விரஜ்பூமியைச் சுற்றிவருவது: கருட கோவிந்த மந்திர், கிருஷ்ண ஜன்மஸ்தான், பிரம்மாண்ட காட், உத்கல், கரசி கோகுல் மாதவ், ரமன் ரிடி, ரவல் முதலிய இடங்களுக்குச் சென்றது!
03-09-2014 (புதன் கிழமை): மஹாவனம் என்றழைக்கப்படுகின்ற கோகுலத்தில், கிருஷ்ணர் பிறந்து, வளர்ந்து குழந்தைப் பருவத்தில் புரிந்த லீலைகளுடன் சம்பந்தப்பட்ட பல இடங்கள் உள்ளன. ஶ்ரீமத பாகவத புராணத்தில். பத்தாவது அத்தியாயத்தில் இவ்விவரங்கள் காணப்படுகின்றன. இங்குதான் சௌரஸி கம்ப என்ற நந்தகோபருடைய வீடுள்ளது. இங்கு கிருஷ்ணருக்கு தூளி கட்டப்பட்டு பாட்டுப் பாடி தூங்க வைக்கிறார்கள். சுற்றியிலும் கிருஷ்ணர் மற்றும் ராதா சம்பந்தப்பட்ட இடங்கள் உள்ளன.
கருட கோவிந்த மந்திர் – கோபுரமும், வாயிலும்.
கருட கோவிந்த மந்திர் – எங்கள் குழு அங்கத்தினர்கள் உள்ளே செல்கிறார்கள்.
கருட கோவிந்த மந்திர் – இடது பக்கத்தில் இருக்கும் கருடன், கோவில் வாயில்.
கருட கோவிந்த மந்திர் – பின்பக்கம், நினைத்தது நடக்க வேண்டும் என்ற வேண்டுதல்களுடன் பெண்கள் சாணியால் சுவரில் ஸ்வதிக் போடுகிறார்கள்.
உள்ளே இருக்கும் விக்கிரகம், பல நேரங்களில், பலவிதமாக அலங்கரிக்க்ப்படுகிறது. கருடனுக்கு 12 கைகள் உள்ளது.
கருட கோவிந்த மந்திர் – சுற்றியுள்ள குளம் முதலியவை புதுப்பிக்கப்படுகின்றன.
கருட கோவிந்த மந்திர்: ஷகதிகர அல்லது சத்திகர என்ற கிராமத்தில் உள்ள “கருட கோவிந்த மந்திர்”, கருடனுடைய கோவில் என்றழைக்கப்பட்டாலும், உள்ளே பிரதான விக்கிரகம் கிருஷ்ணர் தான். கம்சனுடைய தொல்லைகளால் கோகுலத்தில் உள்ளவர்கள் யமுனையின் மேற்கு பக்கத்தில் வந்து குடியேறினார்கள்[1]. “ஷகத்” என்றால் வண்டி, “கர” என்றால் வட்டவடிவமான அல்லது அரைவட்டம் என்று பொருள். அதாவது நந்தகோபன் பாதுகாப்பிற்காக, தனது மாட்டுவண்டிகளை அரைவட்ட வடிவமாக அமைத்து, பிரயாணத்தைத் துவங்கினார்[2]. இவ்வாறு கோகுலத்திலிருந்து எல்லோரும் வெளியேறும் போது ராதாராணியின் தந்தையான ரிஷபபானு என்பவரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். இங்கு வந்து குடியேறிய பிறகு, கிருஷ்ணர் தனது நண்பர்களுடன் விளையாடும் போது, ஒருவனின் தோளில் உட்கார்ந்து, கருடன் மாதிரி பறக்கச் சொன்னாராம். அதன் நினைவாக இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இன்று ரியல் எஸ்டேட் பெருகி வருவவதால், இங்கும் புராதன கோவில் இடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. பிறகு ஶ்ரீகிருஷ்ண ஜன்மஸ்தான் கோவிலுக்குச் சென்றோம்.

DPD/Aug.49, A04b
The site celebrated as the birth place of Lord Krishna. Shri Krishna, as tradition goes, was born in a prison and the prison is said to have existed on the plot marked by a stone plate. To the right of it is the idgah.

DPD/Aug.49, A04a
The Idgah, Mathura. This has been built on the ruins of Keshav Deo temple destroyed by Aurangazeb.
