அஹோபிலம் கோவில் எப்படி இப்பொழுதைய வடிவத்தைப் பெற்றது? 700 வருடங்களாக நடந்தவை என்ன? (6)

அஹோபிலம் கோவில் எப்படி இப்பொழுதைய வடிவத்தைப் பெற்றது? 700 வருடங்களாக நடந்தவை என்ன? (6)

garuda-sthamba-757

முகமதியரை வென்றதற்கான நிற்வப்பட்ட “வெற்றித் தூண்”.

சரித்திரத்தை மறைக்கும் இக்காலத்தவர்: அஹோபிலத்திற்கு வருகிறார்கள், செல்கிறார்கள், கீழேயுள்ள கோவிலைக் கண்டு களித்து, நரசிம்மரை சேவித்துச் செல்கிறார்கள். ஆனால், அக்கோவில் கடந்த 700 ஆண்டுகளாக இப்படியே இருந்தது என்று வந்து பார்ப்பவர்கள் நினைக்கலாம். ஆனால், சுமார் 150 வருடங்களுக்கு, அக்கோவில் எப்படி இருந்தது என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். துரதிருஷ்டமாக, அவ்விவரங்களை யாரும் சொல்லாததும் அதிர்ச்சியாகவும், வியப்பாகவும் மற்றும் துக்கமாகவும் இருக்கிறது. ஏனெனில், நமது சரித்திர உண்மைகளை நாமே மறைத்து, வரும் சந்ததியர்களுக்கு புராணம் போன்ற கதைகளை சொல்லி ஏமாற்றி வருகிறோம் எனலாம். ஜீயர் இணைதளம் என்று இரண்டு-மூன்று இயக்கப்பட்டு வந்தாலும், அவர்களும், கோவிலின் சரித்திரத்தை சொல்லாமல், புராணகதைளையே சொல்லி வருகின்றனர்.

751

இடிந்த நிலையில் கோபுர வாசல்.

பிரதாப ருத்ரன் காலத்திலிருந்து, ஶ்ரீகிருஷ்ணதேவராயர் காலம் வரை கோவில் நன்றாக இருந்தது: பிரதருத்ர சிம்மன் (1289-1323 CE) தங்கத்தினால் செய்யப்பட்ட விக்கிரகத்தை ஜீயருக்குக் கொடுத்தார். அதை இன்று வரை வைத்து வழிபட்டு வருகிறார். இங்குள்ள அஹோபில மடம் 620 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிவண் சடகோபன் சுவாமி (1379-1398 CE) என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது[1]. இதுவே தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடமாகும். இந்த மடத்தின் முதல் ஜீயரான இவருக்கு ‘அழகிய சிங்கர்’ என்ற பட்டம் உண்டு. சடகோப யதி என்கின்ற அஹோபில மடத்து ஜீயரின் சீடர் அல்லசானி பெத்தண்ணா (15th-16th cent.CE), கிருஷ்ணதேவராயர் (1509-1529 CE) அவையில் முக்கியமானர். கிருஷ்ணதேவராயர், கலிங்கத்தை வெற்றிக்கொள்ள சென்றபோது, இங்கு வந்திருந்தபோது, நரசிம்மருக்கு நகைகளை கொடுத்தார்.1515 தேதியிட்ட கல்வெட்டு கிருஷ்ணதேவராயர், இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு அஹோபலேஸ்வரருக்கு கழுத்தணிகள் மற்றும் தங்கநகைகளை கொடுத்து அர்பணித்தார்.

ahobilam-gopuram-entrance-lhs-lower-base-portion

கோபுர வாயிலின் இன்னொரு தோற்றம்.

