மதுரா – “விரஜ பூமி” – ஶ்ரீகிருஷ்ணர் குழந்தையாக, சிறுவனாக, நண்பனாக இருந்ததால், கால் பட்ட இடம் எல்லாமே புனிதமாக உள்ளது!

மதுரா – “விரஜ பூமி” – ஶ்ரீகிருஷ்ணர் குழந்தையாக, சிறுவனாக, நண்பனாக இருந்ததால், கால் பட்ட இடம் எல்லாமே புனிதமாக உள்ளது!

12. எதிரில் இருக்கும் ஒரு மாளிகை போன்ற ஆசிரமம்

12. எதிரில் இருக்கும் ஒரு மாளிகை போன்ற ஆசிரமம்

1 முதல் 11 படங்களை முந்தைய பதிவில் பார்க்கவும். ரகுநாத கோஸ்வாமி சமாதி மிகச்சாதாரணமான நிலையில் இருக்கும் போது, எதிரில் உள்ள கட்டிடம் நன்றாக இருக்கிறது என்று சுட்டிக் காட்டப்படுகிறது.

13. பழங்கால கட்டிடங்களில் ஒன்று - இடிந்த நிலையில்

13. பழங்கால கட்டிடங்களில் ஒன்று – இடிந்த நிலையில்

இடிந்த நிலையில் உள்ள பழங்கால கட்டிடங்களில் ஒன்று இங்கு உதாரணத்திற்குக் காட்டப்படுகிறத. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட “பாரம்பரிய கட்டிட”ங்களுக்கு வக்காலத்து வாங்கள் சிலர் இருக்கின்றனர், ஆனால், இவற்றைப் பற்றி கவலைப் பட யாரும் இல்லை!

14. குறுகிய சந்துகளில் ஆசிரமங்கள், கோவில்கள்

14. குறுகிய சந்துகளில் ஆசிரமங்கள், கோவில்கள்

குறுகிய சந்துகளில் ஆசிரமங்கள், கோவில்கள்…………..

15. தாகூர் ஶ்ரீ ராதா வினோத்ஜி மஹராஜ் விராஜ்மான் பிருந்தாவன் - சமாதி

15. தாகூர் ஶ்ரீ ராதா வினோத்ஜி மஹராஜ் விராஜ்மான் பிருந்தாவன் – சமாதி

தாகூர் ஶ்ரீ ராதா வினோத்ஜி மஹராஜ் விராஜ்மான் பிருந்தாவன் – சமாதி

6. சந்தின் இருபக்கங்களிலும் சமாதிகள்

6. சந்தின் இருபக்கங்களிலும் சமாதிகள்

சந்தின் இருபக்கங்களிலும் சமாதிகள் – மொத்தம் 84 சமாதிகள் உள்ளன.

