ஶ்ரீகடம்பவனேஸ்வரர் கோவில், குளித்தலை: இருப்பிடம், வரலாறு மற்றும் சிறப்பு!

ஶ்ரீகடம்பவனேஸ்வரர் கோவில், குளித்தலை: இருப்பிடம், வரலாறு மற்றும் சிறப்பு!

Kulittalai - Kadambavaneswarar - location

Kulittalai – Kadambavaneswarar – location

Kulittalai - Kadambavaneswarar - side

குளித்தலை – பெயர் வர காரணம்: 12-05-2019 காலை திருவெண்ணைநல்லூர் கோவிலுக்குப் பிறகு, மாலை கரூரை அடைந்தோம். முன்பு, இருமுறை குளித்தலைக்கு வந்தபோது, நாங்கள் சாந்திவனத்தில் உள்ள சச்சிதானந்த ஆஸ்ரமம் என்ற கிருத்துவ இடத்திற்குச் சென்றிருக்கிறாம். குளித்தலை நகரானது கடம்பந்துறை, குழித்தண்டலை என்று புராண காலத்தில் அழைக்கப்படுள்ளது. இத்தலத்தில் கடம்பம் எனும் மரம் அதிகமிருந்தமையால் என்று அழைக்கப்பட்டிருந்தது. சேரமகாசுரனிடத்திலிருந்து திருமால் வேதங்களை மீட்டற்குக் காரணமாகிய திருவருளைப்பெற்ற இடமாதலில் சதுர்வேதபுரியென்றும், முருகவேள் பூசித்துப் பேறுபெற்றமையிற் கந்தபுரமென்றும் இது பெயர்பெறுகிறது, பிரமதேவரால் வழிபட்டுத் திருக் கோயில் முதலியன அமைத்துத் திருத்தேர்விழாவும் நடத்தினதால் பிரமபுரமென்றும் அழைக்ப்படுகிறது. தட்சிணகாசி, குழித்தண்டலை என்று பெயரும் இத்தலத்திற்கு உண்டு.

Kulittalai - Kadambavaneswarar - front.mantap

ulittalai – Kadambavaneswarar – front.mantap

Kulittalai - Kadambavaneswarar - inscription-modern

Kulittalai – Kadambavaneswarar – inscription-modern

கடம்பவனேஸ்வரர் கோயில் இருப்பிடம்: அமைப்பு கரூர் மாவட்டத்தில் திருச்சியில் இருந்து கரூர் வழியாக கோயம்புத்தூர், ஈரோடு செல்கின்ற நெடுஞ்சாலையில் குளித்தலையில் கடம்பவனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது[1]. இக்கோயிலானது வடக்கு நோக்கி அமைந்துள்ளது. வடக்கில் கால் கிமீ தூரத்தில்  அகண்ட காவிரி ஓடுகிறது. கோயில் இரண்டு பிரகாரங்களை கொண்டது. கோயிலை சுற்றி தேரோடும் வீதி உள்ளது[2]. கோயிலின் நுழைவு வாயிலுக்கு முன் புறம் ஒரு மண்டபம் இருக்கிறது. கோவில் 1.38 ஏக்கர் நிலப்பரப்பில் வடக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளன. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோவிலுக்கு முன் மண்டபம் உள்ளன. உட்புறத்திலுள்ள இரண்டாம் பிரகாரத்தில் கிழக்கில் வாகன மண்டபமும், மடப்பள்ளியும், கிணறும், காலசந்நிதியும் உள்ளது. தென்கிழக்கு மூலையில் பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. வடமேற்கு மூலையில் நவராத்திரி மண்டபம் இருக்கிறது. இதனருகிலேயே அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் சந்நிதிக்கு முன்புறத்தில் சுவாமி அம்பாளுக்குரிய கொடிமரம், பலிபீடங்கள் இருக்கின்றன. மூலவர் வடக்கு நோக்கிய அழகுடனே சிவலிங்கத் திருமேனி அருளோட்சுகிறார்.

