ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 103வது ஆராதனை நெரூரில் 05-05-2017 அன்று நடந்தது – மாறிவரும் சூழ்நிலைகள் – எதிர்கொள்ள வேண்டிய புதுப் பிரச்சினைகள்! (3)

ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 103வது ஆராதனை நெரூரில் 05-05-2017 அன்று நடந்தது மாறிவரும் சூழ்நிலைகள் எதிர்கொள்ள வேண்டிய புதுப் பிரச்சினைகள்! (3)

Nerur-2017 - Kailash Ashram- Sadasivananda Samadhi

Nerur-2017 – Kailash Ashram- situated before the Adhistanam – Sadasivananda Samadhi

Nerur-2017 - Kailash Ashram- Sadasivananda Samadhi.close view

Nerur-2017 – Kailash Ashram- Sadasivananda Samadhi. close view – Mahameru structure is placed on the Samadhi.

Nerur-2017 - Kailash Ashram- Sadasivananda Samadhi. side view

Nerur-2017 – Kailash Ashram- Sadasivananda Samadhi. side view

Way to Brahmananda samadhi, Kailash Ashram

Way to Brahmananda samadhi, Kailash Ashram

கைலாச ஆஸ்ரமம், நெரூர்: நெரூர் கைலாச ஆஸ்ரமத்தில், சுவாமி சதாசிவானந்தா என்பவர் இருந்தார், அவர் பலருக்கும் கடிதம் எழுதினாலும், பதில் கொடுக்கும் நேயம் கொண்டவர். ஒரு முறை அவருடன் பேசு வாய்ப்புக் கிடைத்தது. ஆன்மீகம், இந்துமதம், மகான்கள், சக்தி உபாசனை முதலியவற்றில் நிறைய விசயங்களைத் தெரிந்து வைத்திருந்தவர். ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர் பற்றியும் விவரங்களை சொல்லியிருக்கிறார். இவர் காலமானதும், அவரது சமாதி, அலுவலகத்தின் வலது பக்கத்தில் கட்டப்பட்டுள்ளது.  . மேலே மஹாமேரு உருவம் அமைக்கப்பட்டுள்ளது. ஶ்ரீ பிரமானந்தரின் சமாதி, வலது பக்க மூலையில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆஸ்ரமம் சார்பில், நெரூர் என்ற மாத இதழ் வந்து கொண்டிருந்தது.

Nerur-2017 - Agraharam - Viswanath, Shanmugam, Gopi, Pazhanisami, Ramakrishnan

Nerur-2017 – Agraharam – Viswanath, Shanmugam, Gopi, Pazhanisami, Ramakrishnan

வள்ளலார் சபையில் நடந்த வாத-விவாதங்கள்: வள்ளலார் சபையில் எப்பொழுதுமே 100-150 பேர் வந்து தங்குவர், ஆனால், இந்த தடவை ஐந்து பேர் தான் தங்கினர். கட்டிடப் பணி நடந்து கொண்டிருக்கிறது என்பது ஒரு காரணம். ஆனால், நிச்சயமாக பக்தர்களின் கூட்டமே இம்முறை குறைந்து விட்டது. இரண்டு ஆண்டுகளாக, “உருளும்” நேர்த்திக் கடன் நடப்பதில்லை. அதனாலும், கூட்டம் குறைந்து விட்டது. போதாகுறைக்கு, இம்முறை தண்ணீர் பிரச்சினை அதிகமாக இருக்கிறது. காவிரியில் நீரே இல்லை. எது எப்படி இருப்பினும், வள்ளலார் சபைக்கு வரும் பக்தர்கள் இரவு முழுவதும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விசயங்களைப் பற்றி அலசிக் கொண்டிருப்பார்கள். இந்த வாத-விவாதங்கள் நள்ளிரவையும் தாண்டி செல்லும். இம்முறை, மருத்துவர் விஸ்வநாதன், திரு. கோபி (கரூர் நாகராஜனின் மகன்), திரு பழனிச்சாமி (டெபுடி செக்ரடரி, கூட்டுறவு – ஓய்வு),  திரு சண்முகம் (ஐ.ஆர்.எஸ்- ஓய்வு), திரு ராமகிருஷ்ணன் (வள்ளலார் சபை, நிறுவனர்) முதலியோர் அத்தகைய உரையாடலில் ஈடுப்பட்டுள்ளனர்.

