பஞ்சக்ஷேத்திரங்களில் ஒன்றான, முருடேஸ்வர் கோவில் சரித்திரம், முக்கியத்துவம் மற்றும் தரிசனம்

பஞ்சக்ஷேத்திரங்களில் ஒன்றான, முருடேஸ்வர் கோவில் சரித்திரம், முக்கியத்துவம் மற்றும் தரிசனம்!

முருடேஸ்வர் - வளைவுடன் கொண்ட சாலை செல்லும் வழி

முருடேஸ்வர் – வளைவுடன் கொண்ட சாலை செல்லும் வழி

முருடேஸ்வர் – வளைவுடன் கொண்ட சாலை – கோவிலுக்குச் செல்லும் வழி.

முருடேஸ்வர் - பக்தர்களுக்கு சூசனைகள்

முருடேஸ்வர் – பக்தர்களுக்கு சூசனைகள்

முருடேஸ்வர் – பக்தர்களுக்கு சூசனைகள், அறிவுப்புகள்.

முருடேஸ்வர் - கோவில் வளாகம் - சனீஸ்வரர்

முருடேஸ்வர் – கோவில் வளாகம் – சனீஸ்வரர்

முருடேஸ்வர் – கோவில் வளாகம் – சனீஸ்வரர்.

முருடேஸ்வர் - கோவில் வளாகம் - தங்கத்தேர் இழுக்க ரூ.2001

முருடேஸ்வர் – கோவில் வளாகம் – தங்கத்தேர் இழுக்க ரூ.2001

முருடேஸ்வர் – கோவில் வளாகம் – தங்கத்தேர் இழுக்க ரூ.2001

முருடேஸ்வர்:  முருடேஸ்வர் கோவில் பழமையானது, மூன்று பக்கம் கடல் சூழ்ந்த கந்துக மலையின் மீதுள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், புதுப்பிக்கப்பட்டது. 1977ம் ஆண்டு தமிழகத்திலிருந்து சிற்பிகள், முதக்லியோர் வரவழைக்கப்பட்டு வேலை ஆரம்பிக்கப் பாட்டது. கோவிலுக்கு அருகில் ரூ.5 கோடி செலவில்,  123 அடிகள் / 37 மீட்டர்கள் உயரம் சிவன் சிலை இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது[1]. ஆர்.என்.ஷெட்டி டிரஸ்டின் சார்பில், இவ்வேலைகள் நடந்தன. 20 அடுக்குகள் கொண்ட 249 அடிகள் உயரம் கொண்ட ராஜகோபுரம் 2008ல் கட்டி முடிக்கப்பட்டது. மேலே சென்று வர “லிப்ட்” வசதியுள்ளது. ஶ்ரீ ஶ்ரீமத் ராகவேஸ்வர் பாரதி ஸ்வாமிஜி (ஶ்ரீ ராமசந்திரபுரம், ஹொசாநகர்) மற்றும் ஶ்ரீமத் ஷட்யோஜத் சங்கர்ஷண ஸ்வாமிஜி (ஶ்ரீ சித்ரபூர் மடம், சிராலி) அவர்களின் ஆசிர்வாதங்களுடன், ராஜஶ்ரீ டி. வீரேந்திர ஹெக்டேவால் (தர்மஸ்தலா ஶ்ரீ க்ஷேத்திரத்தின் தர்மாதிகாரி) ஏப்ரல் 12. 2008 (சனிக்கிழமை) அன்று துவக்கி வைக்கப்பட்டது[2].  கோவிலில் அன்னதானம் தினமும் நடக்கிறது. பலவித சேவைகளும் நடக்கின்றன[3].

முருடேஸ்வர் - கோவில் வளாகம் - மூலவர் சன்னிதியின் வெளிப்புரத் தோற்றம்

முருடேஸ்வர் – கோவில் வளாகம் – மூலவர் சன்னிதியின் வெளிப்புரத் தோற்றம்

முருடேஸ்வர் – கோவில் வளாகம் – மூலவர் சன்னிதியின் வெளிப்புரத் தோற்றம்.

