திரிவேணி சங்கம், சங்கம், பிரயாகை (அலஹாபாத்): தீர்த்த யாத்திரை

திரிவேணி சங்கம், சங்கம், பிரயாகை (அலஹாபாத்): தீர்த்த யாத்திரை!

ஶ்ரீ ருப கௌடிய மடம், அலஹாபாத்

ஶ்ரீ ருப கௌடிய மடம், அலஹாபாத்

சென்ற வருடம் (2013) பஞ்ச துவாரகை தீர்த்த யாத்திரை சென்றிருந்தோம்[1]. இந்த வருடம் (2014) கௌடியாமட சுவாமிகள் ராமர் மற்றும் கிருஷ்ணர் பிறந்த இடங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள முக்கிய ஸ்தலங்களுக்கு செல்லும் வகையில் யாத்திரையை அமைத்திருந்தனர்.

பிரயாகையை நெருங்கும் போது

பிரயாகையை நெருங்கும் போது

26-08-2014 (செவ்வாய் கிழமை): 6.55 மாலை சிவகங்கா எக்ஸ்பிரஸ் மூலம் தில்லியிலிருந்து அலஹாபாதிற்கு புறப்பட்டோம். மற்றவர்கள் சென்னையிலிருந்து அல்லஹாபாதிற்கு வந்தனர். எங்களுக்கு இது தொடர்ச்சியான பிரயாணன் ஆகும். கடந்த 16-08-2014 முதல் 22-08-2015 வரை ஹரிதுவார்[2], பாபாஜி குகை[3], ரிஷிகேஷ்[4] முதலிய இடங்களுக்குச் சென்ற பின்னர், இந்த யாத்திரையைத் தொடங்கினோம்.

பிரயாகையில் சுவாமிஜி

பிரயாகையில் சுவாமிஜி

27-08-2014 (புதன் கிழமை) – திரிவேணி சங்கம், சங்கம், பிரயாகை (அலஹாபாத்): காலை 4 மணியளவில் அலஹாபாதை அடைந்தோம். ரெயில் நிலையத்திலேயே, சுவாமிகள் மற்றும் இதர சக-யாத்திரிகர்களை சந்தித்தோம். மற்றவர்களுடன் அறிமுகம் செய்து கொண்டோம். துலாராம் பாக் என்ற இடத்தில் உள்ள கௌடியா மடத்திற்குச் சென்று தங்கினோம்.  காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, சிற்றுண்டி உண்ட பின்னர், திரிவேணி சங்கமத்திற்கு காரில் புறப்பட்டு அடைந்தோம். தெருவிலிருந்து நதிக்கரைக்கு சுமார் ஒரு கி.மீ நடந்து செல்லவேண்டும். ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷில் போல இல்லாது, கங்கையாறு இங்கு அமைதியாக இருந்தது. படகோட்டிகளும், புரோகிதர்களும் அப்படியே இருக்கிறார்கள், மாறவில்லை, அதாவது, இருவரும் சேர்ந்து சமதர்மத்துடன் வேலை செய்கின்றனர்[5]. படகில் கூட்டிச் சென்று, கங்கை-யமுனை-சரஸ்வதி கூடும் இடம் என்று ஒரு இடத்தில் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்வித்தனர். படகின் நடுவில் சதுரமாக ஓட்டை செய்வித்திருப்பதால், அதில் இறங்கி, அங்கேயே குளித்துக் கொள்ளலாம்.

