ஒகையூர் கிராமம், சப்த மாதர் கோவில், கன்னிமார் கோவில் முதலியன, அவற்றின் சிறப்பு முதலியன [2]

ஒகையூர் கிராமம், சப்த மாதர் கோவில், கன்னிமார் கோவில் முதலியன, அவற்றின் சிறப்பு முதலியன [2]

Saptamatra temple -full view of all - 6

“ப” வடிவில் மேடையில் வைக்கப் பட்டுள்ள சிலைகள்.

Saptamatra temple -1

சிமென்டினால் செய்து வைக்கப்பட்டுள்ள வைஷ்ணவி, மஹேஸ்வரி / காளி, வராஹி.

Saptamatra temple -LHS, full view

இடது பக்கத்தில் வைக்கப் பட்டுள்ள சிலைகள் – 19.

Saptamatra temple -RHS, first three- 14

வலது பக்கத்தில் வைக்கப் பட்டுள்ள சிலைகள் – 19.

அக்காதங்கச்சி சிலைகள்: வைஷ்ணவி சிலை மட்டும் தனியாக இருக்கிறதே, மற்ற சிலைகள் எங்கே என்று கேட்ட போது, பூஜாரி தனக்குத் தெரிந்து, இச்சிலை மட்டும் இருப்பது தெரியும். இருப்பினும், தொலைவில் இன்னொரு சிலை உள்ளது, அது “தங்கச்சி சிலை” என்று அழைக்கப்படுகிறது, அது “துர்தேவதை,” அதனால் தான், தனியாக வைக்கப் பட்டுள்ளது என்றார். அப்படியென்றால், “அக்கா” யார் என்று கேட்டதற்கு, இதுதான் என்று வைஷ்ணவியைக் காட்டினார். மேலும், விநாயகர்சிலை, கர்ப்பகிருகத்தில், வைஷ்ணவி பக்கத்தில் இருந்தததாகவும், 2012 கும்பாபிசேகத்தின் போது, அது வெளியில் வைக்கப் பட்டதாகவும் கூறினார். சப்தமாதர் நினைவாகத்தான், அந்த ஆறு கன்னியர், சிமென்டில் வைக்கப்பட்டதக கூறினார். அதாவது, சப்தமாதர் சிலைகள் இருந்தது தெரிகிறது, ஆனால், ஏதோ காரணங்களுக்கு [பத்மநாத ராவுக்கு இரண்டு சிலைகள் தா கிடைத்ததா, இல்லை அப்பொழுதே மற்ற சிலைகள் காணாமல் போய் விட்டனவா, இல்லை, பரிகார முறையில், இக்கோவில் கட்டுவிக்கப் பட்டதா, போன்ற கேள்விகளுக்கு விடை பெறுவது கடினம்[1]].

Saptamatra temple -three idols on LHS- 2

எதிர்பக்கம், முதல் மூன்று சிலைகள்.

Saptamatra temple -three idols on centre- 4

நடுவில் உள்ள மூன்று சிலைகள்.

Saptamatra temple -three idols on RHS- 3

 

