விரஜ்பூமியைச் சுற்றிவருவது – ஆஷேஸ்வர், ரூபகோஸ்வாமி பஜன் மந்திர், கோகிலா வன சனீஸ்வரர், பர்சானா முதலிய இடங்கள்!

விரஜ்பூமியைச் சுற்றிவருவதுஆஷேஸ்வர், ரூபகோஸ்வாமி பஜன் மந்திர், கோகிலா வன சனீஸ்வரர், பர்சானா முதலிய இடங்கள்!

02-09-2014 (செவ்வாய் கிழமை): கௌடியா மடம் – மதிய உணவு அருந்தினோம். அம்மடத்தின் பின்புறத்தில் “பாவன் சரோவர்” அழகான குளம் ஒன்றிருந்தது. குளத்தின் உள்செல்கின்றது போல நடைபாதை அமைத்து, உட்கார இடத்தையும் அமைத்துள்ளார்கள். சிறிது நேரம் அங்கிருந்து, பிறகு சுற்றிப் பார்க்கப் புறப்பட்டோம். எங்களது நந்தகாவ் (नंदगांव) தரிசனம் தொடர்ந்தது.

27. கௌடியா மடம்-மதியம் சாப்பிட வந்த இடம்

27. கௌடியா மடம்-மதியம் சாப்பிட வந்த இடம்

கௌடியா மடம்-மதியம் சாப்பிட வந்த இடம்.

28. கௌடியா மடம்-மதியம் சாப்பிட வந்த இடம்.பின்பக்கம் இருந்த குளம்

28. கௌடியா மடம்-மதியம் சாப்பிட வந்த இடம்.பின்பக்கம் இருந்த குளம்

கௌடியா மடம்-மதியம் சாப்பிட வந்த இடம்.பின்பக்கம் இருந்த “பாவன சரோவர்ரென்ற அழகிய குளம்.

29. கௌடியா மடம்-பின்பக்கம் இருந்த அழகிய குளம்

29. கௌடியா மடம்-பின்பக்கம் இருந்த அழகிய குளம்

கௌடியா மடம்-பின்பக்கம் இருந்த அழகிய குளம், நீர்பகுதியில் சென்று உட்கார வசதி, பாதை, உட்கார இடம் முதலியன.

30. கௌடியா மடம்-பின்பக்கம் இருந்த அழகிய குளம்.-மண்டபம்

30. கௌடியா மடம்-பின்பக்கம் இருந்த அழகிய குளம்.-மண்டபம்

சுற்றிப்பார்க்கவும் செய்யலாம். அருகில் உள்ள கோவில் தெரிகிறது.

ஆஷேஸ்வர் – இது இன்னொரு சிவன் கோவில் கோவில். சிவனை இங்கு காவல் தெய்வம் என்கிறார்கள், அதாவது ஒவ்வொரு நகரத்தின் நான்கு மூளைகளில் நான்கு சிவன் கோவில்கள் இருக்கும், சிவன் அந்நகரத்தைக் காத்து வருகிறார் என்கிறார்கள். அதேபோல, விரஜபூமியையும் சிவன் காத்து வருகிறார். ஆனால், உள்ளூரில் சொல்கின்ற இன்னொரு கதை இப்படியுள்ளது[1]. நந்திகிராமம் முன்னர் நந்தீஸ்வர் என்ற பெயருடன் இருந்தது. சிவன் பாம்பு, மண்டையோடுகள், ஜடை சகிதம் குழந்தை கிருஷ்ணரைப் பார்க்க வந்தபோது, யசோதை, ஒருவேளை சிவனைப் பார்த்து குழந்தை பயந்து விடக்கூடும் என்று, சிவனை தூர செல்லுமாறு பணித்துவிட்டாள். சிவனும் தன்னைக் கூப்பிடுவார்கள் என்று ஆசையுடன் காத்திருந்தாராம். அதனால்தான், ஆஷேஸ்வர் (விரும்பி எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வரர்) என்ற பெயரைப் பெற்றார்.  கிருஷ்ணர், சிவனைப் பார்க்க வேண்டி அழ ஆரம்பித்தார். யசோதை மற்றும் கோபிகைகளுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்பொழுது, யசோதை சிவனை வருமாறு அழைத்தாள். சிவன் வந்து, குழந்தையின் வயிற்றின் மீது விபூதியைத் தடவியதும் அழுகையினை நிறுத்திவிட்டதாம். இரண்டு கடவுளர்களும் புன்முறுவலோடு பார்த்துக் கொண்டார்களாம். இது சைவ-வைஷ்ணவ ஒற்றுமைக்கு உண்டாக்கிய கதை போல உள்ளது[2]. எப்படியிருந்தாலும், இது கிருஷ்ணபக்தர்களின் பரிக்கிரமத்தில் (விரஜபூமி சுற்றிவருவதில்) ஒன்றாக உள்ளது.

