அகோபிலம் – ஒன்பது நரசிம்மர்கள் – எப்படி செல்வது, விவரங்கள், தரிசனம் – பாறைகள் நிறைந்த பாதை கொண்ட காட்டில் வீற்றிருக்கின்ற பாவன நரசிம்மர் தரிசனம் (14)

அகோபிலம்ஒன்பது நரசிம்மர்கள்எப்படி செல்வது, விவரங்கள், தரிசனம்பாறைகள் நிறைந்த பாதை கொண்ட காட்டில் வீற்றிருக்கின்ற பாவன நரசிம்மர் தரிசனம் (14)

Pavana Narasimha - temple google location

பாவன நரசிம்மர் கோவில் இருப்பிடத்தைக் காட்டும் கூகுள் படம்.

Pavana Narasimha - temple google

அடர்ந்த காட்டில் உள்ள பாவன நரசிம்மர் கோவில்.

Pavana Narasimha - way has been risky

வண்டி ஏறமுய்டியாமல் நின்றது.

Pavana Narasimha - road entry

தார் ரோடுலிருந்து, காட்டுப் பாதைக்கு செல்லும் வழி – ஆரம்பம். இந்த செக் போஸ்டில், ஆள் யாரும் இல்லை.

Pavana Narasimha - road -second check post

இரண்டாவது செக் போஸ்டிருக்கு எதிராக காணப்படும் தூணின் பகுதி.

பாவன நரசிம்மர் கோவில் இருப்பிடம்: அஹோபில நரசிம்மர் கோவிலுக்கு தென்புறத்தில், கருடாசலத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் (உக்கிர நரசிம்மர் கோவிலிருந்து 6 கி.மீ) பாவனி நதிக்கரையில், அடர்ந்த காட்டில் இக்கோவில் உள்ளது. முன்னர் இக்கோவில் சிறியதாக இருந்தது. இப்பொழுது, கொஞ்சம்-கொஞ்சமாக மாறி வருகிறது. செஞ்சு மக்களுக்கு, இது முக்கியமான வழிபாட்டு ஸ்தலமாக இருக்கிறது. மற்ற மலைஜாதி மக்களும் வந்து வழிபடுகிறார்கள். மொட்டையெடுத்துக் கொள்வது, காது குத்துவது போன்ற சடங்குகளையும் செய்து வருகின்றனர். இதனால், சுற்றிலும் கட்டிடங்கள், கடைகள் என்று முளைத்து வருகின்றன. கோவிலைச் சுற்றி டின் – சீட்டினால் மண்டபம் போன்று கட்டப் பட்டுள்ளது. முன்பிருந்த சிறிய மண்டம், கர்ப்பகிரகம் எல்லாம் கம்பி-கிரில் போட்டு மூடி இருக்கிறார்கள். முன்பக்கம் கொம்புகளினால் வேலி போன்று அமைத்திருக்கிறார்கள். இங்கு கூட்டம் இருப்பதால், வரிசையில் செல்ல வேடியுள்ளது.

Pavana Narasimha - temple entry

கோவிலுக்கு முன்பாக் கொம்புகளினால் போடப் பட்டிருக்கும் வேலி.

Pavana Narasimha - temple -front view

உள்ளே நுழையும் வழி.

Pavana Narasimha - temple -front - vehicles parked

Pavana Narasimha - temple -side view

சுற்றிலும் போடப் பட்டுள்ள தடுப்புகள்.

Pavana Narasimha - temple inside for darshan

கர்ப்பகிருகத்திற்கு செல்லும் வழி.

Pavana Narasimha - temple inside for darshan.door

கர்ப்பகிருகத்தின் முன்பக்கம்.