பலிகொடுப்பதும், ஜீவகாருண்யம் பேசுவதும்: ஜைனர்கள் கண்னுக்குத் தெரியாத உயிரைக் கூட கொல்லமாட்டோம் என்று தீரிர ஜீவகாருண்யம் கடை பிடித்து, ஒரு நிலையில், “வடக்கிருந்து இறக்கும்” நோன்பையும் கடைபிடித்து மாய்ந்தனர்.  அந்நிலையில் தான் ஸ்வதேம்பரம் தோன்றி, நாத்திகத்தை வளர்க்க ஆரம்பித்தது. ஆட்சியாளர்களாக இருந்து, சத்திரியர்களாக போர்கள் புரிந்து உயிர்க்கொலைகளை தாராளமாக செய்து வந்தனர். பௌத்தர்களும் அவ்வாறே இருந்தனர். மாமிசத்தை தாராளமாக உண்டு வந்தனர். புத்தரே பன்றி மாமிசத்தை உண்டு, வயிற்றில் ரத்தப் பெருக்கு ஏற்பட்டதால் இறந்தார். இப்படியே தொடர்ந்தவர்கள் இடைகாலத்திலும் அப்படியே இருந்தனர். இந்துக்களில் எல்லோருமே அஹிம்சாவாதிகளாக இருக்க வேண்டும் என்ற அவசியமோ, தேவையோ இல்லை. ஆனால், அத்தகைய மாயையினை பிறகு உண்டாக்கினர். மந்திர-யந்திர-தந்திர விவகாரங்களையும் சீரழித்ததால் தான், மேலும் மாயைகளை உண்டாக்கினர். ஆனால், பிராமணர் அல்லாதோர் அவ்வாறு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் தான், தேவதை வழிபாடுகிகளில் பலி இருந்தது, பலியிட்ட விலங்கின் பகுதி பிரசாதமாக உட்கொள்ளப்பட்டது. அதனால், குலதெய்வம், வழிபாட்டில் பலி இருந்தது, இருக்கிறது. அந்நிலையில் ஜீவகாருண்யம் பேசுவதில், எந்த பிரயோஜனமும் இல்லை.

Saptamatra temple -LHS, first three idols- 10

இடது பக்கம், முதல் மூன்று சிலைகள்.

Saptamatra temple -LHS, next five idols- 11

இடது பக்கம், அடுத்த ஐந்து சிலைகள். [3+5=8]

Saptamatra temple -LHS, next five idols- 12

இடது பக்கம், அடுத்த ஐந்து சிலைகள். [8+5=13]

Saptamatra temple -LHS, next five idols- 13

இடது பக்கம், அடுத்த ஐந்து சிலைகள். [13+5=18]

சிவன், ஊஞ்சலம்மன், கன்னிமார் கோவில்கள்: உடையார் வீடு எனப்படும், வீட்டிற்கு தென்கிழக்கில், ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. எதிரில் வடமேற்கில் சிவன், ஊஞ்சல் அம்மன், சப்த மாதர் கோவில்கள் உள்ளன. இப்பொழுது, அவை பலகுடும்பங்களுக்கு, தனித்தனியாக குலதேவதைகளாகி விட்டன. சிலைகளைச்சுற்றி சுவர்கள் எழுப்பி, தனித்தனி கோவில்களாக்கி விட்டனர். அங்கிருக்கும் சிலைகளைக் கவனித்தால், அவற்றிற்கு சம்பந்தம் இல்லாதது போல காணப்பட்டாலும், அவையெல்லாம் ஒரே இடத்திலிருந்தவை, ஒரே கோவிலில் இருந்தவை என்பது தெரிகிறது. அச்சிலைகளின் வடிப்புத் தோற்றம், பெண்கள் குழந்தைகளை தோள்களில் சுமந்திருக்கும் விதம், சப்த மாதர்கள் சிலைகள் [பல அளவுகளில் உள்ளன] முதலியவற்றைப் பார்க்கும் போது, அவ்விசயம் புலப்படுகிறது.

Sapramata - first three, LHS

வலது பக்கம், முதல் மூன்று சிலைகள்.

Saptamatra temple -RHS, next five- 15

வலது பக்கம், அடுத்த ஐந்து சிலைகள் [3+5=8]

சப்தமாதர்களுடன் நிறைய சிலைகள்: இனி சப்தமாதர் சிலைகள் எங்கிருக்கும் என்று விசாரித்ததில், அருகில் இருக்கும் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டோம். அங்கு சப்தமாதார் கோவில் – வைஷ்ணவி, காளி, வராஹி சிலைகள் சிமென்டில் செய்யப்பட்டிருந்தன. சுற்றி பல சிலைகள் “ப” வடிவில் வைக்கப் பட்டிருந்தன[2]. சப்தமாதர் கற்சிலைகள், மூன்று சிலைகள், அந்த சிமென்ட் சிலைகளுக்கு, இடது பக்கத்தில் உள்ளன; மூன்று சிலைகள் மத்தியில் உள்ளன; இன்னும் மூன்று சிலைகள் வலது பக்கத்தில் உள்ளன. அங்கு வெட்ட வெளியில் மொத்தம் சுமார் 40 விக்கிரங்கள் வைக்கப் பட்டிருந்தன.

