பிருந்தாவனத்தில் ஶ்ரீ ரங்கநாத கோவில், கோதா பிஹாரி ஜி மந்திர், கோபேஸ்வர மஹாதேவ் மந்திர், பன்ஸிவட்-மஹா-ரசஸ்தல், ஸ்யாம் சுந்தர் மந்திர், சேவா குஞ் அல்லது நிகுஞ் வனம் முதலியவற்றை தரிசித்தல்!

பிருந்தாவனத்தில் ஶ்ரீ ரங்கநாத கோவில், கோதா பிஹாரி ஜி மந்திர், கோபேஸ்வர மஹாதேவ் மந்திர், பன்ஸிவட்மஹாரசஸ்தல், ஸ்யாம் சுந்தர் மந்திர், சேவா குஞ் அல்லது நிகுஞ் வனம் முதலியவற்றை தரிசித்தல்

1. விருந்தாவனம் - நாங்கள் தங்கிடயிருந்த கைடியா மடம், பக்கத்தி உள்ள கோவில்

1. விருந்தாவனம் – நாங்கள் தங்கிடயிருந்த கௌடியா மடம், பக்கத்தில் உள்ள கோவில்

விருந்தாவனத்தில் நாங்கள் தங்கிடயிருந்த கௌடியா மடம், பக்கத்தில் உள்ள கோவில்.

2. விருந்தாவனம் - நாங்கள் தங்கிடயிருந்த கைடியா மடம், பக்கத்தி உள்ள கோவில்.சேந்து காணப்படும் தோற்றம்

2. விருந்தாவனம் – நாங்கள் தங்கிடயிருந்த கௌடியா மடம், பக்கத்தில் உள்ள கோவில்.சேர்ந்து காணப்படும் தோற்றம்

விருந்தாவனத்தில் நாங்கள் தங்கிடயிருந்த கௌடியா மடம், பக்கத்தில் உள்ள கோவில்.சேர்ந்து காணப்படும் தோற்றம், ஒரே வளகத்தில் உள்ளன.

3. விருந்தாவனம் - நாங்கள் தங்கிடயிருந்த கௌடியா மடம் தெரு - எதிர்பக்க வீடிலிருந்து ஒரு மூதாட்டி தினமும் உணவு போடுவார்

3. விருந்தாவனம் – நாங்கள் தங்கிடயிருந்த கௌடியா மடம் தெரு – எதிர்பக்க வீடிலிருந்து ஒரு மூதாட்டி தினமும் உணவு போடுவார்

விருந்தாவனம் – நாங்கள் தங்கிடயிருந்த கௌடியா மடம் தெரு – எதிர்பக்க வீட்டிலிருந்து விடியற்காலை 6 மணிலிருந்து ஒரு மூதாட்டி தினமும் பறவைகள், விலங்குகள் முதலிவற்றிற்கு தாராளமாக உணவு போடுவார்.

04-09-2014 (வியாழக்கிழமை):  பிருந்தாவனத்தில் உள்ள கௌடியாமடத்தை நேற்று இரவு வந்தடைந்தோம். காலைக்கடன்களை முடித்துக் கொண்டு 7.30க்கு தயாராகி விட்டோம். இன்று கீழ்கண்ட இடங்களைப் பார்த்தோம்.

4. விருந்தாவனம் - ரங்கநாத கோவில், வாசல் வளைவு, கோபுரம்

4. விருந்தாவனம் – ரங்கநாத கோவில், வாசல் வளைவு, கோபுரம்

விருந்தாவனம் – ரங்கநாத கோவில், வாசல் ராஜ்ஸதான் கட்டிடக் கலையுடன் வளைவு, தென்னிந்திய கட்டமைப்பில் கோபுரம்.

