183வது உழவாரப்பணி கூடுவாஞ்சேரி அடுத்த நெல்லிக்குப்பத்தில் அமைந்துள்ள –அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் ஓம வள்ளி அம்மன் கோவில்களில் நடைபெற்றது!

183வது உழவாரப்பணி கூடுவாஞ்சேரி அடுத்த நெல்லிக்குப்பத்தில் அமைந்துள்ளஅருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் ஓம வள்ளி அம்மன் கோவில்களில் நடைபெற்றது!

Location of Temple, tank etc

ஏப்ரல் 2017ல் நடந்த 183வது உழவாரப்பணி: 183வது உழவாரப்பணி கூடுவாஞ்சேரி அடுத்த நெல்லிகூப்பத்தில் அமைந்துள்ள –அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் ஓம வள்ளி அம்மன் கோவில்களில் நடைபெறும் என்ற செய்தி அறிந்ததால், செல்ல வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்[1]. 28-12-2014க்குப் பிறகு, இன்றுதான் செல்கிறேன் என்று நினைக்கிறேன்[2]. இரண்டு வருடங்களுக்கும் மேலாக செல்லவில்லை என்று நினைக்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கூடுவாஞ்சேரியிலிருந்து 13 கி.மீ இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது. முன்பெல்லாம் ஒரு நண்பர் விசயம் சொல்வார், கூட்டி செல்வார், ஆனால், இப்பொழுது அவருக்கு முடியவில்லை போலும், சொல்வதில்லை, அதனால், நானும் செல்லமுடியாமல் இருந்து விட்டேன். அதனால், முன்னமே அக்குழுத் தலைவரிடம் பேசினேன், அவர் வழக்கம் போல பேரூந்து வசதி செய்திருப்பதாலும், அது குறிப்பிட்ட வழியில் செல்லும் என்பதாலும், அங்கு ஏறிக்கொள்ளலாம் என்றார். நானும், இன்று (24-04-2017) அன்று  காலை 7.30க்கு புறப்பட்டேன். குறிப்பிட்ட இடத்திற்கு சென்றபோது, அந்த நண்பரும் அங்கு இருந்தார்! பேரூந்து வந்தது, புறப்பட்டோம். வழியில், ஒரு அரசு பள்ளி வளாகத்தில் காலையுணவு ஏற்பாடு செய்யப் பட்டது. பிறகு, பேரூந்து மூலம் குறிப்பிட்ட கோவில்கள் இருக்கும் இடத்தை அதைந்தோம். அவை திரு வேண்டவராசி அம்மன் திருக்கோவில் அருகில் அமைந்துள்ளன. தாம்பரம் சிவராமன் என்பவர் இக்கோவிலைப் பற்றி கொடுத்துள்ள விவரங்கள் கீழே கொடுக்கப்படுகின்றன.

Vendavarasi Amman - front gopura

அருள்மிகு வேண்டவராசி அம்மன் கோபுரம் – முன்புறம்.

Vendavarasi Amman - Vigraha-bronze

வழிபட்டு வந்த பஞ்சலோக விக்கிரகம்.

Vendavarasi Amman - Vigraha abhishekam

விக்கிரகத்திற்கு அபிஷேகம்.

Vendavarasi Amman - Vigraha abhisheka-bronze

அம்மனுக்கு அபிசேகம்!

Vendavarasi Amman - backside

பின்புறம் இருக்கும் அம்மன் விக்கிரகம்!

பஞ்சலோக உற்சவர் விக்ரகம் கற்சிலையாக உருவாக்கப்பட்டது (1987)[3]: அருள்மிகு வேண்டவராசி அம்மன் மூலக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், நெல்லிக்குப்பம் கிராமத்தில் உள்ளது. இக்கோயிலில் மூலவர் விக்கிரகம் இல்லாமல் கலை நுட்பம் வாய்ந்த பஞ்சலோக உற்சவர் விக்கிரகம் வழிபடப்பட்டு வந்தது. இந்த அம்மனின் ஆபரணங்கள் அனைத்தும் நாகவடிவில் அமைந்திருந்தது சிறப்பு வாய்ந்ததாகும். இந்த மாசக்தியை குலதெய்வமாக வழிபட்டு வந்த சலவைத்தொழில் செய்யும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிழக்கு தாம்பரத்தில் குடியேறினார்கள். அந்த சமூகத்தைச் சேர்ந்த திரு.நரசிம்மன் என்பவர் மண்ணால் செய்த அம்மனின் சிரசு ஒன்றை கிழக்கு தாம்பரம் திருவள்ளுவர் தெருவில் இருந்த மிகப்பெரிய ஆலமரத்தின் கீழ் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வந்தார். இப்பகுதி ஏழை மக்களின் பிரச்சினைகளை போக்க இந்த விக்ரகத்தின் முன் வேப்பிலை அடித்து பூசை செய்வார். இந்த பூசையினால் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதால், இந்த சக்தியின் பக்தர்களாக இப்பகுதி மக்கள் இந்த விக்கிரகத்தை வழிபடத் துவங்கினர்கள், காலப்போக்கில் ஆடி மாதம் அம்மனுக்கு காப்புக்கட்டி கூழ் ஊற்றும் நிகழ்சியை கொண்டாடத் துவங்கினர்[4].

Way to Perumal Koil from Vendavarasi Amman temple-can be seen

அருள்மிகு வேண்டவராசி அம்மன் கோவிலிலிருந்து பெருமாள் கோவிலுக்கு செல்லும் வழி.

Way to Perumal Koil from Vendavarasi Amman temple

இடையில் குளம் உள்ளது.

Way to Perumal Koil - nearby well

போகும் வழியில் வலது பக்கத்தில் இருக்கும் பெரிய கிணறு.

Cncrete road to Perumal temple

பெருமாள் கோவில் போகும் வழி.

IMG_20170423_105935

ஓலைக் கொட்டகை, சிறந்த கோவிலானது (1999)[5]: சில ஆண்டுகளில் சிறிய கொட்டகை அமைத்து கோயிலாக வழிபட்ட பின் கொட்டகையை மாற்றி ஓடு போட்ட கோயிலாக மாற்றினர். இந்த அம்மன் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளித்ததால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியது, ஆடித்திருவிழா ஆண்டுதோரும் மிகவும் சிறப்பாகவும், வெகுவிமரிசையாகவும் கொண்டாடப்பட்டு வந்தது, இந்த ஆலயத்தின் நிர்வாகிகள் தவத்திரு மயிலை மாமுனிவர் குருஜி சுந்தரராம சுவாமிகளின் சீடர் தவத்திரு திருவக்கரை சந்திரசுவாமிகளை இந்த ஆலயத்திற்கு அழைத்துவந்தனர். இந்த நாகசக்தியை வழிபட்ட ஸ்ரீ சந்திரசுவாமிகள் கருங்கல்லாலான மூலவர் விக்ரகம் அமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என தனது தெய்வீக சக்தியின் மூலம் அறிவுறித்தினார். அதற்கான நிதி அளிப்போர் பலரையும் அறிமுகம் செய்து வைத்தார், பின் அவரது வழிகாட்டுதலோடு விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை அருகிலுள்ள இறையூர் கிராமத்தைச் சேர்ந்த இறை அருள்பெற்ற சிற்பி திரு,பெருமாள்ராஜூ கருங்கல்லில் வடித்து கொடுத்தார். பின்னர் திருக்கோயில் எழுப்பப்பட்டு வேண்டவராசி அம்மன் மூலவர் சிலை பிரிதஷ்டை செய்யப்பட்டு வேத சாஸ்திரப்படி, தவத்திரு திருவக்கரை சந்திரசுவாமிகள் அவர்களின் வழிகாட்டுதலால் திருக்குடமுடுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது[6].

Cleaning tank

குளக்கரையை சுத்தப்படுத்தும் உழவாரப்பணியாளர்.

Cleaning tank.2

குளக்கரையை சுத்தப்படுத்தும் உழவாரப்பணியாளர். இன்னொரு பக்கம்.

Cleaning tank.3

குளக்கரையை சுத்தப்படுத்தும் உழவாரப்பணியாளர். இன்னும் ஒரு பக்கம்.

Cleaning tank.4

சகல சிறப்புகளுடன் சிறந்த கோவிலானது[7]: ஆடி மாதம் நான்காவது வாரம் காப்பு கட்டும் ஆடித்திருவிழா மட்டுமே நடைபெற்று வந்த இந்த திருக்கோயிலில், கும்பாபிஷேக விழாவிற்குப்பின் சித்ரா பெளர்ணமி அன்று 108 பால்குட அபிஷேகவிழா, தைபூசத்தினத்தன்று 108 சங்காபிஷேகவிழா, தமிழ்புத்தாண்டு விழா, பொங்கல் விழா, பிரதி மாதம் பெளர்ணமி, அமாவசை சிறப்பு அபிஷேகம், நவராத்திரி அலங்கார விழா இப்படிப்பட்ட பல்வேறு சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன. பின் பஞ்சலோகத்தினால் ஆன மிகவும் அறிய வேலைப்பாடுகளுடன் கூடிய உற்சவர் விக்கிரகம் திருக்கழுகுன்றம் அருகிலுள்ள பாண்டூர் கிராமத்திலுள்ள கலைக்கூடத்தில் வார்க்கப்பட்டு மூன்று தினர்கள் வேதவிற்பணர்கள் நான்கு மறைகளையும் ஓத சாஸ்திர முறைகளின்படி ஹோமங்கள் செய்யப்பட்டு, மயிலைமாமுனிவர் தவத்திரு குருஜி சுந்தராமசுவாமிகள் அவர்களின் தலைமையில் வத்திரு திருவக்கரை சந்திரசுவாமிகள் அவர்களின் வழிகாட்டுதலால் திருக்குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. பத்தாண்டுகளுக்குப்பின் திருக்கோயில் ஆகமவிதிகளின் படி அமைக்க திட்டமிடப்பட்டு கூவத்தூரைச் சேர்ந்த ஸ்தபதி மகேந்திரன் அவர்களால் கோயில் நிர்மாணம் செய்யப்பட்டு பிரம்மாண்டமாக திருக்குடமுழுக்குவிழா வத்திரு திருவக்கரை சந்திரசுவாமிகள் அவர்களின் சிறப்பாக நடைபெற்றது[8].

Perumal Koil - Gopura view.Front-top

பெருமாள் கோவில் கோபுரம் – முன்பக்கம்.

Perumal Koil - Gopura view.Front

பெருமாள் கோவில் கோபுரம் – முன்பக்கம். துவஜஸ்தம்பம் வெளியில்.

Perumal Koil - road in front

கோவிலுக்கு முன்பாக இருக்கு சாலை.

Perumal Koil - road in front-Agrahara type houses

அக்ரஹாரம் போன்ற பழய ஓடு வீடுகள்.

Perumal Koil - Gopura view

கோவிலின் பக்கவாட்டுத் தோற்றம்.

Perumal temple compund wall

அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில்: இக்கோவில் அருள்மிகு வேண்டவராசி அம்மன் கோயிலுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. இரு கோவில்களும் கிழக்கு பார்த்து இருக்கின்றன. இது ஒரு சிறிய சமீபத்தில் கட்டப்பட்ட கோவிலாகும். வேண்டவராசி அம்மன் கோயில் எல்லாவிதங்களிலும் சிறப்புப் பெற்று புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் போது, இக்கோவில் கவனிப்பாற்றுக் கிடக்கும் நிலையிலுள்ளது போன்று தெரிகிறது. அக்ரஹார அதாவது பழைய கிராம நாற்புற வீதிகள், முதலியவை இருந்தது, இப்பொழுதும் இடிந்த நிலையில் உள்ள சில ஓடுவீடுகள், கோவிலுக்கு நேராக உள்ள வீதி, சுற்றியுள்லும் வீதிகள் முதலியவை மூலம் அறியலாம். கோவிலைச் சுற்றி சம்பந்தமே இல்லாமல் கான்கிரீட் சாலை போடப்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது, அங்கிருக்கும் கோவிலுக்கு சொந்தமான மற்றும் வீடுகளின் சொந்தமான நிலங்கள் மாறுதல்களுக்கு உட்படுகின்றன என்று தெரிகிறது. இங்கு இப்பொழுது அடுக்கு மாடி வீடுகள் அதிகமாகக் கட்டப் பட்டு வருவதால், “ரியல் எஸ்டேட்” வியாபாரம் அமோகமாக நடைப் பெற்று வருகிறது.

Area between Tank and Perumal temple

குளக்கரைப் பகுதி.

