சுந்தமூர்த்தி நாயனார் அவதரித்த திருநாவலூர் தலத்தை பிரச்சினைக்குள்ளாக்கும் பக்தர்கள், சைவாச்சாரியாரிகள் மற்றவர் நாயன்மார் முதலியோரைவிட பெரியவர் ஆக முடியாது! [3]

சுந்தமூர்த்தி நாயனார் அவதரித்த திருநாவலூர் தலத்தை பிரச்சினைக்குள்ளாக்கும் பக்தர்கள், சைவாச்சாரியாரிகள் மற்றவர் நாயன்மார் முதலியோரைவிட பெரியவர் ஆக முடியாது! [3]

Navalur issue- March -2018, Dinamalar

திருநாவலூர் தம்பிரான் தோழர் அறக்கட்டளை திட்டமிடப்பட்டது. 2013ல் தினமலரில் வந்த செய்தி[1]: திருநாவலூரில் பிறந்த சுந்தரர் “பித்தாபிறை சூடி’ என தேவாரம் பாடினார். இவருக்கு திருநாவலூரில் மடம் நிறுவப்பட்டு காலப்போக்கில் பாழடைந்தது. இந்த மடத்தை தம்பிரான்தோழர் அறக்கட்டளை சார்பில் சீரமைக்க திட்டமிடப்பட்டு, பணிகள் மும்முரமாக நடந்து வந்ந்தன. உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூரில் கி.பி.,7ம் நூற்றாண்டில் பிறந்தவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். 63 நாயன்மார்களில் ஒருவரான இவர், தேவாரம் பாடிய மூவரில் ஒருவர் என்ற பெருமைக் குரியவர். இவர் பிறந்த இடத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆதிசைவ சிவாச்சாரியார்களால் சுந்தரமூர்த்தி சுவாமிக்கு மடம் நிறுவப்பட்டது. கடந்த 1975ம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஆதிசைவ சிவாச்சாரியார்களும் ஒன்று சேர்ந்து மக்கள் ஒத்துழைப்புடன் திருமடத்தை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்தனர். கால போக்கில் ஆதிசைவ சிவாச்சாரியார்கள் பலர் இடம் பெயர்ந்ததாலும், போதிய விழிப்புணர்வு இல்லாததால், மடத்தில் தினசரி நித்ய பூஜைகள் மட்டுமே நடந்தன. மடம் பராமரிப்பின்றி இருந்து வந்தது. இந்நிலையில் திருநாவலூர் தம்பிரான் தோழர் அறக்கட்டளை சார்பில் மடத்தை திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்திட திட்டமிடப்பட்டது[2].

Thirunavalur 05-03-1965

ஆதிசைவ சிவாச்சாரியார்கள் எதிர்ப்பு, அறநிலைய அனுமதி: இதையடுத்து ஆதிசைவ சிவாச்சாரியார்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. இதற்கிடையே ஊர் பொதுமக்கள் தரப்பில் சுந்தரர் மடம் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் பேரில் மடம் கட்டுவதற்காக அறக்கட்டளை சார்பில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதையடுத்து சுந்தரர் மடத்தை கட்டுவதற்கு கடந்த 10.11.2012 அன்று பக்தஜனேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி ஆணை வழங்கினார். இதனைத் தொடர்ந்து 25.11.2012ம் தேதி பாழடைந்த சுந்தரர் மடத்தின் கட்டடங்கள் இடிக்கப்பட்டன. பின் திருப்பணி துவக்க விழாவிற்கு தேதி குறிப்பிட்டு, பத்திரிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. இதையடுத்து கடந்த ஜனவரி 23ம்தேதி 2013 அன்று திருப்பணிகள் துவங்கியது.

Thirunavalur amount collected-receipt-1

ஒரு கோடி செலவில் திட்டம், பழைய வீடு / மடம் இடிப்பு: இதில் கோவில் ஆய்வாளர் சுரேஷ், செயல் அலுவலர் முத்துலட்சுமி கலந்து கொண்டனர்.அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சுந்தரர் மடத்தை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வந்தது. கருவறைக்காக கருங்கற்கலால் ஆன பேஸ் மட்டம் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கோவில் பட்டியிலிருந்து பாலீஷ் செய்யப்பட்ட 60 டன் சுகி வந்து இறங்கியுள்ளன. சிவனடியார்கள் உதவியுடன் பணிகளை நிறைவு செய்ய இருப்பதாகவும், திருப்பணிகள் நடக்காமல் தடுப்பதற்காக சிலர் விஷம பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் இங்குள்ள ஆதிசைவ சிவாச்சாரியார்கள் மூலம் பாலாலயம் செய்யப்பட்ட சுந்தரர் மடத்திலும், பக்தஜனேஸ்வரர் கோவிலிலும் பூஜைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தனர். திருநாவலூரில் பிறந்த சுந்தரரின் பாழடைந்த மடத்தில் திருப்பணி வேலைகள் துவங்கி இருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு தினமலர் செய்தி 2013ல் வெளியிட்டது. இப்பொழுது “திருநாவலூரில் ஆகம விதிகளை மீறி குடம்முழுக்கு” என்று செய்து வெளியிடுகிறது[3]. அதாவது,மூன்றாண்டுகளுக்கு முந்தியதை மறந்து விட்டது போலும்[4].

