சலேஸ்வரம் என்ற தொன்மையான குகைக் கோவில் – வருடத்திற்கு ஒருமுறை தான் யுகாதிக்குப் பிறகு, சித்ரா பௌர்ணமி முதல் ஐந்து நாட்களே திறந்திருக்கும் கோவில்!

சலேஸ்வரம் என்ற தொன்மையான குகைக் கோவில் வருடத்திற்கு ஒருமுறை தான் யுகாதிக்குப் பிறகு, சித்ரா பௌர்ணமி முதல் ஐந்து நாட்களே திறந்திருக்கும் கோவில்!

Saleswaram, location from Mannanur-Srisailam, Hyderabad-google map

Location of Saleswaram from Hyderabad, Mannanur, Srisailam etc.

ஆந்திரதேசத்து சைவப் பின்னணி: ஆந்திரபிரதேசம் “திரிலிங்க தேசம்” என்றழைக்கப் படுகிறது, அதிலிருந்து தான் “தெலுங்கு” என்றும் வந்தது. சைவத்தின் தொன்மை இந்தியாவிலேயே அங்குதான் காணப்படுகிறது. குடிமல்லத்தில் உள்ள சிவலிங்கம் சுமார் 150-100 CE காலத்தில் வைக்கப் படுகிறது. ஶ்ரீசைலத்தைச் சுற்றியுள்ள காடு-மலைப்பகுதிகளில் வீரசைவர்கள், தாந்திரீக சைவர், வீர்ரசைவர், சித்தர்கள் போன்றோர் அதிகமாக வாழ்ந்துள்ளனர். இடைகாலத்தில் அப்பகுதிகளில் அவர்களது நடமாட்டங்கள் அதிகமாக இருந்தன. “நல்லமல்ல” காடுகள் பல காரணங்களால் சிறப்புப் பெற்றிருந்தன. அவை “செஞ்சு மக்களின்” பூர்வீக இடமாக இன்றளவும் இருந்து வருகிறது. இடைக்காலத்தில் துலுக்கர் படையெடுப்புகளால் மற்றும் நிஜாமின் ஆட்சியால், இப்பகுதிகளில் உள்ள பாரம்பரியங்கள் பாதிக்கப் பட்டன. காலங்காலமாக நடந்து வந்த கிரியைகள், சடங்குகள், விழாக்கள் முதலியனவும் பாதிக்கப் பட்டன. முக்கியமாக “செஞ்சுகள்” என்ற பழங்குடி மக்கள் இப்பகுதிகளுக்கு காவலர்களாக இருந்தனர். அவர்கள் பராக்கிரம் கொண்ட வீரர்களாகவும் இருந்தனர். அப்பகுதியில் எல்லா இடமும், அதன் சிறப்பும், மகத்துவமும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அத்தகைய இடத்தில் தான் சலேஸ்வரம் என்கின்ற தொன்மையான சைவஸ்தலம் உள்ளது.

Saleswaram, location from Mannanur-Srisailam-google map

Location of Saleswaram Lingayya Swamy cave temple – Google map

கூகுள் வரைப்படம் மூலம் – இக்கோவில் இருப்பிடம் காட்டப்பட்டுள்ளது.

Saleswaram, location -google map

Location of Salewswara cave temple, Bugga Mallayya temple situated at North and Chenchu Penta on East.

