அஹோபிலம் – ஒன்பது நரசிம்மர்கள், “மந்திர-தந்திர-யந்திர” வழிபாட்டு ஸ்தலம் மற்றும் தசவாதர தத்துவம் (2)

அஹோபிலம் ஒன்பது நரசிம்மர்கள், மந்திரதந்திரயந்திர” வழிபாட்டு ஸ்தலம் மற்றும் தசவாதர தத்துவம் (2)

nava-narasimha-sketch

ஒன்பது நரசிம்மர்களின் விவரங்கள்: அஹோபிலம் என்றாலே மேல் அஹோபிலம், அதாவது மலைமேல் இருக்கும் இடத்தைக் குறிப்பதாகும். ஏனெனில், அங்குதான், நரசிம்மர் அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை வதம் செய்தது. எகுவ / மேல் / பெரிய அஹோபிலம் மற்றும் திகுவ / கீழ் / சிறிய அஹோபிலம் என்று பிரித்துக் காட்டப் படுகிறது. திகுவ-கீழ் அஹோபிலத்தில் மூன்று நரசிம்மர் கோவில்கள் உள்ளன. ஒரு கமஸ்கிருத சுலோகத்தில், ஒன்பது நரசிம்மர்கள் குறிக்கப்படுகிறார்கள்:

ஜுவாலா அஹொபில மலோல க்ரோத கரஞ்ச பார்கவ

யோகனந்த க்ஷத்ரவத பாவன நவ மூர்த்தயாஹ

என்பதால், ஒன்பது நரசிம்மர்கள் குறிக்கப்படுகிறார்கள். இதிலிருந்து தான் –

எண் நரசிம்மர் தன்மை நரசிம்மர் பெயர் கிரகத்துடன் தொடர்பு படுத்துவது
1 ஜுவாலா ஜ்வாலா  நரசிம்மர் செவ்வாய்
2 அஹோபில அஹோபில  நரசிம்மர் குரு
3 மலோல மாலோல  நரசிம்மர் வெள்ளி
4 க்ரோத வராஹ (குரோத) நரசிம்மர் ராகு
5 கரஞ்ச கரஞ்ச  நரசிம்மர் திங்கள்
6 பார்கவ பார்கவ  நரசிம்மர் சூரியன்
7 யோகனந்த யோகானந்த  நரசிம்மர் சனி
8 க்ஷத்ரவத சக்ரவட  நரசிம்மர் கேது
9 பாவன பாவன  நரசிம்மர் புதன்

என்று வரிசைப்படுத்துகிறார்கள். ஆனால், இவ்வழக்கம் சமீபத்தையது என்று தெரிகிறது. போதாகுறைக்கு, நவகிரக சிலைகளுடன், நரசிம்மர் விக்கிரகங்களையும் சேர்த்து வைத்து, ஒரு கோவிலும் கட்டப் பட்டுள்ளது. ஆனால், நரசிம்மரின் “அனுஸ்டுப் மந்திரம்” விஷ்ணுவே ஒன்பது விதமான நரசிம்மர்களாக தோன்றி காட்சியளித்தார் என்றுள்ளது[1]. தலவரலாற்றின்படி இந்த இடம் கருடகிரி [கருடாச்சலம், கருடசைலம்] என்று அழைக்கப்படுகிறது. கருடருக்கு காட்சி கொடுக்கவே ஒன்பது இடங்களில் பெருமாள் நரசிம்மராக தோற்றம் அளித்தாராம். மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட “உக்கிர ஸ்தம்பம்’ (தூண்) உள்ளது. திருமாலின் நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்புவதாக கருடன் கேட்க, பகவான் அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம வடிவங்களில் கருடனுக்குக் காட்சி கொடுத்தார். கருட பகவான் அவற்றைப் பூஜித்து வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. இங்கே ஹிரணியனைக் கொன்றபின் பிரகலாதனுக்கு வரம்கொடுக்கும் தோற்றத்தில் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். இன்னொரு கதையின்படி இப்பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர் செஞ்சுக்கள். அவர்களின் குலத்தில் மகாலட்சுமி செஞ்சுலட்சுமியாக வந்து பிறந்தார். அவரை நரசிம்மர் விரும்பி திருமணம் செய்து கொண்டார். எனவே செஞ்சுபழங்குடியினர் வழிபட்ட / வழிபட்டுவரும் நரசிம்மர் கோயில்களாக இவை இருக்கின்றன.

