சுந்தமூர்த்தி நாயனார் அவதரித்த திருநாவலூர் தலத்தை பிரச்சினைக்குள்ளாக்கும் பக்தர்கள், சைவாச்சாரியாரிகள் மற்றவர் ஏன் அப்படி செய்கின்றனர் [1]

சுந்தமூர்த்தி நாயனார் அவதரித்த திருநாவலூர் தலத்தை பிரச்சினைக்குள்ளாக்கும் பக்தர்கள், சைவாச்சாரியாரிகள் மற்றவர் ஏன் அப்படி செய்கின்றனர் [1]

Sundarar Mantap work started 23-01-2013.Tirunavalur

சுந்தர மூர்த்தி நாயனார் பிறந்த இடம்: கடலூருக்கு செல்லும் போதெல்லாம், நேரம் கிடைக்கும் போது, திருவாமூர் மற்றும் திருநாவலூர் சென்று கோவில்களைப் பார்த்து விட்டு வருவது வழக்கம். 1988லிருந்து சுமார் 15-16 தடவை சென்றிருப்பேன். அப்பொழுதெல்லாம் கேமரா இல்லாததால், பார்த்டு விட்டு வருவதோடு சரி. 2016ல் சிலர் “பல்லவர் கால குபேரன் புடைப்பு சிற்பம் திருநாவலூர் கோவிலில் கண்டுபிடிப்பு,” என்று சொல்லிக் கொண்டு செய்தியாக வந்தது ஞாபகம் இருந்தது. அதனால், அதனை புகைப்படம் எடுத்து, ஏற்கெனவே இருந்ததை, ஏதோ தாங்கள் தாம் கண்டு பிடித்தே என்று தம்பட்டம் அடித்துக் கொண்டதை மறுத்து, தனியாக ஒரு கட்டுரையை பதிவு செய்தேன்[1]. உணமையை மறைக்கும் போக்கு ஆராய்ச்சியாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களிடம் அதிகமாகவே இருக்கின்றது[2]. அப்பொழுது, சுந்தர மூர்த்தி நாயனார் பிறந்த இடம் எது என்ற கேட்ட பொழுது, இரண்டு இடங்களைக் காட்டுவார்கள். சரி, இதெல்லாம் சகஜம் தான் என்று பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதிலும்ஆத்தனை விவகாரம் இருக்குமா என்று நினைக்கவில்லை. கடந்த ஏப்ரல் 2017ல் சென்றபோது, குறிப்பிட்ட மண்டபம் கட்டுமானம் ஓரளவுக்கு முழுமை அடையும் நிலையில் இருந்ததைக் கண்டதால், கீழ்கண்டவாறு பதிவு செய்தேன்[3].

Sundarar bith place

சுந்தரர் பிறந்த இடத்தில் மண்டம் கட்டப்படுகிறது[4]: சுந்தரமூர்த்திநாயனார் அவதரித்த இடத்தில் திருமடம் கட்டும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது. 23-01-2013 அன்று ஆரம்பித்தது. இதில் ஒரு கட்டமாக பக்கவாட்டு தூண்கள் நிலை நிறுத்தும் பணி ஜூன் 2016ல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கிரேன் மூலம் பக்கவாட்டு தூண்கள் நிலை நிறுத்தப்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட ஸ்தபதிகள் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை தம்பிரான் தோழர் அறக்கட்டளை, பவானி சிவனடியார்கள் திருக்கூட்டம், திருநாவலூர் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர். அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோவில், திருநாவலூர், திருநாவலூர் அஞ்சல், உளுந்தூர்பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம் – 607 204. இக் கோயில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.  ஆலய குருக்கள் – முத்துசாமி சிவம் (செல்பேசி 94433 82945); செந்தில் குருக்கள் (செல்பேசி 94861 50809).