Cleaning tank. Amman koil nearby

குளக்கரையில் இருக்கும் அம்மன் கோவில்.

Cleaning tank. Amman koil nearby.2

குளம் சுத்தம் செய்யப்பட்டது: இக்கோவிலுக்கு வடக்கில் ஒரு பெரிய குளம் படிகட்டுகளுடன் உள்ளது. அதில் தண்ணீரும் உள்ளது. குளங்கள் இருந்தால், தண்ணீர் பிரச்சினை இருக்காது என்ற உண்மையினை நகரத்தவர்கள், வீடு-வியாபாரம் போன்ற காரியங்களால் மாற்றி வருகின்றனர். இதைச் சுற்றியுள்ள இடத்தையும், குளத்தில் உள்ள செடிகொடிகளையும் அப்புறப்படுத்தி உழவாரப் பணி நடந்தது. பெருமாள் கோவில் உள்ளே செடி-கொடிகளும் அப்புறப்படுத்தப்பட்டு, சமன் செய்யப்பட்டு, சுவர்களுக்கு சுண்ணாம்பு அடிக்கப் பட்டது. கோவில் பூட்டப்பட்ட நிலயில் இருந்தது. இம்முறை உழவாரப்பணியாளர்களுக்கு அதிக வேலை இருக்கவில்லை. ஏப்ரல் மாதம் வெயில், அனல் முதலியவை அதிகமாகவே இருந்தன. பொதுவாக நகர்புறங்கள், கிராமங்களில் மரங்கள் அதிகமாக இருக்கும், ஆனால், மரங்கள் இங்கு மிகக்குறைவாக இருக்கின்றன. இருப்பினும், பழைய நண்பர்கள், பெரியவர்கள் முதலியவர்களைப் பார்த்த திருப்தி கிடைத்தது. சென்ற வருடம் நெரூருக்கு சேர்ந்து சென்ற நண்பர்களையும் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது[9]. இம்முறை செல்வதிலும் சில மாறுதல்கள் தெரிய வருகின்றன. சென்ற முறை சேர்ந்து சென்றவர்கள், இம்முறை தனித்தனியாக செல்கிறார்கள்[10].

மாறுகின்ற தீர்த்த யாத்திரைகள், பக்தர்கள், மனிதர்கள்: கடந்த 50-100 ஆண்டுகள் வரையில், தீர்த்த யாத்திரை செல்பவர்களிடம் ஒருமித்த எண்ணம், கருத்து, இயல்பு, மனப்பாங்கு முதலியவை இருந்தன. அப்பொழுதெல்லாம் “பணம்” ஒரு காரணியாக, தேவையாக அல்லது பிரச்சினையாக இருக்கவில்லை. தீர்த்தயாத்திரைக்கு செல்பவர்களுக்கு, அனைவரும் வேண்டியதை செய்து கொடுத்து வந்தனர். ஆனால், முகமதியர் காலத்தில் அது அதிகமாகவே பாதிக்கப் பட்டது. அப்பொழுதுதான், சேர்ந்து கூட்டம்-கூட்டமாக செல்லும் பழக்கம் ஏற்பட்டது. அதாவது அப்படி சென்றால், யாராவது தாக்க மாட்டார்கள், தாக்கினாலும், எல்லோருக்கும் தெரிந்து விடும் என்ற நிலை / பயம் இருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் வேறுவித்மான பிரச்சினைகள் ஏற்பட்டன. சுதந்திரத்திற்குப் பிறகு, எல்லாம் மாறிவிடும் அதாவது, முன்னர் போன்றாகி விடும் என்று இருந்த வேலையில், மக்கள் எல்லா சித்தாந்தகளின் தாக்குதல்களால் மாற ஆரம்பித்தனர். அதனால், இப்பொழுது, “பணம்” மட்டுமல்லாது, மற்ற விவகாரங்களும் பக்தி-ஆன்மீகம் போன்றவற்றை பாதித்து வருகின்றன. எல்லாவற்றிலும் “தான்” என்ற எண்ணம் வர ஆரம்பிக்கிறது. ஒருவன் தன்னை “தலைவன்” என்று நினைத்துக் கொண்டால் அல்லது உள்ள நிலைமை வைத்து அவ்வாறு செய்து விடலாம் என்று தீர்மானித்தால், அதை நிறைவேற்றிக் கொள்ள பக்தி, ஆன்மீகம் போன்றவற்றையும் தனக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டு, “தலைவனாக”ப் பார்க்கிறார்கள். ஒருசில தொண்டர்கள், சீடர்கள் அல்லது அதைப் போன்றவர்கள் கிடைத்து விட்டால், தலைவனாகவே பாவித்துக் கொள்கிறான். அந்நிலையில், தனக்கு இணையாக யாரும் வந்து விடக் கூடாது என்று நினைக்கிறான். அந்நிலையில், அடுத்தவரைப் பற்றி இல்லாதது-பொல்லாதது சொல்லும் படலம் ஆரம்பிக்கிறது.  ஆனால், அந்த தாக்கப்படும் மனிதருக்கு இதெல்லாம் தெரியாமலே இருக்கும். இல்லை தெரியாமலே, அந்த தலைவர் செய்வார், முன்போல “யாத்திரை” விவரங்கள் சொல்லமாட்டார், அல்லது தெரிவிக்கப்படாது. “அவர் இனிமேல் வர மாட்டார்’ என்று கூட சொல்லி, கருத்துருவாக்கம் செய்யப் படும். ஆக முரண்பாடுகள் அதிகமாகும் போது, மனிதர்கள் விலகுகிறார்கள். பக்தி-ஆன்மீகம் போன்றவைகளும் விலகித்தான் செல்கின்றன. எல்லாவற்றையும் வர்த்தகமாக்குதல், வியாபாரமாக்குதல், பணமாக்குதல் போன்ற எண்ணங்களும் செயல்பட ஆரம்பிக்கின்றன.

© வேதபிரகாஷ்

23-04-2017

[1] வரும் 23.4.2017 அன்று நம் உழவாரப்பணியின் 183வது உழவாரப்பணி நடை பெற உள்ளது. திருக்கோவில் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: இடம்: கூடுவாஞ்சேரி அடுத்த நெல்லிகூப்பத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் ஓம வள்ளி அம்மன் கோவில் வேண்டவராசி அம்மன் திருக்கோவிலில் நடைபெறும். http://www.ulavaram.org/

[2] https://sivatemple.wordpress.com/2014/12/28/temple-cleaning-work-done-at-jambulingeswarar-temple-korattur/

[3] சிவராமன், அருள்மிகு ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில், திருவள்ளுவர் தெரு, தாம்பரம் (கிழக்கு), சென்னை -600059, Tuesday, January.13, 2009.

[4] http://sivaramantambaram.blogspot.in/2009/01/vendavarasi.html

[5] சிவராமன், அருள்மிகு ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில், திருவள்ளுவர் தெரு, தாம்பரம் (கிழக்கு), சென்னை -600059, Tuesday, January.13, 2009.

[6] http://sivaramantambaram.blogspot.in/2009/01/vendavarasi.html

[7] சிவராமன், அருள்மிகு ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில், திருவள்ளுவர் தெரு, தாம்பரம் (கிழக்கு), சென்னை -600059, Tuesday, January.13, 2009.

[8] http://sivaramantambaram.blogspot.in/2009/01/vendavarasi.html

[9] https://sivatemple.wordpress.com/2016/06/04/sri-anjanakshi-agasteswarar-temple-tirumukkudal-karur-its-location-and-significance/

[10] https://sivatemple.wordpress.com/2016/06/04/sri-anjanakshi-agasteswarar-temple-tirumukkudalur-dating-and-transformation-thereof/

Posted in அத்துமீறல், அழிப்பு, ஆக்கிரமிப்பு, ஆதிகேசப்பெருமாள், ஆதிகேசவ பெருமாள் கோவில், ஆலயம், இறைப்பணி, உடைப்பு, உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, ஓம வள்ளி அம்மன், காலம், குளம், குளம் அமைப்பு, கூடுவாஞ்சேரி, கொடி கம்பம், நெல்லிகுப்பம், நெல்லிக் குப்பம், நெல்லிக்குப்பம், படிகட்டுகள், படிக்கட்டு, படிக்கட்டுகள், வேண்டவராசி, வேண்டவராசி அம்மன், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அகோபிலம் – ஒன்பது நரசிம்மர்கள் – எப்படி செல்வது, விவரங்கள், தரிசனம் – சாலைக்கு அருகில் வீற்றிருக்கின்ற காரஞ்ச அல்லது சாரங்க நரசிம்மர் தரிசனம் (17)

அகோபிலம்ஒன்பது நரசிம்மர்கள்எப்படி செல்வது, விவரங்கள், தரிசனம்சாலைக்கு அருகில் வீற்றிருக்கின்ற காரஞ்ச அல்லது சாரங்க நரசிம்மர் தரிசனம் (17)

Karanja - Saranga Narasimha temple -name plaque

ஶ்ரீ காரஞ்ச ந்ருஸிம்ஹ கோவில் பெயர் கல்வெட்டு

Karanja - Saranga Narasimha temple -entrance.

கோவிலைச் சுற்றிய சுவர், முன்னால் இருக்கும் மண்டபம் முதலியன.

Karanja - Saranga Narasimha temple -Mantap newly constructed in front

இடது பக்கத்தில் இருக்கும் அனுமார் சந்நிதி, மண்டபம், கர்ப்பகிருகம்  முதலியன.

Karanja - Saranga Narasimha - Vigaraha - now

மூலவர் விக்கிரகத்தின் தோற்றம்.

காரஞ்ச அல்லது சாரங்க நரசிம்மர்: மேல் அஹோபிலம் போகும் வழியில், இடது பக்கத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. மண்டபத்தில் நுழையும் போது, இடது புறத்தில் ஆஞ்சனேயர் நரசிம்மரை வணங்குவது போன்ற சிற்பம் காணப்படுகிறது. “கரஞ்ச விருக்ஷம்” காரஞ்ச மரம், கருங்காலி மரம், கரஞ்ச என்ற மரத்தின் கீழிருப்பதால், “காரஞ்ச நரசிம்மர்” என்றழைக்கப்படுகிறார். மூன்று கண்களுடன், நான்கு கைகளுடன் நரசிம்மர் பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார், ஒரு பாம்பு / ஆதிசேஷன் நரசிம்மர் மீது படமெடுத்து அமைந்துள்ளது. கையில் சாரங்கம் அதாவது வில் இருக்கிறது. வலது மேல் கரத்தில் சக்கரம், இடது கரத்தில் வில், கீழ் வலதுகரத்தில் தியான முத்திரை ஆகியன கொண்டுள்ளார். இக்கோவில் வாசலில் தூண்களின் பகுதிகள் காணப்படுகின்றன. அவற்றில் அழகான சிற்பங்கள் காணப்படுகின்றன. இடது பக்கத்தில், இக்காலத்தில் கட்டப்பட்ட மண்டபம் உள்ளது. அதில், வரும் பக்தர்கள், பொங்கல் வைப்பது போன்ற சடங்குகளை செய்து வருகிறார்கள்.

Karanja - Saranga Narasimha temple -old photo

1960களில் இருந்த கோவிலின் தோற்றம் – திரு. சீதாபதி புத்தகத்திலிருக்கும் புகைப்படம்.

Karanja - Saranga Narasimha - old temole- before renovation

அதன் வண்ணப்படம் – முன்னர் மண்டம் முதலியவை இல்லாத தோற்றம்.

Six pillara before the Karanja Narasimha temple

புதுப்பித்துக் கட்டப்பட்ட நிலை.

Karanja - Saranga Narasimha Vigraha - 15 years back

ஆஞ்சனேயர் மற்றும் காரஞ்ச சந்நிதிகள்.

