பிருந்தாவனத்தில் சனாதன் கோஸ்வாமி சமாதி, மதன் மோஹன் மந்திர், பங்கி பிஹாரி கோவில் முதலியவற்றை தரிசித்தல்

பிருந்தாவனத்தில் சனாதன் கோஸ்வாமி சமாதி, மதன் மோஹன் மந்திர், பங்கி பிஹாரி கோவில் முதலியவற்றை தரிசித்தல்

1.1. சனாதன் கோஸ்வாமி சகோதரருடன்

1.1. சனாதன் கோஸ்வாமி சகோதரருடன்

05-09-2014 (வெள்ளிக்கிழமை): சனாதன் கோஸ்வாமி சமாதி (1488-1558): கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த சனாதன கோஸ்வாமி 1488ல் ஜெஸ்ஸோர் (இப்பொழுது வங்காளதேசத்தில் உள்ளது) என்ற இடத்தில் பிறந்தார். இளமையிலேயே, வேதம்-வேதாங்கள் முதலியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். தர்க்கத்தில் சிறந்து விளங்கினார். ஶ்ரீ சைதன்யரின் முக்கிய சீடராக இருந்தார். ரூப கோஸ்வாமி இவரது தம்பி. தந்தை இறந்தவுடன், சனாதன கோஸ்வாமி, அலாவுத்தீன் ஹுஸைன் ஷாவிடம் (1493-1519) “சகரா மாலிக்” –என்ற கணக்காளர் -அரசாங்க உத்தியோகம் செய்ய நேர்ந்தது. இதனால், சமூகம் அவர்களை ஒதுக்கி வைத்தது[1]. 1514ல் ஶ்ரீசைத்தன்யரை சந்தித்தப் பிறகு அவர்களது வாழ்க்கை மாறியது. ஆனால், சுல்தான் மறுபடியும் வேலைக்கு வருமாறு உத்தரவிட்டான். மேலும் ஒரிஸாவின் மீது படையெடுக்கச் செல்வதால், தனக்கு உதவுமாறும் வற்புருத்தினான்[2]. மறுத்ததால் சிறையிலடைக்கப் பட்டார். பிறகு எப்படியோ தப்பித்து விரிந்தாவனுக்கு சென்றார். ஶ்ரீசைத்தன்யரின் ஆறு சீடர்களில் ஒருவரான இவர், சனாதனகோஸ்வாமியின் சகோதரர். பிருந்தாவனத்தில் உள்ள எல்லா இடங்களுக்கும் சென்று, கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட இடங்களைக் கண்டறிந்து, சுத்தப்படுத்தினார், மற்றும் புதுப்பித்தார். பிறகு லோகநாத, பூகர்ப, கோபால பட்ட, ரகுநாத பட்ட, ரகுநாததாஸ கோஸ்வாமிகளுடன் சேர்ர்ந்து பணியாற்றினார். இன்னொரு சகோதரரான ஜீவகோஸ்வாமியும் சேர்ந்து கொண்டார். இவரது நூல்கள் வைஷ்ணவ தத்துவம் மற்றும் சம்பிரதாயங்களுக்கு முக்கியமாக இருக்கின்றன. 1558ல் காலமானார், இவரது சமாதி மதன மோஹன் கோவிலுக்கு அடுத்திருக்கிறது.

1.2. சனாதன் கோஸ்வாமி சமாதி மதன மோஹன மந்த்திருக்கு பின்னால் உள்ள தோற்றம்

1.2. சனாதன் கோஸ்வாமி சமாதி மதன மோஹன மந்த்திருக்கு பின்னால் உள்ள தோற்றம்.

1.2. சனாதன் கோஸ்வாமி சமாதி மதன மோஹன மந்த்திருக்கு பின்னால் உள்ள தோற்றம்.

2. சனாதன் கோஸ்வாமி சமாதி மதன மோஹன மந்த்திருக்கு பின்னால் உள்ளது

2. சனாதன் கோஸ்வாமி சமாதி மதன மோஹன மந்த்திருக்கு பின்னால் உள்ளது.

2. சனாதன் கோஸ்வாமி சமாதி மதன மோஹன மந்த்திருக்கு பின்னால் உள்ளது.

