சௌரசி கோஸ் யாத்திரை – விரஜ்பூமியைச் சுற்றிவருவது – காமவனத்தில் கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட இடங்கள்!

சௌரசி கோஸ் யாத்திரைவிரஜ்பூமியைச் சுற்றிவருவதுகாமவனத்தில் கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட இடங்கள்!

காம வனத்தில், விரஜ் யாத்திரையில் உள்ள முக்கிய இடங்கள் குறிப்பிடப்பட்டன. இனி அவற்றின் விவரங்களை பார்ப்போம்[1].

1. விமல் குண்ட் போகும் வழி

1. விமல் குண்ட் போகும் வழி

முதலில் விமல் குண்ட் இருக்கும் இடம், அதைப்பற்றிய புகைப்படங்களை காண்போம்.

2. விமல் குண்ட் கோவில் போகும் வழி

2. விமல் குண்ட் கோவில் போகும் வழி

விமல் குண்ட் கோவில் போகும் வழி.

3. விமல் குண்ட் - குளத்தின் தோற்றம்

3. விமல் குண்ட் – குளத்தின் தோற்றம்

விமல் குண்ட் – குளத்தின் தோற்றம்.

4.. விமல் குண்ட் கோவில், பக்கத்தில் இருக்கும் தெரு

4.. விமல் குண்ட் கோவில், பக்கத்தில் இருக்கும் தெரு

விமல் குண்ட் கோவில், பக்கத்தில் இருக்கும் தெரு.

பிமல் / விமல் குண்ட்: காமன் நகருக்கு தென்-கிழக்கில் இது உள்ளது. விமல என்ற சிந்து பிரதேசத்தின் அரசனின் பெண்கள் அழுதபோது, அவர்களின் கண்ணீர் துளிகளால் இக்குளம் நிரம்பி உருவானதாம். 712 CEல் சிந்து அரேபியர்களால் தாக்கப்பட்டபோது, அங்கிருந்த இந்துக்கள் கொல்லப்பட்டு, கோவில்களும் இடிக்கப்பட்டன. பிறகு ராஜஸ்தானியர்களால் அரேபிர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். குஜராத்தை ஆண்டு வந்த பிரதிஹர வம்சத்தைச் சேர்ந்த நாகபட்ட – I, என்ற அரசர் 724-810 CEஆண்டுகளில் அரேபியர்களை பலமுறை தோற்கடித்து விரட்டியுள்ளார். 776 CEல் சைந்தவ என்ற கப்பற்படையினாலும், அரேபியர் தோற்கடிக்கப்பட்டனர். ஆகவே, அக்காலத்தில் அல்லது அதற்குப் பிறகு இந்துக்கள் தோற்கடிக்கப் பட்டபோது, அவர்கள் இப்பகுதிகளில் வந்து தங்கியிருக்கலாம். அப்பொழுது, இந்து பெண்கள் பட்டப்பாட்டை, இவ்வாறு உருவகமாகச் சொல்லப்பட்டிருக்கலாம்.

5. காமேஸ்வர் மஹாதேவ் கோவிலுக்கு போகும் வழி.2

5. காமேஸ்வர் மஹாதேவ் கோவிலுக்கு போகும் வழி.2

காமேஸ்வர் மஹாதேவ் கோவிலுக்கு போகும் வழி.

5. காமேஸ்வர் மஹாதேவ் கோவிலுக்கு போகும் வழி

5. காமேஸ்வர் மஹாதேவ் கோவிலுக்கு போகும் வழி

காமேஸ்வர் மஹாதேவ் கோவிலுக்கு போகும் வழி.

6. காமேஸ்வர் மஹாதேவ் கோவில் உள்புறம்

6. காமேஸ்வர் மஹாதேவ் கோவில் உள்புறம்

காமேஸ்வர் மஹாதேவ் கோவில் உள்புறம்

 1. காமேஸ்வர் மஹாதேவ்: சிவன் கோவிலில் உள்ள லிங்கமானது 5,000 காலம் தொன்மையானது என்று சொல்லப்படுகிறது. பக்தர்களின் விருப்பங்களையெல்லாம் பூர்த்தி செய்பவர் என்பதால், இவர் “காமேஸ்வரர்” என்றழைக்கப்படுகிறார். இது ஒரு சிறிய குன்றின் மீது உள்ளது. அப்பிரதேசத்தைக் காக்கும் தெய்வமாகவும் போற்றப்படுகிறது.
8. காமேஸ்வர் மஹாதேவ் கோவில் உள்ளேயிருக்கும் சதுர்முக-சிவலிங்கம்.