அஹோபிலத்தின் மீதான முகமதியர்களின் தாக்குதல் [1576-78]: சதாசிவராயரின் கல்வெட்டு 1584ல் கானகிரி என்ற பெனுகொன்டாவிலிருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தபோது, விபூரம்வாரு / மல்காபிரம் எனப்படுகின்ற இப்ராஹிம் குதுப் ஷா அஹோபிலத்தை 1576-78 ஆண்டுகளில் சூரையாடியதை குறிப்பிடுகிறது. 1576ல் பீஜப்பூர் சுல்தான், அலி அடில் ஷா – I [Ali Adil Sha-I (1558-1579 CE) பெனுகொண்டா கோட்டையை மூன்று மாதங்களுக்கு முற்றுகையிட்டான். ஆனால், அடில் ஷாவின் இந்து ராணுவ வீரர்களின் உதவியால் சுல்தான் படையை ஶ்ரீரங்கதேவர் வெற்றிக் கொண்டார். இருப்பினும், சுல்தானின் படை முராரி ராவ் (மராத்திய பிராமணன்), தலைமையில் ஒரு முஸ்லிம் படை கிருஷ்ணா நதி தெற்குப் புறத்தில் தாக்க ஆரமித்தது. அஹோபிலம் கோவிலை கொள்ளையடித்தது. வைரம் பொதித்த விஷ்ணு விக்கிரகத்தை பெயர்த்தெடுத்து சுல்தானுக்கு அனுப்பி வைத்தான். 1578ல் இப்ராஹிம் குலி ஷா [Ibrahim Quli Qutub Shah 1518-1580 CE] என்பவனால் இக்கோவில் சூரையாடப்பட்டது. அப்பொழுது நரசிம்மரின் விக்கிரகத்தை அவனுக்கு காட்டியபோது, ரத்தம் கக்கி இறந்தானாம். அவன் மர்மமாக இறந்ததை, கோவிலை சூரையாடியதால் தான் அப்படி இறந்தான் என்று பாரம்பரிய கதைகள் கூறுகின்றன. சடகோபஸ்வாமி என்பவர் ஶ்ரீரங்கராயரிடம் சென்று, முஸ்லிகளிடமிருந்து, அக்கோவிலை மீட்டுத்தருமாறு வேண்டிக் கொள்கிறார்[2]. ஶ்ரீ கொட ராஜு வெங்கட ராஜு, ஶ்ரீ திருமல ராஜு, தெலுகு சோட தளபதிகள் முதலியோர் ராயரின் ஆணைப்படியும், அஹோபில மடாதிபதியின் வேண்டுகோளின் படியும், படைகளுடன் சென்று, முஸ்லிம்களுடன் போரிட்டு, அவர்களை விரட்டி, கோவிலை மீட்டனர். தென்னிந்திய கல்வெட்டு சாசனங்கள் 296 மற்றும் 299 இவ்விவரங்களைக் கொடுக்கின்றன[3].

ahobilam-temple-entrance-lhs

கோபுர வாயிலின், இடது பக்கம்- கீழ்புறம்.

ahobilam-gopuram-entrance-lhs-upper-portion

கோபுர வாயிலின், இடது பக்கம்- மேல்புறம்.

1850களில் அஹோபிலம் கோவில் இடிபாடுகளுடன், இடிக்கப்பட்ட நிலையில் இருந்தது: ஆங்கிலேய, இங்கிலாந்து அருங்காட்சியகம், அஹோபில கோவிலின், பழைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. அவற்றைப் பார்த்தால், அக்கோவில் என்ன நிலையில் இருந்தது என்பதனை அறிந்து கொள்ளலாம். “ஆசிய-ஆப்பிரிக்க சேகரிப்பு” என்ற பிரிவில், இணைதளம் வாயிலாக, 18 புகைப்படங்களை காணலாம், நகல் எடுத்துக் கொள்ளலாம், பதிவிரக்கம் செய்து கொள்ளலாம். இன்னும், எத்தனை புகைப்படங்கள் உள்ளன, இருந்தன என்பன நமக்குத் தெரியவில்லை. ஸ்தலபுராணம் என்றும், பக்தி ரீதியில் புத்தகங்களை எழுதுபவர்களும், இவ்விசயங்களைச் சொல்வதில்லை.

ahobilam-gopuram-entrance-lhs-lower-base-portion

கோபுர வாயிலின்,  வலது பக்கம்- கீழ்புறம்.

ahobilam-gopuram-entrance-rhs-upper-portion

கோபுர வாயிலின்,  வலது பக்கம்- மேல்புறம்.