ஆஷேஸ்வர் மஹாதேவ் மந்திர்

ஆஷேஸ்வர் மஹாதேவ் மந்திர்

ஆஷேஸ்வர் மஹாதேவ் மந்திர்

Asheswar Mahadev, Nandagav - together

Asheswar Mahadev, Nandagav – together

ஆஷேஸ்வர் மஹாதேவ் மந்திர் – உட்புறம், லிங்கம்

ரூப கொஸ்வாமி  பஜனை செய்த இடம் – “தேர் கடம்ப” என்கின்ற, கடம்ப மரம் இருந்த[3] இந்த இடத்தில் முன்னர் ரூபகோஸ்வாமி வந்து, தங்கி பஜனை செய்துள்ளார். ரூபகோஸ்வாமி (1489-1564) கௌடியா மட, வைஷ்ணவ சம்பிரதாய குருக்களில் முக்கியமானவர். கர்நாகத்தில் பிறந்து[4], வளர்ந்த இவர்கள் அங்கிருந்து வங்காள தேசத்திற்கு வந்தபோது, அலாவுத்தீன் ஹுஸைன் ஷா (1493-1519) இவர்களை வற்புறுத்தி அரசாங்க வேலைகளைச் செய்ய வைத்தான். இதனால், சமூகம் அவர்களை ஒதுக்கி வைத்தது. 1514ல் ஶ்ரீசைத்தன்யரை சந்தித்தப் பிறகு அவர்களது வாழ்க்கை மாறியது. ஶ்ரீசைத்தன்யரின் ஆறு சீடர்களில் ஒருவரான இவர், சனாதனகோஸ்வாமியின் சகோதரர். பிருந்தாவனத்தில் உள்ள எல்லா இடங்களுக்கும் சென்று, கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட இடங்களைக் கண்டறிந்து, சுத்தப்படுத்தினார், மற்றும் புதுப்பித்தார். பிறகு லோகநாத, பூகர்ப, கோபால பட்ட, ரகுநாத பட்ட, ரகுநாததாஸ கோஸ்வாமிகளுடன் சேர்ர்ந்து பணியாற்றினார். இன்னொரு சகோதரரான ஜீவகோஸ்வாமியும் சேர்ந்து கொண்டார். இவரது நூல்கள் வைஷ்ணவ தத்துவம் மற்றும் சம்பிரதாயங்களுக்கு முக்கியமாக இருக்கின்றன. அவரின் நினைவாக இந்த இடம் உள்ளது. இயற்கையான சூழலில், சுற்றி மரம்-செடி-கொடிகள் குளம் முதலியன உள்ளன. மயில்கள் கூட சுற்றி வருகின்றன. இங்கு அரிசி-பால் கலந்த சாதத்தை பிரசாதமாகக் கொடுக்கின்றனர்.

ரூப கொஸ்வாமி  பஜனை செய்த இடம்

ரூப கொஸ்வாமி பஜனை செய்த இடம்

ரூப கொஸ்வாமி பஜனை செய்த இடம் – உள்ளே போகும் வழி.

ரூப கொஸ்வாமி பஜன் குடிர் -  பஜனை செய்த இடம்.

ரூப கொஸ்வாமி பஜன் குடிர் – பஜனை செய்த இடம்.

ரூப கொஸ்வாமி பஜன் குடிர் – பஜனை செய்த இடம்.

ரூப கொஸ்வாமி  உட்காந்த இடம்

ரூப கொஸ்வாமி உட்காந்த இடம்

ரூப கொஸ்வாமி உட்காந்த இடம்.

ரூப கொஸ்வாமி  பாதம் கோவில், நிதியுதவி கோரும் அறிவிப்பு

ரூப கொஸ்வாமி பாதம் கோவில், நிதியுதவி கோரும் அறிவிப்பு

ரூப கொஸ்வாமி பாதம் கோவில், நிதியுதவி கோரும் அறிவிப்பு – அவர் பஜனை செய்த இடம்.

ரூப கொஸ்வாமி  உட்காந்த இடம்.குளம்

ரூப கொஸ்வாமி உட்காந்த இடம்.குளம்

ரூப கொஸ்வாமி உட்காந்த இடம், தியானித்த இடம் மற்றும் அங்கிருக்கும் குளம்.

