கயா பயணம் – மங்கள கௌரி, விஷ்ணுபாதம், பிண்ட தானம்!

கயா பயணம் – மங்கள கௌரி, விஷ்ணுபாதம், பிண்ட தானம்!

Guyasur.s Body Becomes the Landscape of Gaya Kshetra

Guyasur.s Body Becomes the Landscape of Gaya Kshetra

29-08-2014 (வெள்ளிக் கிழமை): வாரணாசியிலிருந்து காலை 3 மணிக்கு புறப்பட்டு, ஜைசல்மர்-ஹௌரா எக்ஸ்பிரஸ் மூலம் கயா ஜங்ஸன் வந்தடைந்தோம். அங்கிருந்த கௌடியா மடத்தில் தங்கினோம்.  இது கௌடியா மடம் தேசிய நெடுஞ்சாலை எண்.83 தோபியிலிருந்து பாட்னாவுக்குச் செல்லும் வழியில், ஒரு சந்தில், அனுகிரக ராஜகிய கன்யா (அரசினர் பெண்கள்) உயர்நிலைப் பள்ளிக்கு முன்புள்ளது. சுற்றி நூற்றுக்கணக்கான ஏழை மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் மடத்தின் சுவர்களின் நிழல்களில் ஒதுங்கி வசிக்கிறார்கள். இரவில் மடத்தின் வராண்டாவில், வாசலில் படுத்து உறங்குகிறார்கள். குழந்தைகள் அங்கேயே விளையாடிக் கொண்டிருக்கின்றன. அவர்களின் நிலை பரிதாமாக உள்ளது. பிஸ்கெட் வாங்கிக் கொடுத்தபோது, எல்லோரும் ஆவலாக வாங்கிக் கொண்டார்கள். பெற்றோரே குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். பீஹாரில் மக்களை இந்த அளவுக்கு ஏழ்மையில் வைத்திருக்கிறார்கள் எனும் போது வியப்பாக இருக்கிறது[1].

Full View Of Ramshila Hill

Full View Of Ramshila Hill

சுற்றிலும் உள்ள குன்றுகள், ஒவ்வொரு குன்றும் சிறப்புப் பெற்றது, மேலே கோவில் உள்ளது.

Brahmayoni Hill, Full View, Gaya, Bihar

Brahmayoni Hill, Full View, Gaya, Bihar

Mangala Gauri temple, Gaya.where breasts fell

Mangala Gauri temple, Gaya.where breasts fell

கயாவின் இருப்பிடம், சிறப்பு: மதியம் புத்த கயா – கயா சரித்திரத்துடன் பின்னிப் பிணைந்துள்ள, பல்கு அல்லது நிரஞ்சனா என்ற நதிக்கரையில் அமைந்துள்ள இந்தியாவின் புராதன நகரங்களில் ஒன்று. பீஹாரில், பாட்னாவிற்கு தெற்கில் 100 கி,மீ தொலைவில் கயா மற்றும் மகத மாவட்டங்களின் தலைமையகமாக உள்ளது. இந்து, ஜைன மற்றும் பௌத்த மதங்களுக்கு முக்கியமான இந்நகர், மங்கள-கௌரி, ஶ்ரீசிங்கஸ்தான், ராம்-சிலா, பிரம்மஹோனி என்ற குன்றுகள் மற்றும் கிழக்கில் பல்கு நதியும் (फल्गु नदी) சூழ அமைந்துள்ளது. கயாசுரன் என்ற அசுரனை விஷ்ணு கொன்றபோது, அவன் வேண்டுதலுக்கு இணங்க, அவனது உடலே இப்பகுதியாக மாறி, அதன் மீது பல தேவர்-தேவதைகளின் கோவில்கள் உருவானது. மக்கள் தொடர்ந்து இங்கு வந்து சிராத்தம் / பிண்ட தானம் (पिंड दान) செய்து வருவதால் பாவங்கள் விலகும் என்று அவன் வேண்டிக் கொண்டதற்கு இணங்க சம்பிரதாயங்கள் நடந்து வருகின்றன[2]. இந்தியாவின் பலபகுதிகளிலிருந்து, ஏன் உலகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். புத்தகயாவுக்கு அயல்நாட்டுப் பயணிகள் அதிகம் வருவதால், ஒரு விமான நிலையமும் உள்ளது. தவிர ஹஜ் யாத்திரிக்கைக்குச் செல்லும் வசதியாக இங்கிருந்து விமானம் சென்று வருகிறது[3]. விமானநிலையம் நகரத்திலிருந்து தொலைவில் உள்ளது. நாங்கள் அங்கு சென்றிருந்தபோது, யாரும் இல்லை. இவ்வூரில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் காணப்படவில்லை. ஷேர் ஆட்டோ அல்லது ரிக்ஷா மூலம் தான் செல்லவேண்டியுள்ளது.

mangala-gouri-Tantric sculpture

mangala-gouri-Tantric sculpture

தந்திரமுறையில் காண்பிக்கப்படும் சிலைகள் / விக்கிரங்கள் இங்குள்ளன.

roken sculptures found in Mangala Gauri temple, Gaya

roken sculptures found in Mangala Gauri temple, Gaya

மரத்தடியில் கிடக்கும் உடைந்த நிலையில் காணப்படும் விக்கிரங்கள்!