5. விருந்தாவனம் - ரங்கநாத கோவில் உள்ளே சுற்றிவரும் பக்தர்கள்

5. விருந்தாவனம் – ரங்கநாத கோவில் உள்ளே சுற்றிவரும் பக்தர்கள்

விருந்தாவனம் – ரங்கநாத கோவில் உள்ளே சுற்றிவரும் பக்தர்கள்

ஶ்ரீரங்கநாத் ஜி அல்லது ரங்கநாதர் கோவில்: சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ண சேத் மற்றும் கோவிந்ததாஸ சேத் ரூ.45 லட்சங்கள் செலவழித்து 1845ல் தொடங்கி 1851ல் கட்டிமுடிக்கப்பட்ட கோவிலாகும். தென்னிந்திய கோவில் கட்டுமான முறையில் கட்டப்பட்டதாகும்[1]. இருப்பினும் வாசலில் உள்ள வளைவு ராஜஸ்தான கட்டுமான அமைப்பில் உள்ளது. சுற்றுச்சுவர் 231 x 132 மீ அல்லது 770 x 132 அடிகள் கொண்டு குளம் மற்றும் அழகிய நந்தவனத்தைக் கொண்டுள்ளது.  கோபுரத்தின் உயரம் 18 மீ / 105 அடிகள் உள்ளது. தென்னிந்திய பூஜாரிகளால் ஶ்ரீராமானுஜர் சம்பிரதாயத்தின் படி, பூஜை மற்ற கிரியைகள் நடக்கின்றன. பிராதன தெய்வங்கள் விஷ்ணு மற்றும் மஹாலக்ஷ்மி ஆகும், தவிர, ராமர்-சீதை-லக்ஷ்மணர், நரசிம்மர், ஆழ்வர்கள் விக்கிரங்களும், சன்னிதிகளும் உள்ளன. இக்கோவில் தென்னிந்திய கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலிருந்தும் ஏகப்பட்ட பக்தர்கள் இங்கு வந்து செல்கிறார்கள். இந்திய ஒருமைப்பாட்டைக் காட்டும் கோவில்களில் இதுவும் ஒன்று என்பதை அறிந்து கொள்ளலாம்.

6. விருந்தாவனம் - நரங்கநாத கோவில் - உள்ளே செல்லும் வழி, பக்தர்களுக்கு விதிமுறைகள்

6. விருந்தாவனம் – நரங்கநாத கோவில் – உள்ளே செல்லும் வழி, பக்தர்களுக்கு விதிமுறைகள்

விருந்தாவனம் – நரங்கநாத கோவில் – உள்ளே செல்லும் வழி, பக்தர்களுக்கு விதிமுறைகள்

7. விருந்தாவனம் - ரங்கநாத கோவில் உள்ளே தரிசனத்திற்கு நிற்கும் பக்தர்கள்

7. விருந்தாவனம் – ரங்கநாத கோவில் உள்ளே தரிசனத்திற்கு நிற்கும் பக்தர்கள்

விருந்தாவனம் – ரங்கநாத கோவில் உள்ளே தரிசனத்திற்கு நிற்கும் பக்தர்கள்.

8. விருந்தாவனம் - ரங்கநாத கோவில் மூலைகள், சுற்றிவரும் பக்தர்கள்

8. விருந்தாவனம் – ரங்கநாத கோவில் மூலைகள், சுற்றிவரும் பக்தர்கள்

விருந்தாவனம் – ரங்கநாத கோவில் மூலைகள், சுற்றிவரும் பக்தர்கள்

8.1. விருந்தாவனம் - ரங்கநாத கோவில் மூலைகள், பக்க பிராகாரம், சுற்றிவரும் பக்தர்கள்

8.1. விருந்தாவனம் – ரங்கநாத கோவில் மூலைகள், பக்க பிராகாரம், சுற்றிவரும் பக்தர்கள்

விருந்தாவனம் – ரங்கநாத கோவில் மூலைகள், பக்க பிராகாரம், சுற்றிவரும் பக்தர்கள்.

கோதா பிஹாரி ஜி மந்திர் (गोदा बिहारी जी मन्दिर): புதியதாகக் கட்டப்பட்டுள்ள இக்காலத்தைய கோவில். ரங்கநாதர் கோவிலை விட்டு வெளியே வந்தால் அருகில் இருக்கும் கோவில். இதில் சிமென்டினால் செய்யப்பட்ட பல தெய்வசிலைகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. பிரதான சிலைகள் லக்ஷ்மி-நாராயணன், தவிர மற்ற கடவுளர்கள், தேவதைகள், ரிஷிகள், தேசியத்தலைவர்கள் என்று எல்லோருடைய சிலைகளும் உள்ளன. பொழுதுபோக்கிறகாக பார்க்கும் இடம் போல உள்ளது. சிறுவர்களுக்கு பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கலாம்.

9. விருந்தாவனம் - நரங்கநாத கோவிலுக்கு அருகில் இருக்கு கோவில்

9. விருந்தாவனம் – ரங்கநாத கோவிலுக்கு அருகில் இருக்கும் கோவில்

விருந்தாவனம் – ரங்கநாத கோவிலுக்கு அருகில் இருக்கும் கோவில்.

