அயோத்தியா – ராமர், ராமர் பிறந்த இடம், கட்டப்பட்ட கோவில், ராமாருடன் சம்பந்தப்பட்டுள்ள இடங்கள், கட்டிடங்கள், கோவில்கள்!

அயோத்தியா – ராமர், ராமர் பிறந்த இடம், கட்டப்பட்ட கோவில், ராமாருடன் சம்பந்தப்பட்டுள்ள இடங்கள், கட்டிடங்கள், கோவில்கள்!

1. Ayodhya Railway station

1. Ayodhya Railway station

அயோத்தியா ரயில்வே நிலையும் மற்ற ஸ்டேஷன் போல சாதாரணமாகத்தான் உள்ளது.

2. Ayodhya Railway station -another view

2. Ayodhya Railway station -another view

அயோத்தியா ரயில்வே நிலையம் – சற்று தூரத்திலிருந்து தோற்றம்.

3. Ayodhya Railway station - on the walls, Tulsidas Ramayana Dohe

3. Ayodhya Railway station – on the walls, Tulsidas Ramayana Dohe

அயோத்தியா ரயில்வே நிலையத்தினுள், சுவர்களில் ஶ்ரீ ராம்சரித் மனஸ் என்ற துளசிதாஸ் ராமாயணத்திலிருக்கும் வரிகள் எழுதப்பட்டுள்ளன.

4. Gujarat Bhawan where we stayed

4. Gujarat Bhawan where we stayed

நாங்கள் தங்கிய குஜராத தர்மசால, ஸ்டேஷனுக்கு அருகில் உள்ளது.

31-08-2014 (ஞாயிற்றுக் கிழமை): காலை 6 மணியளவில் அயோத்தியா ஜங்ஷனை அடைந்தோம்.  ராம ஜென்மபூமி உத்திரப் பிரதேசத்தினல், பைசாபாதிலிருந்து எழு கிலோ மீட்டர் தொலைவிலும், லக்னோவிலிருந்து கிழக்கே 136 கிலோ மீட்டர் தொலைவில், சரயு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. விஷ்ணுவின் அவதாரம், அயோத்தி மன்னர், மரியாதா புருஷோத்தம் இராமாயணம் மற்றும் புராணங்களில் கூறப்படும் ராம் லல்ல / குழந்தை ராமனின் பிறந்த இடம் என்றெல்லாம் சிறபிக்கப்படும் கோயில் இங்குள்ளது. ஸ்டேஷனை விட்டு வெளியே வரும் போது, உள்பக்க சுவர்களில் ஶ்ரீ ராம்சரித் மனஸ் சுலோகங்கள் எழுதப்பட்டிருப்பதை காணமுடிகிறது. ஸ்டேஷனுக்கு எதிரில், வலது பக்கத்தில் குஜராத்தி தர்மசாலாவில் தங்கினோம். புதியதாகக் கட்டுப்பட்டுள்ளது, அறைகள் சுத்தமாக இருக்கின்றன. காலைக்கடன்கள் முடித்துக் கொண்ட பிறகு, 7.30க்கு புறப்பட்டு, பல இடங்களைப் பார்த்தோம்:

ஶ்ரீ ராமஜன்மபூமி நியாஸ் தொழிற்சாலை:  இங்கு புதியதாகக் கட்டப்பட இருக்கின்ற கோவிலுக்கு வேண்டிய தூண்கள் மற்ற பகுதிகள் தயார் செய்யப் படுகின்றன. தூண்களுக்கான வேண்டிய ரோஜாப்பூ நிற கற்கள் ராஜஸ்தானிலிருந்து நீளமாக வெட்டி இங்கு எடுத்து வரப்படுகின்றன. ஒவ்வொரு தூணின் மீதும், வேண்டிய கலையமைப்பை வரைந்து, பிறகு மெதுவாக சுத்தி-உளி கொண்டு செதுக்க ஆரம்பிக்கிறார்கள். நுண்ணிய வளைவு, சுளிவுகளுக்கு பலவித உளிகளை உபயோகப்படுத்துகிறார்கள். தூண் இடைப்பகுதிகளில் உள்ள பருமனைக் குறைக்க மின்சாரத்தில் இயங்கும் ரம்பம் முதலியவற்றையும்  உபயோகப்படுத்துகிறார்கள். வாசலில் ஒரு வளைவை மாதிரிக்காக பொறுத்தி வைத்துள்ளார்கள். உலகின் பல பாகங்களிலிருந்து வந்துள்ள “ஶ்ரீ ராம்” என்று பதிக்கப்பட்ட செங்கற்கள் அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் பார்க்கும் போது, கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகள் எப்படி இருக்கின்றன என்பதனை அறிந்து கொள்ளலாம்.