3. ஶ்ரீசனாதன் கோஸ்வாமியின் சமாதி

3. ஶ்ரீசனாதன் கோஸ்வாமியின் சமாதி.

3. ஶ்ரீசனாதன் கோஸ்வாமியின் சமாதி.

4. ஶ்ரீசனாதன் கோஸ்வாமியின் சமாதி, உட்புறம்

4. ஶ்ரீசனாதன் கோஸ்வாமியின் சமாதி, உட்புறம்.

4. ஶ்ரீசனாதன் கோஸ்வாமியின் சமாதி, உட்புறம்.

5. ஶ்ரீசனாதன் கோஸ்வாமியின் சமாதி, அறிவிப்புப் பலகை

5. ஶ்ரீசனாதன் கோஸ்வாமியின் சமாதி, அறிவிப்புப் பலகை.

5. ஶ்ரீசனாதன் கோஸ்வாமியின் சமாதி, அறிவிப்புப் பலகை.

6. சனாதனகோஸ்வாமி பஜனை குடிர்

6. சனாதனகோஸ்வாமி பஜனை குடிர்.

6. சனாதனகோஸ்வாமி பஜனை குடிர்.

7. ஶ்ரீசனாதன் கோஸ்வாமியின் சமாதி, உட்புறம்.சமாதி விக்கிரகம்

7. ஶ்ரீசனாதன் கோஸ்வாமியின் சமாதி, உட்புறம்.சமாதி விக்கிரகம்.

7. ஶ்ரீசனாதன் கோஸ்வாமியின் சமாதி, உட்புறம்.சமாதி விக்கிரகம்.

8. சனாதன் கோஸ்வாமி சமாதி.உள்ளே

8. சனாதன் கோஸ்வாமி சமாதி.உள்ளே

மதன் மோஹன் மந்திர்: பிருந்தாவனத்தில் புராதன கோவில்களில் ஒன்றான, சனாதனகோஸ்வாமி இக்கோவிலைக் கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு முடித்து வைத்தார். முன்பு இங்குள்ள விக்கிரகம் “மதன கோபால” என்றழைக்கப் பட்டவர், “மதன மோஹன” என்றழைக்கப்படுகிறார். அத்வைத ஆச்சாரியார் இதன் விக்கிரகத்தை ஒரு அரசமரத்தடியில் அவர் கண்டெடுத்து, புருஷோத்தம துபே என்பவருக்குக் கொடுக்க அவர், சனாதனகோஸ்வாமிக்குக் கொடுத்தார். சனாதன கோஸ்வாமி அங்கு சிறிய கோவிலைக் யமுனை நதிக்கரையில், ஒரு சிறிய குன்றின் மீது கட்டி வழிபட்டு வந்தார். அவருக்கு எப்படியாவது, பெரிய கோவிலைக் கட்ட வேண்டும் என்ற ஆசையிருந்தது.