சனீஸ்வரன் கோவில் (शनि देव): மதுராவிக்கு அருகில் கோசி கலன் இன்ற இடத்தில் “சனி தேவ் மந்திர்” என்ற இக்கோவில் உள்ளது. இது பெரிய கோவில் வளாகமாக உள்ளது. இங்குள்ள சனீஸ்வரர், லிங்கத்தின் ஒருமுகமாக உள்ளார். அதாவது, இங்குள்ள சதுர்முக லிங்கத்தின் ஒருமுகத்தில் சனீஸ்வரர் கதையுடன் எருதின் முன்னால் நிற்கிறார். ராதா கிருஷ்ணர் சந்திக்க முயன்றபோது, அயன் கோஷ் என்ற அவரது கணவன் தடுத்து விட்டாராம். குயில் போல கூவும் போது வா என்று கிருஷ்ணர் சொல்ல, அவ்வாறே கூவும் போது, அயன் கோஷ் துக்கத்திலிருந்து எழுந்து விடுவாராம். அதனால், ராதா தூங்க ஆரம்பித்து விடுவதால், கிருஷ்ணர் திரும்பிச் சென்று விடுவாராம்.  அதனால், இவ்விடத்திற்கு கோகிலா வனம் (कोकिलावन) என்ற பெயர் வந்ததாம்[5]லிக்கதைக்கும் கிருஷ்ணருக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.

கோகிலா வனம் - சனீஸ்வரர் கோவில்.முன்பக்கம்

கோகிலா வனம் – சனீஸ்வரர் கோவில்.முன்பக்கம்

கோகிலா வனம் – சனீஸ்வரர் கோவில்.முன்பக்கம், வலது பக்கம்.

கோகிலா வனம் - சனீஸ்வரர் கோவில்

கோகிலா வனம் – சனீஸ்வரர் கோவில்

கோகிலா வனம் – சனீஸ்வரர் கோவில், நுழைவு வாயில்- இடது பக்கம்.

கோகிலா வனம் - சனீஸ்வரர் கோவில். வளைவு

கோகிலா வனம் – சனீஸ்வரர் கோவில். வளைவு

கோகிலா வனம் – சனீஸ்வரர் கோவில். வளைவு- பிரதான நுழைவு வாயில்.

கோகிலா வனம் - சனீஸ்வரர் கோவில். விக்கிரகம்

கோகிலா வனம் – சனீஸ்வரர் கோவில். விக்கிரகம்

கோகிலா வனம் – சனீஸ்வரர் கோவில். சுவரில் உள்ள விக்கிரகம்.

Shani dev, Kokilavan, Nandagoan

Shani dev, Kokilavan, Nandagoan

சதுர்லிங்க உருவில் – ஒவ்வொரு பக்கமும், ஒரு தேவதை – சனீஸ்வரன் ஒரு பக்கம், கையில் சக்கரம், மாடு முதலியன.

ராதாவின் மைத்துனர் வீடுசசுரால் கர்ஜபோட்: ராதா அயன் கோஷ் என்பரைத் திருமணம் செய்து கொண்டாள்.  அயன் கோஷுடைய பெற்றோர், உற்றோர்களது வீடு இது என்ரு சொல்லப்படுகிறது. போகும் வழியில் ஒரு வளைவு உள்ளது, அவ்வீடு மிகவும் பழையதாகக் காணப்படுகிறது. முற்றம் பெரிதாக இருக்கிறது. அதில் உள்ள மரம் ராதாவால் தொட்டு விளையாடப்பட்டதால், அதற்கு குங்குமம் வைத்து பூஜை செய்கிறார்கள். அயன், அவரது சகோதரி மற்றும் தாய் என்று மூன்று விக்கிரகங்கள் ஒரு அறையில் காணப்படுகிறது. மாடியில் ராதாவின் அறை உள்ளது, அதில் ராதாவின் பாதமும் உள்ளது.  திருமணம் ஆன ராதா, குழந்தை கிருஷ்ணர் மீது அன்பு கொண்டதில் டெந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால், இடைக்காலத்தில் ராதா-கிருஷ்ண ஜோடி காதலர்கள் போல சித்தரிக்கப் பட்டு, அந்த தாய்-குழந்தை பாசத்தை திரிக்கப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும். போதாகுறைக்கு, அத்தகய சிந்தனைக்கு, தத்துவார்த்த விளக்கமும் கொடுத்து நியாயப்படுத்த சிலர் முயன்றுள்ளார்கள். குழந்தை கிருஷ்ணரை கையில் ஏந்தி கொஞ்சிய ராதா, பிறகு ஏதோ காதலன்-காதலி ஜோடி போல கவிதைகளில், ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டது. இது முகமதியர்களின் திரிபு வேலையே ஆகும்[6].