5. Ramjanmabhumi Naya Mandir Nirman Karyalaya

5. Ramjanmabhumi Naya Mandir Nirman Karyalaya

ராமஜன்மபூமி நயா மந்திர் நிர்மாண் கார்யாலய – அதாவது ராமஜன்மபூமி புதிய கோவில் கட்டும் இயக்கத்தின் அலுவலகம் – சென்றோம்.

6. Ramjanmabhumi Naya Mandir Nirman Karyalaya.wit Arch

6. Ramjanmabhumi Naya Mandir Nirman Karyalaya.wit Arch

உள்ளே கோவில் பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலையும் உள்ளது. மாதிரிக்கு ஒரு தோரண வாயிலைத் தயாரித்து வைத்துள்ளார்கள்.

7. Ramjanmabhumi Naya Mandir Nirman Karyalaya.with readmade Arch

7. Ramjanmabhumi Naya Mandir Nirman Karyalaya.with readmade Arch

தோரணத்தின் அருகிய தோற்றம்.

8. Ramjanmabhumi Naya Mandir - Bricks brought from many parts of world

8. Ramjanmabhumi Naya Mandir – Bricks brought from many parts of world

கோவில் கட்டுவதற்காக உலகின் பல பகுதிகளிலிருந்து வந்துள்ள செங்கற்கள்.

9. Ramjanmabhumi Naya Mandir - Bricks brought from many parts

9. Ramjanmabhumi Naya Mandir – Bricks brought from many parts

கோவில் கட்டுவதற்காக உலகின் பல பகுதிகளிலிருந்து வந்துள்ள செங்கற்கள். ஶ்ரீராம் என்று பலமொழிகளில் பதிக்கப்பட்டுள்ளது.

10. RJM - brick brought from UK

10. RJM – brick brought from UK

இங்கிலாந்திலிருந்து வந்துள்ள செங்கல்!

11. RJM brick brought from Sri Lanka, KVR pointing

11. RJM brick brought from Sri Lanka, KVR pointing

இலங்கையிலிருந்து வந்துள்ள செங்கல்!!

2. Ramjanmabhumi Naya Mandir - factory where pillars are manufactured

2. Ramjanmabhumi Naya Mandir – factory where pillars are manufactured

கோவிலுக்கான பகுதிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை.

13. Ramjanmabhumi Naya Mandir - Parts are ready

13. Ramjanmabhumi Naya Mandir – Parts are ready

உற்பத்தி செய்யப்பட்டு தயாராக வைக்கப் பட்டுள்ள பகுதிகள்.

14. Ramjanmabhumi Naya Mandir - Pillars are ready

14. Ramjanmabhumi Naya Mandir – Pillars are ready

உற்பத்தி செய்யப்பட்டு தயாராக வைக்கப் பட்டுள்ள பகுதிகள்.

15. RJM factory full of pillars

15. RJM factory full of pillars

தூண்கள், பகுதிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள தோற்றம்.

16. RJM cut stones for pillars, rough and carved ones

16. RJM cut stones for pillars, rough and carved ones

வேண்டிய அளவுக்கு கொண்டுவரப்படும் கற்கள்.

17. RJM How pillar is designed and carved

17. RJM How pillar is designed and carved

தூண் தயாரிப்பு ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

18. RJM How pillar is designed, cut and carved.

18. RJM How pillar is designed, cut and carved.

தொடர்ந்து செதுக்கும் சிற்பி.

19. Ayodhya- old palace mandir

19. Ayodhya- old palace mandir

தெருக்களில், வழியில் காணப்படும் பழங்கால கட்டிடங்கள்.

20. Ayodhya with old buildings ilke this many

20. Ayodhya with old buildings ilke this many

இன்னொரு கட்டிடம், கோவில்.

21. Ayodhya with old building ilke this

21. Ayodhya with old building like this

22. Ayodhya with palaces attributed to Janaka

22. Ayodhya with palaces attributed to Janaka

ஜனகருடைய மாளிகை.

23. Ayodhya-another Ashram

23. Ayodhya-another Ashram

இருக்கும் பல ஆசிரமங்களுள் ஒன்று!

