தர்மஸ்தலாவின் புராணம், சரித்திரம், தரிசனம், விழாக்கள் மற்றும் “தெய்வ-பூத” வெறியாடல் நடனங்கள்!

தர்மஸ்தலாவின் புராணம், சரித்திரம், தரிசனம், விழாக்கள் மற்றும் “தெய்வ-பூத” வெறியாடல் நடனங்கள்!

ஶ்ரீ ராம க்ஷேத்திர - உஜிரெ - முழுத்தோற்றம்

ஶ்ரீ ராம க்ஷேத்திர – உஜிரெ – முழுத்தோற்றம்

ஶ்ரீ ராம க்ஷேத்திர – உஜிரெ – முழுத்தோற்றம்.

ஶ்ரீ ராம க்ஷேத்திர - தர்மஸ்தல

ஶ்ரீ ராம க்ஷேத்திர – தர்மஸ்தல

ஶ்ரீ ராம க்ஷேத்திர – தர்மஸ்தல – படிகட்டுகள் ஏறி மேலே செல்ல வேண்டும்.

ஶ்ரீ ராம க்ஷேத்திர.- உள்ளே - வெளியே

ஶ்ரீ ராம க்ஷேத்திர.- உள்ளே – வெளியே

ஶ்ரீ ராம க்ஷேத்திர.- உள்ளே – வெளியே – போட்டோ எடுக்கவே முடியாது!

ஶ்ரீ ராம க்ஷேத்திர.- வெளியே -பின்பக்கத் தோற்றம்

ஶ்ரீ ராம க்ஷேத்திர.- வெளியே -பின்பக்கத் தோற்றம்

ஶ்ரீ ராம க்ஷேத்திர.- வெளியே -பின்பக்கத் தோற்றம் – வெளியே வரும் வழி.

ஶ்ரீ ராம க்ஷேத்திர - தர்மஸ்தல- சிமின்ட் சிலைகள்

ஶ்ரீ ராம க்ஷேத்திர – தர்மஸ்தல- சிமின்ட் சிலைகள்

ஶ்ரீ ராம க்ஷேத்திர – தர்மஸ்தல- சிமின்ட் சிலைகள் – ஆசைக்கு வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

ஶ்ரீ ராம க்ஷேத்திர.- வெளியே - கடைகள்-கோவில்

ஶ்ரீ ராம க்ஷேத்திர.- வெளியே – கடைகள்-கோவில்

18-12-2014 (வியாழக்கிழமை): தர்மஸ்தலா: இன்று காலை தர்மஸ்தலா நோக்கிப் புறப்பட்டோம். முதலில் நேத்ரவதி நதிக்கு அருகில் உள்ள “ஶ்ரீ ராம க்ஷேத்ர” என்ற கோவிலுக்குச் சென்றோம். 1978ல் அடிக்கல் நாட்டப்பட்டு, ஶ்ரீ ஆத்மானந்த சரஸ்வதி என்பவர் மூன்றடுக்குகள் கொண்ட கட்டுவித்தார்[1]. ராமாயணம் பற்றிய சிற்பங்களை வைத்துள்ளார்கள். அங்குள்ளவர்கள் போட்டோ எடுக்கக் கூடாது என்று கெடுபிடியாக உள்ளார்கள். அங்கங்கு குறிப்பாக இதற்கு ஆட்களை வைத்து நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தர்மஸ்தலா - மஞ்சுநாத ஸ்வாமி - கோவிலுக்கு போகும் வழி

தர்மஸ்தலா – மஞ்சுநாத ஸ்வாமி – கோவிலுக்கு போகும் வழி

தர்மஸ்தலா – மஞ்சுநாத ஸ்வாமி – கோவிலுக்கு போகும் வழி – வண்டிகளை விட்டு-விட்டு இடது பக்கமாக செல்ல வேண்டும்.

தர்மஸ்தலா கோவில் வெளிப்புறத் தோற்றம்

தர்மஸ்தலா கோவில் வெளிப்புறத் தோற்றம்

தர்மஸ்தலா கோவில் வெளிப்புறத் தோற்றம் – கோவில் கட்டிட அமைப்பு கேரளாவைப் போல உள்ளது.