17. எங்கு பார்த்தாலும் கோவில்கள், குளங்கள், ஆசிரமங்கள்

17. எங்கு பார்த்தாலும் கோவில்கள், குளங்கள், ஆசிரமங்கள்

எங்கு பார்த்தாலும் கோவில்கள், குளங்கள், ஆசிரமங்கள்

18. லலிதா குண்ட் - குளம்

18. லலிதா குண்ட் – குளம்

லலிதா குண்ட் – குளம்

19. இன்னொரு பழங்கால கட்டிடம்

19. இன்னொரு பழங்கால கட்டிடம்

இன்னொரு பழங்கால கட்டிடம்

20. ராதா-மாதவ் கோவில்

20. ராதா-மாதவ் கோவில்

ஶ்ரீ ராதா-மாதவ் கோவில்

கிருஷ்ணர் இருந்தாரா, இல்லையா என்றெல்லாம் கேட்கும் அவநம்பிக்கையாளர்கள், நாத்திகர், கம்யூனிஸ்ட் வகையறாக்கள் மற்றும் இக்கால செக்யூலரிஸவாதிகள் இங்கு வந்து ஒருமுறை பார்க்க வேண்டும்[1]. ரசாயன படிப்பு படிக்கும் மாணவனுக்கு, குளோரின் (Chlorine), புரோமின் (Bromine) மற்றும் ஐயோடின் (Iodine) வாயுக்களை டெஸ்ட் டியூப்பில் உள்ள திரவத்தின் வழியாகச் செல்லுத்தினால், பச்சை, ஆரஞ்சு மற்றும் கரும்-நீளநிறம் வலைங்கள் (rings formed after precipitation) உருவாகி மிதக்கும் என்றறிவர். இதைப் பற்றித் தெரியாதர்களிடையே, இதைப் பற்றி கூறினால், விளக்கினால் மற்றும் பார்முலாக்களுடன் விவரித்தால் கூட புரிந்து கொள்ள முடியாது. E = MC2 என்பதெல்லாம் கூட அதுபோலத்தான்[2]. அதுபோல, சில காரியங்களை, அனுபவங்களை மற்றும் மனம்-உடல் சம்பந்தப்பட்ட (psychosomatic) உணர்ச்சிகளை செய்து பாத்தால் தான் புரியும். பக்தர்கள் இங்கு அவற்றை செய்து உணறுகிறார்கள், மகிழ்ச்சியுடன் செல்கிறார்கள். அதனால் தான் லட்சக்கணக்கில், கோடிக் கணக்கில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கு வந்து சென்று கொண்டிருக்கின்றன. ஒன்றும் இல்லாமல், யாரும் மக்களை ஏமாற்ற முடியாது. பொய்யையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சொல்லி வரமுடியாது.

21. ஶ்ரீ கிருஷ்ணர் கோபிகைகளுக்கு நீர் குடிக்க வைத்த குளம்

21. ஶ்ரீ கிருஷ்ணர் கோபிகைகளுக்கு நீர் குடிக்க வைத்த குளம்

ஶ்ரீ கிருஷ்ணர் கோபிகைகளுக்கு நீர் குடிக்க வைத்த குளம் – போகும் வழி

22. ஶ்ரீசைதன்யர் வந்து தங்கிய இடம்

22. ஶ்ரீசைதன்யர் வந்து தங்கிய இடம்

ஶ்ரீசைதன்யர் வந்து தங்கிய இடம்.

23. புதியதாக கல்யாணம் செய்தவர் இவ்வாறான வேண்டுதலை செய்கின்றனர்

23. புதியதாக கல்யாணம் செய்தவர் இவ்வாறான வேண்டுதலை செய்கின்றனர்

புதியதாக கல்யாணம் செய்தவர் இவ்வாறான வேண்டுதலை செய்கின்றனர்.

24. ஶ்ரீ கிருஷ்ணர் கோவிலுக்கு போகும் வழி, கோவில் நுழைவு வாசல்

24. ஶ்ரீ கிருஷ்ணர் கோவிலுக்கு போகும் வழி, கோவில் நுழைவு வாசல்

ஶ்ரீ கிருஷ்ணர் கோவிலுக்கு போகும் வழி, கோவில் நுழைவு வாசல்.

25. இன்னொரு கோவிலுக்கு போகும் வழி

25. இன்னொரு கோவிலுக்கு போகும் வழி

இன்னொரு கோவிலுக்கு போகும் வழி.

26. மானஸ கங்காவில் குளிக்க செய்துள்ள வசதி

26. மானஸ கங்காவில் குளிக்க செய்துள்ள வசதி

மானஸ கங்காவில் குளிக்க செய்துள்ள வசதி.

27. அருகிலுள்ள அரண்மனை போன்ற இடைக்காலக் கட்டிடங்கள்

27. அருகிலுள்ள அரண்மனை போன்ற இடைக்காலக் கட்டிடங்கள்

அருகிலுள்ள அரண்மனை போன்ற இடைக்காலக் கட்டிடங்கள்.

28. அருகிலுள்ள அரண்மனை போன்ற கலைநயத்துடன் இடைக்காலக் கட்டிடங்கள்

28. அருகிலுள்ள அரண்மனை போன்ற கலைநயத்துடன் இடைக்காலக் கட்டிடங்கள்

அருகிலுள்ள அரண்மனை போன்ற கலைநயத்துடன் இடைக்காலக் கட்டிடங்கள்.

