துக்காச்சி சிவன் கோவில் சிதிலமடைந்து கிடப்பதேன், சோழர்கால கோவில்கள் துக்ககரமான நிலையில் இருப்பதேன், துலுக்கர் மனோபாவம் தொடர்வதேன்? எல்லை தெய்வம் நரசிம்மர் தாக்கப் படுவதேன் ? (2)

துக்காச்சி சிவன் கோவில் சிதிலமடைந்து கிடப்பதேன், சோழர்கால கோவில்கள் துக்ககரமான நிலையில் இருப்பதேன், துலுக்கர் மனோபாவம் தொடர்வதேன்? எல்லை தெய்வம் நரசிம்மர் தாக்கப் படுவதேன் ? (2)

எல்லை தெய்வமாக நரசிம்மர்: எல்லை தெய்வங்களாக சில பகுதிகளில் நரசிம்மர் அதிகமாகவே இருந்து, கிராமப் புற மக்கள் வழிபட்டு வந்தனர். குறிப்பாக விவசாயிகளுக்கு காவல் தெய்வமாக இருந்தார். உக்கிரமான தேவதை / கடவுள் என்று கருதப் பட்டாலும், காக்கும் கடவுளாக / காவல் தெய்வமாக வழிபடப் பட்டார். இதனை ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகப் பகுதிகளில் காணலாம்[1]. அஹோபிலத்தை வைத்து கவனிக்கும் போது, நரசிம்மர் ஒரு காட்டுவாசிகளின் இஷ்ட / குல தெய்வமாக இருந்து, வைணவர்கள்ன் முக்கிய தெய்வமாக மாறியுள்ளதை கவனிக்கலாம்[2]. இரண்யனுக்கு அஞ்சி வேறு பகுதிகளில் ஒளிந்து வாழ்ந்த முனிவர்கள், இரண்ய வதத்திற்குப்பின் பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று வேண்டினர். முதலில் பொது தெய்வமாக இருந்து, வைணவத் தெய்வமாகி, மத்வப் பிரிவு நம்பிக்கையாளர்களுக்கு இஷ்ட / குல தெய்வமாக மாறியுள்ளார். அதற்கிசைந்த பெருமாள் அவ்வண்ணமே முனிவர்களுக்குக் காட்சி தந்தார். இதனால், அந்த வைணவ தெய்வம் சிவனால் அடக்கப் பட்டது என்பது போல, சரபேஸ்வரர் உருவாகப் பட்டார். ஆனால், சரபேஸ்வரர் நரசிம்மர் போல பிரசித்திப் பெறவில்லை, தனிக்கோவில்களிலும் வழிபடப்படவில்லை.  

தென்னகத்தில் நரசிம்மர் வழிபாடு அதிகமாக இருந்ததற்குச் சான்றுகள்: கல்யாண்கீதா என்பவர் எவ்வாறு நரசிம்மர் கோவில்கள் தென்னகத்தில், குறிப்பாக ஆந்திரம், கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, தமிழகம், கேரளா மாநிலங்களில் அதிகமாக உள்ளன என்பதனை எடுத்துக் காட்டியுள்ளார்[3]. மேலும் கூகுள் மேப் மூலம் சுமார் 800 நரசிம்மர் கோவில்கள் அடர்த்தியாக உள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளார்[4].  விஞ்ஞான ரீதியில் கவனித்தால், இத்தத்துவத்தில் தொன்மை பதிந்திருப்பதை கவனிக்கலாம். உக்கிரமான கடவுள் எல்லைகளை, வயல்களை, பயிர்களை, கிராமங்களை, வீடுகளை காக்கும் என்ற நம்பிக்கையில் அவை நிறுவப் பட்டன, கோவில்களும் கட்டப் பட்டன, ஆனால், உண்மையினை அறிந்து, சரித்திரத்தைப் புரிந்து கொள்ளாமல், சைவ-வைணவ மோதல்களில் சிக்க வைப்பது அறிவீனம் ஆகும்.