மறக்கப்பட்ட அஹோபிலத்தின் சரித்திரம்: கோவிலுன் முன்னுள்ள கருடஸ்தம்பம் (757) அலங்கோலத்தில் காட்சியளிக்கிறது[4]. உண்மையில், இது “ரங்கராயலு சேனை முகமதியரை வெற்றி கொண்டதன் அடையாளமாக நிறுவப்பட்டது” என்ற கல்வெட்டோடு, பீடத்தின் மீது, நிறுவப்பட்ட “வெற்றி-ஸ்தம்பம்”, வெற்றி-தூண் ஆகும். டி. ராமசாமி ஐய்யங்கார், “மறக்கப்பட்ட அஹோபிலத்தின் சரித்திரம்” என்ற புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார்[5]. 1916ல் அவர் அத்தலைப்பைக் கொடுத்திருக்கிறார். ஆனால், 2017லும் அதே நிலைதான் உள்ளது. ஆமாம், சரித்திரம் மறக்கப்படுவதுடன், மறைக்கப்படுகிறது. இப்புத்தகத்தை யாரும், மறு பதிப்பு செய்யாமல் இருப்பதும், வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

ahobilam-gopuram-entrance-old-photo-2

ahobilam-gopuram-entrance-inside-lhs

ahobilam-gopuram-entrance-old-photo-close-view-inside

1850களில் கோபுரம் இவ்வாறு இருப்பது ஏன்?: கோவில் கோபுரத்தின் முன்பக்கத்தின் தோற்றத்தைக் காட்டும் புகைப்படங்களிலிருந்து (755[6], 756, 760), அதன் மீது கோபுரம் இல்லாததை அறிந்து கொள்ளலாம். மொட்டை கோபுரத்தின் மீது செடி-கொடிகள் வளர்ந்துள்ளன. கீழும், சுற்றிலும் அதே போல செடி-கொடிகள் வளர்ந்து, புதர்கள் காணப்படுகின்றன. ஒரு புகைப்படம், (748), வாயிலில் இடது பக்கத்தில் ஒரு பெண் வளைந்து தனது சிகையைப் பிடித்திருக்கும் போன்ற சிற்பத்தைக் காட்டுகிறது. இன்னொரு புகைப்படம் (754) மேற்புறத்தின் தோற்றத்தைக் காட்டுகிறது.

முன்புறம் – இடது பக்கம் (750)

முன்புறம் – வலது பக்கம் (766)

உள்ளேயிருந்து, கோபுரத்தைப் பார்க்கும் நிலையும் அவ்வாறே இருக்கிறது (751, 760). கோபுரத்தின் பின்புறத் தோற்றத்தில், இடது, வலது (695) பக்கங்களையும் புகைப்படங்கள் காட்டுகின்றன. இதே நிலையில் தான், ஜீயர் தினமும் வந்து சென்று வழிபட்டாரா, பக்தர்களும் அவ்வாறே வந்து சென்று கொண்டிருந்தனரா? யாரும், ஏன் கோவில் இப்படி இடிந்த நிலையில் இருக்கிறது என்று கேட்கவில்லையா?

ranga-mandapam-in-destroyed-condition-sculptured-pillar

ranga-mandapam-in-destroyed-condition

ஶ்ரீ கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட ரங்க மண்டபம்: ரங்க மண்டபம் என்ற ஶ்ரீ கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்ட மண்டபம், கூரையில்லாமல், தூண்கள் மட்டும் தனியாக நிற்கும் கோலத்தைக் காட்டுகிறது (499, 692). கிருஷ்ணதேவராயரின் மகன் இருக்கும் தூணும் அவ்வாறே உள்ளது (747). அந்த பகுதிக்கு மட்டும் வெள்ளையடிக்கப்பட்டுள்ளதை காணலாம். கூரை இல்லை என்றால், ஏனில்லை என்று ஏன் யாரும் கேட்கவில்லை? தூண்களில் அத்தனை கலைநயத்துடன் சிற்பங்கள் உள்ளனவே, கூரை இல்லாமலா, கிருஷ்ணதேவராயர், மண்டபத்தைக் கட்டிவிட்டார்? தொலைவில் உள்ள கல்யாண மண்டபம் என்று ஒரு புகைப்படம் காட்டுகிறது[7].

