183வது உழவாரப்பணி கூடுவாஞ்சேரி அடுத்த நெல்லிக்குப்பத்தில் அமைந்துள்ள –அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் ஓம வள்ளி அம்மன் கோவில்களில் நடைபெற்றது!

183வது உழவாரப்பணி கூடுவாஞ்சேரி அடுத்த நெல்லிக்குப்பத்தில் அமைந்துள்ளஅருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் ஓம வள்ளி அம்மன் கோவில்களில் நடைபெற்றது!

Location of Temple, tank etc

ஏப்ரல் 2017ல் நடந்த 183வது உழவாரப்பணி: 183வது உழவாரப்பணி கூடுவாஞ்சேரி அடுத்த நெல்லிகூப்பத்தில் அமைந்துள்ள –அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் ஓம வள்ளி அம்மன் கோவில்களில் நடைபெறும் என்ற செய்தி அறிந்ததால், செல்ல வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்[1]. 28-12-2014க்குப் பிறகு, இன்றுதான் செல்கிறேன் என்று நினைக்கிறேன்[2]. இரண்டு வருடங்களுக்கும் மேலாக செல்லவில்லை என்று நினைக்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கூடுவாஞ்சேரியிலிருந்து 13 கி.மீ இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது. முன்பெல்லாம் ஒரு நண்பர் விசயம் சொல்வார், கூட்டி செல்வார், ஆனால், இப்பொழுது அவருக்கு முடியவில்லை போலும், சொல்வதில்லை, அதனால், நானும் செல்லமுடியாமல் இருந்து விட்டேன். அதனால், முன்னமே அக்குழுத் தலைவரிடம் பேசினேன், அவர் வழக்கம் போல பேரூந்து வசதி செய்திருப்பதாலும், அது குறிப்பிட்ட வழியில் செல்லும் என்பதாலும், அங்கு ஏறிக்கொள்ளலாம் என்றார். நானும், இன்று (24-04-2017) அன்று  காலை 7.30க்கு புறப்பட்டேன். குறிப்பிட்ட இடத்திற்கு சென்றபோது, அந்த நண்பரும் அங்கு இருந்தார்! பேரூந்து வந்தது, புறப்பட்டோம். வழியில், ஒரு அரசு பள்ளி வளாகத்தில் காலையுணவு ஏற்பாடு செய்யப் பட்டது. பிறகு, பேரூந்து மூலம் குறிப்பிட்ட கோவில்கள் இருக்கும் இடத்தை அதைந்தோம். அவை திரு வேண்டவராசி அம்மன் திருக்கோவில் அருகில் அமைந்துள்ளன. தாம்பரம் சிவராமன் என்பவர் இக்கோவிலைப் பற்றி கொடுத்துள்ள விவரங்கள் கீழே கொடுக்கப்படுகின்றன.

Vendavarasi Amman - front gopura

அருள்மிகு வேண்டவராசி அம்மன் கோபுரம் – முன்புறம்.

Vendavarasi Amman - Vigraha-bronze

வழிபட்டு வந்த பஞ்சலோக விக்கிரகம்.

Vendavarasi Amman - Vigraha abhishekam

விக்கிரகத்திற்கு அபிஷேகம்.

Vendavarasi Amman - Vigraha abhisheka-bronze

அம்மனுக்கு அபிசேகம்!

Vendavarasi Amman - backside

பின்புறம் இருக்கும் அம்மன் விக்கிரகம்!