பாவன நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் வழி: ஜீப்பில் தான் இங்கு செல்ல முடியும். பாதை கரடுமுரடாக, ஏற்ற-இறக்கங்களுடன், பாறைகளுடன் இருக்கின்றது. சாதாரணமாக யாரும் அங்கு வந்து செல்ல முடியாது. முன்பு பல கஷ்டங்களுடன் நடந்து சென்று வந்தார்கள். வழிகாட்டி / கெயிட் இல்லாமல் செல்ல முடியாத நிலை இருந்தது. ஏனெனில், ஏகப்பட்ட ஒற்றையடி பாதைகள் இருந்ததால், வழி தவறி காட்டில் சென்று அலையவும் நேரிடும். “திக்குத் தெரியாத காட்டில்” என்ற அனுபவம் அப்பொழுது ஏற்படும். இப்பொழுது, ஜீப்பில் செல்வதால், கோவிலுக்கு நேரிடையாக செல்ல முடிகிறது. அந்த ஜீப்பை ஓட்டும் டிரைவர்கள், மிகவும் திறமைசாலிகளாக இருக்கின்றனர். உள்ளே நுழையும் இடம் மற்றும் இடையே, இரண்டு இடங்களில் வாகனங்களை பரிசோதிக்கும் இடங்கள் உள்ளன. ஆனால், அங்கு யாரும் இல்லை. வாகன ஓட்டியே சென்று, அங்கிருக்கும் ஒரு நோட்டில், வண்டி எண் முதலியவற்றை எழுதி விட்டு வருகிறான். நடுவில் இன்னொரு சோதனை இடம் உள்ளது. ஆனால், கேட்பவர் யாரும் இல்லை. ஏதோ சொல்ல வேண்டுமே என்று சம்பிரதாயத்திற்கு, அங்கிருக்கும் “செக் போஸ்ட்” ஆட்களிடமிருந்து சொல்லி விட்டு வருகிறான். இங்கும் “செக் போஸ்ட்” எதிரில் ஒரு தூணின் பகுதி காணப்படுகிறது. அங்கிருந்து சிறிது தூரத்தில் தான் “பாவன நரசிம்மர்” கோவில் உள்ளது.

Pavana Narasimha - temple -outside-side view

கோவிலின் பின்புறத் தோற்றம்.

ஜீப்பில் செல்பவர்கள் கவகிக்க வேண்டியது: போகும் வழியில் வண்டி பழுதாலும், கேட்பதற்கு யாரும் இல்லாத நிலையுள்ளது. இருப்பினும், அந்த ஜீப்-ஓட்டுனர்களே அவர்களுக்குள் அனுசரித்து, உதவி செய்து கொண்டு ஓட்டி வருகிறார்கள். ஜீப் நின்று விடுவது, உயரம் ஏறுவதற்கு அவஸ்தைப் படுவது, பக்தர்களை இறக்கி விட்டு, ஏற முயற்சிப்பது, பக்தர்களை விட்டே வண்டியைத் தள்ள வைப்பது போன்ற காட்சிகளை தாராளமாகப் பார்க்கலாம். நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள், இடுப்பு வலி, மூட்டு வலி உள்ளவர்கள், பருமனாக உள்ளவர்கள், ஜீப்பில் செல்லும் போது அவதிக்கு உள்ளாக வேண்டியிருக்கும். சாப்பிட்டு விட்டு, உடனடியாகவும், வண்டியில் ஏறி இங்கு வர முயல வேண்டாம். ஏனென்றால், அவர்களுக்கு வாந்தி வர நேரிடும். குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்கு ஜாலியாக இருக்கும்.

Pavana Narasimha - temple -Chaitanya

கோவிலின் முந்தைய தோற்றம் – சுற்றியுள்ள வேலி, கடைகள், தகடு-மண்டபம், ஜீப்புகள் எதுவுமே இல்லாத நிலை.

Pavana Narasimha - temple - Garuda -in front-Chaitanya

கோவிலுக்கு முன்னால் இருந்த கருடன் சிலை.

Pavana Narasimha - temple - Garuda -old view-Chaitanya

கோவிலின் முந்தைய தோற்றம் – முன் பக்கம்.

Pavana Narasimha - temple - Garuda -old view side--Chaitanya

 கோவிலின் முந்தைய தோற்றம் –  இடது பக்க  நுழைவு வாயில்.

Pavana Narasimha - temple - Garba gruha--Chaitanya

கர்ப்பகிருக நுழைவு வாயில்.

Pavana Narasimha - temple - Garba gruha-narasinha and Krishna-Chaitanya

உள்ளேயிருக்கும் நரசிம்மர் மற்றும் வேணுகோபாலன் விக்கிரங்கள்.

Pavana Narasimha - temple - Garba gruha-idol

உள்ளேயிருக்கும் நரசிம்மர் மற்றும் வேணுகோபாலன் விக்கிரங்கள். அலங்கரித்துள்ள நிலையில்.

