சுருட்டப்பள்ளி, பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்: சிவன், விஷ்ணு போல படுத்திருக்கும் இடம்!

சுருட்டப்பள்ளி, பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்: சிவன், விஷ்ணு போல படுத்திருக்கும் இடம்! 

Suruttappalli location, Google map

Suruttappalli location, Google map

பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்: சிவன் விஷ்ணு போல படுத்திருக்கும் இடம்!: பள்ளி கொண்டீஸ்வரர் சிவன் கோவில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சுருட்டப்பள்ளி என்ற ஊரில் அமைந்துள்ளது. சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் 56 கி.மீ,  ஊத்துக்கோட்டையிலிருந்து  2 கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது. மற்ற எந்த சிவன் கோவிலிலும் காணமுடியாத கோலத்தில் இங்கு சிவன் பள்ளி கொண்ட நிலையில் காணப்படுகிறார். அனந்த பத்பநாபனைப் போன்று சயனித்த நிலையில் காணப்படுகிறார். இத்தகைய விக்கிரகம் கொண்ட கோவில் இங்கு ஏன் கட்டப்பட்டது என்று தெரியவில்லை. இருக்கும் விவரங்களை வைத்துப் பார்த்தால் விஜயநகர காலத்தில் 1565ம் ஆண்டு விஜயநகர பேரரசரான கிருஷ்ணதேவராயரால் / வித்யாரண்யரால், இக்கோவில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது[1]. முன்பு, சாதாரணமாக தெரிந்தவர்கள் மட்டும் தான் இக்கோவிலுக்கு சென்று தரிசித்துச் செல்வது வழக்கம். அப்பொழுது, எல்லோரும் கர்ப்பகிருகத்தில், மூலவர் அருகில் சென்று வழிபடலாம், நன்றாக தரிசிக்கலாம். ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி, காஞ்சி சங்கராச்சாரி பெரியவர், இக்கோவில்ன் மகிமையை எடுத்டுரைத்தப் பிறகு, நிறைய பக்தர்கள் செல்ல ஆரம்பித்தார்கள். பிறகு இந்து அறநிலைய துறைக் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. கோவிலும் புதுப்பிக்கப் பாட்டு, கும்பாபிஷேகம் செய்ய்யப்பட்டது. இப்பொழுது, இங்கு கூட்டம் வர ஆரம்பித்து விட்டது. இதனால், சிறப்பு தரிசனம், நந்தி அபிஷேகம் என்று ஏற்படுத்தப் பட்டு ரூ.200/-, 500/- என்றெல்லாம் வசூல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

சுருட்டப்பள்ளி - தகங்குமிடம், கழிப்பறை முதலியன

சுருட்டப்பள்ளி – தகங்குமிடம், கழிப்பறை முதலியன

சுருட்டப்பள்ளி - உட்காருமிடம், வாகனம் நிறுத்துமிடம்

சுருட்டப்பள்ளி – உட்காருமிடம், வாகனம் நிறுத்துமிடம்

சுருட்டப்பள்ளி - கோவில் நுசழைவு வாயில் நந்தி

சுருட்டப்பள்ளி – கோவில் நுசழைவு வாயில் நந்தி

சுருட்டப்பள்ளி - கோவில் நுசழைவு வாயில்

சுருட்டப்பள்ளி – கோவில் நுசழைவு வாயில்

சுருட்டப்பள்ளி - கோவில் உட்புறம்- கொடிக்கம்பம், நந்தி

சுருட்டப்பள்ளி – கோவில் உட்புறம்- கொடிக்கம்பம், நந்தி

சுருட்டப்பள்ளி - கோவில் உட்புறம்- இடது பக்கத்தில் உள்ள சப்த மாதர்

சுருட்டப்பள்ளி – கோவில் உட்புறம்- இடது பக்கத்தில் உள்ள சப்த மாதர்

சுருட்டப்பள்ளி - கோவில் உட்புறத்திலிருந்து பின்பக்கத் தோற்றம்

சுருட்டப்பள்ளி – கோவில் உட்புறத்திலிருந்து பின்பக்கத் தோற்றம்

சுருட்டப்பள்ளி - கோவில் உட்புறம்- பின்பக்கத் தோற்றம்

சுருட்டப்பள்ளி – கோவில் உட்புறம்- பின்பக்கத் தோற்றம்

சுருட்டப்பள்ளி - கோவில் பின்பக்கத் தோற்றம்.