Kulittalai - Kadambavaneswarar - inscription-modern.2

Kulittalai - Kadambavaneswarar - inner prakaram

கடம்பவனேஸ்வரர்பெயர் காரணம்: கரூர் மாவட்டம் குளித்தலையில் அமைந்துள்ளது கடம்பவனேஸ்வரர் கோயில். முற்காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் கோயில் அமைந்திருந்ததால், சிவபெருமான் கடம்பவனேஸ்வரர் என்று திருப்பெயர் ஏற்றார்[3]. தல விருட்சம் கடம்ப மரம். சிவன் கோயில்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கி அல்லது மேற்கு நோக்கி அமைந்திருக்கும். ஆனால், இந்தக் கோயில் வடக்கு நோக்கி அமைந்திருப்பதால், காசிக்கு நிகரான தலமாகப் போற்றப்படுகிறது[4]. இந்தக் கோயிலில் சிவபெருமான் சுயம்புவாகத் தோன்றியவர். அம்பிகை பாலகுஜலாம்பிகை[5]. இச்சிவாலயத்தின் மூலவர் கடம்பவனநாதர், கடம்பேசுவரர் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். அம்பாள் / இறைவி பாலகுஜலாம்பாள் [இதற்கு இளமையான முலைகளைப் பெற்றவள் என்று பொருளாகும்] என்றும் முற்றிலா முலையம்மை என்றும் அழைக்கப்படுகிறாள். அம்பிகைக்கு இரு மகன்கள் இருந்தாலும், அவர்களை கருவில் சுமந்து இறைவி பெறவில்லை என்பதால், முலைகள் இளமையானது என்று கூறுகின்றனர்[6]. சப்த கன்னியர்கள், அகத்தியர், கண்ணுவ முனிவர், முருகன் ஆகியோர் இச்சிவாலயத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.

Kulittalai - Kadambavaneswarar - Annadhanam - LHS

Kulittalai - Kadambavaneswarar - LHS view

Kulittalai - Kadambavaneswarar - some sculptures

Kulittalai - Kadambavaneswarar - front.sculpture on LHS

Kulittalai - Kadambavaneswarar - tank corner

சப்தகன்னியர் தொடர்பு: தேவார பாடல் பெற்ற தலங்கள் 277 இருக்கின்றன. காவிரிக்கு தென்கரையில் மட்டும் 127 தலங்கள் தேவாரப்பாடல்கள் பெற்ற  தலங்கள் ஆகும். தலங்களில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள ஒரே கோயில் இதுவாகும்[7]. அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் நடந்தபோது, கத்யாயன முனிவருக்கு சப்த கன்னியர்கள் தொல்லைகொடுத்தனர். இதனால், கோபம் அடைந்த அந்த முனிவர், அவர்களுக்கு சாபம் இட்டார். உடனே  ஆகிய ஏழு சப்தகன்னிகளும் முனிவரிடம் தங்களை மன்னித்து அருளுமாறு வேண்டினர். அதற்கு அந்த முனிவர், வடக்கு திசையில் இருக்கும் சிவனை வழிபட்டால் சாபம் தீரும் என்று கூறினார். இதையடுத்து, அந்த சப்த கன்னியர் குளித்தலை வந்து சிவனை வழிபட்டு, தங்கள் சாபம் நீங்கப்பெற்றனர். இத்தலத்தின் வரலாக சொல்லப்படுகின்ற மற்றொரு கதையில் தூம்ரலோசனன் சப்த கன்னியரை துரத்தி வர அவர்கள் சிவபெருமானின் பின்னே ஒளிந்து கொண்டார்கள். இறைவன் சப்த கன்னியருக்கு அடைக்கலம் தந்து அரக்கனை அழித்தார். பின்னர், அவர்கள் சிவன் வீற்றிருக்கும் கருவறைக்குப் பின்புறமே அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிந்துவருகிறார்கள்[8]. சப்த கன்னியர்களுக்கு கோயில்களில் உபசந்நிதி அமைந்திருக்கும். சில இடங்களில் சப்த கன்னியர்களுக்கு தனியாகக் கோயில் அமைந்திருக்கும். மூலஸ்தானங்களில் மற்ற தெய்வங்களுடன் இருப்பதுபோன்ற அமைப்பு எங்கும் இருக்காது.

