அஹோபிலம் – சின்ன அஹோபிலம் கோவில், ஜீயர் மடம், முகமதிய தாக்குதல் முதலியன (3)

அஹோபிலம் – சின்ன அஹோபிலம் கோவில், ஜீயர் மடம், முகமதிய தாக்குதல் முதலியன (3)

garudastambha-at-the-narasimha-temple-ahobilam-old-photo

கருட ஸ்தம்பம் – பழைய புகைப்படம்.

பிரஹலாதேஸ்வரர் கோவில் / சின்ன அஹோபிலம் கோவில்: 1515 தேதியிட்ட கல்வெட்டு கிருஷ்ணதேவராயர், இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு அஹோபலேஸ்வரருக்கு கழுத்தணிகள் மற்றும் தங்கநகைகளை கொடுத்து அர்பணித்தாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது மேலேயுள்ள கோவிலைக் குறிப்பதாக சீதாபதி எடுத்துக் காட்டுகிறார்[1]. allasani-peddanna-krishna-devarayaஇதனால், 1515லேயே அங்கு ஒரு கோவில் இருந்திருக்க வேண்டும் என்கிறது. கீழேயுள்ள இந்த அஹோபிலக் கோவிலில் காணப்படும் மற்ற கல்வெட்டுகளிலிருந்து, அக்கோவில் 1532ல் கட்டப்பட்டது என்று தெரிகிறது[2]. 1576 மற்றும் 1578 காலங்களில் இக்கோவில் முஸ்லிம்களால் சூரையாடப்பட்டு, அழிக்கப்பட்டது என்பதால், மறுபடியும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது என்றாகிறது. எனவே, மேல்-சின்ன-எகுவ அஹோபிலம் மற்றும் கீழ்-பெரிய-திகுவ அஹோபிலம் என்று இரண்டாகப் பிரிக்கப் பட்டு வழங்கப்பட்டுள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை மலை-காடுகளில் உள்ள நரசிம்மர்களை தரிசிக்க கடினமாக இருந்த நிலையில், ஜீயர்கள் கீழே தங்க மடம் ஏற்படுத்தியபோது, அவர்களுக்கு மற்றும் பக்தர்களுக்கு வசதியாக, கீழே கோவிலை கட்டியிருக்கலாம். அதனால் தான், “நவநரசிம்மர் கோவில்களில்” இது சேர்க்கப்படவில்லை. மேலே செஞ்சுகள், மற்றவர்கள் பலி கொடுத்து பூஜை செய்யும் நாட்களில் / நேரங்களில் அங்கு செல்லாமல் தவிர்க்கவும் இக்கோவில் இடைக்காலத்தில் கட்டியிருக்கலாம். இப்பொழுது, யோகானந்த நரசிம்மர் வளாகத்தில் “நவநரசிம்மர்” ஆலயம் ஒன்று, “நவகிரகங்கள்” ரீதியில் கட்டியிருப்பதை காணலாம்.

athivan-sadagopan-fiest-jeeyar-1378-1398

வைணவ மடம் ஸ்தாபிக்கப்பட்டது: இங்குள்ள அஹோபில மடம் 620 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிவண் சடகோபன் சுவாமி (1379-1398 CE) என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது[3]. இதுவே தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடமாகும். இந்த மடத்தின் முதல் ஜீயரான இவருக்கு ‘அழகிய சிங்கர்’ என்ற பட்டம் உண்டு. சடகோப யதி என்கின்ற அஹோபில மடத்து ஜீயரின் சீடர் அல்லசானி பெத்தண்ணா (15th-16th cent.CE), கிருஷ்ணதேவராயர் (1509-1529 CE) அவையில் முக்கியமானர். கிருஷ்ணதேவராயர், கலிங்கத்தை வெற்றிக்கொள்ள சென்றபோது, இங்கு வந்திருந்தபோது, நரசிம்மருக்கு நகைகளை கொடுத்தார். மேல்கோட்டையில் கேசவாச்சார்யாருக்கு, ஸ்ரீநிவாசாசார் என்ற ஒரு குழந்தை பிறந்தது. இவர் காஞ்சியில் வேதம் கற்றுக்கொண்டிருந்த காலத்தில் இவரது கனவில் வந்த அஹோபிலம் நரசிம்மன், தன்னைத் தரிசிக்க அஹோபிலம் வருமாறு கூறினாராம். ஆழ்வார் பாசுரங்களிலேயே, `சென்று காண்டர்க்கு அரிய கோவில்’ என்று அஹோபிலத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள். மிகவும் சிரமப்பட்டே அந்தக் கோயிலை அடைய முடியும் என்பதே அதன் பொருள். துஷ்ட ஜந்துக்கள் நிறைந்த அக்காட்டிற்குச் சென்றார் ஸ்ரீநிவாசாசார்யார். அடர்ந்த காட்டில் வழி தெரியாத அவருக்குப் பாம்பு ஒன்று வழியைக் காட்டிக்கொண்டே முன்னால் சென்றதாம். பாபநாசினி என்ற தீர்த்தக்கரையைச் சென்றடைந்தவுடன் அந்தப் பாம்பு மறைந்துவிட்டது. பின்னர் இவர் அந்த தீர்த்தத்தில் ஸ்நானம் பண்ணிவிட்டு வெளியே வர, அந்த அடர் காட்டிலும் வயதான சந்நியாசி ஒருவர் அவர் முன் தோன்றி, அவருக்கு ப்ரேஷ மந்திரம் உபதேசம் செய்தார். உடனே அவர் மறைந்துவிட்டாராம். அவரே நரசிம்மப் பெருமாள் எனக் கண்டுகொண்டார் ஸ்ரீநிவாசாசார்யார். பின்னர் அங்குள்ள மாலோல நரசிம்மனைத் தரிசிக்கச் சென்றார்.

