திரு சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த நாவலூர், பக்தஜனேஸ்வரர் கோவில், பிறந்த இடத்தில் மண்டபம் கட்டப்படுதல் முதலியன! (2)

திரு சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த நாவலூர், பக்தஜனேஸ்வரர் கோவில், பிறந்த இடத்தில் மண்டபம் கட்டப்படுதல் முதலியன! (2)

Baktajaneswarar temple, entrance -Garba gruha

Baktajaneswarar temple - how inscriptions vandalized

Baktajaneswarar temple – how inscriptions vandalized by electrical wiring etc

Baktajaneswarar temple - how inscriptions vandalized - electrical switch board on the inscriptions

Baktajaneswarar temple – how inscriptions vandalized – electrical switch board on the inscriptions

Baktajaneswarar temple - how inscriptions vandalized.3

Baktajaneswarar temple – how inscriptions vandalized.switcb board

Baktajaneswarar temple - inscriptions on the wall

Baktajaneswarar temple – inscriptions on the wall

அடிமையாக இறைப்பணி செய்து கொண்டிருந்தது: இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், “பித்தா பிறை சூடி” என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பாடல்களின் மூலமாக இறைவனை தன்னுடைய நண்பனாக்கிக் கொண்டார். சிவத்தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி “சக மார்க்கம்” என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். “நீள நினைந்தடியேன்” என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப்  பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற  நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம். சிவபெருமான் தம் திருவாயால் “தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடியெடுத்துக் கொடுத்துப் பாடும்படிப் பணித்தருளி மறைந்தபடி, நம்பியாரூரர் தேவாசிரிய மண்டபத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருந்த அடியவர்களை வணங்கி அடியார் பெருமையை விளக்கித் திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார்[1]. இதனால், சுந்தரர் காலம், இவர்களுக்கெல்லாம் பிற்பட்டது என்று விளக்கம் கொடுக்கப் படுகிறது.

Baktajaneswarar temple -Naval tree -Sthalavruksha

Baktajaneswarar temple -Naval tree -Sthalavruksha

Baktajaneswarar temple -Sthalavruksha-Naval

Baktajaneswarar temple -Sthalavruksha-Naval

சேரமான் பெருமாளின் நண்பர், சிவனின் நண்பர், ஆனால், பொருள் கொள்ளை போன்றவை: அரசரான சேரமான் பெருமாள் இவருக்கு நண்பராயிருந்தார். இந்த சேரமான் பெருமாள் பாத்திரத்தை இங்கு நுழைப்பதும், கட்டுக்கதையை வளர்க்கத் தான் என்று தெரிகிறது[2]. இறைவனும் இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை, ஆனால், கொடுத்த பொருள் கொள்ளையடிக்கப்பட்டது, போன்றவை, அக்காலத்தில், கொள்ளையடிப்பவர் இருந்தது தெரிகிறது. சேரமான் பெருமானை இவர் சந்தித்து திரும்பும் போது, அம்மன்னர் பொன், பொருள், மணியிழைகள், ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார். திருமுருகன் பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார். சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்….’ எனத்துவங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான் சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.  இவையெல்லாம், சைவர் மற்றும் சைவ-விரோதிகளுக்குள் நடந்த போராட்டங்களைக் குறிக்கிறது எனலாம். ஏனெனில், சேரமான் பெருமாள் முகமதிய மதத்தை ஏற்றுக் கொண்டார் என்பது கட்டுக்கதை, பிறகு, சிவனே கொள்ளையெடித்தார் என்பதும் முரண்பாடேயாகும்.

Baktajaneswarar temple -inner prakara.RHS

Baktajaneswarar temple -inner prakara.RHS

Baktajaneswarar temple -inner prakara

Baktajaneswarar temple -inner prakara

Baktajaneswarar temple - Cow-milk-siva-story-depicted

A story depicted on the stone – cowherd, a Siva bakta pours milk on Kinga, when the owner tried to punish him, Siva saves him.