கிருஷ்ணர் மண்ணுடன், சமூகத்துடன், பாரதத்துடன் பிணைந்து இருப்பவர்: கைக்குழந்தையான கிருஷ்ணர். குழந்தை கிருஷ்ணர், சிறுவனான கிருஷ்ணர், நண்பனான கிருஷ்ணர்………………என்றெல்லாம் கிருஷ்ணரைத்தான் உலகத்தில் தெய்வமாக மதிக்கிறார்கள் எனலாம். யார்-யார் எப்படியெல்லாம் நினைத்துப் பாராட்டுகிறார்களோ, அவ்வாறே கிருஷ்ணர் அவர்களுடன் வந்திருக்கிறார், பேசுகிறார், பாடுகிறார், குதிக்கிறார், விலாஇயாடுகிறார், சாப்பிடுகிறார், தூங்குகிறார், நண்பர்கள் சொல்வதை எல்லாம் கேட்கிறார். கூப்பிட்டால் எளிதில் வரும் தெய்வீகக் குழந்தையாக, சிறுவனாக இருக்கிறான்[3]. ஒரு குழந்தை என்னவெல்லாம் குறும்புகள் செய்யுமே, அனைத்தையும் அக்குழந்தை செய்துள்ளது. அவர் அப்பூமியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை 1000, 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பல ரிஷிக்கள், முனிவர்கள், பெரிய பக்தர்கள் முதலியோர் வந்து உணர்ந்துள்ளனர். கவிதைகளில், படல்களில், கதைகளில் பதிவு செய்து வைத்துள்ளனர்.

29. ஶ்ரீ கிருஷ்ணர் கோவில் - இங்கிருந்து கோவர்த்தன கோவில் கோபுரம் தெரியும்

29. ஶ்ரீ கிருஷ்ணர் கோவில் – இங்கிருந்து கோவர்த்தன கோவில் கோபுரம் தெரியும்

ஶ்ரீ கிருஷ்ணர் கோவில் – இங்கிருந்து கோவர்த்தன கோவில் கோபுரம் தெரியும்.

30. ஶ்ரீ கிருஷ்ணர் கோவில் - அமைதியான இடத்தில் இருக்கும் கோவில்

30. ஶ்ரீ கிருஷ்ணர் கோவில் – அமைதியான இடத்தில் இருக்கும் கோவில்

ஶ்ரீ கிருஷ்ணர் கோவில் – அமைதியான இடத்தில் இருக்கும் கோவில்.

31. ஶ்ரீ கிருஷ்ணர் கோவில் - இங்கு கிருஷ்ணர் உடைத்த மரம் இருக்கிறது

31. ஶ்ரீ கிருஷ்ணர் கோவில் – இங்கு கிருஷ்ணர் உடைத்த மரம் இருக்கிறது

ஶ்ரீ கிருஷ்ணர் கோவில் – இங்கு கிருஷ்ணர் உடைத்த மரம் இருக்கிறது.

32. ஶ்ரீ கிருஷ்ணர் உடைத்த மரம் கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கிறது.

32. ஶ்ரீ கிருஷ்ணர் உடைத்த மரம் கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கிறது.

ஶ்ரீ கிருஷ்ணர் உடைத்த மரம் கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கிறது.

