அப்பர் என்கின்ற திருநாவுக்கரரசர் பிறந்த திருவாமூர்: சைவரானவர் ஜைனரானது, மறுபடியும் சைவரானது – அவரது ஊழவாரத் தொண்டு முதலியன! (2)

அப்பர் என்கின்ற திருநாவுக்கரரசர் பிறந்த திருவாமூர்: சைவரானவர் ஜைனரானது, மறுபடியும் சைவரானது – அவரது ஊழவாரத் தொண்டு முதலியன! (2)

Tiruvamur - Navukkarasar birth place - view from corner RHS

Tiruvamur – Navukkarasar birth place – view from corner RHS

 

Tiruvamur - Navukkarasar birth place - view from corner LHS.

Tiruvamur – Navukkarasar birth place – view from corner LHS.

உழவாரப்பணியை துவக்கி வைத்த திருநாவுக்கரசர்: பக்தியுடன் சேவையினையும் சேர்த்து செய்து வந்தார். அதாவது, பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடியதோடல்லாமல், சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியையும் செய்தார். அதாவது அக்காலத்தில் கோவில்களின் நிலை அவ்வாறிருந்தது போலும். சமணர்கள் அத்தகைய நிலைமையினை ஏற்படுத்தினர். இவர் எப்பொழுதுமே உழவாரக்கருவியோடு செல்வதால், அதனையே, ஒரு சின்னம் போல இவரது கைகளில் இருப்பது போல சித்திரங்களில் காட்டப்பட்டது. இதனை உழவாரப் பணியென்று சைவர்கள் அழைக்கின்றனர். பல்வேறு சிவாலயங்களில் உழவாரப் பணிச் செய்து முன்னோடியாக இருந்தமையால், “உழவாரத் தொண்டர்” என அழைக்கப்பட்டார். இன்றும் சைவர்கள் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர், உழவாரப் பணி செய்து வருகின்றனர். இவர் இறைவனை தொண்டு வழியில் வழிபட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.

Tiruvamur - Navukkarasar birth place -Garbagruha.distant view

Tiruvamur – Navukkarasar birth place -Garbagruha.distant view

Tiruvamur - Navukkarasar birth place - Mantap.in front of Garbagruha

Tiruvamur – Navukkarasar birth place – Mantap.in front of Garbagruha

Tiruvamur - Navukkarasar birth place -in front of Garbagruha

Tiruvamur – Navukkarasar birth place -in front of Garbagruha

Tiruvamur - Navukkarasar birth place - Navukkarasar Vigraha

Tiruvamur – Navukkarasar birth place – Navukkarasar Vigraha

பல்லவர் ஜைனராக இருந்து சைவரானது: தென்னகத்து அரச வம்சாவளியினருள் பெரும்பாலோர் ஜைனர்களாக இருந்து இடைகாலத்தில் தான், சைவம் அல்லது வைணவ மதத்திற்கு மாறியிருப்பது கவனிக்க வேண்டிய விசயமாக இருக்கிறது. அக்காலத்தில் தமிழகத்தை பல்லவ அரசர்கள் ஆண்டு வந்தனர். சமண சமயத்தை சேர்ந்த மன்னன் மகேந்திர பல்லவன், சமணர்களின் தூண்டுதல் பெயரில், திருநாவுக்கரசரைப் பலவிதங்களில் தண்டனை கொடுத்து துன்புறுத்தினான். அத்துன்பங்களை திருநாவுக்கர் இறைவன் அருளால் வென்றார். இத்தகைய துன்பங்கள் இழைக்கப்பட்டு இறைவன் அருளால் மீண்டதை, “கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே” எனும் நமச்சிவாயப் பதிகத்தில் பதிவு செய்துள்ளார். இறுதியில் அப்பரின் மகிமை அறிந்து, மகேந்திர பல்லவனும் அமணத்தை விடுத்து, சைவ சமயத்தை தழுவினான், இப்படி புராண முதலியவை எடுத்துக் காட்டினாலும், அஹிம்சை ஜைனர் எப்படி அத்தகைய ஹிம்சை முறைகளைக் கையாண்டனர் என்று ஆராய வேண்டியுள்ளது. கடவுட் மறுப்பு மற்றும் வேதங்களை எதிர்க்கும் ஜைனர்கள், கோவில்களை ஆக்கிரமிப்பது, போன்ற செயல்களில் ஏன் ஈடுபட்டனர் என்பதையும் ஆராய வேண்டியுள்ளது.