முருடேஸ்வர் - கோவில் வளாகம் - உள்ளேயிருக்கும் சன்னதிகள் - வெளியேயிருக்கும் சிவன் சிலை

முருடேஸ்வர் – கோவில் வளாகம் – சன்னதிகள் – வெளியேயிருக்கும் சிவன் சிலை.

முருடேஸ்வர் - கோவில் வளாகம் - சன்னதிகள் - வெளியேயிருக்கும் சிவன் சிலை.

முருடேஸ்வர் – கோவில் வளாகம் – சன்னதிகள் – வெளியேயிருக்கும் சிவன் சிலை.

பஞ்சக்ஷேத்திரங்கள் அல்லது ஐந்து லிங்கங்கள் உருவான கதை[4]: கோகர்ண கதை இங்கும் விவரிக்கப் படுகிறது. முன்னரே சொல்லியபடி, வினாயகர் லிங்கத்தை கோகர்ணத்தில் வைத்து விட்டதால், அது அங்கு நிலைத்து விட்டது[5].

  1. கோபம் கொண்ட ராவணன் அதனை தனது பலத்தால் எடுக்கப் பார்த்தான். பூமியிலிருந்து இழுக்கப் பார்த்தான். அப்பொழுது அது பசுவின் காது போன்ற உருவத்தை அடைந்தது (கோகர்ண).
  2. கோபத்தில் ராவணன் லிங்கம் வைத்திருந்த பெட்டியை எரிந்தபோது, அது 23 மைல்கள் தொலைவில் உள்ள சஜ்ஜேஸ்வர் என்ற இடத்தில் விழுந்தது. மூடி
  3. தெற்கில் 27 கி.மீ தொலைவில் குணேஸ்வர் என்ற இடத்தில் விழுந்து “வாமதேவ லிங்கம்” ஆகியது.
  4. லிங்கத்தைச் சுற்றியிருந்த துணி தெற்கில் 32 கி.மீ தொலைவில் கடற்கரையில் உள்ள கண்டுக மலையில் விழுந்தது. அதுதான் முருடேஸ்வரில் அகோர உருவத்துடன் “முருடேஸ்வர்” என்றாகியது.
  5. கட்டப்பட்ட கயிறு தெற்கில் தாரேஸ்வர் என்ற இடத்தில் விழுந்து “தத்புருஸ லிங்கம்” ஆகியது.

இவையெல்லாம் ஆத்ம லிங்கத்தின் பாகங்கள் என்றாகிறது. இவ்விவரங்களை வாயுவிடம் இருந்து அறியப்பட்டனவாம். வாயு இந்த ஐந்து இடங்களும் “பஞ்சக்ஷேத்திரங்கள்” என்று அழைக்கப்பட வேண்டும் என்று அறிவித்தானாம். இக்கதையைக் கூர்ந்து படிக்கும் போது, முதலில் இருந்த லிங்கம் உடைக்கப்பட்டது, அதன் பகுதிகள் தாம் குறிப்பிடப்பட்ட இடங்களில் லிங்கமாக வழிபட்டு வருகின்றன என்று சூசஜகமாக குறிப்பிட்டுள்ளது போலிருக்கிறது. ஏனெனில், பொதுவாக பின்னப்பட்ட அல்லது பெயத்தெடுக்கப் பட்ட லிங்கங்களை, அப்படியே விட்டு விடுவது வழக்கம். ஆனால், அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து, கோவில் கட்டி கும்பிடுகிறார்கள் என்றால், அத்தகைய விசித்திரமான விவரங்களை ஆராய வேண்டும்.

முருடேஸ்வர் - பிரம்மாண்டமான சிவன் - மேலேயிருந்து பார்க்கும் தோற்றம்

முருடேஸ்வர் – பிரம்மாண்டமான சிவன் – மேலேயிருந்து பார்க்கும் தோற்றம்

முருடேஸ்வர் – பிரம்மாண்டமான சிவன் – மேலேயிருந்து பார்க்கும் தோற்றம்.