தர்மஸ்தலா - மஞ்சுநாத ஸ்வாமி - கோவில் வாசல்

தர்மஸ்தலா – மஞ்சுநாத ஸ்வாமி – கோவில் வாசல்

தர்மஸ்தலா – மஞ்சுநாத ஸ்வாமி – கோவில் வாசல், தரிசன டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே செல்ல வேண்டும்.

மஞ்சுநாதர் சிவன் கோவில்: தர்மஸ்தலம் கர்நாடகாவின் தெற்கு கன்னட மாவட்டத்தின் பெல்தங்கடி தாலுகாவில் நேத்ராவதி ஆற்றின் கரையில் உள்ள ஒரு கோவில் கிராமமாகும். இங்கு தங்கத்தில் செய்யப்பட்ட சிவலிங்கத்தைக் கொண்ட சிவபெருமானின் கோவில் உள்ளது. சமணர்கள் நிர்வாகத்தில் இயங்குகினாலும், மத்வ வம்சாவழியைச் சேர்ந்த இந்து குருக்கள் பூஜைகள் செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெறும் “லக்ஷதீபா” திருவிழாவில் நாளொன்றுக்கு சராசரியாக 10,000 பேர் இந்தக் கோவிலுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு, கலந்து கொள்கின்றனர். ஒரு லட்சம் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுகின்றனர்[2]. நவீன வசதிகளுடன் கூடிய விருந்தினர் இல்லங்கள் மற்றும் புனித பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் இலவச உணவு வழங்கும் எந்திரமயமாக்கப்பட்ட சமையலறைகளும் இங்கு உள்ளன. தர்மஸ்தலத்திற்கு வருபவர்களுக்கு ஜாதி, கொள்கைகள் மற்றும் நம்பிக்கை போன்றவை இங்கு தடையாக இல்லாமல், மத ஒற்றுமைக்கு ஏற்ற இடமாகவும் விளங்குகிறது. உள்ளூர் தெய்வங்கள் மற்றும் மஞ்சுநாதா (சிவன்) தெய்வங்களுக்கு இணையாக சமண தீர்தங்கரரும் மக்களால் வழிபடப்படுகிறது.

தர்மஸ்தலா - மஞ்சுநாத ஸ்வாமி - லிங்கம்

தர்மஸ்தலா – மஞ்சுநாத ஸ்வாமி – லிங்கம்

தர்மஸ்தலா – மஞ்சுநாத ஸ்வாமி – லிங்கம், இங்கும் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.

சின்னப்பா - லிங்கதை எடுத்து வந்தவர்

சின்னப்பா – லிங்கதை எடுத்து வந்தவர்

சின்னப்பா – லிங்கதை எடுத்து வந்தவர் – அவர் நினைவாக 11-நாள் திருவிழா நடக்கிறது.

அன்னப்பா வந்து குறி சொல்வது, வழக்குகளைத் தீர்த்து வைப்பது: பிணக்குகளை தீர்த்துக்கொள்ள நீதி வேண்டி இங்கு சுற்றுப்புற மக்கள் வருகின்றனர். அவர்களின் சிக்கல்களுக்கு ஹெக்கடே தீர்ப்பு வழுங்குகிறார். ஹெக்டே குடும்பத்தினர் வழிவழியாக இவ்வாறு இக்கோயிலில் தீர்ப்பு வேண்டுபவர்களுக்கு தீர்ப்பு கூறுகின்றனர். உண்மையில் அன்னப்பர் வந்து கூறுவதாக ஐதீகம். இத்தீர்ப்பு எந்த சட்ட பாதுகாப்பையும் அளிக்ககூடியதல்ல, இதை ஏற்பதும் ஏற்காதது. மக்களின் தனிப்பட்ட விருப்பமாகும். இருப்பினும் இங்கு பிரச்சினைக்கு வருபவர்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்பது உறுதியாக இருக்கிறது. அதனால் தான் இந்த இடம் தர்மஸ்தலா என்றழைக்கடுகிறது. ராஜஶ்ரீ டி. வீரேந்திர ஹெக்டேவால் (தர்மஸ்தலா ஶ்ரீ க்ஷேத்திரத்தின் தர்மாதிகாரி) 800 ஆண்டுகளுக்கும் மேலாக ஹெகடே குடும்பத்தினர் இக்கோயிலை பராமரித்து வருகின்றனர். கோயிலுக்கு எத்தீங்கும் வராமல் பாதுகாப்பது அவர்களின் தலையாய பணியாகும்.