பஞ்சலோக உற்சவர் விக்ரகம் கற்சிலையாக உருவாக்கப்பட்டது (1987)[3]: அருள்மிகு வேண்டவராசி அம்மன் மூலக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், நெல்லிக்குப்பம் கிராமத்தில் உள்ளது. இக்கோயிலில் மூலவர் விக்கிரகம் இல்லாமல் கலை நுட்பம் வாய்ந்த பஞ்சலோக உற்சவர் விக்கிரகம் வழிபடப்பட்டு வந்தது. இந்த அம்மனின் ஆபரணங்கள் அனைத்தும் நாகவடிவில் அமைந்திருந்தது சிறப்பு வாய்ந்ததாகும். இந்த மாசக்தியை குலதெய்வமாக வழிபட்டு வந்த சலவைத்தொழில் செய்யும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிழக்கு தாம்பரத்தில் குடியேறினார்கள். அந்த சமூகத்தைச் சேர்ந்த திரு.நரசிம்மன் என்பவர் மண்ணால் செய்த அம்மனின் சிரசு ஒன்றை கிழக்கு தாம்பரம் திருவள்ளுவர் தெருவில் இருந்த மிகப்பெரிய ஆலமரத்தின் கீழ் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வந்தார். இப்பகுதி ஏழை மக்களின் பிரச்சினைகளை போக்க இந்த விக்ரகத்தின் முன் வேப்பிலை அடித்து பூசை செய்வார். இந்த பூசையினால் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதால், இந்த சக்தியின் பக்தர்களாக இப்பகுதி மக்கள் இந்த விக்கிரகத்தை வழிபடத் துவங்கினர்கள், காலப்போக்கில் ஆடி மாதம் அம்மனுக்கு காப்புக்கட்டி கூழ் ஊற்றும் நிகழ்சியை கொண்டாடத் துவங்கினர்[4].

Way to Perumal Koil from Vendavarasi Amman temple-can be seen

அருள்மிகு வேண்டவராசி அம்மன் கோவிலிலிருந்து பெருமாள் கோவிலுக்கு செல்லும் வழி.

Way to Perumal Koil from Vendavarasi Amman temple

இடையில் குளம் உள்ளது.

Way to Perumal Koil - nearby well

போகும் வழியில் வலது பக்கத்தில் இருக்கும் பெரிய கிணறு.

Cncrete road to Perumal temple

பெருமாள் கோவில் போகும் வழி.

IMG_20170423_105935

ஓலைக் கொட்டகை, சிறந்த கோவிலானது (1999)[5]: சில ஆண்டுகளில் சிறிய கொட்டகை அமைத்து கோயிலாக வழிபட்ட பின் கொட்டகையை மாற்றி ஓடு போட்ட கோயிலாக மாற்றினர். இந்த அம்மன் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளித்ததால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியது, ஆடித்திருவிழா ஆண்டுதோரும் மிகவும் சிறப்பாகவும், வெகுவிமரிசையாகவும் கொண்டாடப்பட்டு வந்தது, இந்த ஆலயத்தின் நிர்வாகிகள் தவத்திரு மயிலை மாமுனிவர் குருஜி சுந்தரராம சுவாமிகளின் சீடர் தவத்திரு திருவக்கரை சந்திரசுவாமிகளை இந்த ஆலயத்திற்கு அழைத்துவந்தனர். இந்த நாகசக்தியை வழிபட்ட ஸ்ரீ சந்திரசுவாமிகள் கருங்கல்லாலான மூலவர் விக்ரகம் அமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என தனது தெய்வீக சக்தியின் மூலம் அறிவுறித்தினார். அதற்கான நிதி அளிப்போர் பலரையும் அறிமுகம் செய்து வைத்தார், பின் அவரது வழிகாட்டுதலோடு விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை அருகிலுள்ள இறையூர் கிராமத்தைச் சேர்ந்த இறை அருள்பெற்ற சிற்பி திரு,பெருமாள்ராஜூ கருங்கல்லில் வடித்து கொடுத்தார். பின்னர் திருக்கோயில் எழுப்பப்பட்டு வேண்டவராசி அம்மன் மூலவர் சிலை பிரிதஷ்டை செய்யப்பட்டு வேத சாஸ்திரப்படி, தவத்திரு திருவக்கரை சந்திரசுவாமிகள் அவர்களின் வழிகாட்டுதலால் திருக்குடமுடுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது[6].

Cleaning tank

குளக்கரையை சுத்தப்படுத்தும் உழவாரப்பணியாளர்.

Cleaning tank.2

குளக்கரையை சுத்தப்படுத்தும் உழவாரப்பணியாளர். இன்னொரு பக்கம்.

Cleaning tank.3

குளக்கரையை சுத்தப்படுத்தும் உழவாரப்பணியாளர். இன்னும் ஒரு பக்கம்.