Yogananda Narasimha temple-old-Chaitanya

ஆஞ்சநேயருக்கு காட்சியளித்த நரசிம்மர்: புராணத்தின் படி, ஆஞ்சநேயர் ஒரு முறை, இவ்வழியாக சென்ற போது, கருங்காலி மரத்தின்கீழே அமர்ந்து ராமனை நினைத்து ஆழ்ந்த தவம் மேற்கொண்டார். “ராம், ராம்” என்று தியானித்துக் கொண்டிருந்தபோது, நரசிம்மர் சாந்த சொரூபியாய்[1] ஆதிசேஷன் படமெடுத்து குடைபிடிக்க, மூன்று கண்கள், நான்கு கைகள், கையில் வில் என்று அனுமனுக்குக் காட்சி தந்தார். ஆஞ்சநேயர், யார் என்ற கேட்ட போது, “நான் தான் எல்லாம்” என்று பதில் அளித்தார். அவர் வலது கையில் சக்கரமும், இடது கையில் வில்லும் இருப்பதைப் பார்த்து திகைத்த ஆஞ்சநேயர், ‘‘நீர் எம் இறைவன் ராமர் போலத் தோற்றமளிக்க முயற்சித்தாலும் நீர் அவர் அல்லர். மூன்று கண்கள் இருந்தாலும், சிவன் இல்லை. ஆகவே என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று வேண்டிக் கொண்டார்[2]. உடனே ராமனாக வில்லேந்திய அழகிய கோலத்தில் நரசிம்மர் அனுமனுக்குக் காட்சி தந்தார்[3]. அனுமன் இந்தக் காட்சியில் மனம் மகிழ்ந்தார்.

கரஞ்சமூலே பகவாந் யத்ராஸ்தே சார்ங்க சக்ரத்ருத்
காரஞ்சம் க்ஷேத்ரம் உத்திஷ்ட மாச்ரிதம் பவநாசி நீம்
ஏஷாம் ஸ்நாநரதி காம்க்ஷா ஏஷாம் வைக்ஞான நிச்சயே
தத்ததிஷ்ட பலம்ப்ராதாத் பகவாத் நரகேசரீ.

விளக்கம்: பவநாசினி என்ற புனித தீர்த்தக் கரையில் காரஞ்ச மர நிழலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே நமஸ்காரம். சார்ங்கம் என்ற வில்லுடனும், சக்கரத்துடனும் நரசிங்கமாகக் காட்சி தரும் பகவானின் இந்தத் தலம் காரஞ்ச க்ஷேத்திரம் என்று புகழ் பெற்றிருக்கிறது. புனித தீர்த்தங்களில் நீராடும் பக்தி வேட்கை கொண்டவர்களுக்கும், தீர்க்க ஞானம் பெற விரும்புபவர்களுக்கும் இங்கே பரந்தாமன் அவரவர் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்விக்கிறான்[4].

 Karanja - Saranga Narasimha temple -carved pillars LHS entrance

முன்னால் இருக்கும் தூண்கள், பிச்சைகாரர்களின் உட்காரும் மற்றும் துணிகளை காயவைக்கும் இடமாக உள்ளது.

Karanja - Saranga Narasimha temple -parts of carved pillars LHS entrance.

கலைநயம் கொண்ட சிற்பங்கள் கொண்ட தூண்களின் கதி!

Karanja - Saranga Narasimha temple -sheds constructed on LHS

இடது பக்கம் கட்டப்பட்டுள்ள மண்டபம்.

காரஞ்ச நரசிம்மர் விக்கிரகம்: காரஞ்ச நரசிம்மரின் விக்கிரக புகைப்படங்கள், சீதாபதியின் புத்தகம்[5] மற்றும் “சைதன்யா” வீடியோவிலிருந்து எடுக்கப்பட்டது[6] படத்தில் காட்டப்பட்டுள்ளது. இப்பொழுது எண்ணை மற்றும் இதர திரவியங்களால் அபிசேகம் செய்யப் பட்டதால், சிறிது மாற்றம் அடைந்திருப்பது போல தோன்றுகிறது. குறிப்பாக, வெள்ளித் தகடுகளினால் கண்கள் முதலியன மறைக்கப்பட்டிருக்கின்றன. நெற்றியில் இருக்கும் கண்ணை மறைக்க நாமம் போடப்பட்டுள்ளது. கீழே இருக்கும் இரண்டு கைகள் மறையும் படி, அலங்காரம் செய்கிறார்கள். குறிப்பாக கால்களை மறைக்கிறார்கள். ஒவ்வொரு விக்கிரகத்திலும், கால்கள், கைகள், முகம் என்று அனைவற்ரிலும், அந்தந்த விக்கிரகத்திற்கு ஏற்ற முறையில், விவரங்களை, விக்கிரகத்தில் நுணுக்கமாக, ஆனால், தெளிவாக செதுக்கியுள்ளார்கள். கால்கள், பாதங்கள், பாதங்களின் விரல்கள் இவையெல்லாமே, நரசிம்மர் உட்கார்ந்திருக்கும், தியான நிலையை எடுத்துக் காட்டுகிறது. கைகள் மற்றும் கைவிரல் நளினம் முதலியன, உக்கிரம் முதல் சாந்தம் வரையில் உள்ள நிலைகளை எடுத்துக் காட்டுகின்றன. இரண்யகசிபுவின் வயற்றின் மீது கையை வைப்பது, விரல்களை வைப்பது, கிழிக்க விரல்களை சொருகுவது, சொருகி கிழிக்க ஆரம்பிப்பது, குடலை இழுப்பது, போன்ற காரியங்களுக்கு ஏற்ப, விரல்களின் நெளிவு-சுளிவுகள் மாறுகின்றன. கைகளின் எண்ணிக்கையும் இரண்டு, நான்கு, ஆறு, எட்டு என்று அதிகமாகின்றன. இவற்றையெல்லாம் கவனமாக பார்த்து தர்சிக்க வேண்டும்.

 Karanja - Saranga Narasimha Vigraha -old photo

1960களில் மூலவர் விக்கிரகத்தின் தோற்றம்.

Karanja - Saranga Narasimha - Vigaraha - old-now compared

முந்தைய மற்றும் இப்பொழுதைய விக்கிரங்களின் தோற்றம் – ஒப்பீடு.

ஒன்பது விக்கிரகங்கள் உருவாக்கிய கலைக்கு பின்னால் இருந்த தொழிற்நுட்பம் என்ன?: ஒன்பது நரசிம்மர்களின் விக்கிரங்களில், இத்தகைய நுணுக்கங்களை சிற்பிக்கள், ஒன்று புராண விவரங்களை அறிந்து செதுக்கியிருக்க வேண்டும் அல்லது இச்சிற்பங்களைப் பார்த்து, புராணங்களில் அவ்வாறு எழுதப் பட்டிருக்க வேண்டும். எப்படியிருந்தாலும், சிற்பிகள் மற்றும் பௌராணிகர்களின் சம்பந்தம், அவர்களின் சேர்ந்த உரையாடல், விளக்கங்கள் சிற்பங்களில் வெளிப்படும் தன்மை முதலியன, எல்லோருமே சேர்ந்து வேலை செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இக்காலத்தில், தேவையில்லாமல், ஜாதி கண்ணோட்டத்தோடு, விளக்கம் கொடுத்து மக்களைப் பிரிக்க பார்க்கிறார்கள். ஆனால், இங்கோ, மலைவாசிகள், வனவாசிகள், கற்பாறைகளை உடைப்பவர்கள், சிற்பிகள், கற்தச்சர்கள், கட்டடம் கட்டுபவர்கள் என்று எல்லோருமே சேர்ந்து செயல்பட்டுள்ளது தெரிகிறது. இவ்வாறு மலை மற்றும் காட்டுப் பகுதிகளில் இப்பொழுது சென்று வரவே, நமக்கு பலவித போக்குவரத்து சாதனங்கள் தேவைப் படுகின்றன. ஆனால், அவையெல்லாம் இல்லாத காலத்தில், இவையெல்லாம் நடந்திருக்கின்றன என்பதை கவனிக்க வேண்டும். இத்தகைய கடினமான வழிகளைக் கடந்து அந்த பலதரப்பட்ட வேலையாட்கள் எப்படி வந்திருக்க முடியும் அல்லது அவையெல்லாம் இரு இடத்தில் தயாரிக்கப் பட்டன என்றால், எப்படி அந்த ஒன்பது இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கக் கூடும், என்ன போக்குவரத்து சாதனங்கள், கற்களை தூக்க, இடம் பெயர, செதுக்க என்னென்ன உபகரணங்களை உபயோகித்தனர், முதலியவற்றைப் பற்றியும் யோசிக்க வேண்டும்.

 Karanja - Saranga Narasimha - Anajaneya

ஆஞ்சனேயரின் தோற்றம் – நரசிம்மரை நோக்கி சேவிக்கும் நிலை.

சிற்பங்கள், கோவில்களை உருவாக்கும் தன்மையும், அழிக்கும் தன்மையும்: சிற்பங்கள் மற்றும் கோவில்கள் உருவாக்க, அவற்றின் பின்னணியில் பல விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்ப விவரங்கள் உள்ளன. மேலே குறிப்பிட்டப்படி,  இத்தகைய கலை நயத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும், தூண்கள், கற்களால் ஆன கூரை, அவற்றை தூண்களை நிறுத்து மேலே ஏற்ற்ப்பட்டு அமைத்திருப்பது, கோவிலை முழுமையாகக் கட்டி, கர்ப்பகிருகத்தில், விக்கிரங்களை வைத்து, முடிக்கப் பட்டது, இவையெல்லாம், மலை மேல் மற்றும் கீழ் மற்றும் குறிப்பிட்ட இடங்களில் செய்விக்கப்பட்டது முதலியவற்றில் உள்ள விஞ்ஞானம், விஞ்ஞான அறிவு உள்ளத்தன்மை மற்றும்பயன்படுத்தப் பட்டத் தன்மை [Science / scientific knowledge known and applied behind] மற்றும் பின்னால் இருந்த தொழிற்நுட்பம் [technology behind] முதலியவற்றைப் பற்றியும் யோசித்து, கவனித்துப் போற்ற வேண்டியுள்ளது. இல்லையென்றால், அவை நடந்திருக்க முடியாது. ஆக, அவ்வாறு பாராடி, போற்றப்படக்கூடிய நிலையில், அவற்றை அழித்துள்ளார்கள், இன்றும் அழிக்கத் தயாரக உள்ளார்கள் என்றறியும் போது, அவர்களின் மனநிலையை அறிய வேண்டும்.

 sculptured-pillars-pulled-down-ahobilam

விக்கிரங்கள் அல்லது கலயுருவாக்கம் [Iconogenesis] மற்றும் விக்கிரகம் மற்றும் கலயழிப்பு [Iconoclasm] என்ற சித்தாந்தங்கள்[7]: விக்கிரங்கள் அல்லது கலயுருவாக்கம் [Iconogenesis] மற்றும் விக்கிரகம் மற்றும் கலயழிப்பு [Iconoclasm] என்ற சித்தாந்தங்கள் மற்றும் அவற்றின் தன்மைகளை இங்கு அறிந்து கொள்ள வேண்டும். விக்கிரங்கள் அல்லது கலயுருவாக்கம் தன்மை கொண்ட மக்கள், நிச்சயமாக அவற்றை அழிக்க மனங்கொள்ள மாட்டார்கள்[8]. ஆனால், அவ்வாறு அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், விக்கிரங்கள் அல்லது கலயுருவாக்கம் கொண்ட, அல்லது விரும்பக்கூடிய மக்களாக இருந்திருக்க / இருக்க முடியாது. அவ்வாறு இருப்பது போல காண்பித்துக் கொள்வது, விளக்கம் கொடுப்பது, நியாயப்படுத்துவது, அவர்களின் முரண்பாடு, போலித்தங்களைத் தான் எடுத்துக் காட்டுகின்றன. இப்பொழுது, உண்மைகளை மறைத்து, ஔரங்கசீப், குதுப் ஷா, ஆற்காடு நவாப், கருணாநிதி போன்றோர் கோவில் கட்ட, குளம் வெட்ட, மராமத்து செய்ய நிலம் கொடுத்தார்கள், நிதி கொடுத்தார்கள் என்று எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது[9]. உண்,மையில் கோவில் சொத்து, நிலங்களை அபகரித்துக் கொண்டது, கொள்ளையடித்ததே இவர்கள் தான், பிறகு கோவிலுக்குக் கொடுத்தார்கள் என்பது அபத்தமானது.

© வேதபிரகாஷ்

26-03-2017

temple-hundi-looters

temple-hundi-looters

[1] ஏற்கெனவே சாந்தம் அடைந்த நரசிம்மர் மறுபடியும், சாந்தம் அடைவது ஏன் என்றும் நோக்கத் தக்கது. அதாவது, மலோல நரசிம்மர் மேலேயிருப்பதால், கீகழே வரும் போது, சாந்தமடைந்து, அதற்குப் பிறகு, சத்ரவட, யோகானந்த ஸ்வரூபங்களை / உருவங்களை அடைந்தார் போலும்.