Broken sculptures found in Mangala Gauri temple, Gaya.2

Broken sculptures found in Mangala Gauri temple, Gaya.2

இன்னொரு இடத்தில் கிடக்கும் சிற்பங்கள்.

mangalagowri - Mohan shenoy

mangalagowri – Mohan shenoy

இடிபாடுகளுடம் இருக்கும் மங்கள கௌரி கோவில் – மோஹன் ஷெனாய் என்பவரது புகைப்படம்.

Mangalaa Gauri Mohan Shenoy photo

Mangalaa Gauri Mohan Shenoy photo

மோஹன் ஷேனாயின் இன்னொரு படம்.

vishnupad-temple-Bhairavi

vishnupad-temple-Bhairavi

மங்களகௌரி கோவில்சக்தி பீடம்: 18 சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோவில் சண்ட-சௌரா என்ற பகுதியில் ஒரு சிறு குன்றின் மீது உள்ளது. சண்ட-சண்டி-சாமுண்ட-சாமுண்டி போன்ற பெயர்கள் எல்லாமே சக்தி வழிபாட்டுடன் தொடர்புடையவை ஆகும். அக்காலத்தில் சக்தி வழிபாடு செய்பவர்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளிலினின்று துரத்தில் இருந்து வழிபடுவது வழக்கம். மங்கள-கௌரி குன்று என்பது உருண்டையான கற்கள் கொண்ட வழிபடும் இடம் என்று உருவகமாகச் சொல்லப்படுகிறது. சதியின் உடல் பாகங்கள் (இரு மார்பகங்கள்) இங்கு விழுந்ததால் புனிதமாகக் கருதப்படுகிறது, அதே நேரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த இடமாகக் கருதப் படுகிறது. உண்மையில் இரு உருண்டையான கற்கள் கோவிலில் காணப்படுகின்றன. இக்கோவில் சுற்றும் இடிந்த பகுதிகள் காணப்படுகின்றன. உள்ளே பல சிற்பங்களகூடைந்த நிலையில் அங்கங்குக் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும் போது, இக்கோவிலை யாரோ உடைத்திருக்கலாம், பிறகு புனர்நிர்மாணம் செய்து கட்டப்பட்டிருக்கலாம் போல தெரிகிறது. இதுதவிர, இங்குள்ள மற்ற கோவில்களில் பல சக்தியின் உருவங்கள், மந்திர-தந்திர-யந்திர வடிவங்களில் விக்கிரங்களாக, சிற்பங்களாகக் காணப்படுகின்றன. ஜைனர்களும்-பௌத்தர்களும் சக்திவழிபாட்டைப் பின்பற்றி யோகினி-ஜோகினி-பிக்குனி போன்ற தேவதைகள் வழிபாட்டு முறையினை ஆரம்பித்தனர். ஆனால் அவை துஷ்பிரயோகத்தால், அவப்பெயர்க் கொண்டு, காலத்தில் சீரழிந்து மறைந்தது. அவர்களால் உருவாக்கப்பட்ட தந்திர நூல்களும் வேதமுறையிலிருந்து பிறழ்ந்து, பல கருத்துக்களைக் கொண்டுள்ளது. இதனால், பிற்காலத்தில் மற்றும் இப்பொழுது படிப்பவர்கள் “மந்திர-தந்திர-யந்திர” முறைகளைப் பற்றி தவறானக் கருத்துகளைப் பெருகின்றனர். அத்தகைய தவறான கருத்துருவாக்கத்தினால், தவறான விளாக்கங்களையும் கொடுத்து வௌகின்றனர்.