lower-ahobilam-temple-entrance

lower-ahobilam-temple-entrance-small-mantap-with-four-pillars

lower-ahobilam-temple-entrance-torana-vayil

lower-ahobilam-temple-entrance-anjaneya

pratapa-rudra-deva-patronized-ahobilam

Pratapa-rudra-deva-patronized-Ahobilam

தங்க நரசிம்ம விக்கிரகம்பிரதாப சிம்மன் ஜீயருக்குக் கொடுத்தது: அஹோபிலம் என்ற இத்தலத்தில் மலைகளின் மீது ஒன்பது ஸ்ரீநரசிம்மர்கள் எழுந்தருளி உள்ளார்கள். இதற்கும் ஒரு புராணக் கதை உள்ளது. பிரதாப சிம்மன் என்றொரு ராஜா. அவன் தினமும் தங்கத்தால் உமா மகேஸ்வர விக்கிரகம் செய்து அதனை உடனடியாக தானம் செய்த பின் மதிய உணவு உட்கொள்ளுவான். இப்படியாக ஒரு நாள் அதே அச்சில் தங்கத்தை உருக்கி ஊற்றி எடுத்தால் லஷ்மி நரசிம்மராக வருகிறது. ஒரு முறையல்ல மூன்று முறை இப்படியே வருகிறது. இந்த இடம் ஸ்ரீ நரசிம்ம தலம் என்பதை உணர்ந்துகொண்ட அம்மன்னன் அது முதல் தங்க நரசிம்ம விக்கிரகத்தைத் தானம் செய்துவந்தானாம். அப்படித் தானமாக வந்த தங்க நரசிம்ம விக்கிரகம் இன்றும் அஹோபில மடத்தில் பூஜையில் உள்ளது எனக் கடந்த ஆண்டு ‘தி இந்து’வுக்கு அளித்த நேர்காணலின்போது ஜீயர் தெரிவித்தார்[4]. நரசிம்ம விக்கிரகத்தை தானம் செய்து வந்தது என்பது, அவ்விக்கிரகம் முகமதியர்களால் அபகரிக்கப் பட்டது மற்றும் இவன் தொடர்ந்து அவர்களுக்கு கப்பம் கட்டி வந்ததைக் குறிப்பிடுகிறது என்று தெரிகிறது. இந்நிலையில் இவம் கப்பம் கட்டுவதை நிறுத்தியதால் தான், இவனது வாராங்கல் கோட்டை தாக்கி அழிக்கப்பட்டது, இவனும் கொல்லப்பட்டான் என்று சரித்திரமாகியுள்ளது.