சுருட்டப்பள்ளி – கோவில் பின்பக்கத் தோற்றம்.

சுருட்டப்பள்ளி - பள்ளிக்கொண்டீஸ்வரர் கர்ப்பகிருகம்

சுருட்டப்பள்ளி – பள்ளிக்கொண்டீஸ்வரர் கர்ப்பகிருகம்

Surattappalli Siva idol

Surattappalli Siva idol

Surattappalli Siva idol- with different alankara

Surattappalli Siva idol- with different alankara

Surattappalli Siva reclining idol- with different alankara

Surattappalli Siva reclining idol- with different alankara

அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக இருப்பதும் இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்: சிவன் பள்ளி கொண்ட நிலையும், அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக இருப்பதும் இக்கோயிலின் தனிச் சிறப்பாகும், என்று இப்பொழுது இக்கோவில் உள்ள விக்கிரங்களைப் பற்றி விவரிக்கிறார்கள். பள்ளி கொண்ட ஈஸ்வரன் – சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் – மரகதாம்பிகை, விநாயகர் – சித்தி, புத்தி, சாஸ்தா – பூரணை, புஷ்கலை, குபேரன் – கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் உள்ளனர்[2]. இப்படி சொல்பவர்கள் சப்தமாதர்கள் மட்டும் தனியாக ஏன் இருக்கிறார்கள் என்று யோசிப்பதில்லை[3]. மூலவர் வால்மீகிஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இவருக்கு எதிரில் ராமலிங்கம் உள்ளது. இந்த சன்னதிக்கு வெளியே துவார பாலகருக்கு பதில் சங்கநிதியும், பதுமநிதியும் உள்ளனர். அம்மன் மரகதாம்பிகை சன்னதிக்கு வெளியில் துவார பாலகியருக்கு பதில் பாற்கடலிலிருந்து கிடைத்த காமதேனுவும், கற்பகவிருட்சமும் உள்ளனர். பிரகாரத்தில் விநாயர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள். இடது பக்கத்தில் சப்தமாதார்கள் விக்கிரகங்களையும் வைத்துள்ளனர்.

Surattappali idols.1

Surattappali idols.1 – Courtesy – http://pallikondeswarar.com/

Surattappali idols.1

Surattappali idols.1 – courtesy – http://pallikondeswarar.com/

பிரதோச பூஜை தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த தலமே சுருட்டப்பள்ளிதான்: தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அத்தருணத்தில் வெளிவந்த ஆலகால விஷத்தை உண்ட களைப்பால் சற்றே அயர்ந்து சயனக்கோலத்தில் பரமேஸ்வரன் பள்ளி கொண்டதாக ஐதீகம், எனவே இத்தலத்தில் பிரதோஷ பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது.   பிரதோச பூஜை தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த தலமே சுருட்டப்பள்ளிதான் என்று சொல்லப்படுகிறது[4].  இவ்வுலகை காப்பதற்காக அமிர்தத்தை கொடுத்து விட்டு விஷத்தை உண்ட இந்த பள்ளிகொண்ட நாதனை சனிக்கிழமைகளில் வரும் மகாபிரதோஷ தினத்தில் வழிபட்டால் –

 • இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும்,
 • பதவியிழந்தவர்கள் மீண்டும் அடைவர்,
 • பதவி உயர்வு கிடைக்கும்,
 • திருமணத்தடை விலகும்,
 • பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர்

போன்ற நம்பிக்கைகள் (அல்லது உருவாக்கிவிட்டனர்) என்று விளக்குகிறார்கள்[5].

காஞ்சி பெரியவரின் வழிபாடு, சாதனை, ஆசியுடன் வெளிப்படுத்திய விவரங்கள்[6]: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் 1977-ம் ஆண்டு காஞ்சி பெரியவர் விஜயம் செய்தபோது, இக்கோவில், விக்கிரகம் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறி அருளாசி வழங்கினார். பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம் என்றும், தாம் கண்ட கண்கொள்ளாக் காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும் என்றும் அனுக்கிரகம் செய்தார். சுருட்டப்பள்ளி கோவிலில் பதினைந்து நாட்கள் தங்கியிருந்தளிறைவனை தியானித்து தவம் இருந்தார். பள்ளி கொண்டீஸ்வர பெருமானை தரிசித்த சுவாமிகள் அப்போதே சுலோகம் ஒன்றை இயற்றி அர்ப்பணம் செய்தார்.