Cleaning tank.4

சகல சிறப்புகளுடன் சிறந்த கோவிலானது[7]: ஆடி மாதம் நான்காவது வாரம் காப்பு கட்டும் ஆடித்திருவிழா மட்டுமே நடைபெற்று வந்த இந்த திருக்கோயிலில், கும்பாபிஷேக விழாவிற்குப்பின் சித்ரா பெளர்ணமி அன்று 108 பால்குட அபிஷேகவிழா, தைபூசத்தினத்தன்று 108 சங்காபிஷேகவிழா, தமிழ்புத்தாண்டு விழா, பொங்கல் விழா, பிரதி மாதம் பெளர்ணமி, அமாவசை சிறப்பு அபிஷேகம், நவராத்திரி அலங்கார விழா இப்படிப்பட்ட பல்வேறு சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன. பின் பஞ்சலோகத்தினால் ஆன மிகவும் அறிய வேலைப்பாடுகளுடன் கூடிய உற்சவர் விக்கிரகம் திருக்கழுகுன்றம் அருகிலுள்ள பாண்டூர் கிராமத்திலுள்ள கலைக்கூடத்தில் வார்க்கப்பட்டு மூன்று தினர்கள் வேதவிற்பணர்கள் நான்கு மறைகளையும் ஓத சாஸ்திர முறைகளின்படி ஹோமங்கள் செய்யப்பட்டு, மயிலைமாமுனிவர் தவத்திரு குருஜி சுந்தராமசுவாமிகள் அவர்களின் தலைமையில் வத்திரு திருவக்கரை சந்திரசுவாமிகள் அவர்களின் வழிகாட்டுதலால் திருக்குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. பத்தாண்டுகளுக்குப்பின் திருக்கோயில் ஆகமவிதிகளின் படி அமைக்க திட்டமிடப்பட்டு கூவத்தூரைச் சேர்ந்த ஸ்தபதி மகேந்திரன் அவர்களால் கோயில் நிர்மாணம் செய்யப்பட்டு பிரம்மாண்டமாக திருக்குடமுழுக்குவிழா வத்திரு திருவக்கரை சந்திரசுவாமிகள் அவர்களின் சிறப்பாக நடைபெற்றது[8].

Perumal Koil - Gopura view.Front-top

பெருமாள் கோவில் கோபுரம் – முன்பக்கம்.

Perumal Koil - Gopura view.Front

பெருமாள் கோவில் கோபுரம் – முன்பக்கம். துவஜஸ்தம்பம் வெளியில்.

Perumal Koil - road in front

கோவிலுக்கு முன்பாக இருக்கு சாலை.

Perumal Koil - road in front-Agrahara type houses

அக்ரஹாரம் போன்ற பழய ஓடு வீடுகள்.

Perumal Koil - Gopura view

கோவிலின் பக்கவாட்டுத் தோற்றம்.

Perumal temple compund wall

அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில்: இக்கோவில் அருள்மிகு வேண்டவராசி அம்மன் கோயிலுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. இரு கோவில்களும் கிழக்கு பார்த்து இருக்கின்றன. இது ஒரு சிறிய சமீபத்தில் கட்டப்பட்ட கோவிலாகும். வேண்டவராசி அம்மன் கோயில் எல்லாவிதங்களிலும் சிறப்புப் பெற்று புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் போது, இக்கோவில் கவனிப்பாற்றுக் கிடக்கும் நிலையிலுள்ளது போன்று தெரிகிறது. அக்ரஹார அதாவது பழைய கிராம நாற்புற வீதிகள், முதலியவை இருந்தது, இப்பொழுதும் இடிந்த நிலையில் உள்ள சில ஓடுவீடுகள், கோவிலுக்கு நேராக உள்ள வீதி, சுற்றியுள்லும் வீதிகள் முதலியவை மூலம் அறியலாம். கோவிலைச் சுற்றி சம்பந்தமே இல்லாமல் கான்கிரீட் சாலை போடப்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது, அங்கிருக்கும் கோவிலுக்கு சொந்தமான மற்றும் வீடுகளின் சொந்தமான நிலங்கள் மாறுதல்களுக்கு உட்படுகின்றன என்று தெரிகிறது. இங்கு இப்பொழுது அடுக்கு மாடி வீடுகள் அதிகமாகக் கட்டப் பட்டு வருவதால், “ரியல் எஸ்டேட்” வியாபாரம் அமோகமாக நடைப் பெற்று வருகிறது.