Saptamatra temple -RHS, next four- 16

வலது பக்கம், அடுத்த ஐந்து சிலைகள் [8+4=12]

Saptamatra temple -RHS, next three- 17

வலது பக்கம், அடுத்த ஐந்து சிலைகள் [12+3=15]

Saptamatra temple -RHS, next three- 18

வலது பக்கம், அடுத்த ஐந்து சிலைகள் [15+4=19]

முருகன், குகன், ஹரிணி முதலியன[3]: சங்க இலக்கியத்தைப் பொறுத்த வரையில், முருகு என்ற கொடிய தேவதை கன்னிப் பெண்களை தாக்குவதாக இருக்கிறது[4]. அணங்குடை முருகன் கோட்டத்தில் கலம் தொடா மகளிர் என்றதில் கன்னிபெண்கள் முருகனிடத்திலிருந்து விலகியே இருக்க வேண்டும் என்றாகிறது. மேலும், மஹாராஷ்ட்ரா போன்ற இடங்களில் கார்த்திகேயன் கோவில்களுக்கு கன்னிப்பெண்கள் செல்லக் கூடாது என்ற நம்பிக்கை உள்ளது. குகன் குழந்தைகளை கவர்ந்து சென்று விடுவான். ஹரிணி, ஹரிதி போன்ற தேவதைகள் கருவைத் திருடிச் சென்று விடும் என்று பௌத்த நூல்கள் எடுத்துக் காட்டுகின்றன. நடு இரவில் வேலன் வெறியாடலில் கலந்து கொண்டு, தாயிடம் அவள் மகள் கருவுற்றிருக்கிறாள் என்று சொல்கிறான். “முருகு வந்து  புனைந்தற்று” ஏனும் போது, முருகு, அணங்கு தாக்கியது என்றும் சொல்லப் படுகிறது. ஆக கருவை அழிக்கும், குழந்தைகளை அபகரிக்கும், பெண்களைத் தாக்கும், முருகு, அணங்கு, பிறகு நல்ல தெய்வமாக, முருகனாக மாறியது. கச்சியப்பப் புலவரின் “கந்த புராணம்” மூலம், முருகன் பிரபலமாகின்றான். குழந்தை வேண்டி, முருகன் கோவிலுக்கே செல்ல ஆரம்பிக்கின்றனர்.

Candi dasa Bali temple

 

சப்தமாத்ரிகா, சப்தமாதா, கன்னியர், ஏழுகன்னியர் சிலைகள் அமைப்பு: சக்தி வழிபாட்டில், சக்தி பெண்மையாக பாவிக்கப் பட்டு, பலவித ரூபங்களாக / உருவங்களாகக் கருதப் படுகின்றன. சப்தமாத்ரிகா, சப்தமாதா சிலை-குழுமத்தில்,

  1. பிரம்மி [ब्राह्मि]– பிரம்மாவின் மனைவி, ஹம்ஸ வாகனம், மஞ்சள்[5]
  2. மஹேஸ்வரி [माहेस्वरी] – சிவனின் மனைவி, எருது, வெள்ளை
  3. குமாரி [कौमारी] – கௌமாரி, முருகனின் மனைவி, மயில்,மஞ்சள்.
  4. வைஷ்ணவி [वैष्णवी] – விஷ்ணுவின் மனைவி, கருடன்.
  5. வராஹி [वाराही] – வராஹ அவதாரத்தின் / விஷ்ணுவின் பத்தினி, பன்றி.
  6. இந்திராணி [इन्द्राणी] – இந்திரனின் மனைவி, யானை, சிகப்பு.
  7. சாமுண்டா [चामुण्डा] – சாமுண்டி, நரி வாகனம், கருப்பு.
  8. நரசிம்மி [नारसिंहीं] – பிரித்யங்கா, பத்ரகாளி என்றும் வழங்கப் படுகின்றன.
  9. யமி [] – எமனின் மனைவி, ஆந்தை.

