தர்மஸ்தல மஞ்சுநாத, சௌதட்கா வினாயாக, குக்கி சுப்ரமண்யா கோவில்கள்: புராணம், சரித்திரம் மற்றும் தரிசனம்!

தர்மஸ்தல மஞ்சுநாத, சௌதட்கா வினாயாக, குக்கி சுப்ரமண்யா கோவில்கள்: புராணம், சரித்திரம் மற்றும் தரிசனம்!

தர்மஸ்தல பஹுபலி ஜைன சிலை

தர்மஸ்தல பஹுபலி ஜைன சிலை

தர்மஸ்தல பஹுபலி ஜைன சிலை  இருப்பிடம் – நன்றி கூகுள் மேப்.

தர்மஸ்தல பஹுபலி ஜைன சிலை.கொடிக்கம்பம்

தர்மஸ்தல பஹுபலி ஜைன சிலை.கொடிக்கம்பம்

தர்மஸ்தல பஹுபலி ஜைன சிலை.கொடிக்கம்பம்.

தர்மஸ்தல பஹுபலி கதை

தர்மஸ்தல பஹுபலி கதை

தர்மஸ்தல பஹுபலி கதை – அறிவிப்புப் பலகை.

தர்மஸ்தல பஹுபலி ஜைன சிலை.2

தர்மஸ்தல பஹுபலி ஜைன சிலை.2

தர்மஸ்தல பஹுபலி ஜைன திகம்பர சிலை.

தர்மஸ்தல பஹுபலி ஜைன சிலை. பக்கங்கள்

தர்மஸ்தல பஹுபலி ஜைன சிலை. பக்கங்கள்

தர்மஸ்தல பஹுபலி ஜைன சிலை. சுற்றி வந்தால் கானப்படும் பக்கத்தோற்றங்கள்!

தர்மஸ்தல பஹுபலி ஜைன சிலை. பின் - பக்கவாட்டுப் படங்கள்

தர்மஸ்தல பஹுபலி ஜைன சிலை. பின் – பக்கவாட்டுப் படங்கள்

தர்மஸ்தல பஹுபலி ஜைன சிலை. பின் – பக்கவாட்டுப் படங்கள்.

தர்மஸ்தல பஹுபலி திகம்பர ஜைன சிலை: மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் ஜைனர்களின் ஆதிக்கம் இடைக்காலத்தில் இருந்துள்ளது, இப்பொழுதும் தொடர்கிறது. 39 அடி உயரம், 170 டன் எடை கொண்ட பஹுபலி திகம்பர ஜைன சிலை 1982ல் நிறுவப்பட்டது[1]. ரஞ்சல  கோபால் ஷெனாய் என்பவரின் பொறுப்பில் 1967ல் இச்சிலை கரகால் என்ற இடத்தில் செதுக்க ஆரம்பிக்கப் பட்டு, 1970ல்  முடிவடைந்தது. பிறகு வண்டியில் ஏற்றப்பட்டு அது 64 கி.மீ தூரம் பயணித்து தர்மஸ்தலாவை அடைந்தது. டிசம்பர்.25, 1975ம் ஆண்டு, இச்சிலை நிறுவப்பட்டது. 108 ஜைன ஆச்சாரியார்களின் ஆசிர்வாதத்துடன்,  பிப்ரவர்.3, 1982ம் ஆண்டு “மஹாமஸ்தபிஷேகம்” செய்விக்கப்பட்டது.  பிப்ரவரி 1995ல் இரண்டாவது “மஹாமஸ்தபிஷேகம்” செய்விக்கப்பட்டது[2]. கர்நாடகாவில் உள்ள ஐந்து உயர்ந்த ஜைன சிலைகள், அவை இருக்கும் இடம் முதலிய வவரங்கள் பின்வருமாறு:

