விரஜ்பூமியைச் சுற்றிவருவது – காமவனத்தில் உள்ள கிருஷ்ணர் இருந்த இடங்கள் (சௌரசி கோஸ் யாத்திரை)!

விரஜ்பூமியைச் சுற்றிவருவதுகாமவனத்தில் உள்ள கிருஷ்ணர் இருந்த இடங்கள் (சௌரசி கோஸ் யாத்திரை)!

Sri Vraja Mandala Parikrama map

Sri Vraja Mandala Parikrama map – விரஜ மண்டலத்தைச் சுற்றி வரும் போது உள்ள முக்கியமான இடங்கள்

சௌரஸி கோஸ் யாத்திரை: 02-09-2014 (செவ்வாய் கிழமை): காலை 6.30க்கு கௌடியா படத்திலிருந்து வண்டி மூலம் விரஜ் மண்டலத்திற்குப் புறப்பட்டோம்[1]. ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பின்பற்றும் குழுக்கள் சௌரஸி கோஸ் யாத்திரை – 84 கோஸ் அல்லது 212 கி.மீ[2] தூரத்தில் யமுனை நதிக்கரை வழியாக, உள்ள ஶ்ரீகிருஷ்ணர் சம்பந்தப் பட்ட அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்ப்பது என்று யாத்திரை மேற்கொள்வதாகும். லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த யாத்திரையை ஆண்டு முழுவதும் செய்து வருகிறார்கள். அவர்கள்ஆவ்வாறு செல்லும் போது, பஜனைகள் பாடிக் கொண்டு செல்கிறார்கள்.

map_vraja-locating important places

map_vraja-locating important places

காமவனம், காம்யவனம் [कामवन]: இங்கு 84 வனங்கள் / காடுகள், 24 உபவனங்கள் / தோட்டங்கள், 20 குண்டங்கள் / குளங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது[3]. இப்பொழுது ராஜஸ்தான், உத்திரபிரதேசம் என்று இரு மாநிலங்களில் இவ்விடங்கள் அமைந்துள்ளன, ஆனால், பக்தியும், சரித்திரமும் மற்ற சம்பந்தமுள்ள விவரங்களும் எல்லைகளைக் கடந்துள்ளன. விரஜ-மண்டலத்தில் உள்ள பன்னிரெண்டு வனங்களில் காம்யவனம் [कामवन] நான்காவதாக உள்ளது. இங்கு காமன் என்ற நகரம் தீக் என்றதற்கு வடக்கிலும், நந்தகாவுக்கு தென்-மேற்கிலும் உள்ளது. இது ராஜஸ்தானில் உள்ளது, ஆனால், விரஜ்பூமியில் வருகிறது, உத்திரப்பிரதேச எல்லையை ஒட்டியுள்ளது. தலேதி என்ற மலைமீதுள்ள இந்நகரம் முன்னர் பிரம்மபுரி என்று வழங்கி வந்தது, ஆனால், கிருஷ்ணரின் மாமா காமசேனர் / கம்ஸன் இதனை காமவனம் என்று மாற்றினார். இங்கு கடம்பப்பூக்கள் அதிகமாக இருபதால், இதற்கு கடம்பவனம் என்ற பெயரும் இருந்தது. முன்னர் 84 குண்டங்கள் / குளங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இங்குதான் கோவிந்தாஜி கோவில், விமல குண்ட், காமேஸ்வர மஹாதேவ கோவில், சௌரஸி கம்ப முதலியன உள்ளன. சிறிய வயதில் கிருஷ்ணர் இங்கு வாழ்ந்தார், தங்கியிருந்தார், நண்பர்களுடன் விளையாடினார்.

விரிந்தாவன், பிருந்தாவன் பெயர் காரணம்: விரந்த என்றால் துளசியைக் குறிக்கிறது, அதனால், இப்பகுதிக்கு விரிந்தாவன் என்ற பெயர் வந்தது என்கிறார்கள். விரிந்தா, பிருந்தா என்ற தேவி இப்பகுதியைக் காப்பதால், விருந்தாவன் / பிருந்தாவன் என்றாயிற்று என்றும் சொல்லப்படுகின்றது. இது ஶ்ரீகிருஷ்ணருடன் எந்த அளவுக்குத் தொடர்புடையது என்பதனை, பஜனைகள், பாடல்கள், கதைகள் மூலமாக அறிந்து கொள்லலாம்.