அதிசயங்கள் செய்தது முதலியன: சோறளித்தது, கண் பெற்றது; பொன் பெற்றது / செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது, சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாச்சலத்தில் உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது, உடல்நோய் நீங்கப்பெற்றது, காவிரி வெள்ளம் வழிவிட்டது, முதலை யுண்ட பாலனை மீட்டருளல் / அவிநாசியில் முதலை விழுங்கிய பிராமணக் குழந்தையை அம்முதலையின் வாயின்று மூன்றாண்டு வளர்ச்சியுடன் அழைத்துக் கொடுத்தது, வெள்ளை யானையில் ஏறி திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது முதலியன வழக்கமான கதைகளாகவே இருக்கின்றன. [பக்தி பூர்வமாக மதிப்பவர்கள் இதனை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.] சுந்தரர் தனது 18 ஆவது வயதில் சிவனடி சேர அடைந்திட பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானை சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார். அங்கிருந்த சிவனும் பார்வதியும் வரவேற்று முக்தியளித்தனர், என்று சுந்தரரின் வரலாறு முடிகிறது. ஆகவே, சரித்திர ரீதியில், இவையெல்லாவற்றையும் மீறி, என்ன நடந்திருக்க வேண்டும் என்று ஆராய வேண்டியுள்ளது. சரித்திரத்தை அறியும் முயற்சிகளில் குறிப்பாக மாயை / கட்டுக்கதை [myth] பற்றி ஆராய்பவர்கள் அதிலுள்ள சரித்திர கூறுகள் மற்ற விசயங்களை அகச்சான்றுகளினின்று பெற்றுக் கொள்ளலாம். அந்நிலையில் கட்டுக்கதை படிக்கும் முறையில் / ஆராய்ச்சியில் [mythology] பல விவரங்கள் கிடைக்கும். இந்தியாவைப் பொறுத்தவரையில், புராணங்கள் என்ற முறையில் சரித்திரம் கட்டுக்கதையாக்கப் பட்டுள்ளது, அது கட்டுக்கதையாக்கும் முறை [mythologization] என்றே சொல்லப்படுகிறது. அதை கட்டுக்கதையிலிருந்து விடுபடுத்த, மாயையை நீக்க, மறைந்துள்ள சரித்திரத்தை அடைகின்ற முறை மாயையை நீக்கல் / கட்டுக்கதையை விலக்குதல் [demythologization] என்ற முறையாக கருதப்படுகிறது. அத்தகைய நெறிமுறை ஆராய்ச்சியில், புராணங்களில் பொதிந்துள்ள சரித்திர கூறுகள் ஆய்ந்தெடுக்கப் படுகின்றன.

Baktajaneswarar temple -some sculptures found on RHS of the compound wall

Baktajaneswarar temple -some sculptures found on RHS of the compound wall

Baktajaneswarar temple -some sculptures found on RHS of the compound wall.2

Baktajaneswarar temple -some sculptures found on RHS of the compound wall.2

Baktajaneswarar temple -some sculptures found on RHS of the compound wall.3

Baktajaneswarar temple -some sculptures found on RHS of the compound wall.3

Baktajaneswarar temple -some sculptures found on RHS of the compound wall.4

Baktajaneswarar temple -some sculptures found on RHS of the compound wall.4

சுந்தரர் காலம்[3]: அத்தகைய முறையில், சுந்தரரின் காலம் கணிக்கப் படுகிறது.

  1. சுந்தரர் தம் பதிகங்களை ஆராயின் திருத்தொண்டத்தொகையில் அறுபத்து மூன்றடியார்களைக் குறிப்பிட்டுள்ளதன் மூலம் அவர்கள் காலத்துக்குப்பின் வாழ்ந்தவர் என்பது தெரிகிறது.
  2. ‘கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற் சிங்கனடியார்க்கும் அடியேன்’ என்று திருத்தொண்டத்தொகையுள் போற்றியுள்ளார். இத்தொடரில் ‘காக்கின்ற’ என்ற நிகழ்காலப் பெயரெச்சம் கழற்சிங்கன் சுந்தரர் காலத்தில் வாழந்தவன் என்பதைத் தெரிவிக்கிறது. காடவர் என்ற பெயர் பல்லவ மரபினரின் பெயர். கழல் என்பது பெருவீரன் என்பதைக் குறிக்கும் அடைமொழி. சிங்கன் என்ற பெயர் பல்லவ மன்னர்களில் இரண்டாம் நரசிங்கவர்மனாகிய இராசசிம்மப் பல்லவனையே குறிக்கின்றதென திரு. வெள்ளை வாரணனார் எடுத்துக் காட்டியுள்ளார். அவன் கி. பி. 690 முதல் கி. பி. 720 வரை காஞ்சிமாநகரிலிருந்து ஆட்சி புரிந்ததால், அக்காலம் என்றாகிறது.
  3. சுந்தரரை மகன்மைகொண்டு வளர்த்த மன்னன் திருமுனைப்பாடி நாட்டை ஆட்சி புரிந்த நரசிங்கமுனையரையன் என்று பெரிய புராணம் கூறுகின்றது. இம் மன்னன் இரண்டாம் நரசிம்ம வர்மனின் கீழ்த் திருமுனைப்பாடி நாட்டை யாண்ட குறுநில மன்னனாவன். தம் பேரரசன் பெயரைத் தன் பெயரோடு இணைக்கப்பெற்ற நிலையில் இவன் பெயர் நரசிங்க முனையரையன் என வழங்குகின்றது.
  4. சுந்தரரும் சேரமான் பெருமாளும் சமகாலத்தவர். சேரமான் பெருமாள், சுந்தரர் இருவரும் பாண்டிய நாடடைந்தபோது பாண்டிய மன்னனும், சோழனும் வரவேற்றனர். கொல்லம் ஆண்டின் தொடக்கத்தோடு, சேரமான் பெருமாளின் ஆட்சிக் காலத்தை இணைத்து கி. பி. 825 – க்கு முன்னும் பின்னும் எனக் கூறுதல் பொருந்தாதெனப் பலரும் மறுத்துள்ளனர். சுந்தரரை வரவேற்ற பாண்டியன் கோச்சடையன் ரணதீரன் (கி. பி. 670 – 710).
  5. எனவே சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியும், எட்டாம் நூற்றாண்டின் தொடக்கமுமாகிய காலப்பகுதியே யாகும்.
Sundarar Mantap work started 23-01-2013.Tirunavalur