8. காமேஸ்வர் மஹாதேவ் கோவில் உள்ளேயிருக்கும் சதுர்முக-சிவலிங்கம்.

காமேஸ்வர் மஹாதேவ் கோவில் உள்ளேயிருக்கும் சதுர்முக-சிவலிங்கம்.

Kameswara, Kaman, Vrindavan

Kameswara, Kaman, Vrindavan

காமேஸ்வரர் – எதிர்பல்லட்தில் இருக்கும் லிங்கம்.

 1. பிந்து ராணி, பிந்துதேவி – இது கிருஷ்ணர் கோவில். ஆனால், உண்மையில் பிருந்தா / பிருந்தா தேவி என்ற இப்பிரதேசத்தைக் காக்கும் மற்றும் இப்பிரதேசத்தின் காவல் தெய்மாகும். ராதா மற்றும் கிருஷ்ணர் சந்தித்துக் கொள்ள உதவிய தெய்வம் என்றும் சொல்லப்படுகிறது. நாங்கள் சென்றபோது, பெண்கள் ராதா-கிருஷ்ண வேடம் போட்டு ஆடிக் கொண்டிருந்தனர்.
9. விருந்தா-பிருந்தா தேவி கோவில் வளைவு

9. விருந்தா-பிருந்தா தேவி கோவில் வளைவு

விருந்தா-பிருந்தா தேவி கோவில் வளைவு.

10. விருந்தா-பிருந்தா தேவி கோவில் வாசல்

10. விருந்தா-பிருந்தா தேவி கோவில் வாசல்

விருந்தா-பிருந்தா தேவி கோவில் வாசல்.

11. விருந்தா-பிருந்தா தேவி கோவில் உட்புறம்

11. விருந்தா-பிருந்தா தேவி கோவில் உட்புறம்

விருந்தா-பிருந்தா தேவி கோவில் உட்புறம்.

12. விருந்தா-பிருந்தா தேவி கோவில் உட்புறம்- ராதாஸ்டமி கொண்டாட்டம்

12. விருந்தா-பிருந்தா தேவி கோவில் உட்புறம்- ராதாஸ்டமி கொண்டாட்டம்

விருந்தா-பிருந்தா தேவி கோவில் உட்புறம்- ராதாஸ்டமி கொண்டாட்டம், இப்பகுதிகளில் சிறப்பாக நடைபெருகிறது.

13. விருந்தா-பிருந்தா தேவி கோவில் உட்புறத் தோற்றம்

13. விருந்தா-பிருந்தா தேவி கோவில் உட்புறத் தோற்றம்

விருந்தா-பிருந்தா தேவி கோவில் உட்புறத் தோற்றம். சிறுமிகள், இளம்-பெண்கள் ராதா போல வேடமணிந்து ஆடிப்பாடிவர், அவர்கள் கௌரவிக்கப்படுவர்.

14. ஶ்ரீ கோவிந்த தேவ் மற்றும் விருந்தா தேவி புராணம் பலகை

14. ஶ்ரீ கோவிந்த தேவ் மற்றும் விருந்தா தேவி புராணம் பலகை

ஶ்ரீ கோவிந்த தேவ் மற்றும் விருந்தா தேவி புராணம் பலகையில் ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது.