தேவ்யூரு ஸயனம் தேவம்

ஸ்ரீபாணம் ஸ்வார்ந்த விக்ரஹம்

ப்ருக்வாதி வந்திதம் தேவம்

லோகஷேமார்த்த மாஸ்ரயே

அதன் பொருள் வருமாறு: “விஷத்தை உண்ட களைப்பில் அம்பாளின் மடியில் ஈஸ்வரன் பள்ளி கொண்டிருக்கிறார். உலக நன்மைக்காக விஷம் உண்ட சிவனை காண தேவரும், பிருகு முதலிய ரிஷிகளும் வந்திருக்கிறார்கள். சயனத்தில் உள்ள ஈசுவரனை வணங்கி பயன் பெறுவோம்”. காஞ்சி பெரியவரின் பாதங்கள் பட்டவுடன் சுருட்டப்பள்ளி என்னும் இத்திருத்தலம் வெளியுலகிற்குத் தெரியவர ஆரம்பித்தது. மக்களும் அதிகமாக வர ஆரம்பித்தனர்.

Surattappali idol - Dakshinamurthy with wife-full printed-portion

Surattappali idol – Dakshinamurthy with wife-full printed-portion – Courtesy – http://pallikondeswarar.com/

சிவன் படுத்திருப்பதற்கு காரணம்: தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அத்தருணத்தில் வெளிவந்த ஆலகால விஷத்தை உண்டகளைப்பால் சற்றே அயர்ந்து சயனக்கோலத்தில் பரமேஸ்வரன் பள்ளி கொண்டதாக ஐதீகம், எனவே இத்தலத்தில் பிரதோஷ பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது.   ஆனால், பாற்கடல் எங்கிருந்தது, எப்படி கடைந்தார்கள், அங்கு ஆலகால விசத்தை உண்ட சிவன், இங்கு எப்படி வந்தார் என்பது பற்றியெல்லாம் சித்திப்பதில்லை. அதாவது, பூகோள ரீதியில் இடங்களை அடையாளம் காணுவதில்லை. “சைவ-வைஷ்ணவ ஒற்றுமைக்கு” இலக்கணமாகத் திகழ்கிறது என்று ஒருவர் எழுதுகிறார். அதாவது, சரித்திரத்தை ஆராய்ந்து புனர்நிர்மாணம் செய்து, மீட்டெடுக்க வேண்டும் என்ற அக்கரையும் இல்லாமல், ஏதோ சிண்டு முடிக்கும் வேலையில் ஈடுபடும் நோக்கத்தில், அத்தகைய கருத்தை ஸ்தலபுராணத்தில் நுழைக்கிறார். இது சிற்பியின் கற்பனையா அல்லது அவ்வாறு யாராவது ஆணையிட்டு வடிக்க வைத்தார்களா என்று யோசிப்பதாகத் தெரியவில்லை. சிற்பக்கலையில், குறிப்பிட்ட காலத்தில் அவ்வாறு சுதந்திரமாக செயல்பட்டு[7], சிலை வடிக்கப்பட்டதா அல்லது அத்தகைய புராணத்திற்கு ஆதாரம் இருந்ததா என்று ஆராய்ச்சியாளர்கள் பார்க்க வேண்டும். வாஸ்து சாத்திரம் ஒன்று என்றால், அதனை மாற்றக் கூடாது, ஒவ்வொரு சிற்பியும், புதியதாக ஒவ்வாத விசயங்களை சேர்க்கக் கூடாது[8].