நரசிம்மர் வழிபாட்டிற்கான இலக்கியச் சான்றுகள்: இரணியன்-பிரகலாதன் வரலாற்றைப் கடுவன் இளவெயினனார் என்னும் புலவர் பரிபாடல் 4 -ஆவது பாடலின் 10 முதல் 21 வரையுள்ள வரிகளில் தெரிவிக்கிறார். அதனால் சங்க இலக்கிய காலத்திலேயே நரசிம்மர் வழிபாடு தமிழகத்தில் இருந்துள்ளது. நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர். திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், “இரணியன் பட்ட தெம்மிறை எய்தினான்’ என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார். அத்வைதியான ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார் என்னும் வரலாறும் உண்டு. ஆதிசங்கரர் ஒரு தீ விபத்தில் சிக்கி, அவரது கரம் தீயால் பாதிக்கப்பட்ட போது, “லட்சுமி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம்’”என்னும் துதியை இயற்றினார்.

பல்லவ காலத்திலிருந்து நரசிம்ம பக்தி உயர்ந்து வளர்ந்தது: பல்லவ மன்னர்கள் நரசிம்ம அவதாரத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள். சிம்மவர்மன், சிம்மவிஷ்ணு, நரசிம்ம வர்மன், ராஜசிம்மன் போன்ற பெயர்கள் அவர்களின் சிம்மாவதாரத்தின் மீதான பக்தியைக் காட்டும். தொண்டை மண்டலத்தின் பல்லவர்களின் ஆட்சி எல்லை விரிந்திருந்த வரைக்கும் நரசிம்மரின் கோயில்கள் இருந்துள்ளன. நரசிம்மரை வணங்கினால் வெற்றி, புகழ், சிறப்பு, துன்ப நீக்கம், அளவற்ற நற்பலன்கள், பாவ நீக்கம் ஆகியவை உடனே கிடைக்கும். இதனால், சோழர்களும் தங்களது வீரத்திற்காக நரசிம்மர் வழிபாட்டை ஆதரித்துள்ளனர். பின்னர் வந்த நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில்தான் நரசிம்மர் வழிபாடு தமிழகத்தில் பிரபலமடைந்திருக்கிறது. பல பாகவத மேளாக்களின் மூலம்  பிரஹலாத சரித்திரம் நாட்டிய நாடகமாக தமிழகத்தில் அரங்கேற்றப்பட்டு நரசிம்மர் வழிபாடு கொஞ்சம், கொஞ்சமாக பரவியது.

அஷ்ட / எட்டு நரசிம்மர் கோவில்கள்: அவ்வாறு நரசிம்மர், காட்சி தந்த தலங்கள் தமிழகத்தில் எட்டு இடங்களில் உள்ளன. இவற்றில் பூவரசன் குப்பம் நடுவில் இருக்க, இதைச் சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில் (தென் அகோபிலம்), பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன.

பூவரசன் குப்பம்
 • 1. பூவரசன் குப்பம்: பண்ருட்டியிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சின்னக்கள்ளிப்பட்டு என்ற ஊரிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சிறுவந்தாடு என்ற ஊரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது.
சிங்கிரிக்குடி
 • 2. சிங்கிரிக்குடி: கடலூர்-புதுச்சேரி சாலையில் தவளகுப்பத்தில் இருந்து அபிஷேகபாக்கம் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோவில் இருக்கிறது.
பரிக்கல்
 • 3. பரிக்கல்: சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டைக்கு வடக்கில் இருந்து இந்த ஆலயத்தை அடையலாம். விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் இருக்கிறது இந்தக் கோவில்.
 • 4. சோளிங்கர்: வேலூர் மாவட்டம் அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் இந்த மலைக்கோவில் இருக்கிறது.
 • 5. சிங்கப் பெருமாள் கோவில்: காஞ்சீபுரம் மாவட்ட எல்லைக்குள், தாம்பரம்-செங்கல்பட்டு இடையில் சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக் கோயில் பல்லவர்களின் குடவரையாகும். 10-11 ஆம் நூற்றாண்டு சோழர்களின் கல்வெட்டுகள் நன்கொடை கொடுத்ததைக் குறிக்கின்றன.
 • 6. நாமக்கல்: நாமக்கல் நரசிம்மர் கோயில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகரில் 200 அடி உயரமுள்ள குன்றின்மீது அமைந்துள்ள குடைவரைக் கோயிலாகும்.
 • 7. சிந்தலவாடி: திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் காட்டுப்புத்தூர் அருகில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.
 • 8. அந்திலி: திருக்கோவிலூரில் இருந்து முகையூர் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையில் அரகண்ட நல்லூரை அடுத்திருக்கிறது அந்திலிதிருத்தலம்.

