சுந்தமூர்த்தி நாயனார் அவதரித்த திருநாவலூர் தலத்தை பிரச்சினைக்குள்ளாக்கும் பக்தர்கள், சைவாச்சாரியாரிகள் மற்றவர் – சைவத்தில் பிரிவுகள் ஏற்படுத்தும் காரியங்கள் தேவையா? [2]

சுந்தமூர்த்தி நாயனார் அவதரித்த திருநாவலூர் தலத்தை பிரச்சினைக்குள்ளாக்கும் பக்தர்கள், சைவாச்சாரியாரிகள் மற்றவர்சைவத்தில் பிரிவுகள் ஏற்படுத்தும் காரியங்கள் தேவையா? [2]

Thirunavalur proprty purchased and registered-4

இப்படம் தில்லை கார்த்திகேயசிவம் அவர்களின் கட்டுரையில் / பேஸ்புக்கில் வெளிய்யானது – இங்கு ஆராய்ச்சிற்காக உபயோகப் படுத்தியதற்கு உரிய முறையில் நன்றி தெரிவிக்கப் படுகிறது.

Thirunavalur proprty purchased and registered-5

இப்படம் தில்லை கார்த்திகேயசிவம் அவர்களின் கட்டுரையில் / பேஸ்புக்கில் வெளிய்யானது – இங்கு ஆராய்ச்சிற்காக உபயோகப் படுத்தியதற்கு உரிய முறையில் நன்றி தெரிவிக்கப் படுகிறது.

Thirunavalur proprty purchased and registered-6

தில்லை கார்த்திகேயசிவம் கொடுக்கும் விவரங்கள்சம்பந்தர் மடம் இடம் அபகரித்தல்: பேஸ்புக்கில் இவர் கொடுத்துள்ள விவரங்கள் சுருக்கமாகக் கொடுக்கப் படுகிறது. 1990 ஆம் ஆண்டு சுந்தரர் மடம் நிர்மாணம் செய்த இடத்தில், தங்கள் நிலம் சேர்ந்துள்ளது என்று திருநாவலூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர் ஆட்சேபம் செய்துள்ளார். ஸ்ரீ சுந்தரர் மடம் அமைந்துள்ள இடம் சுமார் 18 சென்ட் அளவுடையது. இதில் சுமார் 8 சென்ட் தங்கள் பாகத்தில் உள்ளது என்று அந்த கிராம நபர் ஆட்சேபம் தெரிவிக்க சிவாச்சாரியார்கள் கலக்கமுற்றனர். காரணம் ஆக்காலத்தில் சிவாச்சாரியார்கள் மிகவும் சிரமப்பட்டே, தங்களுக்கு பூரணமான வருமானம் இல்லாத நிலையில், ஸ்ரீ சுந்தரர் மீது கொண்ட அன்பின் காரணமாக மடத்தை எவ்வித பூஜைகள் குறைவின்றியும் ஒன்று சேர்ந்து நடத்திவந்தார்கள். இந்நிலையில், ஸ்ரீ சுந்தரர் மடமாக எழுப்பியுள்ள பூமியில் ஆட்சேபம் எழுந்துள்ளது என்றபொழுது இதை எவ்வாறு தீர்ப்பது என்று தவித்தனர். ஊர்பெரியவர்கள் முன்னிலையில், ஆட்சேபம் தெரித்தவரிடம் சிவாச்சாரியார்கள் சமாதானம் பேசினார்கள். பேச்சுவார்த்தை முடிவில் ஆட்சேபம் தெரிவித்தவர் நிலம் எந்தளவுக்கு உள்ளதோ, அதற்க்கு சமமான தொகை அவரிடம் கொடுப்பது என்று முடிவானது. கோவை செட்டிப்பாளையம் வேலுச்சாமிகுருக்கள் உதவ முன்வந்து. கொங்கு ஆதிசைவர்கள் வசூல் செய்த ரூ 7000 ஆட்சேபம் செய்த நபரிடம் தரப்பட்டது.

