அயோத்தியா – ராமர் பிறந்த இடம், கட்டப்பட்ட கோவில், இடிக்கப்பட்ட கோவில், மதவாதம்-செக்யூலரிஸம்-வழக்குகள், அவதி படும் பக்தர்கள்

அயோத்தியா – ராமர் பிறந்த இடம், கட்டப்பட்ட கோவில், இடிக்கப்பட்ட கோவில், மதவாதம்-செக்யூலரிஸம்-வழக்குகள், அவதி படும் பக்தர்கள்!

37. Ayodhya - nearig RJM- Srimad Valmikiya Ramayan Bhawan

37. Ayodhya – nearig RJM- Srimad Valmikiya Ramayan Bhawan

ஶ்ரீமத் வால்கிய ராமாயண பவன் – இங்கு துளசி ராமாயணம் சொல்லப்படுகிறது.

38. Ayodhya- Bus stand-from here we have to go to RJM temple by walk

38. Ayodhya- Bus stand-from here we have to go to RJM temple by walk

ஶ்ரீராமஜன்ம கோவிலுக்கு குறிப்பிட்ட இடத்தில் ஆட்டோக்காரர்கள் விட்டுவிடுகிறார்கள், திரும்பிச் செல்ல இங்கு தான் வரவேண்டும்!

RJM, Sita ka Rasoi Location Wikimap

RJM, Sita ka Rasoi Location Wikimap

ராமஜன்மபூமி, சீதா ரசோய் முதலியவற்றைக் காட்டும் விகிமேப்.

A seer goes about his business in Ayodhya  as police personnel stand guard

A seer goes about his business in Ayodhya as police personnel stand guard

ஒரு முதியவர் போலீஸ்காரர்களைக் கடந்து செல்கிறார் – இது சாதாரணமான காட்சியாகி விட்டது!

A seer goes about his business in Ayodhya on Saturday, as security personnel stand guard

A seer goes about his business in Ayodhya on Saturday, as security personnel stand guard

அதிரடி படையினரைத் தாண்டிச் செல்லும் ஒரு சாது.

1528ல் பாபரால் கோவில் இடித்து-உடைக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டப் பிரச்சினை:  1528ல் பாபர் மன்னனின் தளபதியான மீர் பக்கி ராமஜன்ம கோவிலை இடித்து-உடைத்து, கோவில் இருந்த இடத்தில் மசூதியைக் கட்டினான். முகமதிய-முகலாயர் காலத்தில் மிகவும் பிரச்சி பெற்ற கோவில்கள் பல இவ்வாறு இடிக்கப் பட்டன. அங்கெல்லாம் மசூதிகள் கட்டப்பட்டன. கோவில் இருந்த இடத்தில், அதன் அஸ்திவாரம், மற்றும் சுவர்கள், தூண்கள் மீதுள்ள காட்டிடங்களின் மேற்பகுதிகளை இடித்து விட்டு, மசூதி போன்ற உருளை கூம்பு அமைப்புகளைக் கட்டி மசூதிகளாக்கி விட்டனர். அவர்கள் மற்ரவர்களை காபிர்கள் என்று கருதுவதால் அத்தகைய எதிர்ப்பு எண்ணங்கள் உருவாகின்றன, அதனால், அவ்வாறான செயல்களை செயின்றனர். இதனால், அருகில் மற்றும் உள்ளே சென்று பார்த்தால், அது ஒரு கோவில் என்பதனை யார் வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம். ஆக பாபர் காலத்தில் இக்கோவில் இடிக்கப்பதிலிருந்து தான் பிரச்சினை ஆரம்பித்தது. இவ்விடம் 1528 முதல் 1853 வரை இசுலாமியர்களின் தொழுகைப் பள்ளிவாசலாக இருந்தது, ஆனால், இந்துக்களின் புண்ணியக்ஷேத்திரமாக இருந்ததால், தொடர்ந்து அவர்கள் வந்து கொண்டிருந்தனர். பிறகு முஸ்லிம்கள் அங்கு தொழுகை செய்வதை நிறுத்திவிட்டனர். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் காலத்தில் இம்மசூதியும் ராமர் கோயிலும் ஒரே சுவரால் பிரிக்கப்பட்டது.

A woman goes to shop under heavy secuirityin Ayodhya

A woman goes to shop under heavy secuirityin Ayodhya

கடைக்குப் போகும் பெண்மணி – சுற்றிலும் அதிரடிப்படை வீரர்கள்.

An old man pulled up by the police -Ayodhya

An old man pulled up by the police -Ayodhya

இங்கெல்லாம் நிற்கக்கூடாது, என்று கையைப் பிடித்து இழுத்துச் செல்லும் போலீஸார்!

Ayodhya - heavily armed forces terrorize ordinary devotess

Ayodhya – heavily armed forces terrorize ordinary devotees

அயோத்தியாவில் என்ன நடந்தாலும் பாதிக்கப்படுவது அப்பாவி பக்தர்களே.