2. மதன மோஹன கோவில் போகும் வழி படிகட்டுகள்

2. மதன மோஹன கோவில் போகும் வழி படிகட்டுகள்

மதன மோஹன கோவில் போகும் வழி படிகட்டுகள்

மூல்தான் வியாபரியின் கப்பல் சிக்கியது, தப்பியது: யமுனை ஆறு கடல் போன்று பிரமாண்டமான ஆறாக இருந்ததால், கப்பல்கள், படகுகள் போக்கு வரத்து அக்காலத்தில் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. குறிப்பாக பொருட்களை ஒரு இடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல, உள்ளூர் நதி போக்குவரத்திற்கு நன்றாக பயன்பட்டது. ஒரு நாள், மூல்தானிலிருந்து, ராம்தாஸ் கபூர் என்ற ஒரு வியாபாரி தனது கப்பலில் பொருட்களை ஏற்றிக் கொண்டு, யமுனைநதியில் பொழுது சாயும் நேரத்தில் போய்க் கொண்டிருந்தார். இருள் சூழ ஆரம்பித்த வேளையில், திடீரென்று அவரது கப்பல் சேற்றில் சிக்கிக் கொண்டு நின்று விட்டது[3]. செய்வதறியாது, திகைத்துக் கொண்டிருந்தபோது, கரையின் மீதிருந்த ஒரு குன்றின் மீதிலிருந்து விளக்கு வெளிச்சம் வருவதைக் கண்டார். சென்று பார்த்த போது, சனாதனகோஸ்வாமி உட்கார்ந்திருப்பதைக் கண்டார். விசயத்தைச் சொன்னதும், கவலைப்படாதே, மதனமோஹனை வேண்டிக்கொள், எல்லாம் நன்றாக முடியும் என்றார். அதன்படியே, உள்ளம் உருக வேண்டிக் கொண்டார். இரவு அங்கேயே தங்கினார். விடியற்காலையில், திடீரென்று பெருங்காற்று அடித்தது. சேற்றில் சிக்கிக் கொண்டிருந்த கப்பல் விடுபட்டு நகர ஆரம்பித்தது[4]. மகிழ்ந்து போன வியாபாரி, ஸ்வாமியிடம் தான் என்ன கைமாறு செய்ய வேண்டும் என்று கேட்டபோது, தனக்கு ஒன்றும் வேண்டாம், ஆனால், மதன் மோஹனுக்கு ஒரு பெரிய கோவில் கட்டுவாயாக என்று கேட்டுக் கொண்டார். அவரும் ஒப்புக் கொண்டு உத்தரவுப் பெற்றுக் கொண்டு சென்று விட்டார். சிலகாலம் கழித்து அங்கு வந்தபோது, இக்கோவில் கட்டுவதற்கான பணத்தைக் கொடுத்தார்[5].

9. Madan_Mohan_temple,_on_the_Yamuna,_Vrindavan,_1789

9. Madan_Mohan_temple,_on_the_Yamuna,_Vrindavan,_1789

1789ல் வரையப்பட்ட சித்திரத்தில் கோவில் யமுனைக்கரையில் இருப்பதைக் காட்டுகிறது.

10. kesighat-yamuna river- Madhan Mohan mandir back side

10. kesighat-yamuna river- Madhan Mohan mandir back side

கேசி காட் எனப்படுகின்ற தோற்றம், கோவில் பின்னணியுடன் காட்டுகிறது.

10.1. யமுனை நதி தூரத்திலிருந்து

10.1. யமுனை நதி தூரத்திலிருந்து

அகலமுள்ள யமுனை நதி கப்பல், படகு போக்குவரத்திற்கு உபயோகப்பட்டது.

11. Ramdas Kapoor Multan helped to the temple

11. Ramdas Kapoor Multan helped to the temple

ராம்தாஸ் கபூர் கப்பல் சிக்கி, மீண்டது, கோவில் கட்ட உதவியது.

கோவில் 1580ல் கட்டப்பட்டதுகோவில் உச்சிகள் கலங்கரை விளக்கமாக பயன் பட்டது: குன்றின் மீது கட்டப்பட்டதால், தூரத்திலிருக்கும் இடத்திலிருந்து கூட இதன் உச்சியைப் பார்க்கலாம். அதனால், உச்சியின் மீது ஒரு விளக்கு மற்றும் காந்தக்கருவியினால் காற்றின் திசைக் காட்டும் கருவியினையும் வைத்து கோபுரத்தைக் கட்டி முடித்தார். அதாவது, கப்பல்களில் சரக்கேற்றி வருபவர்களுக்கு உதவும் “கலங்கரை விளக்கம்” போலவும் கோபுர உச்சி பயன்படுத்தப்பட்டது. ஒரிஸா அமைப்பில் 60 அடி உயரம் (20 மீ) கொண்ட இது 1580 கட்டப்பட்டது. கோனார்க்கில் உள்ள கோவிலும் இதே மாதிரி கருவிகள் பொறுத்தப்பட்டுக் கட்டப்பட்டன[6]. மேலும், சிந்து மற்றும் காந்தாரப் பகுதிகள் முகமதியர்களின் தாக்குதல்களுக்கு உட்பட்டதால் (712), அங்கிருந்து இவ்விக்கிரகம் எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்பதனைக் காட்டுகிறது. 712லிருந்து 1000 வரை அப்பகுதிகளில் அதிகமான தாக்குதல்கள் நடந்து வந்துள்ளன. முகமதியர்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிய இந்துக்கள் கிழக்கு நோக்கி நகர ஆரம்பித்தார்கள் என்று தெர்கிறது. அதனால், மூல்தான் / மூலஸ்தானத்திருந்தவர் பணம் கொடுத்தார் என்றுள்ளது.