நேத்ரவதி நதியில் குளிக்கும் மக்கள்

நேத்ரவதி நதியில் குளிக்கும் மக்கள்

நேத்ரவதி நதியில் குளிக்கும் மக்கள்.

நேத்ரவதி நதியில் குளிக்கும் மக்கள்.-துணி துவைக்கக் கூடாது

நேத்ரவதி நதியில் குளிக்கும் மக்கள்.-துணி துவைக்கக் கூடாது

தர்மஸ்தலாவில் சிவலிங்கம் வந்த புராணம்வரலாறு: ஒருமுறை ஹெகடே சிவபெருமானை வழிபட விரும்பியபோது அவரிடம் பணிபுரிந்துகொண்டிருந்த அன்னப்பா ஒரு சிவ லிங்கத்தைக் கொண்டு வருவதாக வாக்களித்து இடத்திலிருந்து மறைந்தார், மறுநாள் காலை ஹெக்கடே வீட்டிற்கு சில மீட்டர் தூரத்தில் தர்மஸ்தலத்தில், அனைவரும் வியக்கும்படி ஒரு சிவலிங்கம் காணப்பட்டது. அந்த லிங்கம் மங்களூர் அருகில் உள்ள கத்ரி என்ற இடத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாக பின்னாளில் தெரியவந்தது. ஆனால், அன்று மறைந்த அன்னப்பா இன்று வரை அந்தப் பகுதியில் காணப்படவில்லை. தர்மஸ்தலத்தில் உள்ள மக்கள் தற்போது அன்னப்பாவை “அன்னப்பா பஞ்சுர்லி” என்ற பெயரில், உள்ளூர் கடவுள் மற்றும் நாயகனாக வணங்குகிறார்கள். இக்கதையில் பல கேள்விகள் எழுகின்றன:

  1. கத்ரியில் எப்படி சிவலிங்கம் கிடந்தது, கிடைத்தது?
  2. எப்படி அன்னப்பா அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் தூக்கிக் கொண்டு வந்தார்?
  3. அவர் எப்படி காணாமல் மறைந்து போயிருக்க முடியும்?
  4. இறந்து விட்டாரா அல்லது கொலை செய்யப் பட்டாரா?
  5. “அன்னப்பா பஞ்சுர்லி” என்றால், அன்னப்ப பன்றி உருவில் வருகிறார் என்றாகிறது. பிறகு, அவர் எப்படி பன்றி உருகொண்டார்?
  6. அன்னப்பா நினைவாக நேமி மற்றும் தம்பிலி போன்ற வெறியாடல் நடனங்கள் ஏன் கொண்டாடப் படுகின்றன?
  7. அவர் எப்படி வந்து குறி / தீர்ப்பு சொல்கிறார்?