பசுமாடுகளும் மண்ணுடன், சமூகத்துடன், பாரதத்துடன் பிணைந்து இருப்பவவை: கோகுலம் என்பது பசுக்கள், மாடுகள் மற்ற கால்நடைகள் இருக்கும் இடம், இடையர்கள் என்றால், அவற்றைப் போற்றிப் பாராட்டி வளர்த்து வருபவர்கள் ஆவர். இதனல், பால் பொருட்கள் – பால், தயிர், வெண்ணை முதலியவை அங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால், இப்பகுதிகளில் பால்பொருட்கள் வியாபாரத்தில் பலர் ஈடுபட்டுள்ளனர். இதனால் தான், பாலையே அவர்கள் லக்ஷ்மியாக, பசுக்களை தெய்வமாக, கால்நடைகளை பொக்கிஷமாகக் கருதி வளர்த்து வருகிறார்கள். சங்க இலக்கியங்களில், ஒருவன் எத்தனை மாடுகள் வைத்திருக்கிறானோ அதை வைத்து தான், அவனது செல்வமதிப்பீடு செய்யப்பட்டதாக உள்ளன. இவ்வாறு கால்நடைகள் குடும்பத்துடன், சமூகத்துடன், நாட்டுடன் ஒன்றினைத்து செயல்பட்டு வருகின்றன. தொழிற்சாலைகளிலிருந்து, பிளாஸ்டிக் கவர்களில் பால் வருவதால், ஒருவேளை, இவற்றையெல்லாம் மறந்து விட்டார்கள் போலும்! இன்று பசு பற்றிப் பேசினால் கூட, அவனை “மதவாதி” என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்[4].

33. சந்திர சரோவர்

33. சந்திர சரோவர்

சந்திர சரோவர் – சந்திரன் அமிர்தத்தால் பொழிந்து நிரப்பிய குளமாம்!

34. சந்திர சரோவர். சுவாமி விளக்குகிறார்

34. சந்திர சரோவர். சுவாமி விளக்குகிறார்

சந்திர சரோவர். சுவாமி விளக்குகிறார்.

35. தான் தாம் - தானம் கொடுக்கும் கோவில்

35. தான் தாம் – தானம் கொடுக்கும் கோவில்

தான் தாம் – தானம் கொடுக்கும் கோவில் – பக்கத்தில் எல்லா கடைகளிலும் தின்பண்டங்கள் விற்கப்படுகின்றன.

விரஜ் பூமி, பிரஜ் பூமி, புண்ணிய பூமி: மலைகள் இருப்பது, மழையை மலைகள் தடுப்பது-காப்பது, வெள்ளம் வருவது, அதனை காடுகள், தோப்புகள், தோட்டங்கள் தடுப்பது, ஏரிகள்-குளங்கள் உருவாகுவது-உருவாக்குவது, இவையெல்லாம் இயற்கையாக நடந்து வரும் நிகழ்ச்சிகள் தாம். அதனால் தான் மலைகளை தெய்வமாக மதிப்பது, சுற்றி வருவது, தோப்புகள், தோட்டங்கள், ஏரிகள், குளங்கள் முதலியவற்றை சமூகக் கொண்டாட்டங்களுடன் இணைத்துக் கொள்வது இங்கு சகஜமாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இங்கு கிருஷ்ணர் இவற்றுடன் பின்னிப்பிணைந்துள்ளார் என்ற முக்கியமான விசயம். பஞ்சபூதங்களுடன், கிருஷ்ணர் சம்பந்தப் பட்டிருப்பதால், அவற்றிலிருந்து பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு மண் அமைந்துள்ளது. அதனால் தான் விரஜ் பூமி, பிரஜ் பூமி, புண்ணிய பூமி என்ற பெயரையேப் பெற்றுள்ளது. இங்குள்ள மக்களும் தங்களை அவ்வாறே, விரஜ்வாசி, பிரஜ்வாசி என்று அழைத்துக் கொள்கின்றனர்.

36. தான் தாம் - தானம் கொடுக்கும் கோவில்- கோவர்த்தன் கோவில்

36. தான் தாம் – தானம் கொடுக்கும் கோவில்- கோவர்த்தன் கோவில்

தான் தாம் – தானம் கொடுக்கும் கோவில்- இது கோவர்த்தன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கிருந்து கிரிவலம் ஆரம்பிக்கப்படுகிறது.

