை செய்தார். ஶ்ரீ ரகுவர்ய என்ற மததீஸரின் படி, ஒரு கப்பல் புயலில் சிக்கி, மல்பே கடற்கரையில் வந்து மோத, அதிலுள்ள பொருட்கள் எல்லாம் கரையில் சிதறிக்கிடந்தன. அப்பொழுது, மத்வாச்சாரியார் அவற்றில் விக்கிரங்கள் இருப்பதை உணர்ந்து அங்கு வந்து அவற்றை எடுத்துக் கொண்டார் என்றும் உள்ளது[3].

உடுப்பி - சேதப்பட்ட விக்கிரகங்கள், விற்கும் கடை.

உடுப்பி – சேதப்பட்ட விக்கிரகங்கள், விற்கும் கடை.

முகமதியர் தாக்குதல்களினின்று விக்கிரகங்களைக் காப்பாறுதல், மறைத்து வைத்தல், பிறகு ஸ்தாபனம் செய்து கோவில்கள் கட்டுதல்: 1241ல் துவாரகை கோவிலும், முகமதியர்களால் தாக்கப்பட்ட போது, அங்கிருந்த கோவில் விக்கிரகங்களைக் காப்பாற்ற பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டது[4]. பஞ்ச துவாரகைகளில் டாகோர் போன்ற இடங்களில் விக்கிரகத்தின் மேலே, பழுதான கோடுகள் இருந்தது குறிப்பிடப்படுகிறது[5]. முகமதியர்களால் தாக்கப்பட்ட கோவில்கள் புனர்நிர்மாணம் செய்யும் போது, கோவில் மற்றும் விக்கிரகம் மேற்கு பார்த்தபடி அமைக்கப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் மேற்கு பார்த்த லிங்கங்களை மட்டும் உடைக்காமல் முகமதியர் விட்டு வைத்ததால், பிறகு புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கோவில்களில் அம்முறையைக் கையாளப்பட்டனலதாவது, பௌத்த-ஜைனர்களாலும் இந்து கோவில்கள் தாக்கப்பட்டன, மாற்றப்பட்டுள்ளன. ஆகவே, துவாரகையிலிருந்து தப்பித்த விக்கிரகங்கள் இங்கு வந்திருக்கலாம். உண்மையில் முகமதியர்களின் கோவில் இடிப்பு, உடைப்பு மற்றும் அழிப்புகளிலிருந்து, எப்படி விக்கிரகங்கள் தப்பின அன்று ஆராயாமல், உடுப்பி கிருஷ்ணர் விக்கிரகம், முருகனா என்றேல்லாம் திசைத்திருப்பும் போக்கு காணப்படுகிறது[6]. உள்ளூர் டிவிசெனல்களும் இதனை உசுப்பி விட்டுக் கொண்டிருக்கின்றன[7]. உண்மை சரித்திரத்தை மறைத்து, அதனை அறியமுடியாமல், திசைத்திருப்பும் போக்கை இன்றைய “வல்லுனர்கள்” செய்து வருகின்றனர்.

உடுப்பி - ஶ்ரீ அனந்தேஸ்வரர் கோவில் வாயில்

உடுப்பி – ஶ்ரீ அனந்தேஸ்வரர் கோவில் வாயில்

உடுப்பி – ஶ்ரீ அனந்தேஸ்வரர் கோவில் வாயில்.

உடுப்பி - ஶ்ரீ அனந்தேஸ்வரர் கோவில்- கொடிக்கம்பம்

உடுப்பி – ஶ்ரீ அனந்தேஸ்வரர் கோவில்- கொடிக்கம்பம்

உடுப்பி – ஶ்ரீ அனந்தேஸ்வரர் கோவில்- கொடிக்கம்பம். கோவிலுக்கு எதிரே, ஆனால், வெளியில் உள்ளது.

