ஒகையூர் கிராமம், ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், சப்த மாதர், அவற்றின் சிறப்பு முதலியன [1]

ஒகையூர் கிராமம், ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், சப்த மாதர், அவற்றின் சிறப்பு முதலியன [1]

Location of Ogaiyur Village, Villuppuram

ஒகையூர் கிராமம் இருப்பிடம் – கூகுள் படம்

ஒகையூர் கிராமம் இருப்பிடம்

Location of Vishnu Dugai Amman Temple, Ogaiyur Village, Villuppuram

ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் இருப்பிடம் – ஒட்டியுள்ள அரசு பள்ளி, பின்பக்க தெரு, முதலிவற்றைப் பார்க்கலாம்.

Location of 7-kanni, Unjal, Siva temples, Ogaiyur Village, Villuppuram

வடமேற்குப் பகுதியில், சாலையொட்டி அமைந்துள்ள சிவன், ஊஞ்சலம்மன், கன்னிமார் [சப்தமாதர்] கோவில்கள் அமைந்துள்ள இடம்.

Ogaiyur temple entrance-1

ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் முகப்பு, இடது பக்கம் அரசு பள்ளி உள்ளது.

Ogaiyur temple -Kumbabusekan-8-7-2012-2

08-07-2012 அன்று நடந்த கும்பாபிசேகம், சந்நிதி விவரங்கள் கொடுக்கும் கல்வெட்டு.

கிராமங்கள் மாறும் நிலையும், கள ஆராய்ச்சியும்: பாரதிய இதிகாச சங்கலன சமிதி[1], பல்வேறு விதமான சரித்திர ஆராய்ச்சி செய்து வருகின்றது. உறுப்பினர்கள் அதன்படி, களப்பணி விசயமாக பல கிராமங்களுக்குச் சென்று வருகின்றனர். இப்பொழுது, சிறுதெயவம்-பெரிய தெய்வம், குலதேவதைகள் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதற்கான விவரங்களை, ஊறுப்பினர்கள் சேகரித்து வருகிறாற்கள். நண்பர்கள் குலதேவதை வழிபாட்டிற்காக செல்லும் போது, உழவாரப் பணி செய்ய செல்லும் போதும், சேர்ந்து போவதுண்டு. பலருடன், பல இடங்களுக்கு செல்லும் போதும், அங்கேயே தங்கி, அங்கிருக்கும் மக்களுடன் உரைடயாடும் போதும், பல விசயங்கள் தெரிய வருகின்றன[2]. பொதுவாக, ஒவ்வொரு கிராமம், நகரம் ஒரு கோவிலை மையமாக வைத்து அமைக்கப் பட்டன. வயல்கள் சூழ்ந்திருக்கும் நிலையில், கிராமங்கள் மற்றும் வயல்கள் இவற்றின் எல்லைகளைக் குறியிட்டு, அடையாளம் காண, இல்லைக் கற்கள், கல்வெட்டுகள், தேவதைகள் என்றெல்லாம் வைக்கப் பட்டன.

Ogaiyur temple -donors for minor deities-14

கிராம தேவதைகளுக்கு 20-06-2011 அன்று நடந்த கும்பாபிசேகம் மற்றும் நன்கொடையாளர்களின் விவரங்களைக் கொடுக்கும் கல்வெட்டு.

Ogaiyur temple -DMK donors-13

திமுக ஒன்றிய செயலாளர் ரூ.22,500/- கொடுத்துள்ளார். மாணிக்க உடையார் காங்கிரஸ் காரரின் சந்ததியர் ரூ.40,000/- கொடுத்தாலும், அவரது பெயர் மேலே! எல்லாம் பெரியார் விளைவு போலும்!

