ஒன்பது நரசிம்மர்கள் – எப்படி செல்வது, விவரங்கள், தரிசனம் – முதலில் உக்கிர / யகுவ / அஹோபில நரசிம்மர் (8)

ஒன்பது நரசிம்மர்கள்எப்படி செல்வது, விவரங்கள், தரிசனம்முதலில் உக்கிர / யகுவ / அஹோபில நரசிம்மர் (8)

location-of-nine-narasimhas-p-sitapati

ஒன்பது நரசிம்மர்களை தரிசிப்பது எப்படி?: ஒன்பது நரசிம்மர்களையும் ஒரே நாளில் தரிசிக்க வேண்டுமானால், முதலில் காலையில், மலை மீதிருக்கும் மூன்று நரசிம்மர்களை தரிசித்து, பிறகு கீழே இருக்கும் மற்ற நரசிம்மர்களை தரிசித்து விட்டுச் செல்லலாம். மேலே சென்று வர வயது, உடல் வாகு, அமைப்பு, அசௌகரியம் முதலிய காரணிகளால் சுமார் 4 முதல் 7 மணி நேரம் ஆகும். படியேற முடியாதவர்கள் டோலி மூலம் தான் செல்ல முடியும். முதலில் மலைமீதிருக்கின்ற மூன்று நரசிம்மர், பிரகலாதன் படி / பள்ளி, தீர்த்தங்கள், உக்கிர ஸ்தம்பம் முதலியவற்றைப் பார்த்து, இரவில் தங்கி, ஓய்வு எடுத்துக் கொண்டு, அடுத்த நாளில் தரிசித்து விட்டு, ஊருக்கு திரும்பச் செல்லலாம்.

location-of-narasimha-temples-on-the-hill

முன்னர் குறிப்பிட்ட ஒன்பது நரசிம்மர்களில், கீழ்கண்ட மூன்றை இங்கு தரிசிக்கலாம்:

எண் நரசிம்மர் தன்மை நரசிம்மர் பெயர்
1 அஹோபில அஹோபில  நரசிம்மர்
2 மலோல மாலோல  நரசிம்மர்
3 ஜுவாலா ஜ்வாலா  நரசிம்மர்

upper-ahobilam-important-locations

கீழே வண்டிகள் நிற்பது, அன்னதான சத்திரங்கள், யுத்யாக பண்டபம், அஹோபிலம் கோவில் முதலியவற்றைக் காணலாம் (நன்றி – கூகுள்)

durudu-mantap-on-lhs-side-of-the-bridge-road

கீழேயுள்ள துருடு மண்டபம்.

vaisaya-annadhana-satram-and-another-one-rhs

அஹோபிலம் செல்லும் வழி – இடது பக்கத்தில் வைசிய அன்னதான சத்திரம்.

beggars-sitting-opposite-to-bairava-kundam

பைரவ குண்டத்திற்கு எதிராக பிச்சைக்காரர்கள் உட்கார்ந்திருப்பது.

udhyoga-mantap-view-above

மேலேயுள்ள யுத்யோக மண்டபத்தின் தோற்றம்.

brahmana-annadhana-satram-devotees-waiting

ஶ்ரீ பிராமண அன்னதான சத்திரத்தில் காத்திருக்கும் பக்தர்கள்.