உடுப்பி - ஶ்ரீ அனந்தேஸ்வரர் கோவில் வாயில்.பீடத்தின் பக்கம்

உடுப்பி – ஶ்ரீ அனந்தேஸ்வரர் கோவில் வாயில்.பீடத்தின் பக்கம்.1

உடுப்பி – ஶ்ரீ அனந்தேஸ்வரர் கோவில் வாயில்.பீடத்தின் பக்கம்.1

உடுப்பி - ஶ்ரீ அனந்தேஸ்வரர் கோவில் வாயில்.பீடத்தின் பக்கம்.2

உடுப்பி – ஶ்ரீ அனந்தேஸ்வரர் கோவில் வாயில்.பீடத்தின் பக்கம்.2

உடுப்பி – ஶ்ரீ அனந்தேஸ்வரர் கோவில் வாயில்.பீடத்தின் பக்கம்.2

உடுப்பி - ஶ்ரீ அனந்தேஸ்வரர் கோவில் வாயில்.பீடத்தின் பக்கம்.3

உடுப்பி – ஶ்ரீ அனந்தேஸ்வரர் கோவில் வாயில்.பீடத்தின் பக்கம்.3

உடுப்பி – ஶ்ரீ அனந்தேஸ்வரர் கோவில் வாயில்.பீடத்தின் பக்கம்.3

உடுப்பி - ஶ்ரீ அனந்தேஸ்வரர் கோவில்-உட்புறம்

உடுப்பி – ஶ்ரீ அனந்தேஸ்வரர் கோவில்-உட்புறம்

உடுப்பி – ஶ்ரீ அனந்தேஸ்வரர் கோவில்-உட்புறம் – நன்றி தேவஸ்தானம் படம்.

ஶ்ரீ அனந்தேஸ்வரர் கோவில்[8]:  இப்பகுதிக்கு, சிவள்ளி அன்ற பெயரிருந்தது, அதனால், அப்பகுதியில் இருந்த பிராமணர்கள் சிவள்ளி பிராமணர்கள் என்றே அழைக்கப்பட்டனர். இப்பெயர் பிறக் ரௌப்ய, ரஜத சமஸ்கிருதத்தில் என்று மாறி, ரஜதபீடப்புர என்றாகியது. உள்ளே சிவலிங்கம் இருந்தாலும், வைஷ்ணவர்கள், அதனை சிவனாகவும், விஷ்ணுவாகவும் பாவித்து வழிபடுகின்றனர். மூலவர் அனந்தேஸ்வரர், சிவனாக-லிங்கமாக இருந்தாலும், உற்சவ மூர்த்தி, “அனந்த பத்மநாபன்” என்றழைக்கப் பட்டு, தெருக்களில் உலா வருகின்றார். மத்வாச்சாரியாரின் தந்தையார், இக்கோவிலில் பூஜாரியாக இருந்தபோது, அல்லிங்கத்தின் பிரதி பிம்பத்தை பஜக என்ற இடத்திற்கு எடுத்துச் சென்று வழிபட்டபோது, அவ்விடம் பஜகக்ஷேத்திரம் என்றழைக்கப்பட்டது. அங்கு, இன்றும் கோவில் உள்ளது. 7ம் நூற்றாண்டிற்கு முன்னமே இருந்திருக்கிறது என்பது 1357ம் ஆண்டு கல்வெட்டு குறிப்பிடுகின்றது மற்றும் மூலவர் “ஶ்ரீ மஹாதேவ” என்றழைப்பட்டார்[9]. எனவே, ஒன்று சைவ-வைஷ்ணவ ஒற்றுமைக்காக அவ்வாறு செய்திருக்கலாம், அல்லது, ஜைனர்களின் தாக்குதல்களினின்று தப்பிக்கவும் அவ்வாறு செய்திருக்கலாம். வீரசைவம் வளர்ந்தபோது, அவர்களுக்கும், ஜைனர்களிடையே ஏற்பட்ட மோதல்களை பார்க்கின்றோம்.

உடுப்பி - ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர் கோவில் வாயில்.

உடுப்பி – ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர் கோவில் வாயில்.

உடுப்பி – ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர் கோவில் வாயில்.

உடுப்பி - ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர் கோவில்-வாசல்-பலிபீடம்

உடுப்பி – ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர் கோவில்-வாசல்-பலிபீடம்

உடுப்பி – ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர் கோவில்-வாசல்-பலிபீடம் – நான்கு-ஐந்து அடிகள் கீழே உள்ளது.

உடுப்பி - ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர் கோவில் - 7ம் நூற்றாண்டு

உடுப்பி – ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர் கோவில் – 7ம் நூற்றாண்டு

உடுப்பி – ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர் கோவில் – 7ம் நூற்றாண்டு – இணைதளத் தொகுப்புப் படம்.

உடுப்பி - ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர் கோவில்-உட்புறம்

உடுப்பி – ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர் கோவில்-உட்புறம்

உடுப்பி – ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர் கோவில்-உட்புறம் -இணைதளத் தொகுப்புப் படம்.

உடுப்பி - ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர்- மூலவர்

உடுப்பி – ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர்- மூலவர்

உடுப்பி – ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர்- மூலவர் – நன்றி – சிரூர் மடத்து இணதளம்.

ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர் கோவில்[10]: ஶ்ரீ அனந்தேஸ்வரர் கோவிலுக்குப் பக்கத்தில் இக்கோவில் இருக்கிறது, அது கட்டியப்பிறகு, இக்கோவில் கட்டப்பட்டது[11]. ஸ்தலப்புராணம் தட்சனுடன் சம்பந்தப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் “உடு” மற்றும் “ப” என்றால், “நட்சத்திரங்கள்” மற்றும் “தலைவர்” என்ற பொருளில் வருகிறது. அதாவது, தட்சனின் 27 புதல்விகள் சந்திரனை மணந்து கொண்டதால், அவர்கள் ஒளி இழக்கக் கடவதாக என்று தட்சன் சாபமிட்டான். அதனால், அவர்கள் அங்கிருந்த சந்திரமௌலீஸ்வரரை வேண்டிக் கொள்ள அவர்கள் சாப நிவர்த்திப் பெற்றனராம். அதனால், சந்திரன் “நட்சத்திரங்களின் அதிபதி” என்றபொருளில், உடுப்பி என்று அவ்விடம் வழங்கப்படுகிறது என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது[12]. அடர்ந்த மரங்கள் கொண்ட அபியரண்ய என்ற காட்டுப்பகுதி அருகில் இருந்தது. இப்பொழுது அங்கு பூர்ணபிரஞ கல்லூரி உள்ளது. அருகில் இருந்த குளக்கரையில் சந்திரன் தவம் செய்தான். அப்பொழுதுதான், சிவபெருமான் தோன்றி அவனுக்கு சாபவிமோசனம் பெறச்செய்தார். அந்த நிகழ்ச்சியை நினைவு கூறத்தான் இக்கோவில் கட்டப்பட்டது. 7ம் நூற்றாண்டிற்கு முன்னமே இருந்திருக்கிறது. பிறகு, 13-14ம் நூற்றாண்டுகளில் வைஷ்ணவம் இப்பகுதிகளில் வளர்கிறது. ஜைனத்தின் ஆதிக்கதத்தினால் சைவம் கட்டுப்பாட்டில் இருந்தது.  மத்வாச்சாரியார், தமது நூலில் “படு தேவா / மூடு தேவாலயா” / மஹேன்ந்திரதிகாலய என்று குறிப்பிடுகிறார். கிருஷ்ணர் கோவிக்குச் செல்லும் முன்னர், இவ்விரண்டு கோவிலுக்குச் சென்று வழிபட்டு செல்ல வேண்டும் என்ற முறையுள்ளது. இவ்வாறு, இம்மூன்று கோவில்களும் சிறப்பிக்கப்படுகின்றன.

உடுப்பி - கிருஷ்ணர் கோவில் - மடங்கள் இருக்கும் இடங்கள் - கூகுள் மேப்

உடுப்பி – கிருஷ்ணர் கோவில் – மடங்கள் இருக்கும் இடங்கள் – கூகுள் மேப்

உடுப்பி – கிருஷ்ணர் கோவில் – மடங்கள் இருக்கும் இடங்கள் – கூகுள் மேப்.

மடங்களின் இருப்பிடம்: மத்வாச்சாரியார் பிறகு கிருஷ்ணர் மடத்தை நிருவி அதனை நிர்வகிக்க, தமது எட்டு சீடர்களை நியமித்தார். ஶ்ரீ கிருஷ்ணர் கோவிலைச் சுற்றி, இம்மடங்கள் அமைந்துள்ளன:

உடுப்பி - கிருஷ்ணர் கோவில் இருப்பிடம் - கூகுள் மேப்

உடுப்பி – கிருஷ்ணர் கோவில் இருப்பிடம் – கூகுள் மேப்

 1. பெஜவார – கிருஷ்ணர் மடத்திற்கு மேற்கில் அனந்தேஸ்வரர் கோவிலுக்கு வலது பக்கத்தில், சிரூர் மடத்தின் மேற்கில் பெஜவாரு மடம் உள்ளது.
உடுப்பி மடம் - பெஜவாரு மடம்.

உடுப்பி மடம் – பெஜவாரு மடம்.

 1. புத்திகெ – கிருஷ்ணர் மடத்திற்கு தென்-கிழக்கில் கனியூர் மடத்திற்கு வலது பக்கத்தில் புத்திகெ மடம் உள்ளது.
உடுப்பி மடம் - புத்திகெ மடம்

உடுப்பி மடம் – புத்திகெ மடம்

 1. பாலிமரு – அனந்தேஸ்வரர் கோவிலுக்கு மேற்கில் பாலிமரு மடம் உள்ளது.
உடுப்பி மடம் - பாலிமாரு.