Area between Tank and Perumal temple

குளக்கரைப் பகுதி.

Cleaning tank. Amman koil nearby

குளக்கரையில் இருக்கும் அம்மன் கோவில்.

Cleaning tank. Amman koil nearby.2

குளம் சுத்தம் செய்யப்பட்டது: இக்கோவிலுக்கு வடக்கில் ஒரு பெரிய குளம் படிகட்டுகளுடன் உள்ளது. அதில் தண்ணீரும் உள்ளது. குளங்கள் இருந்தால், தண்ணீர் பிரச்சினை இருக்காது என்ற உண்மையினை நகரத்தவர்கள், வீடு-வியாபாரம் போன்ற காரியங்களால் மாற்றி வருகின்றனர். இதைச் சுற்றியுள்ள இடத்தையும், குளத்தில் உள்ள செடிகொடிகளையும் அப்புறப்படுத்தி உழவாரப் பணி நடந்தது. பெருமாள் கோவில் உள்ளே செடி-கொடிகளும் அப்புறப்படுத்தப்பட்டு, சமன் செய்யப்பட்டு, சுவர்களுக்கு சுண்ணாம்பு அடிக்கப் பட்டது. கோவில் பூட்டப்பட்ட நிலயில் இருந்தது. இம்முறை உழவாரப்பணியாளர்களுக்கு அதிக வேலை இருக்கவில்லை. ஏப்ரல் மாதம் வெயில், அனல் முதலியவை அதிகமாகவே இருந்தன. பொதுவாக நகர்புறங்கள், கிராமங்களில் மரங்கள் அதிகமாக இருக்கும், ஆனால், மரங்கள் இங்கு மிகக்குறைவாக இருக்கின்றன. இருப்பினும், பழைய நண்பர்கள், பெரியவர்கள் முதலியவர்களைப் பார்த்த திருப்தி கிடைத்தது. சென்ற வருடம் நெரூருக்கு சேர்ந்து சென்ற நண்பர்களையும் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது[9]. இம்முறை செல்வதிலும் சில மாறுதல்கள் தெரிய வருகின்றன. சென்ற முறை சேர்ந்து சென்றவர்கள், இம்முறை தனித்தனியாக செல்கிறார்கள்[10].

மாறுகின்ற தீர்த்த யாத்திரைகள், பக்தர்கள், மனிதர்கள்: கடந்த 50-100 ஆண்டுகள் வரையில், தீர்த்த யாத்திரை செல்பவர்களிடம் ஒருமித்த எண்ணம், கருத்து, இயல்பு, மனப்பாங்கு முதலியவை இருந்தன. அப்பொழுதெல்லாம் “பணம்” ஒரு காரணியாக, தேவையாக அல்லது பிரச்சினையாக இருக்கவில்லை. தீர்த்தயாத்திரைக்கு செல்பவர்களுக்கு, அனைவரும் வேண்டியதை செய்து கொடுத்து வந்தனர். ஆனால், முகமதியர் காலத்தில் அது அதிகமாகவே பாதிக்கப் பட்டது. அப்பொழுதுதான், சேர்ந்து கூட்டம்-கூட்டமாக செல்லும் பழக்கம் ஏற்பட்டது. அதாவது அப்படி சென்றால், யாராவது தாக்க மாட்டார்கள், தாக்கினாலும், எல்லோருக்கும் தெரிந்து விடும் என்ற நிலை / பயம் இருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் வேறுவித்மான பிரச்சினைகள் ஏற்பட்டன. சுதந்திரத்திற்குப் பிறகு, எல்லாம் மாறிவிடும் அதாவது, முன்னர் போன்றாகி விடும் என்று இருந்த வேலையில், மக்கள் எல்லா சித்தாந்தகளின் தாக்குதல்களால் மாற ஆரம்பித்தனர். அதனால், இப்பொழுது, “பணம்” மட்டுமல்லாது, மற்ற விவகாரங்களும் பக்தி-ஆன்மீகம் போன்றவற்றை பாதித்து வருகின்றன. எல்லாவற்றிலும் “தான்” என்ற எண்ணம் வர ஆரம்பிக்கிறது. ஒருவன் தன்னை “தலைவன்” என்று நினைத்துக் கொண்டால் அல்லது உள்ள நிலைமை வைத்து அவ்வாறு செய்து விடலாம் என்று தீர்மானித்தால், அதை நிறைவேற்றிக் கொள்ள பக்தி, ஆன்மீகம் போன்றவற்றையும் தனக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டு, “தலைவனாக”ப் பார்க்கிறார்கள். ஒருசில தொண்டர்கள், சீடர்கள் அல்லது அதைப் போன்றவர்கள் கிடைத்து விட்டால், தலைவனாகவே பாவித்துக் கொள்கிறான். அந்நிலையில், தனக்கு இணையாக யாரும் வந்து விடக் கூடாது என்று நினைக்கிறான். அந்நிலையில், அடுத்தவரைப் பற்றி இல்லாதது-பொல்லாதது சொல்லும் படலம் ஆரம்பிக்கிறது.  ஆனால், அந்த தாக்கப்படும் மனிதருக்கு இதெல்லாம் தெரியாமலே இருக்கும். இல்லை தெரியாமலே, அந்த தலைவர் செய்வார், முன்போல “யாத்திரை” விவரங்கள் சொல்லமாட்டார், அல்லது தெரிவிக்கப்படாது. “அவர் இனிமேல் வர மாட்டார்’ என்று கூட சொல்லி, கருத்துருவாக்கம் செய்யப் படும். ஆக முரண்பாடுகள் அதிகமாகும் போது, மனிதர்கள் விலகுகிறார்கள். பக்தி-ஆன்மீகம் போன்றவைகளும் விலகித்தான் செல்கின்றன. எல்லாவற்றையும் வர்த்தகமாக்குதல், வியாபாரமாக்குதல், பணமாக்குதல் போன்ற எண்ணங்களும் செயல்பட ஆரம்பிக்கின்றன.

