ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 103வது ஆராதனை நெரூரில் 05-05-2017 அன்று நடந்தது – மாறிவரும் சூழ்நிலைகள்! (2)

ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 103வது ஆராதனை நெரூரில் 05-05-2017 அன்று நடந்தது மாறிவரும் சூழ்நிலைகள்! (2)

Nerur-2017 - Agraharam - after Sadasiva house.

Nerur-2017 – Agraharam – after Sadasiva house., RHS – the newly constructed Dining Hall can be seen

Nerur-2017 - Agraharam - after Sadasiva house..a beautiful house

Nerur-2017 – Agraharam – after Sadasiva Trust house..a beautiful house

Nerur-2017 - Agraharam - LHS house

Nerur-2017 – Agraharam – LHS – houses opposite to Sri Sadasiva Nerur Trust office

அழகான பாரம்பரியம் மிக்க கிரமத்து வீடுகள்: கிராமம் என்பது தன்னிறைவு கொண்டது, எல்லா வசதிகளையும் அடக்கியது. ஆனால், காலம் மற்றும் அந்நியர் ஆட்சி, இடையூறுகள், முதலிய காரணங்களினால் அவை அதிக அளவில் மாறி விட்டன. முன்னமே குறிப்பிட்டபடி, இந்த அக்கிராஹத்திற்கு நடுவே காவிரியின் கால்வாய் ஓடுகிறது. நான்கு வரிசைகளில் [தெருவுக்கு இரண்டு பக்கம் மற்றும் கால்வாயின் இரண்டு பக்கம் என்று] நிழல் தரும் மரங்கள் இருக்கின்றன. வலது பக்கத்தில் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் படம் உள்ள வீட்டைத் தாண்டியுள்ள இன்னொரு வீட்டின் தோற்றம் மகிழ்விக்கிறது. வீட்டின் வாசலில் கோலம் போடப்பட்டுள்ளது. இதுபோன்று நகரத்தில் பார்க்க முடியாது. திரும்பி வ்ரும் போது, திரு வெங்கட் சாஸ்திரி நம்மை பார்த்து விட்டார்!  இவர் திரு கரூர் நாகராஜனின் நண்பர். ஶ்ரீசதாசிவபிரும்மேந்திரரின் நூல்கள் பதிப்பிக்கப்பட வேண்டும்[1] என்றெல்லாம் அறிவுருத்தினார்! பிரச்சினை என்னவென்றால், இத்தகைய நூல்களை யார் படிப்பார்கள், வாங்குவார்கள் என்பது தான் கேள்வி. நாங்கள் போட்ட புத்தகத்தை, 90% இலவசமாகக் கொடுத்து தீர்த்து விட்டோம். அந்நிலையில் ஆயிரக்கணக்கில் செலவழித்து, யார் அத்தகைய புத்தகங்களை அச்சடித்து வெளியிடுவது என்று தெரியவில்லை.

Nerur-2017 - Agraharam - Sringeri Sankara Mutt. 25-04-2014.

Nerur-2017 – Agraharam – Sringeri Sankara Mutt. inaugurated on 25-04-2014.

Nerur-2017 - Agraharam - LHS house.Chinna Sankaracharya house

Nerur-2017 – Agraharam – LHS house. Chinna / Junior Sankaracharya house

Nerur-2017 - Agraharam - LHS house. new - reconstructed

Nerur-2017 – Agraharam – LHS house. new – reconstructed

Nerur-2017 - Agraharam - LHS house. dilapidated condition.next to Vallalar Sabai

Nerur-2017 – Agraharam – LHS house. dilapidated condition situated next to Vallalar Sabai

Nerur-2017 - Agraharam - LHS house. dilapated condition

Nerur-2017 – Agraharam – LHS house. dilapated condition, situated nest to Vallalar Sabai

Nerur-2017 - Agraharam - Seva Bharathi free medical camp conducted.Announcement

Seva Bharathi conducted a free medical camp

Nerur-2017 - Agraharam - Seva Bharathi free medical camp conducted

Seva Bharathi conducted a free medical camp – tests conducted to detect BP, sugar, anemic, eye defects etc. Hundreds got their eyes, blood etc., tested 