சரபேஸ்வரர் நரசிம்மருக்குக் கூட்டிச் சென்றதால், அதனை விவரிக்க வேண்டியதாயிற்று. இனி துக்காச்சியை, ஆபத்சஹாயேஸ்வரர் – ஆபத்தில் உதவும் ஈஸ்வரரை கவனிப்போம்.

துக்காச்சி கோவில் இடிபாடுகளுடன் காணப்படுவது: கும்பகோணத்துக்கு அருகேயுள்ளது துக்காச்சி கிராமம். இங்குதான் புகழ்மிக்க ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அதன் புராணப் பெருமைகளையும் வரலாற்றுச் சிறப்பினையும் அறியும் அனைவருக்குமே அந்தக் கோயில் ஈசனை தரிசனம் செய்யும் ஆவல் மேலோங்கும். அப்படியான ஆவலுடன் அந்தத் தலத்துக்குச் சென்றாலோ, பெரும் வருத்தமே மிஞ்சும். காரணம், மாமன்னர்கள் பலரும் போற்றிச் சிறப்பித்த அந்தப் பேராலயம் தற்போது பொலிவிழந்து கிடக்கிறது! துக்காச்சி ஆபத்சகாயேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் கும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோயில் வழியாக, அரசலாற்றங்கரைக்கு வடக்கே துக்காச்சி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் (கி.பி. 730-795) பட்டப்பெயரான விடேல் விடுகு என்பதன் அடிப்படையில் துக்காச்சி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

துக்காட்சி பெயரில் தெளிவு இல்லாதத் தன்மை: இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் (கி.பி. 730-795) பட்டப்பெயரான விடேல் விடுகு என்பதன் அடிப்படையில் துர்காச்சி, துக்காச்சி என்று அழைக்கப்பட்டு வருகிறது, என்றதில் தெளிவு இல்லை. சிலர் “துர்கையின் ஆட்சி,” என்பதுதான், துக்காட்சி என்றாகியது என்ற விளக்கமும் சரியானதா என்ற் தெரியவில்லை. மேலும், அங்கு உடைக்கப் பட்டுள்ள சிற்பங்களைப் பற்றி யாரும் விளக்குவதாக இல்லை. அச்சிற்பங்கள் தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் கோவில்களை நினைவூட்டுகின்றன. உடைக்கப் பட்டுள்ள சிற்பங்கள் நிச்சயமாக துலுக்கர்களின் செயல் தான். 1363ல் மாலிக்காபூர், இவ்வழியாக கொள்ளையடித்துச் சென்ற போது[5], இக்கோவிலிலும் சூரையாடி இருப்பான். அதனால் தான், பல சிற்பங்கள் உடைந்த நிலையில் காண்ணப்படுகின்றன. அங்கும்-இங்கும் சிதறிக் கிடந்த சிற்பங்கள், இப்பொழுது, ஒரு கொட்டகையில் வரிசயாக வைத்துள்ளார்கள். எனவே துலுக்கரால் ஆயிற்று என்பது துலுக்காச்சி > துக்காச்சி என்றாயிற்று எனலாம்[6]. கீழ்கண்ட விளக்கத்திலிருந்தும் அறியலாம்.

நிகண்டுகள், அகராதிகள் தொகையகராதிகள் து, துருக்கர், துலுக்கர், துலுக்கிபற்றி சொல்வது[7]: இனி நிகண்டுகள், அகராதிகள் தொகையகராதிகள், இதைப் பற்றி என்ன சொல்கின்றன என்பதனை பார்க்கலாம்[8].

