காசி பயணம் – ஆரத்தி தரிசனம், படகு பிரயாணம், வியாபாரம், கட்டுதல் முதலியன!

காசி பயணம் – ஆரத்தி தரிசனம், படகு பிரயாணம், வியாபாரம், கட்டுதல் முதலியன!

வாரணாசி - தசஸ்வமேத காட்

வாரணாசி – தசஸ்வமேத காட்

கங்கையுடன் சம்பந்தப்பட்ட நம்பிக்கைகள், சடங்குகள்: கங்கை நீர் தூய்மையானது, புனிதமானது, பவித்திரமானது என்று பலவித காரணங்களால் மக்கள் நம்பி வருகின்றனர்[1]:

 1. கங்கைநதியில் குளித்தாலே பாவம் போய் விடும், சூரிய மற்றும் சந்திர கிரகண நாட்களில் குளித்தால் விசேசம், கும்ப மேளா சமயத்தில் குளித்தால் அதைவிட விசேசம்.
 1. உண்மையில் காலத்தைக் கணக்கிட்டு அதனை நினைவிற் வைத்துக் கொள்ளத்தான் இத்தகைய சடங்குகள், விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் வைக்கப்பட்டன.
 1. பகல்-இரவு,
 2. பகல்-நடுப்பகல்-இரவு-நடுஇரவு
 3. விடியற்காலை-பகல்-நடுப்பகல்-இரவு-மாலை-நடுஇரவு (இடையில் ஐந்து வேளை பூஜை, ஆரத்தி, விளக்கு ஏற்றல் போன்ற சடங்குகள்)
 4. சந்திரன் வளர்பிறை, தேய்பிறை நாட்கள், அமாவாசை, பௌர்ணமி.
 5. வாரம், மாதம், ஆண்டு கணக்கிடு.
 6. கோள்களின் இணைப்புகள், ஒரே கோட்டில் வருவது முதலியன (கும்ப மேளாக்கள்).
 1. கங்கநதி நீர் சுபீட்சம் கொடுக்கும், மோட்சத்தைக் கொடுக்கும் – மோட்சப்புரி என்று இந்துக்கள் நம்புகிறார்கள்.
 1. கங்கையே விஷ்ணுவின் அவதாரம், பரபிரம்மத்திலிருந்து அவர் நதியாக வந்துள்ளார்.
 1. கங்கைக் கரையில் இறந்தவர்களுக்கு இறுதி சடங்குகள் நடத்துவது என்பது, இந்துக்களுக்கு சாதாரணமான விசயம். இதனால் கங்கைக்கு அருகில் உள்ளவர்கள், இறந்த உடல்களை எரிக்க இங்கு கொண்டு வருகின்றனர். தூரத்தில் இறந்தாலும், அஸ்தியை இங்கு வந்து கரைக்கின்றனர்.
 1. கங்கக்கரையில் முதல் பிண்டத்தை வைத்தால் இறந்தவர்கள் ஆத்மா சாந்தியடையும், மற்றும் முன்னோர்கள் / பித்ருக்கள் சாந்தியடைவர். அதனால், இங்கு வரும் போது, பிண்டம் வைப்பதை சிறப்பாக நினைக்கிறார்கள்.
 1. கங்கைநதி நீர் இந்தியர்கள் எல்லா பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கின்றனர். அதனால் நல்லது நடக்கும், என்று எல்லா சடங்குகளிலும், பூஜைகளிலிலும் உபயோகப்படுத்துகின்றனர். இதனால், கங்கைநீரை பாத்திரங்களில் அடைத்து விற்கும் வியாபாரமே தொடங்கி விட்டது.
 1. இறக்கும் தருவாயில் உள்ளவர்களை கங்கைக்கரைக்கு அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் அங்கு இறந்தால் மோட்சத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை. இறுதி காலத்தை அங்கேயே கழித்துவிட வேண்டும் என்று வருபவர்களும் உண்டு.
 1. சாது-சந்நியாசிகள், ஆனிமீகத்தைத் தேடி வருபவர்கள், இங்கு வந்து தியானம் செய்தால் ஞானம் பிறக்கும் என்று நம்புகிறார்கள். முன்னர் தவம் மற்றும் அனுஸ்தான் செய்ய வந்தனர்.
 1. “அந்தராஞ்சலி” என்ற முறைய சில இந்துக்கள் பின்பற்றினர். அதாவது இறக்கும் தருவாயில் உள்ளவர்கள் மூழ்கி இறாந்தால் மோட்சத்தை அடைவர் என்பது நம்பிக்கை. சிலர் “ஜலசமாதி” முறையைப் பின்பற்றுவதும் உண்டு.
 1. கங்கைநீருக்கு நோய் தீர்க்கும் தன்மை உள்ளது. கெட்ட பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை கொல்லும் தன்மையுள்ளது. சில விஞ்ஞானிகளும் இவற்றை மெய்ப்பித்துள்ளனர்.
வாரணாசி - தசஸ்வமேத காட்- சடங்குகளை செய்துவிக்கும் பண்டா