Kulittalai - Kadambavaneswarar - broken Rama sculpture

Kulittalai - Kadambavaneswarar - broken Rama sculpture and others

Kulittalai - Kadambavaneswarar - broken Rama sculpture.closer view

வழிபாடும், நம்பிக்கைகளும்: குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில் கருவறையில், சிவனுக்குப் பின்புறமாக சப்த கன்னியர்கள் இடம் பெற்றிருப்பது இங்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பாகும். காலை கடம்பர், மதியம் சொக்கர், அந்தி வேளையில் திருஈங்கோய்நாதர் என்பது இங்கு சொல்லப்படும் சிறப்பாகும். அதாவது, குளித்தலை கடம்பரை காலையிலும், அய்யர் மலை சொக்கரை மதியமும், மாலையில் முசிறி திருஈங்கோய்மலை நாதரையும் வழிபட்டால், காசிக்கு போனதற்குச் சமம் என்பர். துர்க்கை அம்மனுக்கு வடக்கு நோக்கியே சந்நிதி அமைந்திருக்கும். இங்கு சிவனே வடக்கு நோக்கி இருப்பதால், இங்கு துர்க்கை அம்மன் இல்லை. திருமணமாகாத பெண்கள் 48 நாள்கள் இங்கு வந்து சப்த கன்னியர்களுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால், திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமின்றி, இங்குள்ள கடம்பவனேஸ்வரருக்கும் பாலகுஜலாம்பிகை அம்மனுக்கும் திருமணம் செய்துவைத்தால், திருமணத்தடை அகலும் என்பதால், ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு திருமணம் செய்துவைத்து வழிபாடு நடத்துகிறார்கள். இக்கோயிலின் தீர்த்தம் அக்னி தீர்த்தம் ஆகும். மாசி மாதத்தில் பிரம்மோற்சவமும் தை மாதத்தில் பூசத் திருவிழாவும் மிகவும் சிறப்புப் பெற்றது.

Kulittalai - Kadambavaneswarar - Nayanmars

Ammam sannidhi
மாசி மகப் பெருவிழாவையொட்டி தேரோட்டம்: இந்தக் கோயிலில், மாசி மகப் பெருவிழாவையொட்டி, குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில் பெரிய தேரோட்டம் விமரிசையாக நடந்தது. குளித்தலை கடம்பவனேஸ்வரர்கோயில், முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர் கோயில் மாசி மகப்பெருவிழா ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியான காலை 10 மணியளவில், திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெறும். இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். நேர்த்திக் கடனாக, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவர். பழமை போற்றும் விழக்களில், இது தொடர்ந்து நடந்து வருகிறது.

Kulittalai - Kadambavaneswarar - Dhakshinamurthy

Kulittalai - Kadambavaneswarar - Lingotbavar

கல்வெட்டு கூறும் விவரங்கள்: பாகையென்பது தொண்டைநாட்டில் திருக்கூவமென்னும் தலத்துக்கு அருகில் உள்ளது பாகசாலை யென்னும் ஊர். அவ்வூரின் பெருந்தனவந்தர் சரவண முதலியார் என்பவர் சற்றேறக்குறைய 200 வருடங்களுக்கு முன்பு திரிசிராப்பள்ளி நவாபினிடம் மந்திரியாக இருந்தவர். அவர் இத்தலத்தில் இருந்த திருவாவடுதுரை ஆதீனத்து மடத்தில் மடபதியாக இருந்தவரிடம் நண்பராக இருந்தார். அவ்விருவர்களும் சேர்ந்து கடம்பந்துறைக்கோயிலை புதுப்பித்து தேர்-திருத்தேர், திருவாபரணம் முதலியவை செய்து வைத்திருக்கின்றார்கள். பல ஜமீன்தார்கள் சரவண முதலியாரின் தெய்வபக்தி முதலியவற்றை உணர்ந்து இவருக்குப்பல கிராமங்களை செப்புச்சாஸனம் மூலமாக அளித்திருக்கிறார்கள். சரவண முதலியாரின் உருவம் கடம்பந்துறைக்கோயில் தூணில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கல்வெட்டு மூலம் தெரியவருகின்றது[9].

