ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 103வது ஆராதனை நெரூரில் 05-05-2017 அன்று நடந்தது! (1)

ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 103வது ஆராதனை நெரூரில் 05-05-2017 அன்று நடந்தது! (1)

Nerur-2017 - Vallalar Sabai - changed look

Nerur-2017 – Vallalar Sabai – changed look now in May 2017

Nerur-2017 - Vallalar Sabai - appeal

Nerur-2017 – Vallalar Sabai – making appeal for the expenditure incurred in renovation

ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 103வது ஆராதனை நெரூரில் 05-05-2017 அன்று நடந்தது!: 04-05-2017 இரவு நெரூரை அடைந்தோம். வழக்கம் போல, திரு வள்ளலார் சபை / மன்றத்தில் இரவு தங்கினோம். சென்ற ஆண்டே மழை-காற்று வந்த போது, நாங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போதே, மண்டபத்தின் மூலையின் கூரை இடிந்து விழுந்தது. இப்பொழுது அந்த ஓடுகள் மற்றும் கீற்று கூரையை அகற்றி விட்டு, கான்கிரீட் தளம் போடப்பட்டுள்ளது. இன்னும் பணம் தேவைப்படுவதால், கோரிக்கை விடபட்டுள்ளது. சென்ற ஆண்டு (2016) எட்டு பேர் காரில் வந்திருந்தோம். இம்முறை, ஐந்து பேர் தான் வந்திருக்கிறோம். கார்-பேரூந்து என்று பிரிந்து வந்திருக்கிறோம். காரணம் என்று யோசித்துப் பார்த்தால், வேடிக்கைதான் மிஞ்சுகிறது. நம் நிலைமை தான் இப்படியிருக்கிறது என்றால், மற்ற பக்தர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை, ஆமாம், கூட்டம், மிகக்குறைவாகவே இருந்தது. 10,000 என்றெல்லாம் கூட்டம் வரும் நிலையில், ஆயிரத்திற்கும் குறைவாகவே கூட்டம் இருந்தது என்று தெரிகிறது. “எச்சில் இலையில் உருளும் நேர்த்திக் கடன்” நிறுத்தப்பட்டதிலிருந்தே கூட்டம் குறிந்து விட்டதை கவனிக்கலாம்[1]. முன்பெல்லாம், கரூரிலிருந்து, நெரூர் வரை, பேனர்கள், சுவரொட்டிகள் போன்ற விளம்பரங்கள் எல்லாம் இருக்கும், ஆனால், இன்று, நெரூரிலேயே ஒன்றையும் காணவில்லை. “தினமலர்” போன்றவையும் சிறப்பு பதிப்பை எடுத்து வரவில்லை[2]. சீரப்புப் பேரூந்துகளும் இல்லை. 04-05-2017 மாலை அக்ரஹாரம் வெறிச்சோடியிருந்தது. 05-05-2017 காலையிலும், கூட்டத்தைக் காணமுடியவில்லை.

Nerur-2017 - Vallalar Sabai - Ramakrishnan sitting in the hall

Nerur-2017 – Vallalar Sabai – Sri Ramakrishnan sitting in the hall, contemplating on future work.

திரு அருட்பிரகாச வள்ளலார் சபையின் நிலைமை: திரு அருட்பிரகாச வள்ளலாரின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு, திரு ராமகிருஷ்ணன் தன்னுடைய வாழ்நாளை இப்பணிக்கு அர்பணித்து தொண்டு செய்து வருகிறார். கிடைக்கும் நன்கொடையை வைத்துக் கொண்டு, தினமும் காலை கஞ்சி இலவசமாகக் கொடுக்கப் படுகிறது. பிரமிடு தியான மண்டபம் என்றெல்லாம் கட்டி வைத்திருக்கிறார். முன்னமே குறிப்பிட்டப்படி, சென்ற ஆண்டு 2016ல் மழை-காற்று வந்த போது, நாங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போதே, 15-05-2016 இரவில் மண்டபத்தின் மூலையின் கூரை இடிந்து விழுந்தது. இப்பொழுது அந்த ஓடுகள் மற்றும் கீற்று கூரையை அகற்றி விட்டு, கான்கிரீட் தளம் போடப்பட்டுள்ளது. அந்த பெரிய மண்டபத்தில் அவர் உட்கார்ந்திருக்கிறார். வேலை நடந்து கொண்டிருப்பதால், “வள்ளலார் சபை” முன் தோற்றம் இப்பொழுது இப்படியுள்ளது. சென்ற ஆண்டு நூறுக்கும் மேலான பக்தர்கள் இங்கு தங்கியிருந்தனர்[3]. ஆனால், இவ்வருடம் நாங்கள் ஐந்து பேர் தான் தங்கியிருக்கிறோம்!

