ருத்ராக்ஷபுரீஸ்வரர் மற்றும் பெருமாள் கோவில்: சிதிலமடைந்து, பாழடைந்து, பாகங்கள் கீழே கிடக்கும் நிலையில் கோவில்கள்!

ருத்ராக்ஷபுரீஸ்வரர் மற்றும் பெருமாள் கோவில்: சிதிலமடைந்து, பாழடைந்து, பாகங்கள் கீழே கிடக்கும் நிலையில் கோவில்கள்!

Perumal and Rudakshapureswarar temples, Mayanur

ருத்ராக்ஷபுரீஸ்வரர் கோவிலைத் தேடிச் சென்றது: கூகுள் மேப்பில் தேடிப் பார்த்த போது, மரங்களால் மூடிய நிலையில் இக்கோவில் காணப்பட்டது. அதனால், இதனை பார்த்தே விட வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதனால், நாங்கள் மறுபடியும் வந்த வழியே திரும்பி வந்தோம். முதலில், அந்த உடைந்த “வேணுகோபாலன்” சிலை இருந்த கோவிலுக்குச் சென்றோம். இரு கோவில்களுக்கு இடையே உள்ள தூரம் – 714 அடிகள் [210.05 m (689.16 ft)].  சாலை போட்ட போது, விரிவு படுத்திய போது, இக்கோவிலின் மதிற்சுவர்கள் உடைக்க்கப் பட்டிருக்கலாம். இல்லை, பெரிய அளவில், சிவன் கோவிலையும் அடக்கி, ஒரு வளாகம் இருந்ததா என்று தெரியவில்லை.

PERUMAL temple, front view GOOGLE

PERUMAL temple, front view GOOGLE

சில மாதங்களுக்கு முன்னர், இக்கோவில் இருந்த நிலை…..செடி-கொடிகள் கோவிலை ஆக்கிரமித்திருந்தன….

Perumal temple, covered with trees- GOOGLE

13-05-2019 அன்று நாங்கள் சென்றிருந்த போதைய நிலை…..

Permal temple- front view

மண்டபத்தின் உட்புறத் தோற்றம்…………………………..

Perumal temple, mantap with pillars

மண்டபத்தில், சந்நிதி மேற்புறம்போன்ற பகுதி கிடந்திருப்பது……………………

Perumal temple, top of sannidhi

மண்டபத்தில், சந்நிதி மேற்புறம்போன்ற பகுதி கிடந்திருப்பது……………………

Perumal temple, top of sannidhi with other parts

மண்டபத்தைத் தாண்டி,  முதல் அறை………….கதவுகளை காணோம்….

Permal temple- front view.door

உள்ளே சென்றால், இருட்டாக இருக்கிறது…….

Permal temple- inside darkness

கர்ப்பகிரகமும் இருட்டாக இருக்கிறது………………………..ஓட்டைகளில் கொஞ்சம் வெளிச்சம் வருகிறது…………..

Permal temple- inside towards garba gruha, darkness.

கோவிலின் வலது பக்க தோற்றம்……………

Perumal temple, RHS

கோவிலின் வலது பக்க தோற்றம்……………பின்பக்கத்திலிருந்து…

Perumal temple, RHS view - from backside

Perumal temple, RHS view – from backside

Perumal temple, garba gruha backside, patched up temporarily

Perumal temple, garba gruha backside, patched up temporarily

கர்ப்பகிருகத்தின் மேற்பகுதியைக் கவனித்தால், ஏதோ அவசர-அவசாமாக அல்லது தற்போதைக்கு நிற்கின்ற நிலையிலடுக்கி வைத்தது போல, கருங்கற்களை காணலாம்.

Perumal temple, garba gruha backside, patched up temporarily.2

Perumal temple, garba gruha backside, patched up temporarily.2

Perumal temple, garba gruha backside, patched up temporarily.top

Perumal temple, garba gruha backside, patched up temporarily.top

Perumal temple, garba gruha backside, patched up temporarily.bottom

Perumal temple, garba gruha backside, patched up temporarily.bottom

இடிந்த நிலையில் உள்ள பெருமாள் கோவில்: இக்கோவில் அமைப்பை கவனிக்கும் போது, முன்பக்கத்தில் கொடி கம்பம், சிறிய சந்நிதி முதலியவை இருந்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. பாழடைந்த நிலையில் இருந்த, அந்த கோவிலின் முன்பு ஒரு மண்டபம் இருக்கிறது. அதற்கு முன்பாக, சிறிய கோபுரத்துடன் ஒரு சன்னதி எழுந்திருக்க வேண்டும் என அம்மண்டபத்தில், சன்னதி கோபுரத்தின் மேற்பகுதி கிடப்பது எடுத்துக் காட்டுகிறது. அறைகளுடன் கூடிய கோவிலின் உட்புறம் இருட்டாக காணப்படுகிறது. எந்த தூண்களும், சிலைகளும், விக்கிரங்களும் ………….காணப்படவில்லை. இங்கே இருந்த எல்லா விக்கிரங்கள் சிலைகள் சிற்பங்கள் முதலியவை அகற்றப்பட்டது அல்லது எடுத்துச் செல்லப்பட்டது தெரிகிறது. வலது பக்கத்தில், மிக்க கலைநயத்துடன் கூடிய ஒரு வேணுகோபாலன் கற்சிலை உடைந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. உடைந்த நிலையில் மார்பு அளவில் இருக்கும் அந்த சிலை, முழுமையாக இருந்திருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