ராதா ராணி சசுரால் கர் - போகும் வழி

ராதா ராணி சசுரால் கர் – போகும் வழி

ராதா ராணி சசுரால் கர் – போகும் வழி.

ராதா ராணி சசுரால் கர் - போகும் வழி. வாசக் வளைவு

ராதா ராணி சசுரால் கர் – போகும் வழி. வாசக் வளைவு

ராதா ராணி சசுரால் கர் – போகும் வழி. வாசல் வளைவு.

ராதா ராணி சசுரால் கர் - விக்கிரகம்

ராதா ராணி சசுரால் கர் – விக்கிரகம்

ராதா ராணி சசுரால் கர் – விக்கிரகம்.

ராதா ராணி சசுரால் கர் - விக்கிரகம்.விளையாடிய மரம்

ராதா ராணி சசுரால் கர் – விக்கிரகம்.விளையாடிய மரம்

ராதா ராணி சசுரால் கர் – விக்கிரகம்.விளையாடிய மரம்.

பர்ஸானா (बरसाना)ராதாராணி கோவில்ராதா பிறந்த இடம் – கிருஷ்ணர் பிறந்து வளர்ந்து விளையாடல்கள் புரிந்த இடங்களில் ராதாஸ்டமி பெருமளவில் கொண்டாடப்படுகிறது. பர்சானா (பிருந்தாவன், உபி) என்ற இடம் ராதா பிறந்த இடமாகும். அங்கு மலையுச்சியில் உள்ள கோவிலில் தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் பக்தர்கள் பல மாநிலங்களிலிருந்து வந்து கூடுகிறர்கள். “ராதா ராணி” என்று மிகவும் மரியாதையுடனும், சிரத்தையுடனும் குறிப்பிடுகிறார்கள். மதுரா, பிருந்தாவன், பர்சானா, ராவல், மாந்த் போன்ற பகுதிகளில் உள்ள கோவில்களிலும் கொண்டாடப் படுகிறது. மக்கள் கூட்டத்தைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.

பர்சானா ராதா ராணி கோவில்

பர்சானா ராதா ராணி கோவில்

பர்சானா ராதா ராணி கோவில் – மலையின் மீதுள்ளது.

பர்சானா ராதா ராணி கோவில்-கூட்டம்

பர்சானா ராதா ராணி கோவில்-கூட்டம்

பர்சானா ராதா ராணி கோவில்- அலை மோதும் கூட்டம்.

ராதா அஸ்டமி நாளில் நாங்கள் இங்கு வந்துள்ளதால் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கிறது. வண்டிகள் போக முடியாத அளவிற்கு சாலைகள், தெருக்கள் கூட்டமாகி விட்டது. சிலர் ஒரு நாள்- இரண்டு நாள் முன்னரே வந்து விட்டதால், நிறுத்தப் பட்ட வண்டிகள் அருகில், தெருக்களிலேயே தூங்கிக் கொண்டிருக்கிறர்கள். போதாகுறைக்கு மின்சாரமும் இல்லை, தண்ணீரும் இல்லை[7]. இதனால், வண்டிகளை அங்கங்கு நிறுத்தி விட்டு நடந்து செல்ல ஆரம்பித்தனர். போலீஸார் தூரத்திலேயே வண்டிகளை நிறுத்தி விட்டதால், சுமார் 3 கி.மீ நடந்து செல்லவேண்டியதாயிற்று. சுற்றியுள்ள எல்லா மாநிலங்களிலும் பக்தர்கள் வந்துள்ளனர்.