vishnupad-temple-gaya-bihar

vishnupad-temple-gaya-bihar

விஷ்ணுபாதம், கோவில்: விஷ்ணுபாத் என்ற குன்றின் மீது விஷ்ணுவின் பாதம் உள்ளது. கயாசுரனைக் கொல்லும் போது, ஒரு காலை இக்குன்றின் மீதும், அடுத்த காலை அசுரனின் மார்பின் மீது வைத்ததால், அப்பாதம் உருவானது. இப்பொழுதைய விஷ்ணு பாத கோவில் (विष्णुपद मन्दीर) அஹல்யாபாய் ஹோல்கர் என்ற இந்தூர் மஹாராணியால் 1780ல் கருங்கற்களினால் கட்டப்பட்டதாகும்[4]. அஷ்டகோண வடிவில் 100 உயரத்தில் உள்ள பிரகாரத்தின் நடுவில் இப்பாதம் கருங்கல்லில் அமைந்துள்ளது. கூரை வெள்ளியால் வேயப்பட்டுள்ளது. அழகாகச் செதுக்கப்பட்ட பல தூண்களால், இரண்டு அடுக்களில் கட்டப்பட்டுள்ளது. சுற்றிலும் பிரகாரங்கள், சன்னதிகள் உள்ளன. பூஜையின் போது, வெள்ளியினால் செய்யப்பட்ட அஷ்டகோணத்தில் உள்ள பீடத்தைச் சுற்றிலும் இருக்கும்படி வைத்து அபிஷேகம், ஆராதனை செய்து அலங்காரம் செய்கிறார்கள். ஒவ்வொரு பக்தரும் பூஜை செய்யலாம், தொட்டு கும்பிடலாம். வெளியில் கோவிலுக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் எப்பொழுதும் பஜனை, உபன்யாசம் நடந்து கொண்டிருக்கின்றன. எதிர்புறத்தில் கடைகள் இருக்கின்றன. விஷ்ணுபாதம் பதித்த உருவத்தை காகிதத்தில் பூஜாரி எடுக்கிறார், அதனை காசு கொடுத்து விருப்பம் உள்ளவர்கள் வாங்கிக் கொள்கிறார்கள்.

vishnupad temple Mantap with pillars

vishnupad temple Mantap with pillars

விஷ்ணுபாதம் உள்ள மண்டபம் – நன்றி சூன்ய.நெட்.

vishnupad temple Mantap with pillars.view

vishnupad temple Mantap with pillars.view

விஷ்ணுபாதம் இருக்கும் இடம், இன்னொரு தோற்றம்.

ராமர்சீதை தசரதருக்குபிண்டப்பிரதானம்”, பிண்டதானம் செய்தது: ராமர், சீதையுடன் தன் தந்தை தசரதனுக்கு பிண்டம் வைக்க இங்கு வந்திருந்தார். ராமர் அதற்கானவற்றை செய்து கொண்டிருக்கும் போது, திடீரென்று தசரதன் சீதை முன் தோன்றி தனக்கு பசியாக இருப்பதால், உடனே பிண்டத்தை அளிக்குமாறு கோரினார். சீதை செய்வதறியாது, பால்கு நதியின் மண்னையே பிண்டமாக தன்  கைகளால் உருண்டைகளாக்கி அளித்தார். ஆனால், உண்மையில் அது அரிசிப்பிண்டகளாக மாற, தசரதன் அவற்றை ஏற்று மறைந்து விட்டான். பிறகு ராமர் வந்து பிண்டங்களை கொடுத்த போது, தசரதன் வராதலால் திகைத்தான். அப்பொழுது சீதை நடந்ததைச் சொன்னபோது, ராமர் நம்பவில்லை. அதனால், சீதை பல்கு நதி, அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பிராமணன், அரச மரம் மற்றும் பசு இவற்றை சாட்சி சொல்ல சொன்னார். அரச மரம் தவிர மற்றவை உண்மை சொல்லவில்லை. இதனால் அம்மூன்றையும் சீதை சபித்தார். இதனால் பல்கு நதியில் தண்ணிர் இல்லாமல் வெறும் மண்ணாக போனது; பிராமணன் அடுத்தவர் கொடுக்கும் தானத்தில் பிழைக்க வேண்டியதாகியது; பசுவும் பிண்டத்தின் ஒரு பாகம் பெற்று உயிர்வாழ வேண்டியதாயிற்று. அரச மரம் “அக்ஷயவத்” என்றாகியது[5], அதாவது அழியாத மரமாகியது. இன்றும் இந்த அரசமரத்தடியில் பிண்டங்களை வைக்கின்றனர்.

