அகோபிலம் – ஒன்பது நரசிம்மர்கள் – எப்படி செல்வது, விவரங்கள், தரிசனம் – மூன்றாவது குரோத / வராஹ நரசிம்மர் (10)

அகோபிலம் – ஒன்பது நரசிம்மர்கள்எப்படி செல்வது, விவரங்கள், தரிசனம்மூன்றாவது குரோத / வராஹ நரசிம்மர் (10)

kroda-varaha-narasimha-temple-before-1978-sitapati-photo

குரோத / வராஹ நரசிம்மர்:  குரோத அல்லது வராஹ நரசிம்மர் பாவநாசினி ஆற்றங்கரையில், ஜுவாலா நரசிம்மர் கோவிலுக்குப் போகும் வழியில் உள்ளது. மாலோல நரசிம்மரைத் தாண்டியதும், மலைப்பாதையில் வலது பக்கம் இக்கோவில் உள்ளது. இடது பக்கத்தில் பாலமும், வலது பக்கத்தில் ஆற்று நீரையும் காணலாம். 1978ற்கு முன்னர், இக்கோவில் செடி-கொடிகளால் மூடப்பட்ட, அதாவது கோவிலே கணப்படாத நிலையில் இருந்தது[1].  இதுவும் ஒரு குகைக் கோவிலாகும். குகைக்கோவில் முன்பு, விஜய நகர காலத்தில், மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனை “வராஹ மண்டபம்” என்று அழைக்கிறார்கள். அங்கு ராமர், ஆஞ்சனேயர் சிற்பங்கள் கொண்ட 16 தூண்களுடன் அமைந்துள்ள ஒரு மண்டபம் இருக்கிறது. இவற்றைத் தவிர, அவற்றில் மற்ற சிற்பங்களும் காணப்படுகின்றன. ஒரு தூணில், முன்பே குறிப்பிட்டப் படி, இன்னொரு தூணில் ஒரு பெண்ணின் நிர்வாண சிற்பம் காணப்படுகிறது.

kroda-varaha-narasimha-temple-viayanagara-period-mantap-pillar-erotic-sculpture

இருகைகள் வைத்திருக்கும் நிலையினைப் பார்க்கும் போது, அது, முன்னர் அவ்விடத்தில் தாந்திரீக முறை பின்பற்றப்பட்டு வந்ததைக் குறிக்க சேர்க்கப்பட்டது என்று தெரிகிறது.

kroda-varaha-narasimha-temple-side-view

மேலே காட்டப்பட்ட மண்டபத்தின் தரைக்கு இக்கால கற்கள் (மொசைக்) பதிக்கப் பட்டுள்ளன.

kroda-varaha-narasimha-temple-changing-clours

பிறகு மேலே கோபுரம் போன்ற அமைப்பு கட்டப்பட்டு சேர்க்கப் படுகிறது.

kroda-varaha-narasimha-temple-changing-colours-2

அதற்கு வர்ணங்கள் பூசப்படுகின்றன.

kroda-varaha-narasimha-temple-vigrahas

உள்ளே இருக்கும் குரோத-நரசிம்மர் விக்கிரங்கள் – பழைய புகைப்படம்.

குகைக்கோவிலில் இரண்டு விக்கிரகங்கள் உள்ளன: அருகில் உள்ள தீர்த்தத்தை “வராஹ தீர்த்தம்” என்கிறார்கள். மழைக்காலங்களில் மேலேயிருந்து, நீர் வீழ்ச்சியாக விழுந்து, படிகள் வரை நீர் நிரம்பி ஓடுகிறது. அங்கு ஒரு சிறிய குகைக்கோயிலில், இரு விக்கிரங்கள் இருக்கின்றன.

 1. லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி.
 2. வராஹ நரசிம்ம ஸ்வாமி. வராஹரின் இடது கையின் மீது பூதேவி அமர்ந்திருக்கிறார்.