என்றிருக்கும். தவிர வாயு புராணம், எட்டாவதாக, சிவனின் வாயிலிருந்து தோன்றிய யோகேஸ்வரியையும் சேர்க்கிறது[6]. நேபாளம், திபெத் போன்ற இடங்களில் அஸ்டமாத்ரிகா வழிபாடு உள்ளது. இடது பக்கத்தில் வீரபத்திரர், கணேசர் / விநாயகர் மற்றும் காளி – காலத்தைக் காட்டும் எலும்புக் கூட்டு வடிவத்தில் இருப்பார்கள். வலது பக்கத்தில் காளி மரணத்தின் சின்னமாக இருப்பார்கள். இச்சிலைகள் வட்டபடிவத்திலும், நேராகவும் அமைக்கப் பட்டிருக்கும். உடன் குழந்தைகள், அவ்வர்கள் மீது ஏறுகின்ற முறையில் இருக்கும். இனி இத்தேவதைகளுக்கு நிறங்கள் கொடுப்பதால், அதை வைத்துக் கொண்டு, அத்தகைய நிறங்களிலும் தேவதைகளை உருவாக்கலாம், விளக்கம் கொடுக்கலாம்.

© வேதபிரகாஷ்

25-08-2018

Child grabbing Hriti, GAndhara.jpg

[1] இக்காலத்திற்கு கோவில், பூஜை எல்லாமே “ஃபாஸ்ட் புட்” ரேஞ்சில் போய் கொண்டிருக்கின்றன. எல்லாமே ஒரு மணி நேரம் அல்லது மூன்று-நான்கு மணி நேரங்களில் முடிந்து விடவேண்டும் என்ற கட்டாயத்தில் எல்லாமே சுருக்கப் படுகின்றன. விசயங்கள் மறைக்கப்படுகின்ன்றன.

[2] நாளைக்கு இப்படித் தான் வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தை உண்டாக்கினாலும், ஆச்சரியப் பட வேண்டியதில்லை.

 

[3] K.V. Ramakrishna Rao, The Development of Muruku-Muruka-Vēlan and Ce-ce-cey-Ceyon in Cankam Literature, http://murugan.org/research/rao.htm;

[4] K.V. Ramakrishna Rao, The Development of Muruku-Muruka-Vēlan and Ce-ce-cey-Ceyon in Cankam Literature,http://murugan.org/research/rao.htm

[5] இந்த நிறங்கள் எல்லாம், நூலுக்கு நூல் மாறுபடுகின்றன, தீர்மானமாக ஒன்றும் சொல்லமுடியாது.

[6] இவ்வாறு ஆறு-ஏழு என்றெல்லாம் மாறுவதும், இடைசெருகள்களின் வினையைக் காட்டுவதாக இருக்கிறது.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in இந்திராணி, எஸ்.ஒகையூர், ஒகையூர், கச்சியப்பர், கணேசர், கன்னிமார் கோவில், கருவறை, கௌமாரி, சண்டி, சன்னிதி, சப்தமாதர், சப்தமாதா, சரஸ்வதி, சு. உகையூர், சுரோத்ரி, சுரோத்ரி ஒகையூர், சோழர் காலம், சௌத்ரி, சௌத்ரி உகையூர், சௌத்ரி ஒகையூர், ஜைனம், பிரம்மி, யமி, வராஹி and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s