பிரயாகை - படகில் செல்லும் போது

பிரயாகை – படகில் செல்லும் போது

அலஹாபாத் கோட்டை, அக்பரது கோட்டை: யமுனை நதிக்கரை ஒட்டியபடி, திரிவேணி சங்கமத்தின் அருகில் 1583ல் கட்டப்பட்டதாக சொல்லப்படும் அக்பருடைய கோட்டை உள்ளது.  இதனுள் அசோகருடைய கல்வெட்டு, பாதாள கோவில் மற்றும் “சரஸ்வதி கூப்” அதாவது, சரஸ்வதி நதியின் மூலம் முதலியவை உள்ளன. இங்கு “அக்ஷயவத்” எனப்படுகின்ற அழிவில்லாத ஆலமரமும் இருக்கிறது. ராமர், சீதை மற்றும் லக்ஷமணர் இதன் கீழ் உட்கார்ந்து இளைப்பாறினர் என்று சொல்லப்படுகிறது. ரிஷபதேவர் [9th century BCE] இதன் கீழ் உட்கார்ந்து கொண்டு தவம் செய்தார் எனப்படுகிறது. யுவான் சுவாங் [ Hsüan-tsang; c. 602 – 664 CE)] வந்தபோதும், இந்த ஆலமரத்தை அவர் பார்த்திருக்கிறார். இம்மரத்திலிருந்து யாராவது குதித்தால், அவன் சாகாத்தன்மையினைப் பெறுவான் என்று நம்பப்படுகிறது. இப்பொழுது ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளதால், இதனுள் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கப் படுவதில்லை. ஆக, சரியான இடம் என்று அக்பர் இந்த இடத்தை தேர்ந்தெடுத்துதான் கைப்பற்றியுள்ளான் என்று தெரிகிறது. இது புராணக்கதை என்று சரித்திராசிரியர்கள் இப்பொழுது எழுதி வந்தாலும், யுவான் சுவாங் எப்படி 1400 வருடங்களுக்கு முன்னர் அதனைப் பார்த்தார், அத்தகைய விவரங்களைத் தெரிந்து கொண்டார் என்று அவர்கள் யோசித்துப் பார்ப்பதில்லை. இந்திய சரித்திரத்தில் இப்படி பல விசயங்கள் பொருட்களுடன், வஸ்துக்களுடன், இடங்களுடன் பின்னிப்பிணைந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றன, ஆனால், சரித்திராசிரியர்கள் அவற்றை கட்டுக்கதை, மாயை, பொய், புராணம் என்றெல்லாம் சொல்லி வருகின்றனர்.

பிரயாகையிலிருந்து தோற்றம் - இடது பக்கத்தில் கோட்டையைக் காணலாம்

பிரயாகையிலிருந்து தோற்றம் – இடது பக்கத்தில் கோட்டையைக் காணலாம்

பிரயாகையிலிருந்து தோற்றம் – இடது பக்கத்தில் கோட்டையைக் காணலாம்.

Akshayavat - Immortal tree at Akbar Fort, Allahabad, Sangam

Akshayavat – Immortal tree at Akbar Fort, Allahabad, Sangam

அக்ஷயவத் எனப்படும் அழிவிலா மரம், கோட்டையினுள் உள்ளது.

Fort_of_Akbar,_Allahabad,_1850s

Fort_of_Akbar,_Allahabad,_1850s

அக்பருடைய கோட்டை, 1850ல் காணப்பட்ட தோற்றம்.

Prayag important places depicted pictorially

Prayag important places depicted pictorially

பிரயாகையில் உள்ள முக்கிய ஸ்தலங்களைக் காட்டும் மேப்.

