ஒகையூர் கிராமம், மாறி வரும் காலத்தில் சப்த மாதர் கோவில், கன்னிமார் கோவில் முதலியன, அவற்றின் சிறப்பு முதலியன [3]

ஒகையூர் கிராமம், மாறி வரும் காலத்தில் சப்த மாதர் கோவில், கன்னிமார் கோவில் முதலியன, அவற்றின் சிறப்பு முதலியன [3]

Next Devi temple-side view- 5ab

புலிகடியான் மற்றும் மேலமுகத்தையா சிலைகள்.

Pulikadiyan temple- duo-1

புலிகடியான் மற்றும் மேலமுகத்தையா சிலைகள்.

Pulikadiyan temple- Idols on LHS-2

புலிகடியான் மற்றும் மேலமுகத்தையா – மேடைக்கு இடது பக்கத்தில் இருக்கும் சிலைகள்.

Pulikadiyan temple- Idols on RHS-3

புலிகடியான் மற்றும் மேலமுகத்தையா – மேடைக்கு வலது பக்கத்தில் இருக்கும் சிலைகள்.

Pulikadiyan temple- first one LHS view-4

25-09-2015 அன்று கும்பாபிசேகம் நடந்த கோவில்கள்: உடையார் வீடு எனப்படும், வீட்டிற்கு தென்கிழக்கில், ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. எதிரில் வடமேற்கில் சிவன், ஊஞ்சல் அம்மன், சப்த மாதர் கோவில்கள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டது. தங்கச்சி அல்லது சப்தமாதர் கோவில் வளாகத்தில் இடது பக்கம், முன்னரே விவரித்தப் படி சப்தமாதர் மற்றும் “ப” வடிவத்தில் பல சிலைகள் வைக்கப் பட்டிருக்கின்றன. வலது பக்கத்தில் ஐயனார் அதே போல விக்கிரங்களுடம் அமர வைக்கப் பட்டுள்ளார். இவ்வளாகத்தை அடுத்து, ஊஞ்சல் அம்மன், கன்னிமார் கோவில்கள் உள்ளன. 25-09-2015 அன்று இக்கோவில்களுக்கு கும்பாபிசேகம் நடந்துள்ளது.

Next Devi temple-5

லக்ஷ்மி கோவில்…

Next Devi temple-side view- 5a

லக்ஷ்மி கோவில் பக்கவாட்டுத் தோற்றம்

Kurinji Padaiyar Kuladeivam-Kannimar - 10

வைஷ்ணவி, ஆறு தேவதைளுடன்……

Lakhsmi idol, centre

வைஷ்ணவி உட்கார்ந்த நிலையில் காணப்படுகிறது.

புலிகடியான் மற்றும் மேலமுகத்தையா சிலைகள்: புலிகடியான் மற்றும் மேலமுகத்தையா சிலைகள் மேடையில் வைக்கப் பட்டுள்ளன. ஒருவர் புலி மற்றும் இன்னொருவர் சிங்கத்தின் மீது அமர்ந்திருப்பது போல உள்ளது. இடது-வலது பக்கங்களில் பல கற்சிற்பங்கள், சிலைகள் வைக்கப் பட்டுள்ளன. அவையும், சப்தமாதர் “ப” வடிவ அமைப்பு சிலைகள் போலவே உள்ளன. குறிப்பாக தாய் குழந்தையை தோளில் சுமப்பது போன்றவை……இச்சிலைகள் மற்ற சிலைகளை விட பெரிதாக இருக்கின்றன. இடையில் லிங்கம் போன்ற புறத்தோற்றம் ஆனால் பெண் சிற்பமாக இருக்கும் சிலைகள் தாந்திரிக வழிபாட்டை சேர்ந்ததாக உள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை, வந்தவாசி போன்ற இடங்களில் ஜைனர்கள் இடைக்காலத்தில் இருந்திருக்கிறார்கள். ஆகவே, அவர்களும் இத்தகைய தாந்திரிக வழிபாட்டில் ஈடுபட்டிருக்கலாம். ஆகையால், இவையெல்லாம் ஒரே பழைய கோவிலில் இருந்திருக்கலாம்.  பேன்ட்-சர்ட் போட்டுக் கொண்டு கும்பிடுவது போலவும் ஒரு சிலை உள்ளது. அதனால், அது இடைக்காலம் அல்லது மேலும் பிற்பட்டகாலத்தைச் சேர்ந்தது எனலாம்.