உடுப்பி மடம் – பாலிமாரு.

 1. அதமரு – கிருஷ்ணர் மடத்திற்கு தென்மேற்கில் அதமரு மடம் உள்ளது.
உடுப்பி மடம் - அதமாரு

உடுப்பி மடம் – அதமாரு

 1. ஷோதே – கிருஷ்ணர் மடத்திற்கு தென்-கிழக்கில், புத்திக மடத்திற்கு வலது பக்கத்தில் ஷொதெ / சோடெ வாதிராஜ மடம் உள்ளது.
உடுப்பி - சோடே ஶ்ரீ வாதிராஜ மடம்..

உடுப்பி – சோடே ஶ்ரீ வாதிராஜ மடம்..

 1. கனியூரு – கிருஷ்ணர் மடத்திற்கு தென்-கிழக்கில் கனியூர் மடம் உள்ளது.
உடுப்பி மடம் - கனியூரு

உடுப்பி மடம் – கனியூரு

 1. சிரூர் – கிருஷ்ணர் மடத்திற்கு எதிராக மேற்கு திசையில் சிரூரு மடம் உள்ளது.
உடுப்பி மடம் - சிரூரு

உடுப்பி மடம் – சிரூரு

 1. கிருஷ்ணபுர – கிருஷ்ணர் கோவிலுக்கு இடது பக்கத்தில், சிரூரு மதத்திற்கு எதிரில் உள்ளது.
உடுப்பி - ஶ்ரீ கிருஷ்ண மடம்.. நுழைவு வாயில்

உடுப்பி – ஶ்ரீ கிருஷ்ண மடம்.. நுழைவு வாயில்

இம்மடங்கள் முறையே இரண்டு மாதங்கள் அவ்வாறு நிர்வகித்து வந்தது, பிறகு வாதிராஜ தீர்த்த ஸ்வாமிகள் (1480-1600 CE) அதனை இரண்டாண்டுகளாக மாற்றினார்.

© வேதபிரகாஷ்

09-07-2015.

[1]  16ம் நூற்றாண்டில் அப்பகுதியில் பூகம்பம் ஏற்பட்டதா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால், இக்கோவில் தாக்கப்பட்டது உண்மையாகிறது.

[2] http://www.udupipages.com/temples/krishna-temple-astha-math.php

[3] http://udipikrishnamutt.com/article/id/735/legeds-of-krishna-mutt-udupi

[4] When Mohammad shah attacked on Dwarka and broke the temple, Five Brahmin males fought with them and lost their lives and become martyr. Their names were Virajee Thakar, Nathu Thakar, Karasan Thakar, Valjee Thakar, and Devasee Thakar. Their shrines are near to the temple. Muslims have changed the place in ‘Panch Peer’. http://dwarkadhish.org/jagad-mandir.aspx

[5] https://panchadwaraka.wordpress.com/2013/10/13/dakor-one-of-the-pancha-dwakrakas-kheda-gujarat/

[6] http://www.kamakotimandali.com/blog/index.php?p=1360&more=1&c=1&tb=1&pb=1

[7] http://video.madari.in/video/07ZMwp1ynNn/TV9-Discussion–Udupi.html

[8] http://rcmysore-portal.kar.nic.in/temples/anantheshwaratemple/History.htm

[9] The Sri Anantheshwara Temple or the Ananthapadmanabha Temple, near the Sri Krishna Temple, tops the list. Built during the seventh or eighth century A.D., the temple’s existence is recorded in an inscription dated 1357 A.D. and the deity in it has been referred to as Sri Mahadeva of Udupi.

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-editorialfeatures/steeped-in-history-the-region-is-a-pilgrims-delight/article2806625.ece

[10] http://rcmysore-portal.kar.nic.in/temples/anantheshwaratemple/History.htm

[11] http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-editorialfeatures/steeped-in-history-the-region-is-a-pilgrims-delight/article2806625.ece

[12] http://udupi.nic.in/History.html

Posted in அதமர், உடுப்பி, கனகதாசர், கனகதாஸர், கனியூர், கிழக்கு, ஜீனர், ஜைன, ஜைனம், தீர்த்தங்கர், துருக்கர், துவாரகை, பாலிமர், புத்திகெ, பெஜவார், மடம், மேற்கு, ஷோதே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடுப்பியில் ஶ்ரீகிருஷ்ணர்-பலராமர் விக்கிரங்கள் வந்த விவரங்கள் – துவாரகையிலிருந்து எப்படி-ஏன் வரவேண்டும்?