1670ல் ஔரங்கசீப்பினால் இக்கோவில் தாக்கப்பட்டது, சேதப்பட்டது: ஔரங்கசீப் 1670ல் இந்த கோவிலை இடிக்க ஆட்களை அனுப்பினான். அப்பொழுது, விக்கிரகம் ஜெய்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஜெய்பூர் மஹாராஜா ஜெய் சிங்கின் மைத்துனர் கனவில் மதன் மோஹன் வந்து தன்னை கரோலிக்கு எடுத்துச் செல் என்றாராம். அதனை ஜெய் சிங்கிடம் சொல்ல அவர் அதனை ஜெய்பூருக்குக் கொண்டு வந்தார் என்று இன்னொரு குறிப்பு கூறுகிறது[7]. வந்த முகமதியர்கள், கோவிலைக் கொள்ளையடித்து, உச்சியை உடைத்து விட்டனர்[8]. ஏழடுக்குக் கொண்ட கோவிலை ஜெய் சிங் கட்டியதாக சொல்லப்படுகிறது. விளக்கையும், கருவியையும் சேதப்படுத்தினர். மிலேச்சர்களினால் அந்த இடம் அசுத்தப்பட்டுவிட்டது என்பதால், குன்றின் கீழே இன்னொரு கோவில் கட்டப்பட்டு, அதே போன்ற விக்கிரகமும் வைக்கப்பட்டது[9]. முகமதியர்கள் தாக்கிய கோவிகளில் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதையும் கவனிக்கத்தக்கது. கிழக்கு பார்த்த மூலவர், நுழைவு முதலியவை மேற்கு அல்லது திசை மாற்றப்பட்டது போன்றவை இக்காரணத்தினால் ஏற்பட்டவையே[10].

பங்கி பிஹாரி மந்திர்: தான்சேன் (1493-1585) என்ற பாடகரின் குருவான ஸ்வாமி ஹரிதாஸ் (1512-1575) என்பவர் இந்த் கோவிலை நிறுவி ஏற்படுத்தினார். உள்ளே இருக்கும் விக்கிரகம் ஸ்வாமி ஹரிதாஸுக்கு, கிருஷ்ணரே கொடுத்ததாக ஐதீகம். “பங்கி” என்றால், மூன்று இடங்களில் வளைவுள்ள என்ற பொருள், அதாவது “திரிபங்க” என்றும் கூறப்படும். பரத நாட்டியத்தில், உடம்பை மூன்று வளைவுகளுடன், ஒயிலாக நிற்க்கும் நிலைக்கு “திரிபங்க” எனப்படும்.  சிற்பக்கலையிலும், இம்முறை பின்பற்றப்படுகிறது. கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தூக்கி நின்றபோது, அவ்வாறு நின்றதாக சித்திரங்களில் வரைந்துக் காட்டப்பட்டுள்ள்ளது. “பிஹாரி” என்றால் அனுபவிப்பவர் என்று பொருள். இங்கு பங்கி பிஹாரி என்று கிருஷ்ணரைக் குறிக்கும் போது, கிருஷ்ணர் அவ்வாறு நின்று பக்தர்களுக்கு சந்தோஷம் கொடுப்பவர் என்று பொருள். முதலில் இவ்விக்கிரகம் நிதிவனத்தில் இருந்தது, பிறகு இங்கு கொண்டு வரப்பட்டது. 1862ல் இங்கு ஸ்தாபிக்கப் பட்டு, இக்கோவில் கட்டப்பட்டது. கிருஷ்ணருடன் சம்பந்தப்பட்ட எல்லா விழாக்கள், பண்டிகைகளின் போது, ஏராளமான பக்தர்கள் வந்து குவிகிறார்கள்.

12. பங்கி பிஹாரி மந்திர்

12. பங்கி பிஹாரி மந்திர்

பங்கி பிஹாரி மந்திர் – விரிந்தாவனத்தில் பிரபலமான கோவில்.

13. பங்கி பிஹாரி மந்திர்.விக்கிரகம்

13. பங்கி பிஹாரி மந்திர்.விக்கிரகம்

பங்கி பிஹாரி மந்திர் – உள்ளே இருக்கும் அழகிய விக்கிரகம்.