Kanchi and Sringeri acjaryas can solve Kaveri issue

Kanchi and Sringeri acharyas can solve Kaveri issue

காவிரி பிரச்சினையை சங்கராச்சாரியாட்கள் தீர்த்து வைக்கலாமே?: ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர் இப்பொழுது எந்த மாநிலத்திற்கும் சொந்தமானவர் இல்லை. ஆந்திராவிலிருந்து வந்து, தமிழகத்தில் வாழ்ந்து, சிலகாலம் கர்நாடகாவில் இருந்தாலும், இறுதியில் நெரூரில் (தமிழகத்தில்) ஜீவசமாதி அடைந்தார். காவிரிக்கரையில் அவர் எத்தையோ தடவை நடந்து சென்றிருப்பார். அதாவது காவிரி அவருடன் பின்னிப் பிணைந்துள்ளது. இன்றைக்கு வரையிலும், கர்நாடகாவிலிருந்து பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். சிருங்கேரி சங்கராச்சாரியார் கர்நாடகாவில் இருந்து வந்து, நெரூரில் பூஜை செய்கிறார், கோவிலை ஆரம்பித்து வைக்கப் போகிறார்.  காஞ்சி சங்கராச்சாரியாரும் நெரூரில் மடத்தைக் கட்டி சேவை செய்து வருகிறார்கள். இங்கு இரு மடத்தவரும் சேர்ந்து இந்த ஆராதனை மற்றும் சம்பந்தப் பட்ட சேவைகளை செய்து வருகிறார்கள். அதனால், என்னுடைய மனத்தில், இத்தகைய எண்ணம் எழுந்தது. இவ்வருடம், காவிரியில் நீரில்லை, நெரூரிலும் நீரில்லை. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப் படுவதற்கு முன்னர், நதிகள் பிரச்சினைகளில் சிக்கவில்லை. இப்பொழுது, அவை அதிகமாகவே பிரச்சினைகளில் சிக்கியுள்ளன. நீரின்றி, எந்த கிரியையும் செய்ய முடியாது. இருவருமே ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரை ஆராதிக்கும் பொழுது, இந்த சங்ஜராச்சாரியார்கள், காவிரி, நதிநீர் பங்கீடு போன்ற – இப்பிரச்சினைகளைத் தீர்க்கலாமே, என்று தோன்றியது. அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு தீர்வு, இவர்களால் எடுக்க முடியும், மக்களை இணைக்க முடியும் என்ற ஆசை எழுந்தது. பார்ப்போம் என்னாகும் என்று!

SC stay on Made Snana continues - March 2017

SC stay on Made Snana continues – March 2017 – Deccan Herald

எச்சில் இலைகளில் உருளும் நேர்த்திக் கடன்கிரியைக்கு எதிராக போடப் பட்டுள்ள வழக்கின் நிலவரம்[1]: மலேகுடிய வகுப்பினர் “மடே ஸ்நான” என்ற எச்சில் இலைகளில் புரளும் நேர்த்திக் கடனை நம்பிக்கையாக, தக்ஷின கர்நாடகாவில் உள்ள கோவில்களில் கடைபிடித்து வருகின்றனர். ஆனால், ஜோசப் அரிஸ்டாடில் [Joseph Aristotle] என்ற வழக்கறிஞர், தீண்டாமை கடைப்பிடிக்கப் படுகிறது என்ற காரணம் காட்டி கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஒரு கிருத்துவர் இவ்விசயத்தில் ஏன் வழக்கு தொடர வேண்டும் என்று கவனிக்கத் தக்கது. கிருத்துவத்தில் போர்ன் குற்றங்கள், கற்பழிப்பழிப்புகள், பிடோபைல் என கொடுங்குரூர குற்றங்கள் அரங்கேறி வரும் போது, அவற்றையெல்லாம் விடுத்து, இதில் மூக்கில் நுழைத்திருப்பது, அவர்களின் வன்மத்தைத்தான் காட்டுகிறது. “ஆதிவாசி புடகட்டு ஹீத்ர-ரக்ஷன வேதிகே” கோரிய வழக்கில் அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், ”டிசம்பர் 12. 2014ல் இவர் உச்சநீதி மன்றத்தை அணுகினார். இப்பிரச்சினை சம்பந்தப்பட்ட, ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் கோவில் எச்சில் இலை உருளும் பண்டிகையும், பி.தளபதி என்பவர் செப்டம்பர் 2016ல் தொடுத்த வழக்கில் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. அதனால், மார்ச்.24,. 2017 அன்று அத்தடை தொடரும் என்று அறிவித்தது[2]. கர்நாடக அரசே, “சட்டம் ஒழுங்குமுறை” பிரச்சினை வரும் என்று தடைக்கு ஆதரவாக கோரிக்கை மனு போட்டுள்ளதும் கவனிக்கத் தக்கது.