Thirunavalur proprty purchased and registered-7

இப்படம் தில்லை கார்த்திகேயசிவம் அவர்களின் கட்டுரையில் / பேஸ்புக்கில் வெளிய்யானது – இங்கு ஆராய்ச்சிற்காக உபயோகப் படுத்தியதற்கு உரிய முறையில் நன்றி தெரிவிக்கப் படுகிறது.

Thirunavalur proprty purchased and registered-8

சமாதானம் செய்த பிறகும் நிலம் இருவர் பெயர்களில் இருந்தது: 24-04-1992 ஆண்டு, கொண்டாடும் பாகபாத்திய விடுதலை-ஆவணம் எழுதி பத்திரப்பதிவு திருநாவலூர் சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிவு செய்யப்பட்டது. திருநாவலூர் உளுந்தூர்பேட்டை தாசில்தார் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால், 15/03/2013 அன்று உளுந்தூர்பேட்டை தாசில்தார் அவர்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் சுந்தரர்மடம் நிலம் சார்ந்த தகவல்கள் கேட்டபொழுது, சுந்தர் மடம் கூட்டுப்பட்டாவில் உள்ளது என்றும், சுந்தரர் பெயரிலேயே 4.50 ஏர்ஸ் அதாவது சுமார் 11-சென்ட் நிலமும்,கோவை வேலுச்சாமி குருக்கள் பெயரில் 3,50 ஏர்ஸ் நிலம் அதாவது சுமார் 8 சென்ட் நிலமும் உள்ளதை அரசு வருவாய் பதிவேடுகளின்படி தாசில்தார் பதிலாக தந்துள்ளார்கள்.

Thirunavalur proprty purchased and registered

இப்படம் தில்லை கார்த்திகேயசிவம் அவர்களின் கட்டுரையில் / பேஸ்புக்கில் வெளிய்யானது – இங்கு ஆராய்ச்சிற்காக உபயோகப் படுத்தியதற்கு உரிய முறையில் நன்றி தெரிவிக்கப் படுகிறது.

Thirunavalur proprty purchased and registered-2

இப்படம் தில்லை கார்த்திகேயசிவம் அவர்களின் கட்டுரையில் / பேஸ்புக்கில் வெளிய்யானது – இங்கு ஆராய்ச்சிற்காக உபயோகப் படுத்தியதற்கு உரிய முறையில் நன்றி தெரிவிக்கப் படுகிறது.

Thirunavalur proprty purchased and registered-3

2000லிருந்து முறை மாறிப் போன சமாச்சாரங்கள், ஆசாரங்கள்[1]: 1998 ஆம் ஆண்டு திருநாவலூர் ஸ்ரீ சுந்தரர் ஆராதனை அறக்கட்டளை என்ற அமைப்பு சிவாச்சாரியார்களால் ஏற்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள பல சிவாச்சாரியார்கள் உடலாலும், மனதாலும், பொருளாலும் தொண்டு செய்து ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை 2006ல் பூர்த்தி செய்தார்கள். 2007 ஆம் ஆண்டு மீண்டும் திருமடம் திருப்பணி ஆரம்பிக்கவிருந்த நிலையில் கோயில் மற்றும் மடத்தின் குருக்களுக்கு சில தனிப்பட்ட குடும்ப சங்கடங்கள் ஏற்பட்டது. திருநாவலூரில் இரண்டு ஆதிசைவ குருக்கள் குடும்பம் உள்ளது. இவர்களில் மூத்தவர் சிவஸ்ரீ ராமநாதகுருக்கள் மற்றும் வாரிசுகள். இளையவர் சிவஸ்ரீ. சம்பந்த குருக்கள் &வாரிசுகள். இவர்கள் இருவருக்கும் பெரியகோயில் என்ற ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் கோயிலில் 15-15 நாள் பூஜை செய்து வருவது முறையாக இருந்தது. 2000லிருந்து கூட்டம் வர ஆரம்பித்தது.