0. கோதா பிஹாரி.நுழைவு வாயில்

10. கோதா பிஹாரி.நுழைவு வாயில்

கோதா பிஹாரி.நுழைவு வாயில்.

11. கோதா பிஹாரி

11. கோதா பிஹாரி

கோதா பிஹாரி – தேசியத் தலைவர்கள்.

2. கோதா பிஹாரி. வரிசையாக சிற்பஙள்

2. கோதா பிஹாரி. வரிசையாக சிற்பங்கள்

கோதா பிஹாரி. வரிசையாக சிற்பங்கள்.

13. கோதா பிஹாரி.பின்புறம்

13. கோதா பிஹாரி.பின்புறம்

கோதா பிஹாரி.பின்புறம்

கோபேஸ்வர மஹாதேவ் மந்திர்[2]: பிருந்தாவனத்தில் உள்ள இன்னொரு சிவன் கோவில். வழக்கமான முறையில் லிங்கம் உள்ளது. பக்தர்கள் தங்கள் விருப்பம் போல, பால், வில்வம், பூக்கள் கொண்டு வந்து அபிஷேகம் செய்து பூஜித்துக் கொள்ளலாம்.  இந்த ஈஸ்வரர் யமுனை நதியில் மூழ்கி எழுந்த போது, ஒர் அழகிய கோபிகையாக மாறினாராம், அதனால் கோபேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். கிருஷ்ணருடைய பேரன் வஜ்ரநாப இந்த லிங்கத்தைப் பிரதிஸ்டை செய்தார். அதுமுதல், வைஷ்ணவர்கள், இந்த லிங்கத்தை வணங்கி விட்டு மற்ற கோவில்களை சென்று பார்க்கிறார்கள். யமுனை நதி நீற்றைக் கொண்டு வந்து அபிஷேகம் செய்கின்றனர். சிவன் ராஸலீலையைப் பார்ப்பதற்காக ஒரு கோபியைப் போன்று வந்தபோது, விரிந்தாதேவி அனுமதித்தாராம். முன்னர் இவர் உள்ளே நுழைய முற்பட்டபோது தடுக்கப் பட்டார், ஏனெனில், ராஸலீலையின் போது, எந்த ஆணும் உள்ளே செல்ல முடியாது. இதனால், விரிந்தாதேவி, சிவனை தன்னுள் சக்திபாவத்தைச் செல்லுத்துமாறு அறிவுருத்தினார். அவ்வாறே, சிவன் யமுனையில் மூழ்கி எழுந்தபோது அழகான கோபிகையாக மாறிவிட்டாராம், அதனால் அனுமதிக்கப்பட்டாராம்.

14. கோபேஸ்வர் கோவில்

14. கோபேஸ்வர் கோவில்

கோபேஸ்வர் கோவில் – முகப்பு வளைவு.

15. கோபேஸ்வர் - உள்ளே

15. கோபேஸ்வர் – உள்ளே

கோபேஸ்வர் – உள்ளே, பூஜிக்கும் பக்தர்கள்.

16. Gopeswar Mahadev, Vrindavan

16. Gopeswar Mahadev, Vrindavan

பன்ஸிவட்மஹாரசஸ்தல்: விரிந்தாவன் நகரத்தின் மையத்துள் உள்ளது “பன்ஸி வட் மஹாராஸ் ஸ்தலி” என்ற இடம் 30,000 சதுர அடி பரப்பைக்கொண்டுள்ளது. யமுனை நதி பின்பக்கம் ஓடுகின்றது. அங்கிருந்து ஒரு சிறிய சத்தின் மூலம் இங்கு வந்தடையலாம்.

 • பன்ஸி = புல்லாங்குழல் (இசைக்க)
 • வட் = அரசமரம் (அடியில், ராதா-கிருஷ்ண)
 • மஹாராஸ் = ராஸலீலை (பெரிய, அறிந்து கொள்ல முடியாத காரியங்களை)
 • ஸ்தலி = இடம் (செய்த இடம்)