Sundarar Mantap work started 23-01-2013.Tirunavalur

Sundarar bith place

Sundarar bith place

Sundarar bith place.closer view

Sundarar bith place.closer view

Sundarar bith place.work is goin on - child

Sundarar bith place.work is going on – Sundarar as a child was taken by a King – here a chils tried to imitate with his father, when we visited there in April 2017

Sundarar bith place.work is going on - goes to Himalayas

Sundarar bith place.work is going on – goes to Himalayas

Sundarar bith place.work is going on - sculpture carving

Sundarar bith place.work is going on – sculpture carving

Sundarar bith place.work is going on - sculpture

Sundarar bith place.work is going on – sculpture

Sundarar bith place.Mantap front view

Sundarar bith place.Mantap front view

Sundarar bith place.Mantap side view- LHS

Sundarar bith place.Mantap side view- LHS

Sundarar bith place.Mantap side view- RHS

Sundarar bith place.Mantap side view- RHS

Sundarar bith place.Mantap side view- another view

Sundarar bith place.Mantap side view- another view

சுந்தரர் பிறந்த இடத்தில் மண்டம் கட்டப்படுகிறது: சுந்தரமூர்த்திநாயனார் அவதரித்த இடத்தில் திருமடம் கட்டும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது. 23-01-2013 அன்று ஆரம்பித்தது. இதில் ஒரு கட்டமாக பக்கவாட்டு தூண்கள் நிலை நிறுத்தும் பணி ஜூன் 2016ல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கிரேன் மூலம் பக்கவாட்டு தூண்கள் நிலை நிறுத்தப்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட ஸ்தபதிகள் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை தம்பிரான் தோழர் அறக்கட்டளை, பவானி சிவனடியார்கள் திருக்கூட்டம், திருநாவலூர் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர். அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோவில், திருநாவலூர், திருநாவலூர் அஞ்சல், உளுந்தூர்பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம் – 607 204. இக் கோயில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.  ஆலய குருக்கள் – முத்துசாமி சிவம் (செல்பேசி 94433 82945); செந்தில் குருக்கள் (செல்பேசி 94861 50809).

© வேதபிரகாஷ்

28-04-2017

[1] http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=115&pno=374

[2]  சேரமான் கட்டுக்கதை கேரளாவில் முகமதியர் அதிகமாகவே வளர்த்து, சரித்திரமாக்க முயன்று வருகின்றனர். போதா குறைக்கு, அவர் முகமதியராக மதம் மாறினார் என்றும் கட்டுக்கதையை வளர்த்துள்ளனர்.

[3] சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகங்கள் -ஏழாம் திருமுறை பொழிப்புரை – விளக்கக் குறிப்புரை தருமை ஆதீனப் புலவர், சித்தாந்தக் கலைமணி, மகாவித்துவான், முனைவர் சி. அருணைவடிவேலு முதலியார், (காஞ்சிபுரம்), சுந்தரர வரலாறு, பக்கங்கள், 360-414.

http://www.tamilvu.org/library//l4170/html/l4170vur.htm

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அத்தாட்சி, அறக்கட்டளை, ஆலயம், ஆவுடையார், இடைக்காலம், இமயமலை, உடைப்பு, உளுந்தூர்பேட்டை, உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, கல்வெட்டு, கொடி கம்பம், சரித்திர ஆதாரம், சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, சுந்தரமூர்த்தி, சுந்தரர், செப்பனிடுதல், சோழர், சோழர் காலம், நாவலூர், நெல்லிகுப்பம், பக்தஜனேஸ்வரர், Uncategorized and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to திரு சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த நாவலூர், பக்தஜனேஸ்வரர் கோவில், பிறந்த இடத்தில் மண்டபம் கட்டப்படுதல் முதலியன! (2)

  1. Pingback: அப்பர் என்கின்ற திருநாவுக்கரரசர் பிறந்த திருவாமூர்: அவரது காலம், கோவில், இன்றுள்ள நிலை முதலிய

  2. Pingback: அப்பர் என்கின்ற திருநாவுக்கரரசர் பிறந்த திருவாமூர்: அவரது காலம், கோவில், இன்றுள்ள நிலை முதலிய

  3. Pingback: சுந்தமூர்த்தி நாயனார் அவதரித்த திருநாவலூர் தலத்தை பிரச்சினைக்குள்ளாக்கும் பக்தர்கள், சைவாச

  4. Pingback: சுந்தமூர்த்தி நாயனார் அவதரித்த திருநாவலூர் தலத்தை பிரச்சினைக்குள்ளாக்கும் பக்தர்கள், சைவாச

  5. Pingback: திருவெண்ணை நல்லூர் கோவில்: சுந்தரமூர்த்தி நாயனார் சிவனுடன் வாதிட்ட ஸ்தலம்! | உழவாரப்பணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s