Surattappali idols.3

Surattappali idols.3 – Courtesy – http://pallikondeswarar.com/

ஸ்தலபுராணங்களும், புனர்நிர்மாணங்களும் சரித்திரத்தை மாற்றுகின்றன: ஸ்தலபுராணங்கள் அவ்வப்போது எழுதப்படுவதாகத் தெரிகிறது. அவற்றை எழுதுபவர்களுக்கு இந்தியாவில் உள்ள மற்ற கோவில்கள், குளங்கள், தீர்த்தங்கள் முதலியவற்றின் இருப்பிடம், சிறப்பு, அவற்றின் காலம் முதலிவை தெரியவில்லை, தெரிந்து கொள்ளப்படுவதில்லை அல்லது அவற்றைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாவும் கவலைப் படுவதில்லை என்று தெரிகிறது. தமக்குத் தெரிந்த புராணக் கதைகளை, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஏற்றவாறு தொகுத்து, மாற்றியெழுதி, சில சிறப்புகள், பரிகார பூஜைகள் முதலியவற்றை சேர்த்து, புதியதாக ஸ்தபுராணங்களை எழுதி வருகிறார்கள்தீதனால், சம்பந்தமே இல்லாமல் சிவன், ராமன்[9], இந்திரன் சப்த ரிஷிகள் போன்றவர்களை எல்லா ஊர்களுக்கும் வந்து-செல்லுமாறு செய்திறார்கள். ராமாயண-மகாபாரத குறிப்புகளுடன் கூட இயைந்து போவதில்லை. பக்தியுடன் புனையப்படும் இந்த ஸ்தலபுராணத்தில் சரித்திரம் என்பது இல்லாமலே போய்விடுகின்றது.

பாரம்பரிய கட்டிடக்கலையை வாஸ்து பெயரில் மாற்றுவது: மேலும், பழைய கோவில் இடிக்கப்பட்டு, புதியதாகக் கட்டப்படும் போது, முன்பிருந்த சன்னிதிகள் இடம் மாற்றப்படுகின்றன, சில புதியதாக சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. பக்தர்களைத் திருப்தி படுத்த எல்லா கடவுளர்களின் விக்கிரங்கள், பர்வார தேவதைகள் என்று சேர்த்துக் கொள்ளப் படுகின்றன. கல்வெட்டுகள் பற்றி கவலைப்படுவதில்லை. ஒன்று பாதிப்பகுதி புதியதாகக் கட்டப்படும் சுவர்களில் மறைந்து விடுகின்றன, இல்லை, அவற்றின் மீது சுண்ணாம்பு, பெயின்ட் அடிக்கப்பட்டு விவரங்கள் மறைந்து போகின்றன. இக்கால ஸ்தபதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப அல்லது, அவர் தமக்குத்தான் அத்தகைய வாஸ்து சாத்திரம் தெரியும் என்பது போல மாற்றியமைத்துக் கட்டப்படுகிறது. அதனால், அதற்கேற்றப்படி ஸ்தலபுராணமும் மாற்றியமைக்கப்படுகிறது. மக்களுக்கு பிரச்சினைகளும் அதிகமாகி வரும் போது, அப்பிரச்சினைகளையும் கருத்திற்கொண்டு, புதிய கதைகளை உருவாக்குகிறார்கள். கூட்டம் அதிகமாகி, வருமானம் பெருக ஆரம்பிக்கும் போது, அரசு ஏற்றுக் கொண்டு நடத்தும் போது, மற்ற எல்லா தொந்தரவுகளும், இடையூறுகளும், கோவில்-கோவில் வழிபாடு இவற்றிற்கு ஒவ்வாத விவகாரங்களும் வந்து விடுகின்றன. வேஷ்டி கரைகளினால், கரைகள் படிகின்றன, கோவில்கள் வியாபார ஸ்தலங்களாக மாறி விடுகின்றன. அப்பொழுது உண்மையான பக்தர்கள் அதிக அளவில் பாதிக்கப் படுகின்றனர்[10].

© வேதபிரகாஷ்

05-08-2015

[1] http://pallikondeswarar.com/about.html

[2] http://pallikondeswarar.com/

[3]  தெய்வநம்பிக்கையினையோ, பக்தியினையோ குறை சொல்லவில்லை, ஆனால், புதியதாக, இத்தகைய கதைகளை புனைவதற்கு முன்னர், அவற்றின் காரணகர்த்தாக்கள் அவற்றைப் பற்றி யோசித்திருக்க வேண்டும் என்று தான் எடுத்துக் காட்டப்படுகிறது.

[4]http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%88%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/article5778331.ece

[5] இன்று இடமாற்றம் கிடைப்பதற்கு கூட, விண்ணப்பம் போடுவதற்கு ஒரு கோவிலைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதாவது, காலத்திற்கு ஏற்ப மனிதர்கள் பிரோஜனமில்லை, உதவ மாட்டார்கள், என்று அறிந்த நிலையில், கடவுளை நம்புகின்ற நிலையில், இவ்வாறு கடவுளின் அனுக்கிரகத்தைப் பெறவும் வழிகளை மாற்றி உருவாக்குகிறார்கள்.