செஞ்சு பழங்குடி மக்கள்தொன்மை, சேவை, பாதுகாப்பு: நல்லமல்லா காட்டுப் பகுதிகளில், செஞ்சு என்ற தொன்மையான பழங்குடிகள் வசித்து வருகிறார்கள். மத்தியபிரதேசம், ஒரிஸா, ஆந்திரா, கர்நாடக மாநிலப் பகுதிகளில் அவர்கள், காட்டுப் பகுதிகளில், கிராமங்களில் வாழ்ந்து வருகிறார்கள். எளிமையான மூங்கில் முதலியவற்றை உபயோகித்து குடிசைகளைக் கட்டிக் கொண்டு வாழ்கின்றனர். அவ்விடங்கள் “பென்ட” எனப்படுகிறது. இவை, பழங்கால குகைக் கோவில்களுக்கு அருகில் இருப்பதை கவனிக்கலாம். சாதவாஹன, பல்லவர், சோழர், காகதீய காலங்களில், அவர்கள் தன்னிச்சையாகவே, இப்பகுதிகளுக்கு பாதுகாவலர்களாக இருந்து வந்தனர். அவர்கள் சார்பாக போரிட்டதால், இடைகாலத்தில், “ரெட்டி” என்ற பட்டம் கொடுக்கப் பட்டதால், “செஞ்சு ரெட்டி” என்றும் சிலர் அழைக்கப்படுகிறார்கள். இன்றளவிலும், காட்டுப் பகுதிகளில் விளையும் பொருட்களை [மூலிகைகள், பட்டைகள், தேன், தானியங்கள், முதலியன] வைத்து, விற்று அல்லது பண்டமாற்று முறைகளில் தேவையான பொருட்களைப் பெற்று வாழ்ந்து வருகிறார்கள். கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில், யாத்திரிகர்களுக்கு உதவியாக இருந்து, இப்பொழுது சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

Saleswaram, Linga, cave-Nalammalla forest

The Linga in the cave and closer view

சலேஸ்வரம், குகை, கோவில் இருப்பிடம்: ஶ்ரீசைலம் மற்றும் மண்ணனூர் இடையே “நல்லமல்லா புலிகள் சரணாலயத்தில்” சலேஸ்வரம் [సలేశ్వరం] என்ற இடம் உள்ளது. ஶ்ரீசைலத்திற்கு 60 கிமீ அருகில், மண்ணனூரிலிருந்து 30 கிமீ தொலைவில் நல்லமல்லா காடுகளில் சலேஸ்வரம் / சர்வேஸ்வரம் என்ற இடத்தில் உள்ள மலைக்குகையில் லிங்கம் உள்ளது. இது 1000 அடிகள் கீழேயுள்ள பள்ளத்தாக்கு ஆகும். இங்குதான் சலேஸ்வரம் அல்லது ஶ்ரீராமலிங்கேஸ்வர கோவில் இடிந்த நிலையில் உள்ளது.

  1. ஶ்ரீசைலத்திலிருந்து, 48-50 கிமீ ரோட்டின் மூலம் பயணிக்கலாம். பிறகு, இடது பக்கம் திரும்பி காட்டில் 10கிமீ செல்லவேண்டும். பிறகு இரண்டு கிமீ காடு / மலைப்பகுதிகளில் நடந்து சென்றால், இவ்விடத்தை அடையலாம்.
  2. மண்ண்ணனூர் மூலமும் வரலாம்.
  3. இன்னொரு பாதை ஃபரஹாபாத் மூலம் வருவது. ஃபரஹாபாத் [Farahabad என்றால் அழகான இடம்] என்ற இடத்திலிருந்து 16 கிமீ தொலைவில் உள்ளது. நிஜாம் நூறாண்டுகளுக்கு முன்னர் இங்கு கோடைகாலத்தை கழிக்க, இங்கு வந்து கூடாரம் அடித்துத் தங்கியிருக்கிறான். அழகாக இருந்ததால் அதற்கு “ஃபரஹாபாத்” என்று பெயர் வைத்தானாம். அப்பொழுது, கோவில் மீது கை வைத்தானா என்று தெரியவில்லை. இங்கிருந்து கோவிலுக்கு நடந்து செல்ல வேண்டும்.
Saleswaram, Linga, Nalammalla forest-2