கிருஷ்ண ஜன்மஸ்தான் – கிருஷ்ணஜன்மஸ்தான் என்ற கிருஷ்ணர் பிறந்த இடத்தில் வஜ்ரநாப என்ற கிருஷ்ணரின் பெயரனே 5115 (3101 + 2014) YBP[3] வருடங்களுக்கு முன்னர் இங்கு கோவிலைக் கட்டினார். சந்திரகுப்தர் (300 BCE அல்லது 400 CE) காலத்தில் இக்கோவில் விரிவுபடுத்தப்பட்டது. சந்திரகுப்த விக்கிரமாதித்யர் அதனை இன்னும் பெரிதாக்கினர். முஹமது கஜினி 1017ல் இதனை தாக்கி இடித்தான். காட்ர வாசுதேவ் என்ற இடத்தில் இருக்கும் கல்வெட்டு ஜஜ்ஜா என்பவர் 1150ல் விஜயபால் தேவ ஆட்சி காலத்தில் மறுபடியும் கட்டினார் என்றுள்ளது. ஶ்ரீசைதனயர், 16ம் நுற்றாண்டில் இக்கோவிலை சிக்கந்தர் லோடி இடிப்பதற்கு முன்னர் வந்து தரிசித்துச் சென்றுள்ளார். வீர் சிங் தியோ ஜஹாங்கீர் காலத்தில் ரூ.33 லட்சம் செலவழித்து புனர்நிர்மாணம் செய்து கோவிலைக் கட்டி முடித்தார். ஆனால், இருந்த கோவிலை, ஔரங்கசீப் 1669ல் இடித்து விட்டு, அங்கு மசூதியைக் கட்டினான்[4]. படத்தில் காட்டப்பட்டுள்ள மசூதியின் நடுப்பகுதி கூம்பின் கீழ்தான் கிருஷ்ணர் பிறந்த இடம் இருக்கிறது. ஆனால், கடந்த 10-15 ஆண்டுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்பு, ஈத்க மசூதிக்கும், புதியதாகக் கட்டப்பட்டுள்ள கோவிலுக்கும் நடுவில், “ஜன்மஸ்தான் மார்க் மந்திர் கா ராஸ்தா”, கிருஷ்ணர் பிறந்த இடத்திற்கு போகும் வழி என்ற அறிவிப்புப் பலகை இருக்கும். பக்தர்கள் மசூதியின் நடுகூம்பின் கீழுள்ள பகுதிக்குச் சென்று வழிபட்டு வந்தார்கள். ஆனால், இப்பொழுது 2014ல் சென்றபோது, “கிருஷ்ணா சபூத்ரா” எனப்படும் மேடை இருந்த பகுதியின் மேல், மிக்க பாதுகாப்புடன், கட்டிடம் கட்டப் பட்டு, அங்கு விக்கிரகம் வைக்கப் பட்டு, அதுதான் கிருஷ்ணர் பிறந்த இடம் என்று காட்டுகிறார்கள். எப்படி இவ்வாறு கட்டினார்கள் என்று தெரியவில்லை. திடீரென்று இக்கட்டிடம் எப்படி கட்டப்பட்டது என்ற விவரங்கள் தெரியவில்லை.
மதுரா ஈத்கர் மற்றும் கிருஷ்ண ஜன்மஸ்தான் கோவில்.
ஶ்ரீகிருஷ்ண ஜன்மஸ்தான் மந்திர், மதுரா – கூகுள் மேப்.
ஶ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தான் கோவில் இடிக்கப்பட்டது – ஔரங்கசீப் ஆவணம்.
யமுனையைத் தாண்டி கோகுலத்திற்குச் செல்ல வேண்டும்.
பிரம்மாண்ட காட்[5]: பிரம்மாண்டமான, மிக்கப்பெரிய காட் – குளம் என்று பொருள். கிருஷ்ணர் சிறுபிள்ளையாக இருந்தபோது, மண்ணை எடுத்து தின்று விட்டான் என்று யாசோதையிடம், மற்ற குழந்தைகள் புகார் சொல்கிறார்கள். யசோதை வந்து கேட்டபோது, “இல்லை”, என்று கிருஷ்ணர் மருத்தாலும், பலராமர், “தின்றான்”, என்று உறுதிப்படுத்தியதும், கோபமாக, “எங்கே வாயைத்திற, காட்டு”, என்றதும், கிருஷ்ணர் வாயைத்திறந்து காட்டினார். அவரது வாயிலே, அண்ட-பேரண்டங்கள் எல்லாமே பிரம்மாண்டமாக இருந்ததைக் கண்டு திகைத்து பயந்து விட்டாள்[6]. இங்குள்ள பல இடங்கள் கிருஷ்ணருடன் தொடர்புடையதாக எடுத்துக் காட்டப்படுகிறது[7]. இங்கு தான் மண்ணை தின்றார் என்று ஒரு இடம் காட்டப்படுகிறது. பக்தர்கள் இங்கு நீராடினால், பாவம் தொலையும் என்ற நம்பிக்கயும் உள்ளது.