Pulikadiyan temple- LHS idols-1a

புலிகடியான் மற்றும் மேலமுகத்தையா சிலைகளுக்கு இடது பக்கத்தில் இருக்கும் சிலைகள் – முதல் முன்று.

Pulikadiyan temple- LHS idols-1b

அடுத்த மூன்று சிலைகள்.

Pulikadiyan temple- LHS idols-1d

அடுத்த ஏழு சிலைகள்.

லக்ஷ்மி கோவில்: அடுத்தது, லக்ஷ்மி கோவில் மாதிரி கட்டியிருக்கிறார்கள். மதிற்சுவர், கேட் எல்லாம் இன்னும் முழுமையாக கட்டப்படவில்லை. அதற்கடுத்த கோவிலில், ஏழு விக்கிரங்கள் காணப்படுகின்றன. நடுவில் இருப்பது வைஷ்ணவி என்று தெரிகிறது. உட்கார்ந்த நிலையில் உள்ளது. வெளியே இருபுறமும் துர்க்கை இருவர் கதாயுதத்துடன், துவார பாலகர் நின்றிருப்பது போல, இரு சிலைகளை வைத்துள்ளார்கள்.

Pulikadiyan temple- RHS idols-1

புலிகடியான் மற்றும் மேலமுகத்தையா சிலைகளுக்கு வலது பக்கத்தில் இருக்கும் சிலைகள் – முதல் முன்று.

Pulikadiyan temple- RHS idols-1a

புலிகடியான் மற்றும் மேலமுகத்தையா சிலைகளுக்கு வலது பக்கத்தில் இருக்கும் சிலைகள் – அடுத்த முன்று.

Pulikadiyan temple- RHS idols-1b

புலிகடியான் மற்றும் மேலமுகத்தையா சிலைகளுக்கு வலது பக்கத்தில் இருக்கும் சிலைகள் – அடுத்த முன்று.

Pulikadiyan temple- RHS idols-1c

கன்னிமார் கோவில் வளாகம்: அதற்கும் அடுத்தது, கன்னிமார் கோவில் வளாகம். அதில் நுழையும் போது, ஐயனார் போன்ற சிலை முதுகைக் காண்பித்துள்ளது. இடது பக்கம் போலீஸ் சிலையுள்ளது. இரு வீரர்கள் குதிரைகள் மீதிருப்பது போன்ற இரு சிலைகள் அடுத்து, இருபக்கமும் இருக்கின்றன. தாண்டியதும் மேடையின் இரு பக்கங்களிலும் சிங்க சிலைகள் உள்ளன. இடது பக்கம் சப்தமாதர் மற்றும் வீரபத்திரர்-விநாயகர் சிலைகளுடன் காணப்படுகிறது. வலது பக்கம் ஐயனார் வகையறாக்கள் இருக்கின்றன. நடுவில் ஐயனார், பூரணி மற்றும் புஷ்பவல்லியுடன் இருக்கிறார்.

Kannimar -kumbanisakam 25-09-2015- 13

கன்னிமார் கோவில் கும்பாபிசேகம் 25-09-2015 அன்று நடைபெற்றது.

Another temple - Kurinji Padaiyar Kuladeivam-6

கன்னிமார் கோவில்….

Kurinji Padaiyar Kuladeivam-Kannimar - 7

கன்னிமார் கோபுரத்தில் இருக்கும் சிலைகள்.