இங்கு ஒரு அரசமரம் (வட்) உள்ளது, அங்கு ராதா கோபிநாத் காட்சியளித்தார்[3], மற்ரும் காமதேவனை வெற்றிக் கொள்கிறார், இதைப் பற்றி இடைக்கால இலக்கியங்களில் பல குறிப்புகள் காணப்படுகின்றன[4]. அப சஹ்ர ஸ்யாமா என்பவரின் இணைத்தளத்திலிருந்து இக்குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன[5]. மேலே குறிப்பிட்ட கோபேஸ்வரும் கதையும் இதில் வருகிறது. இக்கதையின் படி கிருஷ்ணருக்கு வயது பதினொன்று. கமதேவன் அங்கு வந்து தன்னுடன் யுத்தத்திற்கு வருமாறு அழைக்கிறான். கிருஷ்ணர் தனக்கு வயது 11 என்பதால், எப்படி தன்னுடன் சரிநிகராகப் போரிட முடியும் என்று கேட்கிறார். அதற்கு காமதேவன், நாரதர் தான் போரிடத் தகுதியானவர் கிருஷ்ணர் என்று சொல்லியனுப்பியதாக காமதேவன் சொன்னான். “அப்படியென்றால், “கிலா யுத்தத்திற்கு” அல்லது “மைதான் யுத்தத்திற்கு” வரத்தயாரா?”, என்று கிருஷ்ணர் கேட்டதற்கு, “அது என்ன என்பதை நீங்களே சொல்லிவிடுங்கள்” என்று காமதேவன் சொல்ல, “நான் ராதாவுடன் நிகுஞ்ச வனத்தில் இருந்தால், கிலா யுத்தம் செய்யலாம், இல்லை இங்கு பன்ஸிவட்டில் கோபிகைகளுடன் இருந்தால் அது மைதான யுத்தம் ஆகும்”, என்றார். மைதான யுத்தத்திற்கு வர, காமதேவன் தோற்றுப் போகிறான். எப்படி காமனை சிவன் எரித்து வெற்றி கொண்டாரோ, அதே போன்று, கிருஷ்ணர் காமனை வென்றார் என்று இடைக்கால இலக்கியங்கள் கூறுவது உன்னிப்பாகக் கவனிக்கத் தக்கது[6]. மேலும், கிருஷ்ணர் கோபிகைகளின் உடைகளை அபகரித்தார் (வஸ்த்ரஹரணம்) என்பதும் இங்குதான் நடந்துள்ளது. இவையெல்லாம் பாகவதப் புராணம் 10ம் அத்தியாயத்தில் வருகின்றன. பக்தி வேதாந்ர்த தாகூர் போன்றோர் இந்த அத்தியாயம் இடைச்செருகல் என்று எடுத்துக் காட்டியுள்ளனர்[7].

பன்ஸி வட் மஹா ராஸ ஸ்தல்

பன்ஸி வட் மஹா ராஸ ஸ்தல்

பன்ஸி வட் மஹா ராஸ ஸ்தல்.

18. பன்ஸிவட் ராஸ ஸ்தல்- அரசமரம் - கோபிநாத் தோன்றிய இடம்

18. பன்ஸிவட் ராஸ ஸ்தல்- அரசமரம் – கோபிநாத் தோன்றிய இடம் —

பன்ஸிவட் ராஸ ஸ்தல்- அரசமரம் – கோபிநாத் தோன்றிய இடம்-http://abhashahra.org/

19. பன்ஸிவட் ராஸ ஸ்தல்- அரசமரம் - கோபிநாத், பின்பக்கம் யமுனை நதி

19. பன்ஸிவட் ராஸ ஸ்தல்- அரசமரம் – கோபிநாத், பின்பக்கம் யமுனை நதி

பன்ஸிவட் ராஸ ஸ்தல்- அரசமரம் – கோபிநாத், பின்பக்கம் யமுனை நதி.

20. பன்ஸிவட் ராஸ ஸ்தல்- இலக்கிய சான்றுகள் - சுவர்களில் எழுதப்பட்டுள்ளன

20. பன்ஸிவட் ராஸ ஸ்தல்- இலக்கிய சான்றுகள் – சுவர்களில் எழுதப்பட்டுள்ளன

பன்ஸிவட் ராஸ ஸ்தல்- இலக்கிய சான்றுகள் – சுவர்களில் எழுதப்பட்டுள்ளன.

21. பன்ஸிவட் ராஸ ஸ்தல்- இலக்கிய சான்றுகள் - கிரிதர சரண் தேவ்

21. பன்ஸிவட் ராஸ ஸ்தல்- இலக்கிய சான்றுகள் – கிரிதர சரண் தேவ்

பன்ஸிவட் ராஸ ஸ்தல்- இலக்கிய சான்றுகள் – கிரிதர சரண் தேவ்

ஸ்யாம் சுந்தர் மந்திர்:  ஶ்ரீவைஷ்ணவ, சைதன்ய, கௌடியாமடங்களின் சம்பிரதாய பக்தர்களுக்கு உள்ள ஏழு முக்கியமான கோவில்களில் இதுவும் ஒன்று. ஶ்ரீ ஜீவ, கோபால, லோகநாத, பூகர்ப கோஸ்வாமிகள் இங்கு விஜயம் செய்திருக்கிறார்கள்[8]. இங்குள்ள ஸ்யாம் சுந்தர் விக்கிரகம் யாராலும் செதுக்கப்பட்டது, உருவாக்கப்பட்டதல்ல. 1578ம் ஆண்டு வசந்த பஞ்சமி தினத்தன்று ஶ்ரீமதி ராதாராணியே தோன்றி, ஶ்ரீஸ்யாமானந்த பிரபுபாத ஸ்வாமிகளுக்கு அளித்ததாகக் கூறப்படுகிறது. ராதாராணியின் காலணி விழுந்து கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவ்விடமும் காட்டப்படுகிறது[9]. இக்கோவிலில் புதுப்பிக்கப்படும் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது, சுமார் 500 வருட காலத்திற்கு முந்தைய ஒரு குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[10]. நடுவில் ஒரு பெரிய திறந்த இடம், சுற்றிலும் உயரமான சுற்றுப்பிரகாரத்தில், கோவில் உள்ளது. நாங்கள் சென்றிருந்த போதும், வேலைகள் நடந்து கொண்டிருந்தன. வயதான காலத்தில் அவரால் வெளியே செல்ல முடியவில்லை, விக்கிரகம் தானாக உருவானது, குகைக் கண்டுபிடிக்கப்பட்டது போன்ற விவரணங்கள் முகமதியர்களின் தாக்குதல்களை மறைமுகமாக பதிவு செய்யப்பட்டு, உணர்ந்தப்படுவது போல இருக்கின்றன. முகமதியர்களின் தாக்குதல்கள்களினின்று தப்பிக்க மூல-விக்கிரங்களை கிணறுகளில், குளங்களில், மற்ற நீர்நிலைகளில், குகைகளில் போட்டு மறைத்து வைப்பது வழக்கம். பிறகு அவர்கள் தொல்லை தீர்ந்தபிறகு, பரிகார பூஜை செய்து, விக்கிரகத்தை ஸ்தபிப்பது வழக்கம். அந்நிலையில், அது தானாகத் தோன்றியது என்று சொல்லப்பட்டது போலும்[11].

ராதா ஸ்யாம் சுந்தர் மந்திர்

ராதா ஸ்யாம் சுந்தர் மந்திர்

ராதா ஸ்யாம் சுந்தர் மந்திர்.

ராதா ஸ்யாம் சுந்தர் மந்திர்.உள்ளே

ராதா ஸ்யாம் சுந்தர் மந்திர்.உள்ளே

ராதா ஸ்யாம் சுந்தர் மந்திர்.உள்ளே

ராதா ஸ்யாம் சுந்தர் மந்திர்.உள்ளே. உயர்ந்த பிரகாரம்

ராதா ஸ்யாம் சுந்தர் மந்திர்.உள்ளே. உயர்ந்த பிரகாரம்

ராதா ஸ்யாம் சுந்தர் மந்திர்.உள்ளே. உயர்ந்த பிரகாரம்.

Syamsundar temple was under rennovation work, a 500 years old cave discovered.

Syamsundar temple was under rennovation work, a 500 years old cave discovered

ஸ்யாம் சுந்தர் கோவில் புதுப்பிக்கும் வேலை நடக்கும் போது, 500 வருட குகை ஒன்ரு கண்டுபிடிக்கப்பட்டது.