பிரம்மாண்ட காட்டின் சிறப்பை விளக்கும் கல்வெட்டு.
பிரம்மாண்ட காட் – கதை.
உதுகல் (Utkhal, Yamal Arjuna Thirth)[8]: உத்கல் அல்லது யாமல் அர்ஜுன தீர்த்தம் அல்லது யமல-அர்ஜுன-உரல் [Yamalarjuna Bhajana (Utkhal-Grinding Mortar)] என்றழைக்கப்படும் இந்த இடத்தில், கிருஷ்ணர் உரலுடன் கட்டிப் போடப்பட்ட இடம் என்று கருதப்படுகிறது. உரலில் கட்டிப்போட்டதால், கிருஷ்ணர் இரு மரங்களிடையே தவழ்ந்து செல்கிறார். கிருஷ்ணர் இழுத்துக் கொண்டு போகும் போது, இரண்டு அர்ஜுன மரங்கள் குறுக்கிடுகின்றன, ஆனால், வேண்டுமென்றே அம்மரங்களிடையேகஊர்ந்து போகிறார். உரல் மாட்டிக் கொண்டபோது இழுத்ததால், அம்மரங்கள் விழுந்து விடுகின்றன. உடனே, இருவர் நலகுவார மற்றும் மணிகிரிவ என்ற குபேரனின் இரு மகன்கள் தோன்றி, தாங்கள் சாபத்தினால் அவ்வாறிருந்ததாகவும், இப்பொழுது, முக்தி பெற்றதாகவும் கூறி மறந்தனர். அந்த இடம் இதுதாக், என்று இந்த இடம் காட்டப்படுகிறது. அருகில் உள்ள மரங்கள் இவைத்தான் என்றும் சொல்லப்படுகிறது[9].
உரலுடன் கட்டிப் போடப்பட்ட இடம். இரண்டு இடங்களில் மரங்கள் காட்டப்படுவதால், எந்த இரண்டு அர்ஜுன மரங்களுக்கிடையே கிருஷ்ணர் சென்றார் என்ற கேள்வி எழுகின்றது.
கரஸி / சௌரசி கோகுல் மாதவ்: குழந்தையான கிருஷ்ணருக்கு தொட்டில் கட்டப்பட்டு, வளர்க்கப் பட்ட இடம் இது என்று சொல்லப்படுகிறது. அந்த சௌரஸி கம்ப மண்டபத்திற்கும், இந்த சௌரசி கோவிலுக்கும் வித்தியாசம் உள்ளது. முன்னது, மசூதியாக மாற்றப் பட்டு, இந்திய தொல்லியல் துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இது, நந்த கோபரின் வீடு என்று கருதப்படுகிறது. முன்னதும் நந்த கோபரது அரசவை, அரண்மனை என்றும், பாண்யவர்கள் வந்து தங்கிய இடம் என்றும் கூறப்படுகிறது. இரண்டிலும் 84-தூண்கள் உள்ளன.
ரமண ரெடி – கிருஷ்ணர் தவழ்ந்த இடம்.
ரமன் ரிட்டி – கிருஷ்ணர் மண்ணில் தவழ்ந்த இடம்[10]: குழந்தையாக இருந்தபோது, கிருஷ்ணர் இங்கு தவழ்ந்து விளையாடிய இடம் என்று கருதப்படுகிறது. ஒரு பெரிய கோவில், மடம் வளாகத்தின் பின்பக்கம், மைதானம் உள்ளது. அதில் மண் பரவி வைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு படுத்து தவழ்வது போல, உருண்டு விளையாடுகிறார்கள், ஊர்ந்து செல்கிறார்கள். ஆனால், ஆன்மீகத்தைத் தேடி வருபவர்கள், அங்குள்ள குடிசைகளில் உட்கார்ந்து தியானம் செய்கின்றனர். நடுவில் ஒரு பெரிய மணடம் உள்ளது, அதில் கதா-காலக்ஷேபம், முதலிய நிகழ்சிகள் நடக்கின்றன. ஆயிரக்கணக்கில், சில நேரங்களில் லட்சக்கணக்கில், பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். எதிரில் வாகனங்கள் நிறுத்தவே, மிகப்பெரிய மைதானம் உள்ளது.
