அகோபிலம் – ஒன்பது நரசிம்மர்கள் – எப்படி செல்வது, விவரங்கள், தரிசனம் – சாலைக்கு அருகில் வீற்றிருக்கின்ற சத்ரவட நரசிம்மர் தரிசனம் (15)

அகோபிலம்ஒன்பது நரசிம்மர்கள்எப்படி செல்வது, விவரங்கள், தரிசனம்சாலைக்கு அருகில் வீற்றிருக்கின்ற சத்ரவட நரசிம்மர் தரிசனம் (15)

Chatravata Narasimha temple- plaque

ஶ்ரீ சத்ரவட ந்ருஸிம்ஹ என்கின்ற பெயர் கல்வெட்டு.

IMG_20170127_165236754_HDR

கோவிலின் முன்புறத் தோற்றம்.

Chatravata Narasimha temple- six-pillared mantap

கோவில் முன்புறத்தில் உள்ள மண்டபம்.

சத்ரவட நரசிம்மர்: கீழ் அஹோபில கோவிலிலிருந்து நான்கு கி.மீ தூரத்தில் இக்கோவில் உள்ளது. பாவன நரசிம்மர் கோவில் வழியில் உள்ளது. கரடு முரடான, காட்டுப்பாதை, மலைப்பாதை என்றெல்லாம் சென்ற பிறகு, இக்கோவிலுக்கு செல்வது, சாதாரணமாக இருக்கிறது எனலாம். ஆமாம், தார் சாலையின் அருகில் அமைந்துள்ளது. வண்டி வைத்திருப்பவர்கள் கோவில் வாசலிலிலேயே சென்று இறங்கலாம். அரசமரத்தடியில் இக்கோவில் உள்ளதால், “சத்ரவட நரசிம்மர்” என்றழைக்கப்படுகிறார். சத்ர என்றால் குடை, வட என்றால் ஆலயம், குடை போன்ற ஆலயத்தின்கீழ் வீற்றிருக்கும் நரசிம்மர் என்றாகிறது.ஆலமரத்தடியில் கோயில் கொண்டிருப்பதாகவும் கொண்டு, இவர் ஆலமர நரசிம்மர், அதாவது, சத்ரவடநரசிம்மர் என்றும் இந்த ஆலமரமே ஒரு குடைபோல கோயில் விமானத்தைக்காக்கிறது என்றும் சொல்கிறார்கள். ஆனால், இப்பொழுது அம்மரம் இல்லை. முதலில் ஆறு கால் மண்டபம் எதிர்ப்படுகிறது. அதன் தூண்களில் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மரின் அழகியசிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறையில் சத்ரவட நரசிம்மர் அரியவகை கருப்புநிறக் கல்லில் உருவானவராகக் காட்சியளிக்கிறார்.

Chatravata Narasimha temple- two Ganharvas

இரு கந்தர்வர்கள் பாடி நரசிம்மரின் கோபத்தைத் தனித்தது: இங்கு சங்கு, சக்கர, அபய ஹஸ்தம், இடது கை இடது தொடையில் என்று நான்கு கைகளுடன் நரசிம்மர் காட்சியளிக்கிறார். முன்பு அடர்ந்த காட்டில் இருந்துள்ளது. பிறகு வீடுகள் வந்த பின்னரும் அவ்வாறே செடி-கொடிகள் சூழ்ந்த நிலையில் இருந்துள்ளது. இக்கோவிலை இப்பொழுது புதுப்பித்துக் கட்டியுள்ளார்கள். இந்த நரசிம்மர் இசையில் விருப்பம் உள்ளவர்களுக்கு உதவுகின்றவராக இருக்கின்றார். இசையில் சிறந்தவர்கள், திடீரென்று குரல்வளம் இழக்கும் போது, இவரிடம் வந்து வேண்டிக் கொண்டால், குரல்வளம் மீண்டும் பெறலாம் என்ற நம்பிக்கையுள்ளது. அதாவது, முன்னர் கந்தர்வர்கள் இருவர் நரசிம்மர் கோபம் தனிய அங்கு வந்து பாடியபோது, நரசிம்மர் மகிழ்ந்து, கோபம் தனிந்த நிலையில் உட்கார்ந்தாராம். கோயில் விமானத்தில் லக்ஷ்மி நரசிம்மரையும், கருடாழ்வாரையும் தரிசிக்கலாம்.‘ஆஹா’, ‘ஊஹு’ என்ற இரு கந்தர்வர்கள் நரசிம்மரைத் துதித்து இனிய கானம் இயற்றியதாகவும்,அந்த சங்கீதத்தில் மெய்மறந்து அவர்களைப் பாராட்டவே பெருமாள் இங்கு தோன்றினார் என்றும்சொல்கிறது புராணம், என்றும் சேர்த்து சொல்கிறார்கள்.

Chatravata Narasimha temple- full view

மண்டபத்தின் முழு தோற்றம்.

Chatravata Narasimha temple- darshan

வணங்கும் பக்தர்கள்.