உடுப்பியில் ஶ்ரீகிருஷ்ணர்-பலராமர் விக்கிரங்கள் வந்த விவரங்கள் – துவாரகையிலிருந்து எப்படி-ஏன் வரவேண்டும்?

Madwacharya bringing Krishna Idol

Madwacharya bringing Krishna Idol

19-12-2014 (வெள்ளிக்கிழமை):  இன்று உடுப்பி மற்றும் அருகில் உள்ள கோவில்கள் சுற்றிப்பார்க்கச் சென்றோம்.

உடுப்பிரென்ற பெயர் வர காரணம்: “உடுப்பி” என்ற பெயர் “ஒடிப்பு” என்ற துளு வார்த்தயிலிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால், மல்பே என்ற இடத்தில் உள்ள வடபந்தேஸ்வரருடன் தொடர்புப் படுத்தப் படுகிறது. இன்னொரு விளக்கத்தின் படி, சமஸ்கிருதத்தில் “உடு” மற்றும் “ப” என்றால், “நட்சத்திரங்கள்” மற்றும் “தலைவர்” என்ற பொருளில் வருகிறது. அதாவது, தட்சனின் 27 புதல்விகள் சந்திரனை மணந்து கொண்டதால், அவர்கள் ஒளி இழக்கக் கடவதாக என்று தட்சன் சாபமிட்டான். அதனால், அவர்கள் அங்கிருந்த சந்திரமௌலீஸ்வரரை வேண்டிக் கொள்ள அவர்கள் சாப நிவர்த்திப் பெற்றனராம். அதனால், சந்திரன் “நட்சத்திரங்களின் அதிபதி” என்றபொருளில், உடுப்பி என்று அவ்விடம் வழங்கப்படுகிறது என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது[1]. கடற்கரையில் இப்பகுதி அமைந்துள்ளதால், மேற்கு பக்க வானியல் நிகழ்வுகளை, அங்கிருந்த வானியல் வல்லுனர்கள் கவனித்து வந்தார்கள் என்று தெரிகிறது. ஏனெனில், இடைக்காலத்தில் இந்திய வானியல் தென்னிந்தியாவில் தான் தொடர்ந்து வளர்ந்து வந்தது[2]. மேலும், இப்பகுதி சக்தி வழிபாட்டுப் பகுதியாக இருந்தததினால், வானியல், கணிதம் முதலிய துறைகளுக்கு, சக்தி வழிபாட்டவர்கள் மாறியபோது, வல்லுனர்களாக இருந்தனர்[3].  உடுப்பி மாவட்டத்தில் ஆறு துறைமுகங்கள் இருக்கின்றன – மல்பே, பெலெகேரி, பவினகுர்வெ, டடாதி, ஹொன்னேவர் மற்றும் மங்கி. இதனால், மேற்குக் கடற்கரையில், கப்பல் மற்றும் அதனுடம் மக்கள் போக்குவரத்து நடந்திருக்கிறது. இடைக்காலத்தில் கப்பல் ஓட்டுவதற்கு, வாபியல் மற்றும் கணித ஞானம் கப்பலோட்டிகளுக்கு, மாலுமிகளுக்கு அவசிய வேண்டும். எனவே, சந்திர-சூரியர்கள், நடசத்திரங்கள் இவற்றை கடவுளர்களாக, குறிப்பிட்ட இடங்களில் கோவில்களாக அமைத்திருப்பது அந்த ஞானத்தின் செயல்முறை பிரயோகம் உபயோகம் மற்றும் வளர்ச்சி ஆகும்.

Krishna-Madwacharya

Krishna-Madwacharya

துவாரகையிலிருந்து வந்த விக்கிரகம்.

Udupi malpe and Belekeri ports

Udupi malpe and Belekeri ports

உடுப்பி மாவட்டத்தில் ஐந்து துறைமுகங்கள் இருக்கின்றன. உடுப்பி கிருஷ்ணர் கோவிலுக்கு போவதற்கு முன்னர், அனந்தேஸ்வரர் மற்றும் சந்திரமௌலீஸ்வரர் கோவில்களுக்குச் சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஐதீகமும் உள்ளது.