முருடேஸ்வர் - கோவில் வளாகம் - மேலேயிருந்து பார்க்கும் தோற்றம்

முருடேஸ்வர் – கோவில் வளாகம் – மேலேயிருந்து பார்க்கும் தோற்றம்

முருடேஸ்வர் – கோவில் வளாகம் – மேலேயிருந்து பார்க்கும் தோற்றம்.

முருடேஸ்வர் - மேலேயிருந்து பார்க்கும் தோற்றம்

முருடேஸ்வர் – மேலேயிருந்து பார்க்கும் தோற்றம்

முருடேஸ்வர் – மேலேயிருந்து பார்க்கும் தோற்றம்.

முருடேஸ்வர் - மேலேயிருந்து பார்க்கும் தோற்றம்.- கடற்கரை

முருடேஸ்வர் – மேலேயிருந்து பார்க்கும் தோற்றம்.- கடற்கரை

அரேபியர் மற்றும் முகமதியர்களுக்கு முன்னர் விக்கிரகங்களை சேதப்படுத்தியவர்கள் யார்?: மூன்றாம் நூற்றாண்டிலிருந்து 14ம் நூற்றாண்டு வரை கடம்பர்கள் இக்கடற்கரைப் பகுதிகளில் சக்திவாய்ந்த ஆட்சியாளர்களாக இருந்ததினால், 712 ற்கு முன்னால் இங்குள்ள கோவில் விக்கிரகங்களை அரேபியர் அல்லது முகமதியர்கள் தாக்கி அழித்திருக்க முடியாது. அவர்களுக்கு முன்னர், ஜைன-பௌத்த மதங்கள் கடவுள் கொள்கைக்கு எதிராக, விக்கிரக ஆராதனைக்கு எதிராக ஆரம்ப காலங்களில் இருந்து, பிறகு மாறி விட்டன. பௌத்தம் உடனடியாக உருவ வழிபாட்டில் இறங்கி விட்டாலும், ஜைனர்கள் அத்தகைய உருவவழிபாட்டு முறைக்குத் தயங்கினார்கள். ஏனெனில், தீர்த்தங்கர்களை எப்படி நிர்வாணமாக வடிப்பது, கோவில்களில் வைப்பது என்ற தயக்கம், குழப்பம் மற்றும் சஞ்சலம் ஏற்பட்டது. பௌத்தம் புத்தரை சிலைகளாக வடிக்க ஆரம்பித்தன. ஆனால், ஜைனர்கள் முதலில் இந்து கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டு, உள்ளிருக்கும் விக்கிரகங்களை மாற்ற ஆரம்பித்தார்கள் அல்லது வேறு பெயர் கொடுத்து, தமது மதக் கடவுளர்கள் போன்று காண்பிக்கச் செய்தார்கள். இதனால், தென்னிந்தியாவில் முதல் நூற்றாண்டுகளில் ஜைனர்களான களப்பிளர்களினால் ஏற்பட்ட அழிப்பு வேலைகளை, மேற்குக்கடற்கரைப் பகுதிகளில் ஜைனர்கள் ஆதிக்கத்தில் உள்ளபோது ஈடுபட்டிருக்கலாம்.

