பூகம்பத்தில் சேதமடைந்த உடுப்பி ஶ்ரீகிருஷ்ணர் கோவிலும், மசூதி கட்டிக் கொடுத்த ஜைனர்களும்!

பூகம்பத்தில் சேதமடைந்த உடுப்பி ஶ்ரீகிருஷ்ணர் கோவிலும், மசூதி கட்டிக் கொடுத்த ஜைனர்களும்!

Tantrasara sangraha - Madwacharya

Tantrasara sangraha – Madwacharya

மேற்கு நோக்கி ஏன் மூலவர்கள், கோவில்கள், மடங்கள் கட்டப்பட வேண்டும்?: மத்வாச்சாரியார் (1238-1317 CE) தமது “தந்த்ரசார” என்ற நூலில், விக்கிரகம் “பஸ்சிமபிமுக” என்று மேற்கு நோக்கி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல மற்ற மடங்களும், அம்மடங்களில் உள்ள விக்கிரகங்களும் மேற்கு நோக்கியே உள்ளன. திடீரென்று 13ம் நூற்றாண்டில் அத்தகைய மாற்று-முறையை ஏன் அறிமுகப்படுத்தினார் என்பது நோக்கத்தக்கது. அக்காலக்கட்டத்தில், கோவில்களை இடித்து மசூதிகள் கட்டப் பட்டு, பிறகு மறுபடியும், இந்துக்கள் அவற்றை புனர்-நிர்மாணம் செய்யும் போது, கிழக்குப்பகுதியை முகமதியர்கள் ஆக்கிரமிப்பில் இருந்ததால், மேற்கு பக்கத்தில் வாசலை வைத்துக் கொண்டு, உள்ளே மூலவரை மேற்கு நோக்கியே ஸ்தாபனம் செய்தனர். அப்பொழுது, இந்துக்கள் கிழக்கு நோக்கி வணங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முகமதியர் அத்தகைய நிலையை கேவலமாக, தங்களை விட குறைவாக வைத்திருக்க வேண்டும் என்ற போக்கில் அனுமதித்திருக்கலாம், இல்லை வற்புறுத்தியிருக்கலாம். மேலும், “மிலேச்சர்கள்” நுழைந்தது மற்றும் கைபட்டது, மிலேச்சர்களால் சேதமடைந்தது-உடைக்கப்பட்டது போன்ற கோவில்கள்-விக்கிரங்கள் ஒதுக்கப்பட்டன. அவ்வாறான கோவில்களை முகமதியர் மற்றும் ஆக்கிரமித்துக் கொண்டு, மசூதிகள் மற்றும் ஜைன கோவில்கள் கட்டிக் கொண்டிருக்கலாம். அந்நிலையில், ஜைனர்கள் கோவில்களில் உள்ள விக்கிரகங்களும் மேற்கு நோக்கி வைக்கப்பட்டன.  கேரளாவில், நிறைய கோவில்கள் மசூதிகளாக மாற்றப்பட்டுள்ளன. அங்கும் கோவில்கள், கர்நாடக பாணியில் தான் இருக்கின்றன, இல்லை கர்நாடகாவில் உள்ள கோவில்கள் கேரளபானியில் உள்ளன எனலாம். முகமதியர்களின் முரண்பாட்டிற்கு சேரமான் பெருமாள் மசூதியைக் குறிப்பிடலாம்[1], ஏனெனில், அது கிழக்கைப் பார்த்துள்ளது! கோவில் மசூதியாக மாற்றப்பட்டதால் அவ்வாறுள்ளது.