[2]  ஒரு வேளை சைவ-வைணவர்களைத் திருப்திப் படுத்த, அவ்வாறு முக்கண்ணன் மற்றும் கோதண்டராமன் போன்று தோன்றினார் போலும். ஆஞ்சனேயரை, சிவஸ்வரூபன் என்றும் சொல்வதுண்டு. சுருட்டப் பள்ளியில், சிவன், விஷ்ணுபோல படுத்திருக்கும் விக்கிரகம் போன்று, இதிலும் அத்தகைய சின்னங்களை சேர்த்திருக்கிறார்கள் போலும், அதாவது, விக்கிரகத்தை சமைத்திருக்கிறார்கள்.

[3] https://www.youtube.com/watch?v=GQYilVSQZSY&t=1641s

[4] http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=6128&cat=3

[5] Pidatala Sitapati, Sri Ahobila Narasimha Swamy Temple, The Director of Archaeology and Museums, Andhra Pradesh, 1982, Plates 2E and 2F in between pages, p.8 and 9.

[6] https://www.youtube.com/watch?v=GQYilVSQZSY&t=1641s

[7] http://www.hinduwebsite.com/history/research/distortions.asp

[8] http://www.allempires.com/forum/printer_friendly_posts.asp?TID=3272

[9]https://atheismtemples.wordpress.com/2010/04/15/%E0%AE%94%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92/

Posted in அகோபில, அகோபிலம், அடில் ஷா, அம்பு, அழிப்பு, அழிவு, ஆக்கிரமிப்பு, உடைப்பு, கரஞ்ச, கல்வெட்டு, காரஞ்ச, காரஞ்ச நரசிம்மர், காரஞ்ச மரம், குலி குதுப் ஷா, சத்ரவட, சரித்திர ஆதாரம், சாரங்க நரசிம்மர், சாரங்கபாணி, சாரங்கர், செஞ்சு லட்சுமி, செஞ்சுலக்ஷ்மி, செஞ்சுலட்சுமி, செப்பனிடுதல், தரிசனம், புதுப்பித்தல், மராமத்து, முக்கண்ணன், மூன்று கண், மூன்று கண் நரசிம்மர், வில்லேந்திய நரசிம்மர் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அகோபிலம் – ஒன்பது நரசிம்மர்கள் – எப்படி செல்வது, விவரங்கள், தரிசனம் – சாலைக்கு அருகில் வீற்றிருக்கின்ற யோகானந்த நரசிம்மர் தரிசனம் (16)

அகோபிலம்ஒன்பது நரசிம்மர்கள்எப்படி செல்வது, விவரங்கள், தரிசனம்சாலைக்கு அருகில் வீற்றிருக்கின்ற யோகானந்த நரசிம்மர் தரிசனம் (16)

Yogananda Naraimha temple - a complex

ஶ்ரீகாசி நாயன வளாகத்தின் இடது பக்கம் – யோகானந்த நரசிம்மர் கோவில் இருக்கும் இடம்.

Yogananda Naraimha temple - a complex developed

இடது பக்கம் நவநரசிம்மர் கோவிலை காணலாம். யோகானந்த நரசிம்மர் கோவிலுக்கு வலது பக்கம் செல்ல வேண்டும்.

Yogananda Naraimha temple - a complex developed. recently

யோகானந்த நரசிம்மர் கோவில் விவரம்: கீழ் அஹோபில கோவிலிலிருந்து மூன்று கி.மீ தொலைவில் இக்கோவில், ஒரு சிறு குன்றின் மீதுள்ளது. ஆனால், சாலை போட்டுள்ளதால், கோவில் வளகத்தில் வண்டிகள் நுழையும் அளவிற்கு, சாய்தளத்துடன் சாலை அமைக்கப் பட்டுதால், மேலே வண்டிகள் செல்ல முடியும். சதுரவடிவில் கர்ப்பகிருகம் உள்ளது. உள்ளேயிருக்கும் யோகநரசிம்மர் விக்கிரகம் உடைந்த நிலையில் காணப்படுகிறது. அதாவது முகமதியர்கள் தாக்கியபோது, இவ்விக்கிரகம் உடைந்திருக்கலாம். மேலும் சீதாபதியின் புத்தகத்தில் உள்ள அவ்விக்கிரகம் மற்றும் கோவிலின் புகைப்படங்கள் [2C, 2D] சிதிலமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன[1]. 1970களில் புனர் நிர்மானம் செய்யப்பட்ட போது, இவற்றை சரி செய்திருக்கலாம்.  ஆகையால், கோவில்கள் இவ்வாறு, புனர் நிர்மானம், மராமத்து மற்றும் மாற்றி கட்டும் போது, முந்தைய நிலை மற்றும் அவ்வாறிருந்ததற்கான காரணம் முதலியவை, அறிப்புப் பலகையில் விவரங்களுடன் கொடுக்கப் பட வேண்டும். அப்பொழுது தான், பின்வரும் சந்ததியர் சரித்திர உண்மைகளை அறிந்து கொள்ள முடியும்.

Yogananda Naraimha temple - a complex -Kasi Nayana

காசி நாயன அன்னதான மண்டபம் செல்லும் வழி – வலது புறம்.

Yogananda Naraimha temple - announcement board

யோகானந்த நரசிம்மர் பெயர் வர காரணம்: இரண்யகசிபுவை வதம் செய்த பிறகு, பிரகலாதனுக்கு, நரசிம்மர் யோகா முறைகளைக் கற்றுக் கொடுத்ததால், இவர் “யோகானந்த நரசிம்மர்” என்றழைக்கப்படுகிறார் என்று பொதுவாக சொல்லப் படுகிறது. விக்கிரகம் “யோக நரசிம்மர்” என்பதற்கான பாரம்பரிய சின்னங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. நான்கு கைகளுடன் யோக முத்திரையோடு காணப்படுகிறார். “பால யோக நரசிம்மர்” என்ற சன்னிதியும் உள்ளது. ராமருக்கு தனியாக சன்னிதி உள்ளது. இது தவிர புதியதாகக் கட்டப்படுள்ள கட்டிடங்களும் இருக்கின்றன. இக்கோவில் மற்றும் சுற்றியுள் இடங்கள் கோவிலுக்கு சொந்தமானதா, இல்லை சாலை போட்டப் பிறகு, மாற்றப்பட்டதா என்று தெரியவில்லை. மேலும், இது சத்ரவட நரசிம்மர் கோவிலுக்கு அருகில் இருப்பதால், இவற்றின் தொடர்பு என்ன என்பதையும் சிந்திக்க வேண்டும். தமிழகத்தில், பொதுவாக நரசிம்மர் கோவில் காவல் தெய்வம் போன்ற ரீதியில், வயல்வெளிகளில் கட்டப் பட்டிருந்தன. இப்பொழுதும், வயல்வெளிகள் அக்கோவில்களை சுற்றிருப்பதை கவனிக்கலாம்.

Yogananda Naraimha temple - side view

ஶ்ரீபாலயோகானந்த சுவாமி நரசிம்மர் சந்நிதி.

Yogananda Naraimha temple - sannidhi

சந்நிதியில் நிற்கும் பக்தர்கள்.

Yogananda Naraimha temple - Kasi Ayya

ஶ்ரீகாசி நாயனவின் சிலை.

ஶ்ரீ காசி நாயன என்பவரின் சேவை: ஶ்ரீ காசி நாயன என்பவர் இக்கோவிலுக்கு பல தானங்களை செய்துள்ளதாகத் தெரிகிறது. இவரது சிலை ஒரு சந்நிதியில் வைக்கப் பட்டுள்ளது. மேலே ஒரு பெரிய மண்டபத்தைக் கட்டியுள்ளார்கள். அதில் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப் படுவதாகக் கூறுகிறார்கள். இக்கோவில் இருக்கும் இடத்தைச் சுற்றி நவீனமுறையில், சிறு-சிறு கோவில்களைக் கட்டியதாக தெரிகிறது[2]. அதில் “நவ நரசிம்ம கோவில்” பிரபலப்படுத்தப்படுகிறது. அதில் ஒன்பது நவகிரகங்கள் காணப்படுகின்றன. பின்புறம் பெரிதாக, அதற்கான ஒன்பது நரசிம்மர் சிலைகளையும் வைத்துள்ளனர். இத்தகைய முறை எந்த ஆகமத்திலும் இல்லை. இது சமீபகாலத்தில் கட்டப்பட்டதாகும். “கெய்டுகள்” சுற்றுலா வாகனங்களுடன் இங்கு அதிகமாக வந்து செல்கின்றன. அதனால், கூட்டமும் இருக்கிறது.

Yogananda Naraimha temple - crowded

யோகானந்த நரசிம்மரின் சந்நிதி.

Yogananda Naraimha temple - during 1970s - Sitapati

1970களில் யோகானந்த நரசிம்மர் கோவிலின் தோற்றம்.

Yogananda Naraimha idol - during 1970s - Sitapati

ஶ்ரீ யோகானந்த நரசிம்மர் விக்கிரகம். ஒரு பக்கம் உடைந்திருப்பதை கவனிக்கலாம்.

ஒன்பது நரசிம்மர்களின் விவரங்கள்: ஒரு கமஸ்கிருத சுலோகத்தில், ஒன்பது நரசிம்மர்கள் குறிக்கப்படுகிறார்கள்:

ஜுவாலா அஹொபில மலோல க்ரோத கரஞ்ச பார்கவ

யோகனந்த க்ஷத்ரவத பாவன நவ மூர்த்தயாஹ

என்பதால், ஒன்பது நரசிம்மர்கள் குறிக்கப்படுகிறார்கள். இதிலிருந்து தான் –

எண் நரசிம்மர் தன்மை நரசிம்மர் பெயர் கிரகத்துடன் தொடர்பு படுத்துவது
1 ஜுவாலா ஜ்வாலா  நரசிம்மர் செவ்வாய்
2 அஹோபில அஹோபில  நரசிம்மர் குரு
3 மலோல மாலோல  நரசிம்மர் வெள்ளி
4 க்ரோத வராஹ (குரோத) நரசிம்மர் ராகு
5 கரஞ்ச கரஞ்ச  நரசிம்மர் திங்கள்
6 பார்கவ பார்கவ  நரசிம்மர் சூரியன்
7 யோகனந்த யோகானந்த  நரசிம்மர் சனி
8 க்ஷத்ரவத சக்ரவட  நரசிம்மர் கேது
9 பாவன பாவன  நரசிம்மர் புதன்

என்று வரிசைப்படுத்துகிறார்கள். ஆனால், இவ்வழக்கம் சமீபத்தையது என்று தெரிகிறது. போதாகுறைக்கு, நவகிரக சிலைகளுடன், நரசிம்மர் விக்கிரகங்களையும் சேர்த்து வைத்து, மேலே குறிப்பிட்ட கோவிலும் கட்டப் பட்டுள்ளது. ஆனால், நரசிம்மரின் “அனுஸ்டுப் மந்திரம்” விஷ்ணுவே ஒன்பது விதமான நரசிம்மர்களாக தோன்றி காட்சியளித்தார் என்றுள்ளது[3]. ஆகவே, இதை வைத்துக் கொண்டுதான், இந்த நவநரசிம்மர் மற்றும் நவகிரக கோவிலைக் கட்டியிருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

21-03-2017

Yogananda Naraimha temple - Navanarasimha-navagruha-recent

புதியதாகக் கட்டப் பட்டுள்ள, நவநரசிம்மர்-நவகிரக கோவில்.

[1]  Pidatala Sitapati, Sri Ahobila Narasimha Swamy Temple, The Director of Archaeology and Museums, Andhra Pradesh, 1982, p.8

[2] இந்தவிக்ரகத்தை காசிரெட்டி நாயனார் என்பவர்பிரதிஷ்டை செய்ததாகச் சொல்கிறார்கள். இவர் 103 வயது வரை வாழ்ந்த பேறுடையவர். இவர் ஏகப்பட்ட திருப்பணிகளைச் செய்து, கோயிலுக்கு மாடுகளையும் தானமாக வழங்கியுள்ளார். அன்னதான சத்திரத்தையும் நிர்மாணித்தார். கோயில் வளாகத்தில் இருக்கும் நவ துளசி மாட மண்டபத்தில் அமைந்திருக்கும் நவகிரகங்களும், தும்பிக்கை ஆழ்வார் சந்நதியும் இவரால் ஸ்தாபிக்கப்பட்டவைதான்.

தினகரன், அஹோபிலம் என்ற அதிசயம்தொடர்ச்சி, 2015-05-13@ 09:57:27; http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=8604&cat=3

[3] Hemendra Nath Chakravorty, trans. and annotated, The Narada Purana, part 3. (Delhi: Motilal Banarsidass, 1982), pp.1008-1029;

Pandit V. Krishnamacharya, rev., Ahirbudhnya Samhita (Madras: The Adyar Library and Research Centre, 1986), pp. 202-204.