ஆறுஏழுஎட்டு என்றானது, ஜைனபௌத்தர்களால் சீரழிந்தது: ரிக் வேதத்தில் சோம என்ற திரவத்தை தயாரிப்பதை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் ஏழு மாதர்கள் பற்றிய குறிப்புள்ளது [IX 102.4][1]. ரிக்வேதத்தில் நேரிடையான குறிப்பு இல்லை. இருப்பினும் மஹாபாரதத்தில் தெளிவான குறிப்புள்ளது. வேத-இந்து முறையில் சப்தமாதர், சப்தரிஷிக்களின் மனைவிகளாக பாவிக்கப்பட்டது. ஆனால், ஜைன-பௌத்த முறையில் அவை வெவேறு சக்திகள் கொடுக்கும், விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் தேவதைகளாகக் கருதப் பட்டன. மந்திர-தந்திர-யந்திர வழிபாடு, ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களால்; தீவிரமாக்கப் பட்டு, பெண்களை வைத்து செய்யப் பட்ட போது, சீரழிந்தது. உடனடியாக சக்தி, வெற்றி வேண்டும் என்ற ரீதியில் சடங்குகள் உக்கிரமாக நடத்தப் பட்டன. இதனால், அவற்றை மாற்றியமைத்து, இந்து மதத்தில் சக்கரங்களாக தகவமைத்துக் கொள்ளப்பட்டன. நடைமுறையில் செய்வதற்குப் பதிலாக, சுலோகங்களாக மாற்றப்பட்டு, உச்சாடனம் செய்யப் பட்டன. தகடுகளில் சக்கரங்கள் வரையப் பட்டு சுருக்கப் பட்டன[2]. இதனால், இந்துமத வழிபாட்டில் தொடர்ந்து, நகரங்களுக்கு வெளிப்புறப் பகுதிகளில் இம்முறைகள் வைத்துக் கொள்ளப்பட்டன. ஜைனர்களின் ஆதரவு இடைக்காலங்களிலும் இருந்ததால், கங்கா, கடம்பா, கூர்ஜர, சன்டடெலா சாளுக்ய, பரம்பரை ஆட்சிகளில் இருந்தது. முகமதியர் வந்தபோது, மறுபடியும் இம்முறை சீரழிந்தன. ஆங்கிலேயர் காலங்களில், பற்பல போலி நூல்கள் உருவாக்கப் பட்டு திரிபு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இதனால், பெருமளவில் உண்மைத் தன்மை மறைக்க-மறக்கப்பட்டது.

Kannimar -temple complex- 25-09-2015- 14

கோவில் வளாகம் – அதில் நுழையும் போது, ஐயனார் போன்ற சிலை முதுகைக் காண்பித்துள்ளது. இடது பக்கம் போலீஸ் சிலையுள்ளது.

Kannimar -temple-police-added- 15

போலீஸ் / ராணுவ வீரர் சிலை..

Kannimar -with Kalabairavar-Vinayaka

இடது பக்கத்தில் உள்ள சப்தமாதர் சிலைகள்

Kannimar -temple-Iyyanar vagaiyara-another side

வலது பக்கத்தில் ஐயனார் வகைகள்…

சோழர்கள் காலத்தில் சக்தி வழிபாடு சீரமைக்கப் பட்டது: சோழர்கள் காலத்தில், தமிழகத்தில் அம்முறைகள் மறுபடியு சீராக்கப் பட்டன. சைவத்தினால், மாற்றப்பட்டன. நகர்புறங்கள் விவசாயத்திற்கு, பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருந்ததால், அங்கு, இம்முறைகள் பின்பற்றப் பட்டன. ராணுவ வீரர்களும் சம்பந்தப் படுத்தப் பட்டனர். படைவீடுகளும், சக்தி-கோவில்களும் இணைக்கப்பட்டன. அரசன் முதல் படைத்தலைவன் வரை அவர்களது மனைவியர்களிடம் கோவில் பொறுப்பு கொடுக்கப் பட்டது. அதனால், தான், சோழர்காலத்தில், பெரும்பாலான கோவில்கள் பெண்களால் கட்டப் பட்டன, சீரமைக்கப் பட்டன என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.