Kanakadasa facing East and Madvacharya facing West

Kanakadasa facing East and Madvacharya facing West

உடுப்பி கோவில் பூகம்பத்தில் சேதமடைந்ததா?: உடுப்பி கோவில் பூகம்பத்தில் சேதமடைந்தது என்று பார்த்தோம். இந்தியாவைப் பொறுத்த வரையில் 13-14ம் நூற்றாண்டுகளில் எந்த பூகம்பமும் ஏற்படவில்லை[2]. 14ம் நூற்றாண்டில் அப்பகுதியில் பூகம்பம் ஏற்பட்டவில்லை என்றால், இக்கோவில் சேதமடைந்தது எப்படி அன்று ஆராய வேண்டும். இயற்கையாக சேதப்படவில்லை என்றால், யாரோ தாக்கியிருக்கிறார்கள் என்றாகிறது, தாக்கப்பட்டது உண்மையாகிறது. அப்படியென்றால், அக்கோவிலைத் தாக்கி இடித்தது யார் என்று ஆராய வேண்டியுள்ளது. ஆட்சி, அதிகாரம், ஆளுமை சக்திகளுடன் இருந்தவர்கள் முகமதியர் மற்றும் ஜைனர்கள் என்றால், அவர்களில் ஒரு கூட்டம் அவ்வாறு செய்திருக்க வேண்டும். அதனை, உருவகமாக பூகம்பம் வந்து கோவில் சுவர்கள் பிளவு பட்டன என்றெல்லாம் செவிவழி கதைகளில் பதிவு செய்துள்ளார்கள். அதேபோல, அக்கதையில், கனகதாசர் கோவிலுக்கு எதிரிலேயே குடிசைப் போட்டுக் கொண்டு காத்திருந்தார் எனும் போது, ஒருவேளை அவர் முகமதியர் மற்றும் ஜைனர்களின் ஆளா என்றும் மற்றவர்கள் சந்தேகித்திருக்கக் கூடும். ஆனால், பிறகு உண்மையறிந்ததும், அவர் பக்தர் என்று உயர்த்தி “கனகதாசர் ஜன்னல்” போன்ற கதைகளை உருவாக்கியிருக்கலாம்.  உண்மையில் அக்கதையின் படி, கனகதாசர் வலது பக்க சுவர் அர்கில் இருந்து, தனக்கு தரிசனம் தரும் படி வேண்டிக் கொண்டபோது, கிருஷ்ணருடைய விக்கிரகம், கிழக்கிலிருந்து மேற்கு பக்கமாக திரும்பியதாம். கனகதாசரும் மகிழ்ச்சியுடன் வழிபட்டார்[3].  ஆனால், இது மத்வாச்சாரியாரின், தந்திரசார நூலின் விதிப்படி எதிராக உள்ளது. எனவே, “கனக-கன-கின்டி” என்ற கனகதாசரின் ஜன்னல், மேற்குப் பக்க சுவரில் பிறகு கட்டியிருக்க வேண்டும்[4]. மத்வ-சம்பிரதாயத்தின் படி, பூஜை செய்பவர் என்றுமே, மேற்குப் பார்த்து, பூஜை செய்யக் கூடாது.

Four Tirtankaras facing cardinal points-Atma Vallabh Smarak Jain Mandir-Punjab

Four Tirtankaras facing cardinal points-Atma Vallabh Smarak Jain Mandir-Punjab

உருவ வழிபாட்டை, கடவுள் கொள்கையினை மறுத்த ஜைனர்கள் கோவில்களைக் கட்டுவது: வேதங்களை எதிர்த்த ஜைனர்கள், இந்துக்களின் சில நம்பிக்கைகளை மறுத்தார்கள், மற்ற எல்லா விசயங்களிலும் ஒத்து போனார்கள். சாது-சாத்வி, உபாத்யாய, ஆச்சார்ய, சித்த மற்றும் ஹரிஹந்த / தீர்த்தங்கரர் என்று பட்டிப்படியாக மரியாதைக் கொடுத்து வணங்க ஆரம்பித்தபோது, கோவில்களை உருவாக்கியிருக்க வேண்டும் அல்லது இந்துக்களின் கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க வேண்டும். ஜைன-இந்து கோவில்கள் எந்தவிதத்திலும் வித்தியாசமாகக் காணப்பட்டதில்லை. உள்ளே தீர்த்தங்கரர் விக்கிரகம் அல்லது சிலை வைக்கப்படுவதைத் தவிர மற்ற கட்டுமான விசயங்களில் இந்து கோவில்களைப் போன்றே இருக்கின்றன[5]. மூலவர் விக்கிரங்களைத் தவிர வித்தியாசம் எதுவும் இல்லை. கடவுளை மறுத்த-மறுக்கும், உருவ வழிபாட்டை மறுத்த-மறுக்கும், ஜைனர்கள் எவ்வாறு கோவில்களைக் கட்டி, உள்ளே விக்கிரகங்களை வைத்து வழிபட செய்ய ஆரம்பித்தார்கள் என்பதும் புதிரே.  மேலும் ஜைனர்களைப் போல, இந்துக்கள் தமது கோவில்களை இடிக்க, முகமதியர்களிடம் சமரசம் செய்து கொள்ளவில்லை, உடன்படிக்கை போட்டுக் கொள்ளவில்லை. ஆனால், அக்பர் காலத்தில், ஜைனமதத் தலைவர்களே அக்பரைக் கண்டு, சந்தித்து, உரையாடி அத்தகைய சமரசங்களை செய்து கொண்டனர்.