பிரயாகை - படே ஹனுமான் மந்திருக்கு அருகில் இருக்கும் மந்திர்

பிரயாகை – படே ஹனுமான் மந்திருக்கு அருகில் இருக்கும் மந்திர்

ஶ்ரீ படே ஹனுமான் ஜி மந்திர்: நதிக்கரையிலிருந்து திரும்பி வரும் போது, டது பக்கத்தில் ஒரு பெரிய கோட்டைச்சுவர்களைக் காணலாம். அது அக்பரின் கோட்டை எனப்படுகின்றது. அதனையும் தாண்டி வந்தால், ஒரு ஹனுமார் கோவில் உள்ளது. “ஶ்ரீ படே ஹனுமான் ஜி மந்திர்” எனப்படுகின்ற அந்த ஆஞ்சனேயர் கோவிலுக்குச் சென்றோம். இவ்விக்கிரகம் சுமார் 15 அடிக்கு, படுத்திருப்பது போலிருக்கிறது. இப்பொழுதுள்ள தரை அளவிலிருந்து 10-15 அடி கீழேயுள்ளது. கங்கையில் வெள்ளம் வரும் போது, இக்கோவில் நீரில் மூழ்கி விடுவதும் உண்டு. அக்பரின் ஆணையின்படி, வீரர்கள் இவ்விக்கிரகத்தை அப்புறப்படுத்த விரும்பியபோது, ஏதோ ஒரு குரல் தடுத்ததால் அப்படியே விட்டுவிட்டுச் சென்று விட்டனர் என்று சொல்கின்றனர்[6].

பிரயாகை - படே ஹனுமான் மந்திர் நுழைவு

பிரயாகை – படே ஹனுமான் மந்திர் நுழைவு

பிரயாகை – படே ஹனுமான் மந்திர் நுழைவு வாயில்.

Sangam Bade Hanuman

Sangam Bade Hanuman

உள்ளேயிருக்கும் 15 அடி ஹனுமான் விக்கிரகம்.

Shri Bade Hanumaan Ji at the Sangam Kshetra of Prayag decorated

Shri Bade Hanumaan Ji at the Sangam Kshetra of Prayag decorated

படே ஹனுமான், முழு அலங்காரத்துடன்.

Bade Hanuman temple flooded

Bade Hanuman temple flooded

கங்கை வெள்ளத்தில் மூழ்கிய படே ஹனுமான்.

ஆதிசங்கர விமான மண்டபம், அலஹாபாத்

ஆதிசங்கர விமான மண்டபம், அலஹாபாத்

ஆதிசங்கர விமான மண்டபம், அலஹாபாத்.

ஆதிசங்கரர், மண்டல மிஸ்ரர், சரஸ்வதி

ஆதிசங்கரர், மண்டல மிஸ்ரர், சரஸ்வதி

பிரமேஸ்வரர் கோவில், அலஹாபாத்

பிரமேஸ்வரர் கோவில், அலஹாபாத்

பிரமேஸ்வரர் கோவில், அலஹாபாத்-நுழைவுவாயில்.

பிரமேஸ்வரர் கோவில், அலஹாபாத்.சைதன்யர் பாதம்

பிரமேஸ்வரர் கோவில், அலஹாபாத்.சைதன்யர் பாதம்

பிரமேஸ்வரர் கோவில், அலஹாபாத்.சைதன்யர் பாதம் உள்ளது.

Dashaswamedha Temple, Allahabad

Dashaswamedha Temple, Allahabad

இரண்டு லிங்கங்களிடையே இருக்கும் திரிசூலம்!

பிரமேஸ்வரர் கோவில், அலஹாபாத்.பக்கத்தில் சமஸ்கிருத வித்யாலயா

பிரமேஸ்வரர் கோவில், அலஹாபாத்.பக்கத்தில் சமஸ்கிருத வித்யாலயா

பிரமேஸ்வரர் கோவில், அலஹாபாத்.பக்கத்தில் சமஸ்கிருத வித்யாலயா!

ஶ்ரீ பிரம்மேஸ்வர் மஹாதேவ்ஜி மந்திர்: சங்கர மடத்தைப் பார்த்து விட்டு,  தச-அஸ்வமேத காட் (दशाश्वमेध घाट) என்ற இஅத்திற்கு வந்தோம். இந்தைடத்தில் பிரம்மா சத்தியயுகத்தில் பத்து அசுவமேத / குதிரையாகங்களை செய்தார் என்று கருதப்படுகிறது. ஶ்ரீசைதன்யர் இங்கு வந்திருக்கிறார். ஶ்ரீல ரூபகோஸ்வாமிக்கு தீக்ஷை மற்றும் சிக்ஷண இந்கு அளித்தார். இங்கிருந்த சிவலிங்கத்தை ஔரங்கசீப் உடைத்து விட்டதால், பிறகு பக்தர்கள் சிவலிங்கத்தை இங்கு கொண்டு வைத்தார்கள் என்கின்றனர். ஆனால், இப்பொழுது, இரு லிங்கங்கள் ஆவுடையால் இல்லாத நிலையில் புதைக்கப்பட்டுள்ளன. நடுவில் ஒரு திரிசூலம் உள்ளது. அருகில் ஶ்ரீசைதன்யரின் பாதமும் உள்ளது.