Nerur-2017 - Agraharam - RHS- dilapidated house

Nerur-2017 – Agraharam – RHS- one of the dilapidated houses seen

Nerur-2017 - Agraharam - new constructions coming up

Nerur-2017 – Agraharam – new constructions coming up, before Sringeri mutt

Nerur-2017 - Agraharam - Kanchi Sankara Mutt

Nerur-2017 – Agraharam – Kanchi Sankara Mutt can be seen

Nerur-2017 - Agraharam - Sadasiva house

Nerur-2017 – Agraharam – Sri Sadasiva house, office – after Kanchi mutt on RHS

05-05-2017 காலை சுற்றிப்பார்த்தபோது கவனித்த விசயங்கள்: கடந்த 15 வருடகாலத்தில், 12வது முறையாக இங்கு வருகிறேன். திரு கரூர் நாகராஜன் தான், நெரூரை, ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திராளை எனக்கு தெரிய வைத்தவர். இப்பொழுது அவரில்லை, ஆனால், அவரது மகன் வந்து கொண்டிருக்கிறார். நாங்களே ஐந்து முறை நேர்ந்து வந்திருக்கிறோம். கடந்த 15 வருடங்களாகச் சென்று வருவதால், நெரூர் அக்ரஹாரத்தில் ஏற்பட்டு வரும் மாறுதல்களைக் கவனிக்க முடிகிறது. பழைய வீடுகள் வாங்கப் பட்டு, புதிய கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. அக்ரஹாரத்தின் நடுவே காவிரியின் கால்வாய் இருக்கிறது. அதில் எப்பொழுதுமே தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும், ஆனால், இவ்வருட, தண்ணீர் இல்லை.  இரு புறமும், 150 வருடங்களுக்கும் மேலாக இருந்து வரும் பழைய ஓடுவீடுகள் இருக்கின்றன. ஏழெட்டு குடும்பங்கள் அங்கேயே இருந்து வசித்து வருகிறார்கள். இப்பொழுது (கடந்த 25 வருடங்களில்) சில வீடுகளை மற்றவர்கள் வாங்கி குடியேறியுள்ளனர். இன்னும் சுமார் பத்து வீடுகள் இடிந்த நிலையில் உள்ளன. வலது பக்கத்தில் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் படம் உள்ள வீடுள்ளது. அதுதான் அலுவலகமுமாக செயல்பட்டு வருகின்றது. அதற்கடுத்த இரண்டாவது வீடு வாங்கப்பட்டு, சிருங்கேரி சங்கர மடம் கட்டி முடிக்கப்பட்டது.

Nerur-2017 - Agraharam - Venkat Satri

Nerur-2017 – Agraharam – Bach side of the Sri Sadasiva Nerur trust office – Sri Venkat Sastri can be seen