பர்சானா ராதா ராணி கோவில்-மலை மீது

பர்சானா ராதா ராணி கோவில்-மலை மீது

பர்சானா ராதா ராணி கோவில்-மலை மீது

நான்கு மலைகள் கொண்ட மலையுச்சியில் இக்கோவில் இருக்கிறது. இந்த நான்கு மலைகளயும் பிரம்மனின் தலைகள் என்கிறார்கள், இல்லை, ஒன்றை விடுத்து மற்ற மூன்று மலைகளும் “திரிமூர்த்திகளை”க் குறிக்கிறது என்கிறார்கள்.  இக்கோவிலை ராஜபுதன வம்சத்தைச் சேர்ந்த, புந்தேளா பிரிவு, ராஜா வீர் சிங்ஜி ஓர்ச்சாவின் அரசர் (1605-1626 / 1627)[8] [Raja Bir Singh ji Deo of Orchha in 1675] 1675ல் கட்டினார். இவ்வரசர் இவர் விரஜ்மண்டலத்தில் உள்ள கோவில்களைக் கட்ட- புதுப்பிக்க உதவினார்[9]. ராஜஸ்தான் கட்டிடக்கலையுடன், அதே போல அரைச்சந்திர வளைவுகள் கொண்ட தோரண முகப்புக்கள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மீது காணப்படுகின்றன. உள்ளே ராதாராணியின் விக்கிரகம் உள்ளது, வெளியே உள்ள சதுரமான பெரிய இடத்தில் ஹோலி கொண்டாட்டம் நடைபெறுகிறது.

வேதபிரகாஷ்

© 29-06-2015

[1] http://news.vrindavantoday.org/2014/10/radharani-braja-yatra-day-3-nandagaon/

[2]  தென்னிந்தியாவில் இருந்தது போன்று சைவ-வைஷ்ணவ இறையியல் வேற்றுமைகள், வடவிந்தியாவில் இருந்ததாகத் தெரியவில்லை. இது ஆராய்ச்சுக்குரிய விசயம் ஆக உள்ளது.

[3]  இங்கெல்லாம் கடம்ப மரம் முக்கியமாக இருப்பதையும் நோக்கத்தக்கது. கிருஷ்ணர் வழிபாட்டில் அல்லது அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் அம்மரம் வருவது குறிப்பிடத் தக்கது.

[4]  மத்வாச்சாரியார் (1238-1317) இந்தியா முழுவதும் சுற்றி வந்தார். குறிப்பாக கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட இடங்களைப் பார்க்க கங்கையைக் கடந்து சென்றபோது, முகமதியர்களால் பிடிக்கப்பட்டார். பிறகு, இவரது தைரியத்தை மெச்சி தில்லி சுல்தான் விட்டுவிட்டான். இதனால், கிருஷ்ண பக்தியை வளர்க்க வேண்டும் என்று பத்ரியிலும், உடுப்பியிலும் கிருஷ்ணர் விக்கிரகத்தை ஸ்தாபித்தார். கர்நாடகத்தில் வைஷ்ணவம் ஓங்கியதற்கு இவர் ஒரு முக்கிய காரண கர்த்தாவாக இருந்தார். ஆக 200 வருடங்களுக்குப் பிறகு இந்த மூன்று சகோதர்களுக்கும் அங்கு சென்று இத்தகைய பிரம்மாண்டமான வேலையை செய்துள்ளார்கள் என்பதனை தெரிந்து கொள்ளலாம்.

[5] http://www.kokilavan.in/main-home.html

[6]  இதைப்பற்றி விவரமாக, இங்கு – https://indianhistoriography.wordpress.com – பல பதிவுகளை செய்து வருகிறேன். அவற்றைப் பார்க்கவும். “அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது” என்ற தலைப்பில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

[7]  அரசு எந்த வசதியையும் செய்து கொடுக்காதது வியப்பாக இருக்கிறது. லட்சக்கணக்கில் மக்கள் வரும் போது, எப்படி கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கோவர்த்தன் பரிக்கிரம இடத்தில் கூட அதே நிலைதான் காணப்பட்டது.

[8] வீர் சிங் தொயோவுக்கு விகிபிடியா கொடுக்கும் தேதிகள் ஒத்துப்போகவில்லை. இருப்பினும் இவர் விரஜ்மண்டலத்தில் உள்ள கோவில்களை புதுப்பிக்க உதவினார் என்ற செய்தி ஒத்துப்போகிறது. https://en.wikipedia.org/wiki/Vir_Singh_Deo

[9] Deo was among the Rajput rulers of his era who sponsored temples in the Brajmandal area that comprised Vrindavan and Mathura.

Busch, Allison, Poetry of Kings: The Classical Hindi Literature of Mughal India, Oxford University Press, 2011, p. 7.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in ஆஷேஸ்வர், கொண்டாட்டம், கோகிலா வனம், கோவில், சனாதன்கோஸ்வாமி, சனி, சனீஸ்வரர், சமாதி, பர்சானா, பர்ஸானா, பிரயாணம், பிருந்தாவனம், புந்தேளா, மஹாதேவ, ராஜபுதனம், ராதா, ரூபகோஸ்வாமி, விரஜ், விரஜ்பூமி, ஶ்ரீசைத்தன்யர் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s