[6] http://www.maalaimalar.com/2011/03/02091527/surutapalli-pallikondeswarar-t.html

[7] இக்காலத்தில் சித்திரங்கள், சிற்பங்கள் வேறுமாதிரி உருவாக்கப்பட்டால், எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இது இரண்டு வகையில் நடந்து வருகின்றன.

 1. செக்யூலரிஸ்டுகள், நாத்திகர்கள் போன்றோர் அவ்வாறு செய்து வருகின்றனர்.
 2. இந்து-விரோதிகள் தாராளத்தன்மை, கலைஞர்களின் சுதந்திரம் என்ற ரீதீயில் வரையும் சித்திரங்கள்.
 3. பாதி வினாயகர்-பாதி ஆஞ்சனேயர் போன்ற விக்கிரகங்களை உருவாக்கிக் குழப்பும் நவீன சிற்பிகள், வாஸ்து விற்பனர்கள் என்றும் கிளம்பியுள்ளார்கள்.

[8]  இடைக்காலத்தில், முஸ்லிம்-முகலாயர் காலங்களில் சில மாற்றங்களை செய்து கோவில்கள் கட்டப்பட்டன. அதாவது, இடிக்கப்பட்ட கோவில்கள் மறுபடியும் திரும்பக் கட்டப்படும் போது, இடம் பெயர்ந்து புதிய இடங்களில் கட்டப்பட்ட போது, அத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால், அவற்றிற்கு வாஸ்து சாத்திரம் என்று அவர்கள் சொல்லவில்லை. முடிந்த அளவில் உண்மையினை பதிவு செய்தே அவ்வாறு கட்டினர். ஆனால் தென்னகத்தில், அத்தகைய பதிவுகள் இல்லை. மாறாக, ஸ்தலபுராணங்கள் மாற்றி எழுதப்பட்டன. உண்மைகளும் திரிக்கப் பட்டன.

[9] ராமன், சீதை, லக்ஷமணன் எல்லா ஊர்களுக்கு வந்ததாக, எல்லா கோவில்களிலும் வந்து வழிபட்டதாக எழுதி வைத்துள்ளனர். ஆனால், ராமர் காலத்திற்கும், இக்காலத்திற்கும் உள்ள இடைவெளி, சரித்திர ஆதாரங்களின் தேவை முதலியவற்றைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இவ்வாறான, புதிய கதைகளை உருவாக்குவதால், உண்மையான சரித்திரம், பாரம்பரிய வழக்குகள் முதலியவையும் பாதிக்கப் படுகின்றன என்பதனை அவர்கள் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

[10] இப்பொழுது, சிறிது-சிறிதாக இக்கோவில் அந்நிலையை அடைந்து வருகிறது. வாகனங்களை நிறுத்த, கழிப்பிடத்தை உபயோகப்படுத்த, என்று எல்லாவற்றிற்கும் வசூலிக்க ஆரம்பித்து விட்டார்கள். முன்னர் அமைதியாக நடந்து வந்து வழிபாடு, தரிசனம் காசுக்காக மாற்றியமைக்கப் பட்டுள்ளது.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in ஊத்துக்கோட்டை, காஞ்சி, காஞ்சிப் பெரியவர், சங்கராச்சாரி, சங்கராச்சாரியார், சயனம், சித்தூர், சிவன், சுருட்டப்பள்ளி, திருப்பதி, நந்தி, பள்ளி கொண்டீஸ்வரர், பாற்கடல், பிரதோசம், பிரதோஷம், பெரியவர், விசம், விஷம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to சுருட்டப்பள்ளி, பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்: சிவன், விஷ்ணு போல படுத்திருக்கும் இடம்!

 1. uthaman70 சொல்கிறார்:

  நடுநிலையுடன் ஆய்ந்து எழுதப்பட்ட வலை பதிவுகள். மூவாசைமிகுதியோர் தேர்ந்தெடுக்கும் புகலிடம். ‘கல்லார் பகை சேர் கலகம் விரும்பு’ மிடமாகிவிட.டது – கோயில்

 2. halasya sundaram iyer சொல்கிறார்:

  இந்துக்களின் நம்பிக்கையை கெடுப்பது போல விஷம் தோய்ந்த வார்த்தைகள். உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் பதிவு செய்யாமல் இருந்திருக்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s