உடுப்பியில் ஶ்ரீகிருஷ்ணர்-பலராமர் விக்கிரங்கள் வந்த விவரங்கள் – துவாரகையிலிருந்து எப்படி-ஏன் வரவேண்டும்?

உடுப்பியில் ஶ்ரீகிருஷ்ணர்-பலராமர் விக்கிரங்கள் வந்த விவரங்கள் – துவாரகையிலிருந்து எப்படி-ஏன் வரவேண்டும்?

Madwacharya bringing Krishna Idol

Madwacharya bringing Krishna Idol

19-12-2014 (வெள்ளிக்கிழமை):  இன்று உடுப்பி மற்றும் அருகில் உள்ள கோவில்கள் சுற்றிப்பார்க்கச் சென்றோம்.

உடுப்பிரென்ற பெயர் வர காரணம்: “உடுப்பி” என்ற பெயர் “ஒடிப்பு” என்ற துளு வார்த்தயிலிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால், மல்பே என்ற இடத்தில் உள்ள வடபந்தேஸ்வரருடன் தொடர்புப் படுத்தப் படுகிறது. இன்னொரு விளக்கத்தின் படி, சமஸ்கிருதத்தில் “உடு” மற்றும் “ப” என்றால், “நட்சத்திரங்கள்” மற்றும் “தலைவர்” என்ற பொருளில் வருகிறது. அதாவது, தட்சனின் 27 புதல்விகள் சந்திரனை மணந்து கொண்டதால், அவர்கள் ஒளி இழக்கக் கடவதாக என்று தட்சன் சாபமிட்டான். அதனால், அவர்கள் அங்கிருந்த சந்திரமௌலீஸ்வரரை வேண்டிக் கொள்ள அவர்கள் சாப நிவர்த்திப் பெற்றனராம். அதனால், சந்திரன் “நட்சத்திரங்களின் அதிபதி” என்றபொருளில், உடுப்பி என்று அவ்விடம் வழங்கப்படுகிறது என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது[1]. கடற்கரையில் இப்பகுதி அமைந்துள்ளதால், மேற்கு பக்க வானியல் நிகழ்வுகளை, அங்கிருந்த வானியல் வல்லுனர்கள் கவனித்து வந்தார்கள் என்று தெரிகிறது. ஏனெனில், இடைக்காலத்தில் இந்திய வானியல் தென்னிந்தியாவில் தான் தொடர்ந்து வளர்ந்து வந்தது[2]. மேலும், இப்பகுதி சக்தி வழிபாட்டுப் பகுதியாக இருந்தததினால், வானியல், கணிதம் முதலிய துறைகளுக்கு, சக்தி வழிபாட்டவர்கள் மாறியபோது, வல்லுனர்களாக இருந்தனர்[3].  உடுப்பி மாவட்டத்தில் ஆறு துறைமுகங்கள் இருக்கின்றன – மல்பே, பெலெகேரி, பவினகுர்வெ, டடாதி, ஹொன்னேவர் மற்றும் மங்கி. இதனால், மேற்குக் கடற்கரையில், கப்பல் மற்றும் அதனுடம் மக்கள் போக்குவரத்து நடந்திருக்கிறது. இடைக்காலத்தில் கப்பல் ஓட்டுவதற்கு, வாபியல் மற்றும் கணித ஞானம் கப்பலோட்டிகளுக்கு, மாலுமிகளுக்கு அவசிய வேண்டும். எனவே, சந்திர-சூரியர்கள், நடசத்திரங்கள் இவற்றை கடவுளர்களாக, குறிப்பிட்ட இடங்களில் கோவில்களாக அமைத்திருப்பது அந்த ஞானத்தின் செயல்முறை பிரயோகம் உபயோகம் மற்றும் வளர்ச்சி ஆகும்.

Krishna-Madwacharya

Krishna-Madwacharya

துவாரகையிலிருந்து வந்த விக்கிரகம்.

Udupi malpe and  Belekeri ports

Udupi malpe and Belekeri ports

உடுப்பி மாவட்டத்தில் ஐந்து துறைமுகங்கள் இருக்கின்றன. உடுப்பி கிருஷ்ணர் கோவிலுக்கு போவதற்கு முன்னர், அனந்தேஸ்வரர் மற்றும் சந்திரமௌலீஸ்வரர் கோவில்களுக்குச் சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஐதீகமும் உள்ளது.