Kulittalai - Kadambavaneswarar - Saptamata etc

Kulittalai - Kadambavaneswarar - Muruga, Valli, Sena

Kulittalai - Kadambavaneswarar - broken pillars etc

உடைந்த சிற்பங்கள் முதலியவை: கோவிலைச் சுற்றி வரும்போது, இடது மற்றும் வலது பக்கங்களில் உடைந்த சிற்பங்கள், தூண்கள் முதலியன காணப்படுகிறன.இடது பக்கத்தில் விநாயகர் மற்றும் கையில் கொம்பு வைத்திருக்கும் ஒரு துறவியின் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவையெல்லாம் எங்கேயிருந்தன என்று தெரியவில்லை. அதேபோல, வலது பக்கம், பெரிய ராமர் சிலை உடைந்த நிலையில் காணப்படுகிறது. வலது பக்க மூளையில், தூண்கள், உடைந்த சிற்பங்களின் பாகங்கள் குவித்து வைக்கப் பட்டிருக்கின்றன. இவையெல்லாம், இக்கோவிலைச் சேர்ந்ததா அல்லது வேறு கோவிலிலிருந்து எடுத்துவரப் பட்டதா என்று தெரியவில்லை. உடைந்த ராமர் சிலை நிச்சயமாக, இருந்ட ஒரு வைஷ்ணவ கோவிலைக் காட்டுகிறது. லிங்கத்தின் பின்னால் இருக்கும் சப்தமாதர் உருவங்கள், சக்தி வழிபாட்டுஸ்தலம் இருந்ததையும்காட்டுகிறது.

© வேதபிரகாஷ்

17-05-2019

Kulittalai Saptamata

[1] தினகரன், குளித்தலை கடம்பவனேஸ்வரர் தல வரலாறு, 2015-02-03@ 12:42:58

[2] http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=7441

[3] விகடன், காசிக்கு நிகரான கடம்பவனேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழாகுளித்தலை கோலாகலம்!, துரை.வேம்பையன் நா.ராஜமுருகன், வெளியிடப்பட்ட நேரம்: 21:14 (19/02/2019) கடைசி தொடர்பு:21:14 (19/02/2019).

[4] https://www.vikatan.com/news/tamilnadu/150164-kadambavaneswarar-temple-car-festival.html

[5] தினமணி, கருவறையில் சிவனுக்கு பின்புறமாக சப்த கன்னியர்கள், பார்வதி அருண்குமார், 2013/12/06

[6] திருவண்ணாமலை தேவி, அபிதகுசலாம்பாள் அல்லது உண்ணாமுலை அம்மாள் எனப்படுவதை கவனிக்கலாம்.

[7]http://astrology.dinamani.com/sections/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9

[8]  சப்தமாதர்களைப் பற்றிய புதுகதைகள் எவ்வாறு  புனையப் படுகின்றன என்பதனைக் கவனிக்கலாம். சப்தரிஷிகளின் மனைவியர், ஏழு பத்தினிப் பெண்களாகக் கருதப் படுவர். பிறகு, அவர்கள் கன்னிகளாக மாற்றப் பட்டதை கவனிக்கலாம்.

[9] கடம்பர் உலா-உ.வே.சாமிநாத அய்யர் குறிப்புரை-செந்தமிழ்ப் பிரசுரம்-எண்.67. மதுரைத் தமிழ்ச் சங்க முத்திராசாலை, மதுரை. பதிப்பாண்டு-1932.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in கடம்பந்துறை, கடம்பவனநாதர், கடம்பவனம், கடம்பவனேஸ்வரர், கடம்பேசுவரர், கடம்பை, குளித்தலை, சாமுண்டி, திருஈங்கோய்மலை, தூம்ரலோசனன், பாலகுஜலாம்பாள், பாலகுஜலாம்பிகை, பிராம்மி, மகேஸ்வரி, முருகன், முற்றிலா முலையம்மை, வாராகி, வைஷ்ணவி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s