ஶ்ரீ அஞ்சனாக்ஷி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில், சோமூர் ஊராட்சி, கரூர் மாவட்டம் (2)

ஶ்ரீ அஞ்சனாக்ஷி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில், சோமூர் ஊராட்சி, கரூர் மாவட்டம் (2)

திருமுக்கூடல் கோவில் -கர்ப்பகிருகம் வாயில்

அகஸ்தீஸ்வரர்,அனந்தாக்ஷி திருமுக்குக்கூடல்

கோவிலுக்கு வரும் கூட்டம், திறக்கப்படும் நேரம் முதலியன: பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை, சிவராத்திரி போன்ற தினங்களில் தான் இக்கோவிலுக்கு வரும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. தெரிந்தவர்கள் தான் அவ்வப்போது வந்து செல்வதால், பொதுவாக, இக்கோவில் பூட்டியே இருக்கிறது. அங்கு சென்ற பிறகு அறிவித்தால், கோவில் சுவரையொட்டியுள்ள ஒரு பெண்மணி வந்து கதவைத் திறந்து விடுகிறார். உள்ளே சென்று கோவிலைச் சுற்றிப்பார்க்கலாம். கோவிலின் பெரும்பகுதி சிதலமைந்து இருக்கிறது. உள்ளே உழைந்ததும் வலது பக்கத்தில் உள்ள ஒரு மண்டபம் இடிந்த நிலையில் உள்ளது. தூண்கள் கீழே விழுந்து கிடக்கின்றன. 12ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த திருமண மண்டபம் என்று சொல்லப்படுகிறது. இடது பக்கத்தில், மூன்று சந்நிதிகள் / அறைகள் இடிந்த நிலையில் உள்ளன. அவற்றில் ஒன்றில் நவக்கிரகங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னொன்று மடப்பள்ளியாக இருக்கலாம். ஜ்கருவறைக்குச் செல்ல வேண்டுமானால், அப்பெண் மூலம் சொல்லி அனுப்பினால், கிருஷ்ணன் பூஜாரி / குருக்கள் கருவறை சாவியோடு வந்து திறந்து விடுவார். பிறகு, முறைப்படி அர்ச்சனை செய்யலாம். உள்ளேயிருக்கும் லிங்கம் அகஸ்தியரால் மண்ணால் செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்த கோவிலே மண்ணால் மூடப்பட்டிருந்தது என்று சொல்லப்படுகிறது.

அகஸ்தீஸ்வரர், திருமுக்குக்கூடல். கருவறை கூரை இடிந்த நிலையில்

திருமுக்கூடல் கோவில்- க்கர்ப்பகிருக கோபுரம்

அகஸ்தீஸ்வரர், திருமுக்குக்கூடல். கருவறை கோபுர சிற்பங்கள்

கருவறை, மூலவர் முதலியன: பலிபீடம், கொடிகம்பம், நந்தி வெளிபிரகாரத்தில், தெற்கு நோக்கிய வாசலுக்கு முன்பாக இருக்கின்றன. அதாவடு அவையெல்லாம் வடக்கு நோக்கியுள்ளன. கருவறை முன்னால் இருந்த நர்த்தன மண்டபம் கூரையில்லாமல் இருக்கிறது. தூண்கள் நின்று கொண்டிருப்பதால் இவ்வுண்மை தெரிகிறது. மற்ற கோவில்களைப் போலில்லாது, கருவறை முன்பாக உள்ள இடம் சுற்றி ஒரு பிரகாரம் போன்ற அமைப்பு இருக்கிறது. கருவறை மேலுள்ள கோபுரத்தின் கலசம் காணப்படவில்லை. கருவறையின் முன்புள்ள கூரையும் கீழே விழுந்திருக்க வேண்டும். தூண்கள் மற்றும் சுவர்கற்களில் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கருவறையின் கூரையிலும் பெரிய ஓட்டை இருக்கிறது, மற்றும் எந்த நேரத்திலும் விழலாம் என்ற நிலையில் உள்ளது. தரையிலும் வெடிப்புகள் காணப்படுகின்றன. இத்தகைய கருவறையினுள்ளே, அகத்தியரால் உருவாக்கப்பட்ட லிங்கம் மூலவராக உள்ளது.

திருமுக்கூடல் கோவில் - வடகிழக்கு மூலையிலிருந்து பின்பக்கத் தோற்றம்.

திருமுக்கூடல் கோவில் - வடமேற்கு மூலையிலிருந்து பின்பக்கத் தோற்றம்

அகஸ்தீஸ்வரர், திருமுக்குக்கூடல். புஸ்வலி போட்டோ

மூலவருக்கு, கோவிலுக்குப் பின்னால் இருப்பது சமாதியா?: கோவிலின் பின்புறம் ஏதோ ஒருவரின் சமாதி இருப்பதாகச் சொல்லப் படுகிறது. அது சித்தரின் சமாதி என்றும், குறிப்பிட்ட சித்தரின் பெயரைக் குறிப்பிட்டு அவரின் சமாதி என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆனால், எதற்கும் எந்தவித சான்றும் இல்லாமல் இருக்கிறது. பொடுவாக, ஏதாவது ஒரு ரிஷி, முனி, சித்தர் போன்றவர்களின் சமாதி மீதுதான் கோவில் கட்டப்படும், அதாவது, சர்ப்பகிரகம் அமைக்கப்பட்டிருக்கும் என்பது ஒரு நியதியாக இருக்கிறது. இதனால், அது ஜீவசாமதியாக இருக்கும் போது, பக்தர்கள் அங்கு வந்து வேண்டிக் கொண்டால், அவை, ஆண்டவனிடம் சென்று சேரும் என்றும், அவர்களது வேண்டுதல்கள் பூர்த்தியாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இச்சமாதி வெளியே இருக்கிறது. அருகில், சில தேவதைகளின் விக்கிரங்களும் சிதறிக்கிடக்கின்றன.

