ஶ்ரீராமகிருஷ்ண தபோவன வளாகம், ஶ்ரீசித்பவானந்தர் [1898-1985]: கல்வி, ஆன்மீகம், ஒழுக்கம் போற்றியது!

ஶ்ரீராமகிருஷ்ண தபோவன வளாகம், ஶ்ரீசித்பவானந்தர் [1898-1985]: கல்வி, ஆன்மீகம், ஒழுக்கம் போற்றியது!

Ramakrishna Tapovan - Aerial view

Ramakrishna Tapovan – Aerial view

ஶ்ரீராமகிருஷ்ண தபோவன வளாகம்: கோவில்கள் என்றால், பள்ளிகளும் அவற்றில் அடங்கும். இடைக்காலம் வரை, கோவில்களில் பள்ளிகள் இருந்தன. இங்கு, ஶ்ரீசித்பவானந்தர், முதலில், திருப்பாராய்த்துறை கோவிலுக்கு முன்னால் உள்ள, 100-கால் மண்டபத்தில் தான். மாணவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்தார், அதாவது, அம்மண்டபம் பள்ளிக் கூடமாக இருந்தது. பல வருடங்களுக்குப் பிறகு, ஶ்ரீராமகிருஷ்ண தபோவன வளாகத்திற்குச் செல்கிறோம். ஒவ்வொருவரின் நினைவுகள், ஒவ்வொரு மாதிரி. பேட் கிரிபித்தை சந்திக்க வந்தபோது, இவரை பார்த்த அனுபவத்தை ஒருவர் பகிர்ந்து கொண்டார். 1979 மற்றும்  V S நரசிம்மன்[1] திருவேடகம் விவேகானந்தர் கல்லூரி, துணை முதல்வராக இருந்தபோது வந்த, விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். ஶ்ரீசித்பவானந்தருக்கு வயது 80ற்கு மேல் ஆகிவிட்டதால், ஆன்மீகத்திலேயே இருந்தார். 1985ல் இவர் இவ்வுலகத்தைப் பிரிந்தார். ஆனால், அவர் அங்கிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. எதிர் பக்கத்தில், அவரது சமாதி இருக்கிறது. பேட் கிரிபித்ஸ் 1993ல் காலமானாலும், பணம் கிடைப்பதால், சச்சிதானந்த ஆஸ்ரமம் பெரிதாகிக் கொண்டிருக்கிறது. இங்கு, தபோவனம் அப்படியே இருக்கிறது. அதே அமைதி, அதே சாந்தம்! நண்பர் ஒருவர் அப்படியே, அங்கேயே உட்கார்ந்து விட்டார். சில நண்பர்களையும் சந்திக்க முடிந்தது. முதலில் ஶ்ரீசித்பவானந்தரின் சரித்திரத்தை சுருக்கமாக பார்ப்போம்.

Ramakrishna Tapovan - 1942. Sthanumurthy, Manikanth, Gopi, Nagarajan

Ramakrishna Tapovan - Chidbavananda

சின்னுகவுண்டரின் படிப்பும், சென்னைக்குச் சென்றதும்: சின்னுக்கவுண்டர் என்ற சித்பவானந்தர் மார்ச் 11, 1898 அன்று பி. கே. பெரியண்ணக் கவுண்டர், நஞ்சம்மையார் ஆகியோருக்கு மகனாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செங்குட்டைப்பாளையம் என்ற கிராமத்தில் பிறந்தார். “சின்னு” என்று செல்லமாக அழைக்கப் பட்டார்[2]. ஆத்துப் பொள்ளாச்சி கிராமப் பள்ளியிலும், பொள்ளாச்சி கிராமப்பள்ளியிலும் ஆரம்பக்கல்வி கற்றார். கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலப் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி கற்றார். இக்காலகட்டத்தில் பொள்ளாச்சிக்கு வந்த பழனிச் சாது சுவாமிகள் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. பழனிக்குச் சென்று வர ஆரம்பித்தார். சட்டிச் சுவாமிகள் அறிமுகமும் வாய்த்தது. 1918-இல் சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் சென்னை மாகாணத்தில் 7-ஆம் இடம் பெற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் எஃப்.ஏ. வகுப்பில் சேர்ந்தார். மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்லும் நிலையில் சுவாமி விவேகானந்தரது “சென்னைச் சொற்பொழிவுகள்” என்ற நூலின் ஒரு கட்டுரையால் கவரப்பட்டு பயணத்தை நிறுத்தினார். சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை படித்தார். அப்போது விக்டோரியா விடுதியில் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்களுடன் தோழர் ஆனார். இருவரும் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்குச் சென்று ஸ்ரீமத் சுவாமி சிவானந்தர், ஸ்ரீமத் சுவாமி பிரேமானந்தர் ஆகியோரின் அறிமுகம் பெற்றனர்[3].