ranga-mandapam-in-destroyed-condition-son-of-krishna-devaraya

மண்டபங்கள் சுற்றி கட்டப்பட்ட புஷ்கரனிசன்னிதி கோனேறு: ஒரு மண்டபம் மற்றும் குளத்தின் புகைப்படம் (752), அது எந்த அளவில் சிதிலமடந்திருந்தது என்பதைக் காட்டுகிறது[8]. கீழ் அஹோபிலத்தில், “சன்னிதி கோனேறு – கீழ் அஹோபிலம்” என்ற தலைப்பில், டி.ராமசாமி ஐயங்கார், “இக்குளம், திருவல்லிக்கேணி குளம் மாதிரியில் படிகளுடன் கட்டப்பட்டது. புஷ்கரனியைச் சுற்றி வரிசையாக மண்டபங்கள் இருக்கின்றன……….இது நீரின்றி உலர்ந்தே காணப்படுகிறது…..நடுவில் ஒரு கிணறு தோண்டப்பட்டுள்ளது”, என்று 1916ல் குறிப்பிட்டுள்ளார். இந்த குளத்தைச் சுற்றியுள்ள மண்டபங்களைத்தான் 1916லிருந்து, கொஞ்சம்-கொஞ்சமாக, அஹோபிலத்தில் இருக்கும் மிலேச்சர்கள் (அதாவது, இந்து-விரோதிகள்) 2016 வரை இடித்துக் கொண்டிருக்கிறார்கள் போலும். அடில் ஷா, குலி குதுப் ஷா போல, இவர்களும் அதே போலத்தானே, மண்டபங்களை இடித்து வந்துள்ளார்கள். பிறகு, இரு கூட்டத்தார்களுக்கும், வேறுபாடு இல்லையே? சரித்திர மாநாடுகள் நடத்துகிறார்கள், சரித்திரம் என்று தொண்டை கிழிய கத்துகிறார்கள். ஆனால், இதைப் பற்றி, எந்த சரித்திராசிரியனும், மாணவனும், கண்டு கொள்ளவில்லையே?

malola-ahobilam-mandapa-old-photo

50-way-to-upper-ahobila-temple-sketch

உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும், சரித்திரத்தை எடுத்துக் காட்டத்தான் செட்ய்ய வேண்டும்: இப்புகைப்படங்களும், சிறிது நாட்களில் மறைந்து விடலாம். பிறகு, இவற்றைப் பற்றியெல்லாம் பேசுவதற்கும், சொல்வதற்கும், எழுதுவதற்கும் கூட, யாரும் இருக்க மாட்டான். சொன்னாலும், ஆதாரம் எங்கே என்று கேட்பான். நீ மதவாதி, ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்தவன், வகுப்புவாதி என்றெல்லாம் கூட பட்டங்கட்டி, வாயை அடைத்து விடுவார்கள். உள்ளவற்றையும் அழிக்கப் பார்ப்பார்கள். ஏனெனில், எதிர்காலத்தில், இப்படியெல்லாம், யாரும் சொல்ல மாட்டார்கள், எழுத மாட்டார்கள். ஆனால், முடிந்த வரையில் நாம் உண்மையினை சொல்லித்தான் ஆகவேண்டும். சரித்திர உண்மையினை எடுத்துக் காட்டத்தான் வேண்டும்.

© வேதபிரகாஷ்

19-02-2017

755

[1] தமிழ்.இந்து, வைணவம் போற்றும் ஆச்சாரியன், என். ராஜேஸ்வரி, Published: June 18, 2015 12:02 ISTUpdated: June 18, 2015 12:02 IST

[2] Henry Heras, The Aravedu Dynasty of Vijayanagara, p.272, 279.