முதுகெலும்புள்ள விலங்கு நிலையிலிருந்து, மனிதனாக பரிமணித்த நிலையை இது காட்டுகிறது. தசாவதார மற்றும் பரிணாம வளர்ச்சி சித்தாந்தம் இவற்றை விளக்கும் முறையில், “வராஹ-நரசிம்மர்கள்” இருப்பது பொறுத்தமாகவே இருக்கின்றது. இது பற்றியும் முன்னமே குறிப்பிடப்பட்டது. வசதிற்காகவும், முக்கியத்திற்காகவும், அவை மறுபடியும் கொடுக்கப்படுகின்றன.

kroda-varaha-narasimha-temple-before-1978-sitapati-photo-compleyely-covered

குரோத நரசிம்மர் கோவில் செடி-கொடிகளால் மூடி கிடந்தது.

kroda-varaha-narasimha-temple-viayanagara-period-mantap-with-pillars

முன்னால் இருந்த விஜயநகரத்து கால சிற்பங்கள் கொண்ட தூண் மண்டபம்.

kroda-varaha-narasimha-temple-viayanagara-period-mantap-pillar-rama-anjaneya-sculpture

ஒரு தூணில் காணப்படும் ராமர், ஆஞ்சனேய சிற்பங்கள்.

kroda-varaha-narasimha-temple-viayanagara-period-mantap-renovated

மண்டபத்தின் இப்பொழுதைய தோற்றம்.

kroda-varaha-narasimha-temple-mantap-renovated

இம்மண்டபத்தின் வழியாக உள்ளே சென்றால், இயற்கையான குகைக்கோவில் வரும்.

kroda-varaha-narasimha-temple-cave-inside-kroda-narasimha

இதுதான் அந்த குகைக்கோவிலின் வாசல். இப்பொழுது கதவும் போடப்பட்டுள்ளது.

kroda-varaha-narasimha-temple-cave-idol-formation

உள்ளே இயற்கை சூழ்நிலையில், விக்கிரங்களைப் பார்க்கலாம். பின்பக்கம், மிக்க பழமையான படிவுப்பாறைகளின் தோற்றத்தைக் காணலாம்.

kroda-varaha-narasimha-temple-varaha-narasimha-vigrahas

உள்ளே இருக்கும் வராஹ மற்றும் நரசிம்மர் விக்கிரங்கள்.

தசாவதார தத்துவம், மகத்துவம்: தசாவதர தத்துவத்தில், “பரிணாம வளர்ச்சி” சித்தாந்தம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். “மச்ச-கூர்ம-வராஹ-நரசிம்ம-வாமன-பரசுராம-ராம-பலராம-கிருஷ்ண-கல்கி” என்று வகைபடுத்தி வைத்தது, ஏதோ எதேச்சையாக வரிசைப்படுத்தவில்லை, எல்லோருக்கும் புரியவேண்டும் என்ற ரீதியில் தான் அவ்வாறு வரிசைப்படுத்தப்பட்டது. இந்திய புராணமுறை விளக்கம் பொது மக்களுக்கு மற்றும் சாதாரண மக்களுக்காக அவ்வாறு எழுதப்பட்டது[2]. ஜே.பி.எஸ். ஹால்டேன் என்பவர், மீன், ஆமை, பன்றி, சிங்கம்-மனிதன், குள்ள மனிதன் மற்றும் நான்கு மனிதர்கள் கொண்ட தசாவதார தத்துவத்திற்கும், முகுகெலும்புள்ளவை தோன்றி வளர்ச்சியடைந்ததற்கும் ஒற்றுமை இருப்பதை எடுத்துக் காட்டினார்[3]. “பரசுராம-ராம-பலராம-கிருஷ்ண-கல்கி” என்பதிலும்,

 • மனிதன் கோடாலி கொண்டு காடுகளை சீரமைத்தது,
 • வில்-அம்பு கொண்டு வேட்டையாடியது,
 • கலப்பைக் கொண்டு உழுதது,
 • சக்கரம் – முக்கியமான கண்டுபிடிப்பு – உலோகக் கருவிகளை உபயோகப்படுத்தியது,
 • குதிரை போன்ற விலங்குகளை உபயோகப்படுத்தியது,

என்று படிப்படியான, மனித கலாச்சாரத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறது. இதனால், அவையெல்லாம் முந்தைய காலத்தில் இல்லை என்ற அர்த்தம் இல்லை. தொழிற்நுட்பம் வளர்ச்சியடைந்த நிலைகளைக் காட்டுவதாகக் கொள்ளலாம். இதில் “சிங்கம்-மனிதன்”, மனித உருவாக்கத்திற்கு பாலமாக இருப்பதை அறியலாம். “குரங்கிலிருந்து மனிதன் உருவானான்” என்று டார்வினின் கொள்கை இருந்தாலும், இதிலுள்ள தத்துவமும் முக்கியமாகிறது. மேலும், பன்றியும் மருத்துவத்தில் முக்கியமாக இருக்கிறது. காலன் என்ற ரோமானிய மருத்துவர், பன்றி மனிதனையொத்த உள்-அங்க அமைப்புக் கொண்டுள்ளதால் பன்றியை அறுத்து பரிசோதித்தார்[4]. வராஹம் நரசிம்மருக்கு முன்னல் வருவதும் நோக்கத்தக்கது. இங்கு, அஹோபிலத்தில், ஒரு நரசிம்மர்-வராஹ நரசிம்மராகவே இருப்பது கவனிக்கத்தக்கது.