எண் இடம் உயரம்அடிகளில் மாவட்டம் காலம் / ஆண்டு
1 சரவணபெலகோலா 57 ஹஸன் 973 CE
2 கர்கலா 42 உடுப்பி 1430 CE
3 தர்மஸ்தல 39 தக்ஷிண கன்னட 1973 CE
4 வேணூர் 35 தக்ஷிண கன்னட 1604 CE
5 கோம்மதகிரி 20 மைசூர் 12ம் நூற்றாண்டு CE

விரேந்திர ஹெக்டே குடும்பம் இச்சிலை நிறுவ பெரும்பங்கு வகித்துள்ளது. அதே குடும்பம் தான் மஞ்சுநாதர் ஜோவில் நிர்வாகத்தையும் கவனித்து வருகிறது. மஞ்சுநாத கோவிலுக்கு அருகில் இந்த பஹுபலி சிலையுள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கும், ஜைன பக்தர்களுக்கும் செல்லும் இடமாக உள்ளது.

Route map SowthadkaTemple

Route map SowthadkaTemple

சௌதட்கா விநாயகர் கோவில் இருக்கும் இடம் – நன்றி குறிப்பிட்டுள்ள இணைதளம்.

சௌதட்கா வினாயாகர் கோவில்- நுழைவு வாசல்

சௌதட்கா வினாயாகர் கோவில்- நுழைவு வாசல்

சௌதட்கா வினாயாகர் கோவில்- நுழைவு வாசல்.

சௌதட்கா வினாயாகர் கோவில்- நுழைவு- மணிகள்

சௌதட்கா வினாயாகர் கோவில்- நுழைவு- மணிகள்

சௌதட்கா வினாயாகர் கோவில்- நுழைவு- மணிகள்.

சௌதட்கா வினாயாகர் கோவில்- மணிகள் கட்டப்பட்டுள்ளன

சௌதட்கா வினாயாகர் கோவில்- மணிகள் கட்டப்பட்டுள்ளன.

சௌதட்கா வினாயாகர் கோவில்- மணிகள் கட்டப்பட்டுள்ளன.

சௌதட்கா வினாயாகர் - மணிகள் கட்டப்பட்டுள்ளன.

சௌதட்கா வினாயாகர் – மணிகள் கட்டப்பட்டுள்ளன.

சௌதட்கா வினாயாகர் – மணிகள் கட்டப்பட்டுள்ளன.

சௌதட்கா வினாயாகர் - கோவில் கட்டிடம் இல்லாத கோவில்

சௌதட்கா வினாயாகர் – கோவில் கட்டிடம் இல்லாத கோவில்

சௌதட்கா வினாயாகர் – கோவில் கட்டிடம் இல்லாத கோவில்.

சௌதட்கா வினாயாகர் - வலது பக்கத் தோற்றம்

சௌதட்கா வினாயாகர் – வலது பக்கத் தோற்றம்

சௌதட்கா வினாயாகர் – வலது பக்கத் தோற்றம்.

Southadka-Shri-Mahaganapathi-Temple-20

Southadka-Shri-Mahaganapathi-Temple-20

அலங்காரம் இல்லாத விக்கிரகம் – நன்றி – குறிப்பிட்ட இணைதணம்.

Southadka-Shri-Mahaganapathi-Temple-7

Southadka-Shri-Mahaganapathi-Temple-7

அருகில் உள்ள நந்தவனம் –  நன்றி – குறிப்பிட்ட இணைதணம்.