ali-adil-sha-i-1558-1579-ce-attacked-ahobilam

ali-adil-sha-i-1558-1579-ce-attacked-ahobilam

அஹோபிலத்தின் மீதான முகமதியர்களின் தாக்குதல் [1576-78]: சதாசிவராயரின் கல்வெட்டு 1584ல் கானகிரி என்ற பெனுகொன்டாவிலிருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தபோது, விபூரம்வாரு / மல்காபிரம் எனப்படுகின்ற இப்ராஹிம் குதுப் ஷா அஹோபிலத்தை 1576-78 ஆண்டுகளில் சூரையாடியதை குறிப்பிடுகிறது. 1576ல் பீஜப்பூர் சுல்தான், அலி அடில் ஷா – I (Ali Adil Sha-I) பெனுகொண்டா கோட்டையை மூன்று மாதங்களுக்கு முற்றுகையிட்டான். ஆனால், அடில் ஷாவின் இந்து ராணுவ வீரர்களின் உதவியால் சுல்தான் படையை ஶ்ரீரங்கதேவர் வெற்றிக் கொண்டார். இருப்பினும், சுல்தானின் படை முராரி ராவ் (மராத்திய பிராமணன்), தலைமையில் ஒரு முஸ்லிம் படை கிருஷ்ணா நதி தெற்குப் புறத்தில் தாக்க ஆரமித்தது. அஹோபிலம் கோவிலை கொள்ளையடித்தது. வைரம் பொதித்த விஷ்ணு விக்கிரகத்தை பெயர்த்தெடுத்து சுல்தானுக்கு அனுப்பி வைத்தான்.

ibrahim-quli-qutub-shah-1518-1580-ce

ibrahim-quli-qutub-shah-1518-1580-ce

1578ல் இப்ராஹிம் குலி ஷா [Ibrahim Quli Qutub Shah 1518-1580 CE] என்பவனால் இக்கோவில் சூரையாடப்பட்டது. அப்பொழுது நரசிம்மரின் விக்கிரகத்தை அவனுக்கு காட்டியபோது, ரத்தம் கக்கி இறந்தானாம். அவன் மர்மமாக இறந்ததை, கோவிலை சூரையாடியதால் தான் அப்படி இறந்தான் என்று பாரம்பரிய கதைகள் கூறுகின்றன. சடகோபஸ்வாமி என்பவர் ஶ்ரீரங்கராயரிடம் சென்று, முஸ்லிகளிடமிருந்து, அக்கோவிலை மீட்டுத்தருமாறு வேண்டிக் கொள்கிறார்[5]. ஶ்ரீ கொட ராஜு வெங்கட ராஜு, ஶ்ரீ திருமல ராஜு, தெலுகு சோட தளபதிகள் முதலியோர் ராயரின் ஆணைப்படியும், அஹோபில மடாதிபதியின் வேண்டுகோளின் படியும், படைகளுடன் சென்று, முஸ்லிம்களுடன் போரிட்டு, அவர்களை விரட்டி, கோவிலை மீட்டனர். தென்னிந்திய கல்வெட்டு சாசனங்கள் 296 மற்றும் 299 இவ்விவரங்களைக் கொடுக்கின்றன[6].

temple-hundi-looters

temple-hundi-looters

உண்டி காணிக்கைகளையும் விடாத முகமதியர்கள்: இதைத்தவிர முன்வர் கான், மீரா சாஹப் மற்ற முகமதியர்களும் அடிக்கடி வந்து கொள்ளையடித்தனர் என்று கைபியத் கூறுகிறது. முன்வர்கான் மேல் மற்றும் கீழ் நரசிம்மர் கோவில்களின் உண்டிகளில் செல்லுத்தப்பட்ட காணிக்கைகளை வலுக்கட்டாயமாக அபகரித்து சென்றான் என்று விவரிக்கிறது. அதாவது, இக்காலத்தில் உண்டியை உடைத்து கொள்ளையடிப்பதற்கும், அப்பொழுது கொள்ளையடிப்பவர்களுக்கும் ஒன்று வித்தியாசம் இல்லை எனலாம். முகமதியர்கள், இந்துவிரோதிகளாக செயல்பட்டனர் என்றால், இக்காலத்தில், கடவுள்-நம்பிக்கை இல்லாதவர்கள், நாத்திகர்கள், இந்து-விரோதிகள், மாவோயிஸ்டுகள் போன்றவர்கள் அத்தகைய ஈனச்செயலில் ஈடுபட்டு வருகின்றனர். காலனல் மன்றோ ருத்ராவரம் கிராமத்திலிருந்து வரும் வருமானத்தில், 100 வராஹன்கள் அஹோபிலத்திற்கு கொடுக்க ஏற்பாடு செய்தான். 1810 வாக்கில் இக்கோவில் கவனிப்பாரன்றி இருந்தது. பூஜை செய்ய இரண்டு பிராமணர்கள் மற்றும் 10 குடிசைகளில் வாந்தவர்கள் தாம், கீழ்-நரசிம்மர் கோவிலைச் சுற்றி இருந்தார்கள். 1963ல் புனர்-நிர்மாணம் கமிட்டி ஏற்படுத்தப்பட்டு, ஜூன்.30, 1978ல் மஹா சம்ரோக்ஷனம் நடத்தப்பட்டது.