Tiruvamur - Navukkarasar birth place - Madhini hall

Tiruvamur – Navukkarasar birth place – Madhini hall

பழையாறை சிவன் கோவிலை சமணர்கள் அக்கிரமித்துக் கொண்டதும் மீட்டதும்: பழையாறை என்ற இடத்தில் இருந்த சிவன் கோவிலை சமணர் மறைத்தனர், அதாவது, இடித்தொழித்தனர் என்றாகிறது. மிச்சத்தை ஜைன கோவிலாக மாற்றினர். இதை அறிந்த நாவுக்கரசர் அங்கு வந்து கோவிலை மீட்க அறவழியில் தவமிருந்து, உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடினார். இதனால், அரசனே, அக்கோவிலை மீட்டு, சைவர்களிடம் ஒப்படைத்தான். பழயைபடி சைவ வழிபாடு ஆரம்பித்தது.

Tiruvamur - Navukkarasar birth place - Kalar ukai tree backside

Tiruvamur – Navukkarasar birth place – Kalar ukai tree backside

Tiruvamur - Navukkarasar birth place - Kalar ukai tree - all-taste-backside.

Tiruvamur – Navukkarasar birth place – Kalar ukai tree – all-taste-backside.

Tiruvamur - Navukkarasar birth place - backside

Tiruvamur – Navukkarasar birth place – backside

நாவுக்கரசர் சமணர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது: சைவராக இருந்து, சமணராகி, மறுபடியும் சைவரான நாவுக்கரசர் சமணர்களைப் பற்றி பதிவு செய்துள்ளது:

 1. பரம்பரைச் சைவராகிய அவர் –
  1. சமண சமயத்தைத் தழுவி உறியைத் தூக்கிக்கொண்டு திரிந்தது,
  2. பெருமானைக் கையினால் தொழாது காலத்தை வீணாக்கியது,
  3. சமணர்கள் செய்த செயல்களில் அகப்பட்டுப் பல்லாண்டுகள் துன்புற்றது,
  4. பயனுடைய பொருளை விடுத்துப் பயனில்லாத பொருளைக் கைகொண்டு வாழ்நாளை வீணாய்க் கழித்தது

ஆகியவற்றிற்கு ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழியை உவமையாகக் காட்டுகிறார்.

 1. வீணர்களின் வார்த்தையைக் கேட்டு சமணம் என்னும் ஆழம் தெரியாத குளத்தில் விழுந்து தடுமாறி, சூலை நோயால் துன்புற்று நிற்கின்றேன்.
 2. சமணத் துறவிகள் பிச்சை உணவைக் கையில் ஏந்தி உண்பர்.அத்தகைய கீழ்மக்கள் கூறிய பொய்யுரைகளை மெய்யெனக் கருதி அவர்கள் குழுவினிடைக் கலந்து, பின் அவ்வேடர்கள் விரித்த வலையில் அகப்படாது அத் தீங்கினின்றும் தப்பிப் புறமே வந்து சேர்ந்தேன்.
 3. இறைவா, ஏன் அடியேனை அறிவில்லாத சமணரோடு உறவு கொள்ளச் செய்து குருடனுக்கு ஊமை வழிகாட்டுவித்தாற் போன்று செய்துவிட்டாய் என்று வினவுகிறார்.
Appar carrying the palanquin of Sundarar