View from Kannimar temple

மாறி வரும் காலத்தில் ஸ்தபதிகளின் பங்கு: ஸ்தபிதிகள்  காலங்கள் தோறும் மாறித்தான் வந்துள்ளார்கள். வேத, ஜைன, பௌத்த காலங்கள் இருந்து, மௌரிய காலம்; குப்தர்கள் முதல் இடைக்காலம்; பிறகு முகமதியர் காலம்; விஜயநகர-நாயக்கர் காலம்; இக்காலம் என்ற காலகட்டங்களில் ஸ்தபிதகள், சிற்பிகள், கல்தச்சர்கள் முதலியோர், அதிகமாகவே பாதிக்கப் பட்டுள்ளனர். பொதுவாக அவர்கள் பக்தர்களை விட அதிக நம்பிக்கைக் கொண்டவர்கள், தொழில் தர்மம் கொண்டவர்கள். இறைப்பணியில் ஈடுபட்டிருப்பதால், ஏதாவது தவறு, குற்றம், மோசடி செய்தால், தெய்வம் தண்டிக்கும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதனால் அவர்கள் ஓரளவிற்கு பாரம்பரியத்தைப் பின்பற்றி வந்துள்ளார்கள் / வருகிறார்கள். நம்பிக்கையுள்ளவர்கள் ஒழுங்காக, ஒழுக்கத்துடன் வேலை செய்துள்ளார்கள். அதனை அவர்கள் கட்டியுள்ள கோவில்களிலிருந்தே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். சப்தமாதர்-கன்னிமார்களுடன் வீரபத்திரர் மற்றும் விநாயகர் சிலைகளை சேர்த்து வைத்தது, அவர்களது சம்பிரதாயத்தைக் காட்டுகிறது.

முடிவுகள்: இவையெல்லாம் தோராயமாக எடுத்துக் காட்டப் பட்டுகின்றன. இன்னும் பல கோவில்கள் சென்று ஆராய வேண்டி உள்ளது.

  1. சக்தி வழிபாடு செய்யப்பட்ட இடமாக, கோவிலாக இருந்திருக்க வேண்டும்.
  2. குறிப்பாக, தாய்-சேய், குழந்தை பிறப்பு, குழந்தை பாக்கியம் சம்பந்தப் பட்ட கோவிலாக இருந்திருக்க வேண்டும்.
  3. ஆங்கிலேயர், பிரெஞ்சு, நவாப், மற்ற படைகள் சென்று வரும் வழிகளில் அவ்வூர் இருந்திருக்கிறது[3].
  4. பொதுவாக, படைகள் கோவில்களை தங்கும் இடமாக உபயோகப் படுத்தி வந்தன.
  5. அக்காலகட்டங்களில் இக்கோவில்கள் பாதிக்கப் பட்டு, இடிக்கப் பட்டிருக்கலாம்.
  6. அந்நியர், மிலேச்சர் முதலியவர்களால் தாக்கப்பட்டது என்றால் அத்தகைய கோவில்கள் உபயோகப் படுத்தப் படாமல், நாளடைவில் சிதலமடையும் நிலைக்குத் தள்ளப்படும்.
  7. அந்நிலையில், சிலர் கோவிலின் முக்கியத்துவம், விக்கிரங்களின் மகிமை, முதலியவற்றை அறிந்து எடுத்து வந்து வழிபட ஆரம்பித்திருக்கலாம்.
  8. நாளடைவில், அவற்றிற்கு கோவில் கட்டப்படும் போது, மக்கள் ஆதரவுடன் பெரிதாகியிருக்க வேண்டும்.
  9. இவ்வாறு தான், இடிக்கப் பட்ட கோவில்களிலிருந்து, புதிய கோவில்கள் உருவாகின்றன.
  10. ஆனால், சரித்திரம் மறைந்து விடுகிறது.

© வேதபிரகாஷ்

25-08-2018

[1]இதை வைத்து வேதகாலத்திலேயே, சப்தமாதர் வழிபாடு இருந்தது என்றும், அதனை, சிந்துசமவெளி நாகரிக முத்திரையில் உள்ள ஏழு பெண்-உருவங்களை ஒப்பிட்டு, அக்காலத்திலும் இருந்தது என்றும் விளக்கம் கொடுத்து எழுதி வருகிறார்கள்.

[2] K.V. Ramakrishna Rao, The worship of Murukan and the Zodiac, http://murugan.org/research/rao-zodiac.htm

[3] ஒகையூரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் துளுக்கப்பாளையம் உள்ளது. 20 கி.மீ தொலைவில் திருவெண்ணைநல்லூர் உள்ளது.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அத்தாட்சி, அழிப்பு, ஆக்கிரமிப்பு, உகையூர், எஸ்.உகையூர், எஸ்.ஒகையூர், குலதெய்வம், குலதேவதை, குழந்தை, கௌமாரி, சக்தி, சப்தமாதர், சப்தமாதா, சு. உகையூர், சு.உகையூர், சோழர் காலம், ஜைனம், புலிகடியான், மேலமுகத்தையா, Uncategorized and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s