Jaina cosmology - Vastu

Jaina cosmology – Vastu

சமாதிகளை வழிபட்ட ஜைனர்கள் கோவில்களில் சிலை வைத்து வழிபட்டது: ஜைன கோவில், தேரசர், பசடி, விமலவாசி, லுனாவஷி, போன்ற பெயர்களுடன் அழைக்கப்படுகின்றன.  எட்டாம் நூற்றாண்டிற்கு முன்னால் ஜைன கோவில்கள் சைத்ய, சேதியா, ஜைனாலயா, ஜினாகேஹ, ஜீனபாவன என்றெல்லாம் தான் அழைக்கப்பட்டன[6]. அதாவது பௌத்தர்களைப் போன்று, இறந்தவர்களின் மீது சைத்யம் போன்ற நினைவிடங்களைக் கட்டி, அங்கு வழிபட்டனர். ஜைனத்தில் உபவாசம் இருந்து இறத்தல், வடக்கிருந்து இறந்தல் என்ற விரதம் பிரபலமாக இருந்தது. அவ்வாறு தீர்மானித்தவர்கள் உண்ணாமல் இருந்து உயிர் நீத்தனர். அவர்கள்ன் சமாதிகள் வணங்கப் பட்டன. “பாதங்கள்” வழிபடும் முறையினையும், பௌத்தத்திலிருந்து பெற்றிருக்கலாம். ஜைன அரசர்கள், வணிகர்கள், வியாபாரிகள் என்று பல ஜைன பணக்காரர்கள் நன்கொடை கொடுத்து கோவில்களைக் கட்ட வைத்தனர். ஜைன ராஜவம்சத்து மகளிரும், வைப்பாட்டிகளும் கூட பணம் கொடுத்தனர்[7]. ஜைன அரசர்களிடம் ஆசைநாயகிகளை வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தது என்பதும் நோக்கத்தக்கது. கோமதீஸ்வரர் சிலையும் அவ்வாறே கட்டப்பட்டது[8]. பசடி என்ற பிரயோகம் பிறகு வந்தது. 10ம் நூற்றாண்டிற்குப் பிறகு, ஜைன ஆதிக்கம் குறைந்தது. அரசர்கள் ஜைனத்தை விடுத்து, சைவத்திற்கு மாற ஆரம்பித்தனர்[9].

ஜைன கோவில் கட்ட, கட்டிட முறையில்லை: ஜைனகோவிலுக்கு என்று, ஒரு குறிப்பிட்ட கட்டிட அமைப்பு, கட்டிடக்கலை, அல்லது கட்டுமான முறை இல்லை. ஜைனாகமங்களும் அவைப் பற்றிக் குறிப்பிடவில்லை. இதனால், ஒன்று அவர்கள் கோவில்களையேக் கட்டியதில்லை. உள்ள கோவில்களை, ஆதிக்கத்துடன் இருக்கும் போது, ஆக்கிரமித்துக் கொண்டு, மாற்றியமைத்தனர். இந்துக்கள் ஒப்புக்க்கொள்ளாத போது, இடித்தும் கட்டிக் கொண்டனர். இதனால், ஜைன-கோவில்கள் பலவித கட்டுமான உருவங்களில் காணப்படுகின்றன. வடவிந்திய ஜைன-கோவில்கள், தென்னிந்திய ஜைன-கோவில்களை விட வேறுபட்டுக் காணப்படுகின்றன. வடவிந்திய மற்றும் தென்னிந்திய ஜைன-கோவில்களை விட, மேற்கு-இந்திய ஜைன-கோவில்கள் மாறுபட்டுக் காணப்படுகின்றன. பொதுவாக கோபுரம் உள்ளது, கோபுரம் இல்லாதது என்று இரண்டாகப் பிரிக்கலாம். கோபுரம் இருக்கும் கோவில்களில், தூண்கள் அதிகமாக இருக்கின்றன. ஜைனகோவில் நூறாண்டுகளாக இருந்தால், அதனை “தீர்த்த” என்றழைக்கிறார்கள்.