வாரணாசி – தசஸ்வமேத காட்- சடங்குகளை செய்துவிக்கும் பண்டா

வாரணாசி – தசஸ்வமேத காட்- சடங்குகளை செய்துவிக்கும் பண்டா, பொரோகிதர். பொதுவாக இவர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரி செய்வர். அதனால், அவரவர்களுடைய சம்பிரதாயங்கள் முதலியவற்றைச் சொல்லிக் கொண்டால்,அதே முறையில் செய்வர்.

வாரணாசி - தசஸ்வமேத காட்- சடங்குகளை செய்துவிக்க பண்டா பேரம்

வாரணாசி – தசஸ்வமேத காட்- சடங்குகளை செய்துவிக்க பண்டா பேரம்

படகுகள் மூலம் சவாரி, காட்டுகளைப் பர்த்தல், ஆரத்தியை தரிசித்தல்: கங்கையாற்றில் படகு சவாரி செய்ய வேண்டும் என்ற ஆசையும் எல்லோருக்கும் உள்ளது. குறிப்பாக சுற்றுலா படணிகள் படகு சவாரி செய்தே ஆகவேண்டும் என்று இருப்பதால், “படகு சுற்றுலா” இங்கு அபரிதமாக, வியாபாரமாக நடந்து வருகிறது. கங்கைக்கரை ஒட்டியுள்ள காட்டுகளை காண்பிக்க படகு சவாரி உள்ளது. மாலையில் சவாரி செய்த பிறகு, படகிலிருந்த படியே ஆரத்தியைக் காண-தரிசிக்க வசதிகள் உள்ளன. வெளிநாட்டவர், பணக்காரர்கள் போன்றோர் இதனை விரும்புகின்றனர். ஒவ்வொன்றிற்கும் வசூல் தனியாக உள்ளது. அஸ்தியைக் கரைக்கவும் சிலர் படகுகளை உபயோகப்படுத்துகின்றனர்.

வாரணாசி - வெளிநாட்டவர் வருவது சகஜமாகி விட்டது

வாரணாசி – வெளிநாட்டவர் வருவது சகஜமாகி விட்டது

வாரணாசி – வெளிநாட்டவர் வருவது சகஜமாகி விட்டது, அதிகமாகியும் உள்ளது.

வாரணாசி - வெளிநாட்டவர் அதிக அளவில் வருவது சகஜமாகி விட்டது.

வாரணாசி – வெளிநாட்டவர் அதிக அளவில் வருவது சகஜமாகி விட்டது.