Nerur-2017 - Kasi Viswanath temple entrance

Nerur-2017 – Kasi Viswanath temple entrance

Nerur-2017 - Kasi Viswanathar temple entrance.

Nerur-2017 – Kasi Viswanathar temple entrance.

Nerur-2017 - Kasi Viswanathar temple -Garba gruha

Nerur-2017 – Kasi Viswanathar temple -Garba gruha

Nerur-2017 - Kasi Viswanathar temple -Garba gruha.near

Nerur-2017 – Kasi Viswanathar temple -Garba gruha.near

Nerur-2017 - Kasi Viswanathar temple -Garba gruha.side-out

Nerur-2017 – Kasi Viswanathar temple -Garba gruha.side-out

பங்குனி பௌர்ணமி (10-04-2017) அன்று விசேஷ பூஜைகள் நடந்தன: கரூர் அருகே உள்ள நெரூர் சதாசிவ பிரமேந்திராள் கோயிலில் ஒவ்வொரு பெளர்ணமியன்றும் சிறப்பு விஷேச பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் பங்குனி பெளர்ணமியையொட்டி இன்று (10-04-2017) காவிரி கரையோரம் அமைந்துள்ள இந்த சதாசிவ பிரமேந்திராள் ஆலயத்தில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். கரூர்மட்டுமில்லாமல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா,தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட ஏராளமான மாநிலங்களில் இருந்தும் காலை முதல் மாலை வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியன. மாலைசிறப்பு பூஜைகளும் சதாசிவபிரமேந்திராளுக்கு சிறப்பு மஹா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்[3]. கன்னட இசை சித்தரான சதாசிவ பிரமேந்திராளை மனதில் நினைத்து தியானம் செய்தால் நினைத்ததை நிறைவேற்றுவார் என்பதும், மெளனமாக தியானம்மேற்கொண்டால் உடல்நிலை மேலும், மேலும் சீரடைந்து உயர்வடையும் என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருந்தது[4].

Nerur-2017 -left towards Sadasiva Adhistana

Nerur-2017 -left towards Sadasiva Adhistana

Nerur-2017 -in front of Sadasiva Adhistana

Nerur-2017 -in front of Sadasiva Adhistana

Nerur-2017 -Near to Sadasiva Adhistana

Nerur-2017 -Near to Sadasiva Adhistana

Nerur-2017 -Close to Sadasiva Adhistana

Nerur-2017 -Close to Sadasiva Adhistana

Nerur-2017 -Near to Sadasiva Adhistana.engaged in different vocation

Nerur-2017 -Near to Sadasiva Adhistana. engaged in different vocation

Nerur-2017 -Near to Sadasiva Adhistana.engaged in different vocation.singing

Nerur-2017 -Near to Sadasiva Adhistana. engaged in different vocation. singing

நெரூரில் மணல் கொள்ளைக்குப் பிறகு தண்ணீர் கொள்ளை: கரூர் அடுத்த, நெரூர் மணல் குவாரி மூடியதால், தற்போது விவசாயம் என்ற போர்வையில் போர்வெல் மூலம் தண்ணீர் எடுத்து டேங்கர் லாரிகள் மூலம் விற்றுவருகின்றனர்[5]. இதுகுறித்து, நெரூர் ராஜமாணிக்கம் கூறியதாவது: நெரூர் காவிரியாற்றில் இருந்து, பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தும், காவிரியில் மணல்கொள்ளை அதிகளவில் நடந்தது. இதைத் தொடர்ந்து தொடுக்கப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் ஆற்றில் மணல் அள்ள தடை விதித்தது. இதைத்தொடர்ந்து, நெரூர் மணல் குவாரி மூடப்பட்டு தற்போது தண்ணீர் இல்லாத காரணத்தால், பெரும் பள்ளங்களாகவும், பாலைவனமாகவும் காட்சியளிக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் சென்று வந்த காரணத்தால், நெரூரில் இருந்து பஞ்சமாதேவி வரை சாலைகள் பல்லாங்குழியாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், நெரூர் சதாசிவ பிரமேந்திராள் கோவில் செல்லும் வழியில் விவசாயத்துக்கு போடப்பட்ட போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு, விவசாயத்து பயன்படுத்தாமல் அதை விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். நாள்தோறும் இப்பகுதியில் இருந்து, 3,000 முதல், 5,000 லிட்டர் கொண்ட தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலம் கரூர் நகருக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தூரத்துக்கு ஏற்ப, 2,000 முதல், 3,000 ரூபாய் வரை விற்று கொள்ளை லாபம் அடைகின்றனர். விதிமுறை மீறி இயக்கப்படும் தண்ணீர் டேங்கர் லாரிகளை, அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்[6].