Posted in அகோபில, அகோபிலம், அரசமரம், அஹோபிலம், ஆலயம், கட்டடம், கட்டிடம், குன்று, குலி குதுப் ஷா, சிங்கச் சிற்பங்கள், செஞ்சு, செஞ்சு லக்ஷ்மி, செஞ்சு லட்சுமி, செஞ்சுலக்ஷ்மி, செஞ்சுலட்சுமி, செப்பனிடுதல், செம்மண் பூமி, ஜீயர், ஜுவாலா, தரிசனம், தாக்குதல், யோகா, யோகானந்த | Tagged , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அகோபிலம் – ஒன்பது நரசிம்மர்கள் – எப்படி செல்வது, விவரங்கள், தரிசனம் – சாலைக்கு அருகில் வீற்றிருக்கின்ற சத்ரவட நரசிம்மர் தரிசனம் (15)

அகோபிலம்ஒன்பது நரசிம்மர்கள்எப்படி செல்வது, விவரங்கள், தரிசனம்சாலைக்கு அருகில் வீற்றிருக்கின்ற சத்ரவட நரசிம்மர் தரிசனம் (15)

Chatravata Narasimha temple- plaque

ஶ்ரீ சத்ரவட ந்ருஸிம்ஹ என்கின்ற பெயர் கல்வெட்டு.

IMG_20170127_165236754_HDR

கோவிலின் முன்புறத் தோற்றம்.

Chatravata Narasimha temple- six-pillared mantap

கோவில் முன்புறத்தில் உள்ள மண்டபம்.

சத்ரவட நரசிம்மர்: கீழ் அஹோபில கோவிலிலிருந்து நான்கு கி.மீ தூரத்தில் இக்கோவில் உள்ளது. பாவன நரசிம்மர் கோவில் வழியில் உள்ளது. கரடு முரடான, காட்டுப்பாதை, மலைப்பாதை என்றெல்லாம் சென்ற பிறகு, இக்கோவிலுக்கு செல்வது, சாதாரணமாக இருக்கிறது எனலாம். ஆமாம், தார் சாலையின் அருகில் அமைந்துள்ளது. வண்டி வைத்திருப்பவர்கள் கோவில் வாசலிலிலேயே சென்று இறங்கலாம். அரசமரத்தடியில் இக்கோவில் உள்ளதால், “சத்ரவட நரசிம்மர்” என்றழைக்கப்படுகிறார். சத்ர என்றால் குடை, வட என்றால் ஆலயம், குடை போன்ற ஆலயத்தின்கீழ் வீற்றிருக்கும் நரசிம்மர் என்றாகிறது.ஆலமரத்தடியில் கோயில் கொண்டிருப்பதாகவும் கொண்டு, இவர் ஆலமர நரசிம்மர், அதாவது, சத்ரவடநரசிம்மர் என்றும் இந்த ஆலமரமே ஒரு குடைபோல கோயில் விமானத்தைக்காக்கிறது என்றும் சொல்கிறார்கள். ஆனால், இப்பொழுது அம்மரம் இல்லை. முதலில் ஆறு கால் மண்டபம் எதிர்ப்படுகிறது. அதன் தூண்களில் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மரின் அழகியசிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறையில் சத்ரவட நரசிம்மர் அரியவகை கருப்புநிறக் கல்லில் உருவானவராகக் காட்சியளிக்கிறார்.

Chatravata Narasimha temple- two Ganharvas

இரு கந்தர்வர்கள் பாடி நரசிம்மரின் கோபத்தைத் தனித்தது: இங்கு சங்கு, சக்கர, அபய ஹஸ்தம், இடது கை இடது தொடையில் என்று நான்கு கைகளுடன் நரசிம்மர் காட்சியளிக்கிறார். முன்பு அடர்ந்த காட்டில் இருந்துள்ளது. பிறகு வீடுகள் வந்த பின்னரும் அவ்வாறே செடி-கொடிகள் சூழ்ந்த நிலையில் இருந்துள்ளது. இக்கோவிலை இப்பொழுது புதுப்பித்துக் கட்டியுள்ளார்கள். இந்த நரசிம்மர் இசையில் விருப்பம் உள்ளவர்களுக்கு உதவுகின்றவராக இருக்கின்றார். இசையில் சிறந்தவர்கள், திடீரென்று குரல்வளம் இழக்கும் போது, இவரிடம் வந்து வேண்டிக் கொண்டால், குரல்வளம் மீண்டும் பெறலாம் என்ற நம்பிக்கையுள்ளது. அதாவது, முன்னர் கந்தர்வர்கள் இருவர் நரசிம்மர் கோபம் தனிய அங்கு வந்து பாடியபோது, நரசிம்மர் மகிழ்ந்து, கோபம் தனிந்த நிலையில் உட்கார்ந்தாராம். கோயில் விமானத்தில் லக்ஷ்மி நரசிம்மரையும், கருடாழ்வாரையும் தரிசிக்கலாம்.‘ஆஹா’, ‘ஊஹு’ என்ற இரு கந்தர்வர்கள் நரசிம்மரைத் துதித்து இனிய கானம் இயற்றியதாகவும்,அந்த சங்கீதத்தில் மெய்மறந்து அவர்களைப் பாராட்டவே பெருமாள் இங்கு தோன்றினார் என்றும்சொல்கிறது புராணம், என்றும் சேர்த்து சொல்கிறார்கள்.

Chatravata Narasimha temple- full view

மண்டபத்தின் முழு தோற்றம்.

Chatravata Narasimha temple- darshan

வணங்கும் பக்தர்கள்.

Chatravata Narasimha temple- mulavar - another view

காடுகளில் இருந்த நரசிம்மர் கோவில்களின் தொன்மை நகராக்க முறையால் பாதிக்கப்படுகின்றன: அடர்ந்த காட்டில் இருந்த நரசிம்மர் கோவில்கள் இப்பொழுது, நகராக்கம் என்றதால், சாலைகள் போடப்படுவதால், இவ்வாறு பிரிந்து காணப்படுகின்றன. கூகுள் வரைப்படம் மற்றும் ஆகாயத் தோற்றம் வைத்துப் பார்க்கும் போது, இவையெல்லாம் அடர்ந்த காடுகளில் இருந்திருக்கின்றன. தெரிந்தவர்கள் மட்டும் தான் வழிபட்டு வந்திருக்கிறார்கள். அருகில் இருந்த எரிமலை, படிவுப் பாறைகள் முதலியவை, பழங்குடி மக்களின் எண்னங்களுடன், அவர்களது புராதன கதைகளுடன் பின்னிப் பினைந்திருப்பதை காணலாம். ஜைன-பௌத்தர் காலத்தில், இவ்விடங்களை தங்களது மந்திர-தந்திர-யந்திர வழிபாடு, பிரயோகம் முதலியவற்றிற்கு உபயோகப் படுத்தியிருக்கிறார்கள். பிறகு இடைக்காலத்தில், விஜய நகர, நாயக்க, ரெட்டி அரசர்கள், தளபதிகள் முதலியோர், கொஞ்சம்-கொஞ்சமாக கோவில் கட்டி வழிபட்டனர். வரும் பக்தர்களுக்கும் தங்க மண்டபங்கள் முதலியவற்றைக் கட்டி வைத்தனர். இருப்பினும், முன்னரே குறிப்பிட்டபடி, பழைய வழிபாடு, சம்பிரதாயம், கிரியைகள் மாறாமல் உக்கிர, குரோத / வராஹ, மலோல நரசிம்மர் வழிபாடுகளில் காப்பாற்றப் பட்டு வருகிறது.

Chatravata Narasimha temple- Mulavar

Chatravata Narasimha temple- Sitapati photo

கோவில் முன்பு எப்படி இருந்தது, இப்பொழுது எப்படி மாற்றப்பட்டுள்ளது என்பதை இப்புகைப்படத்திலிருந்து அறிந்து கொள்லலாம்.

Chatravata Narasimha idol - Sitapati photo

நவீனத்துவ சுற்றுலா கொள்கைகளினால், புனிதம் கெட்டு, குற்றங்கள் வளர்கின்றன: சுற்றுலா, நகராக்கம் மற்றும் நவீனப்படுத்தும் முறைகள் தான், இத்தகைய பழமையான வழிபாட்டு ஸ்தலங்களின் தொன்மை, சிறப்பு, உண்மை, முக்கியத்துவம் முதலியவற்றை மாற்றி விடுகிறது. அகழ்வாய்வு மற்றும் தொல்துறை வல்லுனர்களும் புனர்-நிர்மானம், புதுப்பித்தல், பாராமரிப்பு போன்ற வேலைகள் மூலம் அத்தகைய தொன்மையின் உண்மைத் தன்மை மற்றும் சரித்திர ஆதாரங்களை அழித்து வருகின்றனர் எனலாம். இப்பொழுது ஜைன-பௌத்தர்கள் போல, இக்காலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், இப்பகுதிகளில் மறைந்து கொண்டு தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள். இடைக்கால முகமதிய கொள்ளை மற்றும் கோவில் இடிப்பு போன்ற வேலைகளை, இன்றைய அரசியல்வாதிகள், வியாபாரிகள் போன்ற கூட்டங்களால் நிறைவேற்றப் பட்டு வருகின்றன. அக்காலத்தில் வியாபாரிகள்-வணிகர்களும் கோவில்களுக்காக அதிகாமாவே செய்து வந்தனர். ஆனால், இக்கால வியாபாரிகள், கோவில் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டு, கோவில் சொத்தை கொள்ளையடித்து, பக்தர்கள் மூலம் லாபம் சம்பாதித்து வருகின்றனர். கூட்டம் அதிகமாகும் போது, பக்தி குறைகிறது; பக்தர் அல்லாத வேடிக்கைப் பார்க்கும் கூட்டம் சேர்ந்து வரும் போது, பக்தியல்லாத காரியங்கள் நடக்கின்றன. கூட்டத்தோடு, குப்பையும் பெருகுவது போல, குற்றங்களும் அதிகமாகின்றன.

© வேதபிரகாஷ்

21-03-2017

Posted in அகோபில, அகோபிலம், அத்தாட்சி, அரசமரம், அஹோபிலம், கரஞ்ச, கருடன், கருவறை, குன்று, குரோட, குரோத, சத்ரவட, சரித்திர ஆதாரம், சிங்கச் சிற்பங்கள், சிங்கம், செஞ்சு, செஞ்சு லக்ஷ்மி, செஞ்சு லட்சுமி, செஞ்சுலக்ஷ்மி, செஞ்சுலட்சுமி, செப்பனிடுதல், ஜைனம், தொன்மை, நம்பிக்கை, நரசிம்மர், நரசிம்ஹர், பராமரிப்பு, புனர் நிர்மானம், மராமத்து | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அகோபிலம் – ஒன்பது நரசிம்மர்கள் – எப்படி செல்வது, விவரங்கள், தரிசனம் – பாறைகள் நிறைந்த பாதை கொண்ட காட்டில் வீற்றிருக்கின்ற பாவன நரசிம்மர் தரிசனம் (14)

அகோபிலம்ஒன்பது நரசிம்மர்கள்எப்படி செல்வது, விவரங்கள், தரிசனம்பாறைகள் நிறைந்த பாதை கொண்ட காட்டில் வீற்றிருக்கின்ற பாவன நரசிம்மர் தரிசனம் (14)

Pavana Narasimha - temple google location

பாவன நரசிம்மர் கோவில் இருப்பிடத்தைக் காட்டும் கூகுள் படம்.

Pavana Narasimha - temple google

அடர்ந்த காட்டில் உள்ள பாவன நரசிம்மர் கோவில்.

Pavana Narasimha - way has been risky

வண்டி ஏறமுய்டியாமல் நின்றது.

Pavana Narasimha - road entry

தார் ரோடுலிருந்து, காட்டுப் பாதைக்கு செல்லும் வழி – ஆரம்பம். இந்த செக் போஸ்டில், ஆள் யாரும் இல்லை.

Pavana Narasimha - road -second check post

இரண்டாவது செக் போஸ்டிருக்கு எதிராக காணப்படும் தூணின் பகுதி.

