ஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில், கட்டளை, ரங்கநாதபுரம், மேல் மாயனூர் கரூர் மாவட்டம்.  

.

Kailasanathar temple, Location GOOGLE

Kailasanathar temple, Location GOOGLE

Kailasanathar temple, entrance

Kailasanathar temple, entrance

13-05-2019 அன்று கோவில் தரிசனத்திற்கு புறப்பட்டது: 12-05-2019 அன்று சிந்தலவாடியில் தங்கி, அடுத்த நாள் 13-05-2019 காலை, ருத்ராக்ஷபுரீஸ்வரர் கோவிலைத் தேடி புறப்பட்டோம். மேல்-மாயனூருக்கு செல்லவேண்டும் என்றார்கள். ரெயில்வே தண்டவாளத்தைத் தாண்டி, மேல்-மாயனூருக்குச் சென்றோம். போகின்ற வழியிலேயே வலது பக்கம் மற்றும் சிறிது தூரம் சென்றதும் இடது பக்கங்களில் இடிந்த நிலையில் இரண்டு கோவில்களைக் கண்டோம். முதலில் வலது பக்கக் கோவிலில் ஆட்கள் சத்தம் செய்து கொண்டிருந்தார்கள். நண்பர் “உழவாரப் பணி செய்கிறார்கள்,” என்று கமென்ட் அடித்தார். தாண்டி செல்லும் போது, இடது பக்கத்தில், இன்னொரு பாழடைந்த கோவில் காணப்பட்டது. அதில் உடைந்த நிலையில் “வேணுகோபாலன்” சிலை காணப்பட்டது. ஆனால், சிவன் கோவில் என்றதும், வேறு வழியில் இருக்கும் கோவிலைக் காட்டிவிட்டார்கள். அதனால், கரூர் மாவட்டம் ரெங்கநாதபுரம் ஊராட்சி கட்டளையில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான சிவன் கோவில் என்று “கைலாசநாதர் கோவிலுக்கு” வந்து சேர்ந்தோம்.

Kailasanathar temple, entrance.another view

Kailasanathar temple, entrance.another view

Kailasanathar temple, inside-RHS

Kailasanathar temple, inside-RHS

Kailasanathar temple, inside-Kartikeyan

Kailasanathar temple, inside-Kartikeyan

Kailasanathar temple, 1973 Kumbabiseka

Kailasanathar temple, 1973 Kumbabiseka

21-11-1973 அன்று கும்பாபிசேகம் நடந்தது: அங்கிருக்கும் கல்வெட்டின் படி, “ஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி தேவஸ்தானம் கட்டளை, ரங்கநாதபுரம், கட்டளை; பிரமாதீஸ வருஷம் கார்த்திகை மாதம் ஆறாம் தேதி புதன்கிழமை 21-11-1973 லோககுரு காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரிய சுவாமிகள் அருள் ஆசியுடன், சமயபுரம் உஜ்ஜயினி ஓம்காளியம்மன் ஸ்ரீ இராமநாத சுவாமிகள் முன்னிலையில், நூதன நவகிரக மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கட்டிட உதயம் கே. எஸ். வெங்கட்ரங்க .ஐயர், மிறாஸ்தார், கட்டளை, நவகிரக விக்கிரங்கள் உபயம் சே. குப்பண்ண கௌண்டர் கும்பாபிஷேகம் கமிட்டி மற்றும் கிராமத்தினர்”, என்று தெரிந்து கொள்கிறோம். ஆக கோவில் கட்டுவதில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால், பூஜை எனும்போது, நவீன காலத்தில், வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றனர் என்று தெரிகிறது. இதற்காக, இனி புதிய ஆகம சாத்திரங்களை உண்டாக்க வேண்டும் போலிருக்கிறது[1].