hiranyakhsa-depicted-as-a-snake

ஹிரண்யாக்ஷன் பாம்பு வடிவத்தில் சித்தரிக்கப் பட்டுள்ளான் – பாதாமி கோவில் சிறபம்.

ஹிரண்யாக்ஷன்இரண்யகசிபு வராக மற்றும் நரசிம்ம அவதாரங்கள்: வராக மற்றும் நரசிம்ம அவதாரங்கள், ஹிரண்யாக்ஷன் (हिरण्याक्ष) என்றால், தங்கத்தினால் ஆன கண்களைக் கொண்டவன் மற்றும் இரண்யகசிபு (हिरण्यकशिपु) என்றால் தங்கத்தினால் போர்த்தப்பட்டவன் என்ற இரண்டு அரக்கர்கள் / ராக்ஷதர்களுடன் இணைந்துள்ளது. உண்மையில், இவர்களும், வைகுந்தத்தின் காவலாளிகளாக இருந்து, சபிக்கப் பட்டு, அவ்வாறு பிறந்தார்கள் மற்றும் விஷ்ணுவினாலாயே கொல்லப்பட்டு, அதாவது, அப்பிறவி நீங்கி, மறுபடியும், வைகுந்தத்திற்கே திரும்பிச் சென்றார்கள் என்பது புராண விவரங்கள் ஆகும். ஆனால், ஹிரண்யாக்ஷன், பூமியை கடலுக்கு அடியில் மூழ்க வைத்து, மறைத்து வைத்ததனால், உயிரினங்கள் அறவே மறைந்து விட்டன. இதனால், விஷ்ணு, வராக அவதாரம் எடுத்து, பூமியை நீருக்கு மேலே கொண்டு வந்தார். அதனால், உயிரினங்கள் மறுபடியும் பூமியின் போது தோன்ற ஆரம்பித்தன. பிறகு அரக்கக் குணம் கொண்டவர்களின் ஆட்சியால், மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டனர். அதனால், ஹிரண்யகசிபுவைக் கொல்ல, அவனது, சரத்துகளின் படி, நரசிம்மராக அவதாரம் எடுத்து, அவனைக் கொல்ல வேண்டியாதாயிற்று.

hiranyakasipu-as-depicted-in-ahobilam-sculpture

 1. எந்தவிதமான தேவர், ராக்ஷசர், கந்தர்வர், யக்ஷர், என்று யாராலும் கொல்லப்படக்கூடாது.
 2. மனிதர்களாலேயோ, உயிருள்ளவர்-உயிரற்றவர் அதாவது பேய்-பூதங்கள் போன்றவற்றால் இறப்பு நேரக்கூடாது.
 3. உலோகம், கல், மண், செடி, மரம் போன்ற எந்த ஆயுதத்தினாலும் இறப்பு நேரக்கூடாது.
 4. பகல் அல்லது இரவு நேரத்தில் சாகடிக்கப் படக் கூடாது.
 5. வீட்டிற்கு வெளியே அல்லது உள்ளே,
 6. மேலே அல்லது கீழே,
 7. ஈரமான அல்லது ஈரமில்லாத பொருள் / ஆயுதம்,

என்று எந்நிலையிலும், கொல்லப்படக்கூடாது. உண்மையில், இதில் இது-அது, இதில்லை-அதில்லை, ஆமாம்-இல்லை போன்ற இரண்டு நிலைகளை விளக்குவதாக இருக்கிறது. இன்று மின்னணு-கணக்கீடு ரீதியில் 0 அல்லது 1 என்ற இரு எண்களை வைத்துக் கொண்டு, கணினிகள் மற்றும் அவை சம்பந்தப் பட்ட எல்லாமே இயங்கி வருகின்றன[5].

உள்ளதுமற்றும்இல்லாததுஎன்ற நிலைகள்: ஹிரண்யாக்ஷன் மற்றும் இரண்யகசிபு, வராஹ-நரசிம்ம அவதார தத்துவங்கள், படைப்பு, மனித தோற்றம், விஞ்ஞானத்தின் ஆரம்பக் கூறுகளை விளக்குவதாக உள்ளது[6].