Appar carrying the palanquin of Sundarar

அப்பர்சம்பந்தர் சேர்ந்து பணியாற்றியது: தனது முதிர்ந்த வயதில் சிறுவராயிருந்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரை சந்தித்தார். அவருடன் சேர்ந்து தல யாத்திரைகள் செய்தார். மேலும், 15 வயதான திருஞானசம்பந்தரால் அப்பர்  எனவும் அழைக்கப்பட்டார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. சமயத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் 81ஆவது வயதில் [660 / 650 CE] திருப்புகலூரில் சித்திரைச் சதயத்தில் உயிர் நீத்தார், என்று இலக்கியங்கள் கூறினாலும், 81 வயது வரை அவர் ஏன்  அவ்வாறு கோவில்களை சுத்தப்படுத்துவது, புதுப்பிப்பது, மூடிய கோவில்களை திறந்து வைப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டது, அக்கோவில்கள் சமணர்களால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தன என்று புலப்படுகிறது.

Appar escaped with the blessings of Shiva

Appar escaped with the blessings of Shiva

திருநாவுக்கரசர் புரிந்த அதிசயங்கள்: பெரிய புராணம், திருத்தொண்டர் தொகை முதலிய பக்தி இலக்கியங்கள் மூலம் இவ்விவரங்கள் தெரிய வருகின்றன. பெரும்பாலும், அக்காலத்தில், சமணர்களுக்கும், சைவர்களுக்கு மதரீதியில் விரோதம் இருந்தது. ஆனால், அது சமணர்களால் தான் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்று தெரிகிறது.

 1. சமணர்களாலே 7 நாட்கள்சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தும் வேகாது உயிர் பிழைத்தார்.
 2. சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும் சாகாது உயிர் பிழைத்தார்.
 3. சமணர்கள் விடுத்த கொலையானை வலம் வந்து வணங்கிச் சென்றது.
 4. சமணர்கள் கல்லிற் சேர்த்துக்கட்டிக் கடலில் விடவும் அக்கல்லே தோணியாகக் கரையேறியது.
 5. சிவபெருமானிடத்தேபடிக்காசு பெற்றது.
 6. வேதாரணியத்திலேதிருக்கதவு திறக்கப் பாடியது.
 7. விடத்தினால் இறந்த மூத்ததிருநாவுக்கரசை உயிர்ப்பித்தது.
 8. காசிக்குஅப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே மூழ்கி திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேமகறியது.
Ruins of a Jain temp0le

Ruins of a Jain temple, but, it appears as Hindu only

ஜைனர்கள் சமய சகிப்பு இல்லாமல், மற்றவர்களுடன் வாதிடுதல், கோவில்மடங்களை ஆக்கிரமித்தல் முதலியன: ஜைனர்கள் அம்ய சகிப்புத் தன்மை இல்லாமல் இருந்தது திகைப்பாக இருக்கிறது. சரவணபெலகோலாவில் உள்ள ஒரு கல்வெட்டு, ஜைன வித்துவான் அகாலங்க என்பவரிடம், பௌத்தர்கள் வாதிட்டு 788 CEல் தோற்றதாகவும்[1], வாத-சரத்தின் படி, அரசன் ஹிமசிதல பௌத்தர்களை எண்ணைச் செக்கில் போட்டு அறைக்க ஆணையிட்டதாகவும்[2], ஆனால், அகாலங்க தலையிட்டு, அவர்களை இலங்கைக்கு நாடுகடத்த அறிவுரை அளித்ததால், அவ்வாறே கட்டளை நிறைவேற்றப்பட்டது[3]. இதனால், தோற்ற பௌத்தர்கள் காஞ்சிபுரத்திலிருந்து, இலங்கைக்குச் சென்றனர். ஜைனர் இதை 777 Saka or 855 CE வருடம் என்று குறிப்பிட்டனர்[4]. ஆக ஜைன-பௌத்த சண்டையில், பௌத்தர்கள் எட்டாம் நூற்றாண்டில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர் என்றூ தெரிகிறது. கர்நாடகாவில் உள்ள 1032 CE தேதியிட்ட சிகாபூர் கல்வெட்டு கோவில்களுடன் எண்ணை ஆலைகள் சேர்ந்திருந்தன என்றும் மக்கள் அச்செக்கில் வேலை செய்ய அமர்த்தப் பட்டனர் என்றும் குறிப்பிடுகின்றது[5]. அதாவது, தோற்றவர்களுக்கு அத்தகைய கடினமான உழைப்பை தண்டனையாகக் கொடுத்ததை, அவர்களையே, செக்கிலிட்டு அறைக்க தண்டனையிட்டதாக உயர்த்தி-மிகைப்படுத்திக் கூறப்பட்டது எனலாம். இதே நிலைமை தான், கழுவேற்றல் பிரச்சினையிலும் உள்ளது.