Kailasanathar temple, side view.Chandikeswarar

Kailasanathar temple, side view.Chandikeswarar

Kailasanathar temple, backside

Kailasanathar temple, backside

2013ல் குருக்கள் இறந்ததால், பூஜைகள் நிறுத்தப் பட்டன: இக்கோவில் பூட்டிக் கிடந்தது பற்றி, 2013ல் ஒருவர் வீடியோ வெளியிட்டிருந்தார்[2]. ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது. ஏனெனில், அதற்குப் பிறகு, அதாவது, சுமார் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, 2018ல் தினத்தந்தியில் செய்தி வருகிறது. இந்த கோவிலின் மூலவராக கைலாசநாதரும், தனி சன்னதியில் காமாட்சி அம்மனும் உள்ளனர். மேலும் வள்ளி, தெய்வானை, வேல், மயில் ஆகியவற்றுடன் ஆறு முகங்களை கொண்ட முருகன் என ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிலையும், விநாயகர், பைரவர், தட்சிணாமூர்த்தி, நந்தி, நவக்கிரகங்கள் என தனி தனி தெய்வங்களும் உள்ளது. தினந்தோறும் ஒரு கால பூஜையும், பிரதோஷ நாட்களில் நந்திக்கு சிறப்பு அபிஷேகமும், சிவராத்திரி நாட்களில் சிறப்பு வழிபாடும் நடைபெற்ற இக்கோவிலுக்கு கிராம மக்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பல பகுதியிலிருந்தும் பக்தர்கள் வந்து சிவனை வழிபட்டு சென்றனர். கோவிலின் பரம்பரை அறங்காவலராக ஆதி மூர்த்தி குருக்கள் என்பவர் இருந்து பூஜைகளை நடத்தி வந்த நிலையில், அவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு [2012ல்] இறந்து விட்டார். அதன்பின் அவரின் வாரிசுகள் யாரும் பூஜைகள் செய்ய வராமையால் கோவில் பூட்டியே கிடந்தது[3].

Kailasanathar temple, Navagruha

Kailasanathar temple, Navagruha

Kailasanathar temple, side view.distance

Kailasanathar temple, side view.distance

கோவில் பூஜாரி இல்லை என்றதால் மூடப்பட்டது!: ஆதி மூர்த்தி குருக்கள் காலமானதால் பூஜைகள் நடத்தப்பட்டன, கோவில் மூடப்பட்டது, என்பதிலிருந்து பரம்பரை அறங்காவலர் முறை இக்கோவிலில் செயல்பட்டு வந்தது தெரிகிறது. ஒருவேளை மற்ற ஜாதியினர் இக்கோலின் மீது உரிமை கொண்டாட/கொள்ளக்கூடாது என்ற காரணத்திற்காகவும் வேண்டுமென்றே கோவிலை மூடி வைத்திருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது. பிராமணர்கள் பரம்பரை முறையில் பூஜாரிகளாக இருப்பது எதிர்க்கப்படுகிறது, நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்படுகின்றன. ஆனால் பிராமணர் அல்லாத மற்ற பிரிவுகளிலும் இத்தகைய முறை இருப்பதை இங்கே கவனிக்கவேண்டும். இப்போது இருக்கின்ற குருக்களுக்கு விஷயங்கள் தெரியாமல் இருக்கிறார். கோவில் 150 வருடம் இருக்கிறது என்றிருக்கும் பொழுது, இரண்டாயிரம் வருடங்களாக கோவில் இருக்கிறது என்கிறார். மேலும் பூணூல் போட்டு இருக்கிறார். ஆனால் அவர் சுலோகம் சொல்லி அர்ச்சனை செய்ய தெரியவில்லை. சூடம் ஏற்றி, தூபம் காட்டி, விபூதி-குங்குமம் கொடுக்கிறார்[4]. கோவில்களில் நம்பிக்கை மீதான நடந்து வரும் இத்தகைய வழிமுறைகள் நெறிமுறைகள், சட்டதிட்டங்கள் முதலியன முறைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. தனிமனித விருப்பு-வெறுப்புகளுக்கு, காரணங்களுக்காக கோவிலை மூட வேண்டிய அவசியம் இல்லை.

Kailasanathar temple, inside-LHS

Kailasanathar temple, inside-LHS

Kailasanathar temple, entrance.Linga

Kailasanathar temple, entrance.Linga

அவினாசி அப்பா ஆன்மிக அறக்கட்டளை உறுப்பினர்கள் இக்கோவிலை திறந்தது: இதனால் சிவ பக்தர்களும், கிராம மக்களும் வேதனையில் இருந்தனர். இது குறித்து “தினத்தந்தி” நாளிதழில் ஜூலை 2018ல் செய்தி வெளியிடப்பட்டிருந்தது[5]. இந்த செய்தியின் மூலம் கோவிலின் பழமையையும், அதன் தற்போதைய நிலையையும் அறிந்த கோவை மாவட்டத்தை சேர்ந்த அவினாசி அப்பா ஆன்மிக அறக்கட்டளை உறுப்பினர்கள் இக்கோவிலை திறந்து பூஜைகள் நடைபெற நடவடிக்கை மேற்கொண்டனர்[6]. அதன்படி அவர்கள் கட்டளைக்கு வந்து கிராம மக்களின் உதவியுடன் கோவிலை திறந்து தூய்மை பணியினை மேற்கொண்டனர். பின்னர் புதிய குருக்களை நியமித்து கடந்த வளர்பிறை சனி பிரதோஷ நாளில் கைலாச நாதர், காமாட்சி அம்மன், நந்தி உள்பட கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்து வழிபாட்டை தொடங்கினர்[7]. இதனை தொடர்ந்து தற்போது பக்தர்களின் வழிபாட்டுக்காக கோவில் காலை, மாலை என இரண்டு நேரமும் திறக்கப்பட்டு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

