மதுரா – “விரஜ பூமி” – ஶ்ரீகிருஷ்ணர் பிறந்து, வளர்ந்து லீலைகள் செய்த இடம் – இங்குள்ள மண், கல் எல்லாமே புனிதமாக உள்ளது!

மதுரா – “விரஜ பூமி” – ஶ்ரீகிருஷ்ணர் பிறந்து, வளர்ந்து லீலைகள் செய்த இடம் – இங்குள்ள மண், கல் எல்லாமே புனிதமாக உள்ளது!

Mathura important places map

Mathura important places map

01-09-2014 (திங்கட்கிழமை): காலை 7.40 மதுரா ஜங்ஸனை அடைந்தோம். அங்கு பல ரெயில்கள் வந்து செல்வதால், அதிகமான கூட்டம் இருந்தது. எங்களது “லக்கேஜை” வெளியே எடுத்து வந்து, ஆட்டோவைப் பிடிப்பதற்கே நேரம் ஆகியது. நாங்கள் “ராதாஸ்டமி” கொண்டாடும் நேரத்தில் வந்துள்ளோம் என்று விசாரித்தபோது தான் தெரிந்தது. பிறகு, ஒரு “மஹிந்திர மாக்ஸி கேப்” மூலம் 25 கி.மீ தொலைவில் உள்ள கௌடியா மடத்தை அடைந்தோம். “ரூபனுக சேவா ஆஷ்ரம்” எனப்படுகின்ற அந்த மடம் “சாரஸ்வத் கௌடியா சேவா டிரஸ்ட்”டால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. புதியதாகக் கட்டப்பட்ட இந்த கோவில், தங்குமிடம் முதலியவைக் கொண்ட வளாகம் கார்த்திகை மாதம், பௌர்ணமி அன்று 2010ல் துவக்கி வைக்கப்பட்டது. “பரிகிர மார்க்”, ராதா குண்ட் என்ற இடத்தில் உள்ளது. “பரிகிர மார்க்” என்றால் சுற்றிவரும் பாதை, கிரிவலப்பாதை என்று பொருள், இங்கு “கோவர்த்தன கிரி”யைச் சுற்றுவருகிறார்கள். அதனால் தான் இப்பகுதியே “விரஜ பூமி” என்றே அழைக்கப்படுகிறது, அதாவது, ஶ்ரீகிருஷ்ணர் பிறந்து, வளர்ந்த இடம் என்ற பொருள். இங்குள்ள மண், கல், செடி, கொடி, மரம், பறவைகள் என்று எல்லாமே ஶ்ரீகிருஷ்ணருடன் தொடர்பு கொண்டவகளாக இருக்கின்றன. 3,800 சதுர கி.மீ விஸ்தாரம் கொண்ட இப்பூமி புண்ணிய பூமியாக, புண்ணிய க்ஷேத்திடரமாகக் கருதப்பட்டு வந்துள்ளது, வருகிறது. இப்பூமி சுற்றுலா நோக்கில் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

 1. யமுனைக்குக் கிழக்குப் பக்கத்தில் உள்ள பகுதி – இங்கு கோகுலம், மாதவன், பலதேவ், மட், பஜ்னா போன்ற இடங்கள் உள்ளன.
 1. மேற்குப்பக்கத்தில் உள்ள பகுதி – இங்கு பிருந்தாவன், கோவர்த்தன், குஷும் சரோவர், பர்சானா, நந்தகாவ் முதலியவை உள்ளன.

இந்த இணைதளம், மதுராவில் பார்க்க வேண்டிய 22 முக்கியமான இடங்கள் என்று குறிப்பிடுகின்றது[1]. ஆனால், எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்றால், பத்துநாட்கள் இங்கு தங்கியிருக்க வேண்டும்[2].

1. Rupanuga Seva ashran, Mathura where we stayed

1. Rupanuga Seva ashran, Mathura where we stayed

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை: காலைக்கடன்களை முடித்தப் பிறகு, சுவாமிகள் எங்களை அருகில் உள்ள இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள்.  நாங்கள் தங்கியிருக்கும் மடத்திற்கு எதிர்புறத்தில் ஒரிஸ்ஸா பாணியில் கட்டப்பட்டுள்ள “ஜகன்னாதர்” ஒரு கோவில் உள்ளது.  வாசலின் இருபக்கமும் அங்கிருப்பது போலவே இரு சிங்களின் சிலைகள் உள்ளன. உள்ளே ஶ்ரீசைதன்யரின் விக்கிரகம் உள்ளது.

2. Jagannatha - Chaitanya temple nearby

2. Jagannatha – Chaitanya temple nearby

அருகிலுள்ள ஜகன்னாதர் – சைத்தன்ய கோவில்.