கோகுலம் - சௌரஸி கம்ப கோவில், சனாதனகோஸ்வாமி பஜன் குடிர்

கோகுலம் – சௌரஸி கம்ப கோவில், சனாதனகோஸ்வாமி பஜன் குடிர்

சிந்துதேசத்திலிருந்து ராஜஸ்தானுக்கு ஶ்ரீகிருஷ்ண விக்கிரங்கள் எடுத்துவரப்பட்டமை: 712 CEல் சிந்து பகுதிகள் அரேபியர்களால் தாக்கப்பட்டபோது, அங்கிருந்த விக்கிரகங்கள்

 1. ராதா மதன மோஹன.
 2. ராதா கோவிந்த
 3. ராதா கோபிநாத

என்ற மூன்று விக்கிரங்கள், யவனர்கள்[4] அழிக்க வந்தபோது, இவ்விக்கிரகப்க்கள் ராஜஸ்தானுக்கு எடுத்துவரப்பட்டன. பிறகு, ஜெய்பூரிலிருந்து காமவனத்திற்கு கொண்டுவரப்பட்டு, கோவில்கள் கட்டப்பட்டு ஆராதனை செய்யப்படுகின்றன. விரஜபூமியில் காம்யவன, காமவன, காமன், அதாவது மிகவும் பிடித்தமான, விருப்பத்திற்குரிய, வேண்டியதைக் கொடுக்கின்ற இடம் என்ற பொருளில் வருகின்ற, என்ற பகுதி சிறப்பாகக் குறிபிடப் படுகிறது. “காம்யவன பரிக்கிரம” என்று இங்குள்ள பல முக்கியமான இடங்களை கிருஷ்ண பக்தர்கள் சுற்றி வருகின்றனர். எங்கள் கௌடியாமட சுவாமிகள் கீழ்கண்ட இடங்களைத் தேர்ந்தெர்டுத்தார்:

பல்வேறு குண்ட் - குளங்கள் - Jain_Waterscapes

பல்வேறு குண்ட் – குளங்கள் – Coutesy – Jain_Waterscapes

 1. பிமல் / விமல் குண்ட்:
 2. காமேஸ்வர் மஹாதேவ்.
 3. பிந்து ராணி, பிந்துதேவி.
 4. சௌரசீ கம்பா – 84 தூண்கள்.
 5. மதன் மோஹன் மந்திர்.
 6. சந்திரமாஜி.
 7. சரண் பாத – ஒரு குன்றின் மீது கிருஷ்ணரின் பாதம்.
 8. கயா குண்ட்.
 9. போஜன் தாலி –.
 10. பிச்சி பஹாட் – கிருஷ்ணர் விளையாடிய இடம்.
 11. நந்த காவ் –
சரண பஹாடி, காமவன், விரிந்தாவன்

சரண பஹாடி, காமவன், விரிந்தாவன்

சரண பஹாடி, காமவன், விரிந்தாவன் – சிறிய குன்றின் மீது ஶ்ரீகிருஷ்ணரின் பாதம்.

சனாதனகோஸ்வாமி பஜனை குடிர்

சனாதனகோஸ்வாமி பஜனை குடிர்

ஶ்ரீ சைதன்யரின் ஆறு சீடர்களில் ஒருவரான சனாதனகோஸ்வாமி பஜனை செய்த குடிர், குடிசை.

Vrinda devi temple

Vrinda devi temple

விருந்தா / பிருந்தா தேவி கோவிலும், தேவியின் முகமும்.

சௌரசி 84-தூண்கள் கொண்ட கிருஷ்ணர் கோவில்

சௌரசி 84-தூண்கள் கொண்ட கிருஷ்ணர் கோவில்

84-தூண்கள் கொண்ட ஶ்ரீகிருஷ்ணரின் கோவில்.

சௌரசி 84- தூண் கோவில் சிற்பங்கள்

சௌரசி 84- தூண் கோவில் சிற்பங்கள்

சௌரஸி கம்ப மசூதியில் உடைக்கப்பட்டுள்ள சிற்பங்கள்!

 

வேதபிரகாஷ்

© 28-06-2015

[1] கிருஷ்ணர் இவ்விடங்களுடன் பின்னிப்பிணைந்துள்ளார் என்ற முக்கியமான விசயம். பஞ்சபூதங்களுடன், கிருஷ்ணர் சம்பந்தப் பட்டிருப்பதால், அவற்றிலிருந்து பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு மண் அமைந்துள்ளது. அதனால் தான் விரஜ் பூமி, பிரஜ் பூமி, புண்ணிய பூமி என்ற பெயரையேப் பெற்றுள்ளது என்று முன்னரே குற்ப்பிடப்பட்டது.

[2]  ஒரு கோசம் = 2.25 அல்லது 3.62 கி.மீ, 84 கோசம் = 189 அல்லது 304 கி.மீ.

[3] http://chaurasikosyatra.com/

[4]  யவனர்கள் என்ற பிரயோகம் அரேபியர், துருக்கர், துருக்ஸா, முகம்தியர் என்ற அர்த்தத்தில் வருகிறது. துருக்ஸா போன்ற வார்த்தைகள் கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றான.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in உக்கிர சேனர், கம்ஸ சேனர், காம வனம், காமவனம், கோகுலம், சௌரசி கோஸ் யாத்திரை, சௌரசி யாத்திரை, சௌரஸி, தேவகி, நந்தகோபால், பரிக்கிரமா, யாத்திரை, ராதா, ராதா கிருஷ்ண, ராதா மாதவ, வசுதேவர், விரஜ பூமி, விரஜ் and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s