கோவில்களின் இருப்பிடம், அமைப்பு முதலியன மாற்றப்படும் நிலை: இருப்பினும் கடந்த 100-200 ஆண்டுகளிலேயே, நகரமயமாக்கம், வீடுகள் கட்டும் விதம் மாற்றம் முதலியவற்றால், கிராம வீடுகள் மாறி வருகின்றனர். இப்பொழுதெல்லாம், எல்லாவற்றிற்கும் வாஸ்து பார்ப்பவர்கள், வாஸ்து படி கட்டியிருந்த வீடுகளை இடுத்துத் தான் புது வீடுகள், அடுக்குமாடி வீடுகள், கட்டிடங்கள் கட்டி வருகிறார்கள். இதனால், கோவில்களும் பாதிக்கப் படுகின்றன. கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுகின்றன. பெரிய கோவில் வளாகங்கள் பிரிக்கப் படுகின்றன. மதில் சுவற்றை நீக்கி ரோடு போட்டு சந்நிதிகளைப் பிரித்து விடுகிறார்கள்[3]. சந்நிதிகளே தனிக்கோவில்களாக மாற்றப் படுகின்றன[4]. கோவில் வளாகத்தில் இருந்த குளங்கள் வெளியே வந்து விடுகின்றன. சுற்றிலும் வியாபார-வணிக வளங்கள் உருவாகின்றன. நாளடைவில் வீடுகள் தோன்றி, கோவில் அமைப்பையே மாற்றி விடுகின்றனர். காஞ்சிபுரம் ஶ்ரீசகரம் வடிவத்தில் அமைந்துள்ளது, அதாவது கோவில்கள் ஶ்ரீசகரத்தின் புள்ளிகளில் அமைந்துள்ளன. ஆனால், இப்பொழுது புதியதாகக் கட்டபட்டுள்ள கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், முதலியன அதனை சிதைத்து விட்டன. ஶ்ரீரங்கமும் அதே நிலையை அடைந்துள்ளது[5]. இத்தகைய நிலை ஒகையூர் கோவில்களுக்கு நிகழ்ந்துள்ளன போலிருக்கிறது.

Ogaiyur temple -saptamata substituted-3

இடது பக்கத்தில் வைக்கப் பட்டுள்ள சப்தமாதர் சிலைகள்.

Ogaiyur temple -murugan-4

முருகன், கோமாதா முதலியன

Ogaiyur temple -Karuppaiah-5

ஐய்யனார் சந்நிதி

இஷ்ட தேவதை, குல தேவதை, குடும்ப தேவதை முதலியன: இஷ்ட தேவதை, குல தேவதை, குடும்ப தேவதை என்ற முறையில், சிறிய கோவில்கள் கட்டப் பட்டு, குறிப்பிட்ட மக்கள், குடும்பங்கள் வழிபாடு செய்து வந்தனர். நகரமயமாகம், விரிவாக்கம், வேலை தேடி செல்லுதல் போன்ற காரணங்களினால், கிராமங்களில் வாழ்ந்தவர் பலர், மற்ற நகரங்கள், மாநிலங்கள், ஏன் நாடுகளுக்கே சென்று வருகின்றனர். அங்கங்கேயே தங்கி விடவும் செய்கின்றனர். இருப்பினும், வருடத்திற்கு ஒருமுறையாவது, குலதேவதை கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்ற முறையை, சம்பிரதாயத்தை, மக்கள், குடும்பங்கள் இன்றும் வைத்துள்ளனர். வேண்டுதல் பெயரிலும் சென்று வருகின்றனர். இதனால், அக்கோவில் பிரபலமாகி, பெரிதாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அக்கோவில் அமைப்பு, இருப்பிடம், சரித்திர, முதலியவை மாறிவிடுகின்றன. மறக்க / மறைக்கப்படுகின்றன. இல்லை, புதியதாகக் கட்டப்படும், மாற்றிக் கட்டப்படும், கோவில்களுக்கு, புதியதாக கதைகள் உருவாக்கப் படுகின[6].