அபிஷேக நீர் வெளியேறும் குழாய் / கோமுகத்தின் மீது, வேணுகோபாலன் கற்சிலை வைக்கப்பட்டுள்ளது!

Permal temple- Venugopalan statue broken condition

சுற்றிலும் மதிற்சுவர் இருந்ததற்கான அடையாளம்……………………………..

Perumal temple, broken down compound wall visible

Perumal temple, broken down compound wall visible

மதிற்சுவரும், உடைந்த சிற்பங்கள், தூண்களின் பாகங்கள், பகுதிகள்……

Perumal temple, parts broken down, strewn. compound wall

Perumal temple, parts broken down, strewn. compound wall

மேலும் உடைந்த சிற்பங்கள், தூண்களின் பாகங்கள், பகுதிகள்……

Perumal temple, parts broken down, strewn

மதிற்சுவர் ஓரமாக, உடைந்த ஒற்றைக்கால் சிற்பத்தின் பகுதி காணப்படுகிறது……………………………….ஒரு வேளை அந்த வேணுகோபாலனின் கற்சிலை பாகமாக இருக்கலாமோ?

Perumal temple, could be Venugopalan leg

கர்ப்பகிருகம் உடைந்து, அவசரமாக கட்டப் பட்டதா?: கர்ப்பகிருகத்தின் பின்பக்கமும் இடிந்த நிலையில் காணப்படுகிறது மற்றும் ஏதோ கற்களை வைத்து கோபுரம் விழுந்து விடாமல் வேலை செய்து இருப்பதை கவனிக்க முடிகிறது. உடைந்த மதிற்சுவர் பாகங்கள், சுற்றிலும் மதிற்சுவர் இருந்ததைல் காட்டுகிறது. மதில் சுவர் பக்கங்களிலும் உடைந்த சிற்பங்களும் கிடைக்கின்றன. அதில் ஒரு கால் பாதம் உள்ளது போன்ற உடைந்ட பகுதியுமுள்ளது. ஒருவேளை அது, வேணுகோபாலனின் பாதமாக இருக்கலாம். உள்ள கோவிலின் சுவர்களில் கருங்கற்கள் பலவித அளவுகள், அமைப்புகளில் காணப்படுவதால், அவசர-அவசரமாக மராமத்து செய்துள்ளதும் புலப்படுகிறது. இக்கோவிலைத் தான், அங்குள்ளோர் “பெருமாள் கோவில்” என்கின்றனர். அங்கிருப்பவர்கள், விவரங்கள் கேட்டாலும், “தெரியாது” என்று தான் சொல்கின்றனர்.

ருத்ராக்ஷபுரீஸ்வரர் கோவில் மற்றும் குளம், கூகுள் வானியல் தோற்றம்….

Rudakshapureswarar temples, Mayanur

சில மாதங்களுக்கு, முந்தைய தோற்றம்………………………………..

Rudrakshapureswarar, Mayanur

கர்ப்பகிருகத்தின் 13-05-2019 அன்றைய தோற்றம்…………………………………….

Rudrakshapureswarar, Garbagruha

கர்ப்பகிருகத்தின் 13-05-2019 அன்றைய தோற்றம்…………………………………….இன்னொரு பக்கம்…

Rudrakshapureswarar, Garbagruha.other side

Rudrakshapureswarar, Garbagruha.other side

தொலைவிலிருந்து காணப்படும் தோற்றம்…இடது பக்கம் – கர்ப்பகிருகம், வலது பக்கம்- முதல் மண்டபம்………………….

Rudrakshapureswarar, Mayanur.distance..mantap

Rudrakshapureswarar, Mayanur.distance..mantap

கர்ப்பகிரகம், தூண்கள் கொண்ட மண்டபம், சிறிய மண்டபம் மற்றும் தூகள் கொண்ட மண்டபம், ……இவை எல்லாமே ஒரே கோட்டில் அமைந்துள்ளன.