Thirunavalur amount collected-receipt-2

தமிழ் பெயரில் சைவத்தை, இந்துமதத்தைப் பிரிக்கு முயற்சிகள்: தமிழகத்தை விட்டு,புலம் பெயர்ந்த தமிழ் பேசும் மக்களிடம், பிரிவினைவாதிகள், 1980களிலிருந்து, தாங்கள் தமிழர், இந்துக்கள் அல்ல என்ற பிரச்சாரத்தை செய்து, தமிழ் பேசும் மக்களைக் குழப்பியுள்ளனர். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ், கனடா, பிரான்ஸ் முதலிய நாடுகளில், ஓரளவுக்கு வெற்றிக் கண்டனர். வியாபாரம், இறக்குமதி-ஏற்றுமதி, சினிமா போன்றவற்றிற்கு உபயோகப் பட்டது என்பதால், உந்த சித்தாந்த கூட்டங்கள் ஒன்றாக செயல்பட்டன. ராஜிவ் காந்தி கொலை, பிரபாகரன் இறப்பு மற்றும் எல்டிடிஇ முடக்கம், தமிழக திராவிட கட்சிகளின் விலக்கம், முதலியவை அவர்களை அதிகமாகவே பாதித்தது. இருப்பினும், மறுபடியும், சன் குடும்ப வியாபார ஆதிக்கம் மற்றும் சம்பந்தப் பட்ட வணிக லாபங்கள், விநியோகம் முதலியவற்றால், கூட்டங்கள் நெருங்கி வர ஆரம்பித்தன. இவைத்தான், பிஜேபி-இந்த்துவ எதிர்ப்புப் போர்வையில், கோவில்களை, சைவ-வைணவ மூலங்களைத் தாக்க ஆரம்பித்தன. இதற்கு கிருத்துவ-துலுக்க கோஷ்டிகளும் துணை போகின, நிதியுதவி செய்தன.

Thirunavalur amount collected-receipt-3

புதிய-நவீன சைவத்துவவாதிகள் சைவர்களைக் குழப்புகிறார்கள்: சைவம் என்று நம்பிக்கைக் கொண்டவர்கள், அதனை உறுதியாக வைத்துக் கொண்டு, தங்களது பாரம்பரியங்களை, மூலங்களை, ஆதாரங்களை ஜாக்கிரதையாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். இன்றைக்கு, உச்சநீதி மன்ற தீர்ப்பு, சட்டம்-அமூல் என்ற போர்வைகளில் சபரிமலையில் நடந்து வரும் நிகழ்ச்சிகளை அறியும், பார்க்கும், அனுபவிக்கும் உண்மையான பக்தர்கள் மனம் நொந்து போவார்கள், இறைவனடிடம் கெஞ்சி அழுவார்கள். அந்நிலையில் தான் உண்மையான சிவபக்தர்கள் உள்ளார்கள். ஏற்கெனவே, சக்திவேல் முருகனார், சுகி.சிவம், போன்றோர், தத்தம் சித்தாந்தங்கள் ரீதியாக, சைவகளில் பிளவுகளை ஏற்படுத்தி விட்டார்கள். நாயன்மார்களை விட தங்களுக்குத் தான் அதிகமாகத் தெரியும் என்ற ரீதியில் செயல் பட்டுக் கோண்டிருக்கிறார்கள்.

Saiva supporting or opposing

சைவ-இந்துக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சமஸ்கிருதம் தமிழ் என்ற இரு மொழிகளை வைத்து ஏற்கனவே இத்தகைய புதிய சித்தாந்தவாதிகள் நம்பிக்கையாளர்களை அதிகமாகவே பாதித்து அவர்களது சடங்குகளை திரிபு விளக்கங்கள் கொடுத்து மாற்றி அமைத்து உள்ளார்கள். கோவில் கும்பாபிஷேக,ம் திருமணம் மற்ற பிறப்பு இறப்பு காரியங்கள் முதலியவற்றை செய்கிறேன் என்ற ரீதியில் வேதங்களை, ஆகமங்களை, ஏற்படுத்தி வைக்கப்பட்டுள்ள சாத்திரங்களை மதிக்காமல் புதிய முறைகளை, அறிமுகப்படுத்தி, மூலங்களை அதிகமாகவே சீரழித்துள்ளார்கள் என்று சொல்லலாம். இந்நிலையில் சைவர்கள் மட்டுமல்லாது மற்ற எல்லா இந்து மத நம்பிக்கையாளர்களும் நடக்கின்ற இந்த செக்யூலரிசம் அல்லது மதசார்பின்மை என்ற போர்வையில் பலவிதமான சித்தாந்திகள் மூலமாக நடந்து வரும் பிரச்சாரங்கள் எதிர்ப்புகள் தாக்குதல்கள் வசனங்கள் முதலியவற்றை சித்தாந்தத்திலும் நம்பிக்கையும் இறை நம்பிக்கை மூலமாகவும் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டிய நிலையுள்ளது ஆகவே அரசு அரசு சார்ந்த மற்ற இயக்கங்கள் குறிப்பாக இத்தகைய இந்து-விரோத கம்யூனிச பெரியாரிஸ அழுத்தத்திலிருந்து, பிரச்சாரங்களிலிருந்து விடுபட்டு தங்களது நம்பிக்கைகளை முறையாக பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது

Saiva supporting or opposing-2

செய்யவேண்டியது என்ன?: இன்றைய காலகட்டத்தில் அரசு கோவில்கள், மடாலயங்கள் மற்றவற்றை சார்ந்த சொத்துக்கள் முதலியவை, அரசு கட்டுப்பாட்டில் இருப்பதால், பலர் மற்ற குறிப்பாக மாற்று மதவாதிகள், எதிர்-சித்தாந்தவாதிகள் ஏன் இந்துவிரோதிகள் போன்றவர்களெல்லாம் கூட அவற்றை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு முறையிலேயே, சட்டங்களை வளைத்து, இந்து அறநிலைய துறை மூலம் அவற்றை முதலில் குத்தகை, வாடகை என்ற நிலையில் இருந்து, பிறகு தமக்குச் சொந்தமாக்கும் மற்றும் ஒரு நிலையில் அந்த சொத்துக்களை அனுபவித்தவர்களுக்கு அதை விட்டுவிட வேண்டும் போன்ற சரத்துக்களை உண்டாக்கி அறநிலையத்துறை மூலமாகவே ஆணைகளைப் பிறப்பித்து தமக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறார்கள் அதுமட்டுமில்லாது, சங்கங்களை உருவாக்கி இத்தகைய போலி சட்டமுறைகளை உருவாக்கவும் அரசு அதிகாரிகள் மற்றவர்களுக்கு செய்து வருகிறார்கள். அதுவே சில பக்தியாளர்களைக் கூட பாதித்து, பொருளாதாரம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் தாங்களும் அதே முறையைக் கையாண்டு சொத்துக்களை கையகப்படுத்த வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்ற ரீதியில் புதியதாக சடங்குகள் உருவாக்கி புதிய மடங்களை உருவாக்கி அதன் மூலம் தங்களது வருவாயைப் பெருக்கிக் கொள்ளுதல் போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் நிலைப்பாடும், சட்டமத்தை வளைக்கும் முறையும் சைவத்துக்கு எதிரான காரியமும் திருமூலர் சொன்ன உபதேசங்களை மறந்து செயல்படுகின்றனர் என்பதும் வெளிப்படையாகவே தெரிகிறது. ஆகவே அவர்கள் மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும் இதுதான் காலத்தின் கட்டாயமாக அவசியமாக அவசரமாக ஆகவேண்டிய நிலை உண்டாகி உள்ளது.

© வேதபிரகாஷ்

10-11-2018

 

Sundara Murthy Nayanar - playing with Rath

[1] தினமலர், சுந்தரர் திருமட திருப்பணி வேலைகள்நெல்லையிலிருந்து கருங்கற்கள் வந்தன, Added : பிப் 06, 2013  00:39.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=641994

[3] தினமலர், திருநாவலூரில் ஆகம விதிகளை மீறி குடம்முழுக்கு, பதிவு செய்த நாள். நவம்பர் 08, 2018.11.32.

[4] http://temple.dinamalar.com/news_detail.php?id=86000

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in ஆதிசைவ சிவாச்சாரி, கருங்கற்கள், கும்பாபிசேகம், கும்பாபிஷேகம், சக்திவேல் முருகனார், சிவாச்சாரி, சுகி சிவம், சுகிசிவம், சேவை, திருநாவலூர், திருப்பாதிரிப்புலியூர், திருவாமூர், நாயன்மார், பக்தஜனேஸ்வரர் கோவில், பட்டா, பழுது பார்த்தல், பவானி சிவனடியார்கள் திருக்கூட்டம், பித்தாபிறை சூடி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to சுந்தமூர்த்தி நாயனார் அவதரித்த திருநாவலூர் தலத்தை பிரச்சினைக்குள்ளாக்கும் பக்தர்கள், சைவாச்சாரியாரிகள் மற்றவர் நாயன்மார் முதலியோரைவிட பெரியவர் ஆக முடியாது! [3]

  1. uthamam17 சொல்கிறார்:

    ‘ஆசைக்கு அடிமை அகில லோகத்திற்கும் அடிமை” – நம் முன்னோர் வகுத்த, :சொரூப தரிசனம்” நமக்கு இன்னும் கிட்டவில்லை. வரலாற்றை அறிய தங்கள் மடல் ஊக்குவிக்கிறது. ‘மயக்கம் கொண்டு வருந்துகிறோம்” தாங்கள் அரும்பாடுபட்டு சேகரித்த தகவல்களை தந்தமைக்கு நன்றி.

    Sent from Mail for Windows 10

    ________________________________

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s