Pavana Narasimha - temple - Garba gruha-Gopala Krishna-Chaitanya

பாமுலேடி நரசிம்ம ஸ்வாமி கோவில் – செஞ்சுகுலப் பெண்னை மணந்து கொண்டு வீற்றிருக்கும் நிலையைக் காட்டும் விக்கிரகம்-கோவில்: கோவிலுக்கு முன்னால் ஒரு தூணும் / கம்பமும், கருடர் விக்கிரமும் இருக்கின்றன. பாவன நரசிம்மர் கோவில், “பாமுலேடி நரசிம்ம ஸ்வாமி கோவில்” என்று உள்ளூர்வாசிகளால் அழைக்கப்படுகிறது. அதாவது, பாம்பை தலைமீது கொண்டவர், என்ற பொருளில் சொல்கின்றனர். தலையின் கிரீடத்திற்கு அருகில் ஏழுதலை நாகம் வடிக்கப்பட்டிருப்பதை காணலாம். முன்னர் நாக வழிபாடு இங்கிருந்ததை அறியலாம். நான்கு கைகளுடன் லக்ஷ்மியுடன் காணப்படுகிறார். செஞ்சுலக்ஷ்மி வேடுவ குலத்தைச் சேர்ந்தவர், இங்கு வந்து நரசிம்மர் திருமணம் செய்துகொண்டதால் வேடுவ குலத்தினர் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் இங்கு வந்து கோழி, ஆடு போன்றவற்றை பலி கொடுத்து விழா கொண்டாடுகிறார்கள். மாசி மாதம் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது செஞ்சு மக்கள் / வேடுவகுலத்தினர் சீர் வரிசை செய்து, களிப்புடன் கொண்டாடி பகவானை தரிசனம் செய்கிறார்கள்.  இரவில் இங்கு யாரும் தங்குவதில்லை, ஏனெனில், தேவதைகள் வந்து வழிபடுவதாக சொல்லப் படுகிறது.

Pavana Narasimha - temple -old photo

1970களில் காணப்பட்ட தோற்றம் – திரு சீதாபதி புத்தகத்திலிருந்து.

Pavana Narasimha - Vigraha -old photo

1970களில் காணப்பட்ட  மூலவரின் தோற்றம் – திரு சீதாபதி புத்தகத்திலிருந்து.

பாவன நரசிம்மரின் முக்கியத்துவம், மகத்துவம்: பாவனி நதிக்கரையில் அமைந்திருப்பதால், “பாவன நரசிம்மர்” என்றழைக்கப்படுகிறார். திருவடியை மடக்கி, வலது திருவடியைத் தொங்கவிட்டு சுக ஆசனத்தில் காட்சியளிக்கிறார். தாயாரின் மலர்ப் பாதங்களை, ஒரு தாமரை மலர் தாங்கி மகிழ்கிறது. நரசிம்மருக்கு இடது புறத்தில் வேணுகோபாலனின் (குழலூதும் கண்ணன்) விக்கிரகம் உள்ளது. இருக்கும் நரசிம்மர்களில் அமைதியான கோலத்தில் இருக்கும் விக்கிரகம் இதுதான். இது, “ரத்ன க்ஷேத்திரம்”, அதாவது உயர்ந்த மற்றும் முக்கியமான கோவிலாகக் கருதப் படுகிறது. இங்கு வந்து வழிபட்டால், பக்தர்களின் அறிந்தும்-அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் போய், முக்தி கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.

© வேதபிரகாஷ்

21-03-2017

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அகோபில, அகோபிலம், அஹோபிலம், உக்கிரம், ஏழுதலை நாகம், கருடன், கருவறை, கொடி கம்பம், கோவில், சனி, சர்ப்பம், சிங்கம், செஞ்சு, செஞ்சு லக்ஷ்மி, செஞ்சு லட்சுமி, செஞ்சுலக்ஷ்மி, செஞ்சுலட்சுமி, ஜுவாலா, ஜுவாலா நரசிம்மர், தரிசனம், நம்பிக்கை, நரசிம்மர், நரசிம்ஹர், நாக தோசம், நாக வழிபாடு, பலி, பலிபீடம், பாமுலேடி, பாமுலேடி நரசிம்மர் and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s