3. Jagannatha temple nearby- chaitanya idol inside

3. Jagannatha temple nearby- chaitanya idol inside

பிறகு வெளியே வந்து நடந்து சென்றால், மிகப்பழமையான வீடுகள், கட்டிடங்கள் காணப்பட்டன. நடுநடுவே, ஒவ்வொரு வீட்டிலும், கட்டிடத்திலும் ஶ்ரீகிருஷ்ணரை நினைவுபடுத்தும், சம்பந்தப்பட்டுள்ளதாக சில பொருட்களை, விக்கிரங்களை, நினைவுச் சின்னங்களைப் பார்க்க முடிகிறது. ஒரு வீட்டில், ஒரு கல், மேடை மீது வைக்கப்பட்டுள்ளது. அதற்கு கதவு கூட இல்லை. அது ஶ்ரீகிருஷ்ணர் எடுத்து விளையாடிய கல் என்று போற்றப்படுகிறது.பிறகு சிறிய தெருக்களில் வழியாக கௌடியா மடத்திற்குச் சென்றோம். இதுதான் முதலில் கௌடியா மடம் இருந்த இடம் என்றார்கள்[3]. ஆனால், முன்னர் இருந்த பழைய கட்டிடத்தை இடித்து விட்டு, புதியதாகக் கட்டியிருக்கிறார்கள்.

6. குஞ்சு பிஹாரி கௌடியா மடத்திற்கு செல்லும் வழி

4. குஞ்சு பிஹாரி கௌடியா மடத்திற்கு செல்லும் வழி

புராதன குஞ்சு பிஹாரி கௌடியா மடத்திற்கு செல்லும் வழி.

5. உள்ளே ராதா-கிருஷ்ண விக்கிரகம்

5. உள்ளே ராதா-கிருஷ்ண விக்கிரகம்

உள்ளே ராதா-கிருஷ்ண விக்கிரகம்

6. நன்கொடைய கோரும் கௌடியா மடம்

6. நன்கொடைய கோரும் கௌடியா மடம்

நன்கொடைய கோரும் கௌடியா மடம்

7. பழங்கால கட்டிடங்கள், குறுகிய தெருக்கள்

7. பழங்கால கட்டிடங்கள், குறுகிய தெருக்கள்

பழங்கால கட்டிடங்கள், குறுகிய தெருக்கள்

ஸ்யாம் குண்ட-ராதா குண்ட் - map

ஸ்யாம் குண்ட-ராதா குண்ட் – map

ஸ்யாம் குண்ட-ராதா குண்ட் – வரைப்படம் – அதன் சிறப்பு.

ராதாகுண்ட் மற்றும் ஸ்யாமா குண்ட்: ராதா குண்ட் – ராதா குளித்த குளம் என்று பொருள்.  ராதாவை மிகப்பெரிய பெண் கடவுளாக இங்குள்ள மக்களும், இப்பிரதேச பக்தர்களும் கருதுகிறார்கள். ஸ்யாமா குண்ட் – குளத்தின் அடுத்தப் பகுதியை, ஸ்யாமா அல்லது கிருஷ்ணர் குளம் என்றைக்கப்படுகிறது. இவ்விருக் குளங்களிலும், மக்கள் “ஶ்ரீகிருஷ்ணர்-ராதா குளித்த குளங்களில் தாமும் குளிக்கிறோம்”, என்ற பக்தியுடன் மூழ்கிக் குளிக்கின்றனர்.  இக்குளத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான கோவில்கள், மடங்கள் உள்ளன. அவை யாவும் பல சந்நியாசிகள், மடாதிபதிகளின் சமாதிகள், வாழ்ந்த மற்றும் வந்து தங்கிய இடங்கள் என்று போற்றப்படுகிறது. ஆனால், இவையெல்லாமே மிகப்பழமையான கட்டிடங்களாக, பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றன. இருப்பினும், தினமும், நூற்றுக்கணக்கான பக்தர் வந்து செல்கின்றனர்.  இதைப்பற்றிய ஒரு வரைப்படம் இவ்விடங்களை விளக்குகிறது[4]. மற்ற பல குண்ட் / குளங்கள் இருக்கும் விவரங்களை படத்தின் மூலம் இந்தஈணைதளம் விளக்குகிறது[5].

8. ராகா குண்ட்- குளம் வாசல், உள்ளே

8. ராதா குண்ட்- குளம் வாசல், உள்ளே

ராதா குண்ட்- குளம் வாசல் வளைவு மற்றும் , உள்ளே – சுற்றியுள்ள கட்டிடங்களின் தோற்றம்.