Ogaiyur temple -chiinaiah-9

சின்னையா, பெரியையா

Ogaiyur temple -Iyyanar, backside-6

பின்பக்கத்தில் இருக்கும் ஐயனார் சந்நிதி

ஒகையூர் கிராமத்தின் இருப்பிடம்: ஒகையூர் என்ற கிராமம் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில், தியாக துர்க்கம் ஒன்றியத்தில் உள்ளது, இதைச் சுற்றி ஏராளமான அம்மன் கோவில்கள் உள்ளன. தவிர பாடல் பெற்ற ஸ்தலங்களும் கோவில்களும் இருக்கின்றன[7]. இதனை சு. ஒகையூர் மற்றும் எஸ். ஒகையூர் என்றும் குறிப்பிடுகிறார்கள், ஆனால் அந்த சு அல்லது எஸ் என்பது என்ன என்பது தெரியாமல் இருக்கிறது. விசாரித்ததில் சுரோதி, ஸ்ரௌதி தான் சு ஆகிறது என தெரிகிறது, அதாவது 150 ஆண்டுகளுக்கு முன்னர் பிராமணர்கள் வாழ்ந்த ஊர். பாப்பாங்குளம், பாங்குளம் தெரு முதலியனவும் உள்ளன. அக்ரஹாரம் இருந்தது, இப்பொழுது மறைந்து விட்டது. பிராமணர்களும் மறைந்து விட்டார்கள். இப்பொழுது, பிராமணர்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்றால் நம்பாத நிலையும் உருவாகலாம். இருப்பினும், குலதெவத்தை வணங்க வேண்டும் என்று சிலர் வந்து செல்கின்றனர்.

Ogaiyur temple -Vaishnavi, c.4 feet-7

ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன்

Ogaiyur temple -Vinayaka,outsidet-8

வெளியே வைக்கப் பட்டுள்ள விநாயகர் /பிள்ளையார்.

Ogaiyur temple -main sannadhi-13

ஒகையூர் ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில்: ஒகையூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நூற்றுக் கணக்கான அம்மன் கோவில்கள் இருப்பது வியப்பாக இருக்கிறது, கவனிக்க வேண்டியுள்ளது.  துர்க்கை அம்மன், விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்ற போது, விக்கிரகம் / சிற்பம் சப்தமாதர்களில் ஒன்றாக இருப்பது தெரிந்தது. அவ்விக்கிரகம் நிற்கும் நிலையில் சுமார் நான்கடி உள்ளது. அதாவது பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி விக்கிரங்கள் காணாமல் இருக்கின்றன. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர், பத்மநாப ராவ் [1836-1932] என்பவர், நண்பர்களுடன் சேர்ந்து வைஷ்ணவி, வினாயகர் சிலைகள் வைத்து சிறியதாக கோவிலைக் கட்டியுள்ளார். இவரது மகன் நாராயண ராவ் [1914-1999] இங்கு வாழ்ந்துள்ளார். இவருக்கு குழந்தைகள் பிறந்தவுடன் சென்னைக்கு இடம் பெயர்ந்து விட்டார். கோவிலுக்கு சொந்தமாக பெரிய இடம் இருப்பதால், பிறகு அய்யனார், முருகன், கருப்பையா, முத்தையா, பெரியய்யா, சின்னய்யா……முதலியோர் சேர்ந்து விட்டனர். பிராமணர்களுக்கு குலதெய்வமாக இருந்தாலும், பூஜாரி பிராமணர் அல்லர்; ஆனால், பூஜை அபிஷேகம் செய்து வைக்கிறார். இவருக்கு பத்மநாப ராவ், நாராயண ராவ் பெயர்கள் தெரியவில்லை, ஆனால், பீமா ராவ் என்ற பெயரை சொல்கிறார். அவர், இவர்களது நண்பராக இருந்திருக்கிறலாம்.

Ogaiyur temple -view from backside-12

கோவிலின் பின்பக்க தோற்றம்

Ogaiyur temple -Side view-10

கோவிலின் வலது பக்கத் தோற்றம்.