Nerur-Karur sand loot on the banks of Kaveri

Nerur-Karur sand loot on the banks of Kaveri – Remember, how Sri Sadasiva Brimendra was attacked when he was under the sands of Kaveri at Kodumudi!

கிருத்துவர்களின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் நடக்கின்றன: நெரூரில் “கிருத்துவர்களா?” என்று முன்னர் ஆச்சரியப்பட்டதுண்டு, ஏதோ பள்ளிகள் இருப்பதை பார்த்தாலும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. இம்முறை காரில் வந்தபோது, பாதை தவறியதால், கரூர் வந்து, நெரூக்கு வர வேண்டியதாயிற்று. நடுவில் டீ குடிக்க கடையில் நின்று கொண்டிருக்கும் போது, இருவர் பேசிக் கொண்டதை கேட்டபோது, கவனம் அவர்கள் பக்கம் திரும்பியது. ஏனெனில், “நெரூரில் சர்ச் கட்ட வேண்டும், அங்கு அறுவடை நன்றாக நடக்கும், தலித்துகள் மீது குறி வைக்க வேண்டும், அதற்கு குறிப்பிட்ட கட்சிக்காரர்கள் உதவுவார்கள்………”, என்ற ரீதியில் பேசியது திகைப்பட வைத்தது. அதனால், நான்கு டீ குடிக்க வேண்டியதாயிற்று. நண்பர் மற்றும் டிரைவர் “என்ன சார், எவ்வளவு டீ குடிக்கறீங்க?”, என்றதும் சமாளித்துக் கொண்டு வந்து விட்டேன். பிறகு விசாரித்ததில், கிருத்துவர்கள் ஶ்ரீ காசி விஸ்வநாத கோவில் அருகிலேயே விவசாய நிலத்தை வாங்கி, கட்டுமானங்களைக் கூட தொடங்கியதாகவும், பிறகு, மக்களே கூடி தடுத்துவிட்டதாத தெரிந்தது[7]. ஆனால், இவையெல்லாம் 2011-12 வாக்கில் நடந்தன[8]. இப்பொழுது, அவர்களது பேச்சைக் கேட்டப் பிறகு, இனிமேல் ஏதோ நடக்கும் என்று தெரிகிறது. “கரூர் மற்றும் நெரூரில் 1640ற்கு முன்னரே கிருத்துவம் [கிருத்துவர்கள்] இருந்தது. ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த அவர்கள் திருச்சி அல்லது மதுரையில் பாப்டிசம் செய்யப் பட்டனர். ஆர்.சி பள்ளி நெரூரில் கட்டப்பட்டது, 2004ல் செயின்ட் மேரி ஆரம்பப் பள்ளி கட்டடம் கட்டப் பட்டது. தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. இதையெல்லாம் சைமன் பீட்டர் என்ற பாதிரி செய்தார். இப்பொழுது செயின்ட் அன்னி கான்வென்ட் மற்றும் மருத்தமனை இயங்கிக் கொண்டிருக்கின்றன”, என்று இணைதளத்தில் புதியதாக கதையும் காணப்படுகிறது[9]. நாளைக்கு 18ம் நூற்றாண்டில் அப்பகுதியில் ஒரு கிருத்துவ சாமியார் இருந்தார், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் நெருங்கிய நண்பர் என்றெல்லாம் கூட கதை விட ஆரம்பித்தாலும் ஆச்சரியப் பட்வதற்கு இல்லை. ஆகையால், இந்துக்கள், இந்து இயக்கங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