Anatheswara Udupi

Anatheswara Udupi

மேலே அனந்தேஸ்வரர் மற்றும் கீழே சந்திரமௌலீஸ்வரர்:

Chandra mauleswara Udupi

Chandra mauleswara Udupi

துவாரகையிலிருந்து வந்த விக்கிரகம்: மத்வாச்சாரியார் (1238-1317 CE), என்ற துவைத தத்துவ ஞானியான இவரது இயற்பெயர், வாசுதேவ. பூரணபிரஞ மற்றும் ஆனந்த தீர்த்த என்று அழைக்கப்பட்டார்.   ஒரு நாள், மல்பே கடற்கரையில் காலைக்கடன்களை செய்து கொண்டிருக்கும் போது, ஒரு கப்பல் பெருங்காற்றில் சிக்கிக் கொண்டு தவிப்பதைப் பார்த்தார். உடனே, அவர் அக்கப்பல் கரையில் வர உதவி செய்தார். இதனால் மகிழ்ந்த அக்கப்பலில் இருந்த மரக்காயர் மற்றும் கப்பலோட்டிகள், தம்மிடம் இருந்த இரு விக்கிரகங்ளை அவருக்கு கொடுத்தனர். விசாரித்தபோது, அவை துவாரகையில் கோபிச்சந்தனம் எனப்படுகின்ற பாறைகளில் கிடைத்ததாகச் சொன்னார்கள். அவை பலராமர் மற்றும் கிருஷ்ணரின் விக்கிரங்கள் ஆகும். பலராமர் விக்கிரகத்தை மல்பே அருகில் பிரதிஸ்டை செய்ய, அது வடபந்தேஸ்வரர் என்றழைக்கப் பட்டார். கிருஷ்ணர் விக்கிரகத்தை உடுப்பியில்  பிரதிஸ்டை செய்தார். ஶ்ரீ ரகுவர்ய என்ற மததீஸரின் படி, ஒரு கப்பல் புயலில் சிக்கி, மல்பே கடற்கரையில் வந்து மோத, அதிலுள்ள பொருட்கள் எல்லாம் கரையில் சிதறிக்கிடந்தன. அப்பொழுது, மத்வாச்சாரியார் அவற்றில் விக்கிரங்கள் இருப்பதை உணர்ந்து அங்கு வந்து அவற்றை எடுத்துக் கொண்டார் என்றும் உள்ளது[4]. 1241ல் துவாரகை கோவிலும், முகமதியர்களால் தாக்கப்பட்ட போது, அங்கிருந்த கோவில் விக்கிரகங்களைக் காப்பாற்ற பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டது[5]. பஞ்ச துவாரகைகளில் டாகோர் போன்ற இடங்களில் விக்கிரகத்தின் மேலே, பழுதான கோடுகள் இருந்தது குறிப்பிடப்படுகிறது[6]. ஆகவே, துவாரகையிலிருந்து தப்பித்த விக்கிரகங்கள் இங்கு வந்திருக்கலாம். உண்மையில் முகமதியர்களின் கோவில் இடிப்பு, உடைப்பு மற்றும் அழிப்புகளிலிருந்து, எப்படி விக்கிரகங்கள் தப்பின அன்று ஆராயாமல், உடுப்பி கிருஷ்ணர் விக்கிரகம், முருகனா என்றேல்லாம் திசைத்திருப்பும் போக்கு காணப்படுகிறது[7]. உள்ளூர் டிவிசெனல்களும் இதனை உசுப்பி விட்டுக் கொண்டிருக்கின்றன[8]. உண்மை சரித்திரத்தை மறைத்து, அதனை அறியமுடியாமல், திசைத்திருப்பும் போக்கை இன்றைய “வல்லுனர்கள்” செய்து வருகின்றனர்.

Vadabhandeshwara, Balarama -temple, Malpe

Vadabhandeshwara, Balarama -temple, Malpe

வடபந்தேஸ்வரர் என்கின்ற பலராமர் கோவில்.

Vadabhandeshwara, Balarama -idol and temple, Malpe.

Vadabhandeshwara, Balarama -idol and temple, Malpe.

கோவிலும், உள்ளே இருக்கும் பலராமர் விக்கிரமும்.