Ramakrishna Tapovan and Tirupparaythurai temple - Aerial view

Ramakrishna Tapovan and Tirupparaythurai temple – Aerial view

சின்னுகவுண்டர் சித்பவானந்தர் ஆனது: 1923-ல் இளங்கலை படிப்பை முடித்ததும் அகிலானந்த சுவாமிகளுடன் புவனேஸ்வரம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சென்று சுவாமி சிவானந்தரிடம் பிரம்மச்சரியத் தீட்சை பெற்றார். திரையம்பக சைதன்யர் என்ற பெயருடன் அங்கே இருந்தார். சுவாமி சிவானந்தரின் அனுமதி பெற்றுத் தென்னாட்டில் பயணம்செய்த சேரன்மகாதேவியில் தேச பக்தர் வ. வே. சு. ஐயரைச் சந்தித்தார். 1924 சூன் மாதம் சலவைத் தொழிலாளி ஒருவர் அளித்த நிலத்தில் சுவாமி சிவானந்தர் ஊட்டி ஆசிரமத்திற்கு அடிக்கல் நாட்டினார். திரையம்பக சைதன்யரின் குடும்பம் ஆசிரமம் அமைக்க உதவி செய்தனர். 1926 சூலை 25 இல் சுவாமி சிவானந்தர் இவருக்குச் சந்நியாச தீட்சை வழங்கி சுவாமி சித்பவானந்தர் என்று பெயரிட்டார். 1926-ம் ஆண்டு முதல் ஐந்தாண்டு காலம் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார். 1939-ல் உதகை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றார். 1940-ல் சித்பவானந்தர், உதகையை விட்டுக் காவிரிக் கரை வழியாக நடைப்பயணம் மேற்கொண்டு திருப்பராய்த்துறைக்கு வந்து சேர்ந்தார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் மாணிக்கவாசக சுவாமிகளால் பாடல் பெற்ற தெய்வீகத் திருத்தலம் அது. அங்கே அன்பர்கள் அரவணைப்போடு சுவாமி சித்பவானந்தர் தமது ஆன்மிகத் திருப்பணிகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டார். திருப்பராய்த்துறை திருக்கோயில் வளாகத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் ஏழைச் சிறுவர் சிறுமியருக்காக ஓர் ஆரம்பப் பள்ளியை 1940-ல் தொடங்கினார் சித்பவானந்தர்[4].

Ramakrishna Tapovan - inner open space

Ramakrishna Tapovan – inner open space, now covered

Ramakrishna Tapovan - old photo

Ramakrishna Tapovan – old photo

Ramakrishna Tapovan - started in 1942

Ramakrishna Tapovan – started in 1942

நூற்றுக்கால் மண்டபத்தில் ஆரம்பப் பள்ளி ஆரம்பித்தது: 1930 முதல் 1940 வரை உதகை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்தார். அப்போது காந்தியடிகள், நாராயணகுரு ஆகியோர் அங்கே வருகை புரிந்தார்கள். சிவானந்தர் சமாதியடைந்த பின்னர் ராமகிருஷ்ண மடத்தில் இருந்து விலகிக் கைலாய யாத்திரை ஒன்றை மேற்கொண்டார். திருச்சி அருகே திருப்பராய்த்துறைக்குச் சென்ற சித்பவானந்தர் தாருகாவனேசுவரர் கோயிலில் 1940 ஆம் ஆண்டில் நடந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்றார். அதை நடத்திய ராமநாதன் செட்டியார், கானாடுகாத்தான் அருணாசலம் செட்டியார் ஆகியோருடன் சந்திப்பு ஏற்பட்டது. திருப்பராய்த்துறையில் தங்க முடிவெடுத்தார். நூற்றுக்கால் மண்டபத்தில் ஆரம்பப் பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். இக்காலத்தில் கோவில்கள், மடங்கள், ஆயிரங்கால் மண்டபங்கள் என்று பல காணாமல் போகின்றன. தெருவில், சாலைகளில் கட்டப் பட்ட, தங்குவதற்காக கட்டப் பட்ட மண்டபங்கள், கோவில்கள் இடிக்கப் படுகின்றன. இல்லை ஆக்கிரமிக்கப் பட்டு வீடுகள், கடைகள், ஓட்டல்கள் என்று மாறுகின்றன. அந்நிலையில், இவர் பள்ளியாக மாற்றியிருக்கிறார். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலில் வாரம் ஒருமுறை தாயுமானவர் பாடலுக்கு விளக்கம் அளித்தார்.