கடம்பர் மற்றும் யாதவர்கள் சைவர்களாக இருந்தார்கள் என்றால், அவர்களுக்குள் சண்டை ஏன்?: சைவர்கள் மற்றும் ஜைனர்கள் வாதங்களில் ஈடுபட்டது, தோற்றது மற்றும் கழுவேரியது போன்றவை தமிழகத்தில் நடந்துள்ளன. அதுபோன்று, ஜைனம் இங்கு வாதங்களில் ஈடுபட்டதா அல்லது வேறு முறையினை கையாண்டதா என்று பார்க்க வேண்டும். கடம்பர்கள் மற்றும் யாதவர்கள் சைவர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். பிறகு முகமதியர்கள் போல யாதவர்களும் (850-1334 CE)[6] கடம்பர்களை ஏன் தாக்கினர் என்பது வியப்பாக உள்ளது, ஏனெனில், 1311ல் மாலிக்காபூர் கொள்ளையெடிக்க வந்த போது, யாதவர்களின் தேவகிரி சூரையாடப்பட்டது என்றுள்ளது. தேவகிரியின் பெயரை தௌலதாபாத் என்று மாற்றப்பட்டது, சிவபெருமானே அங்கு வந்து தங்கியதால் அது “தேவகிரி” எனப்பட்டது என்ற கதையும் சொல்லப்பட்டது. சாந்தோர் (Chandor) என்ற கிராமத்தில் இன்றும் அவர்களது அரண்மனைகள், கோவில்கள் முதலியவற்றை இடிபாடுகளில் காணலாம்[7]. உடைப்பட்ட நந்தி முதலியவை அவற்றை எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், முருகனைப் போன்ற விக்கிரகத்தை கமலேஸ்வர், குவலேஸ்வர் என்று குறிப்பிடுவதும் அவை “தீர்த்தங்கரர்” என்று சொல்லிக்கொள்வதும் வியப்பாக இருக்கிறது[8]. மேலும் இவையெல்லாமே இடைக்காலத்தைச் சேர்ந்தவை தாம். மூன்றாம் நூற்றாண்டு வரை போஜர்கள் ஆண்டார்கள் என்பது முக்கியமானது[9]. போஜர்கள் உஜ்ஜயினை தலைநகராகக் கொண்டு விக்கிரமாதித்யன் வழி வந்தவர்கள். விக்கிரமாதித்யன் ( 102 BCE – 15 CE.) அரேபிய தீபகற்பம், ஸ்கைத்தியர்களை வென்று மத்திய ஆசிய வரை ஆண்டு கொண்டிருந்தான். ஆனால், இந்திய சரித்திரம் எழுதிய ஆங்கிலேயர், விக்கிரமாதித்யன் ஒரு கற்பனை, உண்மையல்ல என்று ஒதுக்கிவிட்டனர்[10]. அங்கு அகழ்வாய்வு மேற்கொண்டதில் சிவன் கோவில் இருந்ததும், மண்-அடுக்களின் படிவங்கள் மற்றும் அவற்றில் இருந்த ஆதாரங்கள் கொண்டு, அது 3-4ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று எடுத்துக் காட்டப்பட்டுள்ளது[11].

© வேதபிரகாஷ்

05-07-2015.

[1] http://www.murudeshwar.org/aboutus.htm

[2] http://www.murudeshwar.org/temple.htm

[3] Mhatobar Sri Murudeshwar Temple, Murudeshwar, NH – 17, Bhatkal Taluk, North Kanara Dist.,Karnataka. Phone: 08385 – 268524, 268972; http://www.murudeshwar.org/sevasanddarshans.htm

[4] http://www.murudeshwar.org/history.htm

16 இக்கதையை விவரிக்கும் படங்களை இங்கு காணலாம் – http://www.murudeshwar.org/history.htm

[6]  தேவகிரி, செய்னா அல்லது செவுன அல்லது யாதவ வம்சம், துன்கபத்ரா மற்றும் நர்மதா நதிகளிடையே ஆட்சி செய்து வந்தனர். சைவர்களாக இருந்த இவர்கள் ஒரு நிலையில் ஜைனர்களாக ஆகியிருக்கக் கூடும் என்று சில கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது.

[7]  ஜைன சிற்பங்கள், இந்து கடவுளர்களைப் போலவே இருக்கின்றன. ஆனால், கமலேச்வர், குவலேஸ்வர் என்று சில விக்கிரகங்களை தீர்த்தங்கரர் என்று குறிப்பிடுவது கிருஷ்ணர் அல்லது முருகனைப் போன்றே உள்ளது. இதுவும் ஆராய்ச்சிக்குரியது.