உடுப்பி கோவில் - மடம் - நுழைவு வாசல்

உடுப்பி கோவில் – மடம் – நுழைவு வாசல்

ருக்மணியின் விருப்பப்படி, விஸ்வகர்மா செய்த விக்கிரகம்: இந்த கிருஷ்ணர் விக்கிரகம் விசுவகர்மாவினால், ருக்மணியின் வேண்டுகோளுக்கிணங்க செய்யப்பட்டது. குழந்தை கிருஷ்ணரின் வடிவம் யசோதைக்கு மட்டும் தான் தெரியும். ஒரு முறை ருக்மணி அவ்வடிவத்தைப் பார்க்க வேண்டும் என்று வேண்டிகொள்ள, அவர் அவ்வாறே குழந்தையாக மாறிய போது, விஸ்வகர்மா அவ்வுருவத்தை மாதிரியாக வைத்து, இவ்விக்கிரகத்தை வடித்தான் என்று புராணக்கதை சொல்கிறது. ருக்மணியால் செய்விக்கப்பட்டதால், “ருக்மிணி கராசித” என்றே வழங்க்கப்படுகிறது. இந்த விக்கிரகத்தை யாரும் நேரில் பார்க்க முடியாது. “நவகிரக கிடிக்கி” அதாவாது, ஒன்பது துவாரம் உள்ள, வெள்ளியினால் ஆன, ஜன்னல் மூலம் தான் தரிசிக்க முடியும்[9].  தப்பித்து வந்த விக்கிரகம் என்பதனால், இவ்வாறு தூராகை கிருஷ்ணர், ருக்மணி முதலியோருடன் இணைத்து, கதைகளை உருவாக்கிருக்கலாம். கனக தாசர் (1508-1606) வந்தபோது, அவர் தாழ்ந்த ஜாதி என்பதனால், அவரை கோவிலுக்குள் விடவில்லை, அதனால், அவரும் ஜன்னல் வழியாகப் பார்த்தார். அதனால், அந்த ஜன்னல் “கனகன கிண்டி” என்றழைக்கப்படுகிறது. எல்லோரும் பார்க்கக் கூடிய ஜன்னலுக்கு ஒன்பது ஓட்டைகள் இருப்பதால், சரியாக விக்கிரகத்தைப் பார்க்க முடியவில்லை, ஆனால், மூன்றே துவாரங்கள் உள்ள கனக-ஜன்னலிலிருந்து நன்றாக பார்க்கலாம். இடைக்காலத்தில், மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் ஜைனர்களின் தாக்குதல்களும் இருந்தபோது, முகமதியர்களின் தாக்குதல் பற்றிய விவரங்கள் தெரிந்தபோது, குறிப்பாக 1311ல் மாலிக்காபூர் கொள்ளையெடுத்துச் சென்றாபோது, இந்துக்கள் கவனமாக இருக்க வேண்டிய அவசியத்தையும் நோக்கத்தக்கது. இன்றும் பாதுகாப்பு என்ற பெயரில், எல்லோருமே, ஒரு மாதிரியாகத்தான் நடத்தப் படுகிறார்கள்.

Navagruha kindi - widow witj nine holes

Navagruha kindi – widow with nine holes

“நவகிரக கின்டி” எனப்படுகின்ற ஒன்பது ஓட்டை ஜன்னல் – இதன் வழியாகத்தான், உடுப்பி கிருஷ்ணர் விக்கிரகத்தைப் பார்க்க வேண்டும்.

Kankana kindi - Kanakadasa window

Kankana kindi – Kanakadasa window

“கனகன கின்டி” என்ற மூன்று தூவர ஜன்னல் வழியாக கனக தாசர் பார்த்த ஜாலி!

உருவவழிபாடு எதிர்ப்பு அரேபியர்முஹம்மதியர், முகாலயர் கையாண்ட நாசவேலைகள்[10]: இடைக்காலத்தில், அரேபியர், முஹம்மதியர், முகாலயர் படையெடுப்புகளினால் துவாரகை சுற்றியுள்ள பகுதிகள் அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றின் தாக்கமும் இக்கதைகளில் உணரப்படுகிறது. அவர்கள் விக்கிரங்கள், சிலைகள், உருவ வழிபாடு, விக்கிர ஆராதனை, மனிதர்களை சிலைகளாக வடிப்பது, கலைநயத்துடன் சிற்பங்களை உருவாக்குவது முதலியவற்றை அழிக்கும், ஒழிக்கும் கொள்கையினைக் கொண்டவர்களாக இருந்தமையால், அவர்கள் பாரதத்திலுள்ள இப்பகுதிகள், திடீரென்று படையெடுத்து வந்தபோது, அதிரடியாக கொள்ளையடிக்க வந்தபோது, அத்தகைய சிலைகளை உடைக்கும் சித்தாந்தத்துடன் கோவில்களைத் தாக்கி உடைக்க, இடிக்க மற்றும் அழிக்க ஆரம்பித்தார்கள். மக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் அவர்கள் அவ்வாறு செய்யமுடியவில்லை, அல்லது செய்தாலும், மறுபடி-மறுபடி பழுது பார்த்து முந்தயது போன்றே கட்டி வந்தனர். ஆனால், ஒதுக்குப் புறமமாக அமைந்த கோவில்கள் அதிகமாகவே பாதிக்கப் பட்டன. மேலும், அதிகமான அளவில் குதிரைப் படைகளுடன் வந்தபோது, மக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் உள்ள கோவில்களும் பாதிக்கப் பட்டன. இதனால் தான், கோவில் விக்கிரங்கள் ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டது, மறைத்து வைக்கப்பட்டது, குளம், ஏரிகளில் எறியப்பட்டது, மீட்கப்பட்டது, பிறகு கோவில்கள் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது என்றெல்லாம் கதைகளில் உருவகமாக சொல்லப்பட்டது.