ஶ்ரீ சிருங்கேரி மடம் 25-04-2014 அன்று திறந்து வைக்கப்பட்டது: ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர் விசயத்தில் இரண்டு மடங்களும் கூடி வந்துள்ளன. அடுத்தடுத்து மடங்களையும் கட்டிக் கொண்டு, 2014ல் திறந்து வைத்துள்ளன.  காஞ்சிமடத்தின் 57வது பீடாதிபதி ஶ்ரீ பரமஶிவேந்திர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் ஆவர். அவரது சிறந்த சீடரானவர் ஶ்ரீ ஸதாஶிவ ப்ரஹ்மேந்திரர் என்று காஞ்சி மடம் கூறுகிறது. சிருங்கேரி சங்கராச்சாரியர் 150 வருடங்களுக்கு முன்னர், இப்பக்கத்தில் வந்தபோது, ஏதோ ஒரு சக்தியை தன்னை இழுத்தபோது, அவ்விடத்திற்குச் சென்று பார்த்த போது, மரத்தடியில் இருக்கும் இவரது சமாதியைக் கண்டறிந்தார். அப்படியே அங்கு உட்கார்ந்து தியானித்த போது தான், “ஶ்ரீ சதாசிவேந்திர சஹஸ்ர அஷ்டோத்திரம்” உருவானது[2]. அதில் உள்ள விசயங்களை வைத்துக் கொண்டுதான், கதைகளாக விரித்து எழுதி வருகின்றனர். இப்படி ஒருவர் எழுதியதைப் பார்த்து அடுத்தவர் என்றெல்லாம் எழுதிதான், இக்கதைகள் வளர்ந்துள்ளன. இதில் யாருமே, ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர் சென்ற இடங்களுக்கு சென்றதில்லை, விவரங்களை அறிந்ததில்லை. பத்து புத்தகங்களை வாங்கி 11வது புத்தகமாக, தமதை பதிப்பிட்டுக் கொள்கின்றனர். அவ்விசயத்தில் என்னுடைய புத்தகம் மாறுபட்டுள்ளது.

Nerur-2017 - Agraharam - Narasimhar temple coming up

Nerur-2017 – Agraharam – Narasimhar temple coming up

Nerur-2017 - Agraharam - Narasimhar.coming up

Nerur-2017 – Agraharam – Narasimhar temple is coming up

நெரூரில் நரசிம்மர் கோவில்: இடது பக்கத்தில் உள்ள ஒரு வீட்டை வாங்கி, அதனை இடித்து, மாற்றிக் கட்டி, நரசிம்மர் கோவில் கட்டப்பட்டுள்ளது. அது 07-05-2017 அன்று ஶ்ரீ சிருங்கேரி சங்கராச்சாரியாரால் ஆரம்பித்து வைக்கப் படுகிறது. இப்பொழுது வசதிற்காக, ஒரே கோவிலில் எல்லா மூர்த்திகளையும், விக்கிரகங்களை வைத்து விடுகிறார்கள். பத்துக்கு-பத்து என்ரு சிறிய கோவில் என்றாலும், அதில் எல்லோரையும் வைத்து, நவகிரகங்களையும் சேர்த்துவிட துடிக்கிறார்கள். இதெல்லா, எந்த ஆகம விதிகளை மதித்து செய்யப்படுகின்றன என்று தெரியவில்லை. அந்நிலையில், “ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர்” என்று பிரத்யேகமாக இருக்கும் போது, இத்தகைய புதிய கோவில்கள் வருவது பற்றி, யோசிக்கும் போது, அதனால், அப்பகுதியில் சிறப்பேற்ப்படும் என்று நம்பலாம். இருப்பினும், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் முக்கியத்துவத்தை  நீர்க்கக் கூடாது. ஏற்கெனவே, கூட்டம் குறைந்து வரும் நிலையில், சாதாரண மக்கள் வேறுவகையாகக் கூட சிந்திக்கக் கூடும். இந்தியாவில், பற்பல புண்ணிய க்ஷேத்திரங்கள் பிரத்யேகமாக, மகான்களுக்கு என்று இயங்கி வருகின்றன. அதுபோல, நெரூர் என்றாலே, “ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர்” என்பது நினைப்பில் இருந்து வருகிறது.