இந்துக்கள் தங்களது இழந்த கோவில்களை மீட்டுக் கொண்டது, திரித்து எழுதப்படுகிறது: ஜைனர்கள் மற்றும் பிறகு முகமதியர்களளின் ஆதிக்கம் குறைந்தவுடன், மறுபடியும் இந்துக்கள் அக்கோவில்களில் தங்களது விக்கிரகங்களை பவைத்து, வழிபாட்டைத் தொடங்கியிருக்கலாம். அதனால் தான், இந்து கோவில்களில் சில பௌத்த-ஜைன சிலைகள் உருவங்கள் காணப்படுகின்றன. உண்மையில் இந்துக்கள் அவர்களின் வழிபாடு ஸ்தலங்களை ஆக்கிரமித்துக் கொள்ளவில்லை, மாறாக தங்களது இடங்களைத் திரும்ப உரிமைகளுடன் பெற்றுக் கொண்டார்கள். பெருந்தன்மையுடன் அந்த விக்கிரகங்கள், சிலைகள் மற்றும் உருவங்களை விட்டு வைத்தனர். ஆனால், இன்றைய எழுத்தாளர்கள், அதனையும் குதர்க்கமாக சித்தரித்து, திரித்து எழுத ஆரம்பித்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

10-07-2015.

[1] Cheraman Juma Masjid is a mosque in the south Indian state of Kerala. Believed to be built in 7th century CE by Malik Bin Deenar, it is thought to be the oldest mosque in India, and the second oldest mosque in the world to offer Jumu’ah prayers. Constructed during the lifetime of Muhammad, the bodies of some of his original followers are said to be buried there. Unlike other mosques in Kerala state, which face westwards (towards the Qiblah), this mosque faces eastwards.

[2] N. N. Ambrasays, Three little known early earthquakres in India,  Current science,  Vol.86, No.4, 25 February, 2004, pp.506-508; http://www.iisc.ernet.in/~currsci/feb252004/506.pdf

[3] Legend has it that the idol of Krishna, which heretofore had been facing east, turned around to face west, as the western wall collapsed so that Kanakadasa could see the face of his favorite idol.

http://www.harekrsna.com/sun/features/10-07/features800.htm

[4] Legend has it that the idol of Krishna, which heretofore had been facing east, turned around to face west, as the western wall collapsed so that Kanakadasa could see the face of his favorite idol. The construction (according to vastu shilpa) of the temple does not support this legend.

http://www.harekrsna.com/sun/features/10-07/features800.htm

[5] Panchakuta Basadi (or Panchakoota Basadi) is located in the Kambadahalli village of the Mandya district,Karnataka state, and this temple appears and has Hindu idols, sculptures and construction pattern. According to the art critic and historian S. Settar, generally, Brahmadeva pillars found in front of ancient Jain temples do not house sculptures of the Brahma Yaksha or the god Brahma, rather they find their origins in the Manasthambha (sthambha lit, “pillar”) and have images of the Sarvanubhuti Yaksha.

[6] Prior to the 8th century, Jain temples were called  ChaityaCediyaJainalayaJinageha  or Jinabhavana, the  term Basadi being used only later on.

Malini  Adiga, The Making of Southern Karnataka: Society, Polity and Culture in the early medieval period, AD 400-1030,  Orient Longman, Chennai, 2006, p.251.

[7] Women made endowments to Jain causes too, a royal concubine Nandavva and a wealthy feudal lady Attimabbe being examples.

Malini  Adiga, The Making of Southern Karnataka: Society, Polity and Culture in the early medieval period, AD 400-1030,  Orient Longman, Chennai, 2006, p.259

[8] King Butuga II and minister Chavundaraya were staunch Jains which is evident from the construction of the Gomateshwara monolith. From the Kudlur plates of Butuga II, as pointed out by  Malini  Adiga, opto.cit, p. 256.

[9] However evidence shows a decline in its popularity among local leadership (landlords or gavundas) from the 10th century when they began to favour Shaivism.

Adiga, Malini (2006) [2006]. The Making of Southern Karnataka: Society, Polity and Culture in the early medieval period, AD 400-1030,  Orient Longman, Chennai, 2006, p.253.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அழிப்பு, ஆலயம், இடிப்புல் உடைப்பு, உடுப்பி, கனகதாசர், கர்நாடகா, கிழக்கு, குஜராத், கேரள, கேரளா, கோவில், சமாதி, ஜீனாலயம், துருக்கர், பசடி, பள்ளிவாசல், மசூதி, மடம், மத்வாச்சாரி, மந்திர், மேற்கு, வழிபாடு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s