Sundarar bith place.Mantap side view- LHS

இந்த ஆலயத்தில் திங்கள்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி இறைவனை வழிபட்டால், நீண்ட நாட்களாக தீராமல் இருக்கும் வழக்குகளும் தீர்ந்து வெற்றி கிடைப்பது நிச்சயம்[5]: திருநாவலூர் கோவிலைப் பற்றி இப்படியெல்லாம் விவரிக்கப்பட்டது. “வழக்கறுத்தீஸ்வரர் தன்னிடம் வந்து வேண்டும் பக்தர்களின் வழக்குகளை தீர்ப்பதுடன், வழக்குக்கு மூல காரணமாக விளங்கும் காரணத்தைக் கண்டறிந்து வழக்குகளை தீர்த்துவைக்கிறார். இந்த ஆலயத்தில் திங்கள்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி இறைவனை வழிபட்டால், நீண்ட நாட்களாக தீராமல் இருக்கும் வழக்குகளும் தீர்ந்து வெற்றி கிடைப்பது நிச்சயம் என்பது இவ்வாலயத்தின் சிறப்பாகும்,” என்று சிறப்பித்த கோவில் பக்கத்தில் கட்டப்பட்ட இன்னொரு கோவில் இன்னொரு வழக்கைக் கொண்டு வந்து விட்டது போலும். மடத்தை கோவிலாக மாற்றிக் கட்டு, சிவனடியார்களே, போட்டியாகக் கட்டி, கும்பாபிஷேகம் செய்த செய்தி வந்துள்ளது. “இந்த ஆலயத்தில் திங்கள்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி இறைவனை வழிபட்டால், நீண்ட நாட்களாக தீராமல் இருக்கும் வழக்குகளும் தீர்ந்து வெற்றி கிடைப்பது நிச்சயம்” அதற்காகவே போட்டி-கோஷ்டியினர் திங்கட்கிழமையில் சடங்குகளை ஆரம்பித்தனர் போலும்[6].  இதற்கு சிவன் மறுபடியும் வந்து தீர்ப்பு சொல்வாரா என்று தெரியவில்லை.

Navalur issue 05-11-2018, Dinamalar

ஆகமங்களை மோதும் நவீன சிவாச்சாரியார்கள்: உளுந்தூர்பேட்டை அருகே ஆகம விதிகளை மீறி நடைபெற உள்ள நம்பிஆரூரான் ஆலய கும்பாபிஷேக விழாவை நிறுத்த வேண்டும் என சிவாச்சாரியார்கள் கோரிக்கை விடுத்தனர்[7]. இது குறித்து, தென்னிந்திய திருக்கோயில் அர்ச்சகர்கள் பரிபாலன சபையைச் சேர்ந்த மாயவரம் ஏ.வி.சுவாமிநாதன் தலைமையிலான சிவாச்சாரியார்கள் விழுப்புரத்தில்  05-11-2018, திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது[8]: “உளுந்தூர்பேட்டை வட்டம்,  திருநாவலூர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமடத்தை பல நூற்றாண்டுகளாக சிவாச்சாரியார்கள் பாதுகாத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். முன்னோர்களைத் தொடர்ந்து தற்போது நாங்கள் பராமரித்து வருகிறோம். இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருப் பணிகள் செய்து தருவதாக, அந்தப் பகுதி மக்கள் உள்ளிட்ட சில அமைப்பினர் கடந்த 2013-ஆம் ஆண்டில் முன்வந்து  திருப் பணிகளை செய்தனர். மடத்தை புதுப்பித்து கோயிலாக கட்டமைத்தனர்தற்போது கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதில் ஆகம விதிகளை மீறி அமாவாசை தினத்தில் (நவ.7-இல்) கும்பாபிஷேக விழாவை வைத்துள்ளனர். எனவே, இந்த விழாவை நிறுத்த வேண்டும். இது தொடர்பாக, நீதிமன்றத்தில் முறையிட்டும் பலனில்லை.   இது தொடர்பாக,  திங்கள்கிழமை மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளோம்.  விழாவை நிறுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆகம மந்திரம் சொல்லாமல், அமாவாசை தினத்தில் கும்பாபிஷேகம் நடத்துவது சரியல்ல. இதுதொடர்பாக, தமிழக அரசும்,  அறநிலையத் துறையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.