Ayodhya - many times heavily armed forces terrorize poor devotess

Ayodhya – many times heavily armed forces terrorize poor devotees

இப்படி மூட்டை-முடிச்சுகளுடன் வரும் பக்தர்கள் படும் அவதி சொல்ல மாளாது.

Ayodhya with Police, an ild man walks to temple

Ayodhya with Police, an old man walks to temple

தன் வேலையைப் பார்க்க போய்க் கொண்டிருக்கும் பெரியவர்.

2013 தீர்ப்பில் முடிந்துள்ள இடைக்கால தீர்வு: இந்தியத் தொல்லியல் துறையினர் பிரச்சினைக்குரிய, ராமர் பிறந்ததாக கூறப்படும் இடத்தையும், பாபர் மசூதி இருக்கும் நிலத்தையும் 1970, 1992 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் அகழ்ந்து பார்த்ததில், பாபர் மசூதிக்கு முந்தைய காலத்து தொன்மையான கோவில் கட்டிடங்கள், பாபர் மசூதிக்கு கீழும் பக்கவாட்டிலும் இருந்ததற்கான ஆதாரங்களை கண்டெடுத்தனர். பிரச்சினைக்குரிய இராம ஜன்ம பூமி – பாபர் மசூதி இடம் குறித்து செப்டம்பர் 30, 2010 இல் தீர்ப்பு வழங்கியது.  நீதிபதி தனது தீர்ப்புச் சுருக்கத்தில் முன்னுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கையில் கூறியிருப்பது:

  1. சர்ச்சைக்குரிய இடம்தான் ராமர் பிறந்த இடமா? சர்ச்சைக்குரிய இடம்தான் ராமர் பிறந்த இடம். அந்த இடமே சட்டரீதியில் ஓர் ஆளுமையாகவும் தெய்வமாகவும் கருதப்பட வேண்டும். ஏனெனில் அது பகவான் ராமர் குழந்தையாகப் பிறந்த இடமாக, இறைத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
  1. சர்ச்சைக்குரிய கட்டிடம் மசூதியா, அது எப்போது யாரால் கட்டப்பட்டது? – சர்ச்சைக்குரிய கட்டிடம் பாபரால் கட்டப்பட்டது. அது கட்டப்பட்ட ஆண்டு சரியாகத் தெரியவில்லை. அது இஸ்லாமிய மதநெறிகளுக்கு மாறாகக் கட்டப்பட்டது. எனவே அது ஒரு மசூதியாகக் கருதப்பட முடியாது.
  1. ஹிந்து கோவிலை இடித்த பிறகு அங்கு மசூதி கட்டப்பட்டதா? – அங்கு ஏற்கனவே இருந்த ஒரு பழமையான கட்டிடத்தை இடித்துவிட்டு அந்தச் சர்ச்சைக்குரிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்திய அகழ்வாராய்ச்சிக் கழகம் அந்த இடிக்கப்பட்ட கட்டிடம் ஒரு பிரம்மாண்டமான ஹிந்து மத வழிபாட்டுக் கட்டிடம் / கோவில் என்பதை ஆதாரபூர்வமாக நிறுவியுள்ளது.

சர்ச்சைக்குரிய மேற்படி 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று பகுதிகளாக பிரித்து, தற்போது குழந்தை இராமர் சிலை நிறுவப்பட்ட இடம் ஒரு பகுதியாகவும், சன்னி வக்ப் போர்டு அமைப்புக்கு மூன்றில் ஒரு பகுதி நிலத்தையும், நிர்மோகி அக்காரா அமைப்புக்கு மீதி உள்ள நிலத்தையும் வழங்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து வழக்குத் தொடுத்ததால், ஜனவரி 27, 2013-இல் இந்திய உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய பகுதிகள் ஏற்கனவே உள்ளது உள்ளபடி (status quo) மாநில அரசு நிர்வாகிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. சர்ச்சைக்குரிய இராம ஜன்மபூமி மற்றும் பாபர் மசூதி குறித்த அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல வழக்குகள் நிலுவை உள்ளதால், உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பைத் தள்ளி வைத்தது.  ஆக நீதிமன்றம் எனும்போதும், உண்மையினை எடுத்துக் காட்ட வேண்டியுள்ளது.