13.1. பங்கி அல்லது திருபுங்க நிலை - கிருஷ்ணர் கோவர்த்தன மலை

13.1. பங்கி அல்லது திருபுங்க நிலை – கிருஷ்ணர் கோவர்த்தன மலை

பங்கி அல்லது திருபுங்க நிலை – கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தூக்கி நின்ற போது, அத்தகைய நிலையைக் காணலாம்.

14. பங்கி பிஹாரி மந்திர். உள்ளே ஏகப்பட்ட கூட்டம்

14. பங்கி பிஹாரி மந்திர். உள்ளே ஏகப்பட்ட கூட்டம்

பங்கி பிஹாரி மந்திர். உள்ளே ஏகப்பட்ட கூட்டம்!

15. பங்கி பிஹாரி மந்திர். உள்ளே ஏகப்பட்ட கூட்டம்.-ராதாஸ்டமி விளைவு

15. பங்கி பிஹாரி மந்திர். உள்ளே ஏகப்பட்ட கூட்டம்.-ராதாஸ்டமி விளைவு

பங்கி பிஹாரி மந்திர். உள்ளே ஏகப்பட்ட கூட்டம்.-ராதாஸ்டமி விளைவு

வேதபிரகாஷ்

© 03-07-2015

[1] முகமதியர்களுக்கு சேவகம் செய்ததனால் ஏன் விலக்கி வைக்க வேண்டும் என்று நோக்கத்தக்கது. பிறகு அக்பர் காலத்தில் பல இந்துக்கள் அவரது அரசவையில் இருந்தார்கள் என்றெல்லாம் பெரும்கை பேசுவது ஏன் என்று தெரியவில்லை.

[2] முகமதிய ஆட்கள் குறிப்பாக படித்த மற்றும் விவரங்கள் அறிந்த இந்துக்களை இவ்வாறு உபாயோகித்துக் கொண்டார்கள் என்பது பற்ரி ஆராயவேண்டியுள்ளது.

[3]  Charles R. Brooks, The Hare Krishnas in India, Princeton University Press, New Jrsey, USA, 1991, p.50.

[4]  Steven Rosen, The Six Goswamis of Vrindavan, 1991, p.134.

[5] http://madhanmohanmandir.blogspot.in/

[6] அக்கோவில் உச்சியிலும் காந்த கருவிகள் பொறுத்தப் பட்டிருந்தன, ஆனால், அவற்றை போர்ச்சுகீசியர் கழற்றி எடுத்டுச் சென்று விட்டார்கள்.ஆதைத் தாங்க வைத்திருந்த இரும்பு “கர்டர்கள்” என்றும் உள்ளன.

[7] Maharaja Jai Singh brought Madana-Mohan to Jaipur from Vrindavan. His brother-in-law, Maharaja Gopal Singh, had a dream in which Madana-Mohan said “Take Me to Karoli.”

http://www.radha.name/images-gallery/india-holy-places/karoli-karauli-madan-mohan-temple

[8]  Subhadra Sen Gupta, Tirtha: holy pilgrim centres of the Hindus : saptapuri & chaar dhaam, Rupa & Co., 2001, p.121.

[9] http://mathuravisit.com/vrindavan/mandan-mohan-temple.html

[10] கோவில்களும் தாக்கப்படாமல் இருப்பதற்கு ஏதாவது வழிமுறை பின்பற்றப்பட்டதா என்பதையும் ஆராய வேண்டும். சோமநாத், அயோத்தியா, மதுரா போன்ற கோவில்கள் மறுபடி-மறுபடி இடிக்கப்பட்டபோது, மற்ற கோவில்கள் அவ்வாறு பலமுறை இடிக்கப்படாமல் எப்படி தப்பின என்பதும் நோக்கத்தக்கது.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அலாவுத்தீன் ஹுஸைன் ஷா, கப்பல், கலங்கரை விளக்கம், சனாதன் கோஸ்வாமி, சமாதி, சைத்தன்யர், பங்கி பிஹாரி, பங்கி பிஹாரி கோவில், படகு, மதன் மோஹன், மதன் மோஹன் மந்திர், யமுனை, ராம்தாஸ் கபூர், ரூப கோஸ்வாமி, வங்காளம், விரிந்தாவன் and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s