Nerur-2017 - Agraharam - Venkat Sastri

Nerur-2017 – Agraharam – Sri Venkat Sastri

ஶ்ரீ காஞ்சி மடம் கல்வெட்டு கூறும் விசயங்கள்: இப்பொழுது, அதற்கும் முன்னால் இருக்கும் வீட்டை இடித்து காஞ்சி சங்கர மடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. “ஶ்ரீ ஶங்கர பகவத்பாதரின் நிலைப்பிடமும் உலகோர் அனைவராலும் பூஜிக்கத்தக்கதுமான ஶ்ரீ காஞ்சிகாமகோடி மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடத்தில் 57வது ஆசார்யரான ஶ்ரீ பரமஶிவேந்திர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகளின் சிறந்த ஶிஷ்யரான ஶ்ரீ ஸதாஶிவ ப்ரஹ்மேந்திரர் விதேஹ கைவல்யம் அடைந்த புண்ணிய பூமியில் புண்ணிய நதியான காவேரிக் கரையில் அக்நீஶ்வர க்ஷேத்திரத்தின் அருகே விளங்குவது இவ்வக்ரஹாரம். இதன்கண் இந்த உன்னதமான பீடத்தின் 69வது பீடாதிபதியான ஶ்ரீ ஜயேந்திர ஸரஶ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் ஆயிரம் பிறை காண்பதை முன்னிட்ட ஆயிரம் நாள் மஹோத்வத்தில், கலியில் 5116வதும் பகவத்பாதர் அவதாரத்திலிருந்து 2523வதுமான ஜய வருடம், உத்தராயணம், க்ரீஷ்மருது, வைகாசி மாதம், அனுஷ நக்ஷத்திரம், குருவார நன்னாளன்று (2014 ஜூன் 12) ஶ்ரீ சந்த்ரமௌளீஶ்வர பூஜைக்காகவும், வேத ஶாஸ்த்ர கல்வி, ஶ்ரௌத ஸ்மார்த்த கர்மாநுஷ்டானம், கோ ஸம்ரக்ஷணம் முதலிய தர்மங்கள் வளரும் பொருட்டும் இரு கட்டிடங்களுடன் கூடியதான இந்த ஶ்ரீமடம் குருநாதன் திருவடிகளில் ஸமர்ப்பிக்கப்பட்டது,” என்று அங்கு பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு அறிவிக்கின்றது. இதிலிருந்து அறியப்படும் சரித்திர விவரங்கள்:

Nerur-2017 - Agraharam - Kanchi Sankara Mutt.12-06-2014

Nerur-2017 – Agraharam – Kanchi Sankara Mutt. dedicated two buildings for various service activities on 12-06-2014 giving historical details

  1. காஞ்சிகாமகோடி மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடத்தில்ஶ்ரீ காஞ்சி மடமும் ஆதிசங்கராச்சாரியாரால் நிறுவப்பட்டது[4].
  2. 57வது ஆசார்யரான ஶ்ரீ பரமஶிவேந்திர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகளின்அம்மடத்தின் 57வது பீடாதிபதி ஶ்ரீ பரமஶிவேந்திர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் ஆவர்.
  3. சிறந்த ஶிஷ்யரான ஶ்ரீ ஸதாஶிவ ப்ரஹ்மேந்திரர் – அவரது சிறந்த சீடரானவர் ஶ்ரீ ஸதாஶிவ ப்ரஹ்மேந்திரர்.
  4. விதேஹ கைவல்யம் அடைந்த புண்ணிய பூமியில் – இங்கு அவர் ஜீவன்முக்தியடைந்தார்.
  5. கலியில் 5116வதும்   – 5116 – 3102 = 2014 CE, அதாவது கலி பிறந்தது 3102 BCE என்பதாலும்[5], அப்பொழுது கலி 5116ம் ஆண்டு நடந்ததாலும், அதற்கான நடப்பு ஆண்டு 2014 என்பதாலும் அவ்வாறு குறிப்பிடப்பட்டது.
  6. பகவத்பாதர் அவதாரத்திலிருந்து 2523வதுமான ஜய வருடம் – அதாவது, 2523 – = 509 BCE வருடத்தில் ஆதிசங்கரர் அவதரித்தார்.
  7. பீடத்தின் 69வது பீடாதிபதியான ஶ்ரீ ஜயேந்திர ஸரஶ்வதீ ஶங்ஜராசார்ய ஸ்வாமிகள் – 2014ல் இருந்தவர் 69வது பீடாதிபதியான ஶ்ரீ ஜயேந்திர ஸரஶ்வதீ ஶங்ஜராசார்ய ஸ்வாமிகள் ஆவார்.
  8. ஆயிரம் பிறை காண்பதை முன்னிட்ட ஆயிரம் நாள் மஹோத்வத்தில் அவரது 80 வயது பிறந்த நாள்.

இப்படி பல விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம்[6].

Nerur-2017 - Agraharam - Kanchi Sankara Mutt. Chandramouleswara

Nerur-2017 – Agraharam – Kanchi Sankara Mutt. Involking Sri Chandramouleswara

Nerur-2017 - Agraharam - Sringeri Sankara Mutt. 25-04-2014.