பாவன நரசிம்மர் கோவில் இருப்பிடம்: அஹோபில நரசிம்மர் கோவிலுக்கு தென்புறத்தில், கருடாசலத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் (உக்கிர நரசிம்மர் கோவிலிருந்து 6 கி.மீ) பாவனி நதிக்கரையில், அடர்ந்த காட்டில் இக்கோவில் உள்ளது. முன்னர் இக்கோவில் சிறியதாக இருந்தது. இப்பொழுது, கொஞ்சம்-கொஞ்சமாக மாறி வருகிறது. செஞ்சு மக்களுக்கு, இது முக்கியமான வழிபாட்டு ஸ்தலமாக இருக்கிறது. மற்ற மலைஜாதி மக்களும் வந்து வழிபடுகிறார்கள். மொட்டையெடுத்துக் கொள்வது, காது குத்துவது போன்ற சடங்குகளையும் செய்து வருகின்றனர். இதனால், சுற்றிலும் கட்டிடங்கள், கடைகள் என்று முளைத்து வருகின்றன. கோவிலைச் சுற்றி டின் – சீட்டினால் மண்டபம் போன்று கட்டப் பட்டுள்ளது. முன்பிருந்த சிறிய மண்டம், கர்ப்பகிரகம் எல்லாம் கம்பி-கிரில் போட்டு மூடி இருக்கிறார்கள். முன்பக்கம் கொம்புகளினால் வேலி போன்று அமைத்திருக்கிறார்கள். இங்கு கூட்டம் இருப்பதால், வரிசையில் செல்ல வேடியுள்ளது.

Pavana Narasimha - temple entry

கோவிலுக்கு முன்பாக் கொம்புகளினால் போடப் பட்டிருக்கும் வேலி.

Pavana Narasimha - temple -front view

உள்ளே நுழையும் வழி.

Pavana Narasimha - temple -front - vehicles parked

Pavana Narasimha - temple -side view

சுற்றிலும் போடப் பட்டுள்ள தடுப்புகள்.

Pavana Narasimha - temple inside for darshan

கர்ப்பகிருகத்திற்கு செல்லும் வழி.

Pavana Narasimha - temple inside for darshan.door

கர்ப்பகிருகத்தின் முன்பக்கம்.

பாவன நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் வழி: ஜீப்பில் தான் இங்கு செல்ல முடியும். பாதை கரடுமுரடாக, ஏற்ற-இறக்கங்களுடன், பாறைகளுடன் இருக்கின்றது. சாதாரணமாக யாரும் அங்கு வந்து செல்ல முடியாது. முன்பு பல கஷ்டங்களுடன் நடந்து சென்று வந்தார்கள். வழிகாட்டி / கெயிட் இல்லாமல் செல்ல முடியாத நிலை இருந்தது. ஏனெனில், ஏகப்பட்ட ஒற்றையடி பாதைகள் இருந்ததால், வழி தவறி காட்டில் சென்று அலையவும் நேரிடும். “திக்குத் தெரியாத காட்டில்” என்ற அனுபவம் அப்பொழுது ஏற்படும். இப்பொழுது, ஜீப்பில் செல்வதால், கோவிலுக்கு நேரிடையாக செல்ல முடிகிறது. அந்த ஜீப்பை ஓட்டும் டிரைவர்கள், மிகவும் திறமைசாலிகளாக இருக்கின்றனர். உள்ளே நுழையும் இடம் மற்றும் இடையே, இரண்டு இடங்களில் வாகனங்களை பரிசோதிக்கும் இடங்கள் உள்ளன. ஆனால், அங்கு யாரும் இல்லை. வாகன ஓட்டியே சென்று, அங்கிருக்கும் ஒரு நோட்டில், வண்டி எண் முதலியவற்றை எழுதி விட்டு வருகிறான். நடுவில் இன்னொரு சோதனை இடம் உள்ளது. ஆனால், கேட்பவர் யாரும் இல்லை. ஏதோ சொல்ல வேண்டுமே என்று சம்பிரதாயத்திற்கு, அங்கிருக்கும் “செக் போஸ்ட்” ஆட்களிடமிருந்து சொல்லி விட்டு வருகிறான். இங்கும் “செக் போஸ்ட்” எதிரில் ஒரு தூணின் பகுதி காணப்படுகிறது. அங்கிருந்து சிறிது தூரத்தில் தான் “பாவன நரசிம்மர்” கோவில் உள்ளது.

Pavana Narasimha - temple -outside-side view

கோவிலின் பின்புறத் தோற்றம்.

ஜீப்பில் செல்பவர்கள் கவகிக்க வேண்டியது: போகும் வழியில் வண்டி பழுதாலும், கேட்பதற்கு யாரும் இல்லாத நிலையுள்ளது. இருப்பினும், அந்த ஜீப்-ஓட்டுனர்களே அவர்களுக்குள் அனுசரித்து, உதவி செய்து கொண்டு ஓட்டி வருகிறார்கள். ஜீப் நின்று விடுவது, உயரம் ஏறுவதற்கு அவஸ்தைப் படுவது, பக்தர்களை இறக்கி விட்டு, ஏற முயற்சிப்பது, பக்தர்களை விட்டே வண்டியைத் தள்ள வைப்பது போன்ற காட்சிகளை தாராளமாகப் பார்க்கலாம். நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள், இடுப்பு வலி, மூட்டு வலி உள்ளவர்கள், பருமனாக உள்ளவர்கள், ஜீப்பில் செல்லும் போது அவதிக்கு உள்ளாக வேண்டியிருக்கும். சாப்பிட்டு விட்டு, உடனடியாகவும், வண்டியில் ஏறி இங்கு வர முயல வேண்டாம். ஏனென்றால், அவர்களுக்கு வாந்தி வர நேரிடும். குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்கு ஜாலியாக இருக்கும்.

Pavana Narasimha - temple -Chaitanya

கோவிலின் முந்தைய தோற்றம் – சுற்றியுள்ள வேலி, கடைகள், தகடு-மண்டபம், ஜீப்புகள் எதுவுமே இல்லாத நிலை.

Pavana Narasimha - temple - Garuda -in front-Chaitanya

கோவிலுக்கு முன்னால் இருந்த கருடன் சிலை.

Pavana Narasimha - temple - Garuda -old view-Chaitanya

கோவிலின் முந்தைய தோற்றம் – முன் பக்கம்.

Pavana Narasimha - temple - Garuda -old view side--Chaitanya

 கோவிலின் முந்தைய தோற்றம் –  இடது பக்க  நுழைவு வாயில்.

Pavana Narasimha - temple - Garba gruha--Chaitanya

கர்ப்பகிருக நுழைவு வாயில்.

Pavana Narasimha - temple - Garba gruha-narasinha and Krishna-Chaitanya

உள்ளேயிருக்கும் நரசிம்மர் மற்றும் வேணுகோபாலன் விக்கிரங்கள்.

Pavana Narasimha - temple - Garba gruha-idol

உள்ளேயிருக்கும் நரசிம்மர் மற்றும் வேணுகோபாலன் விக்கிரங்கள். அலங்கரித்துள்ள நிலையில்.

Pavana Narasimha - temple - Garba gruha-Gopala Krishna-Chaitanya

பாமுலேடி நரசிம்ம ஸ்வாமி கோவில் – செஞ்சுகுலப் பெண்னை மணந்து கொண்டு வீற்றிருக்கும் நிலையைக் காட்டும் விக்கிரகம்-கோவில்: கோவிலுக்கு முன்னால் ஒரு தூணும் / கம்பமும், கருடர் விக்கிரமும் இருக்கின்றன. பாவன நரசிம்மர் கோவில், “பாமுலேடி நரசிம்ம ஸ்வாமி கோவில்” என்று உள்ளூர்வாசிகளால் அழைக்கப்படுகிறது. அதாவது, பாம்பை தலைமீது கொண்டவர், என்ற பொருளில் சொல்கின்றனர். தலையின் கிரீடத்திற்கு அருகில் ஏழுதலை நாகம் வடிக்கப்பட்டிருப்பதை காணலாம். முன்னர் நாக வழிபாடு இங்கிருந்ததை அறியலாம். நான்கு கைகளுடன் லக்ஷ்மியுடன் காணப்படுகிறார். செஞ்சுலக்ஷ்மி வேடுவ குலத்தைச் சேர்ந்தவர், இங்கு வந்து நரசிம்மர் திருமணம் செய்துகொண்டதால் வேடுவ குலத்தினர் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் இங்கு வந்து கோழி, ஆடு போன்றவற்றை பலி கொடுத்து விழா கொண்டாடுகிறார்கள். மாசி மாதம் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது செஞ்சு மக்கள் / வேடுவகுலத்தினர் சீர் வரிசை செய்து, களிப்புடன் கொண்டாடி பகவானை தரிசனம் செய்கிறார்கள்.  இரவில் இங்கு யாரும் தங்குவதில்லை, ஏனெனில், தேவதைகள் வந்து வழிபடுவதாக சொல்லப் படுகிறது.

Pavana Narasimha - temple -old photo

1970களில் காணப்பட்ட தோற்றம் – திரு சீதாபதி புத்தகத்திலிருந்து.

Pavana Narasimha - Vigraha -old photo

1970களில் காணப்பட்ட  மூலவரின் தோற்றம் – திரு சீதாபதி புத்தகத்திலிருந்து.

பாவன நரசிம்மரின் முக்கியத்துவம், மகத்துவம்: பாவனி நதிக்கரையில் அமைந்திருப்பதால், “பாவன நரசிம்மர்” என்றழைக்கப்படுகிறார். திருவடியை மடக்கி, வலது திருவடியைத் தொங்கவிட்டு சுக ஆசனத்தில் காட்சியளிக்கிறார். தாயாரின் மலர்ப் பாதங்களை, ஒரு தாமரை மலர் தாங்கி மகிழ்கிறது. நரசிம்மருக்கு இடது புறத்தில் வேணுகோபாலனின் (குழலூதும் கண்ணன்) விக்கிரகம் உள்ளது. இருக்கும் நரசிம்மர்களில் அமைதியான கோலத்தில் இருக்கும் விக்கிரகம் இதுதான். இது, “ரத்ன க்ஷேத்திரம்”, அதாவது உயர்ந்த மற்றும் முக்கியமான கோவிலாகக் கருதப் படுகிறது. இங்கு வந்து வழிபட்டால், பக்தர்களின் அறிந்தும்-அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் போய், முக்தி கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.

© வேதபிரகாஷ்

21-03-2017

Posted in அகோபில, அகோபிலம், அஹோபிலம், உக்கிரம், ஏழுதலை நாகம், கருடன், கருவறை, கொடி கம்பம், கோவில், சனி, சர்ப்பம், சிங்கம், செஞ்சு, செஞ்சு லக்ஷ்மி, செஞ்சு லட்சுமி, செஞ்சுலக்ஷ்மி, செஞ்சுலட்சுமி, ஜுவாலா, ஜுவாலா நரசிம்மர், தரிசனம், நம்பிக்கை, நரசிம்மர், நரசிம்ஹர், நாக தோசம், நாக வழிபாடு, பலி, பலிபீடம், பாமுலேடி, பாமுலேடி நரசிம்மர் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அகோபிலம் – ஒன்பது நரசிம்மர்கள் – எப்படி செல்வது, விவரங்கள், தரிசனம் – சிறு குன்றின் மீது, காட்டில் வீற்றிருக்கின்ற பார்கவ நரசிம்மர் தரிசனம் (14)

அகோபிலம்ஒன்பது நரசிம்மர்கள்எப்படி செல்வது, விவரங்கள், தரிசனம்சிறு குன்றின் மீது, காட்டில் வீற்றிருக்கின்ற பார்கவ நரசிம்மர் தரிசனம் (14)

குன்றின் மீதுள்ள பார்கவ நரசிம்மர்: கீழ் அஹோபில கோவிலுக்கு எதிரில் 2 கி.மீ தூரத்தில் நெல்லமல்ல காட்டில், சிறு குன்றின் மீது இக்கோவில் அமைந்துள்ளதுமுன்பு, இக்குன்று வரை நடந்தே வந்தார்கள். இப்பொழுது ஜீப் வசதி இருக்கிறது. இருப்பினும் பதை, மேடும் பள்ளமாக, செம்மண் சாலையாகத் தான் காணப்படுகிறது. மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக இருக்கிறது. . ஜீப்பில் கீழ் வரை கொண்டு விட்டு விடுகிறார்கள். பிறகு, ஒரு கிமீ தூரம் மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும். இயற்கை சூழ்நிலையில் மரங்களுடன் மலைப்பாதை பாறைகளுடன் அழகாக இருக்கின்றது. இடையில், நாக சிற்பங்களுக்கு சிலர் வழிபாடு செய்து பூஜித்ததையும் காணலாம். இப்பாதை ஏறுவதற்கு சுலபமாக இருக்கிறது. ஒரு கி.மீ கடந்ததும், வலது பக்கத்தில் கோவிலின் படிகட்டுகள் தெரிகின்றன. இப்பகுதி சமாக காணப்படுகிறது. 130 படிகட்டுகள் ஏறி கோவிலுக்கு செல்ல வேண்டும். ஏறும் இடத்திற்கு, இடது பக்கத்தில், அக்ஷயதீர்த்தம் என்ற குளம் உள்ளது. குளத்தில் தாமரைப் பூக்கள் மலர்ந்திருக்கின்றன. முன்பு, குளம், மலைப் பாதை முதலியன பழைய தோற்றத்தில் இயற்கையாக இருந்தன. இப்பொழுது, புதுப்பித்திருக்கிறார்கள். இதனால், நவீனத் தோற்றத்துடன் காணப்படுகின்றன.