07-05-2017

[1] The Supreme Court on March 24, 2017 (Friday) ordered that the stay granted on ritual ‘Made Snana’ performed by people from Malekudiya community in Dakshina Kannada district and elsewhere would continue till the legal validity of the practice is finally decided. A three-judge bench granted “leave” on a petition filed by the Karnataka government, meaning thereby the matter would now come up for consideration as per the regular list. The apex court had on December 12, 2014, stayed a Karnataka High Court order which allowed ‘Made Snana’. The HC order had come on a petition filed by ‘Adivasi Budakattu Hitrarakshana Vedike’. The court had then admitted the Karnataka government’s special leave petition filed by advocate Joseph Aristotle for consideration against the ritual in which devotees rolled over the leftovers under the belief that it would cure skin diseases and solve infertility problems of women. “Untouchability has continued for over 500 hundred years, it does not mean we can continue with it,” the court had then observed.

Deccan Herald, SC stay on ‘Made Snana’ to continue, March 25, 2017, New Delhi, DHNS 1:49 IST

[2] In a related writ petition filed by P Thalapathi, the Union government had in September 2016 called for a ban on the ritual, also practised in Tamil Nadu, saying it could not be shielded under the right of freedom of religion granted under the Constitution. In Karnataka, the ritual is followed during the three-day annual celebrations in November-December. In Tamil Nadu, the custom is seen every April as part of the annual Aradhana festival of the Nerur Sadasiva Bharmendrai Temple in Karur district. In its petition, the Karnataka government sought ban on the custom in its original form saying the right to practice one’s religion was subject to certain conditions. It also claimed the practice, in its original form, also called ‘Pankti Bheda’ was clearly against the public order, morality and health.The state government also claimed that allowing the community to perform the rituals as per their religious belief during ‘Shasti’ festival could lead to untoward incidents including law and order problems.

http://www.deccanherald.com/content/603056/sc-stay-made-snana-continue.html

[3] ஈநாடு.இந்தியா.தமிழ், கரூர் அருகே நெரூர் சதாசிவ பிரமேந்திராள் கோயிலில் பங்குனி உற்சவம், Published 11-Apr-2017 17:41 IST.

[4] http://tamil.eenaduindia.com/Rainbow/SoulSpace/2017/04/11174153/sathasiva-bramendral-utsav.vpf

[5] தினமலர், நெரூர் மணல் குவாரி பகுதியில் தண்ணீர் விற்பனை, பதிவு செய்த நாள். மே.1, 2017. 08.44.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1762394

[7] Mahesh, Another attempt by Christian mission on HH Sadasiva Brahmendra Swamigal Adishtanam, March 20, 2012.

[8] https://mahaperiyavaa.blog/2012/03/20/another-attempt-by-christian-mission-on-hh-sadasiva-brahmendra-swamigal-adishtanam/

[9] The Christianity of Karur and Nerur were existing before 1640, comprising mostly of Adi Dravida community, baptized at Tirichirapally or Madura in 162O’s. . In 2004 a new building of St. Mary’s Elementary School was constructed and at Nerur R.C Primary school, a drinking water tank, etc., were also constructed through the efforts of Fr. Simon Peter. . St. Anne’s Convent  and Hospital are also functioning.

http://www.coimbatorediocese.org/yadd-the-church-our-lady-of-mount-carmel.php

 

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அக்ரகாரம், அக்ரஹாரம், அத்துமீறல், அன்னதானம், அவதூதர், ஆதிசங்கரர், ஆரத்தி, ஆலயம், இறைப்பணி, உழவாரப்பணி, கட்டடம், கட்டிடம், கருவறை, கரூர், கல்வெட்டு, காஞ்சி, காவிரி, கோவில், சங்கமம், சங்கரர், சங்கராச்சாரி, சடங்கு, சட்டம், சதாசிவ பிரும்மேந்திரர், சமாதி, சாப்பாடு, சாப்பிட்ட இடம், சித்தர், சிவன், சேவை, நரசிம்மர், நெரூர், நேர்த்திக் கடன், பஜனை and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 103வது ஆராதனை நெரூரில் 05-05-2017 அன்று நடந்தது – மாறிவரும் சூழ்நிலைகள் – எதிர்கொள்ள வேண்டிய புதுப் பிரச்சினைகள்! (3)

  1. sathivel00 சொல்கிறார்:

    ”உழவாரப்பணி’ செய்தி மடல் கிடைத்துவருகிறது. கலியுகக் காலம் நம்மை மூவாசைபிடியுள் சிக்கவைத்து நம், ‘சித்தத்திலுள்ள ஜெகத்” தை ஆள்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s