Vrinda devi temple

Vrinda devi temple

 1. சௌரசி கம்பா – 84 தூண்கள் கொண்ட இந்த மிக்க கலைவேலைப்பாடுள்ள இம்மண்டம் விஸ்வகர்மாவால், பாண்டவர்களுக்காகக் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. தர்மராஜர் கோவில் என்றும் சொல்கிறார்கள். உள்ளே உயரமான சிம்மாசனம் போன்ற பீடம், நடன மண்டபத்திற்குப் பின்னால் உள்ளது. நந்தகோபன் இங்கு அரசவையாக இது இருந்தது என்றும் சொல்லப்படுகிறது. இதன் அமைப்பு அரசவைப் போன்றுதான் உள்ளது. இது இந்திய தொல்துறையினரால் (ASI) பராமரிக்கப் பட்டு வருகிறது. சூரசேன வம்சத்தினர் இப்பகுதியை ஆண்டுவந்தனர்[2]. சிற்பங்கள் உடைக்கப்பட்டு, மூளியாகக் காணப்பட்டாலும், விஷ்ணுவின் அவதாரங்கள், சிவா-பார்வதி திருமணம், காளி, கணேசர், விஷ்ணு, நரசிம்மர் என்று பல சிற்பக்கள் காணப்படுகின்றன. பழைய சமஸ்கிருத கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன[3].
1. சௌரஸி கம்ப - மசூதி

1. சௌரஸி கம்ப – மசூதி

சௌரஸி கம்ப – மசூதி, அதாவது 84 தூண்கள் கொண்ட மசூதி என்பதே கேலிக்குரியது, ஏனெனில், ஒரு இந்து கோவில் அல்லது அரண்மனை இடிக்கப்பட்டு, உபயோகப்படும் என்று எஞ்சிய அப்பகுதியை அப்படியே அபகரித்து விட்டால் மசூதி ஆகிவிடுமா?

2.. சௌரஸி கம்ப - 84-தூண்கள் மசூதி. வாசல்-உள்ளே

2.. சௌரஸி கம்ப – 84-தூண்கள் மசூதி. வாசல்-உள்ளே

சௌரஸி கம்ப – 84-தூண்கள் மசூதியின் வாசல் இப்படி உள்ளது, உள்ளே அப்படி இருக்கிறது!

3. 84 தூண்கள் மண்டபம்

3. 84 தூண்கள் மண்டபம்84 தூண்கள் மண்டபம்

தூண்கள் கொண்ட மண்டபம் நடுவில் சதுரமான திறந்த இடம் உள்ளது. சுற்றிலும் தூண்கள் கொண்ட பிரகாரம் உள்ளது. அத்தூண்களில் விஷ்ணு, வினாயகர், போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

4 84 செதுக்கப்பட்ட தூண்கள் கொண்ட மண்டபம்.

4 84 செதுக்கப்பட்ட தூண்கள் கொண்ட மண்டபம்.

84 செதுக்கப்பட்ட தூண்கள் கொண்ட மண்டபத்தைப் பார்க்கும் போது கோவிலின் உட்பகுதி போல காட்சியளிக்கிறது.

5. செதுக்கப்பட்ட 84-தூண்கள் கொண்ட மண்டபம்..குழு அங்கத்தினர்கள்

5. செதுக்கப்பட்ட 84-தூண்கள் கொண்ட மண்டபம்..குழு அங்கத்தினர்கள்

தீர்த்த யாத்திரை குழு அங்கத்தினர்கள் உள்ளே சுற்றி வருகிறார்கள்.

6. செதுக்கப்பட்ட 84-தூண்கள் கொண்ட மண்டபம்..படிகட்டுகள்

6. செதுக்கப்பட்ட 84-தூண்கள் கொண்ட மண்டபம்..படிகட்டுகள்

சிம்மாசனம் போன்று உயர்ந்த இடம் உள்ளது, பக்கத்தில் படிகட்டுகள் இருக்கின்றன.

7. செதுக்கப்பட்ட 84-தூண்கள் கொண்ட மண்டபம்..படிகட்டுகள்.இடது பக்கம்

7. செதுக்கப்பட்ட 84-தூண்கள் கொண்ட மண்டபம்..படிகட்டுகள்.இடது பக்கம்

செதுக்கப்பட்ட 84-தூண்கள் கொண்ட மண்டபம்..படிகட்டுகள்.இடது பக்கம்- இன்னொரு தோற்றம்.