Kailasanathar temple, side view.Nandi

Kailasanathar temple, side view.Nandi

Kailasanathar temple, side view

Kailasanathar temple, side view

தினத்தந்திக்கு நன்றி- கோவிலுக்கு வரவு: பிரதோஷ நாட்களில் நந்திக்கும், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. இதனால் சிவபக்தர்களும், கிராம மக்களும் கோவிலுக்கு அதிக அளவில் வந்து வழிபட்டு செல்வதுடன் பூட்டி கிடந்த கோவில் குறித்து செய்தி வெளியிட்டு பூஜைகள் நடக்க உதவிய “தினத்தந்தி” நாளிதழுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். பொதுவாக காரில் கோவில்களுக்கு செல்லவேண்டும் என்று பயணிப்பவர்கள், வழியில் உள்ள கோவில்களுக்கு எல்லாம் செல்லும் வழக்கம் இருக்கிறது. சிலர், தேடி கோவில்களுக்குச் செல்கின்றனர். தொடர்ந்து சென்று வந்தால், ஒவ்வொரு கோவிலில் ஏற்படும் மாறுதல்களையும் கவனிக்கலாம்.

 

© வேதபிரகாஷ்

20-05-2019

Kailasanathar temple, Garbagruha backside

Kailasanathar temple, Garbagruha backside

[1]  நவீனகாலம் என்றது – திராவிட இயக்கம் வந்த பிறகு, ஆட்சியாளர்களினாலும், இந்து அறநிலையத் துறையாலும், பாரம்பரியம் பாதிக்கப் படுகிறது. ஆயிரக்கணக்கான கோவில்களும் பாதிக்கப் படுகின்றன, சிதிலமடைகின்றன, காணாமல் கூட போய்விடுகின்றன.

[2] MYSTERIOUS SHIVA TEMPLE | kasi viswanaathar temple at kattalai in karur | GOBINATH SPEECH, Namma Bhoomi Namma Samy, Published on Sep 2, 2013.

https://www.youtube.com/watch?v=QhnWQwrtacw

[3] தினத்தந்தி, 6 ஆண்டுகளாக பூட்டி கிடந்த கட்டளை சிவன் கோவில் திறப்பு, ஜூலை 13, 2018, 04:00 AM

தினத்தந்தி, 6 ஆண்டுகளாக பூட்டி கிடந்த கட்டளை சிவன் கோவில் திறப்பு, செப்டம்பர் 26, 04:15 AM

[4]  இதுபோல, பல கோவில்களில், இப்பொழுது பூணூல் போட்டுக் கொண்டு, பூஜாரிகளாக இயங்கி வருகின்றனர் என்று தெரிகிறது. பூஜை நடக்காமல் இருக்கும் பட்சத்தில், இவ்வாறு கோவில்களில், பணி செய்வது நல்ல காரியம் தான். இதே போன்ற உணர்வு, மற்ற காரியங்களிலும் இருக்க வேண்டும். இடைக்கால, புராதன கோவில்களில் கொள்ளையடிப்பதில், எல்லோரும் ஒன்று பட்டு செயல்படுவது, சமீபத்தில் வெளிப்பட்டுள்ளது.

[5] https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/07/13014202/Six-devotees-of-Lord-Shiva-temple-are-locked-up-for.vpf

[6] தினத்தந்தி, 6 ஆண்டுகளாக பூட்டி கிடந்த கட்டளை சிவன் கோவில் திறப்பு, செப்டம்பர் 26, 04:15 AM

[7] https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/26014632/Lord-Shivas-temple-was-locked-up-for-6-years.vpf

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in கட்டளை, கரூர் மாவட்டம், கைலாசநாத ஸ்வாமி கோவில், பாழடைந்த கோவில், மேல் மாயனூர், ரங்கநாதபுரம், ஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s