 1. முதலில், உள்ளதும் இல்லை, இல்லாததும் இல்லை.
 2. காற்றும் இல்லை, ஆகாயமும் இல்லை.
 3. மூச்சும் இல்லை, மூச்சு விடுவதும் இல்லை, ஆனால், மூச்சுள்ளது.
 4. எங்கும் தண்ணீர் தான், காலி இடம் இல்லை, ஆனால், இருக்கிறது.
 5. நீரும் இல்லை, ஆழம் கண்டு பிக்க முடியாத நிலையும் இல்லை.
 6. இரவும் இல்லை, பகலும் இல்லை.
 7. மேலும் இல்லை, கீழேயும் இல்லை.
 8. பிறப்பும் இல்லை, அழிவும் இல்லை.
 9. உண்மையும் இல்லை, பொய்யும் இல்லை.
 10. அதாவது “உள்ளது” மற்றும் “இல்லாதது” என்ற இரு நிலைகள் இருக்கின்றன[7].

இங்குள்ள பூகோளவியல், புவியியல் பாறைகளின் அடுக்குகள் அமைப்பு முதலியன, மிக்கத் தொன்மையினைக் காட்டுகின்றன. அவற்றுடன் இணைந்த மிருகங்கள், அவற்றின் வளர்ச்சி முதலியவை, மனிதனுக்கு உண்மையினை, விஞ்ஞானத்தை அறிவுருத்தத் தான், இத்தகைய புராண கதைகள் உண்மையினை எடுத்துறைக்கின்றன. அதனால் தான், “பிரகலாதன் பள்ளிக் கூடம்” இங்கிருக்கிறது எனும்போது, மனிதன், இங்கு கற்றுக் கொள்ள வேண்டியது, இன்னும் உள்ளது என்பதனை எடுத்துக் காட்டுகிறது.

© வேதபிரகாஷ்

25-02-2017

[1] Pidatala Sitapati, Sri Ahobila Narasimha Swamy Temple, The Director of Archaeology and Museums, Andhra Pradesh, 1982, p.7, 10.

[2]  ஆனால், இடையே, ஜைன, பௌத்த, முகமதிய, ஐரோப்பியர்களின் இடைசெருகல்களால், ஒவ்வாத வர்ணனைகள், முரண்பாடான விவரங்கள், சச்சைகள உண்டாக்கும் விவகாரங்கள் அதிகமாகின. அந்நிலையில், அரிசியிலிருந்து மண், கற்கள் முதலியவற்றை ஒதுக்கி விட்டு, நன்றாக கழுவி சமைக்கும் நிலையில், நாம் அவற்றை உபயோகப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.

[3]  J. B. S. Haldane suggested that Dashavatara gave a “rough idea” of vertebrate evolution: a fish, a tortoise, a boar, a man-lion, a dwarf and then four men (Kalki is not yet born)

 “Cover Story: Haldane: Life Of A Prodigious Mind”. Science Reporter. Council of Scientific & Industrial Research. New Delhi, 29: 46. 1992.

[4] Gross, Charles G. “Galen and the squealing pig.” The Neuroscientist 4.3 (1998): 216-221.

[5] The Concept of Evolution of Primary Numbers by K.V. Ramakrishna Rao

http://ignca.nic.in/vedic_heritage/Vijnana_Bharati_1/VB_08_08.pdf

[6] Why Computer Should Work only on 0 and 1 by K.V. Ramakrishna Rao

 http://ignca.nic.in/vedic_heritage/Vijnana_Bharati_1/VB_08_07.pdf

[7] Date of Pingala (The Origin of Binary Computation in India) by K.V. Ramakrishna Rao

http://ignca.nic.in/vedic_heritage/Vijnana_Bharati_1/VB_08_09.pdf

 

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அகோபில, அகோபிலம், அல்லகட்ட, அஹோபிலம், ஆகாயம், காகதிய, குகை, குரோட, குரோத, சத்ரவட, சிங்கம், செப்பனிடுதல், ஜீயர், ஜுவாலா, தசாவதாரம், தோற்றம், நரசிம்மர், நரசிம்ஹர், படைப்பு, பன்றி, பரிணாமம், பாவன, முதுகெலும்பு, வராகம், வராஹம், வளர்ச்சி, விஜயநகர, விஜயநகர அரசு, விஜயநகர பேரரசு, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s