உடுப்பி கிருஷ்ண விக்கிரகம்- மத்வர் ஸ்தாபித்தது

உடுப்பி கிருஷ்ண விக்கிரகம்- மத்வர் ஸ்தாபித்தது

விக்கிரகம் மக்களால் காக்கப் பட்டு பிறகு பிரதிஷ்டை செய்யப் பட்ட கதைகளில் உண்மை உள்ளது: நாட்டுப் புறப்பாடல்கள், பஜனைகள், கூத்துகள், முதலிவற்றிலும் அவற்றின் தாக்கம் தெரிகிறது. ஆரத்தி என்பதில் அதிகமாக மக்கள் பங்கு கொள்வது என்பது இங்கு முக்கிய கோவில் வழிபாட்டு முறைகளில் பிரதானமாக உள்ளது. குறிப்பாக விக்கிரகம் முக்கியமாகக் கருதப்பட்டது. அதற்காக உயிரையும் கூட விக்கிரகம் காயமடைந்தது, ரத்தம் வந்தது போன்றவை, இந்துக்கள் அவற்றை தெய்வமாக மதித்தது தெரிகிறது. மேலும் அவை தாக்கப்பட்டன, உடைக்கப்பட்டன, என்றும் புரிந்து கொள்ளமுடிகிறது. கிருஷ்ண பக்தர்களே, விக்கிரகத்தை அவ்வாறு செய்திருக்க முடியாது. எனவே, இடை காலத்தில், இவ்விக்கிரகம் அந்நியர்களால் தாக்குதலுக்குட்படுத்தப் பட்டிருக்கலாம். விவரங்கள் மக்கள் தியாகம் செய்ய தயாராக இருந்தனர் என்றும் தெரிகிறது. (சோமநாதபுர விக்கிரகத்தைக் காக்க ஆயிரக் கணக்கான இந்துக்கள் வரிசையாக நின்று பலியானார்கள் என்று சரித்திரத்திலேயே பதிவாகியுள்ளது).

© வேதபிரகாஷ்

08-07-2015.

[1] http://udupi.nic.in/History.html

[2] K. Venkateswara Sarma, A history of the Kerala school of Hindu astronomy (in perspective), Vishveshvaranand Institute, Hoshiarpur, 1972.

[3] K. Kunjunni Raja, Astronomy and Mathematics in Kerala, Adyar Library and research Centre, Madras, 1995.

[4] http://udipikrishnamutt.com/article/id/735/legeds-of-krishna-mutt-udupi

[5] When Mohammad shah attacked on Dwarka and broke the temple, Five Brahmin males fought with them and lost their lives and become martyr. Their names were Virajee Thakar, Nathu Thakar, Karasan Thakar, Valjee Thakar, and Devasee Thakar. Their shrines are near to the temple. Muslims have changed the place in ‘Panch Peer’. http://dwarkadhish.org/jagad-mandir.aspx

[6] https://panchadwaraka.wordpress.com/2013/10/13/dakor-one-of-the-pancha-dwakrakas-kheda-gujarat/

[7] http://www.kamakotimandali.com/blog/index.php?p=1360&more=1&c=1&tb=1&pb=1

[8] http://video.madari.in/video/07ZMwp1ynNn/TV9-Discussion–Udupi.html

[9] http://udipikrishnamutt.com/article/id/734/sri-krishna-mutt

[10] https://panchadwaraka.wordpress.com/2013/10/26/dakor-temple-details-maqbaras-features-explained/

Posted in உடுப்பி, கனகதாசர், கனகதாஸர், கர்நாடகா, கிருஷ்ணர், குஜராத், ஜன்னல், டாகோர், துருக்கர், துறைமுகம், துவாரகை, பலராமர், மத்வர், மத்வாச்சாரி, மத்வாச்சாரியார், மல்பே, முகமதியர், முஸ்லிம், யசோதா, யசோதை, ருக்மணி, ருக்மினி, விக்கிரகம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக