பிருந்தாவனத்தில் ரூபகோஸ்வாமி சமாதி-மந்திர், இம்லி-தாளா, வைஷ்ணவி தேவி கோவில், பிரேம் மந்திர், இஸ்கான் கோவில் முதலியவற்றை தரிசித்தல்!

பிருந்தாவனத்தில் ரூபகோஸ்வாமி சமாதிமந்திர், இம்லிதாளா, வைஷ்ணவி தேவி கோவில், பிரேம் மந்திர், இஸ்கான் கோவில் முதலியவற்றை தரிசித்தல்

ரூபகோஸ்வாமி சமாதிமந்திர்: ராதா தாமோதர கோவில் என்றழைக்கப்படுகின்ற அருகில் உள்ள இன்னொரு முக்கியமான கிருஷ்ணர் கோவில். ரூப கொஸ்வாமி மற்றும் சனாதன கோஸ்வாமிகளின் உறவினர் ரூப கொஸ்வாமியால் இக்கோவில் கட்டப்பட்டது. ராதா-கிருஷ்ண விக்கிரங்களுடன், கிருஷ்ணர் பாதமும் உள்ளன. சனாதன கோஸ்வாமிக்கு வயதாகிவிட்ட காலத்தில், அவரால் கோவர்த்தன கிரிவலம் செல்ல முடியவில்லை. இதனால், கிருஷ்ணரே இவரைப் பார்க்க வந்துவிட்டதாக ஐதீகம். ஒரு கல்லின் மீது பாதம், கைத்தடி, புல்லாங்குழல், கல்லில் பதியப்பட்ட மாட்டில் திமில் முதலியவற்றை ஆதாரமாகக் காட்டப்படுகின்றன. ஆம்பர், ஜெய்பூரின் ராஜா மான் சிங் இப்பொழுதுள்ள இக்கோவிலைக் கட்டினார். இங்குள்ள நூலகத்தில் ஆறு கோஸ்வாமிகளின் ஓலைசுவடிகளும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல காணப்படவில்லை என்றும் சொல்கிறார்கள்.

ரூப கொஸ்வாமி

ரூப கொஸ்வாமி (1489-1564)

ஶ்ரீ ரூப கொஸ்வாமி (1489-1564).

Sri Rupa, Sri Sanatana, Bhatta Raghunatha, Sri Jiva, Gopala Bhatta, and Dasa Raghunatha

Sri Rupa, Sri Sanatana, Bhatta Raghunatha, Sri Jiva, Gopala Bhatta, and Dasa Raghunatha

இவர் ஆறு சீடர்களில் ஒருவர்.

Rupa-Goswami-Samadhi

Rupa-Goswami-Samadhi

ஶ்ரீ ரூபகோஸ்வாமியின் சமாதி.

ரூப கோஸ்வாமி கிணறு

ரூப கோஸ்வாமி கிணறு

ரூப கோஸ்வாமி கிணறு.

ரூப கோஸ்வாமி பஜன் குடிர்

ரூப கோஸ்வாமி பஜன் குடிர்

ரூப கோஸ்வாமி பஜன் குடிர்

இம்லிதாளா[1]: கிருஷ்ணர் காலத்தில் இருந்த புளிய மரம் மற்றும் குளம். ஒரு கதையின் படி ராதா இங்கு வந்தபோது, அவர் மீது புளியம்பழம் மேலே விழுந்ததாம். இதனால், திடுக்கிட்ட ராதா கோபம் கொண்டு சாபமிட்டதால் அம்மரம் பட்டுப்போய் விட்டதாம். இன்னொரு கதையின் படி, ஶ்ரீசைத்தன்யர் தினமும் அக்ரூர என்ற இடத்திலிருந்து வந்து, யமுனை நதிக்கரையிலுள்ள புளிய மரத்தின் கீழ் உட்காருவது வழக்கம். ஒருமுறை அம்மரத்தை யாரோ வெட்ட வந்தபோது சைதன்யரே அதனைத் தடுத்தாராம். இருப்பினும் அது பட்டுப்போய் விட்டதாம். அதனால், புதிய மரத்தை வைத்து வளர்க்கிறார்கள். பட்டுப்போன மரமும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணர் ராதை நினைத்துக் கொண்டு இதன் கீழ் உட்கார்ந்து நினைத்துக் கொண்டிருக்கும் போது, ராதாராணி தங்கம் போன்ற ஜொலிப்புடன் காட்சியளித்ததால், “சித்த-பீட் இம்ளி தாள” என்ரு அழைக்கப்படுகிறது. 1516ல் ஶ்ரீசைதன்யர் இங்கு வந்திருந்தார். உள்ளே சித்தரிக்கப்பட்டுள்ள ஓவியச்சிலைகளில், யாரோ ஒரு முகமதி கொள்ளையன் தாக்கியபோது மயங்கி விட்டதாகக் காட்டப்பட்டுள்ளது. புளியமரத்தை வெட்ட வந்தவனும் ஒரு முகமதியன் என்று தெரிகிறது[2]. இங்கும் ஒரு குமமதிய குற்றுக்கீடு உள்ள்ச்தை கவனிக்கலாம்.

இம்லி தாளா - நுழைவு வாயில், பட்டுப் போன மரத்தின் பகுதி

இம்லி தாளா – நுழைவு வாயில், பட்டுப் போன மரத்தின் பகுதி

இம்லி தாளா புளிய மரம் – நுழைவு வாயில், பட்டுப் போன மரத்தின் பகுதி.

இம்லி தாளா - மஹிமைப் பற்றி கூறும் அறிவிப்புப் பலகைகள்

இம்லி தாளா – மஹிமைப் பற்றி கூறும் அறிவிப்புப் பலகைகள்

இம்லி தாளா – மஹிமைப் பற்றி கூறும் அறிவிப்புப் பலகைகள்.

இம்லி தாளா - வழிபடும் பக்தர்களும், ஆங்கிலத்தில் கதையும்

இம்லி தாளா – வழிபடும் பக்தர்களும், ஆங்கிலத்தில் கதையும்

இம்லி தாளா – வழிபடும் பக்தர்களும், ஆங்கிலத்தில் கதையும்.

இம்லி தாளா - சைதன்யரும் முகமதிய கொள்ளையனும்

இம்லி தாளா – சைதன்யரும் முகமதிய கொள்ளையனும்

இம்லி தாளா – சைதன்யரும் முகமதிய கொள்ளையனும்.

இம்லி தாளா - சைதன்யரும் முகமதிய காஜி சாந்த் என்பனும்

இம்லி தாளா – சைதன்யரும் முகமதிய காஜி சாந்த் என்பவனும்

இம்லி தாளா – சைதன்யரும் முகமதிய காஜி சாந்த் என்பவனும்.

இம்லி தாளா - வளரும் மரமும், பின்பக்க வாயிலும்

இம்லி தாளா – வளரும் மரமும், பின்பக்க வாயிலும்

இம்ளி தாளாவுக்கு வரும் போது, இரண்டு பக்கங்களிலும் இரண்டு-மூன்று அடுக்குகள் கொண்ட மாளிகைகள் போன்ற பெரிய கட்டிடங்கள் காணப்பட்டன. அழகிய வளையுகள் கொண்ட ஜன்னல்கள், கதவுகள், முகப்புகள் கொண்டு அவை மிக்கக்கலை வேலைப்பாட்டுடன் இருக்கின்றன. சில கட்டிடங்களில் யாரும் வசிப்பதாகத் தெரியவில்லை. அஸ்டகோணத்தில் தூண்கள் கொண்ட மண்டபங்கள் தெருவின் நடுவே உள்ளன. சிகப்பு நிறத்தில் உள்ள அவை ராஜஸ்தானிய கட்டிடக் கலையை வெளிப்படுத்துகின்றன. முகலாயர்கள் கட்டப்பட்டதாக சொல்லப்படும் மாளிகைகள், மசூதிகள் முதலியவை எல்லாம் இதே தொற்றத்துடன் தான் காணப்படுகின்றன. அவர்கள் ஏற்கெனவே இருந்த கட்டிடங்கள் மீது சில மாறுதல்களை உண்டாக்கியுள்ளனர் என்பது தெரிகின்றது. அதாவது, கதவுகள், ஜன்னல்கள், முகப்புகள், வளைவுகளின் மீது, அரேபிய, பாரசீக மொழிகளில் சுல்தான் பெயர்கள், குரான் வசனங்கள் முதலியவற்றை செதுக்கி வைத்துள்ளனர். இல்லை அத்தகைய செதுக்கப்பட்ட கற்களை மேலே பதித்துள்ளனர். அதனால், அவையெல்லாமளந்தந்த காலங்களில், அவர்கள் கட்டப்பட்டன என்று சரித்திராசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். ஆனால், அவை இருக்கும் இடம் மற்றும் உள்ளே சென்று அவற்றின் அமைப்புகளைக் கவனித்தால், உள்ள கோவில்கள், சௌரஸி கம்பங்கள் கொண்ட இடங்கள் அல்லது மண்டபங்கள், அரண்மனைகள் முதலியவற்றிற்கும் இந்த முகலாய கட்டிடங்களுக்கும் எந்த வேறுபாடும் தெரியவில்லை. மாலை கீழ்கண்ட கோவில்களுக்கு சென்றோம்.

விரிந்தாவன் - பிரம்மாண்டமான கட்டிடங்கள்.அழகிய வளைவுகள்

விரிந்தாவன் – பிரம்மாண்டமான கட்டிடங்கள்.அழகிய வளைவுகள்

விரிந்தாவன் – பிரம்மாண்டமான கட்டிடங்கள்.அழகிய வளைவுகள்.

விரிந்தாவன் - பிரம்மாண்டமான கட்டிடங்கள்

விரிந்தாவன் – பிரம்மாண்டமான கட்டிடங்கள்

விரிந்தாவன் – பிரம்மாண்டமான கட்டிடங்கள்.

விரிந்தாவன் - பிரம்மாண்டமான கட்டிடங்கள். மூன்ரு அடுக்குகள் அமைப்பு

விரிந்தாவன் – பிரம்மாண்டமான கட்டிடங்கள். மூன்று அடுக்குகள் அமைப்பு

விரிந்தாவன் – பிரம்மாண்டமான கட்டிடங்கள். மூன்று அடுக்குகள் அமைப்பு.

விரிந்தாவன் - பிரம்மாண்டமான கட்டிடங்கள். சிதலமடைந்து வருகின்றன

விரிந்தாவன் – பிரம்மாண்டமான கட்டிடங்கள். சிதலமடைந்து வருகின்றன

விரிந்தாவன் – பிரம்மாண்டமான கட்டிடங்கள். சிதலமடைந்து வருகின்றன.

விரிந்தாவன் - பிரம்மாண்டமான கட்டிடங்கள். தெருவில் அஸ்டகோண மண்டபம்

விரிந்தாவன் – பிரம்மாண்டமான கட்டிடங்கள். தெருவில் அஸ்டகோண மண்டபம்

வைஷ்ணவி தேவி கோவில்: “மா வைஷ்ணோ தேவி ஆஸ்ரம்” சதிக்ரா-பிருந்தாவன் நெடுஞ்சாலையில் சமீபத்தில், மா வைஷ்ணோ தேவி ஆஸ்ரம் (ஜே கே டிரஸ்ட்) மூலம் கட்டப்பட்டுள்ள கோவிலாகும்[3]. உள்ளே செருப்பு, ஷூ, பெல்ட் மற்ற தோலினால் செய்யப்பட்டப் பொருட்கள், பைகள், செல்போன்கள், தண்ணீர் எடுத்துச் செல்லக்கூடாது[4]. அனுமதி இலவசம் சென்றாலும், உள்ளே செல்பவர்கள் தங்களது விவரங்களைக் கொடுத்து, உள்ளே செல்ல சீட்டுப் பெற்றுக் கொண்டு செல்லவேண்டும்.  இதனை கோவில் என்பதை விட, ஒரு பெரிய வைஷ்ணவி தேவி சிலையைக் கொண்டுள்ள வளாகமாக உள்ளது. உள்ளே “ஆர்ட் கிளாரி”யில், இக்கட்டிடம், சிலை முதலியவை எப்படி கட்டப்பட்டன என்பதனை விளக்கும் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன[5].  வரிசையாக வைக்கப்பட்டுள்ள தசவாதர சிலைகள் பளிங்கு கற்களினால் செய்யப்பட்டுள்ளன. சக்தியின் உருவங்களும் வைக்கப்பட்டுள்ளன. உள்ளே ஒரே புழுக்கமாக இருக்கிறது, மேலும் குடிக்க தண்ணீர் வசதியும் இல்லை. வெளியில் கொடுக்கப்படுகின்ற குடிநீர் உப்புக்கரிக்கிறது. இது ஒரு “பிக்னிக் ஸ்பாட்” போலாகி விட்டது.

பிரேம் மந்திர்[6]:  125 அடிகள் உயரம், 122 அடி நீளம் மற்றும் 115 அடி அகலம் என்று 54 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த நவீன கட்டிடம் இத்தாலிய சலவைககற்களல் இந்திய-மேனாட்டு கட்டிக்கலைக் கலப்போடுக் கட்டப்பட்டுள்ளது. ஜனவரி 2001ல் அடிக்கல் நாட்டப்பட்டு, பிப்ரவரி 2012ல் பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது. இதைக்கட்ட $ 23 மில்லியன் அல்லது ரூ 150 கோடிகள் செலழழிக்கப்பட்டன. ஶ்ரீகிருஷ்ணர் வாழ்க்கையைச் சித்தரிக்கும் சிலைகள், சித்திரங்கள் என்று பலவுள்ளன. 2013ல் காலமான கிருபாளு மஹராஜ் டிரஸ்டின் கீழ் கட்டிய இக்காலத்தைய கோவில், சுற்றுலா பயணிகளுக்கு பொழுது போக்கும் இடமாகி மாரிவிட்டது. நாங்கள் சென்ற போது, அசாத்தியமான கூட்டம் இருந்தது. நீரூற்றுகள், வண்ண விளக்குகள் என்று அமோகமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்ததது.

இஸ்கான் கோவில்: இது நாங்கள் தங்கியுள்ள கௌடியா மடத்திற்கு அருகிலேயே உள்ளது. மற்ற இஸ்கான் கோவில்களைப் போன்றே உள்ளது. விக்கிரகங்களும் அதே பாணியில் உள்ளன. உள்ளேயே பிரம்மாண்டமான “ரெஸ்டாரென்ட்” உணவு உண்ணும் இடம் உள்ளது. பணக்காரர்கள் மட்டுமே உண்ண்மும் அளவிற்கு விலை அதிகமாகவே உள்ளது. தவிர பூஜை பொருட்கள், புத்தகங்கள் மற்ற பொருட்களை வாங்க கடையும் உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு இதுவும் ஒரு இழுக்கும் இடமாக உள்ளது.

வேதபிரகாஷ்

© 03-07-2015


 

[1] http://mathuravisit.com/vrindavan/Imlitala-tree.html

[2] அதாவது முகமதியர்கள் வந்து கோவில்களை இடிப்பது, அவர்களது வழிபாட்டு இடங்களை அவமதிப்பது, அசுத்தம் செய்வது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வந்ததால், இவ்வாறான விவரங்களை மறைமுகமாக கதைகள் மூலம் சொல்லப்படுகின்றன என்று தெரிகிறது.

[3] J C. Chaudhry is the Managing Trustee and the founder of Maa Vaishno Devi Dham at Vridavan. With his staunch belief in Maa Vaishno Devi, he established this Dham with an height of 141ft from ground level), Devi Mandir, Darshan Gufa, Bhojanalaya, Free Dispensary, Dharamshalas, Spritual Hall, Meditation Hall, Yoga Hall and Library etc. http://maavaishno.org/Aashram

[4] http://maavaishno.org/InformationVisitor

[5] http://maavaishno.org/AshramFacts

[6] http://mathuravisit.com/vrindavan/prem-mandir.html

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in கட்டடம், கட்டிடம், கலை நயம், கிருஷ்ணர், குகை, கௌடியா மடம், சனாதன கோஸ்வாமி, ஜெய்பூர், தேவி, பிருந்தாவன், பூஜை, மதுரா, முகமதியர், ராஜஸ்தான், ராதா, ரூப கோஸ்வாமி, ரூபகோஸ்வாமி, விரஜ், விரஜ் பூமி, விருந்தாவன் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to பிருந்தாவனத்தில் ரூபகோஸ்வாமி சமாதி-மந்திர், இம்லி-தாளா, வைஷ்ணவி தேவி கோவில், பிரேம் மந்திர், இஸ்கான் கோவில் முதலியவற்றை தரிசித்தல்!

  1. ganesan சொல்கிறார்:

    இன்னும் பிருந்தா வனத்தை பற்றி தமிழில் கூறுங்கள் பிரபு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s