கீழ்-அஹோபிலம், மேல்-அஹோபிலம் என்று குறிப்பிட்டு, மேல்-அஹோபிலத்தில் உள்ள வண்டி / பேருந்து இந்த மலையடிவாரம் வரை செல்கிறது. இடது புறம், பள்ளத்தாக்கு உள்ளது. கீழே இடது புறத்தில் ஒரு மண்டபம் (துருடு) உள்ளது. மேலே பார்க்கும் போது, அங்கேயும் ஒரு மண்டபம் (யுத்யோக) இருப்பதை காணலாம். மேலே செல்லும் போது, இடது பக்கத்தில் முதலில் “ஆரிய வைசிய நித்திய அன்னதான சத்திரம்” என்றுள்ளது. அதை கடந்து சென்றால், இடது பக்கத்தில் “பைரவ குண்டம்” உள்ளது. மேலே இருந்து அருவியாக கொட்டும் நீர், இந்த குளத்தை வந்தடைகிறது. 20 x 25.5 சதுர மீ அளவில் இக்குளம் உள்ளது. இதற்கு எதிரில் 24 x 2.4 சதுர மீ அளவில் நீள்மான ம்ண்டபம் உள்ளது.  இப்பொழுது, பைரவ குண்டத்தில் கழிவு நீர், குப்பைகள் கொட்டி சீரழிக்கப்பட்டுள்ளது. வலது பக்கத்தில் “டோலிக்காரர்கள்” இருக்கிறார்கள். மேலே நடந்து செல்ல முடியாதவர்கள் டோலி மூலம் செல்லலாம். இருவருக்கு ரூ 3,000/- வசூலிக்கப்படுகிறது[1]. இதைத்தாண்டி சென்றால், படிகட்டுகள் காணப்படுகின்றன. அவ்வழியில், வலது பக்கத்தில் சுமார் 30-40 பிச்சைக்காரர்கள் வரிசையாக உட்கார்ந்துள்ளனர். படிகளை ஏறியவுடன் இடது பக்கத்தில், “ஶ்ரீ பிராமண நித்திய அன்னதான சத்திரம்” உள்ளது. மலையேறி வரும் பக்தர்களுக்கு, இந்த இரு சத்திரங்களிலும், இலவசமாக “அன்னதானம்” / சாப்பாடு போடப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் நன்கொடை கொடுக்கலாம். அன்னதான சத்திரங்களில் சாப்பிட விரும்புவோர்கள், செல்லும் போதே, சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கையைச் சொல்லி விட்டு செல்லவேண்டும்.

upper-ahobilam-prahalada-padi-school-distant-view

https://kovils.wordpress.com/category/narasimha-kshetram-ahobilam-prahaladha-mettu-padi-school/

நன்றியுடன் – இத்தளத்திலிருந்து, இப்புகைப்படம்  எடுத்தாளப் பட்டுள்ளது.

பிரகலாதன் படித்த பள்ளிக் கூடம்: தவிர “பிரகலாத படி” (పడి, padi ) அல்லது “பிரகலாத மெட்டு (మెట్టు, Mettu) / மலைமுகடு”, அதாவது பிரகலாதன் படித்த பள்ளிக்கூடம் / இடம் என்றாகிறது. உண்மையில் பள்ளி இருந்திருந்தால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனதால் மறைந்திருக்கலாம். இல்லை, “இடம்” என்று பொருள் கொண்டால், இங்கு வந்து சில பயிற்சிகளை செய்து சாதனை பெற்றான் என்றும் கொள்ளலாம். இதனால், தந்திர உபாசனையாளர்களும் இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்து உபாசனை, கிரியைகள் செய்திருக்கலாம். உக்கிர நரசிம்மர் கோவிலுக்கு எதிரில் உள்ளது. ஆனால், மலோல நரசிம்மரை தரிசித்து விட்டு, அங்கிருந்து மலைப்பாதையில் செல்ல வேண்டும். காட்டில் ஒற்றையடி பாதை போன்ற பாதையில் தான் செல்ல வேண்டும். சுமார் ஒரு கி,மீ கடந்து சென்றால், அங்கு சமமான பாறைப்பகுதி காணப்படுகிறது. அங்குதான், பிரகலாதன் படித்தான் / சாதனை செய்தான் எனப்படுகிறது.

upper-ahobilam-prahalada-padi-school

துருடு மண்டபம்: யகுவ / மேல் நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் பாதை “சோபன மார்க்கம்” எனப்படுகிறது.  இப்பொழுது, பாலம் போன்று உயரப்படுத்தி, சாலை அமைக்கப்பட்டுள்ளதால், இது சாலைக்கு இடப்புறத்தில், கீழே பாவநாசினி நதிக்கரையில், மலையடிவாரத்தில் காணப்படுகிறது. இது 12-தூண்கள் கொண்ட மண்டபம். இதிலும் ஒரு கல்வெட்டு உள்ளது.