Nerur-2017 - Agraharam - Unji viruthi

Nerur-2017 – Agraharam – Unji viruthi performed symbolically to re-enact the village good-old days!

ஸ்ரீ சதாசிவ பிரும்மேந்திரருக்குக் கொடுக்கப்படும் வெவ்வேறு தேதிகள்: 20வது நூற்றாண்டு ஆரம்பித்தில் ஸ்ரீ சதாசிவ பிருமேந்திரரின் “திவ்ய சரிதங்கள்” / வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்டன. அவற்றில் பல்வேறு சமகால ஒப்புமைகளின் மீது ஆதாரமாக பல தேதிகள் மற்றும் நீட்டப்பட்ட தேதிகள் அவரின் வாழ்க்கைக்குக் கொடுக்கப்பட்டன. அவை பின்வருமாறு[3]:

  1. 1550-1630 / 1560-1660: இந்த காலம் கும்பகோணம் மடத்தின் 57வது  சங்கராச்சாரியாரியாக இருந்த பரமசிவ II (1539-1586)  என்பரின் சமகாலத்தை இணைத்து பெறப்பட்டது. ஸ்ரீ சதாசிவ பிருமேந்திரர் அவரது சீடர் என்பதால் இந்த தேதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இதன்படி அவர் காலம் 100 முதல் 180 வருடங்கள் வரை வருகின்றது.
  1. 1660-1762: இது குறிப்பாக புதுக்கோட்டையில் 1730லிருந்து 1769 வரை அரசுபுரிந்த விஜய ரகுநாத தொண்டைமான் காலத்தை ஒட்டிப் போகின்றது. அவர் இவனை 1738ல் சந்தித்தான் என்ற குறிப்பிலிருந்து, அவர் காலம் நிர்ணயிக்கப்படுகின்றது. இதன்படி அவர் 102 ஆண்டுகள் இருந்ததாக ஆகிறது.

 

  1. 1560-1760: இதன்படி, இவர் 200 வருடங்கள் வாழ்ந்ததாக ஆகிறது. இது பரமசிவ II (1539-1586) மற்றும் விஜய ரகுநாத தொண்டைமான் (1730-1769) இருவரையும் தழுவிய காலத்தில் அவரை வைப்பதற்கான முயற்சியாகத் தெரிகிறது.

 

  1. 1630-1810: இதன்படி, இவர் 180 வருடங்கள் வாழ்ந்ததாக ஆகிறது. இதுவும் பரமசிவ II (1539-1586) மற்றும் விஜய ரகுநாத தொண்டைமான் (1730-1769) இருவரையும் தழுவிய காலத்தைக் கட்டுவதாகத் தெரிகிறது.

 

  1. 1700-1800: நெரூர் சபை இந்த காலத்தில் அவர் இருந்ததாக இந்த பொதுவான தேதிகளை நிர்ணயித்திருப்பதாகத் தெரிகிறது.

என்னுடைய ஆய்வின் படி 1680-1781 CE என்று நிர்ணயித்துள்ளேன்[4]. வைசாக, கிருஷ்ண பட்சம், தசமி அன்று அவரது பிறந்த நாளை ஆராதனையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

Nerur-2017 - Agraharam - Ardhana started- Picture taken to Adhistana

Nerur-2017 – Agraharam – Ardhana started- Picture taken to Adhistana, starting of Aradhana 0n 05-05-2017