உள்நாட்டு நதி வியாபாரம், பொருட்கள் போக்குவரத்து முதலியன: காலம்-காலமாக கங்கைக்கரை நகரங்கள் ஒரு முக்கிய வியாபரஸ்தலமாகவும் இருந்து வந்துள்ளது[2]. பல இடங்களில் உற்பத்திச் செய்யப்பட்ட பொருட்கள் படகுகள் மூலம் வங்காளம் வரை எடுத்துச் செல்லப்பட்டன. இதை முகமதிய மற்றும்ம் ஆங்கிலேய ஆட்சியாளர்களும் பயன் படுத்திக் கொண்டனர். வங்காளம் ஆங்கிலேயர்களின் தலைநகரமாக இருக்கும் போது, உள்நாட்டு நதி போக்குவரத்து-வியாபாரம் நன்றாகவே நடந்து வந்தது. இது எளியமுறையில் மட்டுமல்லாது, குறைந்த செலவிலும் நடைப்பெற்று வந்தது. அதாவது, ஒரே படகு அல்லது படகோட்டி மூலம் பொருட்கள் தில்லி, வாரணாசி, பாடலிப்புத்திரம் போன்ற நகரங்களினின்று செல்லாது. தினம் முழுவதும் ஒரு படகோட்டி படகை ஓட்டிச் சென்று மாலையில் குறிப்பிட்ட இடத்தில் சேர்த்து விடுவான். இரவு தங்கி, அங்கிருக்கும் பொருட்களை அல்லது அங்கு தேவையான பொருட்களை இங்கிருந்து எடுத்துச் செல்வான். அங்கிருந்து, இன்னொரு படகோட்டி, படகு எடுத்துச் செல்லும். இவ்வாறு உள்ளூர் நதிக்கரை பொருட்போக்குவரத்து, வணிகம் சிறப்பாக நடந்து வந்தது.

வாரணாசி - தசஸ்வமேத காட்- படகுகளை செப்பனிடுதல்., பாரம்பரிய முறை

வாரணாசி – தசஸ்வமேத காட்- படகுகளை செப்பனிடுதல்., பாரம்பரிய முறை

ஆயிரக்கணக்கில் படகுகள் உபயோகத்தில் உள்ளதால் அவற்றைப் பழுது பார்க்கும் தொழிலும் சிறப்பாக உள்ளது. இவர்கள் இன்னும் பாரம்பரிய மரங்கள், தொழிற்முறைகளைப் பின்பற்றி வருகிறார்கள் என்று குறிப்பிடத் தக்கது.

வாரணாசி - தசஸ்வமேத காட்- செப்பனிடுதலில்-ஆந்திர மரம் உபயோகம்

வாரணாசி – தசஸ்வமேத காட்- செப்பனிடுதலில்-ஆந்திர மரம் உபயோகம்

வாரணாசி – தசஸ்வமேத காட்- செப்பனிடுதலில்-ஆந்திர மரம் உபயோகம்!

வாரணாசி - தசஸ்வமேத காட்- படகுகளை செப்பனிடுதல்

வாரணாசி – தசஸ்வமேத காட்- படகுகளை செப்பனிடுதல்

வாரணாசி – தசஸ்வமேத காட்- படகுகளை செப்பனிடுதல்.

வாரணாசி - தசஸ்வமேத காட்- படகுகளை செப்பனிடுதல்-ஆந்திர மரம் உபயோகம்

வாரணாசி – தசஸ்வமேத காட்- படகுகளை செப்பனிடுதல்-ஆந்திர மரம் உபயோகம்

வாரணாசி – தசஸ்வமேத காட்- படகுகளை செப்பனிடுதல்-ஆந்திர மரம் உபயோகம் – ஆந்திராவில் நர்சாபூர் பேடா என்ற இடத்தில் கப்பல் கட்டும் தொழிற்சாலை இருந்தது. அங்கிருந்து ஐரோப்பியர்களுக்கு வேண்டிய கப்பல்கள் கட்டப்பட்டு, எடுத்துச் செல்லப்பட்டன. ஆகவே, ஆந்திர மரம் உபயோகப்படுத்தப்பட்டதில் பாரம்பரியம் தெளிவாகிறது.

வாரணாசி - தசஸ்வமேத காட்- படகுகளை பாரம்பரிய முறையில் செப்பனிடுதல்

வாரணாசி – தசஸ்வமேத காட்- படகுகளை பாரம்பரிய முறையில் செப்பனிடுதல்

இவர்களிடம் பேட்டி கண்டு விசயங்களைத் தெரிந்து கண்ட சக-யாத்திரிகர்!