திருமுக்கூடல் கோவில் -கல்வெட்டுகள்

அகஸ்தீஸ்வரர், திருமுக்குக்கூடல். பின்பக்கம் காணப்படும் தேவியர் சிற்பம்

இக்கோவிலின் காலம், கட்டியவர்கள் முதலிய விவரங்கள்: கோவில் பதிற்சுவரிலேயே சிற்பங்கள் காணப்படுகின்றன. அவற்றில் மீன்கள் காணப்படுவதால், பாண்டியர்களால் அச்சுவர் கட்டப்பட்டது என்றாகிறது. கோவிலுக்கு பின்புறம் வலது பக்க சுவர்களில் கல்வெட்டுகள் பல காணப்படுகின்றன. அவற்றின் மூலம், திருமுக்கூடலூர் பெயர், பிற்கால சோழர்கள், நாயக்கர்கள் கட்டிய விவரங்கள் காணப்படுகின்றன. கூரை வரை கருங்கற்களாலும், அதற்கு மேலுள்ள கோபுரம் முதலியவை செங்கல் மற்றும் மண் கலந்த பூச்சுகளால் கட்டப்பட்டிருப்பதனாலும், ஒருவேளை பழைய கோவில் இடிந்ததால், பிறகு அவைக் கட்டப்பட்டிருக்கலாம், அவையும், கடந்த 300-500 ஆண்டுகளில் கொஞ்சம்-கொஞ்சமாக அரிப்பினால் சேதமடைந்ததால், மேற்பூச்சு விழுந்து, உள்ளே இருக்கும் செங்கற்கள் தெரியும் நிலையை அடைந்து விட்டது. கற்களிலும் கருப்பு மற்றும் இளம்-சிவப்பு என்று இரண்டு நிறங்கள் காணப்படுகின்றன (ASI சீரமைப்பினாலும் இவ்வாறு நடந்திருக்கலாம்). சுற்றியுள்ள சிறிய சந்நிதிகள் குறுநில மன்னர்கள், நாயக்கர்கள் முதலியவர்களால் கட்டப்பட்டதாகும். இடது பக்கத்தில் ஒரு நந்தி கிழக்கு பக்கமாக பார்த்து இருக்கிறது. அதாவது, முன்னர் மூலவர் கிழக்கு பார்த்திருந்து, பின்னர் திசை மாற்றப்பட்டிருக்கலாம்.

திருமுக்கூடல் கோவில் - வலது பக்க மூலை-திருமண மண்டபம் இருந்ததாம்

திருமுக்கூடல் கோவில் -- தூண்கள், கூரை பகுதிகள், சிற்பங்கள் விழுந்து கிடப்பது

காலத்தினால் ஏற்பட்ட மாற்றங்கள்: பொதுவாக, மூலவர் கிழக்கு பார்த்து அமைந்திருக்கும். ஏதாவது பாதிப்பு ஏற்படும்ம் போது, மூலவரை மேற்கு நோக்கி வைத்து, புனர்நிர்மாணம் செய்வர். ஆனால், இங்கு மூலவர் தெற்கு நோக்கி இருக்கிறது. தவிர இடது பக்க மூலையில் ஒரு லிங்கமும் இருக்கிறது. வலது பக்க மூலையில் (கோவிலின் வடக்கிழக்குப் பகுதியில்), ஒரு சந்நிதி இருந்ததற்கான அஸ்திவாரம் காணப்படுகிறது. அது முருகன் கோவில் என்று சொல்லப்பட்டாலும், ஆதாரங்கள் காணப்படவில்லை. முன்னர் சொல்லியபடி, தேவதைகளின் சிற்பங்கள், விக்கிரங்கள் தனித்தனியாக காணப்படுகின்றன. அவற்றை ஜேஸ்டா தேவி, கொற்றவை, சப்தமாதர் என்று பலவாறாகக் கூறப்படுகின்றன. எது எப்படியாகிலும், ஒருகாலத்தில் எல்லாம் நிறைந்த சிறந்த கோவிலாக இருந்திருக்கின்றது என்று தெரிகிறது. அமராவதி ஆற்றங்கரை மற்றும் முக்கூடலுக்கு அருகில் இருப்பதினால், இந்துக்கள் செய்ய வேண்டிய சம்ஸ்காரங்கள், காரியங்கள், கிரியைகள் முதலியவற்றிற்கு அனுகூலமாக இக்கோவில் அமைந்திருப்பது சிறப்பு. இந்தியத் தொல்துறை முன்னர் சீரமைப்பு வேலைகள் செய்திருப்பதாலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

© வேதபிரகாஷ்

04-06-2016

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அகத்தீசுவரர், அகத்தீஸ்வரர் கோவில், அகஸ்தீஸ்வரர், அடையாளம், அமராவதி, உடைப்பு, கருவறை, கரூர், சதாசிவ பிரும்மேந்திரர், சித்தர், சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, சிவா, சோமூர், சோழர், சோழர் காலம், நாயக்கர், நெரூர், நொய்யல், பழுது பார்த்தல், பிரதோசம், பிரதோஷம், முக்கூடல், வாலி, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஶ்ரீ அஞ்சனாக்ஷி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில், சோமூர் ஊராட்சி, கரூர் மாவட்டம் (2)

  1. Pingback: 183வது உழவாரப்பணி கூடுவாஞ்சேரி அடுத்த நெல்லிகூப்பத்தில் அமைந்துள்ள –அருள்மிகு ஆதிகேசவ பெருமா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s