24. Ayodhya - nearig RJM

24. Ayodhya – nearig RJM

கோவிலை ஒட்டியுள்ள கடைகள்.

25. Ayodhya - old buiding disused

25. Ayodhya – old buiding disused

இன்னுமொரு பழங்கால கட்டிடம்.

26. Ayodhya- another palace mandir

26. Ayodhya- another palace mandir

இன்னுமொரு அரண்மனை.

27. Ayodhya - SriRam Darbar Mandir

27. Ayodhya – SriRam Darbar Mandir

ஶ்ரீராம் தர்பார் மந்திர் – ஶ்ரீ ராமரது அரசவைக் கோவில் எனப்படுகின்றது.

28. Desi Param pawan ashram

28. Desi Param pawan ashram

தேசி பரம் பவன் ஆஸ்ரமம்.

29. Ayodhya-Swamijis taking to Krishna mandir

29. Ayodhya-Swamijis taking to Krishna mandir

ஶ்ரீ கிருஷ்ணர் கோவிலுக்குக் கூட்டி செல்லும் ஸ்வாமிஜி.

30. Ayodhya-Swamijis  inside Krishna mandir

30. Ayodhya-Swamijis inside Krishna mandir

உள்ளே ராதா-ராணி-கிருஷ்ண விக்கிரங்கள்.

அயோத்தியாவில் உள்ள பழங்கால கட்டிடங்கள், ஆசிரமங்கள், மஹந்துகள்: அயோத்தியா தெருக்களில் செல்லும் போது, ஏராளமான பழங்கால கட்டிடங்கள், ஆசிரமங்கள், கோவில்கள் என்று பலவற்றைப் பார்க்க முடிகின்றது. இவையெல்லாமே இடைக்காலத்தில் கட்டப்பட்டவை என்று அவற்றின் அமைப்பிமன் மூலம் தெரிந்து கொள்ளலாம். சில கட்டிடங்கள் கேட்பாரற்று சிதலமடைந்து கிடக்கின்றன. இவையெல்லாமே ராமருடன் அல்லது ராமாயணப் பாத்திரங்களுடன், பொதுவாக ராமாயண நிகழ்ச்சியுடன் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஒவ்வொரு ஆசிரமத்திலும் ஒரு “மஹந்த”, மடாதிபதி இருக்கிறார். அவருக்கு நூற்றுக்கணக்கான சீடர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு வேண்டியவை அங்கேயே கிடைக்கின்றன. பக்தர்களுக்கு கொடுப்பதற்காக சாப்பாடு பிரம்மாண்டமாக செய்யப்படுகிறது. வருகின்ற பக்தர்களிடம் நன்கொடை வசூலிக்கப் படுகிறது. ஒவ்வொரு மஹந்தும் எப்படி தான் ராம்ர் கோவில் கட்டுவதற்கு பாடுபட்டுள்ளேன், பாடுபடுகிறேன் என்பதனை விவரிக்கிறார். ஒட்டுமொத்த ராமஜன்ம பூமி மீட்பு மற்றும் கோவில் கட்டியே தீருவோம் என்ற இயக்கங்களுக்கு எதிராக செயல்படும் சில மஹந்துகளையும் கவனிக்க முடிகிறது. ஏனெனில், அவர்களிடம் பேசும் போது, அது வெளிப்பட்டு விடுகிறது. அதாவது, ஒவ்வொரு அரசியல் கட்சியின் சார்பிலும், ஒவ்வொரு மஹந்த் செயல் படுகிறார் என்று தெரிகிறது. இதனால், அவ்வப்பொழுது கருத்து வேறுபாடிகள், மோதல்கள் கூட நிகழ்ந்து வருகின்றன. இதனால், ஆரிரக்கணக்கான கி.மீ தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் பாதிக்கப் படுகின்றாற்கள். ஏனெனில், திடீரென்று போலீஸ், ஆயுத படை பாதுகாப்பு வீரர்கள், அதிரடி பாதுகாப்பு வீரர்கள் என்று வந்து விடும் போது, அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளினால், பக்தர்களுக்கு ஏகப்பட்ட இன்னல்கள், தொல்லைகள், பணவிரயங்கள் ஏற்படுகின்றன.  1930லிருந்து 2014 வரை நடந்துள்ள அரசியல், வழக்குகள் விவரங்களை இங்கு விவரமாகக் கொடுத்துள்ளேன்[1].

5. Ayodhya- Bade Hanumanji Mandir

5. Ayodhya- Bade Hanumanji Mandir

படே ஹனுமான் கோவில்.

36. Ayodhya- Bade Hanumanji entrance

36. Ayodhya- Bade Hanumanji entrance

கோவில் நுழைவுவாயில்!!

படே ஹனுமான் மந்திர், சீதா கா ரசோய் முதலியவை: ஒரு மிகப்பெரிய ஹனுமான் கோவிலுக்கு சென்றோம். ஹனுமாரில் கால்கள் இடையே உள்ளே செல்ல வேண்டும், உள்ளே ராமர், லக்ஷ்மணர் மற்றும் சீதை விக்கிரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. எதிரில் ஒரு கிருஷ்ணர் கோவிலுக்கு சுவாமிகள் அழைத்துச் சென்றனர். அதில் ராதா-கிருஷ்ண விக்கிரங்கள் இருந்தன. வெளியே “வேதாந்தி மந்திர்” என்று போடப்பட்டிருந்தது. பிறகு ராம்தாஸ்ஜி மஹராஜ் என்ற கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு வேதாந்தி என்ற சுவாஜி இருந்தார். அவரது சீடர்கள் அவர்தாம் ராமஜன்மபூமி கோவிலுக்காக பாடுபடுகிறார் என்று அறிமுகப்படுத்தினர். அவரது அருகில் இருந்த ராமர், லக்ஷ்மணர் மற்றும் சீதை விக்கிரங்களைக் காண்பித்து, அவைதாம் 1948ல் ஜன்மஸ்தானில் தோன்றியவை என்றனர். இருப்பினும் தனக்கும் “ராமஜன்மபூமி நியாஸ் இயக்கத்திற்கும்” சம்பந்தம் இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டார். பிறகு, நன்கொடை கொடுக்குமாறு கூறினர், அவ்வாறு கொடுத்தால், பிரச்சாதம் அனுப்பி வைக்கப்படும் என்றனர். விருப்பம் இருந்தவர்கள் நன்கொடையினையும், விலாசத்தினையும் கொடுத்தனர்.

சீதா சபோத்ரா, சீதா கா ரஸோய், சீதா கூப்: சீதையுடன் சம்பந்தப்பட்ட இவ்விடங்கள் இப்பொழுது பாதுகாப்பு கட்டுப்பாட்டில் வெளியேயுள்ளது. ஜன்மஸ்தான் அதாவது பிறந்த இடம், சீதா ரசிஒயி – சீதையின் சமையலறை, இரண்டும் ஒரே கோவிலின் பகுதிகளாக இருக்கின்றன. கோவிலின் கீழறையில், இடதுபக்கம் படிக்கட்டு வழியில் சீதாரசோயி செல்லும் வழியுள்ளது. இங்கு சீதாவின் விக்கிரகம், சௌகா (நான்கு மூலையுள்ள உணவு சுட உபயோகப்படுத்தப்படும் கல்), பேலன் (குழவி) மற்றும் நாற்காலி உள்ளன. அருகில் சீதையின் கிணறு உள்ளது. அதாவது, சீதை வேண்டிய நீரை இங்கிருந்து எடுத்துக் கொள்வாராம். கனக பவன், கௌசல்யா பவன், ஶ்ரீ துளசி ஸ்மார்க் பவன், கைகேயி பவன், லவ-குச மந்திர், லக்ஷ்மண் கிலா, மணி பர்வத்…என்று ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட பல இடங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் பார்க்க வேண்டுமானால், மூன்று நாட்கள் ஆகும்.

சரயூ நதி, படகு சவாரி: சரயூ நதியில் பிரயாணம் செய்ய படகு வசதி உள்ளது. சரயு நதிக்கரை வழியாக சென்றால், அதன் கரையில் அமைந்துள்ள கோவில்கள், பிரம்மாண்டமான அடுக்கு மாளிகைகள், முதலியவற்றைப் பார்க்கும் போது, நினைவுகள் வேறு உலகத்திற்கு எடுத்துச் செல்கின்றன. அவற்றிலிருந்து படிகட்டுகள் நதிக்கரைக்கு வருகின்றனர். மக்கள் குளித்துக் கொண்டும் இருக்கின்றனர். மக்கள் தொடர்ந்து வசிக்கும் நகரங்களில் தொடர்ந்து வீடுகள் இடித்துக் கட்டப் படும், மாற்றி அமைக்கப்படும் அல்லது புதுப்பிக்கப்படும். இது எல்லா நகரங்களுக்கும் பொருந்தும். ஆனால், இங்குள்ள கட்டிடங்கள் அப்படியே இருக்கின்றன.