ஜைன-வீரசைவ மோதல்கள், உரையாடல்கள், சமரசங்கள்: 12ம் நூற்றாண்டில் வீரசைவம் உருவானதே, ஜைனர்களின் அடக்குமுறைதான் என்று தெரிகிறது. வீரசைவம் உருவ வழிபாடு கூடாது என்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால், அவர்கள் ஜைனர்கள் ஆகிரமித்த கோவில்களை மீட்டார்கள் என்றும் உள்ளது. அதாவது, உருவ வழிபாடு தேவையில்லை என்றால், கோவில்களும் தேவையில்லையே? ரோமிலா தாபர் போன்ற சரித்திர ஆசிரியர்கள் சைவர்கள் ஜைனர்களின் கோவில்களை இடித்து கோவில்களைக் கட்டிக் கொண்டார்கள் என்று எழுதுகிறார்கள்[3]. உண்மையில் அவர்கள் ஜைனர்கள் முன்னர் இந்து கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டது, லிங்கங்களை உடைத்தது, தூக்கி வெளியே போட்டது போன்ற விவரங்களைக் குறிப்பிடாமல், அவ்வாறு ஒரு தலைப்பட்சமாக எழுதினார்கள்[4]. அமைதியான காலத்தில் கூட ஹூலி என்ற இடத்தில் ஐந்து ஜீனர்கள் நீக்கப்பட்டு, ஐந்து லிங்கங்கள் கருவறையில் வைக்கப்பட்டு பஞ்சலிங்கேஸ்வர கோவில் அன்று மாறினர் என்று அவரே எழுதியுள்ளார்[5]. விவசாயிகளை ஜைனர்களாக மாற்றியதில் முரண்பாடு ஏற்பட்டது. கண்ணுக்குத் தெரியாத உயிர்களுக்குக் கூட துன்பம் விளைவிக்கக் கூடாது என்பதால், ஜைனர்கள், விவசாயத் தொழிலை மறுத்தார்கள். ஆனால், கர்நாடகத்தில் “சதுர்த்த” என்ற ஜாதியின்னர் விவசாயம் செய்து வந்தனர்[6]. “விட்டல்” வழிபாட்டில் ஜைனர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே பிரச்சினைகள் இருந்தது என்று மராத்திய இலக்கியங்கள் கூறுகின்றன. கோவிந்ததாஸ் போன்ற விட்டல பக்தர்கள், விட்டலாவை ஜைன கடவுள் அதனால் வணங்கக் கூடாது என்றார். “குணகீர்த்தி” என்ற 15ம் நூற்றாண்டு நூல், “பாண்டுரங்க விட்டல்” போன்ற கடவுளர்கள் “கெட்ட-புனித” வகையில் வருவதாகக் குறிப்பிடுகின்றது[7].

தர்மஸ்தலா - வெறியாடல் நடனங்கள்

தர்மஸ்தலா – வெறியாடல் நடனங்கள்

நேமமற்றும்தம்பிலிசடங்குகள், நடனங்கள்: இங்கு நடக்கும் “தர்ம தைவஸ்” என்ற விழாவின் போது, அன்னப்ப ஸ்வாமி மஞ்சுநாதரை (சிவலிங்கத்தை) அழைத்து வருகின்ற மாதிரி கொண்டாடப் படுகிறது. இதை சித்தரிக்கும் ஓவியம், அன்னப்பர் மற்றவர்களை கேரள பாணியில் காட்டுகிறது. “மஹாநடவலி” விழா 11 நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. நெலியடிபீடு என்ற இடத்திற்கு அன்னப்பர் செல்வதும் விழாவில் கொண்டாடப்படுகிறது. பக்கத்தில் உள்ள அன்னப்ப குன்றில் “நேம” மற்றும் ”தம்பில” என்ற கிரியைகள் நடக்கும்போது, பெண்கள் மற்றும் சிறுவர்கள் அனுமதிக்கப் படுவதில்லை[8]. உண்மையில் இவையெல்லாம் இடைக்காலத்திலிருந்து தொடர்ந்து ஆவிகளைத் திருப்தி படுத்த கொண்டாடும் விழாக்கள் ஆகும்[9]. தேவதைகள் மற்றும் பூதங்கங்கள் முதலியவற்றை வரவழைத்து, உணவு கொடுத்து, திருப்பியனுப்பி வைக்கும் விழாக்கள் மெச்சி, நேமா, கோல போன்ற நடனங்கள் ஆகும். கோவில்களில் இந்த நடனங்கள் நடக்கும் போது “உத்ஸவ” என்கிறார்கள்[10]. சங்கப்பாடல்களில் வருகின்ற “வெறியாடல்” போன்றுள்ளது. இவையெல்லாம் “மந்திர-தந்திர-யந்திர” வழிபாட்டு முறைகளை வேலிப்படுத்துவதாக உள்ளது. ஏற்கெனவே, இப்பகுதிகள் சாக்த / சக்தி வழிபாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பது எடுத்துக் கட்டப்பட்டது. கடைசி நாளன்று “சப்பர சோரே”, அதாவது, வைக்கப்பட்டிருக்கின்ற பொருட்களை கொள்ளையடிப்பது, இஸ்டத்திற்கும் எடுத்துச் செல்வது என்ற விழா கொண்டாடப்படுகிறது[11].