8. செதுக்கப்பட்ட 84-தூண்கள் கொண்ட மண்டபம்..யானை சிற்பம்

8. செதுக்கப்பட்ட 84-தூண்கள் கொண்ட மண்டபம்..யானை சிற்பம்

தூண்கள் கொண்ட மண்டபம்..அழகாக செதுக்கப்பட்ட ஒரு யானை சிற்பம்

9. சௌரசி 84- தூண் கோவில் சிற்பங்கள்-யானை சிற்பம்

9. சௌரசி 84- தூண் கோவில் சிற்பங்கள்-யானை சிற்பம்

தூண்கள் கொண்ட மண்டபம்..அழகாக செதுக்கப்பட்ட ஒரு யானை சிற்பம்!

10. சௌரசி 84- தூண் -உடைக்கப்பட்டுள்ள சிற்பங்கள்

10. சௌரசி 84- தூண் -உடைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் – விரும்புகிறார்களாமே எப்படி?

தூண்களில் செதுக்கப்பட்டுள்ள கடவுளர்களின் சிலைகளை குறிவைத்து உடைத்துள்ள முகமதியர். கலையை விரும்புகிறார்களாமே எப்படி?

11. சௌரசி 84- தூண் -புரியாத சிற்பங்கள்

11. சௌரசி 84- தூண் -புரியாத சிற்பங்கள்

வெளியே காணப்படும் சிற்பங்கள் புதிராக உள்ளன!

இந்து கோவில், அரண்மனை, மற்ற கட்டிடத்தை முகமதியர்கள் மசூதியாக மாற்றியதில், இந்த சௌரசி கம்பம் எனபடுகின்ற புராதன அரண்மனையும் பலிகடா ஆகியுள்ளது. வடக்குப் பகுதி, தெற்குப் பகுதியை விட பெரிதாக இருக்கின்றது. வடக்குப் பகுதியில் ஜெனானா / ஹேரம் இருந்திருக்கிறது. பெண்கள் வந்து செல்வதற்கு படிகட்டுகளும் இருக்கின்றன. ஜாலிகள் கொண்ட ஜெனானா பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது, ஆனால், வெளிப்புறம் உடைந்த நிலையில் காணப்படுகிறது. மசூதியில் கூறைவரை, செதுக்கப்பட்ட அழகான சிற்பங்கள் காணப்படுகின்றன. குன் உஸ் சுல்தான் ஆலா, உல் ஆஜம், உல் முல்க் முஸபர் இல்டாமிஸ் உஸ் சுல்தான் என்று அரேபியத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இது தில்லியில் காணப்படுவதைப் போன்றே உள்ளது. பாரசீக மொழியிலும் பெரோஸ் ஷா துக்ளக்கின் சில கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றில் 754 A.H. அல்லது 1353ம் ஆண்டு காணப்படுகிறது. உள்ளே நுழையும் போதே ஒரு கல்வெட்டு காணப்படுகிறது.

 1. மதன் மோஹன் மந்திர்: பிருந்தாவனத்தில் புராதன கோவில்களில் ஒன்றான, சனாதனகோஸ்வாமி இக்கோவிலைக் கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு முடித்து வைத்தார். முன்பு மதன கோபால என்றக்கப்பட்டவர், மதன மோஹன என்றழைக்கப்படுகிறார். அத்வைத ஆச்சாரியார் இதன் விக்கிரகத்தை ஒரு அரசமரத்தடியில் அவர் கண்டெடுத்து, புரொஷோத்தம துபே என்பருக்குக் கொடுக்க அவர், சனாதனகோஸ்வாமிக்குக் கொடுத்தார். ஒரிஸா அமைப்பில் 60 அடி உயரம் (20 மீ) கொண்ட இது 1580 கட்டப்பட்டது. மூல்தானிலிருந்து, ராம்தாஸ் கபூர் என்பவர் இக்கோவில் கட்டுவதற்கான பணத்தைக் கொடுத்தார்[4]. இதுவும், சிந்து மற்றும் காந்தாரப் பகுதிகள் முகமதியர்களின் தாக்குதல்களுக்கு உட்பட்டதால், அங்கிருந்து இவ்விக்கிரகம் எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்பதனைக் காட்டுகிறது. அதனால், மூலஸ்தானத்திருந்தவர் பணம் கொடுத்தார் என்றுள்ளது.
 1. சந்திரமாஜி: இது மூடப்பட்டிருந்ததால், பார்க்க முடியவில்லை.
 1. சரண் பாத – பிலோந்து-லிருந்து காமனுக்கு செல்லும் வழியில் இக்குன்றுள்ளது. இருமுறை கால்நடைகள் எல்லாம் திசைமாறி போய் விட்டனவாம். அப்பொழுது கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊத அவைத் திரும்பி வந்தன. அதே நேரத்தில், சில கற்கள் அச்சங்கீதத்தால் உருக, அவற்றின் மீது கிருஷ்ணரின் பாதங்கள் பட, அவை அப்படியே பதிந்து விட்டனவாம். ஒரு குன்றின் மீது கிருஷ்ணரின் பாதம் உள்ளது.
  சரண பஹாடி, காமவன், விரிந்தாவன்