37. தான் தாம் - தானம் கொடுக்கும் கோவில்- விலை எல்லாமே ஆயிரத்தில் தான்

37. தான் தாம் – தானம் கொடுக்கும் கோவில்- விலை எல்லாமே ஆயிரத்தில் தான்

தான் தாம் – தானம் கொடுக்கும் கோவில்- விலை எல்லாமே ஆயிரத்தில் தான்.

38. தான் தாம் - தானம் கொடுக்கும் கோவில்.உள்ளே எல்லா கடவுள் விக்கிரகங்களும் உள்ளன

38. தான் தாம் – தானம் கொடுக்கும் கோவில்.உள்ளே எல்லா கடவுள் விக்கிரகங்களும் உள்ளன

தான் தாம் – தானம் கொடுக்கும் கோவில். உள்ளே எல்லா கடவுள் விக்கிரகங்களும் உள்ளன.

கிருஷ்ண பக்தி, பக்தர்கள், கவிகள் முதலியோர்: 3102 CE காலத்திலிருந்தே கிருஷ்ண பக்தர்கள் இருந்திருக்கின்றனர். கிரேக்கத்திலிருந்தவர்கள் “பாகவதர்”களாக இருந்துள்ளனர். ஹெலியோடோரஸ் என்ற கிரேக்க தூதுவன் கிருஷ்ண பக்தனாக இருந்தான்[5]. கிருஷ்ணர் பொறித்த நாணயங்களை வெளியிட்டுள்ளனர். நாரதர் என்றுமே பக்தராக இருந்திருக்கிறார். ஜைன-பௌத்த காலங்களில் அது அவர்களுடைய சித்தாந்தங்களில் கட்டுப்படுத்தப் பட்டது. கடவுள் இல்லாத மதங்களால் பக்தி மனிதர்களை நாட வழிவகுக்கப் பட்டது. வாத-விவாதங்கள் பெருகின. அதனால், ஆதிசங்கரர் இருக்கின்ற நம்பிக்கைகளை முறைப்படுத்தி, “ஷண்மத” பிரிவுகளில் ஒன்று சேர்த்தார். பிறகு குபதர்காலம் வரை ஒழுங்காக இருந்தது. இடைக்காலத்தில் ஶ்ரீ ஜெயதேவர், ஶ்ரீசைதன்யர், அவரது சீடர்கள், மீராபாய், சங்கர தேவர், சுர்தாஸ், ரைய்தாஸ், கபீர்தாஸ், வல்லபாச்சாரி, நிம்பர்கர், ராமானுஜர், என்று எத்தனையோ மகான்கள், ஆச்சாரியார்கள் இங்கு வந்து சென்றனர். ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை முறைப்படுத்தி வளர்த்தனர், பெருக்கினர் மற்றும் பரப்பினர். அவர்களது பாடல்கள் பட்டி-தொட்டிகளில் எல்லாம் பரவின, ஒலித்தன. குறிப்பாக இவர்கள் எல்லோருமே, கிராமங்களில், நகர்ப்புறங்களில் சுற்றி வந்தார்கள், தங்களது வாழ்க்கையினை அங்குள்ள மக்களுடன் செலவழித்தார்கள்.  இவர்கள் காசு-பணம் கொடுத்து பக்தியை வளர்க்கவில்லை. சிரத்தை, கட்டுப்பாடு, ஒழுக்கம் முதலிய குணங்களினால், அதற்கும் மேலாக, “மானவ சேவா”, மக்களுக்குத் தொண்டு செய்வது, உதவுவது என்ற கொள்கையில் பக்தியை போற்றினர். இவ்வாறு காலம்-காலமாக பக்தி கடைப்பிடிக்கப் பட்டது.  அதனால், இது ஒரு “இயக்கம்” அல்ல, உருவாக்கப்பட்டது, திணிக்கப்பட்டதும் அல்ல[6]. மக்களின் சிந்தனகளோடு, உணர்வுகளோடு மற்றும் தினசரி கடமைகளோடு இருந்தது.

39. தெருக்களின் அங்க பிரக்ஷணம் செய்யும் பக்தர்கள்

39. தெருக்களின் அங்க பிரக்ஷணம் செய்யும் பக்தர்கள்

தெருக்களின் அங்க பிரக்ஷணம் செய்யும் பக்தர்கள்.