ஶ்ரீசதாசிவ பிருமேந்திரருக்கு செய்யப்படும் ஆராதனை: பெரிய மகான், குரு போன்றவர்களின் பிறந்த நாளை, ஒவ்வொரு வருடமும் சிரத்தையாக கொண்டாடுவதை ஆராதனை என்று சொல்லப்படுகிறதுமிதன் படி, 103வது ஆராதனை இந்த ஆண்டு நடைபெறுகிறது. அதாவது 1914ம் ஆண்டிலிருந்து இது தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. அக்ரஹாரத்தில் உஞ்சிவிருத்தி செய்வது, ஒரு பாரம்பரிய பழக்கத்தை நினைவு படுத்த என்று எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், பிச்சையெடுப்பவருக்கும், கொடுப்பவருக்கும் அந்நிலை இல்லை. ஶ்ரீசதாசிவ பிருமேந்திரரின் உருவப்படம், ஊர்வலமாக, அக்ரஹாரம் வழியாக பேரூந்து கூட்ரோடு வழியாக, அதிஸ்டானத்திற்கு [ஶ்ரீ காசி விஸ்வநாத ஆலயத்தின் பின்புறத்தில் உள்ல ஜீவசமாதி] எடுத்துச் செல்லப்படுவது. ஆராதனை ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை காட்டுகிறது. ஶ்ரீ சதாசிவ பிருமேந்திரரின் ஜீவசமாதி ஶ்ரீ காசிவிஸ்வநாத கோவிலின் பின்புறம் உள்ளது.  ஶ்ரீ காசிவிஸ்வநாத தரிசித்து வெளியே வந்து, பின்பக்கமாக, வலது புறத்தில் திரும்பினால், அதிஸ்டானத்தைக் காணலாம்! அதிஸ்டானத்தின் முன்பாக வந்து, பக்தர்கள் தங்கள் கோரிக்கைக்களை மனத்தால் நினைந்து, வைத்து, இரைஞ்சுகின்றனர். அதே நேரத்தில். அதிஸ்டானத்தின் முன்பாக, சிலர் ஆன்மீகம் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். சிலர் பஜனை பாடல்கள் பாடிக் கொண்டிருக்கிறார்கள்! கொண்டு வந்த படத்தை வைத்து, அர்ச்சனை, ஆரத்தி முதலியவற்றை செய்து முடித்த பிறகு, அக்கிரஹாரத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு எடுத்துச் சென்று, பூஜைகள் செய்து முடிக்கப்பட்டப் பிறகு, ஆராதனை முழுமையடைகிறது.

© வேதபிரகாஷ்

07-05-2017

Kasi Viswanatha temple and Sri Sadasiva Brimendra Adhistana entrance

Kasi Viswanatha temple and Sri Sadasiva Brimendra Adhistana entrance

[1] 1952ல் வாணி விலாஸ் அச்சகம், ஶ்ரீரங்கம், மற்றும் ஶ்ரீ காமகோடி கோசஸ்தானம், சென்னை, இவரது சமஸ்கிருத நூல்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளன.

[2] Here it would be very apt to recollect an incident that has happened in the life of the 33rd Peethadhipati of Sringeri Sharada Peetham Jagadguru Sri Sachchidananda Shivabhinava Nrusimha Bharati Mahaswamiji. While the Jagadguru was touring Tamilnadu, His Holiness camped at Nerur where the Adhishtanam/Samadhi of Sri Sadashiva Bramhendra Mahaswami is located. Its told that Jagadguru sat their in Meditation for the consecutive three days and obtained the divine darshan of Sri Sadashiva Bramhendra. So one can think of the power of these Adhishtanam otherwise commonly known as Samadhi. http://www.sringeri.net/temples/adhishthanams

[3] என்னுடைய புத்தகத்திலிருந்ட்து, தொகுக்கப்பட்ட விவரங்கள்.

[4]  வேதபிரகாஷ், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர்வரலாற்றுப் பார்வையில் ஒரு ஆராய்ச்சி நூல், பாரதிய இதிகாஸ சங்கலன சமிதி, சென்னை, 2011.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அக்ரகாரம், அக்ரஹாரம், அத்தாட்சி, அத்துமீறல், அன்னதானம், அழிப்பு, அவதூதர், ஆக்கிரமிப்பு, ஆசிரமம், ஆதிசங்கரர், ஆரத்தி, இரவு, உருளல், எச்சில் இலை, கட்டடம், கட்டிடம், கல்வெட்டு, காலக்கணக்கீடு, காலக்கணிப்பு, காலம், காலை, காவிரி, குக்கி சுப்ரமண்ய, சங்கமம், சங்கரர், சங்கராச்சாரி, சங்கராச்சாரியார், சடங்கு, சதாசிவ பிரும்மேந்திரர், சித்தர், சிருங்கேரி, சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, சிவாச்சாரி, சேவை, தண்ணீர், நரசிம்மர், நெரூர், நேர்த்திக் கடன், பஜனை and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s