  சரண பஹாடி, காமவன், விரிந்தாவன்

  ஶ்ரீகிருஷ்ணரின் பாதம்.

  சரண பஹாடி, கிருஷ்ணர் பாதம் பதிந்துள்ளது - காமவன், விரிந்தாவன்

  சரண பஹாடி, கிருஷ்ணர் பாதம் பதிந்துள்ளது – காமவன், விரிந்தாவன்

 1. கயா குண்ட்: காமன் நகரத்திற்கு மேற்கில் புறப்பகுதியில் உள்ளது. நந்த மஹராஜா தனது மூதாதையருக்கு இங்கு தர்ப்பணம் பிண்டம் முதலியவற்றை வைத்து சிரார்த்தம் செய்ததால், அக்குளம் கயா குண்டம் என்றழைக்கப்படுகிறது
 1. போஜன் தாலி: இது கலாவத கிராமத்திற்கு கிழக்கில் உள்ளது. பாறையின் மீது, ஒரு தட்டு போன்ற உருவம் உள்ளது. பழையவை தட்டு போன்றும், புதியவை டம்ப்ளர் போன்றும் உள்ளன. கிருஷ்ணர், பலராமர் தன் நண்பர்களுடன் இங்கு களைப்பாறி, மதிய உணவு உண்ணுவது வழக்கம். ஆனால், ஒருமுறை அவர்கள் தட்டு முதலியவற்றை எடுத்துக் கொண்டு வர மறந்து விட்டனர். இருப்பினும், உணவை அப்பாறையின் மீது வைத்து உண்ண ஆரம்பித்தபோது, தட்டு மாதிரி மாறிவிட்டனவாம். அது மட்டுமல்லாது, கிருஷ்ணர் பாலைக் கொட்டியதால், அப்பாறையிலிருந்து, அருகிலுள்ள சிறிய குளம் வரை வெள்ளையாக ஒரு கறை ஏற்பட்டது. பக்தர்கள் இங்கு வந்து வகை-வகையான உணவுகளை வைத்து கிருஷ்ணருக்குப் படைக்கிறார்கள், அவற்றைப் பிரசாதமாக எடுத்து உண்கிறார்கள். பக்கத்தில் கூட இதே மாதிரி அமைப்புக் கொண்ட பாறையுள்ளது. ஆனால், அங்கு யாரும் செல்வதாகத் தெரியவில்லை. அங்கிருந்த ஒருவரிடம் கேட்டபோது, கிருஷ்ணர் இங்கு தயிர் சாப்பிட்டார் என்றார். பால் கீழ்வரை சென்று விழுந்து, அங்கு ஒரு க்ஷீரா-சாகர் / பாற்கடல் உருவாகியது என்கிறார்கள். ஆனால், உண்மையில் அது ஒரு சிறிய குளமாக இருக்கிறது, மேலும் அங்கு உணவு படைக்க வருபவர்கள், மீதியை, குப்பைகளை அதில் கொட்டிவிட்டு செல்கிறார்கள், அதனால், அக்குளத்தின் நீர் பாசிப் பிடித்து அழுக்காக இருக்கிறது.
  12. போஜன் தாலி போகும் வழி

  12. போஜன் தாலி போகும் வழி

  போஜன் தாலி போகும் வழி.