சௌதட்கா வினாயாக: தக்ஷிண கன்னட மாவட்டத்தில், பெல்தங்கடி தாலுக்காவில், கொக்கடா என்ற இடத்திற்கு அருகில் 3 கி.மீ தொலைவில் “சௌதட்க விநாயகர்” கோவில் வயல்கள் சூழ்ந்த, கிராமபுறத்தில் உள்ளது. குக்கி சுபரமண்டய கோவிலிலிருந்து 35 கி.மீ தூரத்தில் உள்ளது. “சௌதே” என்றால் வெள்ளாரிக்காய், “அட்கா” என்றால் வயல், அதாவது, வெள்ளாரிக்காய் போன்ற காய்கள் விளையும் பச்சை பசேல் என்று இருக்கும் வயல் வெளியில் இருக்கும் விநாயகர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். கர்ப்பகிருகம், கோவில், கோபுரம் என்றில்லாமல், வெட்ட வெளியில், இந்த விநாயகர் விக்கிரகம் உள்ளது[3]. இங்கு அதிகமாக குரங்குகள் இருக்கின்றன.

கோவில் தாக்கப்பட்டதால், விக்கிரகம் தூக்கி வந்து வைக்கப்பட்டது: ஸ்தலப்புராணக் கதையின் படி, இவ்விக்கிரகம் ஒரு கோவிலில் இருந்தது, ஆனால், பகைவர்கள் அக்கோவிலைத் தாக்க வந்தபோது இடையர்கள் இந்த விக்கிரகத்தை, இங்கு வயலில் வைத்து விட்டு சென்று விட்டனர். இங்கு பகைவர்கள் யார், ஏன் விநாயகர் கோவிலைத் தாக்க வேண்டும் போன்ற விவரங்கள் காணப்படவில்லை. பிறகு, பக்தர்கள் பலமுறை கோவில் கட்டத் தீர்மானித்தபோது, அவர்கள் கனவுல் தோன்றி விநாயகர் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். எப்பொழுதுமே திறந்திருக்கும் இவ்விநாயகரை பக்தர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வந்து தரிசிக்கலாம்[4]. வெள்ளரிக்காயே விநாயகருக்குப் படைக்கப் படுகிறது[5]. வேண்டுதலுக்கு, பக்தர்கள் மணியை வாங்கிக் கட்டி, தங்களது கோரிக்கைகளை, அவை நிரைவேறும் என்ற நம்பிக்கையோடு, விநாயரிடத்தில் வைக்கின்றனர்.

குகி சுப்ரமண்ய கோவில் கோபுரம்

குகி சுப்ரமண்ய கோவில் கோபுரம்

குகி சுப்ரமண்ய கோவில் கோபுரம்.

குகி சுப்ரமண்ய கோவில் - முன்பக்கம்

குகி சுப்ரமண்ய கோவில் – முன்பக்கம்

குகி சுப்ரமண்ய கோவில் – முன்பக்கம்.

குகி சுப்ரமண்ய கோவில் - முன்பக்கம். வலது

குகி சுப்ரமண்ய கோவில் – முன்பக்கம். வலது

குக்கெ / குக்கி சுப்ரமண்யா: மங்களூரில், சுல்லிய தாலுக்காவில் தக்ஷிண கன்னடப் பகுதியில் மங்களுரிலிருந்து 105 கி. மீ., தூரத்திலும், பெங்களூரிலிருந்து 317 கி. மீ., தூரத்த்திலும் இக்கோவில் உள்ளது. “நாகராதனே”, அதாவது நாக / பாம்பு வழிபாட்டு ஸ்தலமாக இப்பகுதியில், குமரதாரா நதிக்கரையில் இக்கோவில் உள்ளது. “மார்க்க சுத்த சஷ்டி” அன்று இந்நதிக்கரையில், குமரசாமிக்கும், தேவசேனாவுக்கும் திருமணம் நடந்தது. ஆரம்பகாலத்திலிருந்து, கருடன் தாக்கியதால், வாசுகி என்ற பாம்பு இங்கு தவம் செய்து வசித்து வருகிறது[6]. சிவனை வாசுகி வேண்ட, துணையாக தனது மகன் சுப்ரமண்யனும் அங்கு இருப்பான் என்று வரம் கொடுத்தாராம். இதனால், பாம்புகளின் குலத்திற்கு தலைவியான வாசுகி உட்பட அனைத்து நாகர்கள் இவ்விடத்தில் குடிகொண்டுள்ள சுப்பிரமணியசுவாமியைப் புகலிடமாகக் கொண்டுள்ளனர். பரசுராமர் உருவாக்கிய ஏழு புண்ணிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகும். வருகின்ற அனைவருக்கும் சாப்பாடுப் போடப்படுவதால், சுப்ரமண்யர் “அன்னதான சுப்பப்ப” என்று அழைக்கப்படுகின்றார்[7]. “பஜே குக்கெலிங்கா” என்று சங்கர விஜயங்களில் குறிப்பிடப்படுவதால், இக்கோவில் 5,000 வருடங்களுக்கு மேற்பட்டதாகும். “சுப்ரமண்ய புஜங்க பிரயத ஸ்தோத்ரா” மூலம் ஆதிசங்கரர் இவ்விவரங்களைக் கொடுப்பதால், இங்குள்ள விவலிங்கத்தின் பெயர் “குக்கெ லிங்கா” என்று தெரிகிறது.  இதற்கு தனியாக சன்னிதி உள்ளது.