ஶ்ரீ அலோபி சக்தி பீடம் மந்திரி- தமிழில்

ஶ்ரீ அலோபி சக்தி பீடம் மந்திரி- தமிழில்

ஶ்ரீ அலோபி சக்தி பீடம் மந்திரி- தமிழில்!

ஶ்ரீ அலோபி சக்தி பீடம் மந்திர் - உள்ளே

ஶ்ரீ அலோபி சக்தி பீடம் மந்திர் – உள்ளே

ஶ்ரீ அலோபி சக்தி பீடம் மந்திர் – உள்ளே

ஶ்ரீ அலோபி சக்தி பீடம் மந்திர் - இன்னொரு வாயில்

ஶ்ரீ அலோபி சக்தி பீடம் மந்திர் – இன்னொரு வாயில்

ஶ்ரீ அலோபி சங்கரி சக்தி பீடம்: ஶ்ரீ அலோபி சங்கரி சக்தி பீடம் மந்திர் அல்லது மஹேஸ்வரி சக்தி பீடம் என்ற கோவிலுக்கு அடுத்து சென்றோம். கோவில் வளைவில் தமிழிலும் பெயர் இருப்பது காணத்தக்கது. அலோபி என்றால் உருவம் இல்லாத என்ற பொருள். இங்கு சக்தியில் கைவிரல்கள் விழுந்ததால், இது 18 சக்தி பீடங்களில் ஒன்றாக அமைகிறது. இக்கோவிலில் இதனால் விக்கிரமோ, வேறெந்த வழிபாட்டு சின்னமோ கிடையாது. சலவைக்கல் பீடத்தின் மீது மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சிறிய “டோலி” அல்லது பல்லக்கு இருக்கிறது. இன்னொரு கதையின் படி, ஒரு கல்யாணப் பெண் பல்லக்கில் சென்று கொண்டிருக்கும் போது, திருடர்கள் அல்லது யாரோ தாக்கியபோது, அவள் மாயமாக மறைந்து விட்டாள்[7], அதனால், அலோபி என்ற பெயர் வந்தது என்கிறார்கள். அந்த பல்லக்கு அதனைத்தான் காட்டுகிறது போலும்.

வேணிமாதவ் கோவில், அலஹாபாத்

வேணிமாதவ் கோவில், அலஹாபாத்

வேணிமாதவ் கோவில், அலஹாபாத்.

Beni-Madhav-Temple-entrance

Beni-Madhav-Temple-entrance

உள்ளே, கர்ப்பகிருகம் வாயில்.

eni-Madhav-Temple-idol

eni-Madhav-Temple-idol

உள்ளே இருக்கும் ராதா-மாதவ் விக்கிரகம்.

வேணிமாதவ் கோவில் எதிரேயுள்ள மாதவ் கோவில்

வேணிமாதவ் கோவில் எதிரேயுள்ள மாதவ் கோவில்

வேணிமாதவ கோவில்:  இது பிரயாகையில் உள்ள 12 மாதவ கோவில்களில் ஒன்றாகும். கருன்கல்லினால் செய்யப்பட்ட ராதா-கிருஷ்ண விக்கிரகம் உள்ளது. ஶ்ரீ சைதன்யர் இங்கு வந்து வழிபட்டுள்ளார். கும்பமேளா சமயத்தில், ஏகப்பட்ட பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபடுவார்கள். கிருஷ்ண-சைதன்ய-கௌடிய சம்பிரதாய வைஷ்ணவர்களுக்கும் இது முக்கியமான கோவிலாகும்.