அஹோபிலம் கோவிலுக்கு எதிராக உள்ள யுத்யோக மண்டபம்: யகுவ / மேல் நரசிம்மர் கோவில், பைரவ குண்டத்தைத் தாண்டி, படிக்கள் ஏறி “ஶ்ரீ பிராமண நித்திய அன்னதான சத்திரம்” கடந்து, இடது பக்கம் திரும்பவேண்டும். மறுபடியும் படிகளில் ஏறினால், சமதள இடம் வரும். அதில் இடது பக்கத்தில் ஒரு சிறிய மண்டபம் இருக்கும். 16-தூண்கள் கொண்ட இம்மண்டபம் “யுத்யோக மண்டபம்” என்றழைக்கப் படுகிறது. உள்ளே நான்கு தூண் கொண்ட சிறிய மண்டம் உள்ளது. இதில் உள்ள கல்வெட்டு, இதன் காலத்தை 1553ம் ஆணைக் குறிக்கிறது.

upper-ahobilam-temple-entranc-in-1978

1978ல் புதுப்பித்தபோது, ராஜ கோபுரத்தின் தோற்றம் (சீதாபதி புத்தகத்திலிருந்து).

upper-ahobilam-temple-entrance

பிறகு, முன்னால் “செட்”, கடைகள் இல்லாதபோது.

upper-ahobilam-temple-entranc-with-shed

முன்னால் “செட்” வந்து விட்டது.

ராஜகோபுரம் ஜூன் 30, 1978 அன்று புதிப்பித்து கட்டி முடிக்கப்பட்டது: வலது புறத்தில், அஹோபில நரசிம்மர் கோவில் உள்ளது. முதலில், இது இயற்கையாக ஒரு குகை வழிபாட்டு ஸ்தலமாக இருந்து வந்தது, பிறகு, படிப்படியாக, கர்ப்ப கிருகம், மண்டபங்கள், பலி பீடம், கொடிக் கம்பம் என கட்டப்பட்டு, கோவில் மாதிரி ஆகியுள்ளது.  ராஜகோபுரம் ஜூன் 30, 1978 அன்று புதிப்பித்து கட்டி முடிக்கப்பட்டது. உள்ளே நுழைந்ததும், இடது பக்க மூலையில் “கத்வல்” என்ற 16-கால்/தூண் மண்டப உள்ளது. வலது பக்கத்தில் இரு சிறிய சந்நிதிகள் இருக்கின்றன. தாண்டி சென்றால், “மஹா மண்டபம் உள்ளது”, இது பல தூண்கள் கொண்ட பண்டபம் ஆகும். அதைத்தாண்டி உள்ளே சென்றால், “வராஹ மண்டபம்” என்ற 16-தூண் மண்டபம் உள்ளது. அதற்கு இடது பக்கத்தில் / எதிரில் பலிபீடமும், கொடிக்கம்பமும் இருக்கின்றன. அவற்றைத் தாண்டிச் சென்றால், இடது பக்கத்தில் ஒரு மண்டமும், ஆழ்வார் சந்நிதியும், வலது பக்கத்தில் மூலையில் 4 x 7 தூண்கள் கொண்ட பெரிய “பாகசால” மண்டமும் இருக்கிறது. இடையில் வெளியே செல்ல கதவு உள்ளது. வராஹ மண்டபத்திற்கு வலது பக்கத்தில், “உய்யால மண்டபம்” உள்ளது அதற்கு எதிரில் கல்யாண மண்டபம் உள்ளது. மஹா மண்டபத்திற்கு எதிரில் குகை உள்ளது. பாக மண்டபத்திலிருந்து, கல்யாண மன்அபம் வரை 21 x 2 தூண்கள் கொண்ட “சார மண்டபம்” உள்ளது.