[3] Nos. 296 and 299 from Ahobilam, Kurnool district, record the part played by the Telugu-Choda chief Kondraju-Venkatraju Tirumalaraju in freeing the country from Muslim occupation and restoring Ahobilam to its former glory.  No. 296, dated Saka 1506 (1584 A.D.) states that on the representation of Van Sathagopa-Jiyyar, the pontiff of Ahobilam to the king to free the country from the Muslim occupation and restore Ahobilam to its original glory, the king himself volunteered to undertake the task of which the pontiff, dissuading the king from doing so, said that it was the wish of God of Ahobilam that Mahamandalesvara Kondraju Venkatraju Tirumalaju undertook the task and having successfully driven out the Muslims and the Hande chiefs who had joined them in pillaging the country and sacking Ahobilam, restored the holy place to its former State and received from the temple certain privileges to be enjoyed by him hereditarily.  The record is dated Saka 1506, Tarana corresponding to 1584 A.D. and places the Muslim occupation of the territory in the cyclic year Bahudhanya (1576 A.D.).  From the Annalas of Hande Anantapuram  it may be gathered that it was Malakappa-nayudu of the Hande family, son of Immadi Hampa-nayudu, who at the sight of success of the Muhammadans against his sovereign Srirangadeva deserted his king and joining the enemy sought their favours.  The latest date for Sriranga is found in a record from Maluru dated in Saka 1507, Parthiva.

[4] Photograph of the Garudastambha at the Narasimha Temple, Ahobilam in Andhra Pradesh, taken by an unknown photographer in c.1870, from the Archaeological Survey of India Collections. Ahobilam is an important Vaishnava pilgrimage site and the principal place of worship of Narasimha, the lion-man incarnation of Vishnu. The temple complex is divided between upper and lower Ahobilam, built in the late 15th and 16th centuries under the Vijayanagara rulers. The complex consists of nine shrines dedicated to the nine different forms of Narasimha. The entrance gopura is carved with scenes from the Ramayana.

[5] The Garudastambha, or pillar, in this view has carvings and inscriptions. D.Ramaswamy Ayyangar in, ‘A descriptive history of the forgotten shrines of Ahobilam’, Walajabad, 1916, wrote, ‘Entering the main gate of the temple, the first thing that strikes our eye is the “Tower of Victory”. This is a magnificent tall column of sandstone cut out of one stone and ornamented by architectural carvings on it. It stands on a platform on the southern side of the entrance and the side of the platform contain inscriptions detailing the event this column has been erected to commemorate; viz., the victory of Rangaryalus army over the Muhammadans.’

http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocoll/g/019pho001000s27u02683000.html

[6] http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocoll/e/019pho001000s27u02681000.html

[7] The mandapa or hall in this view was initiated by the Reddi rulers in the 14th century. The granite piers have clusters of colonnettes with carvings of divinities and rearing animals with riders.

http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocoll/d/019pho001000s27u02685000.html

[8] Photograph of a mandapa at the Narasimha Temple at Ahobilam in Andhra Pradesh, taken by an unknown photographer in the 1870s, from the Archaeological Survey of India Collections. This is a view of a detached, open-sided mandapa, with a stepped tank in the foreground. This appears to be the tank illustrated in D.Ramaswamy Ayyangar, ‘A descriptive history of the forgotten shrines of Ahobilam’ (Walajabad, 1916,), p.16, and entitled ‘Sannidhi Koneru – Lower Ahobilam.’ Here he wrote, ‘This is a big pushkarini constructed on the plan of the Triplicane tank with steps all round. All round the tank you have a chain of mantapams…The tank is always dry. A deep well is dug within the tank…The construction of this tank is ascribed to Krishnadevaraya.’

http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocoll/r/019pho001000s27u02679000.html

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அகோபில, அகோபிலம், அத்துமீறல், அல்லகட்ட, அழிப்பு, ஆக்கிரமிப்பு, கடபா, கருடன், கல்யாண மண்டபம், கல்வெட்டு, காகதிய, காபாலிகன், கிருஷ்ண தேவராயர், குலி குதுப் ஷா, குளம், சத்ரவட, ஜீயர், ஜுவாலா, பார்கவ, பாவன, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s