Ramakrishna Tapovan - inner open space.another view

Ramakrishna Tapovan – inner open space.another view

Ramakrishna Tapovan - entrance

Ramakrishna Tapovan – entrance

1942-ல் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தை நிறுவியது: 1942-ல் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தை நிறுவினார். குருகுல முறையில் விவேகானந்த வித்யாவன நடுநிலைப் பள்ளி மற்றும் விவேகானந்த மாணவர் விடுதி ஆகியவற்றைத் தொடங்கினார். உள்ளூர் மாணவர்களுக்காகத் திருப்பராய்த்துறையில் நடுநிலைப் பள்ளி தொடங்கினார். 1951 ல் தர்ம சக்கரம் மாத இதழை ஆரம்பித்தார். தொடர்ந்து பல கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தார். சேலத்தில் சாரதா வித்யாலயாப் பெண்கள் பள்ளி, விவேகானந்த ஆசிரியர் கல்லூரி ஆகியவை ஆரம்பிக்கப்பட்டன. 1964ல் மதுரை மாவட்டம் திருவேடகத்தில் ராமகிருஷ்ண ஆசிரமம் ஆரம்பிக்கப்பட்டது. கோவை மாவட்டம் சித்திரச் சாவடியில் இன்னொரு கிளை ஆரம்பிக்கப்பட்டது. 1967 இல் தமிழகத்தில் பெண்களுக்கெனத் துறவுத் தொண்டு நிறுவனமாக சேலத்தில் சாரதா தேவி சமிதி தொடங்கப்பட்டது. 1971-ல் திருவேடகத்தில் விவேகானந்த குருகுலக் கல்லூரி அமைக்கப்பட்டது. 1943-ம் ஆண்டு நடுநிலைப் பள்ளி, மாணவர் விடுதி, அதைத் தொடர்ந்து 30 ஏக்கரில் காவிரிப் படுகையில் மேல்நிலைப் பள்ளி, ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி என விரிவடைந்தது. 1,952-ல் அச்சகத்தோடு கூடிய தர்ம சக்கரம் என்னும் தமிழ் மாத இதழைத் தொடங்கினார். ரமண மகரிஷி, நாராயண குரு, மகாத்மா காந்தி போன்ற சான்றோர்களுடன் நெருக்கமாயிருந்தார். தமிழில் 92 நூல்களும் ஆங்கிலத்தில் 22 நூல்களும் இவர் படைத்தவை.

Ramakrishna Tapovan - side view, office

Ramakrishna Tapovan – side view, office

EVR, Chidbavananda

ஈவேராவை இருமுறை சந்தித்தது[5]: இவர் சந்தித்தவர்களுள், காமராஜர், அண்ணாதுரை, ஈவேரா, எம்ஜிஆர் முதலியோர் அடங்குவர். ஈவேராவை, இரயில் பயணங்களில் இருமுறை சந்தித்துள்ளார். முதலில் ஈவேரா இவரை சந்திக்கத் தயங்கினார். ஏனெனில், ஏற்கெனவே அவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தார். ஈரோடில் வாழ்ந்ததால், கவுண்டர் என்ற முறையில் மரியாதை இருந்தது. போதாகுறைக்கு, கடவுளை நம்புகிறவர், கண்டிப்பானவர், ஒழுக்கமானவர் என்றதால், அது அதிகமாகவே இருந்தது. ஈவேரா அவரை “மஹாசந்நிதானம்” என்று தான் அழைத்தார். சித்பவானந்தர், ஈவேராவிடம் அவரது நாத்திகத்தைப் பற்றி பேசியுள்ளார். ஈவேரா சங்கடத்துடன் தான் எதிர்த்தார். ஈவேரா அவர் ஒரு தமிழர் மற்றும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர் என்றதால், அவர் மீது மதிப்பும், மரியாதையும் இருந்தது. ஈவேரா மாணவர்களை அவரது ஶ்ரீ விவேகானந்த வித்யாவனம் பள்ளியில் படியுங்கள் என்று சொன்னார்[6]. ஆனால், திகவினர், இவ்விசயங்களை மறைக்கின்றனர். 1967ல் கடவுளர் படங்களை அரசு அலுவலகங்களிலிருந்து அப்புறப்படுத்த, அண்ணாதுரை ஆணையிட்டபோது, முதலில் தெரு சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச போஸ்டர்களை அப்புறப்படுத்துங்கள் என்றார்.