Navalur issue- March -2018, Dinamalar

திராவிடத்துவம் நுழைந்தது  – சைவாச்சாரியர்களைப் பிரித்தது: 2000 முதல் 2010 வரையிலான காலங்களில் சரியை, கிரியை வழி மூலம் இறைவனை அடைதல் பிறவின்பயன் என்றபடிக்கு, உழவாரம் செய்தல், தீபம், தூப தொண்டுகள், முற்றோதல், திருத்தலயாத்திரை என்ற அடியார் இலக்கணத்தோடு செயல்பட்டோர் பலர். இதேகாலத்தில், கடந்து ஐம்பது வருட திராவிடவாசத்தில் இருந்து விதிவசமாக சிவகோலம் கொண்டோர் சிலர். இவர்களுக்கு சிவக்கோலம் கொண்டாலும் பழைய திராவிடவாசம் விடவில்லை. எனவே முடிந்தளவு சைவசமயத்தில் திராவிட கருத்துகளை இறக்குமதி செய்தனர். 2010 முதல் திருநாவலூர் சுந்தரர் திருமடம், வழக்கு பிரச்சனை என இன்று வரை இருந்துவருகின்றது. இன்று திருநாவலூரில் திருப்பணி செய்பவர்களுக்கு, திருப்பணி செய்வது மட்டுமே நோக்கமல்ல. அதற்க்கு மேலும் மடத்தை ஆக்கிரமிக்கும் எண்ணம், மடத்தில் இருந்து சிவாச்சாரியார்களை வெளியேற்றும் எண்ணம் உள்ளது என்பது அவர்கள் செயல்பாடுகளால் உணரமுடிகின்றது. அதாவது, திராவிடத்துவ அதிகாரத்தைப் பயன்படுத்தி, இம்மடத்தை புதியதாகக் கட்டி, வியாபாரமுறையாக்க ஆரமொஇத்த திட்டம் தெரிகிறது.

Navalur issue- March -2018, Dinamalar.Prasad distribution

1500 வருட புரதான கட்டிடம் இடிக்கப் பட்டது: அடுத்து சுந்தரர் திருப்பணியில் வரலாற்று ரீதியாக 1500 ஆண்டுகள் பந்தம் கொண்ட, கடந்த நூறு ஆண்டுகளாக மடத்தை நிர்வாகித்து சென்ற கும்பாபிஷேகம் செய்த தமிழக சிவாச்சாரியார்களை மிரட்டி ஒதுக்குவது ஏன் என்ற கேள்வி எழுகின்றது. இந்நிலையில் 2012 ஆண்டு டிசம்பர் மாதம் கூனம்பட்டிஆதினம் தலைமையில் சிவாச்சாரியார்கள் ஒன்றினைந்து ஐம்பது ஆண்டுகள் முன்பு கட்டிய திருமடம், பழமை காரணம் காட்டி ஒரே நாளில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பின்பு ஒரு பத்து நாட்களில் புதியதாக தம்பிரான் தோழர் அறக்கட்டளை -உளுந்தூர்பேட்டை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அது சுந்தரர் திருமடத்தை புதியதாக திருப்பணி செய்ய உள்ளதாகவும், அதற்க்கு அறநிலையத்துறையிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும், மடம் பழமையாக உள்ளதால், அறநிலையத்துறை அனுமதி பெற்று பழைய மடம் இடிக்கப்பட்டதாகவும், தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்தது.. 23-01-2013 அன்று அறநிலையத்துறை அனுமதியோடு திருப்பணி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது . உண்மையில், இவ்வாறு 1500 ஆண்டுகள் புராதனமான மண்டபம் இடிக்கப் பட்டதே, சரித்திரத்தை அழித்ததற்கு சமமாகும்.  சரித்திராசிரியர்கள், அகழ்வாய்வு வல்லுனர் மற்ற சம்பந்தம் உள்ளவர்கள் எப்படி அமைதியாக இருந்துள்ளனர் என்று தெரியவில்லை.