வாரணாசி - தசஸ்வமேத காட்- படகுகள் செப்பனிடுதல் பற்றி ஆராயும் ஒருவர்

வாரணாசி – தசஸ்வமேத காட்- படகுகள் செப்பனிடுதல் பற்றி ஆராயும் ஒருவர்

படகு கட்டுதல், சீரமைத்தல் முதலியன: ஆயிரக்கணக்கில் படகுகள் இவ்வாறு சென்று வருவதால், படகு தயாரிப்பு, பராமரிப்பு, செப்பனிதல் போன்ற வேலைகளூம் அவற்றுடன் இணைந்து இருந்தன. குறிப்பிட்ட மரங்கள் அங்கு கொண்டு வரப்பட்டன. இப்பொழுது அம்மரங்கள் ஆந்திராவிலிருந்து வருவதாகச் சொல்கின்றனர். அவற்றை உரிய வடிவத்தில் வெட்டி, இழைத்து, வடிசமைத்து படகாக மாற்றுகின்றனர், பழுது பார்க்கின்றனர். இவ்வேலைகளில் மல்லாஹ் மற்றும் நிஷாத எனப்படும் ஜாதியினர் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் எஸ்.சி எனப்படுகின்ற ஜாதியைச் சேர்ந்தவர்களாயினும், கங்கைநதி நாகரிகம், கலாச்சாரம், பண்பாடுகளில் இணைந்துள்ளார்கள்[3]. கங்கைக் கரையில், அதனைப் பார்ப்பது என்பது ஒரு சிறந்த விசயத்தைக் கற்றுக் கொள்ளும் காட்சியாகும். மணிக்கணக்கில் அவர்கள் வேலை செய்து கொண்டிருப்பதை காணலாம்.

தொழிற்சாலைகள் பெருகல், கங்கைநீர் மாசுபடல்: கங்கைக்கரை நகரங்களில் உற்பத்திச் செய்யப்படும் பொருட்கள் முன்னர் பாரம்பரிய முறைகளில் செய்யப்பட்டன. நவீனப்படுத்திய பிறகு, ரசாயன பொருட்கள் உபயோகிப்பது என்று முறைகள் மாறியதால், கழிவுகள் புதியவிதமாக மாறின. முன்னர் நெசவுத்தொழிலால் எந்தவித பாதிப்பும் இல்ல, ஆனால், இப்பொழுது இழைத் தயாரிப்பிலிருந்து, நெய்தல், வண்ணம் சேர்த்தல் வரை அதிக அளவில் ரசாயனங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன.

தினமும் வரும் யாத்திரிகர்கள் 70,000

எரிக்கப்படும் உடல்கள் – 60,000

நதியில் போடப்படும் உடம்பின் சாம்பல் கழிவுகள்- 30,000

நதியில் போடப்படும் ஆடு-மாடுகளின் சடலங்கள் – 9,000

இதனாலும், கழி உற்பத்தி அதிகமாகின்றன என்று கணக்கிடப்படுகிறது. சமீபகாலங்களில் நதிக்கரையில் பலவித பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் வந்துள்ளன. இதனால், பலவித கழிவுகள், எச்சங்கள், மாசுக்கள் மற்றும் எஞ்சியவற்றை நதியில் கொட்டுவது, கலப்பது மற்றும் கலக்கச் செய்து போன்ற செயல்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது தீர்த்தயாதிரிகர்கள் உள்ளூர் மக்கள் உற்பத்தி செய்யும் கழிவுகளை விட பல மடங்காகும்.

வேதபிரகாஷ்

© 22-06-2015


[1] Ashok Chandra Shukla, Vandana Asthana, Ganga, a Water Marvel, Ashish Publishing House, New Delhi, 1995, pp.39-41.

[2]   Moti Chandra, Trade and Trade routes in Ancient Inda, Abhinav Publications, New Delhi, 1977, Pp.16-19

[3] http://repositories.lib.utexas.edu/bitstream/handle/2152/ETD-UT-2010-08-1591/WOOD-DISSERTATION.pdf

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அஸி, இறப்பு, காசி, காலக்கணிப்பு, கோளகம், செப்பனிடுதல், நதிபோக்குவரத்து, நதிவழி வியாபாரம், நம்பிக்கை, படகு, படகு கட்டுதல், பட்டு, பழுது பார்த்தல், பொருட் உற்பத்தி, மரம், மோட்சம், வங்காளம், வணிகம், வருண், வானவியல், வாரணாசி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s