40. மஹேந்திடர குண்ட் பற்றி விளக்கும் சுவாமி

40. மஹேந்திடர குண்ட் பற்றி விளக்கும் சுவாமி

மஹேந்திடர குண்ட் பற்றி விளக்கும் சுவாமி.

41. மஹேந்திடர குண்த்தின் தோற்றம்

41. மஹேந்திர குண்டத்தின் தோற்றம்

மஹேந்திர குண்டத்தின் தோற்றம்.

42. லௌடானா கிருஷ்ணர் கோவில்

42. லௌடானா கிருஷ்ணர் கோவில்

லௌடானா கிருஷ்ணர் கோவில்.

43.  லௌடானா - கிருஷ்ணர் அங்கேயே நின்று விட்ட கோவில்!

43. லௌடானா – கிருஷ்ணர் அங்கேயே நின்று விட்ட கோவில்!

சரித்திரக்கால, கட்டிடங்கள் ஆதாரங்கள் மறைந்து போகக் கூடிய அபாயம்: முகலாயர்களின் இறந்தவர்களின் சமாதிகள், ஹேரங்கள், உல்லாச கட்டிடங்கள் முதலியவற்றைப் பராமரிக்க கோடிகளை அரசு கொட்டி சீரமைத்து வருகின்றது[7]. அதனுடன் பொய் சரித்திரத்தைச் சொல்லி கட்டுக்கதைகளை (ஹீர்-ராஞ்சா, அக்பர்-ஜோதாபாய்) உருவாக்க வழிவகுக்கிறது. ஆனால், இங்கு விரஜ் பூமி, பிரஜ் பூமி, புண்ணிய பூமிகளில் மீராபாய், சங்கர தேவர், சுர்தாஸ், ரைய்தாஸ், கபீர்தாஸ், வல்லபாச்சாரி, நிம்பர்கர், ராமானுஜர் போன்றோருடன் சம்பந்தப்பட்ட இடங்கள், மடங்கள், கோவில்கள் முதலியவை சிதிலமடைந்துக் கொண்டிருக்கின்றன, காலத்தின் கோலத்தினால் அவையே விழுந்து வருகின்றன. இப்பொழுது, இவ்விடங்களில் “ரியல் எஸ்டேட்” வியாபாரம் பெருகி வருவதால், இன்னும் சில ஆண்டுகளில் பல முக்கியமான இடங்கள் மறையக் கூடிய நிலைமையும் ஏற்படுகிறது.  மேலும், இவர்கள் தங்களது வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள, தங்களது திட்டங்களின் அருகே புதிய-புதிய கோவில்களை உருவாக்குவார்கள், அதற்கேற்றப்படியான கதைகளையும் உருவாக்குவார்கள். இத்தகைய திட்டங்கள் மதுராவில் ஏற்கெனவே ஆரம்பித்து செயல்படுத்தியாகி உள்ளது. அவை பக்திக்கு முக்கியத்துவம் கொடுக்காது, உல்லாச-சுற்றுலாக்கு இடம் கொடுக்கிறது[8].

வேதபிரகாஷ்

© 27-06-2015

[1]  எஸ். ஆர். ராவ் என்பவரின் கடல்-அகழ்வாய்வு ஆராய்ச்சி அறிக்கைகள், துவாரகை இருந்தது எடுத்துக் காட்டின. இன்றைக்கு மகாபாரத காலம் 3102 CE என்றும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது ஏற்கெனவே, பாரம்பரிய தேதி என்று சொல்லப்பட்டு வழக்கில் உள்ள தேதிதான் ஆனால் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்ட சகாப்தம் மற்று கணக்கிடு ஆகும். http://hinduonline.co/DigitalLibrary/SmallBooks/HistoryOfDwarakaEng.pdf

[2] E = MC2   எனும்போது சக்தியை திடப்பொருளாக மாற்றமுடியும் என்றால், எங்கே, சோதனைச்சாலையில் அவ்வாறு மாற்றிக் காட்டு என்றால், கடினமானது தான். பொதுவாக அவ்வாறு செய்து காட்ட முடியாது. அதனால், அது பொய் என்பதகாது. கணவன்-மனைவி அதனை செய்து காட்டி, குழந்தையாக பெற்றெடுக்கப்படும் போது, இந்த பார்முலா வேலை செய்துள்ளது பற்றி யாரும் எண்ணிப்பார்க்க பாட்டார்கள்.