upper-ahobilam-temple-entranc-uggira-narasimha-vigram

குகை நரசிம்மர் கோவில்: நரசிம்மர் கோவிலிருந்து தான், “நவநரசிம்மர் தீர்த்த யாத்திரை தரிசனம்” ஆரம்பிக்கிறது. இது ஒரு 8’ x 7’ அகலம்-நீளம் மற்றும் 3.5’ உயரம் உள்ள குகையில் இருக்கும் விக்கிரகம் ஆகும். விக்கிரமும் “சுயம்பு” என்று சொல்லப்படுகிறது. கருடாழ்வார், நரசிம்மரை இங்குதான் உக்கிர உருவத்தில் பார்த்து தரிசித்தார். அதாவது, இங்குதான் அவ்வுருவத்தில் தோன்றினார். ஆகையால், “உக்கிர நரசிம்மர்” என்றும் அழைக்கப்படுகிறார். ஆரம்பகாலத்தில், இங்கிருக்கும் செஞ்சு வனவாசிகள் இயற்கையாக முகையில் இருக்கும் விக்கிரகத்தை வழிபட்டு வந்தனர். இப்பொழுது, அதை கர்ப்பகிருகமாக வைத்து, கோவிலைக் கட்டியுள்ளனர். பக்கத்தில், செஞ்சம்மா, செஞ்சுதேவி, செஞ்சு லக்ஷ்மி என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற தெய்வத்தின் கோவில் உள்ளது. இந்த விக்கிரகத்தின் அமைப்பை வைத்து, இது 11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது[2]. இங்கு, பாரம்பரிய முறையில் பக்தர்கள் வந்து ஆடு, கோழி முதலியவற்றை பலிகொடுத்து செல்கின்றனர். நரசிம்மர் மற்றும் செஞ்சுலக்ஷ்மி சந்நிதிகளுக்க்கு இடையில், சுமார் ஆறு அடிகள் உயரத்தில், “சுதர்ஷண யந்திரம்” ஸ்தாபித்திருப்பதை, பொருத்தியிருப்பதைக் காணலாம். பொதுவாக ஒரு உக்கிர விக்கிரகம் இருந்தால், அதன் உக்கிரகத்தைக் குறைக்க எதிரில் இன்னொரு உக்கிர விக்கிரகத்தை வைப்பார்கள். இங்கு, இரண்டு உக்கிர விக்கிரகங்களின் இடையே, ஒரு உக்கிர விக்கிரகத்தை / சக்கரத்தை வைத்துள்ளார்கள்.

© வேதபிரகாஷ்

24-02-2017

upper-ahobilam-uggira-narasimha

உக்கிர நரசிம்மர் விக்கிரகம்.

upper-ahobilam-other-idls-in-the-cave-2

குகையில் இருக்கும் மற்ற விக்கிரகங்கள் (சீதாபதி புத்தகத்திலிருந்து)

[1]  முன்னர் ரூ.2,000/- வசூலித்தார்கள், இப்பொழுது, ரூ.3,000/- ஆக உயர்த்தி விட்டார்கள். முன்பு, கொம்பில் துணியைக் கட்டி, ஊஞ்சல் போல, உட்கார வைத்து, இரண்டு பேர் தூக்கிச் சென்றார்கள். இப்பொழுது, பிரம்பு நாற்காலியில் உட்கார வைத்து, நான்கு பேர் தூக்கிச் செல்கின்றனர்.

[2] Pidatala Sitapati, Sri Ahobila Narasimha Swamy Temple, The Director of Archaeology and Museums, Andhra Pradesh, 1982, p.21.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அகோபில, அகோபிலம், அன்னதானம், அழிப்பு, ஆக்கிரமிப்பு, ஆலயம், கரஞ்ச, குகை, குன்று, குரோத, குலி குதுப் ஷா, குளப் படிக்கட்டுகள், குளம், குளம் அமைப்பு, கொடி கம்பம், சத்திரம், சத்ரவட, பாவன, பிரதாப ருத்ரன், மலையேறுதல், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s