[8] http://www.herenow4u.net/index.php?id=89015

[9] Chandor: The site Cotta Chandor dist. North Goa (ancient Chandrapur) was the capital city during Bhojas (4th Century A. D.) and continued upto Kadambas (11th century A. D.). In the past the site was excavated in 1930 and then again in 1974-75 which had brought to light remains of a brick temple. The recent excavation conducted at the site in 2000-03 has unearthed five phases of structural activities in the temple site with an enclosure wall. The digging in the rampart area has confirmed three phases of the development of fortification. In the season 2003-04 trial pits were dug at different parts of the mound has also revealed habitational remains from the times of Silaharas to Pre-Portuguese. Turquoise glazed ceramic from the site suggests Maritime trade with Arab countries.

http://www.asigoacircle.com/excavations.php

[10]  இந்த கற்பன அரசன் ஆரம்பித்து வைத்த விக்ரம் சம்வத் (विक्रम संवत) அல்லது ஆண்டுமுறை, நேபாளம் இன்ரும் கடைபிடித்து வருகிறது. ஜாவாவில் 1633 வரை இவ்வாண்டுமுறை கடைபிடிக்கப் பட்டு வந்தது, ஆனால், அன்னோ ஜவனிகோ ( Anno Javanico) என்ற இஸ்லாமியமுறையினால் நீக்கப்பட்டது. பிலிப்பைன்சிலும் கடைப்பிடித்தற்கான சான்று லகுனா தாமிரப்பட்டயம் (Laguna Copperplate Inscription) மூலம் விளங்குகிறது.

[11] Chandor, the ancient city of Chandrapura served as a capital for Bhojas and Kadambas (3-4th to 11th century AD) besides as a port town. The copper plates from Shiroda and Sivapura reveal the rule of Bhaja king Devarajah and Konkan Maurya king Chandravarman respectively, in Chandrapura.

The temple site in the middle of Chandore Cotta, houses the remains of an 11th century Shiva temple which is also known as “Isvorachem”. It was previously excavated in 1930s by Rev Fr Heras and in 1974 by the ASI. The latter excavation brought to light a brick temple consists of garbhagriha surrounded by pradakshinapatha, a large Sabhamandapa and a medium sized mukhamandapa or porch. Excavation during 1999-2000 unearthed two major phases of construction plus a number of later alterations to the second phase which are grouped together as phase III.

Phase I reveals a roughly cruciform building remains with the 14 pillar bases arranged into two rows of six with a further two being located within the western transert. Phase IIA consists of a temple overlying the phase I building having a large squarish mandapa with a small garbhagriha facing west phase IIB. A rectangular structure was added to the east of the temple surrounding garbhagriha of phase IIA. In phase III the basic phase IIB building remains in use for as long as the site was the temple excepted a crudely constructed square brick structure added in the centre of mandapa of phase II. This was ascribed as garbhagriha by the 1974 excavators. This structure considerably belongs to later than the phase II walls, hereby called as western shrine.

To the East of the temple, a stone nandi stands, now surrounded by modern stone wall. This is said to have been removed from the ditch of western shrine of phase III. This sculpture can be stylistically dated to 11th century AD towards firther East of nandi sculpture. Excavations revealed a broad brick wall running in north-south direction. This appears to be a city wall.

The suggested date of the phase I structure is between 3rd – 7th century AD and adhistana moulding of the phase II structure which overlies it can be approximately dated to 7th century AD. The phase III structure represents to the later medieval changes made to the building probably in the period 8th and 13th century AD.

http://www.digitalgoa.com/eg_disp.php?cid=244&typ=eg

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அரேபியர், ஆத்ம லிங்கம், கடம்பர், கணேசர், கந்துக மலை, கோபுரம், சிவன் கோவில், ஜைனர், தர்மஸ்தலா, பஞ்ச க்ஷேத்திரம், பிராண லிங்கம், பௌத்தர், மாலிகாபூர், முகமதியர், முருடேஸ்வர், யாதவர், ராவணன், லிங்கம், வீரேந்திர ஹெக்டே, ஹெக்டே and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s