Anatheswara Udupi

Anatheswara Udupi

மேலே அனந்தேஸ்வரர் மற்றும் கீழே சந்திரமௌலீஸ்வரர்:

Chandra mauleswara Udupi

Chandra mauleswara Udupi

துவாரகையிலிருந்து வந்த விக்கிரகம்: மத்வாச்சாரியார் (1238-1317 CE), என்ற துவைத தத்துவ ஞானியான இவரது இயற்பெயர், வாசுதேவ. பூரணபிரஞ மற்றும் ஆனந்த தீர்த்த என்று அழைக்கப்பட்டார்.   ஒரு நாள், மல்பே கடற்கரையில் காலைக்கடன்களை செய்து கொண்டிருக்கும் போது, ஒரு கப்பல் பெருங்காற்றில் சிக்கிக் கொண்டு தவிப்பதைப் பார்த்தார். உடனே, அவர் அக்கப்பல் கரையில் வர உதவி செய்தார். இதனால் மகிழ்ந்த அக்கப்பலில் இருந்த மரக்காயர் மற்றும் கப்பலோட்டிகள், தம்மிடம் இருந்த இரு விக்கிரகங்ளை அவருக்கு கொடுத்தனர். விசாரித்தபோது, அவை துவாரகையில் கோபிச்சந்தனம் எனப்படுகின்ற பாறைகளில் கிடைத்ததாகச் சொன்னார்கள். அவை பலராமர் மற்றும் கிருஷ்ணரின் விக்கிரங்கள் ஆகும். பலராமர் விக்கிரகத்தை மல்பே அருகில் பிரதிஸ்டை செய்ய, அது வடபந்தேஸ்வரர் என்றழைக்கப் பட்டார். கிருஷ்ணர் விக்கிரகத்தை உடுப்பியில்  பிரதிஸ்டை செய்தார். ஶ்ரீ ரகுவர்ய என்ற மததீஸரின் படி, ஒரு கப்பல் புயலில் சிக்கி, மல்பே கடற்கரையில் வந்து மோத, அதிலுள்ள பொருட்கள் எல்லாம் கரையில் சிதறிக்கிடந்தன. அப்பொழுது, மத்வாச்சாரியார் அவற்றில் விக்கிரங்கள் இருப்பதை உணர்ந்து அங்கு வந்து அவற்றை எடுத்துக் கொண்டார் என்றும் உள்ளது[4]. 1241ல் துவாரகை கோவிலும், முகமதியர்களால் தாக்கப்பட்ட போது, அங்கிருந்த கோவில் விக்கிரகங்களைக் காப்பாற்ற பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டது[5]. பஞ்ச துவாரகைகளில் டாகோர் போன்ற இடங்களில் விக்கிரகத்தின் மேலே, பழுதான கோடுகள் இருந்தது குறிப்பிடப்படுகிறது[6]. ஆகவே, துவாரகையிலிருந்து தப்பித்த விக்கிரகங்கள் இங்கு வந்திருக்கலாம். உண்மையில் முகமதியர்களின் கோவில் இடிப்பு, உடைப்பு மற்றும் அழிப்புகளிலிருந்து, எப்படி விக்கிரகங்கள் தப்பின அன்று ஆராயாமல், உடுப்பி கிருஷ்ணர் விக்கிரகம், முருகனா என்றேல்லாம் திசைத்திருப்பும் போக்கு காணப்படுகிறது[7]. உள்ளூர் டிவிசெனல்களும் இதனை உசுப்பி விட்டுக் கொண்டிருக்கின்றன[8]. உண்மை சரித்திரத்தை மறைத்து, அதனை அறியமுடியாமல், திசைத்திருப்பும் போக்கை இன்றைய “வல்லுனர்கள்” செய்து வருகின்றனர்.

Vadabhandeshwara, Balarama -temple, Malpe

Vadabhandeshwara, Balarama -temple, Malpe

வடபந்தேஸ்வரர் என்கின்ற பலராமர் கோவில்.

Vadabhandeshwara, Balarama -idol and temple, Malpe.

Vadabhandeshwara, Balarama -idol and temple, Malpe.

கோவிலும், உள்ளே இருக்கும் பலராமர் விக்கிரமும்.