மோட்சபுரியும், பாவபுரியும்: இந்துக்களுக்கு மோட்சப்புரியாக, பாவங்களைப் போக்கும் புரியாக ராமாயண காலத்திலிருந்து இருக்கும் போது, ஜைன-பௌத்தர்களுக்கு இவ்வூர் “பாவபுரி”யாக (पावापुरी) இருக்கிறது, அதாவது, அவ்வூர் பாவபுரி என்று வழங்கப்படுகிறது. ஜைனர்களின் நம்பிக்கையின் படி 24 தீர்த்தங்கர்களில் 22 பேர் இங்குதான் சித்தியடைந்தனர் / முக்தியடைந்தனர். சரித்திர ரீதியிலும் 23 மற்றும் 24ம் தீர்த்தங்கர்கள் இருப்பதை சரித்திராசிரியர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். பௌத்தர்களைப் பொறுத்த வரையில், அங்குள்ள பிரம்மயோனி என்ற குன்றின் மீது தான், புத்தர் முதன் முதலில் அக்னி சுத்தத்தை (ஆதித்தபரியாய) போதித்து, நெருப்பை வணங்கி வந்தவர்களை பௌத்தத்திற்கு மாற்றினார். அக்னி வழிபாட்டவர் என்பது சக்தி வழிபாட்டவர்களக இருக்க வேண்டும். அப்பொழுது அக்குன்று கயாசிசா என்று வழங்கப்பட்டது. புத்தரும் பாவபுரியில் வந்தபோது, அவரது பக்தனால் பன்றி மாமிச உணவு கொடுத்து, உண்டதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, பாவபுரியில் சித்தியடைந்தார் / உயிர் நீத்தார் என்றுள்ளது[6]. இவ்விடம் சக்திவழிபாடு ஆதிக்கம் இருந்தது என்பதற்கு பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. ஜைன-பௌத்தர்கள் ஒரு காலத்தில் மந்திர-தந்திர-யந்திர வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தனர் என்றதால், இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தனர் என்று தெரிகிறது. ஆக மொத்தம் ஏற்கெனவே உள்ள பிரசித்தி பெற்ற புண்ணிய சேத்திரங்களை தாங்களும் தங்களுடைய நம்பிக்கைக்களுடன் சம்பந்தப்படுத்திக் கொள்வது அல்லது முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்வது[7] என்பது பிறகு தோன்றிய மற்றும் வந்த மதங்களின் போக்காக உள்ளது என்றும் தெரிகிறது. பித்ரிபக்ஷம் (पित्री पक्ष ) என்ற 14 நாட்கள் விழா செப்டம்பர்.8 முதல் 24 வரை சிறப்பாக ஆண்டுதோறும் அரசு விழாவாகவே (राजकीय मेला) நடைபெறுகிறது. அப்பொழுது லட்சக்கணக்கில் மக்கள் வந்து செல்கிறார்கள்.

வேதபிரகாஷ்

© 23-06-2015

[1] அதனால் தான் பிகாரிகள் / பிகாரி மக்கள் மற்ற மாநிலங்களுக்கு வேலை செய்ய அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறார்கள் போலும்.

[2] பல மடங்கள் இருக்கின்றன. அவரவர் சம்பிரதாயங்களுக்கு ஏற்ப, முறைப்படி பிண்டதானம், சிராத்த சடங்குகளை நடத்திக் கொள்ளலாம். மொத்தமாக “இவ்வளவு” என்று பேசிக் கொண்டால் நல்லது.

[3] ஆனால் இந்துக்கள் வந்து செல்ல இங்கு விமான போக்குவரத்து இல்லை. வாரத்திற்கு ஒரு முறை முன்னர் இருந்தது, இப்பொழுத் இல்லை என்கிறார் அங்கிருந்த ஒரே ஒரு ஊழியர். பாட்னாவுக்கு விமானத்தில் வது, அங்கிருந்து இங்கு வரலாம்.

[4] இதே அஹல்யாபாய் ஹோல்கர் காசி விஸ்வநாத ஆலயத்தையும் கட்டினார் என்பது கவனிக்கத் தக்கது. மேலும் பெண்களுக்கு அத்தகைய உரிமை, அதிகாரம், பணம் முதலியவை இருந்தன என்பதனையும் நோக்கத்தக்கது.

[5] பிரயாகையிலும், “அக்பர்” கோட்டையில் ஒரு “அக்ஷயவத்” மரம் இருந்தது குறிப்பிடப்பட்டது.

25 இந்த இடம் குஷிநகரம் என்றும் வழங்கப்படுகிறது.

[7]  முகமதிய அவ்விடங்களை முழுமையாக அழித்து, கோவில்களை உடைத்து, அங்கேயே மசூதிகளைக் கட்டினர். இதனால், முந்தைய நம்பிக்கையாளர்கள் அங்கு வருவது நிறுத்தப் பட்டது. இல்லை மதம் மாறி அங்கு போகலாம் என்ற நிலை ஏற்பட்டது.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in கயா, சக்தி, சக்தி பீடம், சக்திபீடம், சண்டி, சிரார்த்தம், சிவா, ஜைன, ஜோகினி, தந்திரம், பல்கு, பல்கு நதி, பாட்னா, பாவபுரி, பிக்குனி, பிண்ட தானம், பிரம்மா, பௌத்தர், மங்கள கௌரி, மந்திரம், யந்திரம், யோகினி, விஷ்ணு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s