Nerur-2017 - Agraharam - Morning auspicious music

Nerur-2017 – Agraharam – Morning auspicious music on the early morning 05-05-2017

Nerur-2017 - Agraharam - Sadasiva house.Picture

Nerur-2017 – Agraharam – Sadasiva house.Picture, Nerur Trust office

Nerur-2017 - Agraharam - Sadasiva house.Pictures

Nerur-2017 – Agraharam – Sadasiva house.Pictures, close view – Nerur Trust office

பிரசாதம், உணவு ஏற்பாடு மாறியுள்ள நிலை: ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் படம் உள்ள வீட்டின் பின்பக்கத்தில், சாப்பிடும் ஹால் / கூடம் ஒன்று புதியதாகக் காணப்படுகிறது. இவ்வருடம், ஒரு ஹால் கட்டப்பட்டு, டேபிள்-சேர் போடப்பட்டுள்ளது, உணவு அங்குக் கொடுக்கப்படுகிறது, என்று தெரிகிறது. முன்பெல்லாம், அக்ரஹாரம் மற்றும் அதையும் தாண்டி, தெருத்தரையில் உட்கார்ந்து கொண்டு, சுமார் 10,000 வரை பக்தர்கள் உணவை உண்டுவிட்டு செல்வார்கள். ஆனால், இப்பொழுது, அக்கூட்டம் சுருங்கி விட்டது. ஒரு வேளை, தெருவில் எல்லாம் உட்கார்ந்து சாப்பிடக் கூடாது, அது பொது இடம், அப்படி செய்தால், வாகன போக்குவரத்து பாதிக்கிறது என்று யாராவது தடை வாங்கியிருக்கிறார்களா என்று தெரியவில்லை! இந்த உணவுகூடம் மற்றும் கீற்றுப் போட்ட இடம் வரைத் தான் உணவு பரிமாரப்பட்டது. தடை உத்தரவு  நடந்து வரும் நிகழ்ச்சிகளை, பங்கு கொள்ளும் பக்தர்களை பலவிதங்களில் பாதித்துள்ளன, பாதித்து வருகின்றன. இபொழுது பலருக்கு கால் முட்டுவலி என்றெல்லாம் வந்து, தரையில் உட்கார்ந்து சாப்பிட முடியாத அளவுக்கு வந்து விட்டது. அதனால், அவர்களுக்கும் இது உபயோகமாக இருக்கும்.

© வேதபிரகாஷ்

07-05-2017

Nerur-2017 - Agraharam - Dining hall- tiffin ready

Nerur-2017 – Agraharam – The newly constructed Dining hall- providing food to the devotees

Nerur-2017 - Agraharam - Dining hall- Breakfast

Nerur-2017 – Agraharam – Dining hall- devotees taking Breakfast on 05-05-2017

[1] வேதபிரகாஷ், ஶ்ரீ  சதாசிவ  பிரும்மேந்திரரின்    102வது  ஆராதனையின் போது  (மே.2016) 

அங்கப்பிரதிக்சிணம்  நடைபெறவில்லை!,  ஜூன்.26, 2016.

[2]  நிலைமை மாறிவிட்டதால், பத்திரிக்கை தர்மமும் மாறிவிட்டது போலும். விளம்பரங்கள் கிடைக்கவில்லை என்றால், விசேஷ பதிப்பில்லை என்றாகி விடுகிறது.

[3] https://antihidnu.wordpress.com/2016/05/26/nerur-rolling-on-leaves-ceremony-not-held-as-ban-imposed-last-year-appeal-not-filed/

[4]  இக்கால சரித்திராசிரியர்கள் சிருங்கேரி, பூரி, துவாரகா மற்றும் பத்ரி என்ற நான்கு மடங்களைத் தான் ஆதிசங்கரர் நிறுவினார் என்று வாதிப்பர். அவற்றை ஏற்படுத்தி காஞ்சிபுரத்தில் ஒடரு மடத்தை ஏற்படுத்தி இறுதி வரை தங்கினார் என்பது மற்ற வாதம்.

[5]  கலி சகாப்தம் 3102 BCEலிருந்து தொடங்குகிறது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும், கல்வெட்டுகளும் இந்த ஆண்டைக் குறிப்பிடுகின்றன. இதுவே மகாபாரத யுத்தத்தின் தேதியும் ஆகும். புலிகேசியின் கல்வெட்டு இத்தேதியை தெளிவாகக் குறிப்பிடுகிறது.