© வேதபிரகாஷ்

06-07-2015.

[1] http://www.shreeramakshetra.com/sri-ram-ksherta.html

[2] இது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கொண்டாடப்படுவதால் கார்த்திகை-தீபாவளி பண்டிகைப் போன்றது என்பதனைக் கவனிக்கலாம். தீபாவளி இந்துக்களுக்கும், ஜைனர்களுக்கும் பொதுவான பண்டிகையாகவும் இருக்கிறது.

[3] Romila Thapar: Cultural Transaction, p.17; with reference to P.B. Desai: Jainism in South India, p.82-83, p.401-402.

[4] http://koenraadelst.bharatvani.org/books/wiah/ch7.htm

[5] Romila Thapar: Cultural Transaction, p.17.

[6] In Karnataka, there existed only one caste called ‘Chaturtha’ amongst the Jains. This caste in engaged in agriculture. This might call forth the suggestion that members of some strong agricultural caste of a given locality sometime adopted Jainism and continued to engage themselves with agriculture because it was difficult for numerically big groups of people to change the profession in a short time and to settle in the towns for the occupation of trade or usury.

http://www.jainsamaj.org/rpg_site/literature2.php?id=632&cat=42

[7]  Ramchandra Chintaman Dhere, Rise of a Folk God: Vitthal of Pandharpur, Oxford University Press, New York,  2012, p. 192.

[8] http://www.veerendraheggade.in/subsequent_page.php?m_id=2&s_id=16

[9] http://ir.minpaku.ac.jp/dspace/bitstream/10502/1136/1/SES71_004.pdf

[10] Bhūta rituals are conducted in small shrines or temples in villages during the dry season between November and April (until May in some areas). These rituals are called mecci, nēma, and kōla…….. the festivals of Daiva are often called nēma, and those of Bhūta are called kōla. Generally, the meaning of nēmas is originated in a series of dances. In Balthila, Ullālthi rituals are also called mecci nēmas as they combine meccis and nēmas, suggesting that Devas and Daivas are mixed together. Nēmoutsava is also often used, connected with utsava, which is the usual term for annual festival of Hindu temples.

Masataka Suzuki, Bhūta and Daiva: Changing Cosmology of Rituals and Narratives in Karnataka,  in Music and Society in South Asia: Perspectives from Japan,  SENRI ETHNOLOGICAL STUDIES 71: 51-85 ©2008.

[11] The pinnacle of the Maha Nadavali festival is the “Chappara Soore” programme signifying sacrifice at its exquisite best. On this day thousands of daily use commodities are displayed in front of the Chandranatha Swamy Temple. At the stipulated time, the public are let free to loot the items. Thus allowing people to choose and carry the items of their choice, other than the organised charity of Dharmasthala.

http://nag-kannada.blogspot.in/2006/10/festival-of-accountability-sacrifice.html

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in உஜிரெ, குன்ரு, குறி, குறி சொல்லுதல், சடங்கு, தம்பிலி, தர்ம ஸ்தலம், தர்மஸ்தல, தர்மஸ்தலம், நடனம், நேத்ரவதி, நேம, பலி, பிசாசு, பூதம், பூதராயர், பேய், மஞ்சுநாதர், வெறியாடல், ஶ்ரீ ராம க்ஷேத்திரம், ஹெக்டே and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s