ரவல் – ராதா பிறந்த இடம்
ரவல் (Rawal, Mukharvali)– ராதா பிறந்த இடம்: மதுராவிலிருந்து 9 கி.மீ தூரத்தில் தவல், ரவல், முகர்வலி என்று உச்சரிக்கப்படும் இடம், ராதை பிறந்த இடமாகக் கருதப்படுகின்றது. ராதாஸ்டமி அன்று இங்கிருந்து கூட்டம் பர்சானாவுக்குச் செல்கின்றது. ஒரு நாள் ரிஷபபானு, யமுனை நதியில் குளித்துக் கொண்டிருந்த போது, அழகிய தாமரைப் பூவைக்கண்டார். அருகில் சென்று பார்த்தபோது, பூவில் ஒரு பெண் குழந்தை இருந்தது. அதனை அரண்மனைக்கு எடுத்துச் சென்று பார்த்தபோது, அக்குழந்தைக்கு கண்பார்வை இல்லாதிருப்பது தெரிய வந்தது. அப்பொழுது நாரதர், குழந்தைக்கு செய்ய வேண்டிய சடங்குகளையெல்லாம் செய்வாயாக, நல்லதே நடக்கும் என்று ஆசிர்வாதித்தாராம். அதன்படியே, ராதா என்ற பெயரை வைத்து, சடங்குகளை செய்து வந்தபோது, கிருஷ்ணர் குழந்தை ரூபத்தில் ராதாவுக்கு அருகில் வந்து பார்த்தபோது, ராதா கண்திறந்து பார்த்தாராம்[11]. இப்பகுதியில் பழங்கால-புராதனக் கட்டிடங்கள் கேட்பாரற்றுக் இருக்கின்றன. மேலும், ப்ழையக் கட்டிடங்கள் எல்லாம், புனர்நிர்மாணம் செய்யும் போது, முழுமையாக மாற்றிக் கட்டிவிடுகிறார்கள். இதனால், அதில் இருக்கும் சரித்திர ஆதாரங்கள் (எழுத்துகள், சித்திரங்கள், கல்வெட்டுகள் முதலியன) எல்லாம் அழிந்து விடுகின்றன.
ரவல் – ராதா பிறந்த இடம்.தவழும் ராதா குழந்தை விக்கிரகம். இது விசேஷ நாட்களில் பலவிதமாக அலங்கரிக்கப்படுகின்றது.
வேதபிரகாஷ்
© 30-06-2015
[1] இடைக்காலத்தில் முகமதியர்களின் திடீர் தாக்குதல்கள், கொள்ளைகள், கோவில் இடிப்புகள் முதலிய காரணங்களினாலும், அத்தகைய இடபெயர்ச்சிகள் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.
[2] https://plus.google.com/106423942747190912242/posts/dfcFaSpcDBW
[3] YBP = Years Before Present, CE = Current or Common Era, BCE = Before Current or Common Era.
[4] Exhibit No. 6: Keshava Rai Temple. “Even to look at a temple is a sin for a Musalman”, Aurangzeb. Umurat-i-Hazur Kishwar-Kashai Julus (R.Yr.) 9, Rabi II 24 / 13 October 1666. http://www.aurangzeb.info/
[5] இப்புத்தகத்தில் விரஜ மண்டல பரிக்கிரம சுற்றில் உள்ள பல கோவில்கள், காட்டுகள் பற்றிய விவரங்கள் உள்ளன – https://www.scribd.com/doc/251120885/Vraja-Mandala-Parikrama
[6] http://www.brajdarshan.in/brahmanda-ghat/
[7] Dev Prasad, Krishna: A Journey through the Lands & Legends of Krishna, Jaico Publishing House, Mumbai, 2012.
[8] http://www.brajdarshan.in/yamalarjuna-tirth/
[9] http://nitaaiveda.com/All_Scriptures_By_Acharyas/Vraja_Mandala/Vraja_Mandala_Parikrama/56._GOKULA_(Mahavana).htm