Rudrakshapureswarar, Mayanur.cleaned

Rudrakshapureswarar, Mayanur.cleaned

Rudrakshapureswarar, two Mantaps.women working

Rudrakshapureswarar, two Mantaps.women working

Rudrakshapureswarar, view from mantap

இடிந்த நிலையில் உள்ள சிவன்  கோவில்: காவிரிக் கரையில், மாயனூரில் [கரூர் மாவட்டம்] இருக்கும் இந்த ருத்ராக்ஷபுரீஸ்வர கோவில், செடி-கொடிகள் சூழ்ந்து செல்ல முடியாமல் இருக்கும் நிலையில் மறைந்திருந்தது. இது பெருமாள் கோவிலை விட பரந்த இடத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இப்பொழுது 100-நாட்கள் வேலை திட்டத்தில் சுத்தப் படுத்தப் படுகிறது. கோவிலுக்குள் இருக்கும் லிங்கத்தைக் காணோம். ஆவுடையார் சிறிது தூரத்தில் கிடக்கிறது. மற்ற விக்கிரங்களைக் காணோம். மாலிக்காபூர் அல்லது ஔரங்கசீப் வந்து இடித்து விட்டு சென்ற நிலையில் அலங்கோலமாகக் காட்சியளிக்கிறது. பக்கத்தில் பெரிய குளம் காணப்படுகிறது. அதை வைத்து கணக்கிட்டால், மிகப் பெரிய கோவில் வளாகம் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. சுற்றுச்சுவர் இருந்திருப்பதற்கு அடையாளம் காளப்படுகிறது, ஆனால், சுவரைக் காணோம். மூலவர்-கர்ப்பகிருகத்திற்கும், மண்டபத்திற்கும் அளவுக்கு அதிகமாகவே இடைவெளி காணப் படுகிறது!

Rudrakshapureswarar, mantap.make shift condition

Rudrakshapureswarar, mantap.make shift condition

Rudrakshapureswarar, mantap.alignment

Rudrakshapureswarar, mantap.alignment

Rudrakshapureswarar, Mantap.in dilapidated condition

Rudrakshapureswarar, Mantap. in dilapidated condition

Rudrakshapureswarar, Mantap in dilapidated -parts underneath

Rudrakshapureswarar, Mantap in dilapidated -parts underneath

Rudrakshapureswarar,more parts on the ground

Rudrakshapureswarar,more parts on the ground

கோவில் ஏன் இடிந்த நிலையில் இருக்க வேண்டும்?: கர்ப்பகிரகம், தூண்கள் கொண்ட மண்டபம், சிறிய மண்டபம் மற்றும் தூண்கள் கொண்ட மண்டபம், சுற்றிலும் கிடக்கின்ற பகுதிகள், பாகங்களும் இறைந்து கிடக்கின்றன. இவை எல்லாமே ஒரே கோட்டில் அமைந்துள்ளன. எதிரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது என்பதும் முன்னமே சுட்டிக்காட்டப்பட்டது. இதைச் சுற்றி நிலம் அதிகமாக இருப்பது, இக்கோவில் மிகப் பெரியதாக இருக்க வேண்டும் அல்லது கோவில் வளாகம் பெரிதாக இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. ஒருவேளை பக்கத்தில் இருந்த மற்ற சன்னதிகள் இடிக்கபட்டிருக்கலாம், அல்லது அத்தகைய நிலையில் இருந்த பாகங்கள் அப்புறப்படுத்தப் பட்டிருக்கலாம். மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், விலையுயர்ந்த அல்லது மற்ற முக்கியமான பொருட்கள் எதுவுமே காணப்படாமல் இருக்கின்றன. கோபுரத்தி மீது கலசம் காணப்படவில்லை. இதனால் நிச்சயமாக விலையுயர்ந்த பொருட்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் எடுத்துச்செல்லப்பட்டன என்று யூகிக்கப்படுகிறது. ஹைஹர் அலி-திப்பு சுல்தான் படையெடுத்து வந்தபோது, இக்கோவில்கள் இடிக்கப்பட்டு இருக்கலாம். அருகில் ஶ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதரீருப்பதால், ஒருவேளை துருக்கர் படைகள் இக்கோவில்களை தாக்கி அழித்த்திருக்கலாம். இருப்பினும், கோவில்கள் தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்டு வந்திருப்பதனால், மறுபடியும் அவை, தாக்கப்பட்டுள்ள நிலையில் இருப்பதனால் அத்தகைய அழிவை யார் ஏற்படுத்தினர் என்ற கேள்வியும் எழுகிறது.

© வேதபிரகாஷ்

20-05-2019

Rudrakshapureswarar, Mayanur. in dilapidated condition

Rudrakshapureswarar, Mayanur. in dilapidated condition

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in இடிப்புல் உடைப்பு, இடைக்காலம், உடைந்த நிலையில் கோவில், காவிரிக்கரை, கும்பாபிசேகம், கோவில், சிதிலமடைந்த கோவில், சுவர், தாக்குதல், திருக்குளம், திருக்கோவில், தீர்த்தம், தொன்மை, நவநீத கிருஷ்ணன், நெரூர், படிக்கட்டு, பலிபீடம், பெருமாள் கோவில், மண்டியிருக்கும், மாயனூர், ருத்ராக்ஷம், வடிவமைப்பு, வேணுகோபாலன் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s