  13. போஜன் தாலி போகும் வழி.க்ஷீரா சாகர் இடது பக்கம்

  13. போஜன் தாலி போகும் வழி.க்ஷீரா சாகர் இடது பக்கம்

  போஜன் தாலி போகும் வழி.க்ஷீரா சாகர் இடது பக்கம்

  15. போஜன் தாலி - இரண்டு தட்டுகள், பாத்திரங்கள் போன்ற அமைப்பு

  15. போஜன் தாலி – இரண்டு தட்டுகள், பாத்திரங்கள் போன்ற அமைப்பு

  போஜன் தாலி – இரண்டு தட்டுகள், பாத்திரங்கள் போன்ற அமைப்பு.

  16. போஜன் தாலி - பாறைகளில் காணப்படும் அமைப்புகள்

  16. போஜன் தாலி – பாறைகளில் காணப்படும் அமைப்புகள்

  போஜன் தாலி – பாறைகளில் காணப்படும் அமைப்புகள்.

  17. போஜன் தாலி - பழையக்கட்டிடம் - க்ஷீரா சாகர் குளம்

  17. போஜன் தாலி – பழையக்கட்டிடம் – க்ஷீரா சாகர் குளம்

 1. பிச்சிலி பஹாட் / பிஷாலினி சிலா– என்றால் சருக்கு மரம் என்று பொருள். கிருஷ்ணர் தன் நண்பர்களுடன் விளையாடிய இடங்களில், இதுவும் ஒன்று. இங்குள்ள சிறு குன்றின் மீது, இத்தகைய இயற்கையான அமைப்புள்ளது. மேலே ஏறி அங்கிருந்து அப்பாறை மீது உட்கார்ந்து கீழே வரை சருக்கி வரலாம். பெரியவர்-சிறுவர், பெண்கள் என்று எல்லோருமே, இதில் சருக்கி விளையாடுகிறார்கள்.
 1. நந்த காவ்: இந்து நந்தகோபன் வசித்த கிராமம் ஆகும், ஆனால், இப்பொழுது நகரமாகி விட்டது. அங்குள்ள ஒரு அரண்மனை போன்ற கட்டிடத்தை, நந்தகோபனுடைய வீடு என்கிறார்கள். இது இடைக்காலத்தைய கட்டிடம் போல காணப்படுகிறது

வேதபிரகாஷ்

© 28-06-2015

[1] http://holydham.com/kamyavan/

[2] http://asijaipurcircle.nic.in/Kama.html#

[3] Kaman was ruled by the Surasena rulers under whose patronage both Brahmanism and Jainism prospered at Kaman. The old mosque, now known as Chausath Khambha was built from the material of the Hindu temples. There are bas-reliefs here of the Navagrahas, the incarnations of Vishnu and the wedding of Siva-Parvati, the last being of high artistic quality. The figures of Kali, Ganesa, Vishnu and Narasimha are found sculptured on the pillars of this mosque.  Three rows of eight such pillars form three aisles. All the pillars are square, and the lower half of many of them is quite plain. Around the entrance doorway of the quadrangle, there is an Arabic inscription in large letters. All the roofs are flat, except a small compartment in front of the mihrab, which has a dome formed in the usual trabeate system. From the style of the carvings on the pillars, it appears that these belonged to the Saiva and the Vaishnava temples. This is also confirmed by a pillar on which are inscribed  the words “namah Sivaya”. The temple is datable to circa eighth century A.D.

[4] http://madhanmohanmandir.blogspot.in/

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அடையாளம், கானவனம், கோபிகை, கோவிந்த, சரண்பாத, சௌரசி, சௌரஸி, தோட்டம், பாதம், பிருந்தா, பிருந்தாவன், மாதவ, யமுனா, யமுனை, யாத்திரை, ராஜஸ்தான், ராதா, ராதா சக்தி, விருந்தா, விருந்தாவன் and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s