உடுப்பி கோவில் - மடம் - நுழைவு வாசல்

உடுப்பி கோவில் – மடம் – நுழைவு வாசல்

ருக்மணியின் விருப்பப்படி, விஸ்வகர்மா செய்த விக்கிரகம்: இந்த கிருஷ்ணர் விக்கிரகம் விசுவகர்மாவினால், ருக்மணியின் வேண்டுகோளுக்கிணங்க செய்யப்பட்டது. குழந்தை கிருஷ்ணரின் வடிவம் யசோதைக்கு மட்டும் தான் தெரியும். ஒரு முறை ருக்மணி அவ்வடிவத்தைப் பார்க்க வேண்டும் என்று வேண்டிகொள்ள, அவர் அவ்வாறே குழந்தையாக மாறிய போது, விஸ்வகர்மா அவ்வுருவத்தை மாதிரியாக வைத்து, இவ்விக்கிரகத்தை வடித்தான் என்று புராணக்கதை சொல்கிறது. ருக்மணியால் செய்விக்கப்பட்டதால், “ருக்மிணி கராசித” என்றே வழங்க்கப்படுகிறது. இந்த விக்கிரகத்தை யாரும் நேரில் பார்க்க முடியாது. “நவகிரக கிடிக்கி” அதாவாது, ஒன்பது துவாரம் உள்ள, வெள்ளியினால் ஆன, ஜன்னல் மூலம் தான் தரிசிக்க முடியும்[9].  தப்பித்து வந்த விக்கிரகம் என்பதனால், இவ்வாறு தூராகை கிருஷ்ணர், ருக்மணி முதலியோருடன் இணைத்து, கதைகளை உருவாக்கிருக்கலாம். கனக தாசர் (1508-1606) வந்தபோது, அவர் தாழ்ந்த ஜாதி என்பதனால், அவரை கோவிலுக்குள் விடவில்லை, அதனால், அவரும் ஜன்னல் வழியாகப் பார்த்தார். அதனால், அந்த ஜன்னல் “கனகன கிண்டி” என்றழைக்கப்படுகிறது. எல்லோரும் பார்க்கக் கூடிய ஜன்னலுக்கு ஒன்பது ஓட்டைகள் இருப்பதால், சரியாக விக்கிரகத்தைப் பார்க்க முடியவில்லை, ஆனால், மூன்றே துவாரங்கள் உள்ள கனக-ஜன்னலிலிருந்து நன்றாக பார்க்கலாம். இடைக்காலத்தில், மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் ஜைனர்களின் தாக்குதல்களும் இருந்தபோது, முகமதியர்களின் தாக்குதல் பற்றிய விவரங்கள் தெரிந்தபோது, குறிப்பாக 1311ல் மாலிக்காபூர் கொள்ளையெடுத்துச் சென்றாபோது, இந்துக்கள் கவனமாக இருக்க வேண்டிய அவசியத்தையும் நோக்கத்தக்கது. இன்றும் பாதுகாப்பு என்ற பெயரில், எல்லோருமே, ஒரு மாதிரியாகத்தான் நடத்தப் படுகிறார்கள்.

Navagruha kindi - widow witj nine holes

Navagruha kindi – widow with nine holes

“நவகிரக கின்டி” எனப்படுகின்ற ஒன்பது ஓட்டை ஜன்னல் – இதன் வழியாகத்தான், உடுப்பி கிருஷ்ணர் விக்கிரகத்தைப் பார்க்க வேண்டும்.

Kankana kindi - Kanakadasa window

Kankana kindi – Kanakadasa window

“கனகன கின்டி” என்ற மூன்று தூவர ஜன்னல் வழியாக கனக தாசர் பார்த்த ஜாலி!

உருவவழிபாடு எதிர்ப்பு அரேபியர்முஹம்மதியர், முகாலயர் கையாண்ட நாசவேலைகள்[10]: இடைக்காலத்தில், அரேபியர், முஹம்மதியர், முகாலயர் படையெடுப்புகளினால் துவாரகை சுற்றியுள்ள பகுதிகள் அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றின் தாக்கமும் இக்கதைகளில் உணரப்படுகிறது. அவர்கள் விக்கிரங்கள், சிலைகள், உருவ வழிபாடு, விக்கிர ஆராதனை, மனிதர்களை சிலைகளாக வடிப்பது, கலைநயத்துடன் சிற்பங்களை உருவாக்குவது முதலியவற்றை அழிக்கும், ஒழிக்கும் கொள்கையினைக் கொண்டவர்களாக இருந்தமையால், அவர்கள் பாரதத்திலுள்ள இப்பகுதிகள், திடீரென்று படையெடுத்து வந்தபோது, அதிரடியாக கொள்ளையடிக்க வந்தபோது, அத்தகைய சிலைகளை உடைக்கும் சித்தாந்தத்துடன் கோவில்களைத் தாக்கி உடைக்க, இடிக்க மற்றும் அழிக்க ஆரம்பித்தார்கள். மக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் அவர்கள் அவ்வாறு செய்யமுடியவில்லை, அல்லது செய்தாலும், மறுபடி-மறுபடி பழுது பார்த்து முந்தயது போன்றே கட்டி வந்தனர். ஆனால், ஒதுக்குப் புறமமாக அமைந்த கோவில்கள் அதிகமாகவே பாதிக்கப் பட்டன. மேலும், அதிகமான அளவில் குதிரைப் படைகளுடன் வந்தபோது, மக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் உள்ள கோவில்களும் பாதிக்கப் பட்டன. இதனால் தான், கோவில் விக்கிரங்கள் ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டது, மறைத்து வைக்கப்பட்டது, குளம், ஏரிகளில் எறியப்பட்டது, மீட்கப்பட்டது, பிறகு கோவில்கள் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது என்றெல்லாம் கதைகளில் உருவகமாக சொல்லப்பட்டது.