Ananda Bawan or SWARAJ_BHAWAN - 1930

Ananda Bawan or SWARAJ_BHAWAN – 1930

ஆனந்த பவன, 1930களில் கட்டப்பட்டது.

ANAND_BHAWAN_TIME_BOARD

ANAND_BHAWAN_TIME_BOARD

ஆனந்த பவன்:  1930களில் மோதிலால் நேரு கட்டிய சகல வசதிகளையும் கொண்ட சொகுசான இரண்டுமாடி பெரிய வீடாகும். அறைகள், சமையல் அறைகள், பொருட்கள் முதலியவற்றைப் பார்த்தால், அக்காலத்திலேயே அவர்கள் எத்தகைய வாழ்க்கையினை வாழ்ந்துள்ளனர் என்பதனைத் தெரிந்து கொள்ளாலாம். காந்தி வந்தால், இங்கு தங்க பிரத்யேகமாக ஒரு அறை உண்டு. முக்கியமான காங்கிரஸ் கட்சி கூட்டங்கள் நடந்திருக்கின்றன, சுதந்திர போராட்ட வீரர்கள், தலைவர்கள் வந்துள்ளனர். 1970ல், இந்திரா காந்தி, இவ்வீட்டை அரசுக்குக் கொடுதுவிட்டதால், சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்லும் இடமாகி விட்டது. இதன் வளாகத்தினுள் ஒரு கோளாரங்கமும் உள்ளது.

பரத்வாஜ ஆஸ்ரம், அலஹாபாத்

பரத்வாஜ ஆஸ்ரம், அலஹாபாத்

பரத்வாஜ ஆஸ்ரம், அலஹாபாத்.

Bharadwaja ashram - Allahabad

Bharadwaja ashram – Allahabad

பரத்வாஜர் விக்கிரகம்.

பரத்வாஜ ஆஸ்ரம், அலஹாபாத்.வளாகத்தின் உள்ளே

பரத்வாஜ ஆஸ்ரம், அலஹாபாத்.வளாகத்தின் உள்ளே

பரத்வாஜ ஆஸ்ரம், அலஹாபாத்.வளாகத்தின் உள்ளே

பரத்வாஜ ஆஸ்ரம், அலஹாபாத்.வளாகத்தின் உள்ளே.இன்னொரு பரத்வாஜ்

பரத்வாஜ ஆஸ்ரம், அலஹாபாத்.வளாகத்தின் உள்ளே.இன்னொரு பரத்வாஜ்

பரத்வாஜ ஆஸ்ரம், அலஹாபாத்.வளாகத்தின் உள்ளே.இன்னொரு பரத்வாஜ்!

பரத்வாஜ ஆஸ்ரம், அலஹாபாத்.வளாகத்தின் உள்ளே.ஒரு பாட்டி

பரத்வாஜ ஆஸ்ரம், அலஹாபாத்.வளாகத்தின் உள்ளே.ஒரு பாட்டி

பரத்வாஜ ஆஸ்ரம், அலஹாபாத்.வளாகத்தின் உள்ளே. ஒரு கோவிலுக்குப் பொறுப்பேற்றுள்ள ஒரு பாட்டி!

பரத்வாஜ ஆஸ்ரம், அலஹாபாத்.வளாகத்தின் உள்ளே.மாதாஜி கோவில்

பரத்வாஜ ஆஸ்ரம், அலஹாபாத்.வளாகத்தின் உள்ளே.மாதாஜி கோவில்

பரத்வாஜ ஆஸ்ரம், அலஹாபாத்.வளாகத்தின் உள்ளே. “எங்கள் கோவிலையும் பார்த்து விட்டு போங்களேன்”னென்பது போல மாதாஜி கோவிலின் வசலில் நிற்கும் வயதானவர்!