Bharhava Narasimha temple- down hillock

ஜீப்பில் கீழ் வரை கொண்டு விட்டு விடுகிறார்கள்.

Bharhava Narasimha temple- down hillock-way to up

பிறகு, ஒரு கிமீ தூரம் மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும். இயற்கை சூழ்நிலையில் மரங்களுடன் மலைப்பாதை பாறைகளுடன் அழகாக இருக்கின்றது.

Bharhava Narasimha temple- rough way going up

இயற்கை சூழ்நிலையில் மரங்களுடன் மலைப்பாதை பாறைகளுடன் அழகாக இருக்கின்றது.

Bharhava Narasimha temple- on the way people worship Nagas

இடையில், நாக சிற்பங்களுக்கு சிலர் வழிபாடு செய்து பூஜித்ததையும் காணலாம்.

Bharhava Narasimha temple- nearing steps

ஒரு கி.மீ கடந்ததும், வலது பக்கத்தில் கோவிலின் படிகட்டுகள் தெரிகின்றன. இப்பகுதி சமாக காணப்படுகிறது.

Bharhava Narasimha temple- the Akshya tirth on LHS

ஏறும் இடத்திற்கு, இடது பக்கத்தில், அக்ஷயதீர்த்தம் என்ற குளம் உள்ளது (இப்பொழுதைய ஜனவரி – 2017 தோற்றம்).

Bharhava Narasimha temple- the Akshya tirth on LHS. years back

அக்ஷய தீர்த்தம் 25 ஆண்டுகளுக்கு முந்தைய தோற்றம்.

Bharhava Narasimha temple- steps to top

கோவிலின் விவரங்கள்: மேலேயுள்ள கோவிலும் புதிப்புத்துக் கட்டியுள்ளார்கள். முன்னர், முன்புறம் மண்டம் இல்லை. இப்பொழுது மண்டம் கட்டியுள்ளார்கள். இங்குள்ள நரசிம்மர் நான்கு கைகளுடன் காணப்படுகிறார்.  மேல் கரங்களில் சங்கும், சக்கரமும் ஆரோகணிக்க, கீழ்க் கரங்களால் ஹிரண்யனைத் தன் மடியில் கிடத்தி அவனை வதம் செய்யும் தோரணையில் வீற்றிருக்கிறார். தனிச்சந்நதியில் ராமானுஜரும் பக்தவத்சலப் பெருமாளும் திவ்ய தரிசனம் அருள்கிறார்கள். பக்தவத்சலப்பெருமாள், சங்கு, சக்கரம், பத்மம், கதாயுதம் தாங்கி நாற்கரங்களுடன் திகழ்கிறார். இவருக்குப் பின்னாலும் தசாவதார தோரணத்தைக் காணலாம். பார்கவ ராமர் வந்து வழிபட்டதால், “பார்கவ நரசிம்மர்” என்றழைக்கப்படுகிறார். அதாவது ராமர் என்பதில்லை, அப்பெயர் கொண்டவராக இருக்கலாம். பொதுவாக புராணங்களில், இவ்வாறு எல்லோரும் வந்து வழிப்பட்டனர் என்று எழுதி வைப்பது வழக்கமாக இருக்கிறது. கோவிலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும், மக்கள் அடிக்கடி வந்து செல்ல வேண்டும் என்பதற்காகவும், பாதுகாப்பு நோக்கில் அவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம்.

Bharhava Narasimha temple- nearing temple on the hillock

கோவிலின் தோற்றம்.

Bharhava Narasimha temple- entrance

முன்பக்கத்தில் இருக்கும் மண்டபம்.

Bharhava Narasimha temple- down hillock-backside view

கோவிலின் பின்பக்கத் தோற்றம்.

Bharhava Narasimha temple- down hillock-backside view. RHS

பின்பக்கத்த்லிருந்து மன்டபத்தின் தோற்றம்.

Bharhava Narasimha temple- Vigraha inside

மூலவர் – பார்கவ நரசிம்மர்.

Bharhava Narasimha temple- Vigraha inside- Sitapati book

மூலவர் – பார்கவ நரசிம்மர். திரு சீதாபதியின் புத்தகத்திலிருக்கும் புகைப்படம்.

Bharhava Narasimha temple- fingers just inserted to tear

இவ்விக்கிரத்தில் நரசிம்மர், தனது இரு கைகளையும் நுழைத்த நிலையில் இருப்பதைக் காணலாம். அதாவது, கிழிக்க ஆரம்பிக்கும் முன்னர் இருப்பது போன்ற நிலையில் விக்கிரகம் வடிக்கப் பட்டுள்ளது.

பார்கவ ரிஷிக்கு தரிசனம் கொடுத்த நரசிம்மர்: இன்னொரு கதையின் படி, பார்கவ முனிவர் தனது சாபம் நீங், இங்கு வந்து, அக்ஷய தீர்த்தத்தில் குளித்து, வேண்டியபோது, நரசிம்மர், அவருக்கு இந்நிலையில் காட்சியளித்ததால், “பார்கவ நரசிம்மர்” என்றழைக்கப் படுவதாக சொல்லப்படுகிறது[1]. இவ்விக்கிரத்தில் நரசிம்மர், தனது இரு கைகளையும் நுழைத்த நிலையில் இருப்பதைக் காணலாம். அதாவது, கிழிக்க ஆரம்பிக்கும் முன்னர் இருப்பது போன்ற நிலையில் விக்கிரகம் வடிக்கப் பட்டுள்ளது. அதாவது, இந்த நரசிம்மர் விக்கிரங்களையும் யாரோ அல்லது பலர் சிந்தித்து, பழைய சரித்திர நிகழ்வுகளை படிப்படியாக, விக்கிரங்கள் மூலம் பதிவு கவனிக்கலாம். செய்துள்ளதை முன்னரே குறிப்பிட்டது போல, இக்கோவிலும் இப்பொழுது கட்டப்பட்டது போன்று காணப்படுகிறது. படிகட்டுகளும், பக்தர்களுக்கு உதவியாக இப்பொழுது கட்டப்பட்டுள்ளது.  இக்கோவிலுக்குச் செல்லும் பாதையை, இந்த வீடியோ படம் பிடித்துக் காட்டுகிறது[2].

© வேதபிரகாஷ்

20-03-2017

Bharhava Narasimha temple- getting down

[1]  இந்த வீடியோவில் முழு விவரங்களைக் காணலாம் – https://www.youtube.com/watch?v=GQYilVSQZSY

[2] https://www.youtube.com/watch?v=TUHMXpL-3ow

 

Posted in அகோபில, அகோபிலம், அக்ஷய தீர்த்தம், அழிப்பு, அஹோபிலம், இரண்யகசிபு, எரிமலை, கரஞ்ச, காடு, குன்று, குரோட, குரோத, சத்ரவட, சிங்கம், ஜீயர், ஜுவாலா, ஜுவாலா நரசிம்மர், ஜ்வாலா, தரிசனம், தீக்குழம்பு, தீர்த்தம், நரசிம்மர், நரசிம்ஹர், நாக சிற்பம், நாக தோஷம், நாக பூஜை, நாக வழிபாடு, நாகபூஜை, நாகம், நெல்லமல்ல காடு, படிக்கட்டு, பார்கவ, பார்கவ முனிவர், பார்கவ ராமர், பார்கவ ரிஷி, பிரகலாதன், மலைப்பாதை, மலையேறுதல் | Tagged , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அகோபிலம் – ஒன்பது நரசிம்மர்கள் – எப்படி செல்வது, விவரங்கள், தரிசனம் – ஐந்தாவது உக்கிர ஸ்தம்பம் – நரசிம்மர் தோன்றிய இடம் புவியியல், கனிமவியல், மானுடவியல், ரீதியின் மதிப்புகளை தெய்வீக அடையாளங்களாக மாறியது (13)

அகோபிலம்ஒன்பது நரசிம்மர்கள்எப்படி செல்வது, விவரங்கள், தரிசனம்ஐந்தாவது உக்கிர ஸ்தம்பம்நரசிம்மர்  தோன்றிய இடம் புவியியல், கனிமவியல், மானுடவியல், ரீதியின் மதிப்புகளை தெய்வீக அடையாளங்களாக மாறியது (13)

Ahobilam treadure hunt - Deccan Herald - 16-07-2011

அஹோபிலத்தில் புதையல் தேடல்: திருவனந்தபுரம், ஶ்ரீ பத்மநாப ஸ்வாமி கோவிலின், ரகசிய அறையில், கோடிக்கணக்கான மதிப்பில் தங்க கிடைத்தது என்றதும், ஜூலை 2011லிருந்து அஹோபிலத்தில், பலவிடங்களில் புதையலைத் தேடி தோண்ட ஆரம்பித்து விட்டார்கள். கிருஷ்ணதேவராயர் காலத்தைய கல்வெட்டுகள் மற்றும் ஓலைச்சுவடிகளில் புதையல் பற்றிய ரகசியங்கள் இருக்கின்றன. துலுக்கர்கள் கொள்ளையெடிக்க வந்தபோது, கோவிலில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை குகைகளில் மற்றும் குழி தோண்டி புதைத்து வைப்பது, குளம், கிணறு போன்றவற்றில் போட்டு வைப்பது என்பது வழக்கம், கடந்த 30 ஆண்டுகளாக அத்தகைய வேலைகள், அஹோபிலத்தில் அதாவது, புதையலை எப்படியாவது கொள்ளையடிக்க வேண்டும் – நடைப்பெற்று வருகின்றன. இதனால், பழைய குகைகள், துவாரங்கள், குழிகள், மண்டபங்கள், குளங்கள் என்று எதையும் விட்டு வைக்காமல், நுழைந்து, தூர்வாரி, சலித்து தேடி வருகின்றனர். கோவிலுக்கு சொந்தமான இடம், முதலியவற்றை ஆக்கிரமிப்பில் இதுவும் குக்கிய கரணமாக இருக்கிறது. கட்டிடம் கட்ட “கடைக்கால்” தோண்டும் சாக்கில் “தேடல்” நடக்கின்றன.

Ahobilam - diamond prospecting in Nallamalla forests

புதையல் தேடுபவர்களுக்கு ஏதோ ஒரு சக்தி தண்டனை கொடுக்கிறாதாம்: 20 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு அகழ்வாய்வு பேராசிரியர், பள்ளம் நோண்டினாராம். அப்பொழுது, விஷவாயு வெளிப்பட்டதால், மூச்சடைத்து இறந்து போனார் என்று, தன்னை அடையாளம் காட்ட விரும்பாத, புரோகிதர் கூறினார்[1]. அதே போல, டீ கடை வைத்திருக்கும் பெஞ்சலய்யா, ஒரு இஞ்சினியர் அது போல முயன்றபோது, இயலாமல் போய்விட்டதுடன், அந்த ஆளும் இறந்து விட்டார், என்கிறார். முந்தைய முதலமைச்சர் மர்ரி சென்னா ரெட்டி கூட அத்தகைய காரியங்களில் ஈடுபட்டார், ஆனால், ஏதோ மர்மமான காரணங்களுக்காக விட்டுவிட்டார்[2]. பிறகு யாரும் அத்தகைய காரியங்களில் ஈடுபடுவதில்லை என்கிறார்கள். அதாவது, கண்ணுக்குத் தெரியாத, ஏதோ ஒரு சக்தி அவ்விடத்தில் இருக்கிறது என்றும், அதுதான், அவ்வாறான செயல்களைச் செய்தவர்களின் உயிரை பலியாகக் கொள்கிறது, இழப்பை ஏற்படுத்துகிறது, மீளாத துக்கத்தைக் கொடுக்கிறது என்று அறிந்து ஒதுங்கி விடுகிறார்கள் என்கிறார்கள்.