ஶ்ரீசைதன்யர், ரகுநாததாஸ் கோஸ்வாமி

ஶ்ரீசைதன்யர், ரகுநாததாஸ் கோஸ்வாமி

ஶ்ரீசைதன்யர் மற்றும் அவரது ஆறு சீடர்களில் ஒருவரான  ரகுநாததாஸ் கோஸ்வாமி

ரகுநாததாஸ் கோஸ்வாமி சமாதி: இவர் ஶ்ரீசைதன்யரின் ஆறு பிரதம சீடர்களில் ஒருவர்[6]. சமஸ்கிருதத்தில் பல நூல்களை இயற்றியுள்ள இவர், ஶ்ரீசைதன்யருடன் 16 ஆண்டுகள் பணிபுரிந்து பிருந்தாவனத்தில் 1543-1544 காலத்தில் ராதாகுண்ட் அருகில் வாழ்ந்தார்.

10. ரகுதாததாஸ் கோஸ்வாமி சமாதி - வெளியே இருக்கும் அறிவிப்பு

9. ரகுதாததாஸ் கோஸ்வாமி சமாதி – வெளியே இருக்கும் அறிவிப்பு

ரகுதாததாஸ் கோஸ்வாமி சமாதி – வெளியே இருக்கும் அறிவிப்பு – இது ஒரு பழங்கால வீடு போல உள்ளது.

9. ரகுநாத்தாஸ் கோஸ்வாமி சமாதி - நன்கொடை உண்டியல்

10. ரகுநாத்தாஸ் கோஸ்வாமி சமாதி – நன்கொடை உண்டியல்

ரகுநாத்தாஸ் கோஸ்வாமி சமாதி அருகில் இருக்கும் நன்கொடை உண்டியல்.

ஶ்ரீரகுநாத்தாஸ் கோஸ்வாமி சமாதி வளாகம் உள்ளே

11. ஶ்ரீரகுநாத்தாஸ் கோஸ்வாமி சமாதி வளாகம் உள்ளே

மானஸா கங்கா: மிகக்குறுகிய சந்துகளில் நடந்து சென்றால், இந்த கோவிலை அடையலாம். இதற்குள் இந்த குளம் உள்ளது. இதை கங்கையின் நீரென்றே மதிக்கிறார்கள். குளிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. சுற்றிலும் கலைவேலைப்பாட்டுடன் கூடிய இடைக்காலத்தைய கட்டிடங்கள் உள்ளன.

கிருஷ்ண மந்திர் – “ஶ்ரீ சதுர்புஜஜி மஹராஜ் கா மந்திர்” என்ற பெயரில் சிறிய பிரகாரங்கள் கொண்ட கோவில். ஆரவாரமில்லாத அமைதியான இடத்தில், குளத்துடன் இருக்கிறது. இங்கிருந்து கோவர்த்தன் கோவில் கோபுரத்தைக் காணமுடியும்.

கிருஷ்ண மந்திர் – இங்கு கிருஷ்ணாரால் உடைக்கப் பட்டது என்று ஒரு மரம் வைக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள இடம் ஏழ்மையில் இருக்கின்றது.

சந்திர சரோவர் – ராஸலீலைப் பார்க்க, சந்திரன் வந்தபோது, அமிர்தம் பொழிந்து அதனால் உண்டானது இந்த குளம்.

தன்தாம் – தானம் கொடுக்க வேண்டிய கோவில் – அதாவது இங்கு தானம் கொடுக்க வேண்டும் என்றுள்ளது. கோவர்த்தன கோவில் என்றும் வழங்கப்படுகிறாது. இது கிருஷ்ணர் கோவில் என்றாலும், உள்ளே எல்லா சந்நிதிகளும் இருக்கின்றன. தானத்திற்கு கொடுக்க தின்பண்டங்கள் கோவிலும், வெளியிலும் விற்கப்படுகின்றன. கோவிலுக்குள் கடவுளுக்குப் படைத்து, அவற்றை விநியோகிக்க ஆயிரக்கணக்கில் வசூல் செய்கிறார்கள்.வைக்கோவிலைச் சுற்றியுள்ள இடங்கள் வியாபாரமயமாக்கப்பட்டுள்ளது.

கோவர்த்தன பரிக்கிரமா – பலர் இங்கிருந்து கோவர்த்தன பரிக்கிரம, கோவர்த்த மலையைச் சுற்றி வர ஆரம்பிக்கின்றனர். 22 கிமீ துரத்தைச் சுற்றிவர 5 மணி முதல் 10 மணி நேரம் ஆகின்றது. சிலர் “சாஸ்டாங்க பிரதக்ஷணம்” செய்கிறார்கள். அதாவது, படுத்துக் கொண்டு கும்பிடுகிறார்கள். கைகள் நீட்டிய இடத்திலிருந்து, மறுபடியும் படுத்து வணங்கி, மேலே செல்கிறார்கள். இவ்வாறு படுத்து, வணங்கிக் கொண்டு செய்யும் கிரிவலத்தை “சாஸ்டாங்க பிரதக்ஷணம்” என்கிறார்கள். ஶ்ரீகிருஷ்ணரின் மண் என்பதால், அதன் மீது கால் படக்கூடாது என்று அவ்வாறான அங்க பிரதிக்ஷணத்தை செய்கின்றனர். இதில் ஏழை-பணக்காரன், படித்தவன்-படிக்காதவன், ஆண்-பெண் என்ற வித்தியாசம் இல்லாமல், அனைவரும் செய்கிறார்கள். கணவன்-மனைவி சேர்ந்து செய்கின்றது, சிறுவர்-சிறுமியர் மற்றும் கால் சரியில்லாதவர்கள் செய்யும் போது பார்க்க, மனம் நெகிழ்ச்சியடைகின்றது. அவர்கள் செல்லும் வழி கரடு-முரடாக இருக்கிறது, சில இடங்களில் குப்பை-கூளமாகக் கூட இருக்கிறது. இரவு நேரத்திலும், இந்த வலம் தொடரும் போது, சில இடங்களில் விளக்குகள் கூட இல்லாமல் இருக்கிறது.

மஹேந்திர குண்ட் – கிருஷ்ணர் கேட்க கேட்க மஹேந்திரன் என்பவன் சாப்பாடு போட்டானாம்.

லௌடா – கிருஷ்ணரின் நண்பன் ஒருவன் சாப்பாட்டுப் பிரியன். ஒரு நாள் தான் சாப்பிட்டு வரும் வரை கிருஷ்ணரை காத்திருக்கச் சொன்னானாம். அவன் வராததால், கிருஷ்ணர் அங்கேயே தங்கி விட்டாராம்.

இரவு 8 மணிக்கு மடத்திற்குத் திரும்பி வந்தோம்.

வேதபிரகாஷ்

© 26-06-2015

[1] http://www.informationaboutmathura.comule.com/places-to-visit.html

[2] http://www.informationaboutmathura.comule.com/important_sites_of_mathura.html

[3] The Gaudiya Math (Gauḍīya Maṭha) is a Hindu matha (monastic organization) formed on 6 September 1920, about 30 months afterBhaktisiddhanta Sarasvati took sannyasa, the renounced order of life. On 7 March 1918  the same day he took sannyasa, he established the Sri Chaitanya Math in Mayapura in West Bengal, later recognised as the parent body of all the Gaudiya Math branches.

Rupa-Goswami (1489–1564) was an devotional teacher (guru), poet, and philosopher of the Gaudiya Vaishnava tradition With his brother Sanatana Goswami, he is considered the most senior of the six Goswamis of Vrindavan associated with Caitanya Mahaprabhu, a hidden avatar (incarnation) of Krishna in Kali Yuga

[4] http://www.radhakunda.com/the_glories_of_radhakund/index.html

[5] http://projects.landarch.illinois.edu/india-projects/govardhan/Kunds.html

[6] http://gaudiyahistory.com/sri-raghunatha-dasa-goswami/

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in கிரிவலம், கிருஷ்ணர், குரு, குளம், கோவர்த்தன மலை, கோவர்த்தனம், கௌடியா மடம், சனாதன கோஸ்வாமி, சைத்தன்யர், தீர்த்தம், பிரஜ் பூமி, ரகுநாத்தாஸ் கொஸ்வாமி, ராதா, ராதா சக்தி, ராதாஸ்டமி, ரூப கோஸ்வாமி, விரஜ் பூமி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to மதுரா – “விரஜ பூமி” – ஶ்ரீகிருஷ்ணர் பிறந்து, வளர்ந்து லீலைகள் செய்த இடம் – இங்குள்ள மண், கல் எல்லாமே புனிதமாக உள்ளது!

 1. Ganesan சொல்கிறார்:

  விருந்தாவனதின் அணைத்து கோவிலின் தலவரலாறு தமிழில் கிடைக்குமா அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்

  • vedaprakash சொல்கிறார்:

   புத்தகங்களுக்கு குறைவில்லை.

   இப்பொழுது வியாபார ரீதியில் பல வெளியிடப் படுகின்றன, ஆனால், அவை முழுமையான விவரங்களைக் கொடுப்பதில்லை.

   அதைவிட தாங்கள், இணைதளங்களிலிருந்தே விவரங்களை சேர்த்து கொள்ளலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s