© வேதபிரகாஷ்

23-04-2017

[1] வரும் 23.4.2017 அன்று நம் உழவாரப்பணியின் 183வது உழவாரப்பணி நடை பெற உள்ளது. திருக்கோவில் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: இடம்: கூடுவாஞ்சேரி அடுத்த நெல்லிகூப்பத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் ஓம வள்ளி அம்மன் கோவில் வேண்டவராசி அம்மன் திருக்கோவிலில் நடைபெறும். http://www.ulavaram.org/

[2] https://sivatemple.wordpress.com/2014/12/28/temple-cleaning-work-done-at-jambulingeswarar-temple-korattur/

[3] சிவராமன், அருள்மிகு ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில், திருவள்ளுவர் தெரு, தாம்பரம் (கிழக்கு), சென்னை -600059, Tuesday, January.13, 2009.

[4] http://sivaramantambaram.blogspot.in/2009/01/vendavarasi.html

[5] சிவராமன், அருள்மிகு ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில், திருவள்ளுவர் தெரு, தாம்பரம் (கிழக்கு), சென்னை -600059, Tuesday, January.13, 2009.

[6] http://sivaramantambaram.blogspot.in/2009/01/vendavarasi.html

[7] சிவராமன், அருள்மிகு ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில், திருவள்ளுவர் தெரு, தாம்பரம் (கிழக்கு), சென்னை -600059, Tuesday, January.13, 2009.

[8] http://sivaramantambaram.blogspot.in/2009/01/vendavarasi.html

[9] https://sivatemple.wordpress.com/2016/06/04/sri-anjanakshi-agasteswarar-temple-tirumukkudal-karur-its-location-and-significance/

[10] https://sivatemple.wordpress.com/2016/06/04/sri-anjanakshi-agasteswarar-temple-tirumukkudalur-dating-and-transformation-thereof/

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அத்துமீறல், அழிப்பு, ஆக்கிரமிப்பு, ஆதிகேசப்பெருமாள், ஆதிகேசவ பெருமாள் கோவில், ஆலயம், இறைப்பணி, உடைப்பு, உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, ஓம வள்ளி அம்மன், காலம், குளம், குளம் அமைப்பு, கூடுவாஞ்சேரி, கொடி கம்பம், நெல்லிகுப்பம், நெல்லிக் குப்பம், நெல்லிக்குப்பம், படிகட்டுகள், படிக்கட்டு, படிக்கட்டுகள், வேண்டவராசி, வேண்டவராசி அம்மன், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s