உத்திரபிரதேசம் காங்கிரஸ், சமஜ்வாதி கட்சி, ஜனதா தள், பாரதிய ஜனதா என்று பல கட்சிகள் மாறி-மாறி ஆட்சி செய்து வருவதால், ஆட்சியாளர்களின் போக்கும் மாறுகின்றன. அதற்கேற்றபடி ஒழுங்குமுறை, அடக்குமுறை, சட்டம் அமூல் படுத்துவது போன்ற காரியங்களும் மாறுபடுகின்றன. இதனால், அயோத்தியாவுக்கு வருகின்ற பக்தர்கள் பெருத்த தொல்லைக்கு, அவதிக்கு மற்றும் துன்பக்களுக்கு ஆளாகவேண்டியுள்ளது. உண்மையில், அவர்களுக்கு இவற்றைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆயிரக்கணக்கான கி,மீ தூரத்திலிருந்து ஏழைகள், மத்தியத்தர குடும்பத்தவர், தங்களது மூட்டைமுடிச்சுகளோடு, குடும்பத்தோடு தரிசனத்திற்காக வருகின்றனர். ஆனால், திடீரென்று, இந்நிகழ்ச்சி கிடையாது, பரிக்கிரமத்திற்கு அனுமதி கிடையாது, இன்று தரிசனம் கிடையாது என்றெல்லாம் திடீர்-திடீரென்று அறிவிக்கும் போது, அத்தகைய பக்தர்களால் ஒன்று செய்ய முடிவதில்லை. அதனால், அரசின் போக்கு மாறவேண்டும், பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்கப்படவேண்டும்.

Security personnel stop a sadhu on a closed road as prohibitory orders were imposed in Ayodhya

Security personnel stop a sadhu on a closed road as prohibitory orders were imposed in Ayodhya

ஒரு சாதுவைத் தடுக்கும் போலீஸார் – இஷ்டத்திற்கு போகக்கூடாது என்கிறாரோ?

Pilgrims walk towards the Ram temple as a policeman stands guard in Ayodhya

Pilgrims walk towards the Ram temple as a policeman stands guard in Ayodhya

நாங்கள் ராமஜன்மஸ்தானுக்கு போகத்தான் செய்வோம் என்று உறுதியாகச் செல்லும் பக்தர்கள்!

long-wait-for-the-devotees-ayodhya

long-wait-for-the-devotees-ayodhya

அங்கு சென்றால், தரிசனத்திற்குள் ஏகப்பட்டத் தொல்லைகள்.

பக்தர்கள் நம்பிக்கையில் வந்து செல்கிறார்கள்: அயோத்தியாவைச் சுற்றிப் பார்த்தால், மிகப்பழைய கட்டிடங்கள் பழங்கால அரண்மனைகள் போலக் காணப்படுகின்றன. எல்லாமே இராமாயணத்துடன் சம்பந்தப் பட்டுள்ளன. ஆனால், ராமரது உடல் தகனம் செய்யப் பட்டதாக “ஸ்வர்க் த்வார்” அதாவது சுவர்க்கத்தின் வாசல் என்ற இடம் அயோத்தியாவில் உள்ளது. ஶ்ரீ ராமர் பட்டாபிசேகம் படம் போட்ட “தபால் அட்டைகள்”, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1905 மற்றும் 1930 ஆண்டுகளில் வெளியிடப்பட்டுள்ளன. கனக பவனம் என்பது ஜனகர் தனது மகளான சீதையை கன்னியாதானம் செய்த போது, ஒரு தங்க மாளிகையைப் பரிசாக அளித்தாராம். கைகேயி கொடுத்தால் என்றும் உள்ளது. அதன் நினைவாக இந்த மாளிகை வழங்கப் படுகிறது.  தசரருடைய மாளிகை என்றும் உள்ளது.  இப்படியிருக்கும் ஆரியம்-ஆயிரம் ஆண்டு கால நம்பிக்கையை பிறகு வந்தவர்கள் எப்படி மதிக்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த நம்பிக்கை என்பது இன்று உருவாக்கப்பட்டது அல்ல, முகமதியர்கள் இந்தியாவிக்கு வருவதற்கு முன்னமே இருந்தது. அதற்கேற்றபடி அவர்களுக்கு கோவில்கள், குளங்கள் / காட்டுகள், நதிக்கரைகள் என இருந்தன. அவர்களும் தீர்த்தயாத்திரை சென்று வந்தனர், சென்று வருகின்றனர். நாங்களும் எங்களது பயணத்தைத் தொடர்ந்தோம். 7.55 மாலை பாட்னா-கோடா எக்ஸ்பிரஸ் மூலம் மதுராவுக்குப் புறப்பட்டோம்.

வேதபிரகாஷ்

© 25-06-2015

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அயோத்தி, அயோத்தியா, ஆக்கிரமிப்பு, ஆசிரமம், ஆஸ்ரமம், உத்திரபிரதேசம், காலக்கணக்கீடு, குளப் படிக்கட்டுகள், கோவில், சமஸ்கிருதம், சரயு, சீதா கூப், சீதா ரசோய், தசரதன், துளசிதாஸ், பிரயாணம், ராமஜன்மஸ்தான், ராமஜென்மஸ்தான், ராமர், ராமர் பிறந்த இடம், ராமா, ராமாயணம், ராம், லக்ஷ்மணன், லட்சுமணன், வால்மீகி, விக்கிரகம் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s