Navalur issue- March -2018, news cutting.2

மாணிக்க வாசகர் சொன்னதை மெய்ப்பிக்கும் போலி சைவர், திராவிடநாத்திகர், கம்யூனிஸ்ட் மற்ற இந்துவிரோத வகையறாக்கள்:

மாணிக்க வாசகர் அன்று சொன்னது, இன்றும் பொறுந்துகிறது:

புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்

தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி

முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும்

ஆறு கோடி மாயா சக்திகள்

வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின

ஆத்தம் ஆனார் அயலவர் கூடி

நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்

சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்

பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்

விரதமே பரம் ஆக வேதியரும்

சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்

சமய வாதிகள் தம்தம் தங்களே

அமைவது ஆக அரற்றி மலைந்தனர் மிண்டிய மாயா வாதம் என்னும்

சண்ட மாருதம் சுழிந்து அடித்துத் தாஅர்த்து

உலோகாய தமெனும் ஒள் திறப்பாம்பின்

கலா பேதத்த கடுவிடம் எய்தி

அதில் பெருமாயை எனைப்பல சூழவும்

தப்பாமே தாம் பிடித்தது சலியாத்

தழலது கண்ட மெழுகு அது போல…….

மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது

அருபரத்து ஒருவன் அவனியில் வந்து

குருபரன் ஆகி அருளிய பெருமையைச்

சிறுமை என்று இகழாதே….”  என்கிறார்.

சம்பந்தர் சமணர்களைப் பற்றி சொன்னது, இவர்களுக்கும் பொருந்தும்:

புனல் துறந்த அமணர் குண்டர் சாக்கியர்

தொலையாது அங்கு அலர் தூற்ற

துப்புரவு ஒன்று இல்லா வெற்று அரையர்

மாசு அடைந்த மேனியினார்

ஊத்தை வாய்ச் சமணர்

ஆனை மாமலை ஆதியாய இடங்களில்

பல அல்லல் சேர் ஈனர்கட்கு……

திராவிடத்துவாதிகள், பெரியாரிஸ நாத்திகவாதிகள், இந்துவிரோதிகள் முதலியோர், இன்றும், இத்தகைய துரோகங்களில், சூழ்ச்சிகளில், இடிப்புகளில் ஈடுபட்டிருப்பதை காணலாம். “எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற பிரச்சாரத்தில், ஒஊணூல் போட்டுக் கொண்டு, சிலர், பெரியார் சிலைக்கு மாலை போட்ட கேலிக் கூத்தை எல்லாம் சைவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது திண்ணம். உண்மையான, சைவன், சிவனிடத்தில் முறையிடுவான் அன்றி, சைவிரோதிகள், இந்துவிரோதிகளுடன் சேர்ந்து கொண்டு, பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டார்கள். ஆனால், அதெல்லாம் அரங்கேறியது.

© வேதபிரகாஷ்

10-11-2018

Navalur issue- March -2018, news cutting

[1] பேஸ்புக்கில் தில்லை கார்த்திகேயப் சிவம் என்பவர் எழுதியவற்றிலிருந்து சுருக்கம்.

The researcher duly acknowledges  the photos used taken from Thillai KartikeyaSuvam from his Facebook postings and thanks him for his recording, appreciating his efforts taken for the cause.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in உளுந்தூர்பேட்டை, உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, கள்ளக்குறிச்சி, கார்த்திகேயசிவம், சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, சுந்தர மூர்த்தி நாயனார், சுந்தரமூர்த்தி, சுந்தரர், தம்பிரான் தோழர், தம்பிரான் தோழர் அறக்கட்டளை, தாசில்தார், திருநாவலூர், திருவாமூர், தில்லை கார்த்திகேயசிவம், நாவலூர், பாதிரிப்புலியூர், வழக்கு, வழிபாடு, விழுப்புரம் மாவட்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s