Ogaiyur temple -murugan-11

சிறு சந்நிதிகள், பலிபீடம் முதலியன

08-07-2012 அன்று நடந்த மஹா கும்பாபிசேகம்: 08-07-2012 அன்று அருள்மிகு ஶ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள், ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன், ஆஞ்சனேயர், ஶ்ரீ முருகன், மற்றும் ஶ்ரீ அய்யனார், ஶ்ரீ கருப்பையா, ஶ்ரீ முத்தையா, ஶ்ரீ பெரியைய்யா, ஶ்ரீ சின்னய்யா ஆகிய ஆலயங்களுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது. ஒகையூர் ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் முகப்பு, இடது பக்கத்தில் அரசு பள்ளி உள்ளது, அது கோவில் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. போலீஸ் / ராணுவ உடைகளில் சிலைகளாக வடிக்கப் பட்டிருப்பதால், இக்காலகட்டத்தில் அவர்கள் இறந்ததால், அவ்வாறு நினைவாக ஏற்படுத்தியிருக்க வேண்டும்[8]. இதற்கு முன்னால் 20-06-2011ல், கிராம தேவதைகள் ஊஞ்சலம்மன், மேல முகத்தயையா, புலியடியான், கோவிகளுக்கு கும்பாபிசேகம் நடந்ததாக, இக்கோவில் வளாக சுவற்றில் உள்ள கல்வெட்டிலிருந்து அறியப்படுகிறது. அதனால், சிறு தேவதைகள் – பெரிய தேவதைகள் என்ற ரீதியில் தனித்தனியாக நடத்தப் பட்டிருக்கின்றன, ஆனால், எல்லாவற்றிற்கும் முறைப்படி சடங்குகளுடன் கும்பாபிசேகம் நடத்தப் பட்டுள்ளன. ஊர்மக்களின் விருப்பப்படி, சிறு சந்நிதிகளில் முருகன், ஆஞ்சனேயர் முதலிய சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பலியும் கொடுக்கப் படுகிறது, ஆனால், அது ஐயனார் சந்நிதிக்கு முன்னார் செய்யப்படுகிறது.

© வேதபிரகாஷ்

25-08-2018

 

[1] இந்திய சரித்திரம் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் நிறுவனம். உறுப்பினர்கள் 1985லிருந்து பல மாநாடுகள் கலந்து கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளனர், பதிப்பிலும் வந்துள்ளன. பல புத்தங்க்களையும் வெளியிட்டுள்ளன.

[2] தங்கி அவ்வூரில் வாழ்ந்து வரும் பெரியவர்களை சந்தித்தும், அவர்கள் உதவியுடன் முக்கியத்துவம் உள்ள இடங்களுக்குச் சென்று விவரங்களை சேகரித்தும் வருவது ஆய்வுமுறையாக உள்ளது.

[3] தாரமங்கலம் கோவில் பற்றிய பிளாக்கிலும் விவரங்களைக் காணலாம். https://sivatemple.wordpress.com/2015/01/28/tharamangalam-kailasanathar-temple-its-grandeur-sculptures-date-etc/

[4] ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவில், கொரட்டூர் – https://sivatemple.wordpress.com/2014/12/28/temple-cleaning-work-done-at-jambulingeswarar-temple-korattur/

[5] ஏழு பிரகாரங்களிலும் லாட்ஜுகள், கடைகள் என்று வீதிகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இனி வாகனங்கள், தேர் உலாக்கள் நடைபெறுவது கடினமே!

[6] வியாபார ரீதியில், புதிய ஸ்தலப் புராணங்களே உருவாக்கப் படுகின்றன.

[7] திருவெண்ணைநல்லூர், திருவதிகை, முதலியன. பரிக்கல் நரசிம்மர் என்ற மற்ற கோவில்கள்….

[8] வீரக்கல் வைக்கும் விதத்தில், இக்காலத்தில் இறந்த ராணுவ வீரர், போலீஸ் முதலியோர்களுக்கு ஐயனால் போல சிலை வைத்து வணங்க ஆரம்பித்துள்ளனர்.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அக்ரகாரம், அக்ரஹாரம், அடையாளம், அத்தாட்சி, ஆக்கிரமிப்பு, இறைப்பணி, உகையூர், உடைப்பு, உளுந்தூர்பேட்டை, எஸ்.உகையூர், கட்டிடம், கன்னிமார், கள்ளக்குறிச்சி, காலம், கிராம தேவதை, குலதெய்வம், குலதேவதை, கோவில், சக்தி, சடங்கு, சப்தமாதர், சப்தமாதா, சு.உகையூர், சுரோத்ரி உகையூர், சௌத்ரி உகையூர், துர்க்கை, துர்க்கை அம்மன், விஷ்ணு துர்க்கை அம்மன், ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s