Now, the Linga is enclosed with Iron grill

கோவிலின் தொன்மை: குகைக் கோவில் மற்றும் இதர கட்டிடங்கள் இடிந்த நிலையில் காணப்படுகின்றன. இப்பொழுதுள்ள ஆதாரங்களை வைத்துக் கொண்டு, 6-7ம் நூற்றாண்டுகளில் CE கட்டப் பட்ட சிறிய குகைக்கோவிலாக உள்ளது என்று காலம் கணிக்கப் படுகிறது. ஆனால், லிங்கம் சுயம்பு என்பதால், அம்மலை, குகை உருவான காலத்திற்கு செல்கிறது. ராமர், பாண்டவகள் வந்து வழிபட்டனர் என்றெல்லாம் அங்கிருக்கும் செஞ்சு மக்களே கூறுவதால், அதன் தொன்மை நிச்சயமாக 5,000 வருடங்களுக்கு முன்பாக செல்கிறது அக்குகைக்கு முன்பாக, ஒரு இயற்கையான குளம் உள்ளது. மேலேயிருந்து விழும் நீர்வீழ்ச்சியின் நீர் அங்கு விழுகிறது. இதைத் தவிர இன்னொரு குளமும் உள்ளது. இவை சர்வேஸ்வர தீர்த்தம் மற்றும் புஷ்கரனி தீர்த்தம் என்றழைக்கப் படுகின்றன. இதில் குளித்தால் பாவங்கள் தொலையும், நோய்கள் நீங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீர்வீழ்ச்சியாக காடுகளில்லிருந்து விழுவதால், அந்நீரில் மூலிகைகள் மற்றும் கனிமங்கள் கலந்திருப்பதால், அத்தகைய விளைவை ஏற்படுத்துகிறது. செஞ்சு பழங்குடி இனத்தவரே, இக்கோவிலை கவனித்துக் கொள்கின்றனர்.

Saleswaram, hut-house of Chenchus

A hut-house of the Chenchus living nearby – can be seen

Saleswaram, Linga, Nalammalla forest-water fall

The water fall, falling from the top into the valley

Saleswaram, Linga, Nalammalla forest-water fall-2

The water-fall, falling down into the tank, where, devotees take bath

Saleswaram, Linga, Nalammalla forest-3

Brick structures visible

குகைக் கோவில் தரிசனம்: கீழேயிருந்து மேலேயுள்ள குகைக்கோவிலுக்குச் செல்ல படிகள் உள்ளன. இது சலேஸ்வரம் லிங்கமைய்யா என்று அழைப்பப்படுகிறது. வருடத்தில் உகாதிற்குப் பிறகு வரும் சித்ரா பௌர்ணமி அன்று தான், இக்கோவில் திறக்கப்படும். இதெல்லாமும், தொன்மையின் சிறப்பைக் காட்டுவது. அக்காலத்தில் காலம் கணக்கிடுபவர்கள் சந்திரமாதம் [முப்பது நாட்கள்], சந்திர வருடத்தைத் தான் [360 நாட்கள்] பின்பற்றி வந்தனர். யுகாதி / உகாதி, அதாவது யுகத்தின் ஆரம்பம், பௌர்ணமி போன்றவை, அவகளது வாழ்க்கையை சேர்ந்துள்ளன. இங்குள்ள செஞ்சு மக்கள் அமாவாசை-பைர்ணமி சடங்குகளை நடத்தி வருகிறார்கள். வருடத்தில், இக்கோவில் ஐந்து நாட்கள் தான் திறக்கப் பட்டிருக்கும். அப்பொழுது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். தவிர இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை “சலேஸ்வரம் ஜாத்ரா” என்ற விழா கொண்டாடுவதால் பக்தகள் வந்து தரிசித்துச் செல்கிறார்கள். இப்பொழுதெல்லாம் ஆயிரக்ககணக்கில் “ட்ரெக்கிங்” என்று இளைஞர்கள் வந்து போகிறார்கள்.

Saleswaram, Linga,going up-3

Devotees climbing up in the steps – no crowd control – if anything happens, devotees would suffer. Some handrails, and regulated queue should be there.

Saleswaram, Linga,going up-2

Devotees climbing up in the steps – with luggage implying that nor arrangement is there to help them.