nava-narasimha-telugu-book-wrapper

ஆதிசங்கரர் தாக்கப்பட்ட கதை: கபாலிகர்களால் கை வெட்டப்பட்ட ஆதி சங்கர பகவத் பாதாள் அகோர ந்ருஸிம்ஹரை ஸேவித்து “லக்ஷ்மி ந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம்” பாடி இழந்த கரம் மீண்டது என்றும். ஆதி சங்கரர் ஸ்தாபித்த சிவலிங்கமும், நருஸிம்ஹ சுதர்சன சக்கரமும் இன்றும் இத்தலத்தில் உள்ளன. மாலோலநரசிம்மரை தரிசிக்க அவரது சந்நதிக்குப்போகும் வழியில் சிறு வடிவினனாக கபாலிகனைக் காணலாம். பக்கத்திலேயே துர்காதேவி சிலையும், இரு பாத சிற்பத்தையும் காண முடிகிறது. இந்த கபாலிகனுக்கு ஒரு பின்னணிக் கதை உண்டு. கபாலிகன் ஆதிசங்கரரைத் தாக்கி அவர் உயிரைப் பறிக்க முயன்றான். அப்போது சங்கரரின் பிரதான சீடரான பத்மபாதர் அவனைத் தடுக்க முயன்றார். குருவைக் காப்பாற்ற முனைந்த இவருடைய முயற்சியைப் பாராட்டும் வகையில் நரசிம்மர் இவரது உடலுக்குள் புகுந்துகொள்ள, பத்மபாதரால் கபாலிகனை எளிதாக வதைக்க முடிந்தது. தன் பொருட்டு நரசிம்மர் மேற்கொண்ட இந்த கருணைச் செயலை வியந்து போற்றிய ஆதிசங்கரர், ‘நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம்’ இயற்றி அவரைத் துதித்தார்[2]. குருநாதரைக் காத்த பத்மபாதனைச் சித்தரிக்கும் விதமாகத்தான் இரு பாதச் சுவடுகள் இங்கே காணப்படுகின்றன. கபாலிகன் வணங்கிய துர்க்கைதான் அடுத்து இருப்பது. ஆனால், இந்தப் பாதங்கள் மஹாலக்ஷ்மியுடையவை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. சிவபெருமான்தான் கபாலிகன் என்றும் அவர் துர்க்கையுடன் சேர்ந்து ‘மந்த்ர ராஜபத ஸ்தோத்திர’த்தை உச்சரித்து நரசிம்மரை வழிபட்டதாகவும், அப்போது நரசிம்மருடன் இணைந்திருந்த மஹாலக்ஷ்மியின் பாதங்கள்தான் அவை என்றும் சொல்கிறார்கள்[3].

 lakshmi-karavalamba-stotram

மந்திரதந்திரயந்திர வழிபாட்டு ஸ்தலமாக இருந்தது: இதன்படி ஆய்ந்தால், இது ஒரு மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டு ஸ்தலமாக இருந்தது என்று தெரிகிறது. ஆதிசங்கரர் [509-477 BCE or 788-820 CE] வந்தது உண்மையென்றால், அவரது காலத்தில் இருந்தது என்றாகிறது. சங்கரர் காபாலிகர்கள் மற்றும் மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டாளர்களை எதிர்கொண்டது சரித்திர நிகழ்வாக இருப்பதினால், அத்தகையோரின் தொடர்பும் வெளிப்படுகிறது. ஆதிசங்கரர் தான் பலவித வழிபாட்டாளர்களை ஆறுவிதமான வழிபாட்டு முறைக்குள் வரசெய்தார். குரோத நரசிம்மர் கோவில் தூணில் ஒரு பெண்ணின் நிர்வாண சிற்பம் காணப்படுகிறது. இருகைகள் வைத்திருக்கும் நிலையினைப் பார்க்கும் போது, அது, முன்னர் அவ்விடத்தில் தாந்திரீக முறை பின்பற்றப்பட்டு வந்ததைக் குறிக்க சேர்க்கப்பட்டது என்று தெரிகிறது. இது தவிர, இன்னொரு தூணில், ஒரு ஆண் ஒரு பெண்ணை வலது தொடையின் மீது வைத்துக் கொண்டு, வலது கையால் அணைத்திருக்கும் போது, இடது கை இன்னொரு பெண்பக்கம் செல்வது போலிருக்கிறது. erotic-sculpture-at-ahobilamஇடைக்காலம் வரையில், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள், இத்தகைய தனியாக இருக்கும், மக்கள் போக்குவரத்து இல்லாத இடங்களில் தங்களது “மந்திர-தந்திர-யந்திர” முறைகளை கையாண்டு, பிரயோகம் செய்து வந்தது வெளிப்படுகிறது. வேதகால வழிபாட்டு முறைகளை ஜைனர் மற்றும் பௌத்தர் மாற்றியமைத்து உருவ வழிபாடு, புதிய கிரியைகள் முதலியவற்றை அறிமுகப்படுத்தினர். இதனஆல், பல வேறுபாடுகள் ஏற்பட்டன. பிறகு, அவர்களின் முரண்பாடுகளினால், அவர்களது மதங்கள் குன்ற, ப்ரிய ஆரம்பித்தன. அந்நிலையில் ஆதிசங்கரர் அவற்றை ஒன்றிணைத்தார். இதனால், மறுபடியும் வேதமுறை வழிபாடு புதிய முறைகளுடன் சேர்ந்து கொண்டதால், இத்தகைய கூடுதல்கள் சேர்க்கப் பட்டவை, எச்சங்கள் முதலியவற்றைக் காணப்படுகிறது.

natasimha-attacks-kapalika-lakshmi-karavalamba-stotram

தசாவதார தத்துவம், மகத்துவம்: தசாவதர தத்துவத்தில், “பரிணாம வளர்ச்சி” சித்தாந்தம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். “மச்ச-கூர்ம-வராஹ-நரசிம்ம-வாமன-பரசுராம-ராம-பலராம-கிருஷ்ண-கல்கி” என்று வகைபடுத்தி வைத்தது, ஏதோ எதேச்சையாக வரிசைப்படுத்தவில்லை, எல்லோருக்கும் புரியவேண்டும் என்ற ரீதியில் தான் அவ்வாறு வரிசைப்படுத்தப்பட்டது. இந்திய புராணமுறை விளக்கம் பொது மக்களுக்கு மற்றும் சாதாரண மக்களுக்காக அவ்வாறு எழுதப்பட்டது[4]. jbs-haldane-dasavataraஜே.பி.எஸ். ஹால்டேன் என்பவர், மீன், ஆமை, பன்றி, சிங்கம்-மனிதன், குள்ள மனிதன் மற்றும் நான்கு மனிதர்கள் கொண்ட தசாவதார தத்துவத்திற்கும், முகுகெலும்புள்ளவை தோன்றி வளர்ச்சியடைந்ததற்கும் ஒற்றுமை இருப்பதை எடுத்துக் காட்டினார்[5]. “பரசுராம-ராம-பலராம-கிருஷ்ண-கல்கி” என்பதிலும்,

  • மனிதன் கோடாலி கொண்டு காடுகளை சீரமைத்தது,
  • வில்-அம்பு கொண்டு வேட்டையாடியது,
  • கலப்பைக் கொண்டு உழுதது,
  • சக்கரம் – முக்கியமான கண்டுபிடிப்பு – உலோகக் கருவிகளை உபயோகப்படுத்தியது,
  • குதிரை போன்ற விலங்குகளை உபயோகப்படுத்தியது,