குகி சுப்ரமண்ய கோவில் கோபுரம்- போகும் வழி

குகி சுப்ரமண்ய கோவில் –  பழைய கோவிலுக்குப் போகும் வழி

குகி சுப்ரமண்ய கோவில் –  பழைய கோவிலுக்குப் போகும் வழி.

குகி சுப்ரமண்ய கோவில் - அறிவிப்பு பலகை

குகி சுப்ரமண்ய கோவில் – அறிவிப்பு பலகை

குகி சுப்ரமண்ய கோவில் – அறிவிப்பு பலகை!

குகி சுப்ரமண்ய கோவில் - ஐந்து தலை நாகம் கண்டதாக சொல்கின்றனர்.

குகி சுப்ரமண்ய கோவில் – ஐந்து தலை நாகம் கண்டதாக சொல்கின்றனர்.

குகி சுப்ரமண்ய கோவில் – ஐந்து தலை நாகம் கண்டதாக சொல்கின்றனர்.

குகி சுப்ரமண்ய கோவில் - ஐந்து தலை நாகம் கண்டதாக சொல்கின்றனர்..2

குகி சுப்ரமண்ய கோவில் – ஐந்து தலை நாகம் கண்டதாக சொல்கின்றனர்..2

சர்ப்ப சம்ஸ்காராசடங்கு: “சர்ப்ப சம்ஸ்காரா” நாகதோஷம் உள்ளவர்களுக்கு “சர்ப்ப சம்ஸ்காரா” என்ற சடங்கு நடத்தப்படுகிறது. அச்சடங்கில், உண்மையாகவே பாம்பு உபயோகப்படுத்தப் படுகிறது என்பதனால் சர்ச்சை எழுந்தது[8]. சமீபத்தில் சிலர் ஐந்து தலை நாகத்தைக் கண்டதாக, புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்[9]. கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் அருகில் ஓடும் குமாரதாரா எனும் நதியில் புனித நீராடிவிட்டு குக்கி சுப்பிரமணியசுவாமி கோயில் தரிசனத்திற்குச் செல்கின்றனர். சர்ப்ப தோஷம் நீங்க, கோயிலின் முன் மண்டபத்திற்கும் கர்ப்பகிரகத்திற்கும் நடுவே உள்ள கருடனின் வெள்ளித்தூணை வலம் வந்து, வெள்ளித்தூணில் பொதிந்துள்ள கருடனை வழிபடுகின்றனர்.