Hinduism hosts christianity

கிருத்துவர்களுடனான உரையாடல்கள், புத்தகம் வெளியிட்டது: குளித்தலையில், கிருத்துவர்கள் “சச்சிதானந்த ஆஸ்ரமத்தை” ஆரம்பிக்கிறார்கள் என்றாறிந்தார். ஆனால், அரசு அவர்களுக்கு சாதகமான இருந்ததால், சேவை போர்வையில், அது வேகமாக வளர்ந்தது. வேதாந்த நோக்கில் பைபிளைப் பற்றி 1975ம் ஆண்டு ஒரு புத்தகட்தை வெளியிட்டார்[7]. 1979 ஜனவரியில், இத்தாலியிலிருந்து,  கத்தோலிக்க பாதிரிகள் இவரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப் பட்டது. அவர்களுடன் உரையாடல் ஏற்கொண்டு, சொற்பொழிவாற்றினார். அது புத்தகமாக வெளியிடப் பட்டது[8]. நவம்பர் 16, 1985 அன்று 87வது வயதில் இவர் காலமானார். தபோவனத்திற்கு எதிர்புறம் இவரது சமாதி இருக்கிறது.

© வேதபிரகாஷ்

17-05-2019

Swami Chidbavananda Samadhi

 

Hinduism hosts christianity-chidbagananda

[1]  இவர் தந்திர-சங்கிரஹ என்ற சமஸ்கிருதத்தில் உள்ள வானியல் நூலை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்திருக்கிறார்.

[2]  ஶ்ரீராமகிருஷ்ண தபோவனத்தைப் பற்றி, இங்கு விவரங்களை அறிந்து கொள்ளலாம் – http://www.rktapovanam.org/index.php

[3]  இங்கு அவரது வாழ்க்கைக் குறிப்புகள் காலக் கிரமமாகக் கொடுக்கப் பட்டுள்ளன –  http://www.rktapovanam.org/biography_swamiji.php

[4] https://tamil.thehindu.com/society/spirituality/article19502649.ece

[5]  இது கே.வி.ராமகிருஷ்ண ராவ் என்ற ஆராய்ச்சியாளர் கொடுத்த விவரங்கள் மீது ஆதாரமாக எழுதப் பட்டது.

[6] P. Ramachandran, “Manam Kavarntha Vidyavanam”, Pazaiya Manavar Sanga Pon Vizha Malar, Sri Vivekananda Vidyavanam, Tirupparaitturai, 2008, pp. 134.

[7] Chidbhavananda, Holy Bible in the Light of Vedanta, Tiruppararaitturai: Sri Ramakrishna Tapovanam,1975.

[8]  Swami Chidbavananda, Hinduism Hosts Cristianity, Sri Ramakrishna Tapovanam, Thiruparaythurai, 1979.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in ஆன்மீகம், ஈவேரா, கவுண்டர், சட்டிச் சுவாமிகள், சென்னை மாநிலக் கல்லூரி, தர்ம சக்கரம், திருப்பாராய்த்துறை, நாத்திகம், நூற்றுக்கால் மண்டபம், பெரியார், விவேகானந்த மாணவர் விடுதி, ஶ்ரீசித்பவானந்தர், ஶ்ரீராமகிருஷ்ண தபோவன வளாகம், ஶ்ரீராமகிருஷ்ண தபோவனம், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஶ்ரீராமகிருஷ்ண தபோவன வளாகம், ஶ்ரீசித்பவானந்தர் [1898-1985]: கல்வி, ஆன்மீகம், ஒழுக்கம் போற்றியது!

 1. uthamam17 சொல்கிறார்:

  வணக்கம்.
  மீண்டும் தநக்கள் செய்திக்கடிதம் கிடைத்தது நற்பேறு.
  நன்றி.
  அன்பன க. சக்திவேலு.

  Sent from Mail for Windows 10

  ________________________________

 2. vedaprakash சொல்கிறார்:

  In 1960, E.V.R. burned pictures of Rama. In 1971 he
  organized a superstition eradication conference in Salem. In this conference
  Rama’s image was taken in the procession and was beaten by sandals. Hindu
  deities were obscenely portrayed.53 The effigy of Rama was burned publicly.
  While many of the Hindu organizations kept mum over these issues, Swami
  Chidbhavananda was the first to register his protest against the actions of E.V.R.
  The same day when E.V.R., had the image of Rama beaten by sandals, the Swami conducted a procession of devout Hindus condemning the actions of E.V.R. at
  Salem.
  E.V.R. and the Swami had met twice during train travels. E.V.R. had great
  respects for the Swami though he was an adversary. He used to address him as
  ‘Mahasannidhanam’. E.V.R.’s respect for the Swami came from two factors. He
  considered him as a True Tamilian and the next as a great disciplined person and a
  disciplinarian. He used to recommend students to study in the Sri Vivekananda
  Vidyavanam, Tirupparaitturai founded by the Swami.54

  53 Charles Ryerson, Tamil Renaissance and Popular Hinduism, Madras, 1988, p. 91

  P. Ramachandran, “Manam Kavarntha Vidyavanam”, Pazaiya Manavar Sanga Pon Vizha
  Malar, Sri Vivekananda Vidyavanam, Tirupparaitturai, 2008, pp. 134.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s