ராதா ஸ்யாம் சுந்தர் மந்திர்.உள்ளே.மூர்த்தி தரிசனம்

ராதா ஸ்யாம் சுந்தர் மந்திர்.உள்ளே.மூர்த்தி தரிசனம்

சேவா குஞ் அல்லது நிகுஞ் வனம்[12]: கோபிகைகள் தங்களை அழகாக அலங்கரித்துக் கொண்டு, கிருஷ்ணருக்கு சேவை செய்ய இங்கிருந்து கிளம்புகிறார்கள். மக்கள் நம்பிக்கை என்னவென்றால், தினமும் ராதா-கிருஷ்ண இரவில் இங்கு வருகின்றனர். அதனால், அவர்களுக்கு வேண்டிப் பொருட்களை எல்லாம் இங்கு வைக்கின்றனர். நிஜ் மந்திர் என்ற கோவில் அழகாக அலங்கரிக்கப்படுகிறது. ஒவ்வொரு கிருஷ்ண பக்தரும் இங்கு வருவது, புண்ணியமாகக் கருதுகின்றனர். இது ஒரு மரங்கள்-செடிகள் வளர்ந்துள்ள பெரிய தோட்டமாகும், இதில் நெளிந்து-வளைந்து செல்லும் பாதைகள் உள்ளன. இப்பொழுது கட்டப்பட்டுள்ள 4-5 சிறிய கோவில்களும் உள்ளன. ராதா-கிருஷ்ணர் இங்குதான் நடனமாடினர் என்று புதிய கதைகளை உருவாக்கியுள்ளனர். அளவுக்கு அதிகமான இசை வேறு ஒலிக்கச்செய்துள்ளனர். நடுநடுவே கடைகளும் வைத்துள்ளனர். வியாபாரரீதியில் பொழுது போக்கும் இடம் போல காட்சியளிக்கிறது.

4. Seva kunj - constructed and proposed

4. Seva kunj – constructed and proposed

சேவா குஞ் திட்டமும், நிஜமும்.

25. சேவா குஞ்ச- நிகுந்த வன் -உள்ளேயுள்ள ஒரு கோவில்

25. சேவா குஞ்ச- நிகுந்த வன் -உள்ளேயுள்ள ஒரு கோவில்

சேவா குஞ்ச- நிகுந்த வன் -உள்ளேயுள்ள ஒரு கோவில்.

26. சேவா குஞ்ச- நிகுஞ் வன் வெளியே வரும் வழி

26. சேவா குஞ்ச- நிகுஞ் வன் வெளியே வரும் வழி

சேவா குஞ்ச- நிகுஞ் வன் வெளியே வரும் வழி.

வேதபிரகாஷ்

© 03-07-2015


 

[1]  கீழே வைஷ்ணோ தேவி தாம் மற்றும் பிரேம் மந்திர் முதலியவையும் சமீபகாலத்தில் கட்டப்பட்டிருந்தாலும், அவை, ஏதோ சுற்றுலா இடங்கள் போன்று காட்சியளிக்கின்றன. ஆனால், இங்கு, ஒரு பழமயான கோவிலுக்கு வந்த உணர்வு ஏற்படுகிறது.

[2] http://mathuravisit.com/vrindavan/gopesvara-mahadeva-temple.html

[3] http://www.banshivat.org.in/about_banshivat_maharaas_sthali.htm

[4] http://www.banshivat.org.in/History_in_the_scriptures.htm

[5] http://abhashahra.org/

[6]  சிவன் காமனை எரித்துக் கொன்றார் எனும்போது, இங்கு கிருஷ்ணர் தனது மாயையினால் வென்றார் என்றுள்ளது. ஆனல், இரண்டுமே அந்தந்த புராணங்களில் அந்தந்த இடத்தில் அத்தகைய வர்ணனைகள் வரவேண்டிய அவசியமே இல்லை. எனவே, இடைக்காலத்தில், யாருக்கோ தேவை என்று அத்தகைய இடைசெருகல்கள் செய்ய்யப்பட்டிருக்கின்றன. அவற்றின் குறிக்கோள் என்ன என்பதனை ஆராய்ச்சியாளர்கள் சோதித்துப் பார்ர்க்க வேண்டும்.

[7] https://www.jiva.org/different-views-on-interpolation-of-bhagavat-purana/

[8] http://www.radhashyamsundar.com/au.htm

[9] http://radhashyamsundar.com/otherplaces.htm

[10] http://www.dharmakshetra.com/articles3/ANCIENT%20CAVE%20DISCOVERED.html

[11]  இதனால், மற்ற ஸ்வம்பு / தாந்தோனி விக்கிரகளும் அவ்வாறானது என்பதல்ல, இடைக்காலத்தில் அவ்வாறு நடந்துள்ளதற்கு சாதியக் கூறுகள் இருந்துள்ளன.

[12] http://mathuravisit.com/vrindavan/seva-kunj-and-nidhi-van.html

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அரசமரம், காமதேவன், குஞ்சு பிஹாரி, கோதா ஜி பிஹாரி, கோபேஸ்வரர், கௌடியாமடம், சிவன், நாரதர், பன்ஸி வட், பன்ஸிவட், மன்மதன், யமுனா, யமுனை, ராஸ லீலா, வட், விரிந்தாவன், ஶ்ரீரங்கநாதர் கோவில், ஸ்யாம் சுந்தர் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s