Ahobilam -diamond hunting at Nallamalla

அஹோபிலத்தில் வைரங்கள் கிடைக்கலாம்: அஹோபிலத்தின் படிவுப்பாறைகள் ஆங்கிலேயர்களை ஈர்த்துள்ளது. கோவில் அருகில் உள்ள நல்லமல்ல பகுதிகளில் உள்ள படிவுகளை வேண்டிய அளவுகளில் உடைத்தெடுக்கலாம், அவ்வாறே செய்யப்படுகிறது என்று கடபா கெசட்டியரில் குறிப்பிட்டுள்ளார்கள்[3]. இப்பொழுது இப்பகுதிகளில் வைரம் கிடைக்க வாய்ப்புள்ளது என்றெல்லாம் விஞ்ஞான ரீதியில் கட்டுரைகள் / செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன[4]. அதாவது பலகோடி ஆண்டுகளுக்கு முன்னர், பாறைக் குழம்பு, பலகைகளாக பரந்து, இருகி விட்டதால், அழுத்தத்தினால், சில படிவுகளில் கனிமங்கள் விலையுயர்ந்த கற்களாக மாறியிருக்கலாம்[5]. அதனால், விஞ்ஞான முறைப்படித் தேடிப் பார்த்தால்[6], அதாவது செயற்கைக் கோள் புகைப்படங்கள், அஹோபிலமலை மற்றும் பள்ளத்தாக்குகளின் புவியமைப்பு முதலியவற்றை கருவிகளைக் கொண்டு ஆராய்ந்தால், அத்தகைய கனிம வளத்தைக் கண்டு இடிக்கலாம் என்று ஆராய்ச்சியாளகள் எடுத்து காட்டியுள்ளனர்[7]. இதனால், “டிரெக்கிங்” வரும் கூட்டத்தினரில் யார் சாமி கும்பிட வருகிறார்கள் அல்லது புதையல் வேட்டைக்கு வருகிறார்கள் அல்லது வைரங்களைத் தேடி வருகிறார்கள் என்று சொல்லமுடியாது.

Ahobilam - Ukkira sthambam top

உக்கிர ஸ்தம்பத்தின் மேலே: மேல் அஹோபிலத்தில், இது ஒரு குன்றின் உச்சியில் உள்ளது. இதன் மீது ஏறுவது கடினம். இயற்கையான மலைமீது ஏறுவதைப் போல, கை-கால்களின் உதவியுடன் ஜாக்கிரதையாக ஏற வேண்டியுள்ளது. இளைஞர்கள் உற்சாகத்துடன், சாகசத்துடன் ஏறுகிறார்கள். அங்கிருக்கும் பாதங்களை பார்க்கிறார்கள். தரிசிக்கிறார்கள், வணங்குகிறார்கள். ஏறுவதற்கே கஷ்டமாக இருக்கும் நிலையில், எடையுள்ள, பாரமான அந்த கற்பாதங்களை, யார், மேலே தூக்கிச் சென்று வைத்தார்கள் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும். இப்பொழுது, இரும்பு ஏணி வைத்திருக்கிறார்கள். ஆனால், அப்பாதங்களோ பலகாலமாக இருந்து வருகிறது. மேலே சென்று சுற்றிப் பார்த்தால், இயற்கையின் பேரழகைக் காண முடியும். இறைவனின் படைப்பை, ஏன் அவனது “இருக்கும் தன்மையினை”க் கூட உணற முடியும். அதனால் தான், ரிஷி-முனி-யோகிகள் அத்தகைய தனிமையான இடங்களைத் தேர்ந்தெடுத்தனர் போலும்.

Ahobilam - Ukkira sthambam top and below

உக்கிர ஸ்தம்பம் – அருகிலான தோற்றம் – மேல் மற்றும் கீழ். கீழேயுள்ள பாலத்தைக் காணலாம்.

Ahobilam - Ukkira sthambam top portion

இதோ உக்கிர ஸ்தம்பத்தை நெருங்கி விட்டோம்.

Ahobilam - Ukkira sthambam top and the padam

உக்கிர ஸ்தம்பம் – ஶ்ரீ நரசிம்மரின் பாதம்.

Ahobilam - Narasimha feet

ஶ்ரீ நரசிம்ம்ரின் பாதம் – அதாவது அவதாரம் எடுத்த பிறகு, இங்குதான் கால் வைத்து, கீழே இறங்கினார் என்பதற்கான அடையாளம்.

புவியியல், கனிமவியல், மானுடவியல், ரீதியின் மதிப்புகளை தெய்வீக அடையாளங்களாக மாறியது: “மீஸோ-புரோடெரோஸாயிக் பாலியோ-சப்டக்‌ஷன்” நிகழ்வை பார்க்கும் பொழுது [Mesoproterozoic paleosubduction scenario], அதன் மூலம் ஏற்படும் “கிம்பர்லைட் மற்றும் / அல்லது லாம்பரோயட் உள்-நுழைவுகள்” [subsequent kimberlite and/or lamproite intrusions] மூலம் வைரம் உண்டாகக் கூடிய சாத்திய கூற்று பற்றி விவாதிக்கப் பட்ட ஆய்வுக் கட்டுரை மூலம், அஹோபிலத்தின் புராதனத் தன்மை மற்றும் விலையுயர்ந்த மதிப்பு அறியப்பட்டன[8]. வியாபார ரீதியில் அவ்வாறு பார்க்கலாம். புவியியல் மாறுதல் நிகழ்வுகளை மானுடவியல் வளர்ச்சி ரீதியில் கவனிக்கும் போது, பாறை அமைப்பைப் பார்க்கும் போது, ஒன்று ஆரம்பகாலத்தில், அத்தகைய குழம்பு வெப்பம் நீங்கிய பிறகு இறுகி படிவுப்பாறைகளாக ஆகியிருக்க வேண்டும் அல்லது எரிமலை இருந்து பொங்கி, அக்குழம்பினால், அவ்வாறான படிவுபாறைகள் உண்டாகியிருக்க வேண்டும் எனலாம். எப்படியிருந்தாலும்,

 1. எரிகுழம்பு பொங்கியெழுந்ததை, அக்கால மக்கள் உக்கிரதெய்வமாக பார்த்திருக்க வேண்டும்.
 2. எரித்தணல்-குழம்போடு ஓடியதை கோபம் கொண்ட ஜுவாலா தெய்வமாகக் கொண்டு,
 3. பூமி ஓரளவிற்கு நீரினால் மூட்டியதை அல்லது கடலிலிருந்து வெளிவந்தை குரோட—வரகமாகக் கொண்டு,
 4. நீரில் தணிந்ததை, மலோல-சௌம்மியகாக பாவித்து,
 5. அமைதியாக உட்கார்ந்ததை அஹோபில்லமாகக் கொண்டிருக்கலாம்.

Volcanic fluid settling down

எரிமலை வெடித்து, தீக்குழம்பு / பாறைக்குழம்பு வெளியேறி ஆறு போல ஓடி, படிப்படியாக குளிர்ந்து, படிவுப் பாறைகளாக இருகி, மாறிய நிலை தான், ஶ்ரீ நரசிம்மரின் உக்கிர அவதாரத்தைக் காட்டுகிறது.

upper-ahobilam-prahalada-padi-school-distant-view

ஆக இவரது உக்கிரத்தைத் தணிக்க பிரகலாதன் வந்தான். அவனது படித்த இடமும் புவியியல் ரீதியில் தான் அமைந்துள்ளது.

upper-ahobilam-prahalada-padi-school

உக்கிர, ஜ்வால, குரோட, மலோல, அஹோபில என்று வரிசையாக வைத்தால் உண்டாகும் சரித்திரம்: மாறாக, அவ்விடத்தில், ஹிரண்யகசிபுவின் கோட்டை, அரண்மனைகளோடு, ஒரு காலத்தில் இருந்து, பூகம்பத்தில் அல்லது புவிஅதிர்வுகளில் ஆடி அடங்கியபோது, மேற்பரப்பு உள்ளே சென்று, உள்பகுதி வெளியே வந்து, புரட்டியெடுத்து, ஒருவழியாக அடங்கிய போது, தப்பித்த மக்கள் வந்து பார்த்தபோது, கட்டிடங்கள் ஒன்றும் இல்லாமல், சில எச்சங்கள் இருந்ததைக் கண்டு, அவற்றின் இருப்பிடங்களை ஞாபகமாகக் கொண்டு, அடையாளம் காணும்போது,

 1. இங்குதான் அரண்மனை இருந்தது,
 2. பிரகலாதன் படித்த பள்ளி / குருகுலம் இருந்தது,
 3. இங்குதான் தூண் இருந்தது.
 4. அந்த தூணிலிருந்து தான், நரசிம்மர் வெளிப்பட்டார்.
 5. ஓடி இரண்யகசிபுவைப் பிடித்தார்,
 6. மடியில் வைத்து, வயிற்றைக் கிழித்து, குடலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொண்டார்.
 7. கைகளில் படிந்த ரத்தத்தை, அருகில் இருந்த குளத்தில் கழுவிக் கொண்டார்.
 8. லக்ஷ்மி துதித்ததால், கொஞ்சம் கோபம் அடங்கினார்.
 9. பிரகலாதன் துதித்ததால், முழு கோபம் தணிந்தார்.
 10. தேவியுடன் உட்கார்ர்ந்து கொண்டார்.

என்றெல்லாம் அடையாளம் கொண்டு மக்கள் வாழ்ந்திருக்கலாம். ஆக செஞ்சு மக்களுடன், இடைக்கால பக்தர்களுடன் பின்னிப் பிணைந்துள்ள, இவ்விவரங்கள், புராணங்களில் பொதிந்துள்ள சரித்திரமாக அடையாளம் கொள்ள்ளலஅம்ம், விளக்கலாம்.

© வேதபிரகாஷ்

20-03-2017

Ahobilam -diamonds at Nallamalla area - Deccan Herald - 16-07-2011

[1] Deccan Herald, Treasure hunt begins in Andhra temples, Hyderabad, July 16, DHNS: Last updated: 16 July, 2011.

[2] Some people say former chief minister of Andhra Pradesh Marri Chenna Reddy also got some secret survey done in and around the temple to find out the treasure, but for some mysterious reasons he withdrew from that task. Subsequently no attempts were made by anyone to find the treasure.

http://www.deccanherald.com/content/176929/treasure-hunt-begins-andhra-temples.html

[3] The British noted the importance of the rock formation at Ahobilam, “The best slates, or such as seem capable of being split into slabs of any moderate size and tenuity, are near the upper Ahobilam temple in the Nallamalais. Again, large slabby slates are quarried to some little extent on the eastern flanks of these mountains at about the parallel of Badvel”.

 1. F. Brackenbury, Madras District Gazetteers – Cuddapah, Vol.I, The Superintendent, Government Press, Madras, 1915, p.19.

[4] http://www.deccanchronicle.com/130816/news-current-affairs/article/study-finds-new-diamond-mines

http://bharatkalyan97.blogspot.in/2013/08/diamond-prospecting-in-nallamalla-hills.html

[5] http://www.livescience.com/38864-diamonds-beneath-india.html

[6] Sharma, Subrata Das, and Durbha Sai Ramesh. “Imaging mantle lithosphere for diamond prospecting in southeast India.” Lithosphere 5.4 (2013): 331-342.

[7] http://www.microfinancemonitor.com/2013/08/16/new-diamond-hope-for-seemandhra-in-nallamala-forests/

[8] The diamond formation potential of the area is discussed in light of a working model that incorporates the Mesoproterozoic paleosubduction scenario (ca. 1.6 Ma event) and subsequent kimberlite and/or lamproite intrusions.

Sharma, Subrata Das, and Durbha Sai Ramesh. “Imaging mantle lithosphere for diamond prospecting in southeast India.” Lithosphere 5.4 (2013): 331-342.

Posted in அகோபில, அகோபிலம், அடில் ஷா, அஹோபிலம், ஆகாயம், உக்கிரம், எரிமலை, எரிமலைக் குழம்பு, கரஞ்ச, குன்று, குரோட, குரோத, சத்ரவட, சிங்கச் சிற்பங்கள், ஜுவாலா, ஜுவாலா நரசிம்மர், தீ, தீக்கனல், தீக்குழம்பு, தீயாறு, பாறைக் குழம்பு, புதையல், புதையல் வேட்டை, புவியியல், பூகோளவியல், மனித தோற்றம், மனிதன், மானுடவியல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக