அஹோபிலம் இருப்பிடம், பெயர் வரக் காரணம், பிரயாண முறை – சென்னையிலிருந்து எப்படி செல்வது (1)

அஹோபிலம் இருப்பிடம், பெயர் வரக் காரணம், பிரயாண முறைசென்னையிலிருந்து எப்படி செல்வது (1)

ahobilam-mutt-photo-malola

அஹோபிலம் போவது சுற்றுலா அல்ல: ஜனவரி 25-01-2017 முதல் 28-01-2017 வரை எங்கள் குழு அஹோபிலம் சென்று வந்தத்தின் விவரங்களை பதிவு செய்கிறேன். 1980ற்குப் பிறகு சென்றதில் பல மாற்றங்கள் காணமுடிகின்றது. அஹோபிலம் பற்றிய புனித யாத்திரை, தீர்த்த யாத்திரை, பக்தி யாத்திரை, பக்தி சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா[1] முதலியவை இப்பொழுது, பொழுது போக்கு, காட்டுப்பாதையில் நடத்தல், மலைப்பாதையில் நடத்தல், மலைமீது ஏறுதல் (Trekking) போன்ற பலவித விவரங்களில் பெரும்பாலும், உயர்வு படுத்தி எழுதியிருப்பவையே புத்தகக்களிலும், இணைத்தளங்களிலும் காணப்படுகின்றன. இளைஞர்கள் அதிகமாக வந்து சாகசத்துடன் மலையேறி புகைப்படங்கள் எடுத்து இணைதளங்களில் போடுவது இப்பொழுது பிரபலமாகி விட்டது. இதைப் பார்த்து, இன்னொரு கூட்டம் கிளம்பி, அதே மாதிரி செய்கிறது. இவ்வாறான விவரங்களும் இவற்றில் காணப்படுகின்றன. வார இறுதி விடுமுறையில் காரை எடுத்துக் கொண்டு, சுற்றுலா போல சென்று வர ஆரம்பித்து விட்டனர். ஐடி (I.T) மற்றும் இதர வேலைகளில் சம்பாதிக்கும் இளைஞர்கள் கார்களில் வந்து செல்கின்றனர். ஆனால், அந்த இடத்தின் பாரம்பரியம், கலாச்சாரம், சரித்திரம் முதலியவற்றை அறிந்து கொள்வதில் குறைந்த விருப்பம் இருப்பது தெரிகிறது. இத்தனை ஆயிரம் மற்றும் நூற்றாண்டுகள் கழிந்த பின்னரும், பலவித தாக்குதல்கள், இயற்கை சீற்றங்கள் முதலியவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு அந்த ஸ்தலம், புண்ணிய ஸ்தலமாக தொடர்ந்து இருப்பதை கவனிக்க வேண்டும்.

location-of-temples-on-the-hill

அஹோபிலத்திற்கு வருகை தரும் பக்தர்கள் மற்றவர்கள் மற்றும் அவர்களது பிரயாண முறை: அஹோபிலத்திற்கு பல்லாண்டுகளாக பக்தர்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றனர். வருகின்ற பக்தர்கள், மற்றவர்களை வைத்துப் பார்க்கும் போது அவர்கள் பெரும்பாலோனோ கீழ்கண்ட மாநிலத்தவர்களாகக் காணப்படுகிறார்கள்:

 1. தமிழ்நாடு.
 2. கர்நாடகா.
 3. ஆந்திரா.
 4. மற்ற மாநிலங்கள்.

அவர்கள் கீழ்கண்ட முறைகளில் வந்தடைகிறார்கள்:

 1. ரெயில்-பேரூந்து [அஹோபிலத்திற்கு நேரிடையாக ரெயில் போக்குவரத்து இல்லை].
 2. கார் போன்ற வாகனங்கள் [சொந்தமாக ஓட்டிக் கொண்டு வருவது, ஓட்டுனரை வைத்து ஓட்டிக் கொண்டு வருவது, “கேப்ஸ்” வண்டியை வாடகைக்கு எடுத்து வருவது].
 3. சுற்றுலா பேரூந்து.

அஹோபிலம் என்றாலே, வைஷ்ணவ இடம் என்றிருந்தாலும், சைவர்களும் இங்கு வந்து செல்கிறார்கள்.

ahobilam-mutt-photo

அஹோபிலம் இருப்பிடம்: அஹோபிலம் [అహోబిలం, अहोबीलम, Ahobilam] ஆந்திரா கர்னூல் மாவட்டத்தில், அல்லகட்ட[2] பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. அல்லகட்டவிலிருந்து 24 கி.மீ தொலைவில் உள்ளது. புவியமைப்பு முறையில் இதன் இருப்பிடம் –  15.1333°N 78.7167°E என்று குறிக்கப்படுகிறது.  இம்மலையின் உயரம் 327 மீட்டர் / 1076 அடிகள் உயரம் என்றுள்ளது[3]. . நான்டியாலிலிருந்து 70 கி.மீ, கர்நூலிலிருந்து 150 கி.மீ, சென்னையிலிருந்து 400 கி.மீ தொலைவில் உள்ளது. அஹோபிலத்திற்கு நேரிடையாக வருவதற்கு ரெயில் அல்லது பேருந்து இல்லை. ரெயில் மூலம் வருவதென்றால், கடப்பா வரை வந்து, பிறகு பேரூந்தில் வரவேண்டும். கடப்பாவிலிருந்து இப்பொழுது தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டுள்ளதால் அங்கிருந்து வேகமாக வந்து, இடது பக்கத்தில் அல்லகட்டவில் நுழைந்து வரலாம். சென்னையிலிருந்து பேரூந்தில், நான்டியால் வரை வந்து, பிறகு வேறு பேரூந்தில் பயணித்து அல்லகட்ட வழியாக அஹோபிலம் வரவேண்டும். சென்னை, பெங்களூர், ஹைதராபாத் என்ற இடங்களிலிருந்து மக்கள் வருகிறார்கள். அதாவது மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் இங்கு வந்து, அங்கிருந்து ரெயில் மற்றும் பஸ் மூலம் அஹோபிலம் வந்தடைகிறார்கள். காரில் வருவதானால் நேராக வந்தடையலாம்.

chenchu-princes-warrior-ahobilamஅஹோபிலம் செல்வது எப்படி?: ஆந்திரப் பிரதேசத்தில் அஹோபிலம் கர்னல் மாவட்டம், நந்தியால் தாலுகாவில் உள்ளது. அஹோபிலத்திற்குச் செல்ல நேரடி ரெயில் வழி இல்லை. அருகே இருக்கின்றது என்று சொல்லப் படும் இரு ரயில் நிலையங்கள், மும்பை-சென்னை வழியில் உள்ள கடப்பாவும், பங்களூர்-விசாகப் பட்டினம் வழியில் வரும் நந்தியால் நிலையமும் ஆகும். சென்னையில் இருந்து செல்வதென்றால் கடப்பா வரையில் ரெயிலில் சென்று அங்கிருந்து கிட்டத் தட்ட 110 கி.மீ. உள்ள அஹோபிலத்துக்குப் பேருந்துகளில் தான் செல்ல வேண்டும். சென்னையில் இருந்து நேரடியாகப் பேருந்துகள் இல்லை. எங்கிருந்து சென்றாலும் அல்லகட்டா என்னும் ஊரைக் கடந்து அங்கிருந்தே 24 கி.மீ. தூரத்தில் உள்ள அஹோபிலத்தை அடைய வேண்டும். அல்லகட்டாவில் இருந்து அஹோபிலம் செல்ல பேருந்துகள், வேன்கள் கிடைக்கின்றன.

chennai-to-ahobilam-through-kadapa-by-carசென்னையிலிருந்து அஹோபிலத்திற்கு காரில் செல்வது (371 கி.மீ, சுமார் 7 மணி நேரம்): சென்னையிலிருந்து காரில் செல்வோர், இவ்வாறு செல்லலாம் – ரேணிகுண்டா, தொட்டிமிட்டா, மாமண்டூர், செட்டிகுன்ட, கங்ஜராஜுபொடு, கோடூரு, அனந்தராஜு பேட, ஒப்புலவாரி பள்ளி, புல்லம்பேட், போயனபள்ளி, நந்தலூர், மண்டபம்பள்ளி, மகம்பேட, வொன்டி மிட்ட, புட்டம்பள்ளி, கடபா, ஆலம்கான் பேட்ட, சென்னூர், காஜிபேட, மிடுகூர், சிந்தகுன்ட, செங்கலமரி, ஜொகலமரி, சுட்டமல்லே, அல்லகட்ட, நரசாபுரம், அஹோபிலம். கடபா ஜங்கஸனிலிருந்து ஹைவே உள்ளது. இதில் சீராக சென்று, வலது புரத்தில் “அஹோபிலம்” என்று பார்த்து, ஊரில் நுழையலாம்.

chenchu-princes-ahobilamஅஹோபிலம் பெயர் வரக்காரணம்: எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கை ஆழ்வார், இங்கு வந்து பாசுரத்தில் “சிங்கவேள் குன்றம்” என்று குறிப்பிட்டுள்ளார். வைஷ்ணவ பாரம்பரியத்தில் இது 108 திருப்பதிகள் / திவ்ய க்ஷேத்திரங்களில் ஒன்றாக உள்ளது. முகமண்டபத்தில் காணப்படும் சிற்பவேலைப்பாட்டை வைத்து, இது காகதீய காலத்தைச் சேர்ந்தது என்றும் சிலர் கூறுகிறார்கள். கல்யாணியைச் சேர்ந்த மேற்கு சாளுக்கிய அரசர்களுள் பிரசித்தி பெற்ற விகரமாதித்திய VI [f.1076-1126 CE] இங்கு வந்து வழிபட்டதாக, அவ்வரசனது கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன[4]. தெலுங்கில் எழுதப்பட்ட “நரசிம்ம புராணம்”, “அஹோபிலம் கைபியத்”[5] போன்ற ஆவணங்களிலிருந்து, இப்பெயர் எப்படி வந்தது என்ற விவரங்கள் கிடைக்கின்றன. “நரசிம்ம புராணம்”, எர்ரபிரகட என்ற தெலுங்கு புலவரால் இயற்றப்பட்டது[6]. பிரலோய வேம ரெட்டி (1325-1363 CE) காலத்தைச் சேர்ந்தவர். அன்னமாச்சாரியாரும் [1408-1503 CE] திருப்பதி வெங்கடாசபதிக்கும், நரசிம்மருக்கும் வேறுபாடில்லை என்று பாடியுள்ளார்.

 1. அஹோ’ என்றால் “சிங்கம்’ மற்றும் “பிலம்’ என்றால் “குகை’.
 2. சிங்கம்வெளிப்பட்டமலைப்பிளவு, இயற்கையானதூண்,
 3. சிங்ககுகை, சிங்கத்தின் குகை.
 4. ‘மாபெரும் குகைக்கோயில்,
 5. உக்கிரத்துடன் இரண்ய கசிபுவை வதைத்தத் தோற்றத்தைக் கண்டு, “அஹோ பலஹ!” என்று போற்றியதால், அப்பெயர் வந்தது என்றும் விளக்கம் கொடுக்கப்படுகிறது.
 6. தேவர்கள், நரசிம்மரின்பலத்தைக்கண்டுவியந்து, “அஹோபலம்” என்றுபாராட்டியதால், இப்பெயர்வந்ததுஎன்றுஸ்தலபுராணம்கூறுகிறது:

அஹோ வீர்யம் அஹோ சௌரம் அஹோ பஹுபராக்ரமஹ

நரசிம்ஹம் பரம் தைய்வம் அஹோபிலம் அஹோ பலம்

இங்கிருக்கும் குகைளில் நரசிம்மர் தோன்றி கருடனுக்கு காட்சியளித்ததால்,  , “சிங்ககுகை” என்ற பெயர் பெற்றது என்றும் விளக்கம் அளிக்கப்படுகிறது[7].

எது எப்படியாகிலும், இங்குள்ள மலை மற்றும் கற்பாறைகளின் படிவங்களின் அமைப்பு, இதன் தொன்மையினை எடுத்துக் காட்டுகிறது.

© வேதபிரகாஷ்

17-02-2017

chenchu-princes-warrior-with-narasimha-ahobilam

[1] பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் “சரித்திரம்” எடுபடாத “பாடம்” ஆகிவிட்ட நிலையில் அதற்கு, சுற்றுலா, சுற்றுலா நிர்வாகம் என்றெல்லாம் சேர்த்து, மெருகேற்றப் பார்க்கும் முயற்சிகளில், இத்தகைய “பக்தி சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா” போன்ற சொற்றோடர்களை உபயோகிக்க ஆரம்பித்துள்ளனர்.

[2] “அல்லகட்ட” என்றால் “ஆவுல கட்ட” அதாவது மாடுகள் இருக்கும் இடம் என்று பொருள், அது திருந்தி, அல்லகட்ட ஆகிவிட்டது.

[3] http://www.ahobilamutt.org/us/information/visitingahobilam.asp

[4] The inscriptions available at the Ahobilam temple indicate that king Vikramaditya VI [f.1076-1126 CE] of the Western Chalukya line of Kalyani worshipped the Mula Narasimha of this temple.

Andhra Pradesh district gazetteers – Volume 3 – Page 36.

[5]  The Ahobilam Kaifiyath is in Telugu and was written by one Krnam Ramanna in the year 1810 (28th July 1810). The Kaifiyat is available in the State Archives at Hyderabad.

[6] Errapragada, Sri Narasimha Purnam , Andhra Book House, Hyderabad, 1953.

[7] The other version is that because of the great cave, the Ahobila, where Garuda worshipped, did penance and realised the lord, the place itself has come to be called Ahobilam. The Ahobilam ‘Kaifiyat’ gives support to this legend. (The Ahobilam Kaifiyat forming part of Mackenzie collections gives very valuable information regarding the Ahobilam temples. Kaifiyats – the digests from ‘Kaviles’ or village registers containing information on the political, social, religious and other conditions of the villages in Deccan were prepared by Pandits and Mussadis working under Col. Mackenzie.) The Ahobilam Kaifiyat is in Telugu and available in the State Archives at Hyderabad (vide “Ahobila Narasimhaswamy temple” – Monograph by P. Sitapati, Commissioner of Archives).

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அகோபிலம், அரசமரம், அல்லகட்ட, அஹோபிலம், ஆக்கிரமிப்பு, ஆலயம், இடைக்காலம், உண்டியல், கடபா, காசி, குன்று, குளம், கொடி கம்பம், சங்கரர், சங்கராச்சாரி, சிங்கச் சிற்பங்கள், ஜீயர், துருக்கர், தேசிய நெடுஞ்சாலை, நரசிம்மர், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s