உடுப்பி கிருஷ்ண விக்கிரகம்- மத்வர் ஸ்தாபித்தது

உடுப்பி கிருஷ்ண விக்கிரகம்- மத்வர் ஸ்தாபித்தது

விக்கிரகம் மக்களால் காக்கப் பட்டு பிறகு பிரதிஷ்டை செய்யப் பட்ட கதைகளில் உண்மை உள்ளது: நாட்டுப் புறப்பாடல்கள், பஜனைகள், கூத்துகள், முதலிவற்றிலும் அவற்றின் தாக்கம் தெரிகிறது. ஆரத்தி என்பதில் அதிகமாக மக்கள் பங்கு கொள்வது என்பது இங்கு முக்கிய கோவில் வழிபாட்டு முறைகளில் பிரதானமாக உள்ளது. குறிப்பாக விக்கிரகம் முக்கியமாகக் கருதப்பட்டது. அதற்காக உயிரையும் கூட விக்கிரகம் காயமடைந்தது, ரத்தம் வந்தது போன்றவை, இந்துக்கள் அவற்றை தெய்வமாக மதித்தது தெரிகிறது. மேலும் அவை தாக்கப்பட்டன, உடைக்கப்பட்டன, என்றும் புரிந்து கொள்ளமுடிகிறது. கிருஷ்ண பக்தர்களே, விக்கிரகத்தை அவ்வாறு செய்திருக்க முடியாது. எனவே, இடை காலத்தில், இவ்விக்கிரகம் அந்நியர்களால் தாக்குதலுக்குட்படுத்தப் பட்டிருக்கலாம். விவரங்கள் மக்கள் தியாகம் செய்ய தயாராக இருந்தனர் என்றும் தெரிகிறது. (சோமநாதபுர விக்கிரகத்தைக் காக்க ஆயிரக் கணக்கான இந்துக்கள் வரிசையாக நின்று பலியானார்கள் என்று சரித்திரத்திலேயே பதிவாகியுள்ளது).

© வேதபிரகாஷ்

08-07-2015.

[1] http://udupi.nic.in/History.html

[2] K. Venkateswara Sarma, A history of the Kerala school of Hindu astronomy (in perspective), Vishveshvaranand Institute, Hoshiarpur, 1972.

[3] K. Kunjunni Raja, Astronomy and Mathematics in Kerala, Adyar Library and research Centre, Madras, 1995.

[4] http://udipikrishnamutt.com/article/id/735/legeds-of-krishna-mutt-udupi

[5] When Mohammad shah attacked on Dwarka and broke the temple, Five Brahmin males fought with them and lost their lives and become martyr. Their names were Virajee Thakar, Nathu Thakar, Karasan Thakar, Valjee Thakar, and Devasee Thakar. Their shrines are near to the temple. Muslims have changed the place in ‘Panch Peer’. http://dwarkadhish.org/jagad-mandir.aspx

[6] https://panchadwaraka.wordpress.com/2013/10/13/dakor-one-of-the-pancha-dwakrakas-kheda-gujarat/

[7] http://www.kamakotimandali.com/blog/index.php?p=1360&more=1&c=1&tb=1&pb=1

[8] http://video.madari.in/video/07ZMwp1ynNn/TV9-Discussion–Udupi.html

[9] http://udipikrishnamutt.com/article/id/734/sri-krishna-mutt

[10] https://panchadwaraka.wordpress.com/2013/10/26/dakor-temple-details-maqbaras-features-explained/

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in உடுப்பி, கனகதாசர், கனகதாஸர், கர்நாடகா, கிருஷ்ணர், குஜராத், ஜன்னல், டாகோர், துருக்கர், துறைமுகம், துவாரகை, பலராமர், மத்வர், மத்வாச்சாரி, மத்வாச்சாரியார், மல்பே, முகமதியர், முஸ்லிம், யசோதா, யசோதை, ருக்மணி, ருக்மினி, விக்கிரகம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s