Chatravata Narasimha temple- mulavar - another view

காடுகளில் இருந்த நரசிம்மர் கோவில்களின் தொன்மை நகராக்க முறையால் பாதிக்கப்படுகின்றன: அடர்ந்த காட்டில் இருந்த நரசிம்மர் கோவில்கள் இப்பொழுது, நகராக்கம் என்றதால், சாலைகள் போடப்படுவதால், இவ்வாறு பிரிந்து காணப்படுகின்றன. கூகுள் வரைப்படம் மற்றும் ஆகாயத் தோற்றம் வைத்துப் பார்க்கும் போது, இவையெல்லாம் அடர்ந்த காடுகளில் இருந்திருக்கின்றன. தெரிந்தவர்கள் மட்டும் தான் வழிபட்டு வந்திருக்கிறார்கள். அருகில் இருந்த எரிமலை, படிவுப் பாறைகள் முதலியவை, பழங்குடி மக்களின் எண்னங்களுடன், அவர்களது புராதன கதைகளுடன் பின்னிப் பினைந்திருப்பதை காணலாம். ஜைன-பௌத்தர் காலத்தில், இவ்விடங்களை தங்களது மந்திர-தந்திர-யந்திர வழிபாடு, பிரயோகம் முதலியவற்றிற்கு உபயோகப் படுத்தியிருக்கிறார்கள். பிறகு இடைக்காலத்தில், விஜய நகர, நாயக்க, ரெட்டி அரசர்கள், தளபதிகள் முதலியோர், கொஞ்சம்-கொஞ்சமாக கோவில் கட்டி வழிபட்டனர். வரும் பக்தர்களுக்கும் தங்க மண்டபங்கள் முதலியவற்றைக் கட்டி வைத்தனர். இருப்பினும், முன்னரே குறிப்பிட்டபடி, பழைய வழிபாடு, சம்பிரதாயம், கிரியைகள் மாறாமல் உக்கிர, குரோத / வராஹ, மலோல நரசிம்மர் வழிபாடுகளில் காப்பாற்றப் பட்டு வருகிறது.

Chatravata Narasimha temple- Mulavar

Chatravata Narasimha temple- Sitapati photo

கோவில் முன்பு எப்படி இருந்தது, இப்பொழுது எப்படி மாற்றப்பட்டுள்ளது என்பதை இப்புகைப்படத்திலிருந்து அறிந்து கொள்லலாம்.

Chatravata Narasimha idol - Sitapati photo

நவீனத்துவ சுற்றுலா கொள்கைகளினால், புனிதம் கெட்டு, குற்றங்கள் வளர்கின்றன: சுற்றுலா, நகராக்கம் மற்றும் நவீனப்படுத்தும் முறைகள் தான், இத்தகைய பழமையான வழிபாட்டு ஸ்தலங்களின் தொன்மை, சிறப்பு, உண்மை, முக்கியத்துவம் முதலியவற்றை மாற்றி விடுகிறது. அகழ்வாய்வு மற்றும் தொல்துறை வல்லுனர்களும் புனர்-நிர்மானம், புதுப்பித்தல், பாராமரிப்பு போன்ற வேலைகள் மூலம் அத்தகைய தொன்மையின் உண்மைத் தன்மை மற்றும் சரித்திர ஆதாரங்களை அழித்து வருகின்றனர் எனலாம். இப்பொழுது ஜைன-பௌத்தர்கள் போல, இக்காலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், இப்பகுதிகளில் மறைந்து கொண்டு தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள். இடைக்கால முகமதிய கொள்ளை மற்றும் கோவில் இடிப்பு போன்ற வேலைகளை, இன்றைய அரசியல்வாதிகள், வியாபாரிகள் போன்ற கூட்டங்களால் நிறைவேற்றப் பட்டு வருகின்றன. அக்காலத்தில் வியாபாரிகள்-வணிகர்களும் கோவில்களுக்காக அதிகாமாவே செய்து வந்தனர். ஆனால், இக்கால வியாபாரிகள், கோவில் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டு, கோவில் சொத்தை கொள்ளையடித்து, பக்தர்கள் மூலம் லாபம் சம்பாதித்து வருகின்றனர். கூட்டம் அதிகமாகும் போது, பக்தி குறைகிறது; பக்தர் அல்லாத வேடிக்கைப் பார்க்கும் கூட்டம் சேர்ந்து வரும் போது, பக்தியல்லாத காரியங்கள் நடக்கின்றன. கூட்டத்தோடு, குப்பையும் பெருகுவது போல, குற்றங்களும் அதிகமாகின்றன.

© வேதபிரகாஷ்

21-03-2017

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அகோபில, அகோபிலம், அத்தாட்சி, அரசமரம், அஹோபிலம், கரஞ்ச, கருடன், கருவறை, குன்று, குரோட, குரோத, சத்ரவட, சரித்திர ஆதாரம், சிங்கச் சிற்பங்கள், சிங்கம், செஞ்சு, செஞ்சு லக்ஷ்மி, செஞ்சு லட்சுமி, செஞ்சுலக்ஷ்மி, செஞ்சுலட்சுமி, செப்பனிடுதல், ஜைனம், தொன்மை, நம்பிக்கை, நரசிம்மர், நரசிம்ஹர், பராமரிப்பு, புனர் நிர்மானம், மராமத்து and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s