 1. “து” என்றாலே “வெறுப்பு” என்பதால், வெறுப்பை வெளிப்படுத்தும் சொற்களுடன் வருகிறது (துப்பு, துவேசம், துவர்ப்பு, முதலியன).
 2. துக்கம், துச்சம், துணுக்கம் (அச்சம், பயம், திகில், பீதி), துண்ணிடல் (திடுக்கிடல், பயமுருத்தல்),
 3. துத்து (பொய், ஏமாற்றுதல்), துப்பு, தும்பன் (கெட்ட எண்ணம் கொண்டவன்), துயர், துயரம்,
 4. துணக்கம் (திடுக்கிடுதல், பயமடைதல், பீதியடைதல்), துணுங்கர் (தீய காரியங்களால் அத்தகைய நிலையை ஏற்படுத்துபவர்கள்). திருஞானசம்பந்தர் இதனை ஜைனர் மற்றும் பௌத்தர்களுக்கு உபயோகப்படுத்தினார்.
 5. துர (செலுத்து, ஓடி போதல்), துரக்கம் (குதிரை), ரத-கஜ-துருக்க-பதாதி என்பதிலிருந்தும் அறியலாம்.
 6. துருக்கம் (காடு, பாலைவனம், குழப்பம்),
 7. துருக்கு, துலுக்கு (துருக்கி நாடு, துருக்கியர், துருக்கி மொழி, முகமதியர்)
 8. துர் (எதிர்மறை உண்டாக்கும் சொற்களுக்கு முன் வருவது) துர்மார்க்கம், துராச்சாரம், துராசை, துர்க்குணம், துர்புத்தி, துர்மரணம், முதலியன.
 9. துர்க்கம் (கோட்டை)
 10. துலுக்கு (முகமதியன், பாஷை, பேச்சு, ஆட்டுதல், ஆடுதல், தலையை-உடலை ஆட்டிக் கொண்டு நடத்தல், “துலுக்கி-துலுக்கி” நடத்தல், ”அவ்வாறு செய்யும் பெண் துலுக்கி எனப்பட்டாள்)
 11. துலுக்கி (சிருங்காரி, மயக்கி, மயக்கும் பெண், துலுக்கர் பெண்களை வைத்து மயக்கியதால், அத்தகைய பெண்கள் அவ்வாறே அழைப்பட்டனர்)

இவற்றிலிருந்து அச்சொற்கள் எல்லாமே, எதிர்மறையான, ஒவ்வாத, தீய, கொடிய, திகில்-பீதி-பயங்கரம் முதலியவற்றைக் குறிப்பதாகவே உள்ளது. அதாவது, அத்தகைய கொடிய-குரூர-பீதியைக் கிளப்பும் மக்களைக் குறிக்க பிறகு உபயோகப்படுத்தப் பட்டது தெரிகிறது. மேலும், இவையெல்லாம் பொது வழக்கில் இருந்ததால், 60 ஆண்டுகள் வரையிலும் இருந்ததால், அவற்றின் தாக்கத்தை நன்றாகவே தெரிந்து கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

14-01-2022.


[1] அஹோபிலம் ஆந்திராவில் இருந்தாலும், அதனை, குறிப்பாக அஹோபில மடத்தைச் சேர்ந்த வைஷ்ணவர்கள் தமிழகத்தில் அதிகமாக உள்ளனர்.

[2] செஞ்சு என்ற மலைவாசி மக்கள் இன்றும் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். செஞ்சு லக்ஷ்மி என்ற அவர்களின் குலப்பெண்ணை நரசிம்மர் மணந்து கொண்டார் என்ற புராணம் உள்ளது. இன்றும் அஹோபிலத்தில் அவர்கள் பலி முதலியவற்றைக் கொடுத்து வழிபட உரிமை உள்ளது.