ராமஜன்மபூமி கோவில்பாதுகாப்பு சோதனை, கட்டுப்பாடுகள், தரிசனம்:  ஶ்ரீ ராமர் பிறந்த இடத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஊடகங்களைப் பொறுத்த வரையில் எதிர்மறையான கருத்துகள், விவரங்கள், தகவல்கள் முதலியவற்றைத் தான் கொடுத்துள்ளன, கொடுத்து வருகின்றன. அயோத்தியாவிற்கு செல்லலாம் என்று நினைத்தால் ஒருவேளை, அங்கு கலாட்டா, கலவரம் என்று ஏதாவது இருக்குமோ என்ற எண்ணம் தான் ஏற்படலாம்.  தசரதர் வாளிகையைத் தாண்டி செல்லும் போதே, செல்போன்கள், தோலினால் செய்யப் பட்டப் பொருட்கள், கைக்கட்காரம், பேனா, சீப்பு, பெண்களின் ஹேர்பின்கள், தலை உள்ள பூக்கள், என சகலப் பொருட்களையும் எடுத்துவிட சொல்கிறார்கள். ஆனால், செருப்பு, ஷூ போட்டுக் கொண்டு செல்ல அனுமதிக்கிறார்கள். ராமஜன்மபூமி என்ற இடத்திற்கு செல்ல கூண்டு மாதிரியான அமைக்கப்பட்டுள்ள குறுகிய வழியாக சுமார் 4 கி.மீ தூரம் வளைந்து-வளைந்து செல்ல வேண்டும். போகும் வழியில் ஐந்து இடங்களில் பக்தர்கள் பலவழிகளில் சோதிக்கப்பட்டார்கள். இது பக்தர்களுக்கு மிகவும் அதிருப்தியை, வெறுப்பை உண்டாக்குகிறது. ஏற்கெனவே இரண்டடி அகலம் உள்ள பாதையில், உட்காரக் கூட வசதி இல்லாத பாதையில், சுற்றி-சுற்றி செல்கின்ற நிலையில் அவதிபட்டுக் கொண்டிருக்கும் வேளையில், இவர்களது சோதனை தொல்லையாகத்தான் உள்ளது. வயதானவர்கள், கால் ஊனமானவர்கள் அல்லது நடப்பதற்கு கஷ்டமாக உபாதை கொண்டவகளுக்கு இவ்வாறு செல்ல மிகக்கடினம் தாம். ஒன்று-இரண்டு இடங்களில் குடிக்க தண்ணீர் உள்ளது, மற்றபடி வேறெந்த வசதியும் இல்லை. இவ்வாற் கஷ்டப்பட்டு சென்றால், சுமார் 20 அடி தூரத்தில் வைக்கப்பட்டுள்ள சிறிய ராமர், லக்ஷ்மணர் மற்றும் சீதை விக்கிரங்களை நொடிகளில் தரிசனம் செய்து சென்று விடுங்கள் என்று விரட்டுகிறார்கள். தரிசனம் செய்து வெளியே வர 30-45 நிமிடங்கள் ஆகின்றன. கடவுளை தரிசிக்க வரும் பக்தர்கள் இவ்வாறு சதாய்க்கப்பட வேண்டுமா என்று பக்தர்களின் மனத்தில் சிந்தனை எழத்தான் செய்கிறது. ஆனால், இவற்றிற்கெல்லாம் காரணம் சுருக்கமாக சொல்வதானால், முந்தைய ஆங்கிலேய, முகம்ழதிய, முகலாயர்களின் ஆட்சியும், அவர்களது இந்து-விரோத செயல்களும் தான்.

 வேதபிரகாஷ்

© 25-06-2015

[1] https://secularsim.wordpress.com/2014/12/07/ramjanmabhumi-babri-demonstrations-forgetting-the-court-judgments/

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அயோத்தி, அயோத்தியா, ஆசிரமம், கைகேயி, சீதா கூப், சீதா ரசோய், தசரதன், துளசிதாஸ், மடம், மஹந்த், ராமஜன்மஸ்தான், ராமஜென்மஸ்தான், ராமர், ராமர் பிறந்த இடம், ராமா, ராமாயணம், ராம், லக்ஷ்மணன், லட்சுமணன், வால்மீகி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s