Ranigumpha Cave - sclupture-depicting women also participated in Kalinga War

Ranigumpha Cave – sclupture-depicting women also participated in Kalinga War

சமணர்களை சாதாரண மக்கள் வெறுத்தது ஏன்?: ஜைனர்கள் / சமணர்கள் மதுரையில் பலத்தோடு தான் இருந்திருக்கிறார்கள். வஜ்ரநந்தி 470 CEல் தமிழ் சங்கம் ஆரம்பித்தது, அவர்களது, வலுவான தாக்கத்தைக் காட்டுகிறது. அந்நிலையில், தமிழகத்து மக்களுக்கு அவர்கள் வெறுப்பு வந்துள்ளது என்றால், அவர்கள் சாதாரண மக்களை பாதிக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வசித்த இடங்கள், நகர்புறங்களாக இருக்கின்றன. மலைப்பகுதிகளில் கற்றளிகளில் வாழ்ந்தனர் எனும் போது, சாதாரண மக்களுடனான தொடர்பு மிகக்குறைவாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்களது கலாச்சாரம், பண்பாடு முதலியவை பாதிக்கப் பட்டன என்றால் அந்த அளவுக்கு ஒவ்வாத காரியங்களை செய்துள்ளார்கள். அவர்களது இலக்கியங்களில் எதுவும் இல்லை என்ற பட்சத்தில், தமிழ் இலக்கியங்களை வைத்துதான், ஆராயப்படுகின்றன. அந்நிலையில்,  திருநாவுக்கரசர் வாழ்க்கையிலிருந்து, அவர், அவரது சகோதரி மற்றும் குடும்பம் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளது தெரிகிறது. அப்பர் போன்ற நிலைமையே அப்படியென்றால், சாதாரணமான மக்களின் நிலை எப்படியிருக்கும் என்று தீர்மானிக்க வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

02-05-2017

Four Fold Jain Image with Suparshvanath and Three Other Tirthankaras - Circa 1st Century CE - Government Museum - Mathura

Four Fold Jain Image with Suparshvanath and Three Other Tirthankaras – Circa 1st Century CE – Government Museum – Mathura

[1] Incidentally, a Jaina inscription at Sravana Belagola says that when the Buddhists were defeated by the Jaina scholar Akalanka in 788 CE, the king Himasitala ordered that they should be ground in oil mills, but, Akalanka intervened and banished them from Kanchi to Ceylon.

Vincent. A. Smith, Oxford History of India, p.203;

[2] S. K. Ayyangar, Ancient India, p.259.

[3] William Coelho, The Hoysala Vamsa, Indian Historical Research Institute, St. Xavier College, Bombay, 1950, p.284.

[4] Jains dated this event to 777 Saka or 855 CE. Then, obviously, they had to face the other rival groups.

 1. Lewis Rice, Inscriptions at Sravana Belagola, Mysore Govt.Press, 1889, p.45.

[5] Incidentally, Shikapur inscription dated to 1032 CE mentions that oil mills were attached to temples, where people were used to work to extract oil. In other words, the defeated might have engaged in such hard work.

Epigraphica Carnataka, Vol.IV, Shikapur inscription  no.50.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அப்பர், அப்பா, ஆக்கிரமிப்பு, ஆமூர், ஆற்காடு, இறைப்பணி, உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, காலம், சம்பந்தர், சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, சிவா, சிவாச்சாரி, சுண்ணாம்பு, சுந்தரமூர்த்தி, சுந்தரர், சோழர், ஜீனர், ஜைன, ஜைனம், தீர்த்தங்கரர், தீர்த்தங்கர், தொண்டர், நாயன்மார், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s