© வேதபிரகாஷ்

18-02-2017

ahobilam-attackers-and-protectors

ahobilam-attackers-and-protectors

[1] As mentioned earlier this temple does not for part of the Nava Narasimha Kshetra, but is actually tenth Lakshmi-Narasimha Swamy with a shrinewhich came up during the Vijayanagar period. When exactly the temple came up is not clear, but, there is an inscription of Krishnadevarayas dated 1438 Saka year corresponding to 21st December, 1515 CE on a slab set up at the entrance in the Narasimha Swamy temple (also known as the Prahaladesvarada temple at Chinna Ahobilam).

Pidatala Sitapati, Sri Ahobila Narasimha Swamy Temple, The Director of Archaeology and Museums, Andhra Pradesh, 1982, p.24

[2]  Pidatala Sitapati, Sri Ahobila Narasimha Swamy Temple, The Director of Archaeology and Museums, Andhra Pradesh, 1982, p.24

[3] தமிழ்.இந்து, வைணவம் போற்றும் ஆச்சாரியன், என். ராஜேஸ்வரிPublished: June 18, 2015 12:02 ISTUpdated: June 18, 2015 12:02 IST

[4]http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/article7329053.ece

[5] Henry Heras, The Aravedu Dynasty of Vijayanagara, p.272, 279.

[6] Nos. 296 and 299 from Ahobilam, Kurnool district, record the part played by the Telugu-Choda chief Kondraju-Venkatraju Tirumalaraju in freeing the country from Muslim occupation and restoring Ahobilam to its former glory.  No. 296, dated Saka 1506 (1584 A.D.) states that on the representation of Van Sathagopa-Jiyyar, the pontiff of Ahobilam to the king to free the country from the Muslim occupation and restore Ahobilam to its original glory, the king himself volunteered to undertake the task of which the pontiff, dissuading the king from doing so, said that it was the wish of God of Ahobilam that Mahamandalesvara Kondraju Venkatraju Tirumalaju undertook the task and having successfully driven out the Muslims and the Hande chiefs who had joined them in pillaging the country and sacking Ahobilam, restored the holy place to its former State and received from the temple certain privileges to be enjoyed by him hereditarily.  The record is dated Saka 1506, Tarana corresponding to 1584 A.D. and places the Muslim occupation of the territory in the cyclic year Bahudhanya (1576 A.D.).  From the Annalas of Hande Anantapuram  it may be gathered that it was Malakappa-nayudu of the Hande family, son of Immadi Hampa-nayudu, who at the sight of success of the Muhammadans against his sovereign Srirangadeva deserted his king and joining the enemy sought their favours.  The latest date for Sriranga is found in a record from Maluru dated in Saka 1507, Parthiva.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அகோபில, அகோபிலம், அடில் ஷா, அத்துமீறல், அரசமரம், அறக்கட்டளை, அல்லகட்ட, அழிப்பு, அஹோபிலம், ஆக்கிரமிப்பு, ஆதிசங்கரர், இடைக்காலம், உண்டியல், கடபா, கருடன், கல்வெட்டு, காகதிய, காபாலிகன், கிருஷ்ண தேவராயர், குகை, குரோத, குலி குதுப் ஷா, குளம், கொடி கம்பம், கோபுரம், சக்தி, சங்கரர், சத்ரவட, சன்னிதி, சிங்கம், ஜீயர், ஜைன, ஜோகினி, தங்க விக்கிரகம், தங்கம், தசாவதாரம், நரசிம்மர், நரசிம்ஹர், பிரதாப ருத்ரன், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to அஹோபிலம் – சின்ன அஹோபிலம் கோவில், ஜீயர் மடம், முகமதிய தாக்குதல் முதலியன (3)

  1. vedaprakash சொல்கிறார்:

    “பேஸ் புக்” நண்பர் Dev Raj,

    *பேஷ மந்த்ரம்* தவறு, ‘ப்ரேஷ மந்த்ரம்’ சரி,

    என்று சுட்டிக் காட்டியிருந்தார்.

    அதன்படியே திருத்தி விட்டேன்.

    நண்பருக்கு நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s