என்று படிப்படியான, மனித கலாச்சாரத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறது. இதனால், அவையெல்லாம் முந்தைய காலத்தில் இல்லை என்ற அர்த்தம் இல்லை. தொழிற்நுட்பம் வளர்ச்சியடைந்த நிலைகளைக் காட்டுவதாகக் கொள்ளலாம். இதில் “சிங்கம்-மனிதன்”, மனித உருவாக்கத்திற்கு பாலமாக இருப்பதை அறியலாம். “குரங்கிலிருந்து மனிதன் உருவானான்” என்று டார்வினின் கொள்கை இருந்தாலும், இதிலுள்ள தத்துவமும் முக்கியமாகிறது. மேலும், பன்றியும் மருத்துவத்தில் முக்கியமாக இருக்கிறது. காலன் என்ற ரோமானிய மருத்துவர், பன்றி மனிதனையொத்த உள்-அங்க அமைப்புக் கொண்டுள்ளதால் பன்றியை அறுத்து பரிசோதித்தார்[6]. வராஹம் நரசிம்மருக்கு முன்னல் வருவதும் நோக்கத்தக்கது. இங்கு, அஹோபிலத்தில், ஒரு நரசிம்மர்-வராஹ நரசிம்மராகவே இருப்பது கவனிக்கத்தக்கது.

© வேதபிரகாஷ்

18-02-2017

sankara-and-shanmata

[1] Hemendra Nath Chakravorty, trans. and annotated, The Narada Purana, part 3. (Delhi: Motilal Banarsidass, 1982), pp.1008-1029;

Pandit V. Krishnamacharya, rev., Ahirbudhnya Samhita (Madras: The Adyar Library and Research Centre, 1986), pp. 202-204.

[2] தினகரன், அஹோபிலம் என்ற அற்புதம், 2015-05-13@ 09:44:54

[3] http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=8600&cat=3

[4]  ஆனால், இடையே, ஜைன, பௌத்த, முகமதிய, ஐரோப்பியர்களின் இடைசெருகல்களால், ஒவ்வாத வர்ணனைகள், முரண்பாடான விவரங்கள், சச்சைகள உண்டாக்கும் விவகாரங்கள் அதிகமாகின. அந்நிலையில், அரிசியிலிருந்து மண், கற்கள் முதலியவற்றை ஒதுக்கி விட்டு, நன்றாக கழுவி சமைக்கும் நிலையில், நாம் அவற்றை உபயோகப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.

[5]  J. B. S. Haldane suggested that Dashavatara gave a “rough idea” of vertebrate evolution: a fish, a tortoise, a boar, a man-lion, a dwarf and then four men (Kalki is not yet born)

 “Cover Story: Haldane: Life Of A Prodigious Mind”. Science Reporter. Council of Scientific & Industrial Research. New Delhi, 29: 46. 1992.

[6] Gross, Charles G. “Galen and the squealing pig.” The Neuroscientist 4.3 (1998): 216-221.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அகோபில, அகோபிலம், அத்துமீறல், அரசமரம், அறக்கட்டளை, அஹோபிலம், ஆதிசங்கரர், இடைக்காலம், இறைப்பணி, உடைப்பு, கடபா, கட்டடம், கட்டிடம், கரஞ்ச, கருடன், காபாலிகன், குன்று, குரோத, கொடி கம்பம், கோவில், சக்தி, சக்தி வழிபாட்டுஸ்தலம், சங்கரர், சங்கராச்சாரி, சங்கராச்சாரியார், சடங்கு, சண்மதம், சத்ரவட, சன்னிதி, செஞ்சு, ஜுவாலா, ஜோகினி, தசாவதாரம், தந்திரம், துருக்கர், தேசிய நெடுஞ்சாலை, நரசிம்மர், பார்கவ, பாவன, மந்திரம், மலைவாசி, மலோல, யந்திரம், யோகானந்த, வனவாசி, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s