மட்டெ ஸ்நான சடங்கு, வழக்கு, தீர்ப்பு: டிசம்பர் மாதத்தில் இக்கோயிலில் மூலவரை பூசை செய்யும் நம்பூதிரிகள், வாழை இலைகளில் விருந்து உணவு உண்டபின், அந்த வாழை இலைகளை வரிசையாக பரப்பி அதன் மேல் அங்கப்பிரதட்சனம் செய்தால் நன்மை பயக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். இதனைக் கூட பிரச்சினையாக்கி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதால், எச்சில் இலைகளில் உருள தடை விதிக்கப்பட்டது. குகி சுப்ரமண்ய கோவில் தீர்ப்பும் [State of Karnataka vs Adivasi Budakattu Hitarakshana Vedike Karnataka] [‘Madey Snana’ at Kukke gets Karnataka HC nod] பிறகு மாற்றப்பட்டது[10]. அங்கு பிராமணர்கள் சாப்பிட்ட இலைகள் மற்றவர்கள் உருளுவதாகவும், அவர்கள் அந்த எச்சில் உணவை சாப்பிட சொல்லி பலவந்தப்படுத்தப் படுவதாகவும், சில இயக்கங்கள் குற்றஞ்சாட்டி வழக்குத் தொடர்ந்தன. முதலில் கர்நாடக உயர்நீதி மன்றம் தடை விதித்தாலும், பிறகு மாற்றி 500 வருடங்காலமாக நடைப் பெற்றுவந்த சடங்கினை அனுமதித்தது. இங்கு நெரூரில் இது வரை அத்தகைய ரீதியில் பேச்சும் வரவில்லை, பிரச்சினையும் ஏற்படவில்லை. சமீப காலத்தில் உண்மையை சொல்வதானால், பிராமணர் அல்லாதவர்கள் தான் வந்து கொண்டிருக்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

07-07-2015.

[1] http://shridharmasthala.org/subsequent_page.php?id=2

[2] http://shridharmasthala.org/subsequent_page.php?id1=3&id=2

[3] http://shivallibrahmins.com/tulunaadu-temples/belthangadi-taluk/southadka-shri-mahaganapathi-temple/

[4] Postal Address: Southadka Sri Maha Ganapathi Kshetra,, Kokkada Post, Belthangadi Taluk, Dakshina Kannada district, Pin code: 574 198; Ph: 08251 – 254 351, 254 161

[5] http://rcmysore-portal.kar.nic.in/temples/sowthadkatemple/History.htm

[6] மஹாபாரத காலம் பிறகு, பரீக்ஷத், ஒரு ரிஷியின் சாபத்தினால் தக்ஷண் என்ற பாம்பு கடித்து இறந்து போகிறார். இதனால் கோபம் கொண்ட மகன்  ஜனமேஜெயன், தனது தந்தை இறப்பிற்கு காரணமான பாம்புகளைக் கொல்ல மீள சர்ப்ப யாகம் செய்விக்கிறான். அதனால், பாம்புகள் இறக்கின்றன. ஆனால், சில தப்பித்துக் கொள்கின்றன. அதேபோல, கருடன்-வாசுகி கதையும் உள்ளது. பிறகு ஆதிசங்கரருடன் தொடர்பு படுத்தப் பட்டுள்ளது. எனவே, எல்லாப் பிரிவுகளையும் சங்கரர் “ஷண்மதத்தில்” இணைத்தார் என்பது சரியாக உள்ளது.

[7] https://www.kukke.org/en/history.aspx

[8] http://www.deccanherald.com/content/349113/cloud-over-sarpa-samskara-kukke.html

[9] http://www.eface.in/a-snake-found-near-kukke-subrahmanya-with-5-heads/

[10] http://indiankanoon.org/doc/33915158/

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in கருடன், குகி சுப்ரமண்ய, குக்கி சுப்ரமண்ய, சர்ப்பம், சௌதட்கா, ஜனமேஜயன், ஜீனர், ஜைனம், தர்மஸ்தல, திகம்பரர், தீர்த்தங்கரர், நாக தோஷம், நாகம், நிர்வாணம், பரீக்ஷுத், பரீட்சித், பஹுபலி, பாம்பு, பிராயச்சித்தம், மஞ்சுநாத, யாகம், வாசுகி, ஹெக்பே and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s