Saleswaram, Linga,going up

Devotees climbing up in the steps – top the brick structures are seen

Saleswaram, Linga, Nalammalla forest-4

The Linga inside without decoration

 

இடைக்காலத்தில் கோவில் இடிக்கப்பட்டதா?: ஃபரஹாபாத் [Farahabad என்றால் அழகான இடம்] என்ற இடத்திலிருந்து 16 கிமீ தொலைவில் இக்கோவில் உள்ளது என்று முன்னர் குறிப்பிடப் பட்டது. நிஜாம் நூறாண்டுகளுக்கு முன்னர் இங்கு கோடைகாலத்தை கழிக்க, இங்கு வந்து கூடாரம் அடித்துத் தங்கியிருக்கிறான். பொதுவாக நிஜாம், சுல்தான், நவாப் போன்றோர், இப்படி படையோடு கிளம்பினால், தனியாக இருக்கும் கோவிலை விட்டு வைப்பதில்லை என்பது, அவர்களது கைபீது, உலா / சபர் போன்ற விவரிப்புகளில், பெருமையாக, “காபிர்களின், சைத்தான் வாழும் இடத்தை இடித்துத் தள்ளினேன்…..” என்று எழுதிவைத்ததிலிருந்து தஎரிந்து கொள்ளலாம். அஹோபிலக் கோவில்கள் குதுப் சாஹிகளால் பாதிக்கப்பட்டன என்பது கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது. ஆகவே, இதைப் பற்றியும் ஆய்ந்து விவரங்கள் வெளியிட வேண்டும். இப்பொழுதைய தெலிங்கானா அரசில், துலுக்கரின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், குறுகிய காலத்தில், அவையெல்லமும்மறையக் கூடிய நிலையும் ஏற்படலாம்.

Saleswaram, Linga, Nalammalla forest-1

Decorated Linga with iron grill enclosure

ஆந்திரா உடைந்து தெலிங்கானா உருவானது: இப்பொழுது, தெலிங்கானா மாநிலம், பழைய நிஜாம் பகுதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. துலுக்கர் ஜனத்தொகையும் அதிகமாக உள்ளது. இதனால், உள்ள பாரம்பரியங்களை மறைக்க, சுற்றுலா ரீதியில், புராதான கோவில்களை “சுற்றுலா இடங்களுடன்” இணைத்து வருகிறார்கள். அதாவது, கோவிலுக்குச் செல்பவர்கள், கோவிலைத் தவிர அருகில் உள்ள மற்ற இடங்களைப் பார்க்க வேண்டும். சுற்றிப் பார்க்க வந்தவர்கள், கோவிலுக்கு வருகின்றனர். அவர்களுக்கு அதில் விருப்பம் இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். மேலும், இந்துக்கள் அல்லாதகளாகவும் இருக்கலாம். இதனால், நாளடைவில், இவ்விடங்கள் “சுற்றுலா தலங்களாக” மாறி புனிதத்தை இழக்க நேரிடும் நிலையும் உண்டாகிறது. கூட்டம் நேர-சேர கடைகள், ஹோட்டல்கள், தங்குமிடங்கள் என்று ஈசல் போன்று வளரும் போது, வியாபாரம் பெருகும், கோவிலை பாதிக்கும் விசயங்கள் அதிகமாகும்.

© வேதபிரகாஷ்

18-05-2018

Saleswaram, Linga, Nalammalla forest-water fall

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அடையாளம், அத்தாட்சி, அழிப்பு, அழிவு, ஆகாயம், ஆதிவாசி, ஆலயம், இடைக்காலம், இறைப்பணி, உடைப்பு, காடு, கானவனம், காலக்கணக்கீடு, காலக்கணிப்பு, காலம், குகை, குகைக் கோவில், குளம், சடங்கு, சலேஸ்வரம், சித்தர், சுயம்பு, செஞ்சு, செஞ்சு குடி, செஞ்சு லக்ஷ்மி, செஞ்சு லட்சுமி, செஞ்சுலட்சுமி, தரிசனம், தீர்த்தம், நவாப், நிஜாம், மண்ணனூர், மலை, ஶ்ரீசைலம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s