[3]  இதை கிருத்துவம் காப்பியடித்து, “ஏசுக்குழந்தை / குழந்தை ஏசு” என்றெல்லாம் ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், பாவம், அதற்கு யார் பால் கொடுத்தார்கள், கொடுத்து வளர்த்தார்கள் என்றெல்லாம் விளக்க முடியாமல் இருந்து விட்டார்கள். தமிழில் “பிள்ளைத்தமிழ்” பாடபோய் வகையாகச் சிக்கிக் கொண்டார்கள். முகமதியரும் இந்த பரிசோதனையைச் செய்து பார்த்தார்கள். ஆனால், அடிப்படைவாத முகமதியர் அடக்கி நசுக்கி விட்டார்கள், அத்தகைய “பிள்ளைதமிழ்” நூல்களை (மொஹம்மது, பாத்திமா முதலியவை) அழித்து விட்டார்கள்.

[4]  அதனை மற்ற சர்ச்சைகளில் சிக்க வைத்து, பிர்ச்சினைகளைக் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

[5] Stambha or the column had been erected in 113 BCE by Heliodorus, a Greek ambassador to India, a devotee of Krishna/Vasudeva at Videsha. Heliodorus’ Column publicly acknowledged in the most conspicuous way that Vasudeva, or Krishna, as the “God of gods.”

[6]  முகமதிய தாக்கத்தினால் தான் இடைக்காலத்தில், இந்தியாவில் “பக்தி இயக்கம்” தோன்றியது என்று சரித்திர பாடப்புத்தங்களில் எழுதி வருகிறார்கள். இது எத்தனை அபத்தமானது, என்பதனை, இங்குள்ள ஆதாரங்களினால் புரிந்து கொள்ளலாம்.

[7]  இங்குள்ள கட்டிடங்கள் அவற்றின் அமைப்பு, கட்டுமான முறை முதலியவற்றைக் கவனித்து, “முகலாயர்களின்” கட்டிடங்களையும் பார்த்தால், அவையெல்லாமே, முன்னால் இருந்த இருந்த இந்திய குறிப்பாக ராஜபுதன வம்சத்தினரின் அரண்மனைகள், கட்டிடங்கள் முதலியவையே. அவற்றை முகமதியர்-முகலாயயர் ஆக்கிரமித்தபோது, சிறிது மாற்றங்கள் செய்து, தங்களது கட்டிடங்கள், அத்தகைய முறை “முகலாயர் கட்டிடக்கலை” என்றேல்லாம் பிரபலப்படுத்த ஆரம்பித்தார்கள்.

[8]  கல்லூரிபல்கலைக்கழகங்களில் சரித்திரத்திற்கு மௌசு போய்விட்டதால், சுற்றுலா மற்ரும் நிர்வாகம் என்ற படிப்பு முறையை அறிமுகப்படுத்தி, புண்ணிய சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, தெவீக சுற்றுலா என்றெல்லாம் பெயர்களைக் கொடுத்து, பாரம்பரிய திர்ர்த்த யாத்திரையின் மதிப்பைக் கெடுத்து வருகிறர்கள்.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in ஆசிரமம், ஆரத்தி, இடைக்காலம், கட்டிடம், கிருஷ்ணர், குளம், குழந்தை, கோவில், சமாதி, சிறுவன், சைதன்யர், தோழன், நண்பன், பக்தி, பஜனை, பாட்டு, பிரஜ்பூமி, மதுரா, ராதா, விரஜ்பூமி and tagged , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s