[6] ஆதிசங்கரைக் குறிக்கும் கம்போடிய கல்வெட்டு – கம்போடிய கல்வெட்டை ஆராய்தல்: தென்னிந்தியர்கள் பெருமளவில் தென்மேற்கு ஆசிய நாடுகளுக்குச் சென்றதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக
கௌண்டின்ய தோத்ரம் கொண்ட பிராமணர்கள் பெருமளவில் சென்றதை ஆராய்ச்சியாளர்கள் விளக்குவதில்லை. முக்கியமாக பிராமணர்கள் கடல் தாண்டிச் செல்லக் கூடாது என்றால் இவர்கள் எப்படி சென்றிருக்கக் கூடும்? 1950களில் கம்போடிய கல்வெட்டில் கண்ட ஒரு “पगवाचँचंखर = பகவாச்சங்கர” என்ற
சொற்றொடரை “ஆதிசங்கரர்” தாம் எனக்கொண்டு அவர் காலத்தை 788-820க்கு தீர்மானித்தனர். அக்கல்வெட்டைத் தமிழில் இவ்வாறு படிக்கலாம்:

தேன திப்தானி சாஸ்திரானி பகவாச்சங்கராக்னயத்|
………………………………
யஹ்: சதா தக்ஷிணாச்சார்: கும்பயோனிர்வப்ரஹ
நிஸ்சேஸமுதர்லி மலாலிததக்ரிபங்கஜாத்||
த்ர்க கவ்ய திஸபூதாமிதபூதுமவ்ய யஹ|
புராண பாரத ஸைஸ்ய சைவ வ்யாகர்ணதிஸு
சாஸ்திரேஸ்ய குஸலோ யொஹபூத் தத்காரக ஐவ ஸ்வயம்
சர்விதைகனிலயோ வேதவித் விபர்ஸம்பவஹ
ஸஸ்கொ யஸ்ய பகவான் ருத்ரோ ஐபர்வஹ:

சிவசோமன் என்பவர், “பகவாச்சங்கர”ருடைய கால்களின் கீழ் சாஸ்திரங்களைக் கற்றவர் என்றும், அவர் இந்திரவர்மனுடைய (802-809 CE) குரு என்றும் கல்வெட்டுக் கூறுகிறது. ஜெயவர்மனுடைய தாய்மாமனின் பேரன் இந்திரவர்மன், அவன் 802-809 CE வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆகவே சிவசோமனே குரு என்பதும் அவரே “பகவாச்சங்கர”ருடைய கால்களின் கீழ் சாஸ்திரங்களைக் கற்றவர் என்றும் தெரிகிறது. ஆதிசங்கரரின் தேதியை சுமார் 70-100 வருடங்களுக்கு முன்னர் தான் 788-820 CE என்று மேனாட்டவர் தீர்மானித்தார்கள். ஆனால், பாரம்பரியமாக, இந்தியாவில் கடைப்பிடிக்கப் படும் தேதி 509-477 BCE ஆகும்.

 

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அக்ரகாரம், அக்ரஹாரம், அத்தாட்சி, அத்துமீறல், அன்னதானம், அமராவதி, அரசமரம், அரிசி, அழிப்பு, அவதூதர், ஆசிரமம், ஆதிசங்கரர், இரவு, இறைப்பணி, உருளல், எச்சில் இலை, கட்டடம், கட்டிடம், கரூர், கர்நாடகா, காஞ்சி, காஞ்சிப் புராணம், காஞ்சிப் பெரியவர், காலக்கணக்கீடு, காலக்கணிப்பு, காலை, காவிரி, குகி சுப்ரமண்ய, சங்கமம், சங்கரர், சங்கராச்சாரி, சங்கராச்சாரியார், சடங்கு, சட்டம், சதாசிவ பிரும்மேந்திரர், சமஸ்கிருதம், சமாதி, சாப்பாடு, சாப்பிட்ட இடம், சிருங்கேரி, சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, சுற்றுச்சூழல், செப்பனிடுதல், ஜனானா, தண்ணீர், தரிசனம், தோற்றம், நெரூர், நேத்ரவதி, நேர்த்திக் கடன், நொய்யல், பஞ்சபூதம், படிகட்டுகள், பிரும்மேந்திரர், வள்ளலார் சபை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s