[3] Kalyangeetha, Map of 800 Narasimha Temples with details of 25 Important Sri Narasimha/ Narasingh temples, March 23, 2018.

[4] https://kalyangeetha.wordpress.com/2018/03/23/map-of-narasimha-narasingh-temples/

[5] 14ஆம் நூற்றாண்டில் மதுரையில் மாலிகாபூர் அடித்த கொள்ளை தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு பாடம் கற்பித்தது. பிற்காலப் பாண்டி நாடு தத்தளித்துக்கொண்டிருந்த காலம்.  யார் அரசன் என்னும் போராட்டத்தில் இரண்டு பாண்டியர். டில்லி முகமதிய வேந்தனின் படைத்தலைவனை ஒருவர் தனக்குத் துணையாக மதுரைக்கு அழைத்துவந்தார். மாலிகாபூர் உதவினான். பின் அழைத்துவந்தவரையும் வீழ்த்தினான். அப்போது அவன் மதுரையிலிருந்து கொள்ளையடித்துச் சென்ற பொருள்கள் – 612 யானைகள், 20 ஆயிரம் குதிரைகள், 96 ஆயிரம் மணங்கு பொன், முத்து, அணிகலன்கள்,அப்போது நாட்டு நிலைமை – இந்து கோயில்கள் இடிக்கப்பட்டன, வழிபாடு நின்றுபாயிற்று, வைதிக சமயமே அனேகமாக அழிந்தது போன்ற நிலைமை. 1363-ல் மாலிகாபூர் தென்னாட்டின்மீது படையெடுத்து வந்தான். 1378-ல் விசயநகர வேந்தர் தலைவன் குமார கம்பண்ணன் முகமதியரை முறியடித்தான்.

[6]  துலுக்க நாச்சியார் என்பதையே, இப்பொழுது பீபி நாச்சியார் என்று மாற்றி விட்டனர். அவ்வாறு யார் மாற்றச் சொன்னார்கள் என்று தெரியவில்லை. உண்மையில் அத்தகைய பெயர் மாற்றங்களில், உண்மையான சரித்திரமே திரிந்து விடுகிறது, மறைந்து விடுகிறது. அம்பட்டன் வாராவதியை விட மோசமாகி விடுகிறது.

[7]  வேதபிரகாஷ், துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (3), ஜனவரி 1, 2017.

[8] https://islamindia.wordpress.com/2017/12/01/tulukka-turukka-turkey-used-in-tamilnadu-after-medieval-period/

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அகோபிலம், அடையாளம், அத்துமீறல், அந்திலி, அழிப்பு, அழிவு, அஹோபிலம், ஆக்கிரமிப்பு, ஆபத்சகாயேசுவரர், இடைக்காலம், இரண்யகசிபு, உக்கிர தெய்வம், உக்கிரம், கன்டபேருன்டா, கிராம தேவதை, கோவில், கோவில் இடிப்பு, கோவில் உடைப்பு, சன்னிதி, சப்த கன்னியர்கள், சப்தமாதர், சப்தமாதா, சரப, சரபம், சரபர், சரபேஸ்வரர், சரபேஸ்வர், சிங்கப்பெருமாள் கோவில், சிங்கிரிக்குடி, சிதிலமடைந்த கோவில், சிந்தலவாடி, செஞ்சு, செஞ்சு குடி, செஞ்சு லக்ஷ்மி, செஞ்சு லட்சுமி, செஞ்சுலக்ஷ்மி, செஞ்சுலட்சுமி, சோளிங்கர், சோழர், சோழர் காலம், ஜைன, ஜைனம், துக்காச்சி, துக்காட்சி, துருக்கர், துர்காட்சி, துர்க்கை, நாமக்கல், பராமரிப்பு, பரிக்கல், பல்லவர், பல்லவர்கள், பழுது பார்த்தல், பாழடைந்த கோவில், பிரகலாதன், புதுபிப்பு, புதுப்பித்தல், புதையல், புதையல் வேட்டை, பூவரசன் குப்பம், பௌத்தம், பௌத்தர், மசூதி, விழுப்புரம், ஹொய்சளர் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s