பரத்வாஜ ஆஸ்ரமம்:  இது ஆனந்த பவன் அருகிலேயே உள்ளது. எதிர்பக்கத்தில் உள்ள சந்து வழியாக நேராக சென்றால், இந்த ஆஸ்ரமத்தை அடையலாம். அத்தெருவில் உள்ள வீடுகளில் எல்லாம் விக்கிரங்களை வைத்து, ஆஸ்ரமம், கோவில் என்றெல்லாம் பெயர் வைத்துள்ளார்கள். திரேதாயுகத்தில் ராமர் சித்திரகூடத்திற்கு செல்வதற்கு முன்னர் இங்கு வந்தார் என்று வால்மீகி ராமாயணம் கூறுகின்றது. அதனால், பக்தர்கள் அதிக அளவில் இங்கு வந்து செல்கின்றனர். இந்த ஆஸ்ரம வளாகத்தில் சிறியது-சிறியதாக மஹாதேவர், பரத்வாஜ ரிஷி, காளி, பரத்வாஜேஸ்வரர், சந்தோஷி மாதா என்று 11 கோவில்கள் உள்ளன. இதனை பார்த்துக் கொள்கிறவர்கள் சாதாரண பாமர மக்களைப் போன்று இருக்கின்றனர். அவர்களால் எந்த விவரத்தையும் சொல்ல முடியவில்லை, ஏதோ தமக்குத் தெரிந்த கதைகளை சொல்கிறார்கள்.

மாலை நான்கு மணியளவில் கல்யாணி எக்ஸ்பிரஸ் மூலம் வாரணாசிக்குப் புறப்பட்டோம். வாரணாசி அடைந்து அங்கிருக்கும் கௌடியா மடத்தில் தங்கினோம்.

வேதபிரகாஷ்

© 21-06-2015

[1] https://panchadwaraka.wordpress.com/

[2] https://sivatemple.wordpress.com/2014/11/24/spiritual-journey-to-haridwar-rishikesh-babaji-cave-etc/

[3] https://sivatemple.wordpress.com/2014/11/24/spiritual-journey-to-baba-caves-the-experiences-and-the-experienced/

[4] https://sivatemple.wordpress.com/2014/11/24/spiritual-journey-completed-but-it-continues-as-questions-unanswered/

[5] பார்ப்பனீய-எதிர்ப்பு, அம்பேத்கரியம் முதலிய சித்தாந்தங்களைப் பேசுபவர்கள் இவர்களிடம் வந்து கேட்க வேண்டும், எப்படி படகோட்டிகள் (எஸ்.சி) மற்றும் பிராமணர்கள் (உயர்ஜாதி) சேர்ந்து எல்லோருக்கும் பிண்டப்பிரதானம், சிரார்த்தம் செய்வதற்கு உதவி வருகிறார்கள் என்று பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

[6] இவ்விக்கிரகம் நின்ற நிலையில் இருந்து, முகமதிய வீரர்கள் தாக்கிய போது விழுந்து விட்டதா என்று தெரியவில்லை. அவர்கள் அப்புறப்படுத்த முயன்றபோது, விட்டுவிட்டுச் சென்றார்கள் என்பதும் விசித்திரமாக உள்ளது.

[7] இடைக்காலத்தில் முகமதியர்கள் பெண்களைத் தூக்கிச் செல்வது, அடிமகளாக விற்பது, ஹேரத்தில் சேர்ப்பது போன்ற குரூரமான கொடுமைகளை செய்து வந்தனர். ஒருவேளை அத்தகைய கொடுமையில் சிக்கிய பெண்ணின் நினைவாக, இக்கோவிலில் தெய்வமாக வழிப்படப்பட்டு வருகிறாளோ என்னமோ?

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அக்பர், அலஹாபாத், ஆனந்த பவனம், உத்திரபிரதேசம், கக்கை, கட், காங்கிரஸ், கிருஷ்ணர், சங்கம், சரஸ்வதி, தாம், திரிவேணி சங்கம், நேரு, படகு, படே ஹனுமான், பரத்வாஜர், பரத்வாஜ், பிரயாகை, மந்திர், மோதிலால், யமுனை, ராமர் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s