Navalur issue 07-11-2018, Dinamalar

கும்பாபிசேகம் நடந்து முடிந்தது: நீதிமன்றம், மாவட்ட கலெக்டர், போலீஸ் எல்லோரிடத்தில் கொடுத்த மனுக்கள், புகார்கள் அனைத்தையும் மீறி, கும்பாபிசேகம் முயற்சிகள் தொடர்ந்தன[9]. இதனிடையே, கும்பாபிஷேக விழாவை அறிவித்தபடி நவ.7-ஆம் தேதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் திருநாவலூர் தம்பிரான் தோழர் அறக்கட்டளை, பவானி சிவனடியார் திருக்கூடம் மற்றும் ஊர் மக்கள் சார்பில் நடைபெற்றன. இந்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், அவர்கள் கண்டு கொள்ளவில்லை[10]. 07-11-2018 அன்று மாலை 5 மணிக்கு முதற்கால வேள்வி வழிபாடு நடந்தது. 6.15க்கு சுந்தரர் வாழ்க்கை வரலாறு புடைப்பு சிற்பம் நிறுவுதலும், 6.30 மணிக்கு திருத்தேர் திருப்பணி துவக்கம் நடைபெற்றது. தொடர்ந்து காலை திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா நடந்தது[11].

© வேதபிரகாஷ்

10-11-2018

Sundarar bith place.work is going on - sculpture

[1] வேதபிரகாஷ்,115-120 வருடங்களுக்கு முன்னர் அறியப்பட்டிருந்த ஶ்ரீகலிநாரை சிற்பத்தை 2016ல் கண்டுபிடித்தேன் என்று சொல்லிக்கொள்வதேன்? , ஏப்ரல்.28, 2017.

[2] https://indianhistoriographymethodology.wordpress.com/2017/04/25/tirunavalur-srikalinarai-pallava-sculpture-existed-now-claimed-as-discovered/

[3] வேதபிரகாஷ், திரு சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த நாவலூர், பக்தஜனேஸ்வரர்கோவில், பிறந்த இடத்தில் மண்டபம் கட்டப்படுதல் முதலியன! (2), ஏப்ரல்.28, 2017.

[4] https://sivatemple.wordpress.com/2017/04/28/tirunavalur-birth-place-of-sundarar-mantap-constructed-in-his-memory/

[5] தினமணி, வழக்கு விவகாரங்களில் வெற்றி தேடித் தரும் திருநாவலூர், By என்.எஸ். நாராயணசாமி  |   Published on : 03rd November 2016 03:52 PM

[6] http://www.dinamani.com/specials/parigara-thalangal/2016/nov/04/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-2591897.html

 

[7] தினமணி, நம்பிஆரூரான் ஆலய கும்பாபிஷேக விழாவை நிறுத்த வேண்டும்: சிவாச்சாரியார்கள், By DIN  |   Published on : 06th November 2018 09:28 AM.

[8] http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/nov/06/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3034215.html

[9] தினமலர், திருநாவலூர் நம்பியூராரின் கோவிலில் அமாவாசையில் கும்பாபிஷேகம் நடத்த முயற்சி, பதிவு செய்த நாள். நவம்பர் 05, 2018.11.29..

http://temple.dinamalar.com/news_detail.php?id=85922

[10] தினமலர், திருநாவலூரில் ஆகம விதிகளை மீறி குடம்முழுக்கு, பதிவு செய்த நாள். நவம்பர் 08, 2018.11.32.

[11] http://temple.dinamalar.com/news_detail.php?id=86000

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அத்தாட்சி, அத்துமீறல், அமாவாசை, அறநிலையத் துறை அதிகாரி, அழிப்பு, ஆக்கிரமிப்பு, ஆலயம், இந்து அறநிலையத் துறை, இந்து அறநிலையத் துறை அதிகாரி, உளுந்தூர்பேட்டை, உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, கடலூர், குடமுழுக்கு, கும்பாபிஷேகம், சங்கம், சடங்கு, சட்டம், சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, சிவாச்சாரி, சுந்தர மூர்த்தி நாயனார், தம்பிரான் தோழர், திருக்கூட்டம், திருக்கோவில், திருத்தொண்டர், திருவாமூர், நாயன்மார், நாவலூர், பவானி சிவனடியார்கள் திருக்கூட்டம், விழுப்புரம் மாவட்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s